நான் கடவுள்

நான் கடவுள்    
ஆக்கம்: Badri | March 1, 2009, 3:02 pm

சுவாரசியமான படம். நிறைய உழைப்பு. இந்தப் படத்தை சராசரி கேளிக்கை என்று ஒதுக்கமுடியாது. ஆனால் பலரது விமரிசனங்களை ஒட்டியும் வெட்டியும் எனக்கு சில கருத்துகள் தோன்றுகின்றன. இணையத்தில் பலரும் எழுதிய விமரிசனங்களைப் படித்தேன். ஆனால் குறிப்பெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. நான் கீழே எழுதுவது விமரிசனமல்ல. படம் எனக்குள் ஏற்படுத்திய சில்லறைச் சிந்தனைகள்.இசை பற்றி மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

நான் கடவுள்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | February 24, 2009, 6:20 am

இதைப் பற்றி நானும் எழுதத்தான் வேண்டுமா என்று ஆரம்ப தயக்கம் இருக்கவே செய்தாலும், 'கோட்டிக்காரப்பய என்னத்ததான் எழுதுதான்னு பாப்பம்டே!'ன்னு கொஞ்சம் பேராவது நெனைப்பாங்களேங்குறதுக்காக, 'சரி!எழுதிடுவோம்டே!'ன்னு துணிஞ்சு களமிறங்கிட்டேன்.இதுல இன்னொரு விசயமும் இருக்கு. ரொம்ப நாளா எனக்குள்ள உறங்கிட்டிருந்த 'கவுஜை'மிருகத்தை நடக்கக் கூப்பிட்டுட்டு போறதுக்குண்டான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

நான் கடவுள்    
ஆக்கம்: லிவிங் ஸ்மைல் | February 18, 2009, 3:44 pm

பாலா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!ஆண்மைத் திரட்சி கொண்ட கல்லூரி வாலிபனின் அடாவடிக்காதல், அராஜகமான சகோதர பாசம் என ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய சேது திரைப்படம், மனநிலை காப்பக இறுதி காட்சிகளால் என்னை கவர்ந்தது. அதேபோல், ஆண்மைத் திரட்சி கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் கடவுள்    
ஆக்கம்: aravind | February 14, 2009, 8:59 am

(படம் பார்க்காதவர்களுக்கு - நிறைய காட்சிகள் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. மேற்கொண்டு படிப்பதை பற்றி யோசிக்கவும்) (விமர்சனம் எழுதுவதில் நம்பிக்கை குறைந்து விட்டதாலும், இந்தப் படத்துக்கு ‘விமர்சனம்’ என்று கட்டமைத்து எழுத இயலாது என்று தோன்றுவதாலும், கடந்த மூன்று நாட்களாக என் சிந்தனையை தின்று கொண்டிருக்கிற இந்தப் படத்தைப் பற்றிய என் எண்ணங்களை வைக்கிறேன். என்னிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் கடவுள்    
ஆக்கம்: para | February 8, 2009, 4:08 am

தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது. வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நான் கடவுள்    
ஆக்கம்: லக்கிலுக் | February 6, 2009, 7:21 am

இயக்குனர் பாலாவின் படங்களில் மட்டுமல்ல.. தமிழின் சிறந்த படங்கள் பட்டியலிலும் நிச்சயமாக ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்கு ஒரு நிரந்தர இடம் உண்டு. இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியும், உள்ளடக்கத் தரமும் தமிழ் சினிமாவை நிச்சயமாக அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். சீரியஸான நாவல் தரும் எல்லா உணர்வுகளையும் இப்படம் தருகிறது. ஒரு முழுமையான பின்நவீனத்துவப் படம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்