சிறு வெளிச்சம்… 
ஆக்கம்: கவிதா முரளிதரன் | April 15, 2010, 5:28 am

ஆக்கம்: கவிதா முரளிதரன் | April 15, 2010, 5:28 am
எனக்குத் தெரியும்.
உனது பதற்றங்களில்
நிறைந்திருப்பது
பகிர முடியாத
அன்பின் கனம்.
எரிமலயையொத்த
தீவிரத்துடன்
அது
கனன்றுக் கொண்டிருக்கிறது.
உனது கவனமான ஒத்திகைகளை
மறுத்து
ஒரு நாள்
அது வெடித்து சிதறும்.
அப்போது
சிறு வெளிச்சம் பரவும்.
Filed under: என் கவிதைகள் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை
