கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2

கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2    
ஆக்கம்: ஜெயமோகன் | April 14, 2008, 12:53 pm

தற்செயல் ======== வீடு முழுக்க ஆட்கள் உள்ள அந்தப் பண்டிகைநாளில் ஒர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கும் ஓடும்வழியில் நொடிநேரம் அவள்முன் வந்தீர்கள். எங்கிருந்தோ வந்த ஒரு முத்தத்தை அவளுக்கு அளித்தீர்கள். பிறகு எல்லா பரபரப்பும் முடிந்தபின்னர் படுக்கையில் குப்புறவிழுந்து கண்ணீர்வடிக்கிறாள். திடுமென வந்துசேரும் இனிமையை எண்ணி. எதன்மீதும் தனக்கு ஒரு அதிகாரமும் இல்லையே என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை