மாற்று! » பகுப்புகள்

மொழி 

தமிழில் விக்கிப்பீடியா    
ஆக்கம்: குறும்பன் | October 27, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

உலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகிய...தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் தமிழின் தேக்க நிலை    
ஆக்கம்: நற்கீரன் | October 27, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை. இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு    
ஆக்கம்: ரவிசங்கர் | October 26, 2009, 3:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை: * தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்    
ஆக்கம்: மணியன் | October 25, 2009, 3:00 pm | தலைப்புப் பக்கம்

விக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு ...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | September 28, 2009, 3:27 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்."தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க."ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ,...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | August 30, 2009, 2:11 pm | தலைப்புப் பக்கம்

இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி...தொடர்ந்து படிக்கவும் »

அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்    
ஆக்கம்: இரா. செல்வராஜ் | July 24, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்...தொடர்ந்து படிக்கவும் »

ஓடிவாங்கோ ஒருபோட்டி வைப்பம்.    
ஆக்கம்: சயந்தன் | June 10, 2009, 7:03 pm | தலைப்புப் பக்கம்

இந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

"ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்    
ஆக்கம்: கானா பிரபா | June 5, 2009, 10:10 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்    
ஆக்கம்: ரவிசங்கர் | May 27, 2009, 4:52 am | தலைப்புப் பக்கம்

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக...தொடர்ந்து படிக்கவும் »

கெட்டவார்த்தைகள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 1, 2009, 6:42 pm | தலைப்புப் பக்கம்

  அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில்...தொடர்ந்து படிக்கவும் »

தயவுசெஞ்சு 'லவ்' பண்றேன்னு சொல்லாதீங்க..!!    
ஆக்கம்: சென்ஷி | February 27, 2009, 6:02 am | தலைப்புப் பக்கம்

மொழியானது எழுத்துக்களின் மூலமாக உருவாக்கப்பட்டாலும் பேச்சுக்களின் மூலமாக வன்மை பெறுகிறது. தாய்மொழியில் இருக்கின்ற பேச்சு வார்த்தைகள் முற்றிலுமாக மாறுபட்டு வேற்றுமொழியினை ஏற்றுக்கொண்டு அதற்கான மூலம் மறக்கின்ற பொழுது அந்த மொழியின் சீர்கேடு தொடங்க ஆரம்பிக்கின்றது. வேற்றுமொழி தாய்மொழியில் கலக்கின்ற சூழலை பொதுவானதாக இரண்டாய் பிரிக்க முடியும்.முதலாவதாய் வேற்று...தொடர்ந்து படிக்கவும் »

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)    
ஆக்கம்: சந்தனமுல்லை | February 1, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர்...தொடர்ந்து படிக்கவும் »

How to Learn Any Language in 3 Months    
ஆக்கம்: Tim Ferriss | January 20, 2009, 9:09 pm | தலைப்புப் பக்கம்

The Okano Isao judo textbook I used to learn Japanese grammar. Post reading time: 15 minutes. Language learning need not be complicated. Principles of cognitive neuroscience and time management can be applied to attain conversational fluency (here defined as 95%+ comprehension and 100% expressive abilities) in 1-3 months. Some background on my language obsession, from an earlier post on learning outside of classes: From the academic environments of Princeton University (Chinese,...தொடர்ந்து படிக்கவும் »

கடைசிப் பெண்    
ஆக்கம்: (author unknown) | December 24, 2008, 11:53 am | தலைப்புப் பக்கம்

ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான...தொடர்ந்து படிக்கவும் »

“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”    
ஆக்கம்: K.S.Nagarajan | December 13, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

இப்போது நான் பெங்களூருக்கு சதாப்தி எக்ஸ்பிரசில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன்.ரயில் பெட்டிக்குள் நுழைந்தது முதல் எங்கு பார்த்தாலும் இந்தி மயம்.கண்ணில் பட்டவைகளை கிளிக்கியிருக்கிறேன்.டிக்கெட் பரிசோதகரிடம் நான் கேட்டது இதுதான்..“ரயிலுக்குள் தீப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?”“அப்போ போய் இந்தி கத்துக்கணுமா சார்?”*******************(அப்டேட் : சுமார் ஒரு மணி நேரம் கடந்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் மொழிப்பெயர்ப்பு மாவீரர் குடும்பம் (great worrier family)    
ஆக்கம்: HK Arun | December 12, 2008, 8:16 am | தலைப்புப் பக்கம்

அன்மையில் ஹொங்கொங் குடிவரவுத் திணைக்களத்திற்கு தமிழில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பைக் காணக்கிடைத்தது. அதில் “மாவீரர் குடும்பம்” என்று குறிப்பிட்டிருந்ததை தமிழ் – ஆங்கில மொழிப்பெயர்ப்பாளர் மொழிப்பெயர்த்துள்ளது தொடர்பில் இப்பதிவு இடப்படுகின்றது. மாவீரர் நாள் – Hero’s Dayமாவீரர் குடும்பம் – Hero’s Familyஇது பொதுவாக எல்லோருக்குமே தெரிந்த சொற்கள்...தொடர்ந்து படிக்கவும் »

தாய்மொழியில் படித்தால் மன இறுக்கம் குறையும்    
ஆக்கம்: சுப.நற்குணன் - மலேசியா | December 11, 2008, 4:21 pm | தலைப்புப் பக்கம்

"தாய்மொழியில் தொடக்கக் கல்வியைப் படித்தால் குழந்தைகளின் மன இறுக்கம் குறையும்" என்று இந்தியாவின் சந்திராயன் விண்கலத் திட்டத்தின் இயக்குநர் அறிவியலாளர் ம.அண்ணாதுரை கூறியுள்ளார்.நெய்வேலி இந்திய பொறியாளர் கழகம், பொறியாளர் அறிவியலாளர் கழகம் மற்றும் கோவை அரசு தொழிற் நுட்ப கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்திய இளைஞர்களுக்கான சந்திராயன்-1 என்ற...தொடர்ந்து படிக்கவும் »

இந்திய அரசியலமைப்புச்சட்டமும் மொழிகளும் - பிரபு ராஜதுரை    
ஆக்கம்: நாகார்ஜுனன் | November 27, 2008, 12:12 am | தலைப்புப் பக்கம்

(செம்மொழி அறிவிப்பு தொடர்பாக விஜயராகவன் என்பவர் உரையாடியதைத் தொடர்ந்து ஆட்சிமொழிப்பிரச்னைகள் பற்றி இணையத்தில் என்ன இருக்கிறது என்று தேடினேன். அப்போது, சுமார் ஐந்தாண்டுகள் முன்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, மரத்தடி.காம் வலைப்பக்கத்துக்கென எழுதிய விளக்கங்களை வாசித்தேன். சுவாரசியமான அவற்றை இங்கே மறுபதிவாக இடுகிறேன். சில மாற்றங்களை உரிமையோடு செய்திருக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் மொழிகள்    
ஆக்கம்: நற்கீரன் | November 26, 2008, 2:49 am | தலைப்புப் பக்கம்

தற்கால அறிவியல் அணுகுமுறை மேற்குலகில் ஏறக்குறைய கி.பி 1550 ஆண்டுக்கு பின்னர் தோற்றம் பெற்றது. அறிவியல் அணுகுமுறையின் ஒரு முக்கிய செயற்பாடு தகவல்களைத் துல்லியமாக பகிர்வதாகும். அதற்கு துணையாக துறைசார்களால் தரம் அறியப்பட்ட அல்லது மீள்பார்வை செய்யப்பட்ட ஆய்வு ஏடுகளில் அறிவியல் முன்னேற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. எந்த மொழியில் இந்த ஏடுகள் கூடுதலாக...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்    
ஆக்கம்: கலையரசன் | November 2, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கிலம் பேசுவோர் சர்வதேசவாதிகள்! தமிழ் பேசுவோர் இனவாதிகள்!!” இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம் இப்படியான வெவேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கிடைக்கும் அனுபவங்கள்...தொடர்ந்து படிக்கவும் »


ஆங்கில நாளேட்டில் சமற்கிருதப் புரட்டு    
ஆக்கம்: தமிழநம்பி | September 17, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

  (புதுச்சேரியிலிருந்து 1999ஆம் ஆண்டில் தனியார் சுற்றுக்கு மட்டுமென வெளிவந்தது ‘தமிழருவி' என்னும் இருமதி இதழ். அத் தமிழருவி 14-04-1999ஆம் நாளிட்ட இதழில் வந்த இக்கட்டுரை, தேவை கருதிச் சிறுசிறு மாறுதல்களுடன் மீண்டும் வெளியிடப் படுகின்றது)      1.1. மாந்தரின் பிறப்பு, நேரச்சி(accident) நிகழ்வு போன்ற தென்கின்றது ஒரு பழமொழி.  எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான மக்கள் கூட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »


சிங்கப்பூரிலிருந்து ஒரு மடல்    
ஆக்கம்: அருண்மொழி | August 28, 2008, 1:27 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரிலிருந்து ஒருத்தர் எழுதும் கடிதம்நான் அப்போ சின்ன பையன். எனக்கு கதைகனா புடிக்கும். ரொம்ப புடிக்கும். என் தாத்தா என் பொறந்த நாளுக்கு ஒரு புக் தந்தார். அவர் எப்பவும் புக் தான் பரிசு கொடுப்பார். ஒரு நாள் நான் ஒரு புக்ல படிச்ச சிவாஜி கதை ஒன்னை என் பிரண்டுகிட்ட சொல்லிகிட்டிருந்தேன். ரொம்ப சுவாரசியமா சொல்லிகிட்டிருந்தேனா...அப்ப என் ஸ்கூல படிக்கிர இன்னொரு பிரண்டு...தொடர்ந்து படிக்கவும் »

மேதாவி மதன்    
ஆக்கம்: கோபி(Gopi) | August 19, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

இந்த வார (20 ஆகஸ்ட் 2008) விகடன் இதழில் "ஹாய் மதன்" பகுதியில் வெளியான மதன் பதில்களில் சில:--------------------------------------------------------------மா.அண்ணாமலை, சென்னை-1.Surrender என்ற ஆங்கிலச் சொல்லுக்கு சரண் என்று தமிழில் வருகிறதே! சரண் என்ற சொல் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் போனதா? இல்லை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்ததா? இது போல ஒற்றுமையுள்ள பல ஆச்சர்ய வார்த்தைகள் உண்டு! பண்டைய பிரெஞ்சு...தொடர்ந்து படிக்கவும் »

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?    
ஆக்கம்: பொன்வண்டு | August 12, 2008, 3:50 am | தலைப்புப் பக்கம்

ಕನ್ನಡமீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.பிரச்சினை தமிழக அரசு...தொடர்ந்து படிக்கவும் »

ஒவ்வொரு நாளும்:கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | August 9, 2008, 1:44 am | தலைப்புப் பக்கம்

கடிதம் அன்புள்ள ஜெயமோகன், உங்கள் சுயசரித்திரக் குறிப்புகளை [ ஒவ்வொருநாளும் ] படித்தேன். நீங்கள் உங்களுக்கு பொருத்தமான முறையில் ஒரு வாழ்க்கையை தேடிக்கொண்டு அமைதியாக வாழ்ந்தபடி உங்கள் வேலையை தீவிரமாகச் செய்கிறீர்கள். இந்த மாதிரியான வாழ்க்கை அமைந்ததை அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாருக்கும் அப்படி ஆவதில்லை. என்னுடைய ஊர் உடுமலை. எனக்கு மிகவும் பிடித்தமான...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு லயோலாவில்    
ஆக்கம்: Badri | July 31, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

லயோலா கல்லூரியில் ஊடகவியல் முதுநிலைப் படிப்பு தமிழ்வழியில் பயிற்றுவிக்கப்பட உள்ளது. இந்தப் படிப்பைத் தொடங்கிவைத்த அமைச்சர் பொன்முடி, “ஆங்கிலம் தொடர்புக்கான ஒரு மொழியாக இருக்கலாமேதவிர, தமிழ்தான் பயிற்றுவிக்கும் மொழியாக இருக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.இந்தச் செய்தி தி ஹிந்துவில் ஆங்கிலத்தில் வந்துள்ளது. தினமணி, தினமலரில் தேடிப்பார்த்தேன். இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கிலத் தாக்கம்    
ஆக்கம்: Badri | July 11, 2008, 5:58 pm | தலைப்புப் பக்கம்

எங்கோ பிரிட்டனில் பிறந்து, பிரான்ஸ், அமெரிக்கா என்று சுற்றிக்கொண்டிருந்தார் இவர். கொரியாவில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தார். அதனால் அங்கு சென்று கொரியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்.ஆனால் இவருக்கு இந்தியாவில் வாழ விருப்பம். யோகா கற்றுக்கொள்வது, இந்திய தத்துவமரபில் ஈடுபடுவது இவரது விருப்பங்கள். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

வார்த்தைகளின் விளையாட்டு    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 6, 2008, 12:18 am | தலைப்புப் பக்கம்

"நான் ஒரு தமிழ் வழிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்று இன்று நான் ஒரு கணிப்பொறியாளராக (SAP BW) பணியாற்றி வருகிறேன். இருப்பினும் என்னால் சரி வர ஆங்கிலம் பேச இயலவில்லை. இதனால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஆதலால் எளிய வகையில் ஆங்கிலம் பேச பழக வழிவகை அல்லது (மென்பொருள்) இருந்தால் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை செய்தால் எனக்கு மட்டும் அல்ல என்போன்ற மக்களுக்கு இது ஒரு பெரிய...தொடர்ந்து படிக்கவும் »

மொழியும் நானும்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 5, 2008, 2:55 pm | தலைப்புப் பக்கம்

அஜிதனின் பள்ளிச்சேர்க்கைப் படிவத்தை நானே ஒரு துணிச்சலில் நிரப்ப ஆரம்பித்தேன். பொதுவாக நான் இதையெல்லாம் செய்வதில்லை. ஒரு உற்சாகம்தான். நாலைந்து வரிகளுக்குள் ஏழெட்டு வெட்டுகள். பிழைகள். அஜிதன் வாங்கிப் பார்த்தான்.”உன்னை இதெல்லாம் யார் செய்யச்சொன்னது? நானே செய்வேன்ல? ”என்றான்”இங்கிலீஷ் அம்பிடும் தப்பு..தமிழிலயும் தப்பு…”என்றபடி அதை சுருட்டி வீசிவிட்டு இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »

சபாஷ் பிறந்தக் கதை!!    
ஆக்கம்: நிவேதிதா | May 17, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

கி.பி. 1587ல் பாரசீகத்தை ஆண்ட மன்னர் ஷா அப்பாஸ். இவர் ஆட்சியின் போது துருக்கியும் உஸ்பெக்கும் பாரசீகத்தை தாக்கியது. மிகுந்த மன உறுதுயுடன் போராடி வெற்றியும் பெற்றார் ஷா அப்பாஸ். இப்படி தான் பாரசீக சாம்ராஜ்யம் உருவானது. இவர் தான் இஸ்பஹான் நகரை பாரசீகத் தலைநகராக்கியவர். மொகலாயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில், காபூல் மற்றும் கந்தஹாரை மிகவும் எச்சரிக்கையாகப் பாதுகாத்து...தொடர்ந்து படிக்கவும் »

அரபிக் கடலோரம் - மலையாளம், மலையாளி - ஓர் எச்சரிக்கை    
ஆக்கம்: (author unknown) | May 11, 2008, 12:29 am | தலைப்புப் பக்கம்

சக்கரியா மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.ஆனால்,...தொடர்ந்து படிக்கவும் »

சொற்களைத் தொலைத்தவனின் குரல்.!    
ஆக்கம்: ஆழியூரான். | April 24, 2008, 10:19 am | தலைப்புப் பக்கம்

"நினைவில் காடுள்ள மிருகத்தைஎளிதில் பழக்க முடியாது"-எங்கோ ப‌டித்த‌திலிருந்து..'இன்னைக்கு காலையிலதான் மாமா வந்தேன்..', 'நேத்தே வந்துட்டன்டா..', 'இன்னைக்கு ராத்திரி கௌம்பணும்..' என்பதாக முடிந்துபோகிறது ஊருக்குப் போய்வருதல். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் சொந்த ஊரில் இருந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன. இனிமேலும் அப்படி இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மீள வழியற்ற...தொடர்ந்து படிக்கவும் »

மணவாடுகள் மஞ்ச்சிவாடுகள்    
ஆக்கம்: vijaygopalswami | April 21, 2008, 12:25 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஆண்டு வேலை காரணமாக ஹைதராபாதுக்குக் குடி பெயர நேர்ந்தது. வருவதற்கு முன்பே முப்பது நாளில் தெலுங்கு பாஷை புத்தகம் வாங்கியாகிவிட்டது. ஆனால் வந்து இறங்கியதும் தான் தெரியும், தெலுங்கு பேசுபவர்களை போல ஹைதராபாதில் ஹிந்தி பேசுபவர்களும் அதிகம் என்று (தெலுங்கு தெரியாத இஸ்லாமியர்கள், வடஇந்தியர்கள்). வாங்கிய புத்தகம் ஒரு பயனும் இல்லாமல் போனது. அனைத்துமே சைகைதான். ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »

IT-யும் ஆங்கில‌மும்    
ஆக்கம்: bashakavithaigal | April 20, 2008, 5:48 pm | தலைப்புப் பக்கம்

அறிவாளினா ஆங்கில‌ அறிவு இருக்கும்;ஹிந்து,எக்ஸ்பிர‌ஸ் பேப்ப‌ர்க‌ளை அனாய‌ச‌மாக‌ ப‌டிப்பார்க‌ள் என்று ந‌ம் பெரிசுக‌ள் ப‌ல‌ நூற்றாண்டு கால‌மாய் க‌தை க‌ட்டி வ‌ந்துள்ளார்க‌ள். ஆங்கில‌ அறிவு பெற்ற‌வ‌ர‌ல்லாம் அறிவாளியாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மில்லை.அறிவாளிக‌ளெல்லாம் ஆங்கில‌ அறிவு பெற்றிருப்பார் என்ப‌தும் க‌ற்பித‌ம்தான். மென்பொருள் துறையில் ப‌ல‌ உய‌ர் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 1    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 19, 2008, 2:12 am | தலைப்புப் பக்கம்

மொழிகள் வெறும் தகவல் தொடர்பு சாதனமாகவே தோன்றிய காலத்தில் இருந்தது, அதாவது பறவைகள், விலங்குகளின் குரல் ஒலி போல் ஒரு தகவல் பரிமாற்றத்திற்காகவே முதன் முதலில் மொழிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும். உலகில் உள்ள எந்த மொழியும் (கணனி மொழி தவிர்த்து) தோன்றிய காலத்தில் எழுத்துடனே தோன்றி இருந்ததற்கான கூறுகளே (ஆதாரம்) இல்லை. பறவைகளின், விலங்குகளின் தொண்டை மற்றும் நாக்கு அமைப்பிற்கு...தொடர்ந்து படிக்கவும் »

மலாய் மொழியை விரைவாக கற்கலாம் !    
ஆக்கம்: வாசுதேவன் இலட்சுமணன். | March 3, 2008, 5:28 pm | தலைப்புப் பக்கம்

மலேசியாவின் தேசிய மொழி 'பஹாசா மலேசியா'- Bahasa Malaysia'. மலாய்க்காரர்கள் தங்கள் மொழியை முன்னிருத்த எண்ணி 'பஹாசா மெலாயு' - Bahasa Melayu என்று எழுதலாயினர். பிறகு அரசாங்கம் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கத்தில் மீண்டும் 'Bahasa Malaysia' என்றே பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனப்படுத்தியுள்ளது. அரசாங்க ஊழியர்கள் கண்டிப்பாக மலாய் மொழியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான்...தொடர்ந்து படிக்கவும் »

இறைவன் மொழிகளை கடந்தவன் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | August 6, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

தமிழில் 'நுழைக்கப்பட்ட' வேற்று மொழிச் சொற்களில் வடமொழிக்கே (சமஸ்கிரத த்திற்கே) முதலிடம். மற்ற கலப்ப்புச் சொற்கள் இயல்பாக நுழைந்தவை. வணிக நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »