மாற்று! » பகுப்புகள்

திரைப்படம் 

BURIED : எனது பார்வையில்    
ஆக்கம்: சேவியர் | January 12, 2011, 9:52 am | தலைப்புப் பக்கம்

கண் விழித்துப் பார்க்கும்போது உங்களைச் சுற்றிலும் கும்மிருட்டாய் இருந்தால் எப்படி இருக்கும் ? கைகால்களை நீட்ட முடியாமல், எழ முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? நீங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் ஏதோ ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் எப்படி இருக்கும் ? நினைத்து பார்க்கவே திகிலூட்டும் இந்தச் சூழலை பரீட் திரைப்படம்...தொடர்ந்து படிக்கவும் »

நயன்தாராவும் நள்ளிரவு புரோட்டாவும்....    
ஆக்கம்: anthanan | April 30, 2010, 11:15 am | தலைப்புப் பக்கம்

மாயாண்டி குடும்பத்தார் படத்தோட இன்விடேஷனை பார்த்தவங்க அதை அப்படியே மடிச்சு எரவாணத்தில சொருகி வச்சிருந்தா ஒரு விஷயத்துக்கு பயன்பட்டிருக்கும். எப்பல்லாம் பசி எடுக்குதோ, அப்படியே விரிச்சு வச்சு பார்த்தா ஒரு முனியாண்டி விலாசுக்குள்ளே போயிட்டு வந்த திருப்தி இருக்கும். வேறொன்னுமில்ல. ஒரு பெரிய வாழை இலைய கொஞ்சம் கூட கட் பண்ணாம விரிச்சு வச்சு, அது கொள்ளாம கறி சோறு...தொடர்ந்து படிக்கவும் »

A Short Film About Love    
ஆக்கம்: உமாஷக்தி | April 29, 2010, 5:54 am | தலைப்புப் பக்கம்

மொழி – பொலிஷ்இயக்குனர் – க்ரிஸ்டோஃப் கீஸ்லோவஸ்கிநடிகர்கள் – ஒலஃப் லூபன்ஸ்கோ (Olaf Lubaszenko)/க்ரேஸ்யனா (Grażyna Szapołowska)‘மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன்செவ்வி தலைப்படுவார்’காதலின்பம் மலரை விட மென்மையானது. அந்த உண்மையை உணர்ந்து நற்பயன் பெறுபவர் இவ்வுலகில் வெகு சிலரே என்கிறார் திருவள்ளுவர். இதைவிட காதலைப் பற்றி சிறப்பாகக் கூறிய வரிகள் ஏதுமிருக்க முடியாது. அத்தகைய மெல்லிய...தொடர்ந்து படிக்கவும் »

பச்சை [பொய்] வலயம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | April 15, 2010, 2:31 pm | தலைப்புப் பக்கம்

ஈராக்கின் கைவசம் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உண்டு எனக் காரணம் காட்டி, அந்த நாட்டின் மீது 2003ல் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது. ஈராக் ராணுவத்திடமிருந்து பெரும் எதிர்ப்புக்கள் இல்லாத நிலையில் ஈராக் நாட்டை அமெரிக்காவும், அதனது தோழமை நாடுகளும் இலகுவாக தம்வசப்படுத்தின. இந்நிலையில் ஈராக் நாட்டில் மறைத்து...தொடர்ந்து படிக்கவும் »

பையா - அட போய்யா (அ) கோடை விடுமுறைக்காக..    
ஆக்கம்: Saravana Kumar MSK | April 4, 2010, 6:42 am | தலைப்புப் பக்கம்

நம் தமிழ்ப்பட ஹீரோ, மிக அலட்சியமான cool guy.. குழந்தைகளுக்கு குச்சிமிட்டாய் வாங்கி கொடுப்பார்.. நண்பர்களோடு பியர் குடித்து நட்போடு இருப்பார்.. காமெடி செய்வார். ஹீரோயினை கண்டதும் லவ்வுவார். பாட்டு பாடுவார். கலர் கலர் டிரஸ்ஸோடு வெளிநாட்டிலும்/மழையில் சில்லென்று நனைந்தபடியும் டூயட்டுவார். விவேகமானவர். எந்த பிரச்சனையையும் அதிபுத்திசாலிதனமாக சமாளிப்பார். உலகம் முழுதும்...தொடர்ந்து படிக்கவும் »

அற்புத உலகில் ஆலிஸ்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | March 26, 2010, 12:21 pm | தலைப்புப் பக்கம்

சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது. தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது...தொடர்ந்து படிக்கவும் »

Love Sex Aur Dhokha(no spoilers)    
ஆக்கம்: பரத் | March 21, 2010, 6:00 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு “Paranormal Activity” என்று ஒரு படம் பார்த்தேன். நான் பார்த்த பேய்ப்படங்களில் மிகச்சிறந்தது என அப்படத்தை சொல்லலாம்; சிறந்தது மட்டுமல்ல, அது ஏற்கனவே வெளிவந்திருக்கும் பேய்படங்களின் தரத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது. ஏனென்றால் பயம் என்பது காதல், காமம், நகைச்சுவை போலவே ஒரு உணர்வு. அதீத ஒப்பனையாலோ, எதிர்பாராத சமயத்தில் எழுப்பப்படும் உரத்த ஒலியினாலோ...தொடர்ந்து படிக்கவும் »

Crazy Heart - திரைப் பார்வை    
ஆக்கம்: பரத் | March 17, 2010, 8:00 am | தலைப்புப் பக்கம்

’நடிக்கவில்லை; கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்ற அடித்துத் துவைத்துக் கிழிக்கப்பட்ட வாக்கியத்தின் உண்மையான பொருளை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் “Crazy Heart” படம் பார்க்கலாம்.நீண்ட கால கண்ணாமூச்சிக்குப் பிறகு ஐந்தாவது நாமினேஷனில்ஜெஃப் ப்ரிட்ஜஸ்க்கு ஆஸ்கர் குழந்தையைப் பெற்றுத் தந்திருக்கிறது இப்படம்.இந்த படத்தில் ஜெஃப் ப்ரிட்ஜஸுக்கு Bad Blake...தொடர்ந்து படிக்கவும் »

ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்    
ஆக்கம்: உதய தாரகை | March 12, 2010, 1:13 am | தலைப்புப் பக்கம்

திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம். திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரியும் ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

Inside Deep Throat (2005) [18+]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 11, 2010, 11:29 pm | தலைப்புப் பக்கம்

நானொரு அப்பாவிங்க. ஏன்னு கடைசியில் சொல்லுறேன். அதுக்கு முன்னாடி, நம்ம யூத் சங்கர் பிறந்து பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சி, 1972-ல் வந்த Deep Throat படத்தை கேள்விப் பட்டிருப்பீங்க. நீங்க அடுத்த பாராவை ஸ்கிப் பண்ணிடுங்க. இந்தப் பாரா படாதவங்களுக்கு!! Deep Throat, வெறும் $22,500 டாலரில் எடுக்கப்பட்ட போர்னோ. ஹாலிவுட் படங்கள், எதோ ஃப்ரீ செக்ஸ்னா அமெரிக்காங்கற மாதிரி பில்டப் கொடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »

நிழல் எழுத்தாளன்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | March 11, 2010, 12:16 pm | தலைப்புப் பக்கம்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது. மைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையை...தொடர்ந்து படிக்கவும் »

அஜீத்-கெளதம் மேனன் கூட்டணில் 'காக்கி'!    
ஆக்கம்: (author unknown) | March 11, 2010, 6:41 am | தலைப்புப் பக்கம்

அஜீத்தின் 50வது படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.ஆனால் சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் கெளதம் மேனன், "துப்பறியும் ஆனந்த் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது வேறு புராஜக்ட். 1920ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு துப்பறியும் கதைக்காக இந்தத் தலைப்பை பதிவு செய்திருக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »

Oscar Winners (2010)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 8, 2010, 6:07 am | தலைப்புப் பக்கம்

நானூறு மில்லியன் டாலர் படத்தோடு, பத்து மில்லியன் டாலர் படம் போட்டியிட்டதோடு, ஆறு வெற்றி (ஏழுப் பிரிவுகளில் நேரடிப் போட்டி). இந்த வருடத்தின் ஸ்பெஷல், பெண் இயக்குனர் ஒருவர் முதன் முதலாய் ஆஸ்கர் வாங்கியது. என்னுடைய ‘பிக்’கை.. கடைசி வரிகளில் கொடுத்திருந்தேன். அதில் 10தான் நடந்திருக்கு. அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கணும். திரைப்படம் படம்தயாரிப்பாளர் An EducationFinola Dwyer, Amanda Posey A Serious...தொடர்ந்து படிக்கவும் »

தனி மனிதன்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | March 6, 2010, 9:13 am | தலைப்புப் பக்கம்

லாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது. ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனி...தொடர்ந்து படிக்கவும் »

பஷீருடன் ஒரு நடனம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | March 3, 2010, 1:18 pm | தலைப்புப் பக்கம்

இஸ்ரேலின் குளிர் நிறைந்த ஜனவரியின் இரவொன்றில் அரியின் நண்பன் பாவோஸ் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறான். தன் நண்பனின் அழைப்பை ஏற்று மதுபான விடுதி ஒன்றில் அவனைச் சந்திப்பதற்காக செல்கிறான் அரி. விடுதிக்கு வெளியே குளிர்காலத்தின் மழை சோம்பலுடன் தெருக்களை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே தெறித்த மின்னல்கள், விடுதியின் மென்னிருளை நொடிநேரம் பிரகாசிக்க செய்து...தொடர்ந்து படிக்கவும் »

Born into Brothels (2004)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 3, 2010, 6:27 am | தலைப்புப் பக்கம்

ஸானா ஆண்டி, எங்களை இன்னைக்கு பீச் கூட்டிட்டுப் போனாங்க. இதுவரைக்கும் நான் கடலைப் பார்த்ததேயில்லை. ஸானா ஆண்டி மாதிரி நல்லவங்களை பார்க்கவே முடியாது. எங்களை ஸூ-வுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. அப்படி என்ன இல்லாததையா காட்டிட்டாங்க? அந்தச் சேரியும், சேரிவாழ் மக்களும் நாம் உருவாக்கிய சமூகம்தானே? -ன்னு.. யாரோ, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வக்காலத்து வாங்கிய போது......தொடர்ந்து படிக்கவும் »

Heist (2001) - [Hollywood Robbeires 04]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 2, 2010, 8:09 pm | தலைப்புப் பக்கம்

Mamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம். 01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி. 02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே.....தொடர்ந்து படிக்கவும் »

Heist (2004) - [ Hollywood Robbeires 04 ]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 2, 2010, 8:05 pm | தலைப்புப் பக்கம்

Mamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம்.01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி. 02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே.. முதல்...தொடர்ந்து படிக்கவும் »

வித்தியாசமான காதல் படம் - விண்ணைத்தாண்டி வருவாயா!    
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | March 2, 2010, 4:42 am | தலைப்புப் பக்கம்

பீமா கந்தசாமி போன்ற தொடர் அடிகளுக்குப் பிறகு எந்தப்படமும் முதல்நாள் செல்வதில்லை என்று முடிவெடுத்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வந்தேன். விமர்சனங்களைப்பார்த்து எனக்கு கொஞ்சமாவது பிடிக்குமாறு கதை இருக்கிறதா என்றறிந்துகொண்டு அதற்குப்பிறகே திரையரங்குப்படையெடுப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற உத்தேசம் ஓரளவுக்குப் பலன் அளித்துதான் வந்தது - விண்ணைத்தாண்டி...தொடர்ந்து படிக்கவும் »

9 (2009) - திரைப்படம்    
ஆக்கம்: குட்டிபிசாசு | March 1, 2010, 8:50 pm | தலைப்புப் பக்கம்

மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இறுதிப்போர் நிகழ்ந்து எல்லோரும் அழிந்துகிடக்கும் தருவாயில் தன்னுடைய உயிரை பொம்மைகளில் அளித்துவிட்டு இறக்கிறார் ஒரு விஞ்ஞானி. அப்படி கடைசியாக உருவாக்கப்பட்ட பொம்மை '9'. உயிர்தெழுந்து வரும் 9, அழிவுகளிடையே நடந்து செல்லுகையில் ஒரு இயந்திர மிருகத்தால் துரத்தப்படுகிறது.  ஆனால் துரத்தப்படும்போது 9-ஐ பொம்மை 2 காப்பாற்றுகிறது. பிறகு...தொடர்ந்து படிக்கவும் »

Daybreakers (2010)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 1, 2010, 4:25 pm | தலைப்புப் பக்கம்

சினிமா கண்டுபிடித்ததில் இருந்து, இதுவரை... வெளிவந்துள்ள 1000 சொச்சம் வேம்பயர் படங்களிலும்... சொல்லாத ஒரு விசயம், Daybreakers -ல் உண்டு. இதற்கு முன், மூன்றுப் படங்களில், 99% மனித இனமும் அழிஞ்சது போல காட்டியிருப்பாங்க (28 Days After, I am Legend, Zombieland). ஆனால் அந்தப் படங்களில் காட்டதது, மொத்த மனித இனமும் அழிந்தால், இந்த வேம்பயர்கள், ‘இரத்தத்திற்கு’ என்னப் பண்ணுவாங்க? தங்களின் எதிர்கால ‘இரத்தத் தேவை’க்கு,...தொடர்ந்து படிக்கவும் »

கருப்பு மஞ்சள் சிவப்பு - த்ரில்லர் குறும்படம்    
ஆக்கம்: Tech Shankar | February 20, 2010, 12:31 pm | தலைப்புப் பக்கம்

கருப்பு மஞ்சள் சிவப்பு - த்ரில்லர் குறும்படம்குறும்படத்தைப் பார்வையிட : Black Yellow Red - Thriller...தொடர்ந்து படிக்கவும் »

"1999" - சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை சொல்லும் சினிமா    
ஆக்கம்: கானா பிரபா | February 20, 2010, 11:35 am | தலைப்புப் பக்கம்

இன்று கனேடியா வாழ் ஈழத்தமிழர்களால் தயாரித்து இயக்கிய 1999 படத்தைத் தியேட்டரில் பார்த்து விட்டு வந்திருக்கிறேன். அவுஸ்திரேலியாவில் தமிழகத்துச் சினிமாக்கள் வருவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், எமது ஈழத்துப் படைப்புக்களைப் பொறுத்தவரை, லண்டனில் தயாரான "கனவுகள் நிஜமானால்", கனடாவில் தயாரான "தமிழச்சி", ஈழத்தில் எடுக்கப்பட்ட "ஆணிவேர்" வரிசையில் 1999 படமே ஈழத்துப் படைப்பாகத்...தொடர்ந்து படிக்கவும் »

My name is Agiilan and I am not a terrorist    
ஆக்கம்: த.அகிலன் | February 20, 2010, 7:30 am | தலைப்புப் பக்கம்

xx.xx.2007 அகிலன்:    அண்ணா ஓட்டோ வருமா? ஓட்டுனர்:    எங்க போணும்பா? அகி:        வளசரவாக்கம் போகோணும் வருவீங்களா? ஓட்:        ஆ போலாம்பா அகி:        எவ்வளவு ஓட்;:        நீ சிலோனாப்பா?. ………………………………… 19.02.2010 அகி:    ஆட்டோ .. ஆட்டோ? ன்ணா கோடம்பாக்கம் வருமா? ஓட்:    ம் போலாம்.. அகி:    எவ்ளோ. ஓட்:    பிப்டி குடு அகி:    ஆ போலாம் ……………… ஓட்:    நமக்கு எந்தூரு தம்பி அகி:    எதுக்கு கேக்றீங்க ஓட்:   ...தொடர்ந்து படிக்கவும் »

பிலிப் மொரிஸின் காதலன்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 19, 2010, 12:43 pm | தலைப்புப் பக்கம்

ஒரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையைக் குறித்த திரைப்படங்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வெகுஜன சினிமா ரசிகர்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன. இவ்வரிகளை எழுதும்போது என் வலிமையற்ற நினைவாற்றல் மூலம் Philadelphia, The Birdcage ஆகிய இரு திரைப்படங்களையே என்னால் மீட்டெடுக்க முடிகிறது. பிலடெல்பியா, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் தான் பணிபுரிந்த...தொடர்ந்து படிக்கவும் »

லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்    
ஆக்கம்: சுரேஷ் கண்ணன் | February 18, 2010, 8:48 am | தலைப்புப் பக்கம்

உலகத்தின் சிறந்த 10 திரைப்படங்களை பட்டியலிடச் சொன்னால் என்னால் தயக்கமேயின்றி 1954-ல் வெளிவந்த இத்தாலிய நியோ ரியலிச வகைத் திரைப்படமான 'லா ஸ்டிராடா'வைச் அதில் சேர்க்க முடியும். ரேவின் 'பதேர் பாஞ்சாலி' டிசிகாவின் 'பை சைக்கிள் தீவ்ஸ்' போல பார்வையாளனின் நெஞ்சில் ஒரு நீங்காத துயரத்தின் வடுவாக பதிந்து விடும் திரைப்படங்களின் வரிசையில் லா ஸ்டிராடாவிற்கும் முக்கிய பங்குண்டு....தொடர்ந்து படிக்கவும் »

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்    
ஆக்கம்: சீனு | February 17, 2010, 12:33 pm | தலைப்புப் பக்கம்

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்த பெயரை பல முறை கேட்டாலும், ஏனோ அவர் படங்களை சமீப காலங்களாக பார்த்தது இல்லை. அவர் சஸ்பென்ஸ் படம் எடுப்பதில் தில்லாலங்கடி என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், பொதுவாக எனக்கு சஸ்பென்ஸ் படங்கள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. ஆள் "Humpty Dumpty sat on the wall" நர்சரி ரைமில் வரும் அந்த முட்டையை போல் இருப்பார்.ஆட்ரே ஹெப்பர்ன் என்ற நடிகையை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »

மின்னல் திருடன்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 15, 2010, 1:36 pm | தலைப்புப் பக்கம்

நியூயார்க் நகரின் யான்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு சாதாரண மாணவன் பெர்சி ஜாக்சன். பெர்சிக்கு எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் இருக்கிறது. ஒரு இடத்தில் கையைக் காலை ஆட்டாது அவனால் இருக்க முடியாது. மிகையான துறுதுறுப்பு கொண்ட இளைஞனாக அவன் இருக்கிறான். கல்லூரியில் அவன் உற்ற நண்பணாக குரோவர் எனும் இளைஞன் இருக்கிறான். யான்சிக் கல்லூரியின் ஆசிரியர்களில் ஒருவரான...தொடர்ந்து படிக்கவும் »

ஹார்மொனி கொரியன் சினிமா (விமர்சனம்)    
ஆக்கம்: நா.கண்ணன் | February 15, 2010, 1:17 am | தலைப்புப் பக்கம்

புதுவருட (சீன) வெளியீடாக வந்திருக்கும் ஒரு நெகிழ்வான கொரியப்படம் ஹார்மொனி என்பது. இப்படம் தன் கணவனைக் கொன்ற ஒரு இளம் கர்ப்பவதியின் கதையுடன் தொடங்கிறது. பெண் குற்றவாளிகளுக்காகவே உள்ள பிரத்தியேக சிறையில், இப்படிப் பல குற்றவாளிகள். இவர்கள் எல்லோரும் குடும்ப வன்முறை, பொறாமை (காதல்) போன்ற காரணங்களினால் தற்காப்பிற்காக ஏதோ செய்யப்போய் அது கொலைக் குற்றமாக ஆகி சிறையில்...தொடர்ந்து படிக்கவும் »

தெலுங்கில் 'ஹிட்டான' ஆயிரத்தில் ஒருவன்!    
ஆக்கம்: (author unknown) | February 13, 2010, 6:02 am | தலைப்புப் பக்கம்

செல்வராகவன் இயக்கி, பொங்கல் வெளியீடாக வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் தமிழில் தோல்வியைத் தழுவினாலும் தெலுங்கில் பெரிய வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ 32 கோடி செலவில் தயாரான ஆயிரத்தில் ஒருவன் படத்தை தமிழில் பார்த்தவர்கள் ஆளுக்கு ஒரு கதையைச் சொன்னார்கள். சிலர் அந்தப் படத்தை ஈழத்தின் கதை என்றெல்லாம் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டார்கள். இதைவிடக்...தொடர்ந்து படிக்கவும் »

ஓநாய் மனிதன்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 11, 2010, 12:23 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் இருந்து லண்டன் நகரிற்கு தன் நாடகக் குழுவுடன் விஜயம் செய்து, மேடை நாடகங்களில் திறம்பட நடித்துக் கொண்டிருக்கிறான் லாரன்ஸ் டால்பாட் [Benicio Del Toro]. லாரன்ஸ், லண்டன் நகரில் இருப்பதை அறிந்து கொள்ளும் க்வன் கொன்லிஃப் [Emily Blunt] எனும் இளம் பெண் அவனிற்கு ஒரு மடலை எழுதுகிறாள். லாரன்ஸின் சகோதரனாகிய பென் டால்பாட்டிற்கு திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணாக தன்னை...தொடர்ந்து படிக்கவும் »

அசல் - ஜக்குபாய்    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | February 10, 2010, 5:30 am | தலைப்புப் பக்கம்

அஜித்துக்கு விடிவே கிடையாது போலிருக்கிறது. இன்னமும் பில்லா ஃபீவரிலேயே அலைகிறார். கிட்டத்தட்ட வரலாறு கெட்டப்பில் அப்பா கேரக்டர். பில்லா டைப்பில் மகன் கேரக்டர். இரட்டை வேடத்தில் நடித்ததால் வாலி ஹிட் ஆகவில்லை. அதில் கதையும் இருந்தது என்பதை யாராவது அஜித்துக்கு எடுத்துச் சொல்லலாம்.சரண், அஜீத், யூகிசேது என்று மூன்று பேருடைய பெயர் டைட்டிலில் ‘கதை’ என்று வருகிறது. இல்லாத...தொடர்ந்து படிக்கவும் »

நாணல்களுடன் ஆடும் நடனம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 9, 2010, 12:26 pm | தலைப்புப் பக்கம்

பரந்து விரிந்த நாணல் புற்பரப்பு. காற்று, நாணல்களுடன் நடனமாடிக் கொண்டிருக்கிறது. காற்றின் முனகல் கடல் அலைகள் போல் ஒலிக்கிறது. அந்தப் பழுப்பேறிய புற்பரப்பினூடாக தயங்கிய அடிகளில் நடந்து வருகிறாள் அந்தப் பெண். சற்று வயதானவள். கண்களில் அயர்ச்சி கலந்த சோகம். தன் நடையை ஒரு கணம் நிறுத்தி அழுக்கேறிய தன் கைகளைப் பார்க்கிறாள் அவள். புற்களிற்குள் உறையும் பூச்சிகளின் கீறிய...தொடர்ந்து படிக்கவும் »

THE WEATHER MAN : எனது பார்வையில்…    
ஆக்கம்: சேவியர் | February 8, 2010, 7:05 am | தலைப்புப் பக்கம்

“இன்றைய வானிலை” என கையையும் தலையையும் ஆட்டி ஒரு செயற்கைச் சிரிப்புடன் சிகாகோ தொலைக்காட்சியில் வானிலைச் செய்தி அறிவிப்பவர் நம்ம ஹீரோ நிக்கோலஸ் கேஜ். நகரில் அவர் ஒரு காமெடி கேரக்டர். நம்ம ஊரில் பிடிக்காதவர்கள் மீது தக்காளி, அழுகிய முட்டை எறிவது போல அவர் மீது ஃபாஸ்ட் புட் ஐட்டங்களை எறிந்து கலாய்க்கிறார்கள். பரீடோ, சிக்கன் நகெட்ஸ், பல்ப், ஆப்பிள் பை என சகட்டு மேனிக்கு...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன் - சில கோவையற்ற எண்ணங்கள்    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | February 8, 2010, 4:09 am | தலைப்புப் பக்கம்

புதிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதைக்களன் சர்ச்சைக்குரியதென்றால், கலைஞர் எழுதிய ரோமாபுரிப் பாண்டியனும் சர்ச்சைக்குரியது. காணாமற்போன பாண்டியன் ரோமாபுரியில் காலங்கழித்ததாக கலைஞர் எழுதியிருப்பார். அகிலனின் கயல்விழியில் சில வர்ணனைகளும் சர்ச்சைக்குரியன. யானையின் மீது துள்ளிக்குதித்து வீரனைப்போல ஏற முடியாதவனாக அல்லவா சோழ இளவரசனை அகிலன் வர்ணித்திருப்பார். மகன்...தொடர்ந்து படிக்கவும் »

செல்வா: ஆயிரத்தில் ஒருவன்    
ஆக்கம்: noreply@blogger.com (நாராயணன்) | February 6, 2010, 3:39 pm | தலைப்புப் பக்கம்

இது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை. செல்வராகவன். எனக்கு செல்வா. தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »

செல்வா: ஆயிரத்தில் ஒருவன்    
ஆக்கம்: noreply@blogger.com (நாராயணன்) | February 6, 2010, 3:39 pm | தலைப்புப் பக்கம்

இது ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனம் இல்லை. செல்வராகவன். எனக்கு செல்வா. தமிழ்சினிமாவின் மார்க்கமான கலர் உள்ள ஆள். வுட்லெண்ட்ஸ் ஸிம்பொனியில் தான் “துள்ளுவதோ இளமை” பார்த்தேன். பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது, இந்தாள் வேறு ஜாதியென்று. வெறும் கதவு மட்டும் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருக்கும் “காதல் கொண்டேன்” ட்ரைய்லர் பார்த்தவுடன் புரிந்துவிட்டது, செல்வா ஒரு சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »

கடவுளின் நிறம் என்ன?    
ஆக்கம்: கலையரசன் | February 5, 2010, 9:30 am | தலைப்புப் பக்கம்

1992 ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கறுப்பின வாலிபனை வெள்ளை போலீசார் தாக்கினார்கள். அந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி நீதிமன்றத்தில் சாட்சியமாக்கப்பட்டும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனால் லொஸ் எஞ்செல்ஸ் நகரில் கலவரம் வெடித்ததை உலகம் மறந்திருக்காது. இதன் தாக்கம் டைரக்டர் ஸ்பைக் லீயை "மல்கம் எக்ஸ்" திரைப்படம் எடுக்க தூண்டியிருக்க வேண்டும். கறுப்பின இளைஞனை...தொடர்ந்து படிக்கவும் »

முத்தம் கேட்கும் தவளை    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 3, 2010, 12:19 pm | தலைப்புப் பக்கம்

கேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி. சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசை...தொடர்ந்து படிக்கவும் »

முத்தம் கேட்கும் தவளை    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 3, 2010, 12:19 pm | தலைப்புப் பக்கம்

கேளிக்கைகளிற்கும், ஜாஸ் இசைக்கும் பெயர் போன நியூ ஆர்லியன்ஸ் நகரம். அந்நகரின் பிரபல்யமான செல்வந்தர்களில் ஒருவராக பிக் டாடி லா வுஃப் திகழ்கிறார். அவரது ஒரே செல்ல மகள் சார்லொட். தன் அன்பு மகளை அவள் கேட்பதற்கும் மேலாக பரிசுகளால் மூழ்கடிக்கிறார் பிக் டாடி. சிறு வயதில் தேவதைக் கதைகளைக் கேட்டு மகிழும் சார்லொட் மனதில் ஒரு இளவரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் ஆசை...தொடர்ந்து படிக்கவும் »

Oscar Nominees (2010)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | February 2, 2010, 4:03 pm | தலைப்புப் பக்கம்

ஆல்ரைட்..!!! இந்த வருட ஆஸ்கர் நாமினேஷன் வந்தாச்சி. லிஸ்டில் நிறைய ஆச்சரியங்கள். ஒவ்வொரு வருடமும்... பெயரில்லாத சிலப் படங்கள் நிறைய இடத்தைப் பிடிக்கும். அதுமாதிரி இந்த முறை லிஸ்டில் வந்திருக்கும் படங்கள்ன்னு பார்த்தா... Up In The Air, Precious, The Hurt Locker அப்புறம் Nine. அதைவிட இன்னொரு ஆச்சரியம், 1991-ஆம் வருடம் டிஸ்னியின் Beauty and the Beast அனிமேஷன் படம் மட்டும்தான் இதுவரை.. சிறந்தப் படங்கள் வரிசையில்.. மற்றப்...தொடர்ந்து படிக்கவும் »

அவதார்... 2 பில்லியனை தாண்டி புதிய சாதனை!    
ஆக்கம்: (author unknown) | February 2, 2010, 9:55 am | தலைப்புப் பக்கம்

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் ஹாலிவுட் படம் உலகம் முழுக்க 2 பில்லியன் டாலருக்கும் மேல் குவித்து புதிய வசூல் சரித்திரத்தைப் படைத்துள்ளது.உலக சினிமா சரித்திரத்தில் 2 பில்லியன் டாலர் எனும் அளவை இதுவரை எந்தப் படமும் எட்டியதில்லை. இதற்கு முன் வெளியான கேமரூனின் டைட்டானிக் மட்டுமே 1.8 பில்லியன் அளவு வசூலித்து முதலிடத்தில் இருந்தது.12...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப்படம் - தமிழ் சினிமாவை கலை(லாய்)க்கும் படம்..    
ஆக்கம்: Saravana Kumar MSK | January 31, 2010, 8:10 am | தலைப்புப் பக்கம்

படத்தை பெரிதாக்கி பார்க்கவும். .இப்படத்தின் ட்ரைலரை பார்க்கும்போது என்னமாதிரி இத்திரைப்படத்தை எதிர்பார்த்தேனோ, அவ்வாறே மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகுகிறது. மிக கச்சிதமான Spoof. நேற்றே இத்திரைப்படத்தை காண விழைந்தேன், ஆனால் தியேட்டரில் அப்படியொரு கூட்டம், நேற்று டிக்கெட்டே கிடைக்கவில்லை. ஹவுஸ்புல். என்பதனால் இன்று காலைதான்...தொடர்ந்து படிக்கவும் »

கோவா [2010] - கேளிக்கைகளின் விருந்து..    
ஆக்கம்: Saravana Kumar MSK | January 30, 2010, 5:36 pm | தலைப்புப் பக்கம்

வெங்கட் பிரபு மற்றும் அவரின் டீமை அடிச்சிக்க முடியாது போல, யூத்துக்களின் பல்சை மிகச்சரியாக புரிந்துவைத்துக்கொண்டு சொல்லி சொல்லி அடிக்கிறார்கள். தியேட்டரில் இளைஞர்களின் கூட்டம் மற்றும் ஆரவாரம். actually, படத்தின் கதை என்னவென்றால், அட... வெங்கட் பிரபு படத்தில் கதையை எப்படிங்க எதிர்பார்க்கறீங்க. வழக்கம் போல் ஒருவரி கதையும், அதை சுற்றிய நகைச்சுவை காட்சிகளும் தான்...தொடர்ந்து படிக்கவும் »

வெற்றிப் படம்    
ஆக்கம்: ☼ வெயிலான் | January 30, 2010, 8:44 am | தலைப்புப் பக்கம்

நக்கல், கிண்டல், தெனாவட்டு, அசால்ட்டு, நையாண்டி இதெல்லாம் கலந்த ஒரு லொள்ளுக்கு ஒரு உதாரணம் தமிழ்ப்படம் வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், இது வரை தமிழ்ப்படங்களில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும், இயக்குநர்களையும், பாடலாசிரியர்களையும் ஒரு முட்டுச் சந்துக்குள்ள வுட்டு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு கொஞ்சங்கூட இடைவெளி இல்லாமல் அடி வெளுத்திருக்கிறார்கள். சூப்பர்...தொடர்ந்து படிக்கவும் »

Food, Inc [Best of 2009 - 06.2]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 29, 2010, 5:38 am | தலைப்புப் பக்கம்

அந்த ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது.  முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு.  அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம். இந்த ரிசல்ட்டைப் பார்த்து ஆச்சரியப் படும் ரெண்டு பேரும்..., அமெரிக்காவின் மத்தியில் இருக்கும் Iowa மாநிலத்தில் பயிரிடப் படும்... சோளம்.., எப்படி......தொடர்ந்து படிக்கவும் »

Food, Inc [Best of 2009 - 06.1]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 28, 2010, 6:08 am | தலைப்புப் பக்கம்

நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரியே..., எத்தனை மானநட்ட வழக்கு போட்டாலும்..., இவங்க ஜெயிப்பதில்லை. ஆனாலும்.. இன்னைக்கு வரைக்கும், தங்களைப் பத்தி.. யாராவது கொஞ்சம் தப்பா பேசிட்டாலோ, அல்லது அவங்க ப்ராடக்டை சாப்பிடாதீங்கன்னு சொல்லிட்டாலோ முடிஞ்சது கதை. அது தெருப் பிச்சைக்காரனா இருந்தா கூட, அவன் மீது ஒரு கேஸ் போட்டு... கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுதான் இவங்க வேலை.  நம்மை மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன்: கையாலாகாத கைதி    
ஆக்கம்: (author unknown) | January 26, 2010, 4:52 pm | தலைப்புப் பக்கம்

பலவிதங்களில் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனை ஒரு முன்னோடி படம் எனலாம். இது தமிழின் முதல் அசலான மிகுகற்பனை, மாய-எதார்த்த படம் என்பதால்; காதல், திகில், சாகசம் போன்ற குறிப்பான வகைமைக்குள் சிக்காமல் ஒரு விரிவான காவிய பரப்பில் அமைவதால், அடிவாங்கி, தோல்வியுற்று, ஆற்றாமை உணர்வுகளால் அடிக்கடி அழும் எதார்த்த நாயகனை காட்டியிருப்பதால் ... இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இது...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன் - புனைவின் கொண்டாட்டம்    
ஆக்கம்: அய்யனார் | January 26, 2010, 2:20 am | தலைப்புப் பக்கம்

குவாண்டின் டராண்டினோவின் சமீபத்திய படமான இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் பார்த்துவிட்டு வெளியில் வந்த போது புனைவின் அதிகபட்ச சாத்தியங்களில் ஒன்று என நினைத்துக் கொண்டேன். இதே மாதிரி உணர்வைத்தான் ஆயிரத்தின் ஒருவனும் தந்தது. வரலாற்றை தம் வசதிக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வது அல்லது தம் கதைக்குள் வரலாறை உலவவிடுவது போன்றவையெல்லாம் புனைக்கதையாளனின் தந்திரமாய்த்தான்...தொடர்ந்து படிக்கவும் »

The Blind Side [Best of 2009 - 04]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 25, 2010, 5:39 pm | தலைப்புப் பக்கம்

கதையை படிச்சிட்டு, எதோ கண்ணைக் கசக்கற படம்னோ, அமெரிக்கன் ஃபுட்ஃபால் தெரியாம எப்படிப் படம் பார்க்கறதுன்னோ நினைச்சிடாதீங்க. இது 100% FEEL GOOD படம். “பெரும்பாலான நேரம், பந்தை கையில் வைத்துக் கொண்டேயிருக்கும் இந்த விளையாட்டை ஏன் ஃபுட்பால்-ன்னு கூப்பிடுறீங்க”-ன்னு, சுத்தியிருக்கும் அத்தனை அமெரிக்கரிடமும் கேட்டு சலிச்சாச்சி. யாருக்கும் பதில் தெரியலை. ஆனால் இவர்களிடம்... நம்...தொடர்ந்து படிக்கவும் »

The Lovely Bones (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 23, 2010, 5:17 pm | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட 4 வருட வனவாசம் முடிந்து, கிங்காங் படத்துக்குப் பிறகு பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தை பார்க்கும் வாய்ப்பு. சத்தமேயில்லாம... கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடி (லிமிடட்), ஒரு வழியாக போன வாரம் வைட் ரிலீஸ் கிடைக்க..... 2002 -ல் இதே பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு நாவலை..., பீட்டர் பெரிய திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதை???? மார்க் வாபெர்கின், சந்தோஷமான குடும்பம்....தொடர்ந்து படிக்கவும் »

Saw I - VI [18+] Part 4    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 22, 2010, 8:56 pm | தலைப்புப் பக்கம்

Saw VI கிட்டத்தட்ட இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இதில் வரும் சில காட்சிகள்.. முதல் பதிவில் உள்ளது. மறந்திருப்பவர்கள் திரும்ப படித்துக் கொள்ளவும். அதற்கு முன் நடந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால்... 01. ஜிக்ஸாவின் உடல் பிரேத பரிசோதனையின் போது, அவர் வயிற்றில் இருந்து கிடைக்கும் ஒரு டேப்.  அந்த டேப், மார்க் ஹாஃப்மேனுக்கானது. அமேண்டா உட்பட அத்தனை பேரையும், டெஸ்டிற்கு...தொடர்ந்து படிக்கவும் »

தோற்கடிக்க முடியாத ஆன்மா    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | January 20, 2010, 12:35 pm | தலைப்புப் பக்கம்

ஏறக்குறைய முப்பது வருட சிறைத்தண்டனையின் பின்பாக 1990ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நெல்சன் மண்டேலா, 1994ல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அக்காலத்தில் தென்னாபிரிக்கா நாடு வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்னடைவு, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, வெள்ளை, கறுப்பு இன மக்களிற்கிடையில் முற்றிலுமாக மலர்ந்திருக்காத புரிந்துணர்வு என்பவற்றை...தொடர்ந்து படிக்கவும் »

Saw I - VI [18+] Part 3    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 20, 2010, 5:51 am | தலைப்புப் பக்கம்

மார்க் ஹாஃப்மேன் & டேனியல் ரிக் (Rigg)-கின்,  [பெண்] பார்ட்னர் ஆலிஸன் கெல்லி-யை, மார்க் ஹாஃப்மேனும், அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள். பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன் (2010)    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | January 19, 2010, 7:25 am | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு முன்பாக திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. கோயம்பேட்டில் இருந்து அரசுப்பேருந்து. பூமோ, தூமோ ஏதோ ஒரு பிரத்யேக டிவி சேனல். குணா ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஐம்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டதால் அசுவாரஸ்யமாக ஹெட்போனை காதில் மாட்டினேன். ‘கரிகாலன் காலைப்போல...’ வேட்டைக்காரன் அலறினான்.ஐந்துமுறைக்கும் மேலாக ‘மந்தரிச்ச உதடை’ திரும்ப திரும்ப கேட்டு,...தொடர்ந்து படிக்கவும் »

நியூட்டனின் நிஜமான 'ஆப்பிள் கதை'- இணையத்தில் காணலாம்    
ஆக்கம்: (author unknown) | January 19, 2010, 5:46 am | தலைப்புப் பக்கம்

லண்டன்: சர் ஐசக் நியூட்டன் 'ஆப்பிள் கதை' குறித்து உரையாடலை பதிவு செய்த 300 ஆண்டு பழமைவாய்ந்த மூல கையெழுத்துப் பிரதி முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள 'தி ராயல் சொசைட்டி'யின் இணைய தளம் மூலம் இதை பொதுமக்கள் பார்வையிடவும், படிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் பழம்...தொடர்ந்து படிக்கவும் »

Up In The Air (2009) [Best of 2009 -03]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 19, 2010, 2:18 am | தலைப்புப் பக்கம்

அடுத்தவர்களிடன்... “ஸாரி.. உங்களுக்கு இன்னையோட வேலை போய்டுச்சி” என சொல்வதே ஒருவனின் முழு நேர வேலையாக இருந்தால் எப்படியிருக்கும்? Up In The Air-ல் ஜார்ஜ் க்ளூனியின் 365 நாள் வேலையும் அதுமட்டும் தான்!! கார்பொரேட் டவுன்சைஸர்ஸ் : இந்த வேலை இந்தியாவில் பிரபலமான்னு தெரியலை. இந்த நாட்டில் சக்கை போடு போடுதாம்.  இந்த மாதிரி கம்பெனிகளின் வேலை, பெரிய - நடுத்தர - சிறிய கம்பெனி என எந்த...தொடர்ந்து படிக்கவும் »

Saw I - VI [18+] Part 2    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 18, 2010, 7:33 pm | தலைப்புப் பக்கம்

நவம்பர் 22-ல் முதல் பாகம் எழுதிட்டு.., நடுவில் 18+ பதிவுகள், அவதார், ஹண்டர் என டெக்னாலஜிப் பதிவுகள் குறுக்கே வந்து... அடுத்த பாகம் எழுத ரொம்ப நாள் எடுத்துகிட்டாச்சி. ரியல்லி.. சாரி. நினைவில்லாதவங்க.. ஒரு முறை முதல் பாகத்தையும் படிச்சிடுங்க. லெஸ்ட் மூவ் ஆன். டெஸ்டில் இருந்து தப்பித்தால்.. அவர்களை உயிருடன் விடுவது ஜானின் கொள்கை என்றால், சிஷ்யை அமேண்டாவிற்கோ... தப்பிப்பவர்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

Paranormal Activity : எனது பார்வையில்…    
ஆக்கம்: சேவியர் | January 18, 2010, 1:40 pm | தலைப்புப் பக்கம்

பேராண்மை நாடகத்தைப் பார்த்து போரடித்துப் போய் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான படத்தைப் பார்க்கலாமே என கையில் எடுத்தேன் இந்தப் படத்தை. “தனியே பார்க்காதீர்கள், பயப்படாமல் பார்க்கவே மாட்டீர்கள்” என ஏகப்பட்ட பில்ட் அப்கள் இந்தப் படத்துக்கு. வழக்கமாக திகில் படங்களை இராத்திரி நேரத்தில், காதில் ஹெட் போன் மாட்டி தனியே அமர்ந்து போர்ட்டபிள் டிவிடி பிளேயரில் பார்ப்பது தான் வழக்கம்....தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன் - என் பார்வையில்    
ஆக்கம்: ஜோ/Joe | January 18, 2010, 7:12 am | தலைப்புப் பக்கம்

நான் கடவுள் , உன்னைப் போல் ஒருவனுக்கு அடுத்து தியேட்டரில் பார்த்த படம் இது தான் .வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களை படித்து விட்டு எதிர்பார்ப்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு சென்றது நல்லதாக போய்விட்டது .பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு...தொடர்ந்து படிக்கவும் »

The Book of Eli (2010)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 17, 2010, 5:08 am | தலைப்புப் பக்கம்

இன்னையோட பதிவெழுத ஆரம்பிச்சி, ஒரு வருஷம் முடிஞ்சது. எல்லா ஏற்ற இறக்கத்தையும்.. ஒரு பதிவா எழுதினேன். அப்புறம்.. அந்தக் கொடுமையை வேற நீங்க படிக்கணுமான்னு விட்டுட்டேன். இருந்தாலும்..., ஒரு வருஷமா என்னை சகிச்சிகிட்டு இருக்கும் உங்களுக்கு ஒரு ஃப்லீங்ஸோட நன்றி சொல்லாட்டி எப்படி??!! ‘நீயெல்லாம் ஏன்டா எழுத வந்தே’-ன்னு கேட்கனும்னு நினைக்கறவங்க எல்லாம்... ‘உங்களை யாருங்க அவனை...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் வேறொருவன்    
ஆக்கம்: குட்டிபிசாசு | January 17, 2010, 2:26 am | தலைப்புப் பக்கம்

இத்திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையே! சோழ பாண்டிய வரலாற்றுக்கும் இத்திரைப்படத்திற்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்ற disclaimer-உடன் தொடங்குகிறது. இதன்பிறகும் படத்தில் வரலாற்றை தேடுவது தேவையில்லாத விடயம். சோழ பாண்டிய போரில் தப்பித்த சோழவம்சத்தின் கடைசி வாரிசைத் தேடி பயணிக்கிறது ஒரு குழு. பாண்டியர்கள் வராமலிருக்க சோழர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த 7 பொறிகளைத் தாண்டி...தொடர்ந்து படிக்கவும் »

Chasing Amy (1997) [18+]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 16, 2010, 7:17 am | தலைப்புப் பக்கம்

டிஸ்க்ளெய்மெர் எல்லாம் போடுற ஐடியா இல்லை. வயசுக்கு வராத பசங்க எல்லாம் சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க. ஹோல்டன் : ஆண் - பெண் உடலுறவில் மட்டும்தான் பெனட்ரேஷன் கிடைக்கும். நீங்க ரெண்டு பேரும் எப்படி.......????? அலீஷா : நல்லா கவனி!!! ( கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் ஒரு வளையம் போல பிடித்து..... இன்னொரு கையை... அந்த வளையத்திற்குள் முழங்கை அளவுக்கு உள்ளே நுழைத்து...தொடர்ந்து படிக்கவும் »

கற்களை வீசிய புனிதர்கள்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | January 15, 2010, 2:50 pm | தலைப்புப் பக்கம்

கிறிஸ்துவிற்கு பின் நான்காம் நூற்றாண்டு. எகிப்தின் பிரபலமான துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியா, எண்ணற்ற அறிஞர்களின் எழுத்துக்கள் நிரம்பிய அதன் நூலகத்திற்கும், மத்திய தரைக்கடலை கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கும் அதன் கலங்கரை விளக்கத்திற்கும் பேர் போனது. அலெக்ஸாண்ட்ரியா நகரம் ரோம அதிகாரத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நகரமாகும். கிரேக்க ரோம நாகரீகம் அங்கு...தொடர்ந்து படிக்கவும் »

The Cove (2009) [Best of 2009 - 02]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 14, 2010, 3:52 am | தலைப்புப் பக்கம்

இன்வெஸ்டிகேட் ஜர்னலிஸம்!!! எத்தனை டாகுமெண்ட்ரிகளில் பார்த்திருப்போம். புஷ்ஷின் அரசியல் வரலாறையே மாற்றியமைக்கப் பார்த்த Fahrenheit 9/11, போலிச் சாமியார்களின் திரையை கிழித்த Religulous, அமெரிக்க ரேட்டிங் சிஸ்டத்தின் தோலை உறித்த This Film Is Not Yet Rated, துப்பாக்கிக் கலாச்சாரத்தின் பின்புலன்களை சுட்ட Bowling for Columbine மாதிரி.. நூற்றுக் கணக்கில் டாகுமெண்ட்ரிகள்...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன்!    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | January 13, 2010, 5:59 am | தலைப்புப் பக்கம்

'வெற்றி! வெற்றி' என்ற செண்டிமெண்டலான வசனத்தோடு தொடங்குகிறது படம். மணிமாறன் என்ற சாமானிய வைத்தியர், பெரிய புரட்சிக்காரனாக உருவாவதை 'திடுக்' திருப்பங்களோடு, இனிய பாடல்களோடு படமாக்கியிருக்கிறார்கள். இப்படத்தின் தாக்கம் ஐம்பதாண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்களான கிளாடியேட்டர், பைரேட்ஸ் ஆஃப்ட த கரீபியன் ஆகியவற்றில் கூட இருப்பது ஆச்சரியமான...தொடர்ந்து படிக்கவும் »

Hurt Locker (2008) [Best of 2009 - 01]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 13, 2010, 3:35 am | தலைப்புப் பக்கம்

ஒரு வெடிகுண்டு வெடிக்கும் போது, அதன் மைய அழுத்தம், ஒரு சதுர இன்ச்சிற்கு 700 பவுண்ட். அதிலிருந்து கிளம்பும் அதிர்வலையின் வேகம் 1300 மைல்கள்/மணி. தெறிக்கும் துளிகளின் தூரம் 2700 அடி. இதை செயலிழக்க வைக்கும் ஒவ்வொரு பாம் ஸ்வாடின் இறப்பு விகிதம்..., மற்ற போர் வீரர்களை விட ஐந்து மடங்கு அதிகம்.2008-ல் வந்திருக்க வேண்டிய படம். Paranormal Activity, Bad Lieutenant -மாதிரியான...தொடர்ந்து படிக்கவும் »

2010-ன் எதிர்பார்ப்புக்குரிய ஹாலிவுட் திரைப்படங்கள்..    
ஆக்கம்: Saravana Kumar MSK | January 12, 2010, 7:34 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடம் நான் எதிர்பார்க்கும் ஹாலிவுட் திரைப்படங்கள் பற்றிய ஒரு பார்வை. படத்தின் ட்ரைலர்கள் வைத்தே படம் எப்படியிருக்கும் என்பதை உணரமுடியும், மேலும் எனக்கு படத்தின் ட்ரைலர்கள் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல். :)0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0 கொஞ்சம் வயசானாலும் ஆக்சன் ஹீரோக்களை Baby sitter ஆக்கிடறாங்க. Arnold, Vin dieslel, இப்போ ஜாக்கி சான்.. பார்க்கலாம் படம் எப்புடி இருக்குனு.SPY NEXT DOORRelease...தொடர்ந்து படிக்கவும் »

Mary and Max [2009] - (Clay Animation) நட்புக்காலம்..    
ஆக்கம்: Saravana Kumar MSK | January 5, 2010, 11:02 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.3/10.ஆஸ்திரேலிய திரைப்படம். உண்மைக்கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட stopmotion claymation திரைப்படமிது. அது என்ன stopmotion claymation என்கிறீர்களா? (நம்ம ஊர் பொம்மலாட்டம் போலத்தான்) களிமண் அல்லது அதுபோன்ற ஒன்றினால் பொம்மைகளை செய்து அதை தேவைக்கேற்றார் போல் அசைத்து (முகபாவனைகள், உடல் அசைவுகள்) படம்பிடித்து உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படம். மிகக்கடினமாக உடலுழைப்பு தேவைப்படும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

எந்திரன் சீசன் துவங்கிடுச்சு !!    
ஆக்கம்: சேவியர் | January 4, 2010, 1:14 pm | தலைப்புப் பக்கம்

(கிளிக் பண்ணினா படம் பெருசா தெரியும்னு நான் சொல்ல வேண்டியதில்லை…) இன்னா ஷங்கர், இரண்டு பக்கமும் பன்றிக் காய்ச்சல் வந்தவனை நிக்க வெச்சுட்டு என்னை நடிக்க சொல்றீங்க ?  ஐஸ் : ஷங்கர், இது பப்ளிக் பிளேஸ்…. நான் எந்த பொண்ணு பின்னாடியும் போக மாட்டேன், பட், என் முன்னாடி எந்தப் பொண்ணு போனாலும் தடுக்கவும் மாட்டேன்.  வாசிக்கிறது வாத்தியம், எல்லாமே எந்திரனால சாத்தியம்…  இதான்பா...தொடர்ந்து படிக்கவும் »

விரைவில் மருதநாயகம்! - கமல்    
ஆக்கம்: (author unknown) | January 4, 2010, 10:07 am | தலைப்புப் பக்கம்

கமல் ஹாஸனின் கனவுப் படமான மருதநாயகம் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றார் கமல்ஹாஸன். சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் நடிகர் கமலஹாசன் பேசியது: இலக்கியமும் சினிமாவும் இருகரைகள். இரண்டுக்கும் பாலம் கட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ஆனால் இரு பிரிவினரும் இணைய தயக்கம் காட்டி வருகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »

Clerks (1994) [18+]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | January 4, 2010, 1:25 am | தலைப்புப் பக்கம்

உலகத்திலேயே போரான வேலை எதுன்னு கேட்டீங்கன்னா, இந்த கன்வீனியன்ஸ் ஸ்டோர், கேஸ் ஸ்டேஷன் மாதிரி இடங்களில் கவுண்டரில் நிற்கறதுதான்னு சொல்லுவேன். ஒரு மணி நேரத்துக்கு $6-9 தருவாங்க. ட்ரெய்னிங்ல இருந்தா அதுவும் கிடையாது. சவுத் ஃப்ளோரிடா மாதிரி இடங்களில் நிறைய இல்லீகல் ஸ்பானிஷ் மக்கள் இருப்பதால், பெரும்பாலும் இந்த  மக்கள்தான், இந்த வேலைக்கு வருவாங்க. காரணம்.... இது கேஷ் ஜாப்....தொடர்ந்து படிக்கவும் »

I see you....Avatar!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | January 1, 2010, 9:03 pm | தலைப்புப் பக்கம்

மாலை மங்கி மெல்லிய வசந்தத்தின் வாடைக்காற்று வீசிக் கொண்டிருந்த போது, அவதார் பார்த்தேன்.அவதார் ஓர் அற்புதப் கனவுநிலம். பண்டோராவின் மின்னும் மரங்களும், ரேடியம் ஜொலிக்கும் பாதைகளும், ஹோலி கொண்டாடிய பறவைகளும், பஞ்சுப் பூக்களாய் மிதக்கும் ஒளிப் பூச்சிகளும் நீல 'நவி'களும் இந்த இரவின் கனவுகளில் என்னை ஆக்ரமிக்கின்றன.மிதக்கும் மலைகளில் இருந்து சாரல் அருவிகள்...தொடர்ந்து படிக்கவும் »

முசோலினியின் மனைவி    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | January 1, 2010, 7:04 am | தலைப்புப் பக்கம்

இத்தாலியின் மிலான் நகரத்தில் 1914ல் இத்தாலிய சோசலிசக் கட்சியை சேர்ந்தவனான பெனிட்டோ முசோலினி, அதிகாரத்திற்கு எதிராக தொழிற்சங்கங்களுடன் இணைந்து மிலான் தெருக்களில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை முன்னின்று நடாத்துகிறான். முசோலினியின் ஆளுமையால் வெகுவாகப் கவரப்படும் Ida Dalser எனும் பெண் அவன் மீது காதல் வயப்படுகிறாள். ஐடா, மிலான் நகரில் ஒரு அழகுநிலையம் ஒன்றினை நடாத்தி வருகிறாள்....தொடர்ந்து படிக்கவும் »

3 Idiots [2009] - அறிவுக்கண்களை குருடாக்கும் இந்தியக் கல்விமுறை..    
ஆக்கம்: Saravana Kumar MSK | December 30, 2009, 9:33 am | தலைப்புப் பக்கம்

தான் ஒரு சமூக பொறுப்புடைய நடிகன் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கும் ஆமீர்கானுக்கு வணக்கம் சொல்லி இந்த படத்தை பற்றி பேச துவங்கலாம்..Chetan Bhagat-ன் Five Point Someone படித்திருக்கீர்களா? அந்த புத்தகத்தின் மூலக்கதை மேல் அல்லது ஒரு வரி கதை மீது, கதை செய்து, திரைக்கதை செய்யப்பட்டிருக்கும் படம்..தன் நண்பனை ஆமீரை தேடி, மாதவனும், ஷர்மானும், இன்னொரு படிப்ஸ் எதிரியும் மேற்கொள்ளும் road trip...தொடர்ந்து படிக்கவும் »

அவதார் - இது சினிமா மட்டுமல்ல!    
ஆக்கம்: Thekkikattan|தெகா | December 28, 2009, 4:18 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நான்கு நாட்கள் வட துருவம் :) வரைக்கும் போயிட்டு வருவோமின்னு மினசோட்ட போயிருந்தேன். போறன்னிக்கு முதல் நாளிலிருந்தே தொலைக்காட்சி செய்திகள் அங்கு பனிப் புயல் ஒன்று தாக்கப் போவதாகவும், பயணம் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் நடுங்கிக் கொண்டே அறிவிச்சுக்கிட்டு இருந்தது.எப்படியோ ஒரு வழியா போய்ச் சேர்ந்து வாடகைக்கும் ஒரு காரை அமர்த்திக்கிட்டு விடுமுறையை...தொடர்ந்து படிக்கவும் »

சாலமன் கேன்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | December 28, 2009, 7:32 am | தலைப்புப் பக்கம்

பில்லி சூனியங்களும், பைசாசங்களும், இருளும் தங்கள் கிளைகளைத் தடையற்று விரித்துக் கொண்டிருந்த 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். தீமையின் கருவான சாத்தானையும், அவன் ஏவலர்களையும் எதிர்த்துப் போராட எவருமே இல்லை என்பதால் தீமை தன் எல்லைகளை உலகில் விரிவு படுத்திக் கொண்டிருந்தது. சாலமன் கேன், இங்கிலாந்து நாட்டிற்காக யுத்தங்களில் பங்கு கொள்ளும் ஒரு போர் வெறியன். போர்க்களமே...தொடர்ந்து படிக்கவும் »

நானும் நாவி, நீயும் நாவி, நினைச்சுப் பாத்தா எல்லாரும் நாவி!    
ஆக்கம்: பினாத்தல் சுரேஷ் | December 26, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

அவதார் பார்த்துவிட்டேன். இந்தப்பதிவு விமர்சனம் அல்ல. நல்ல நல்ல விமர்சனங்கள் நிறைய இருக்கின்றன, கதையை முழுவதுமாகவும் படித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் எனக்குத் தோன்றுவதை எழுதத்தானே என் பதிவு :-) 12 அடி உயர நீல நாவிகள் புதிதானவர்களாக இருக்கலாம் - ஆனால் மனிதனின் பொறுப்பற்ற விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் உயர்வு மனப்பான்மையும் (சுருக்கமாகச் சொன்னால் கொழுப்பு) அதனால்...தொடர்ந்து படிக்கவும் »

Sherlock Holmes (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 26, 2009, 2:44 am | தலைப்புப் பக்கம்

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் : ஆங்கில துப்பறியும் சாம்பு-வை பத்தி அறிமுகம் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அப்படியும் இந்தப் பெயரை கேள்விப் படாதவர்களும், பின்ணணி கதைகள் தேவைப் படுபவர்களும், செ. சரவணக்குமாரின், இந்தப் பதிவையும், கருந்தேள் கண்ணாயிரத்தின் இந்தப் பதிவையும் படிச்சிட்டு மேலே தொடரலாம்.கதை பரபரப்பாக ஆரம்பிக்குது. லார்ட் ப்ளாக்ஹுட் என்னும் மிகப் பெரிய மந்திரவாதி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

The Hunter (2009) - டெக்னாலஜி 02    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 25, 2009, 5:20 am | தலைப்புப் பக்கம்

இப்படி என்னை B. பாபு சிவன் ரேஞ்சுக்கு ஆக்குவீங்கன்னு தெரியாம போய்டுச்சிங்க!  அதனால சொல்லிட்டே ஆரம்பிக்கிறேன்.ஜோஸப் ச்சேண்ட்ரா = விஜய் ஜோஸப் சந்திரசேகர் ::::: பாப் உசிவ் = பாபு சிவன் ::::: VJ ஆண்டனி = விஜய் ஆண்டனி. வேணும்னா இதையும் சொல்லிடுறேன்.The Hunter = வேட்டைக்காரன்ரொம்ப பேர் கீழ வரைக்கும் படிக்கறதில்லைங்கறனால... கடைசி பாராவா எழுதினதை, மொதல்லயே போட்டுடுறேன்....தொடர்ந்து படிக்கவும் »

The Hunter (2009) - டெக்னாலஜி 01    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 23, 2009, 8:51 pm | தலைப்புப் பக்கம்

ஹோ..... யா!!! டாக்டர். ஜோஸப் ச்சாண்ட்ரா ஈஸ் பேக், பேபி...............!!!!!!!!!!!!!*****************************மை காட்..!! எத்தனை நாளாச்சி.. இப்படியொரு படத்தை மொத்த தியேட்டரும் பார்த்து-ரசித்து-சிரித்து!!! எங்களை மாதிரி பாவப் பட்ட ஜனங்கள் இருக்கும், இந்த இத்துப் போன ஃப்ளோரிடாவில் எப்பவாவது தாங்க.., உலகப் படம் பார்க்க முடியும்.! ப்ரீமியர் ஷோவெல்லாம்... ஒரு வாரம்...தொடர்ந்து படிக்கவும் »

Avatar - டெக்னாலஜி 02 [3D]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 22, 2009, 2:14 am | தலைப்புப் பக்கம்

“ஒரு கண்ணை மூடிப்  பார்த்தால் அது 2டி-”ன்னு சுஜாதா எளிமையா சொல்லியிருப்பார் - அப்படின்னு குரு மேல பழியை போட்டுட்டு எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா, அது திருப்பி எனக்கே ரிவிட் அடிச்சிடுச்சி. போனப் பதிவு ரெண்டு பேர்க்கு (வெளிச்சத்தில் & விஜய்) புரியலைன்னு சொல்லிட்டாங்க (எழுதிகிட்டு இருக்கும்போதே.. லிஸ்ட் அதிகமாகிடுச்சி).போனப் பதிவில் சொன்னது 3மேட்டர். 01. DAS - இதில் விளக்க எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »

அவதார் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 20, 2009, 3:39 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கிலப் படங்களில் வரைகலையுடன் அறிவியல் புனைவுகள் விரும்பிப் பார்ப்பவர்களுக்கு அவதார் படம் நல்ல தீனி. 2:30 மணி நேரம் முப்பரிமான காட்சிகள் பார்க்கும் போது காட்சிகளின் ஊடாக பயணிப்பது போன்ற ஓர் உணர்வை இந்தப் படம் தருகிறது. எதோ ஒரு வேற்றுலக வசிப்பிடத்தை அடையும் மனிதர்கள் அங்கு வாழும் மற்றோர் உயிரினத் தொகுதியை அழித்துவிட்டு, இயற்கை வளங்கள் மிகுந்த அந்த இடத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »

வேட்டைக்காரன் - புதிய சண்டைக்காட்சிகளில் எனது எதிர்பார்ப்பு    
ஆக்கம்: அபுல் கலாம் ஆசாத் | December 20, 2009, 9:41 am | தலைப்புப் பக்கம்

தற்போதைய ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் இருவரும் சராசரியான உடல் அமைப்பு கொண்டவர்கள், இருவரின் சண்டைக்காட்சிகளையும் ரசித்திருக்கிறேன். அன்றைய ஸ்டண்ட் மாஸ்டர்களுள் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தரையும் இதில் சேர்க்கலாம். ஸ்டண்ட் மாஸ்டராக இருக்கவேண்டுமென்றால் ஆஜானுபாகுவாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபித்தவர்கள் இவர்கள்....தொடர்ந்து படிக்கவும் »

(500) Days of Summer [2009] - நினைவுகளில் வாழும் நிகழ்வுகளின் துணுக்கு...    
ஆக்கம்: Saravana Kumar MSK | December 17, 2009, 7:03 pm | தலைப்புப் பக்கம்

IMDB Rating : 8.1/10 :: Top 250: #217.ஒரு அழகான Romantic-Comedy-Feel Good (But Its Definitely Not a LOVE STORY) திரைப்படம் பார்க்கவேண்டுமா? இதோ உங்களுக்காக..வெகுநாட்களுக்கு பிறகு (சமீப காலமாக காதல் படங்களை தவிர்த்து வருவதால்) ஒரு அழகான சிறகு வருடுவது போன்ற திரைப்படம்..உண்மையான காதல் என்று ஒன்று இருப்பதாக நம்பும் இளைஞன். உண்மையான காதல் என்று எதுவும் இல்லையென்று நம்பும் இளைஞி. இவர்களுக்கிடையேயான 500 நாட்கள். ஆனால் ஒரு டைரியை...தொடர்ந்து படிக்கவும் »

The Princess and the Frog (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 15, 2009, 3:55 am | தலைப்புப் பக்கம்

பிக்ஸார் தொடரின் இறுதி அத்யாயத்தில் எழுதிய மேட்டர்தான் இது. அனிமேஷனில் 3டி கேரக்டர்களை புகுத்தியதில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போன 2டி அனிமேஷனை... அந்த 3டி-யை அறிமுகப் படுத்தி அழித்த ஜானும், எட்வினும்.... 2004-ல் டிஸ்னி மூடிய 2டி அனிமேஷன் பிரிவை மீண்டும் திறந்து... அதிலிருந்து வெளிவந்திருக்கும் முதல் 2டி படம் The Princes and the Frog.படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

Bad Lieutenant: Port of Call - New Orleans (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 14, 2009, 3:32 pm | தலைப்புப் பக்கம்

பல்ப் ஃபிக்ஸனின் ப்ராப்ளம் சால்வர், ஹார்வி கெய்டல், 1992-ல் நடித்தப் படத்தின் ரீமேக்கில், விளக்கெண்ணை மன்னன் 'நிக்கலஸ் கேஜ்' நடித்து, கடந்த ஒரு வருடமாக வெளிவர துடித்துக் கொண்டிருக்கும் படம். 1992- படத்தைப் பார்த்தவர்களுக்கு இது எந்த அளவுக்கு பாதிப்பைத் தரும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தப் பதிவு... 2009-ஐ மட்டும்தான் பார்க்க போகிறோம். ஹரிகேன் கட்ரீனா அடித்து ஓய்ந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

ஹாலிவுட் சினிமா : அவதார் !!!    
ஆக்கம்: சேவியர் | December 10, 2009, 10:50 am | தலைப்புப் பக்கம்

  அவதார் ! ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களை தூக்கமிழக்கச் செய்கிறது இந்த மந்திர வார்த்தை. டிசம்பர் 18ம் தியதி வெளிவரப் போகும் இந்த 3D சயின்ஸ் பிக்ஷன் சினிமா தான் இப்போதைய ஹாட் டாக். உலகெங்கும் வெளியான  இந்தத் திரைப்படத்தின் டிரைலர்கள் இந்த எதிர்பார்ப்பை ஏகத்துக்குக் கிளறி விட்டிருக்கிறது. டிரைலர் வெளியான வெப்சைட்களெல்லாம் மில்லியன் கணக்கில்...தொடர்ந்து படிக்கவும் »

Precious (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | December 9, 2009, 2:55 am | தலைப்புப் பக்கம்

ஒரு மாதம் முன்பே வெளியானப் படம். படத்தின் ஒரு தயாரிப்பாளர் Oprah Winfrey. தியேட்டருக்குப் போக பயந்த, முக்கியக் காரணம் இந்தப் பெயர்தான். அக்கா... அங்கேயும் ஒரு கர்ச்சிப்பை இலவசமாக கொடுத்துவிடுவாரோ என நினைத்தேன். எங்கே தியேட்டரில் அழுது, மானத்தை வாங்கிக்  கொள்வேனோ என பயந்து கொண்டே போகாமல் இருந்து, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டுப் பார்த்தால்..., இந்த ஆண்டுக்கான சிறந்த படத்தை...தொடர்ந்து படிக்கவும் »

ரேணிகுண்டா - நிறைவான திரைப்படம்...    
ஆக்கம்: Saravana Kumar MSK | December 5, 2009, 2:03 pm | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் சிறந்த படமொன்று இதோ வந்திருக்கிறது. கடந்த வருடத்தின் சுப்ரமணியபுரம் போல. ஒரு city of god போல. (அதுக்காக அந்த படங்களை தொட்டோ தழுவியோ இந்த படம் எடுக்கப்படவில்லை).தன் பெற்றோரை கொன்ற ரவுடி ஒருத்தனை கொல்ல முயன்று 15 நாள் காவலில் ஜெயிலுக்கு செல்கிறான் 19 வயது இளைஞன் ஜானி. போலீஸ்காரர்களின் அடிகளிடமிருந்து ஜானி காப்பாற்றும், நான்கு இளம் வயது கொலை குற்றவாளிகளிடம்...தொடர்ந்து படிக்கவும் »

2012 [2009] - கருப்பு அதிபரென்றால் கைவிட்டுவிடும் வெள்ளையினவெறி..    
ஆக்கம்: Saravana Kumar MSK | November 23, 2009, 11:21 pm | தலைப்புப் பக்கம்

இப்படத்தை வெளியான போதே பார்த்துவிட்டாலும், இப்படத்தை பற்றி எழுத ஏனோ மனம் வரவில்லை. ஹாலிவுட்டின் டெம்ப்ளேட் கதை, பிரம்மாண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ், உலகத்தின் எல்லா நாடுகளையும் கதைக்குள் இழுத்து, உலகம் முழுதும் அதிரடி வசூலை நிகழ்த்த விரும்பும் சூட்சுமம், என்பதனாலேயே எழுதாமல் விட்டுவிட்டேன். கதை பற்றி உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும். பைபிளில் வரும் நோவாக் கதையை...தொடர்ந்து படிக்கவும் »

Saw I - VI [18+] Part 1    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | November 23, 2009, 2:21 am | தலைப்புப் பக்கம்

முதல் ஐந்து பாகத்தையும் முழுதாக பார்க்காதவர்கள், இந்தப் பதிவை படிக்க வேண்டாம். 100% புரியாது!!! ஆறாவது பாகத்தில் எந்த சஸ்பென்ஸும் இல்லை என்பதால்... அதற்கு விதிவிலக்கு.Saw-வின் ஆறாம் பாகம் போன மாதம் வெளி வந்ததும், பதிவை போடுவதற்குள், விஜய் மத்த ஐந்து பாகங்களையும் ‘சுருக்கமாக’வாவது எழுதிட்டு... ஆறை எழுதச் சொன்னார். ’சுருக்கமா’ என்னை எழுதச் சொல்லுறாரே-ன்னு ரொம்ப.. நாளா...தொடர்ந்து படிக்கவும் »

New Moon (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | November 20, 2009, 8:32 am | தலைப்புப் பக்கம்

ஹும்..! இனிமே அவரசத்தில்.. பதிவு எழுதிட்டு போகக் கூடாதுன்னு.. சத்தியம் பண்ணிகிட்டேன். ரெண்டு தப்பு... பண்ணிட்டு.. திரும்ப படிக்காமலே.. போய்ட்டேன். எழுத்து போட்டவுடனே.. முதல் தப்பு.. நினைவு வந்தது.படத்தின் பெயர் New Moon. நான் Full Moon-ன்னு அடிச்சிட்டு போயிருக்கேன். நல்லவேளை இது யார் கண்ணிலும் படலை.  ஹைய்யோ.... அடுத்த பிரச்சனை.. வந்தப்ப.. அதுக்கப்புறம்.. என்னால் படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

Twilight (2008)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | November 20, 2009, 3:41 am | தலைப்புப் பக்கம்

நீங்க காலேஜ் போற பையனா இருந்தா... பிஸ்ஸா - பர்கருக்கு அடுத்து Twilight படத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கனும். இல்லைன்னா... உங்களை யாரும் மதிக்க மாட்டாங்க. தெரியுமில்ல?????ஒரு ‘என்றும் பதினேழு’ வௌவால் மனிதனுக்கும்,  ஒரு சாதாரண பதினேழு வயது பெண்ணுக்கும் வரும் காதலை, கவிதையாக சொல்ல முயற்சித்தப் படம் Twilight. இன்று இந்தப் படத்த்தின் அடுத்த பாகமான New Moon...தொடர்ந்து படிக்கவும் »

Making of Avatar [2009] - ஆச்சர்யங்களின் தொகுப்பு..    
ஆக்கம்: Saravana Kumar MSK | November 19, 2009, 5:14 pm | தலைப்புப் பக்கம்

MAKING OF AVATAR.AVATAR TRAILERமறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ்...தொடர்ந்து படிக்கவும் »

அக்டோபர் 1917 - காலத்தால் அழியாத உலக சினிமா    
ஆக்கம்: கலையரசன் | November 6, 2009, 11:15 pm | தலைப்புப் பக்கம்

இணையத்தில், ரஷ்ய திரையுலக மேதை செர்கெய் ஐசன்ஸ்டைனின் மகத்தான திரைக் காவியம். ஒக்டோபர் புரட்சியின் நினைவாக பதிவிடப்படுகின்றது. Part 1Part 2Part 3Part 4Part 5Part 6Part 7Part 8Part 9Part 10Part 11Part ...தொடர்ந்து படிக்கவும் »

இரையும் வண்டு - ப்ரம்மரம் - என் பார்வை    
ஆக்கம்: ஆசிப் மீரான் | October 14, 2009, 6:57 am | தலைப்புப் பக்கம்

தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களுக்குப் பின் சுமாரான ஒரு கதையை முறையாகத் திட்டமிடாமலெடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸியின் அடுத்த படத்தில் மோகன்லால் நாயகனென்றறிந்ததும் நம்பிக்கை துளிர்விட்டது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியும் விட்டார் ப்ளெஸ்ஸி.'ப்ரம்மரம்' என்றால் வண்டு. அதுதான் படத்தின் தலைப்பும் கூட....தொடர்ந்து படிக்கவும் »

Couples Retreat (2009)    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | October 10, 2009, 7:11 pm | தலைப்புப் பக்கம்

ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஹாலிவுட் எண்ட்ரி என்பதாலேயே, நம் எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு, இந்தப் படத்திற்கு இருப்பது/இருந்தது நிஜம்.  அந்த பெயர் இல்லையென்றால் நான் கூட தியேட்டர் பக்கம் எட்டிப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். எதுக்கும் போய் பார்ப்போமே என்று பார்த்தால்...........நான்கு நண்பர்கள். குடும்பஸ்தர்கள்! அவர்களில் ஒருவரின் திருமண வாழ்க்கை, முறிந்துவிடும்...தொடர்ந்து படிக்கவும் »

The 40 Year Old Virgin (2005) [18+]    
ஆக்கம்: ஹாலிவுட் பாலா | October 8, 2009, 6:04 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம். எக்ஸ்ட்ரா டிஸ்க்: இந்தப் பதிவு எந்த பதிவரையும் மனதில் வைத்து எழுதியதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அதிக பட்சமாக, பதினாறு வயதுக்குள், அமெரிக்காவில் எல்லோருக்கும் எதாவது ஒரு வகை...தொடர்ந்து படிக்கவும் »

தீராமல் தழுவும் தாகம்    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | October 8, 2009, 11:20 am | தலைப்புப் பக்கம்

கொரிய நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான Sang Hyun இறைவனின் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன். மருத்துவ மனையொன்றில் தங்கியிருக்கும் நோயாளிகளிற்கு மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கூறுபவனாகவும், பிரார்த்தனை சடங்குகளை நிறைவேற்றுபவனாகவும் கையுன் செயற்பட்டு வருகிறான். நாள் தோறும் அவன் காணும் நோயாளிகளின் வேதனை அவனையும் வேதனையுறச் செய்கிறது....தொடர்ந்து படிக்கவும் »