மாற்று! » பகுப்புகள்

தமிழ் 

அறிவியலில் தனித்தமிழ் தாலிபானிசமா?    
ஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | December 20, 2010, 10:18 pm | தலைப்புப் பக்கம்

அறிவியல் தமிழில் எண்ணற்ற கட்டுரைகள் படைத்து வருபவர் கனடாவில் தற்போது வாழும் ஓய்வு பெற்ற அணுமின் பொறியாளர் ஜெயபாரதன் அவர்கள். அவரது அறிவியற் கட்டுரைகளை http://jayabarathan.wordpress.com என்ற சுட்டியில் காணலாம்.அறிவியல் தமிழில் விக்கிப்பீடியாவில் எண்ணற்ற கட்டுரைகளைக் கூடுமானவரைத் தனித்தமிழிலேயே படைக்கும் குழுவிற்கு உரம் சேர்த்துத் தலைமை தாங்குபவர் கனடாவில் வாட்டர்லூ பல்கலையில்...தொடர்ந்து படிக்கவும் »

தொன்மைத்தமிழின் தொடர்ச்சி    
ஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | November 27, 2010, 11:50 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைக்கக் கூடாது என்ற அக்கறை உள்ள சிலர் தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு மடலாடற்குழு ஒன்றை அமைத்தனர்.  எழுத்துச் சீர்குலைப்பு முயற்சிகளைப் பல ஆண்டுகளாய் எதிர்த்து வரும் நானும் அதில் ஒரு தொடக்கநாள் உறுப்பினன்.  நேற்று அக்குழுவுக்கு அண்மையில் இன்னொரு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல் ஒன்றுக்கு இந்து...தொடர்ந்து படிக்கவும் »

ஏழை மாணவர்களை மட்டும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைப்பது கொடுமையா?    
ஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | November 26, 2010, 8:54 pm | தலைப்புப் பக்கம்

இன்று நண்பர் இண்டிராம் தமிழ் உலகம் மடலாடற்குழுவில் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்தார்.  (இது பல ஆண்டுகளாய் அவர் வலியுறுத்தி வரும் செய்திதான் என்றாலும், இன்று அவர் கோணம் “கொடுமை” என்பதை வலியுறுத்தியுள்ளது. ) முதலில் அவர் தமிழ் உலகம் குழுமத்தில் என்ன எழுதினார் என்று பார்ப்போம்.On Nov 26, 10:18 am, indyram wrote:> நண்பர்களே>> தற்காலத் தமிழ் நாட்டில் நடுத்தர வகுப்பினர், பணவசதியுள்ளோர், அரசு>...தொடர்ந்து படிக்கவும் »

பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?    
ஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | October 28, 2010, 9:17 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:சமஸ்கிருத ஊடுருவலை தடுக்க வேண்டும்: வீரமணிhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html இந்தப் பெருவெடிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

வீம்புக்காரத் தமிழர்!    
ஆக்கம்: யுவகிருஷ்ணா | October 22, 2010, 5:53 am | தலைப்புப் பக்கம்

1980களில் தமிழகம் முழுக்கவே கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. கோடைக்காலத்தில் கிணறுகளில் தண்ணீர் சுரப்பதற்கான சுவடுகளே தெரியாது. அவர் ஒரு கடப்பாரை, ஒரு கூடை, ஒரு கயிறு இதை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு குழி வெட்டத் தொடங்கினார். உண்மையில் தானே ஒரு ஆழமான கிணறு தோண்டி தன் வீட்டுக்குத் தேவையான நீர்த்தேவையை பூர்த்தி செய்வது அவரது திட்டம். விலங்கியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்,...தொடர்ந்து படிக்கவும் »

யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை    
ஆக்கம்: Badri | June 27, 2010, 9:22 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிற...தொடர்ந்து படிக்கவும் »

செம்மொழிக் களஞ்சியம்    
ஆக்கம்: Badri | April 17, 2010, 7:06 am | தலைப்புப் பக்கம்

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நானும் நாகராஜனும் சென்றிருந்தோம். அங்குள்ள சில ஆராய்ச்சி மாணவர்களிடம் பேசுவதற்காக.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக நாங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கிவருகிறோம். வேலைகள் முடிந்துவிட்டன. விரைவில் வலையேற்றப்பட்டு அதன் சுட்டியைத் தருகிறேன். தமிழ் பா இலக்கியங்களை தரவுத்தள வடிவமைப்பில் சேர்த்து அவற்றில் சொற்களைத் தேடுவதற்கான...தொடர்ந்து படிக்கவும் »

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி. தமிழ் விக்கிப்பீடியா - தமிழ்ந...    
ஆக்கம்: ரவிசங்கர் | April 1, 2010, 6:06 am | தலைப்புப் பக்கம்

தமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றைத் தமிழ் விக்கிப்பீடியாவும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்துகிறோம்.விவரங்களுக்கு, கட்டுரைப்போட்டிக்கான வலைவாசல்...தொடர்ந்து படிக்கவும் »

டைம் மெஷினும் தமிழ் எழுத்து சீர்திருத்தமும்    
ஆக்கம்: செந்தழல் ரவி | March 24, 2010, 12:22 pm | தலைப்புப் பக்கம்

ஹெச்.ஜி.வெல்ஸ் எழுதிய டைம் மெஷின் புத்தகத்தை படிச்சிருக்கீங்களா ? அட ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணம் செய்தால் டைம் மெஷினை உருவாக்கலாம் அப்படீன்ங்கற தியரியப்பத்தி கொஞ்சமாவது தெரியுமா ? கவலைப்படாதீங்க. எனக்கும் மேல் சொன்ன ரெண்டு விஷயமும் ஒன்னும் தெரியாது. ஆனா இந்த பதிவில் கொஞ்ச நேரம் டைம் மெஷின்ல ஒரு முன்னூறு ஆண்டுக்கு முன்னால் போய்...தொடர்ந்து படிக்கவும் »

கறுப்பு நிறம் : நம் நிறத்தையே நமக்கு எப்படி பிடிக்காமல் போனது?    
ஆக்கம்: குருத்து | February 9, 2010, 7:28 am | தலைப்புப் பக்கம்

சாதி மறுப்பு திருமணம் செய்வதற்காக, பெண் தேடிக்கொண்டிருந்தோம். ஒரு பெண்ணைப் பார்த்து தனியாக பேச, எட்டு வயது அக்கா பையனையும் உடன் அழைத்து சென்றிருந்தேன்.அரைமணி நேரம் பேசிவிட்டு... வீடு திரும்பும் பொழுது, 'அவங்களை பிடிச்சிருக்கா?' அக்கா பையனிடம் கேட்டேன். அமைதியாக இருந்தான். "பிடிக்கல" என்றான். "ஏண்டா?" என்றேன். 'அவங்க கருப்பா இருக்காங்க!" என்றான். மிகுந்த கவலைக்குள்ளானேன். ...தொடர்ந்து படிக்கவும் »

எனக்கு கோவா-a பிடிக்கலை!    
ஆக்கம்: வருண் | February 6, 2010, 3:05 pm | தலைப்புப் பக்கம்

மூனு தருதலைகள் கிராமத்தில் இருந்து திருடிய காசை வைத்துக்கொண்டு கோவால போய் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையிறதுதான் இந்தப்படம். வெங்கட் பிரபுக்கு சிந்தனையெல்லாம் இந்த மாதிரி கீழ்த்தரமாத்தான் வருது. வெங்கட் பிரபுவை எஸ் ஜே சூர்யாவை அடிச்சு விரட்டியதுபோல தமிழ்சினிமாவை விட்டு அடிச்சு விரட்டனும்!இதுல சூப்பர் ஸ்டார் ஆசியுடன் இந்தக்குப்பையை சூப்பர்...தொடர்ந்து படிக்கவும் »

லா ரீயுனியன் தீவில்...தமிழர்கள்    
ஆக்கம்: தங்கவேல் | February 4, 2010, 11:38 pm | தலைப்புப் பக்கம்

மடகாஸ்கர் தீவின் அருகிலுள்ள லா ரீயுனியன் தீவில் பிரான்ஸ் காலனியவாதிகளால் கரும்புத் தோட்டங்களில் அடிமைகளாக வேலைசெய்ய புதுச்சேரி பகுதிகளிலிருந்து 150௦ ஆண்டுகளுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் தற்போதைய பண்பாடு, பழக்கவழக்கங்களை குறித்து...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்ட...    
ஆக்கம்: Raj | December 27, 2009, 4:19 pm | தலைப்புப் பக்கம்

விக்கிபீடியாவில் ஆங்கில பக்கங்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுவோர்க்கான பதிவு . தற்போது கூகிள் நிறுவனம் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள் தன்னை வெளியிட்டு உள்ளது . இது பெரும்பாலோனோருக்கு தெரிந்தது தான் . இந்த மொழிபெயர்ப்பு கருவிஇன உதவியுடன் முதலில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவர் திரு.wikitrans . அவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு கருவியை அனைவரும் பயன்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »

எலியாயிருத்தல்    
ஆக்கம்: சன்னாசி | December 1, 2009, 1:42 am | தலைப்புப் பக்கம்

எலியாயிருத்தல் -அலெக்ஸாந்தர் வாத் எலியாயிருத்தல். வயல் எலியாய். எனிலோர் தோட்ட எலியாய்- வீட்டில் வாழும் வகையா யல்ல. பயங்கர வீச்சத்தை வெளியேற்றுகிறான் மனிதன்! எங்கள் அனைவருக்கும் தெரியுமது - பறவைகள், நண்டுகள், எலிகள். அவன் கிளர்த்துவது குமட்டல் மற்றும் பயம். நடுக்கம். பனைமரப் பட்டையில் விஸ்தீரியாப் பூக்களை உண்ண, குளிர்ந்த, ஈர மண்ணில் கிழங்கு தோண்ட புத்தம்புது இரவடுத்து...தொடர்ந்து படிக்கவும் »

[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்    
ஆக்கம்: மு.மயூரன் | October 30, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

இணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.Facebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.ஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வேறு தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் விக்கிப்பீடியா    
ஆக்கம்: குறும்பன் | October 27, 2009, 9:00 am | தலைப்புப் பக்கம்

உலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகிய...தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் தமிழின் தேக்க நிலை    
ஆக்கம்: நற்கீரன் | October 27, 2009, 6:00 am | தலைப்புப் பக்கம்

அறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை. இது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு    
ஆக்கம்: ரவிசங்கர் | October 26, 2009, 3:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை: * தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள்    
ஆக்கம்: மணியன் | October 25, 2009, 3:00 pm | தலைப்புப் பக்கம்

விக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.தமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு ...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்    
ஆக்கம்: அண்ணாகண்ணன் | October 11, 2009, 8:39 am | தலைப்புப் பக்கம்

2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன்....தொடர்ந்து படிக்கவும் »

இக்காலத் தமிழின் தேவைகள் என்னென்ன?    
ஆக்கம்: அண்ணாகண்ணன் | October 7, 2009, 1:56 pm | தலைப்புப் பக்கம்

9ஆவது உலகத் தமிழ் மாநாட்டினைக் கோவையில் நடத்தத் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இத்தகைய மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரை என்பது ஒரு சிறு பகுதியாகி, கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், அலங்கார வாகன அணிவகுப்பு, ஊர்வலம்.... உள்ளிட்ட பல்வேறு கூறுகள் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இத்தகைய நிகழ்ச்சிகளால் மக்கள் பங்கேற்பு கூடலாம்....தொடர்ந்து படிக்கவும் »

தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்    
ஆக்கம்: சதங்கா (Sathanga) | September 28, 2009, 3:27 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்."தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க."ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ,...தொடர்ந்து படிக்கவும் »

9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள்    
ஆக்கம்: வெங்கடேஷ் | September 23, 2009, 10:22 am | தலைப்புப் பக்கம்

ஜனவரி 21 – 24, 2010ல், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவையில் கூடப் போகிறது. தமிழக அரசே நடத்தப்போவதால், கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்கப் போவதில்லை. பல்வேறு துறைகளில், தலைப்புகளில் கூட்டங்கள், கட்டுரை வாசித்தல் எல்லாம் இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற 8வது மாநாட்டுக்கு நான் போயிருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது. வழக்கம்போல், இந்த...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் பேசும் கணினி    
ஆக்கம்: மாலன் | September 21, 2009, 1:48 am | தலைப்புப் பக்கம்

கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் ! கூடவே....    
ஆக்கம்: கோவி.கண்ணன் | September 10, 2009, 8:28 am | தலைப்புப் பக்கம்

வீட்டைக் கட்டிவிட்டு தான் கல்யாணம் செய்யனும் என்று சொல்லி வைத்தார்களோ, ஆனால் இரண்டுமே மிகவும் கடினமான செயல், ஈடுபடுத்திக் கொள்ளுதல் (கமிட்மெண்ட்) மிகுதி. நடுத்தரவாசிகள் கையில் பணம் வைத்துக் கொண்டு திட்டமிட்டெல்லாம் வீடு கட்டுவதையோ, திருமணம் செய்வதையோ செய்துவிட முடியாது. இரண்டுக்குமே கடன் வாங்கனும். அதைத் தவிர்த்து அதற்கான தேவையும் நெருக்குதலும் இருக்கனும், ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | August 30, 2009, 2:11 pm | தலைப்புப் பக்கம்

இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி...தொடர்ந்து படிக்கவும் »

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு    
ஆக்கம்: வசந்தன்(Vasanthan) | August 23, 2009, 1:33 pm | தலைப்புப் பக்கம்

பதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால்...தொடர்ந்து படிக்கவும் »

Inglourious Basterds    
ஆக்கம்: சன்னாசி | August 22, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாம் உலகப் போர் குறித்து, பிரபலமான ஸ்பீல்பர்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் தொடங்கி, ஐரோப்பிய மேம்போக்கான அபத்தநகைச்சுவைப் படங்களான “எப்படி நான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினேன்” (Jak rozpętałem drugą wojnę światową), சமீபகாலங்களில் பார்த்த பிரமாதமான படங்களிலொன்றான ஜெர்மன் Downfall (Der Untergang) வரை கணக்கற்ற படங்கள். குறிப்பாக, சமீபத்தில் பார்த்த உலகப்போர்/பிந்தைய காலகட்டம் குறித்த ஜெர்மன் மொழிப்...தொடர்ந்து படிக்கவும் »

இடியப்பம் - 2    
ஆக்கம்: இராம.கி | July 30, 2009, 12:25 am | தலைப்புப் பக்கம்

முன்னே இடியப்பம் - 1 ல் நான் எழுதியதற்கு, இன்னொரு பார்வையாய், நண்பர் மணிவண்ணன் ஒரு மடலைத் தமிழ் உலகிற்கும், தமிழ் மன்றத்திற்கும் அனுப்பி வைத்தார். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன். ------------------------------------------------------------------இடியப்பம் சீன இறக்குமதியோ என்ற ஐயம் எனக்கு உண்டு. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங் என்ற சீன திருத்தலப் பயணி இந்தியாவுக்கு வந்தபோது...தொடர்ந்து படிக்கவும் »

அயல் சூழலில் மொழியும் கலாச்சாரமும்    
ஆக்கம்: இரா. செல்வராஜ் | July 24, 2009, 6:20 am | தலைப்புப் பக்கம்

“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத்...தொடர்ந்து படிக்கவும் »

பழந்தமிழர் நீட்டளவை - 6    
ஆக்கம்: இராம.கி | July 8, 2009, 12:39 am | தலைப்புப் பக்கம்

அடுத்து வரும் அளவு கூப்பீடு (இது கூப்பிடு தூரத்தின் சுருக்கம். எங்கள் ஊர்ப்பக்கம் ”பெருசுகள்” இப்படிச் சுருக்கிச் சொல்லுவதை இளம்பருவத்தில் கேட்டிருக்கிறேன்.) இது கிட்டத்தட்ட ஒரு கல் (=மைல்) தொலைவு தான். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூப்பீட்டிற்கும் ஒரு கல் வைத்திருப்பார்கள் போலும். கூப்பீட்டிற்கு அடுத்தது காதம். காதம் என்பதைக் காவதம் என்றும் பழம் இலக்கியத்தில்...தொடர்ந்து படிக்கவும் »

அருணகிரிநாதர் செய்த மர்ம டகால்ட்டி! - 2    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | July 7, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்

யார் காது காலி ஆச்சு? அருணையா? வில்லியா? சென்ற பதிவு இங்கே!சில சமயம், குற்றத்தை ஒரேயடியா அடக்கணும்-ன்னா, நாமளே "சிறு" குற்றம் பண்ணாத் தான் ஆச்சு! ஓவர் ஸ்பீடில் போற ஒருத்தனை, போலீசும் ஓவர் ஸ்பீடில் போய்த் தானே பிடிக்கணும்! இதுக்காகப் போலீசை கொறைபட்டுக்க முடியுமா? :)கண்ணன் செய்த பல செயல்களும் இப்படித் தான்! அதையே தான் அருணகிரியும் செய்யறாரு! வாயில் நுழையாத வெட்டு வெடுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

பழந்தமிழர் நீட்டளவை - 4    
ஆக்கம்: இராம.கி | July 6, 2009, 12:35 am | தலைப்புப் பக்கம்

அடுத்தது முழம். இந்தச் சொல் கை, கால்களின் மூட்டை (joint) முதலிற் குறித்துப் பின் அதனோடு தொடர்புள்ள நீட்டளவையைக் குறித்திருக்கிறது. முள் என்னும் வேரில் இருந்து முள்+து = முட்டு என்ற சொல் உடல் எலும்புகள் சேரும் / கூடும் இடங்களையும், அதன் தொடர்ச்சியாய் முன்வந்து மோதிக் கொள்ளும் இடத்தையும், தடைப்படும் இடத்தையும் குறிக்கும். இன்னும் பொருள் நீட்சி பெற்று முழங்காலையும் கூடக்...தொடர்ந்து படிக்கவும் »

ஆய்தம்    
ஆக்கம்: இராம.கி | July 4, 2009, 5:50 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் “தமிழ் இலக்கணம் ஒப்பும் ஆய்த எழுத்துப் பயன்பாடு பற்றி விளக்கம் தேவை” என்று கேட்டு திரு. ரவி கீழே உள்ள கேள்விகளை http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/c58070aa3be622fa என்ற இழையில் எழுப்பியிருந்தார். ------------* ஆய்த எழுத்துக்கு முன்பும் பின்பும் என்னென்ன எழுத்துகள் வரலாம்? அடுத்து வரும் எழுத்துகளை எவ்விதம்...தொடர்ந்து படிக்கவும் »

பழந்தமிழர் நீட்டளவை - 2,    
ஆக்கம்: இராம.கி | June 22, 2009, 2:59 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழர் நீட்டளவையில் முதலில் வருவது விரல். விரிக்கும் செய்கையிற் பிறந்த சொல் விரல். கையில் மடங்கிக் கூடுவதும், பின் எதிரிடையாய் விரிந்து அகல்வதும், விரல்கள் தானே? விரல்கள் இன்றேல், பொருள்களைப் பற்றுவது ஏது? பிடிப்பது ஏது? கவ்வுவது ஏது? கவவுவது ஏது? கவர்வது ஏது? கவிப்பது ஏது? கட்டுவது ஏது?கள் என்னும் வேருக்குக் கூடுதல், கட்டுதல், பற்றுதல், பிடித்தல் எனப் பல பொருள்கள்...தொடர்ந்து படிக்கவும் »

உடையார் - ஒரு முன்னுரை    
ஆக்கம்: கிருஷ்ண துளசி சில பதிவுகள் | June 22, 2009, 2:20 am | தலைப்புப் பக்கம்

நெஞ்சு முழுவதும் ஒரு விம்மிதம் பரவிக்கிடக்கிறது. எந்த நினைப்புமற்று, எந்த செயலுமற்று, எந்த அசைவுமற்று வெறுமே கிடக்கின்றன ஓரு நிலைமை சில கணங்கள் உள்ளே உண்டாயிற்று.உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா, உண்மைதானா. நாவல் எழுதி முடிக்கப்படாது என்று சொன்னார்களே. இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளீயாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம்...தொடர்ந்து படிக்கவும் »

பழந்தமிழர் நீட்டளவை - 1    
ஆக்கம்: இராம.கி | June 21, 2009, 12:42 am | தலைப்புப் பக்கம்

உலகெங்கும் பல்வேறு இனத்தாரின் நீட்டளவைகள் தொடக்கத்தில் மாந்த உடலுறுப்புகளை ஒட்டியே பிறந்திருக்கின்றன. தமிழ் நீட்டளவைகளும் இப்படியே எழுந்திருக்கலாம். இந்த அளவைகளை இற்றைக் கண்களாற் பார்த்தால், அவை வெளித்திட்டாய்த் (objective) தோன்றாது. ஏனெனில் விரல், சாண், முழம் போன்றவை மாந்தருக்கு மாந்தர், ஏன் ஒரே மாந்தனில் அகவைக்கு அகவை, வேறுபாடு கொண்டவை. இருப்பினும், யாரோ ஒரு மன்னனை,...தொடர்ந்து படிக்கவும் »

நூறு சிறந்த தமிழ் சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன் லிஸ்ட்    
ஆக்கம்: RV | June 16, 2009, 6:35 am | தலைப்புப் பக்கம்

ராமகிருஷ்ணன் இப்படி ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறார். நல்ல முயற்சி. இந்த லிஸ்டில் காலத்தால் முந்தையவற்றை ஓரளவு படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஓரளவு சமீப காலத்தில் – கடந்த 20 வருஷங்களுக்குள் – எழுதப்பட்டவை அவ்வளவாக என் கண்ணில் பட்டிருக்காது. எங்கோ உட்கார்ந்திருக்கும் துரதிருஷ்டம்தான். எனக்கு சிறுகதைகளிடம் ஒரு பிரச்சினை. கதை ஞாபகம் இருக்குமே தவிர தலைப்பு...தொடர்ந்து படிக்கவும் »

Humility - தமிழில் என்னங்க?    
ஆக்கம்: ஜீவா (Jeeva Venkataraman) | June 16, 2009, 1:20 am | தலைப்புப் பக்கம்

Humility - ஆங்கிலத்தில் அழகானதொரு சொல்!தமிழில் எப்படிச் சொல்வது?அகராதியைப் புரட்டிப் பார்த்தால், அது சொல்வது:தாழ்வுபணிவு/பவ்யம்/தலைவணக்கம்செருக்கின்மைஇவற்றைக் காட்டிலும், எனக்குப் பிடித்தது : விநயம்!அட, விநயம், என்ன அழகான சொல்!"வித்தைக்கு அழகு விநயம்" என்பார்கள்.பல கற்று அறிந்து இருந்தாலும், அதனால் தலைக்கனம் இல்லாமல் இருப்பது விநயம்.பணியுமாம் என்றும் பெருமை;...தொடர்ந்து படிக்கவும் »

ஆங்கில அகரமுதலியில் 10 லட்சம் சொற்கள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | June 10, 2009, 6:04 am | தலைப்புப் பக்கம்

புதுடில்லி: ஆங்கில சொற்கள் 10 லட்சத்தை தொடப்போகின்றன. பத்து லட்சமாவது சொல்லுக்கு கடும் போட்டா போட்டி நிலவுகிறது. இதில் ஒன்று, ஆஸ்கர் விருதை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெற்றுத்தந்த "ஜெய் ஹோ' என்ற சொல்.ஆங்கில சொற்களை ஏற்றுக் கொண்டு, புழக்கத்தில் விடும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள "குளோபல் லேங்குவேஜ் மானிட்டர்' என்ற அமைப்பிடம்...தொடர்ந்து படிக்கவும் »

"ஈழத்து முற்றம்" ஒரு அறிமுகம்    
ஆக்கம்: கானா பிரபா | June 5, 2009, 10:10 am | தலைப்புப் பக்கம்

ஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் பலவற்றைப் பகிரும் குழும வலைப்பதிவாக மலரவிருக்கின்றது இந்த "ஈழத்து முற்றம்" என்னும் வலைப்பதிவு. ஈழத்தின் பேச்சு வழக்குகளை இணையத்தில் ஒரு அகராதித் தொகுப்பாக சக வலைப்பதிவு நண்பர்களோடு இணைந்து செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாள் தடங்கலுக்குப் பின் இப்போது நிறைவேறியிருக்கின்றது. இந்த வலைப்பதிவில் இணைந்து தங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்கா பயணம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 2, 2009, 6:39 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் ஒரு வெளிநாட்டுப்பயணம். இம்முறை அமெரிக்கா. அமெரிக்க நண்பர்களின் அழைப்புக்கு இணங்க வரும் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் அங்கே இருப்பேன். ஜெயமோகன்.இன் இணையதளத்தை நடத்தும் சிறில் அலெக்ஸ் உட்பட எனக்கு அங்கே பல நண்பர்கள். ஆனால் சிறில் உட்பட பெரும்பாலானவர்களை நான் நேரில் பார்த்தது இல்லை. இப்போது அதற்கான...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்    
ஆக்கம்: ரவிசங்கர் | May 27, 2009, 4:52 am | தலைப்புப் பக்கம்

எழுத்துச்சீர்மை பற்றிய பேரா. வா.செ.கு அவர்களின் உரையைக் கண்டேன். தமிழ் உயிர்மெய்யெழுத்துகளில் ஆ, ஐ, எ, ஏ, ஒ, ஓ, ஔ வரிசைகளை எழுத அந்தந்த மெய்யெழுத்துகளையும் அவற்றுக்கு முன்பும் பின்பும் சில குறியீடுகளையும் பயன்படுத்துகிறோம். இது போல், இ, ஈ, உ, ஊ வரிசைகளை எழுதுவதற்காகப் புதிய குறியீடுகளை அறிமுகப்படுத்துகிறார். இந்தச் சீர்திருத்தத்தை முன்வைப்பதற்கு முக்கிய காரணமாக...தொடர்ந்து படிக்கவும் »

கசாப்பு    
ஆக்கம்: சாத்தான் | May 13, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

1. சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல. பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

விண்டோஸ் 7.0ல் தமிழ் ஓம் எழுத்து    
ஆக்கம்: நா. கணேசன் | May 7, 2009, 12:55 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் புதிதாய் விஸ்டாவில் இயங்கும் ஒரு கணினி வாங்கினேன். அதில் தமிழ் ஓம் (U+0BD0) காணவில்லை. ஏனென்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தாரை வினவினேன். ஆண்ட்ரூ கிலாஸ் (இவர் தமிழ் பிரமி உட்பட அசோகச் சக்கிரவர்த்தியின் பிராமி எழுத்துக்களை யூனிகோடில் சேர்த்தவர்) எழுதிய பதிலில் விண்டோஸ் 7.0லிருந்து தமிழ் ஓம் இலங்கும் என்று அறிவித்தார்: "Vista was released before Unicode 5.1 and the version of the...தொடர்ந்து படிக்கவும் »


தமிழக வரலாற்றுக் குறிப்புகள்    
ஆக்கம்: குமரன் (Kumaran) | April 16, 2009, 4:02 am | தலைப்புப் பக்கம்

வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லும் சில கால வரையறைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் இலக்கியங்கள் சொல்லும் கருத்துகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள இயலுவதில்லை. அதனால் கால வரையறைகளைப் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று சில நம்பகமான இணையத்தளங்களை அண்மையில் படித்தேன். அவற்றிலிருந்து சில குறிப்புகளை எடுத்துவைத்துக் கொண்டேன். அவற்றை இங்கே சேமிக்கிறேன்.***...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் தட்டச்சு பயில்வதற்கு    
ஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 12, 2009, 6:15 pm | தலைப்புப் பக்கம்

”உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?” - என்கிற எனது பதிவு ஒன்றில், தமிழில் தட்டச்சு பயில்வதற்கான இலவச மென்பொருள் உள்ளதா என திரு. Kumaravel கேட்டிருந்தார்.சிலகாலம் இணையத்தில் தேடியதில், இன்று எனது கண்ணில் பட்ட ஒரு மென்பொருள் அவரது கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.தமிழில் தட்டச்சு செய்வதற்கு நிறைய இலவசப் பயன்பாடுகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »

என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 11, 2009, 12:56 am | தலைப்புப் பக்கம்

முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992).பின்பகுதியில் பேரா.மா.இரா,பேரா.அரு.மருததுரைபுதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன்(1992-93).அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன்.நேர்காணல்...தொடர்ந்து படிக்கவும் »

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 5, 2009, 1:03 am | தலைப்புப் பக்கம்

அறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகைபல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்நூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சிபயன்பாட்டில் நூலகம்அரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட பார்வையிடும் நான்நூல்களின் கண்கவர் அணிவகுப்புமு.இ நூலகத்தில்பல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...நூல்களின் அணிவகுப்புவனப்பு...தொடர்ந்து படிக்கவும் »

பிழைகளுடன் எழுதுபவர்கள் இனி எழுத வேண்டாம் ?    
ஆக்கம்: கோவி.கண்ணன் | April 1, 2009, 7:23 am | தலைப்புப் பக்கம்

தமிழில் தவறுகள் இல்லாமல் எழுதுவது சிறுது கடினம் தான். தாய்மொழி என்றாலும் தகுந்த பயிற்சி இல்லை என்றால் எழுதும் போது தவறுகள் இயல்புதான் இது அனைத்து மொழிக்களுக்கும் பொதுவான ஒன்று. தவறில்லாமல் எழுதுபவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.மற்றமொழிகளைக் காட்டிலும் திராவிட மொழிகளில் சொற்பிழையை வெகுவாக குறைக்க முடியும், ஏனெனில் எழுதுவது போலவே எழுத்தின் ஒலியை வரிசையாக...தொடர்ந்து படிக்கவும் »

ங்கோத்தபய ராசபக்சே வின் சாதனை- புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய உண்...    
ஆக்கம்: OSAI Chella | April 1, 2009, 5:00 am | தலைப்புப் பக்கம்

நமக்கு வெறும் எண்ணிக்கையாகக்கூடத் தோன்றும் தினம் நடக்கும் வன்னிச்சாவுகள். இந்த கொலைபாதக சோனியா, புத்தமத ஆதரவு பியாங்கா, ராஜாபிச்சை கோஷ்டிகளின் ரத்தவெறி ... ஒரு ஊசிமுனை நிலம் கூட கொடுக்கமாட்டோம் .. என்று சூளுரைத்த துரியோதனனைக்கூட மிஞ்சிவிட்டார்கள் இந்த நவீன கௌரவர்கள்! இதுவரை இறந்தசிறுவர்கள் விடுதலைப்புலிகளால் துவக்குகள் கொடுத்து போர்முனைகளுக்கு அனுப்பப்...தொடர்ந்து படிக்கவும் »

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தளங்கள் குறித்த என் சி...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 27, 2009, 11:28 am | தலைப்புப் பக்கம்

கோயமுத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் இளம் முனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29.03.2009) காலை 10.30 மணிக்குத் தமிழ் இணையத்தளங்களும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற...தொடர்ந்து படிக்கவும் »

YouTube இல் தமிழருக்காக வாதிடும் 23 வயது அமெரிக்கப் பெண்    
ஆக்கம்: அற்புதன் | March 25, 2009, 6:43 pm | தலைப்புப் பக்கம்

Tigers Will Fly Want to Subscribe?Sign In or Sign Up now! karmicdestineeJoined: 02 December 2006Last Sign In: 2 days agoVideos Watched: 820Subscribers: 19Channel Views: 1,001Graduated with a B.A. in English/Literature with a minor in International Studies. Moving on to graduate school to attain a PhD in English with a concentration in Postcolonial theory and literature, preferably South Asian. Independent research interests geared towards Sri Lanka. I will continue to advocate Tamil Eelam...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 4    
ஆக்கம்: இராம.கி | March 23, 2009, 12:01 pm | தலைப்புப் பக்கம்

அடுத்து, கோவலன் என்னும் பெயரைப் பார்ப்பதாகச் சொன்னேன். காப்பியம் எங்கணும் கோவலன் என்ற பெயரே, ஒரே ஒரு இடத்தைத் தவிர, பயிலப் படுகிறது; அந்தப் புறனடை அடைக்கலக் காதையில் 93-94 ஆம் வரிகளில் மாடலன் சொல்வதாக வருகிறது. திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்ததுவிருத்தகோ பால நீயென வினவ (93-94) இங்கே ”மாமணிக் கொழுந்து” என்பது கண்ணகியைக் குறிக்கிறது. “விருத்த கோபால” என்பதற்கு ”அறிவால்...தொடர்ந்து படிக்கவும் »

உலகு தழுவிய தமிழ்த்தொடர்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 22, 2009, 1:51 am | தலைப்புப் பக்கம்

அயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும்.நூல்கள்,உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல்,இணையக்குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என்...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 3    
ஆக்கம்: இராம.கி | March 21, 2009, 4:29 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுது கண்ணகியின் பெயர்க் கரணியம் பார்ப்போம். அவள் கண் பெரியது, கருமையானது, மலர் விரிவது போலக் காட்சியளிப்பது. இதைக் காப்பியம் எங்கணும் திரும்பத் திரும்ப வெவ்வேறு மாந்தர் வழியேயும், தானாகவும் இளங்கோ சொல்லுகிறார். பிறந்தபோதே, குழவியின் உருண்ட, பெருங் கண்கள் மாநாய்கனையும், அவன் கிழத்தியையும், மயக்கிற்றோ என்னவோ, கண்ணகி என்று பெயரிட்டார்கள். [இன்றுங் கூடக்...தொடர்ந்து படிக்கவும் »

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தம...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 20, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்புபெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி இணைப்பேராசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »

கண்ணகி, கோவலன், மாதவி - பெயர்ப் பின்புலம் - 1    
ஆக்கம்: இராம.கி | March 20, 2009, 10:43 am | தலைப்புப் பக்கம்

அண்மையில் திரு. நா.கணேசன் ”கண்ணகி, கோவலன், மாதவி” பெயர்களுக்குச் சங்கதப் பின்புலம் காட்டி, ”இளங்கோ அடிகள் கிருஷ்ணாவதாரக் கதையின் சில பகுதிகளை ஒரு நாவல் போலச் செய்து கதைமாந்தர் பெயர்களைப் படைத்திருக்கிறார்" என்று மின்தமிழ் குழுமத்தில் எழுதியிருந்தார். "இப்படியும் பார்க்க இயலுமா?" என்று வியந்து போனேன். பிற்காலத்தவர் (மு.இராகவையங்கார்) கருத்தை, முதலாசிரியர் மேல்...தொடர்ந்து படிக்கவும் »

பாவலர் குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)-மலேசியா    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 18, 2009, 1:34 am | தலைப்புப் பக்கம்

குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.மலசியாவில் திராவிடர் கழகம்.தமிழ்நெறிக்கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார்...தொடர்ந்து படிக்கவும் »

Synecdoche: New York    
ஆக்கம்: சன்னாசி | March 17, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனனின் மொழிபெயர்ப்பில் முதன்முதலாக ‘குறுக்குவெட்டுப் பாதைகளின் தோட்டம்’ (Garden of forking paths) படித்ததில் தொடங்கி இன்று வரை, என்னளவில் ‘புனைவுக்கான’ ஓர் உரைகல்லாக போர்ஹேஸின் கதைகள் இருந்து வருகின்றன. போர்ஹேஸின் உந்துதல்களை, வடிவங்களை இலக்கியத்தில், ஓவியங்களில், திரைப்படங்களில் பல வடிவங்களில் காண இயலும். வில்லியம் கிப்ஸனின் Johnny...தொடர்ந்து படிக்கவும் »

w3தமிழ் Widget பயன்பாடு    
ஆக்கம்: w3Tamil | March 15, 2009, 8:52 pm | தலைப்புப் பக்கம்

தற்போது நீங்கள் w3தமிழ் Widget களினை பயன்படுத்தி மிக இலகுவாக தமிழ்99 விசைப்பலகையினை உங்களது வலைப்பதிவிலோ அல்லது இணையத்திலோ இணைத்துக்கொள்ளலாம்.  இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் கீழ்வரும் HTML கட்டளைகளை உங்கள் வலைப்பதிவிலோ அல்லது இணையத்திலோ இணைப்பதுதான்.பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையினைப்பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் அனுப்பிவைக்கவும்....தொடர்ந்து படிக்கவும் »

திசைகள் - 5    
ஆக்கம்: இராம.கி | March 15, 2009, 12:17 pm | தலைப்புப் பக்கம்

அடுத்து, மேற்குத் திசையைப் பார்ப்போம். .மேக்கு, பச்சிமம், குடக்கு, இவை மேற்கேவாருணம், பிரத்தியக்கும், அதுவே.என்று பிங்கலம் கூறும் சொற்களை அகரவரிசைப் படுத்தினால் ”குடக்கு, பச்சிமம், பிரத்தியக்கு, மேற்கு (மேக்கு இதன் பேச்சுவழக்குச் சொல்லே), வாருணம்” என்று அமையும். இவற்றில் இரண்டு சொற்கள் நல்ல தமிழ் (குடக்கு, மேற்கு), இரண்டு சொற்கள் தமிழ்த் திரிவு (பச்சிமம், வாருணம்), ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »

தமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 10, 2009, 1:49 pm | தலைப்புப் பக்கம்

சட்டப்பேரவைத் தலைவராகப் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் ஆவார்.வடார்க்காடு மாவட்டம்(இன்றைய திருவண்ணாமலை மாவடம்) செய்யாறு பகுதியில் வாழ்ந்த திரு காங்கன் முதலியார் சுந்தரம் அம்மாளுக்கு மகனாக...தொடர்ந்து படிக்கவும் »

எகொஇச?    
ஆக்கம்: Sathia | March 9, 2009, 3:15 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கிலச்சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவது நான் அடிக்கடி முயலும் சங்கதி. மின்னஞ்சல்களில், ட்விட்டரில் எல்லாம். எத்தனை கலப்படம் செய்கிறேன் என்று அறிந்துகொள்வதற்காக.படத்தை பாருங்கள்.சட்டென்று முகத்தில் அறையும் கலப்படம் தெரிவது முன்னேற்றமா அல்லது இன்னும் மிச்ச்சொச்சம் மறைந்து ஆங்கிலமே அகிவிட்ப்போவத்தற்கான வீழ்ச்சியா? தெரியவில்லை. இப்போதைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்(மலேசியா)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | March 8, 2009, 12:31 am | தலைப்புப் பக்கம்

அ.பு.திருமாலனார்சிங்கப்பூரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு பழையன புகுதலும்... என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்(2001,செப்டம்பர்).உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட உண்மையான பன்னாட்டுக் கருத்தரங்காக அது நடந்தது.மலேசியாவிலிருந்து அம்மாநாட்டில் கலந்துகொண்ட ஓர் அன்பர் என் பேச்சைக்கேட்டு, கைகுலுக்கி என்னை மலேசியாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்/ வ(ப)ழக்கமாகிப் போன ஆங்கிலச் சொற்கள்    
ஆக்கம்: பாச மலர் | March 5, 2009, 4:53 am | தலைப்புப் பக்கம்

திகழ்மிளிர் இத்தொடரை எழுதச் சொல்லி நாட்கள் பலவாகிவிட்டன. சரி, பொதுவாக வழக்கில் ஒழிந்து நிற்கும் சொற்களைப் பற்றி எழுதலாம் என்று முதலில் நினைத்தேன். என் வழக்கிலேயே ஒழிந்து போய்விட்ட சொற்களைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது.கடந்த வருடம், ஒரு நண்பர் பொதுவாக நாம் உபயோகிக்க மறந்த தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டு, (கிட்டத்தட்ட 100க்கும் மேல்..மேலோட்டமாகப் பட்டியலிட்ட...தொடர்ந்து படிக்கவும் »

உலகத் தமிழன்?    
ஆக்கம்: Srimangai(K.Sudhakar) | March 1, 2009, 3:35 am | தலைப்புப் பக்கம்

”இத்தனை பேரு சாகறாங்களே? இதே சண்டை பங்களாதேஷ்-ல நடந்திருந்தா பிரணாப் முகர்ஜி என்ன செஞ்சிருப்பாரு?” கேட்டவன் தமிழனில்லை. ப்ரமோத் ஷிண்டே என்னுடன் பணிசெய்யும் ஒரு சாதாரண மும்பைக்காரர். 7.20 ரயிலில் டோம்பிவில்லியில் தொத்தி, காட்கோப்பரில் இறங்கி அவசரமாக ஒரு பேருந்தில் திணிபட்டு , ஐ.ஐ.டி பவாய் அருகில் துப்பப்படு, அலுவலகத்திற்கு கசங்கி வரும் ஒரு பெயரில்லா மும்பைக்கர்.....தொடர்ந்து படிக்கவும் »

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 28, 2009, 5:06 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளைஈழப்போராட்டம் பல்லாயிரம் மக்கள் உயிரைக் காவு வாங்கியதுடன் அறிவுக்களஞ்சியமான யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட நூலகங்களையும் இல்லாமல் செய்துவிட்டது.நிறுவன நூலகங்கள் மட்டும் இல்லாமல் தனியார் நூலகங்கள் பலவும் சிதைந்து போயின.மிகப்பெரிய நூல் வளத்தையும், செல்வவளத்தையும்,நிலபுலங்களையும் இழந்து ஏதிலிகளாக அயல் நாட்டுக்குச் சென்றவர்களுள் அறிஞர்...தொடர்ந்து படிக்கவும் »

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?    
ஆக்கம்: enRenRum-anbudan.BALA | February 27, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்

எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன். அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து....தொடர்ந்து படிக்கவும் »

அறிவியல் தமிழ் களஞ்சியம்    
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | February 27, 2009, 7:39 am | தலைப்புப் பக்கம்

அறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படையில் காணக் கிடைக்கவில்லை. அதாவது, யூனிகோடு வடிவில் இல்லாமை, நடைமுறை பயன்பாடின்மை என சிக்கல்கள் உள்ளன.அறிவியல் வளர்ச்சியில் அதன் பயன்பாட்டில் கட்டமைக்கப்பட்டு வரும் சமுதாயம் அறிவியலை உணர வேண்டுமெனில் மொழியை வளப்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »

தயவுசெஞ்சு 'லவ்' பண்றேன்னு சொல்லாதீங்க..!!    
ஆக்கம்: சென்ஷி | February 27, 2009, 6:02 am | தலைப்புப் பக்கம்

மொழியானது எழுத்துக்களின் மூலமாக உருவாக்கப்பட்டாலும் பேச்சுக்களின் மூலமாக வன்மை பெறுகிறது. தாய்மொழியில் இருக்கின்ற பேச்சு வார்த்தைகள் முற்றிலுமாக மாறுபட்டு வேற்றுமொழியினை ஏற்றுக்கொண்டு அதற்கான மூலம் மறக்கின்ற பொழுது அந்த மொழியின் சீர்கேடு தொடங்க ஆரம்பிக்கின்றது. வேற்றுமொழி தாய்மொழியில் கலக்கின்ற சூழலை பொதுவானதாக இரண்டாய் பிரிக்க முடியும்.முதலாவதாய் வேற்று...தொடர்ந்து படிக்கவும் »

பேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்தரங்கு    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 25, 2009, 1:41 am | தலைப்புப் பக்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும்,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவனமும்(நியு செஞ்சுரி)2009,பிப்ரவரி 24,25 நாள்களில் தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வின் முன்னோடியாக விளங்கும் பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் எழுத்துரைகள் குறித்த இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.தொடக்க விழாவில் தமிழியற்புல முதன்மையர் பேராசிரியர் அ.அறிவுநம்பி...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்    
ஆக்கம்: ரவிசங்கர் | February 24, 2009, 6:35 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகGoogle Spreadsheetல் பெயர்களை உள்ளிட்டு பங்களிக்க விரும்பினால், உங்கள் கூகுள் முகவரியை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன்.  தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம்    
ஆக்கம்: ரவிசங்கர் | February 24, 2009, 6:35 pm | தலைப்புப் பக்கம்

பார்க்க: Tamil Baby Names Websites ** நண்பர் கார்த்திக், தமிழ்க் குழந்தைகள் பெயர்கள் தரவுத்தளம் ஒன்று உருவாக்கி உள்ளார். விரைவில் இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களைச் சேர்ப்போம். உங்களுக்குத் தெரிந்த பெயர்களை இந்தப் படிவத்தில் தரலாம். நேரடியாகவும் Google Spreadsheetல் பெயர்களை உள்ளிடலாம்.  தற்போதைய தளம் ஒரு முன்னோட்டப் பதிப்பு மட்டுமே. அறியப்பட்ட வழுக்கள்: * IE 6 உடன் தகராறு. * Google chromeல் விருப்பப்...தொடர்ந்து படிக்கவும் »

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!    
ஆக்கம்: ஆதவா | February 24, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

வேத்தியர் எத்தனை நாள் என் மேல் கோபமாக இருந்தாரோ தெரியவில்லை. இப்படி கோர்த்துவிட்டுட்டு போய்விட்டார்...சரி முயற்சி செய்வோமே!!!வழக்கொழிந்த தமிழ் சொற்கள்!!!! அகண்டெடுத்த தமிழகழியில் உலாத்தும் கெண்டை நான். வேத்திய வலைஞன் ஆற்றிலிட்ட தூண்டிலில் சிக்கி, ஆற்றினை விட்டகல்ந்தால் தமிழெனும் சாகரம் கைநீட்டி வரவேற்கிறது. வேத்தியருக்கு நன்றி நெடுநாட்களுக்கு முன்னர் வேற்றொரு...தொடர்ந்து படிக்கவும் »

17 000 கட்டுரைகளைத் தாண்டி    
ஆக்கம்: நற்கீரன் | February 23, 2009, 5:46 pm | தலைப்புப் பக்கம்

தற்போது தமிழ் விக்கிப்பீடியா 17 000 கட்டுரைகள் மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த நவம்பர் நடுப்பகுதியில் 16 000 கட்டுரைகளை எட்டியது. ஏறத்தாழ 3 மாதங்களில் பெரிதும் சிறுதுமான 1000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சராசரியாக மாதம் 333 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 12-14 கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எமது தொடக்க ஆண்டுகளில் இருந்து இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். எனினும் நாம்...தொடர்ந்து படிக்கவும் »

நெஞ்சக நோய்சுமந்தும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பா.கண்ணையனார்    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 23, 2009, 1:17 am | தலைப்புப் பக்கம்

புலவர் கண்ணையன் அவர்கள்(படம்:மு.இ)பத்தாண்டுகளுக்கு முன்னர்(1997- 98) யான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்த பொழுது தினமணி அலுவலகம் சென்றுவரும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி அமையும் திரு.சுகதேவ் அவர்கள் தினமணிக் கதிரின் ஆசிரியராக இருந்து எம்போலும் இளைஞர்களுக்கு அப்பொழுது எழுதுவதற்கு நல்ல வாய்ப்பு வழங்கி வந்தார்கள். ஆசிரியர் பொறுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »


"மரணத்தின் வாசனை" பேசும் அகிலன்    
ஆக்கம்: கானா பிரபா | February 22, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

என்னை நிராகரியுங்கள்எல்லாமுமாகியஎன் சர்வவல்லமை பொருந்தியபிதாக்களேஎன்னை நிராகரியுங்கள்எப்போதும்துயரத்தின் சாயல் படிந்தஊரின் தெருக்களை விட்டேகியகொடுங்குற்றத்திற்காகஎன்னை நிராகரியுங்கள்உங்களிற்காககொஞ்சப்புன்னகைகளையும்எனக்காகஉயிர் குறித்த நம்பிக்கைகளையும்உங்களிடம் அச்சத்தைஊட்டக்கூடியமரணங்கள் பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்(இலங்கை)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 22, 2009, 1:27 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது.அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன.இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.யாழ்ப்பாணப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழில் ஒர் புதிய அத்தியாயம் : தமிழ் SPELL CHECK மென்பொருள்    
ஆக்கம்: noreply@blogger.com (கார்த்திக்) | February 21, 2009, 5:51 am | தலைப்புப் பக்கம்

இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்) போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!விசைத்தமிழ்எந்த...தொடர்ந்து படிக்கவும் »

www.amazon.com இல் தமிழ் புத்தகங்கள்    
ஆக்கம்: Chellamuthu Kuppusamy | February 17, 2009, 10:12 am | தலைப்புப் பக்கம்

நேற்று அமெரிக்க நண்பர் ஒருவர் எனது புத்தகங்கள் http://www.target.com/ தளத்தில் தென்பட்டதாகத் தெரிவித்தார். அப்போதே நினைத்தேன், பதிப்பாளருடன் பேச வேண்டுமென்று.கேட்பதற்கு முன்பாக http://www.amazon.com/ இல் அவை கிடைப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். இனிமேல் அமெரிக்காவிலும், கனடாவிலும் தமிழ்ப் புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இயலும்.பிரபாகரன் - ஒரு வாழ்க்கைஇழக்காதேவாரன் பஃபட் - பணக்...தொடர்ந்து படிக்கவும் »

சிந்து சமவெளியில் பழையோள் கொற்றவை    
ஆக்கம்: நா. கணேசன் | February 17, 2009, 3:05 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழ் இலக்கியங்கள் துர்க்கையைப் பழையோள், காடுகிழாள், ஐயை, ... என்றெல்லாம் போற்றுகின்றன. முருகனைப் பழையோள் குழவி என்று பாடித் திருமுருகு பரவுகிறது.சிந்து சமவெளியில் கொற்றவை பற்றிய கட்டுரை:http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.htmlஹார்வர்ட் தொல்கலை நிபுணர் ரிச்சர்ட் மெடோ அகழ்ந்து கண்டுபிடித்த அரசிலைத் தோரணத்தின் கீழ் நிற்பவர் ஒரு ஆண், கொற்றவையின் பூசகரான வேளாராக...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்க விண்ணப்பத்தில் 'தமிழ் தெரியுமா?'    
ஆக்கம்: (author unknown) | February 16, 2009, 10:09 am | தலைப்புப் பக்கம்

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் புதிய நிர்வாக அதிகாரி பொறுப்புகளுக்கான தேர்வு விண்ணப்பத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகள் உங்களுக்கு தெரியுமா என கேட்கப்பட்டுள்ளது.அதிபர் ஒபாமாவின் புதிய அரசு ஆயிரக்கணக்கான நிர்வாக அதிகாரிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கான விண்ணப்பபங்களை வினியோகம் செய்து வருகிறது. அதில் சர்வதேச பணி அனுபவம் என்ற பகுதியில் உலகில் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »

கேரளாவில் பொங்கல் விடுமுறை இல்லை    
ஆக்கம்: (author unknown) | February 16, 2009, 6:04 am | தலைப்புப் பக்கம்

திருவனந்தபுரம்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டஙகளில் பொங்கலுக்கு விடுமுறை அளிக்க முடியாது என கேரள அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.கேரளாவின் ஓனம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வசிக்கும் கோவை, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது.இதேபோல் கேரளாவில் தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

செந்தமிழில் பயணச்சீட்டு - இன்பத்தேன் பாயுதே !!    
ஆக்கம்: புருனோ Bruno | February 15, 2009, 1:39 pm | தலைப்புப் பக்கம்

தமிழக அரசு போக்கு வரத்து கழக பேரூந்துகளில் தற்சமயம் சிறு கையடக்க மின்பொறி மூலம் பயணச்சீட்டு வழங்கப்படுவதை கவனித்திருப்பீர்கள். இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அந்த பயணச்சீட்டுக்கள் ஆங்கிலத்தில் இருந்தன. தற்பொழுது நடத்துனர்களுக்கு புதிதாக வழங்கப்படும் இயந்திரங்கள் தமிழில் பயணச்சீட்டு வழங்கும்படி இருக்கிறது. விரைவில் அனைத்து பேரூந்துகளிலும் தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »

பேராசிரியர் ம.ஆ.நுஃமான்(இலங்கை)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 15, 2009, 1:39 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் ம.ஆ.நுஃமான்இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின்கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில்10.08.1944 இல் பிறந்தவர்.தந்தையார் பெயர் மக்புல் ஆலிம்.அவர் ஒரு மௌலவி,அரபு ஆசிரியர்;தாயார் பெயர்...தொடர்ந்து படிக்கவும் »

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள்    
ஆக்கம்: ஜோதிபாரதி | February 13, 2009, 4:03 pm | தலைப்புப் பக்கம்

தேடிப் பிடி(த்)தேன் தமிழை! - வழக்கொழிந்த சொற்கள் வழக்கொழிந்த சொற்கள் என்னும் தொடர் பதிவில் ஐக்கியப்படுத்தி என்னையும் அந்த ஜோதியில் கலக்க வைத்தது வேறு யாரும் அல்ல, ஒரு வண்ணத்துப் பூச்சி. இந்த வண்ணத்துப் பூச்சிக்குப் பல பரிணாமங்கள் இருக்கும் என்று கருதுகிறேன். இதுவரை இது போன்ற வண்ணத்துப் பூச்சியை நான் பாத்ததில்லை. ஆம், இந்த வண்ணத்துப் பூச்சியைக் கூட நான்...தொடர்ந்து படிக்கவும் »

நான் விமர்சனம் எழுதலை    
ஆக்கம்: பிரதீப் | February 12, 2009, 5:36 pm | தலைப்புப் பக்கம்

கீழிருக்கும் அத்தனை பாய்ண்ட்களையும் நம் வலையுலக எழுத்தாளர்கள் ஒன்று விடாமல் எழுதியாகிவிட்டது. அப்புறம் நீ எதுக்கு எழுதுறேன்னு கேக்கப்படாது! எனக்கும் ஒரு ப்ளாக் இருக்குல்ல, நீங்க எழுதினதை நான் படிச்ச மாதிரி நான் எழுதினதை நீங்களும் படிக்கணுமா இல்லையா? இல்லை தெரியாம தான் கேக்குறேன் நான் எப்போ தான்யா ஒரு பதிவு போட்றது?பாலா சாரிடம் சில கேள்விகள்1. இருக்கும் எல்லா...தொடர்ந்து படிக்கவும் »

தனித்தமிழ் மென்பொருள்    
ஆக்கம்: YourRaajV@gmail.com (தமிழ்த் தோட்டம்) | February 11, 2009, 6:12 am | தலைப்புப் பக்கம்

தனித்தமிழில் எழுத வேண்டுமா?கிரந்த எழுத்துகள் அற்ற தமிழ்99 விசைப்பலகை ஒழுங்கில் கிரந்தத்திற்கு மாற்றான தனித்தமிழில் எழுதுவதற்கான கருவி.இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த.....தனித்தமிழ்அகர வரிசை முறையில் வரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டுமா ?வரிசையாக்கி எனும் இம்மென்பொருள் நீங்கள் தரும் அனைத்து வரிகளையும் அகர வரிசை முறையில் ஒழுங்குப்படுத்தி தரும்.இதனை பதிவிறக்கம்...தொடர்ந்து படிக்கவும் »

மேட்டுத்திடல் முதல் சந்திப்பு வரை...    
ஆக்கம்: ஜி | February 11, 2009, 1:00 am | தலைப்புப் பக்கம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஜங்ஷன், மார்க்கெட், டவுண், பாளை பஸ் ஸ்டாண்ட், ஹை கிரவுண்ட் என்று நெல்லை நகர சுற்றுவட்டார ஊர்களனைத்தும் ஆங்கிலமொழியிலேயே அறியப்பட்டு வந்தன. அரசியல் ஆதிக்கமோ, மொழியார்வமோ, திடிரென ஓர் நாள் நெல்லை சந்திப்பு, தினசரி சந்தை, நெல்லை நகரம், பேருந்து நிலையம், மேட்டுத்திடலென்று பெயர் மாற்றப்பெற்று விட்டன. அவ்வதிரடி மாற்றத்தினால், பேருந்து பலகைகளில்...தொடர்ந்து படிக்கவும் »

கலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி B+ve    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 9, 2009, 12:06 am | தலைப்புப் பக்கம்

பாலசுப்பிரமணிஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் சிலர் என்னை அணுகும்பொழுது ஆய்வு செய்ய ஏதேனும் ஒரு தலைப்பு கொடுங்கள் என்பார்கள்.அல்லது நீங்கள் சொல்லும் தலைப்பில் ஆய்வு செய்கிறோம் என்பார்கள்.தலைப்பு கொடுத்த பிறகு பல மாதங்கள் தலைமறைவாகி விடுவார்கள். பல்கலைக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முந்திய கிழமை வந்து ஆய்வேடு எழுதுவது எப்படி என்பார்கள்.பழைய...தொடர்ந்து படிக்கவும் »

பேராசிரியர் சான் இரால்சுடன் மார் (இலண்டன்)    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 8, 2009, 12:13 am | தலைப்புப் பக்கம்

அறிஞர் மார்தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களை முதற்கண் முனைவர் பட்டஆய்வுக்கு உட்படுத்திய ஐரோப்பியநாட்டு அறிஞர் முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் ஆவார்.அடிப்படையில் இங்கிலாந்து இராணுவத்தில் தம் தொடக்ககால வாழ்க்கையை ஈடுபடுத்திக்கொண்ட மார் அவர்கள் பின்னாளில் தமிழ்மொழியையும் தமிழர்களின் இசையான கர்நாடக இசையையும் அறிந்து தமிழுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »

பழமொழி 600    
ஆக்கம்: ஞானவெட்டியான் | February 7, 2009, 12:07 pm | தலைப்புப் பக்கம்

549.யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். 550.யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. 551.யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ? 552.வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும். 553.வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். 554.வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது 555.விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. 556.வித்தைக்கு...தொடர்ந்து படிக்கவும் »

இணையத்தில் இந்திய மொழிகள்    
ஆக்கம்: நற்கீரன் | February 6, 2009, 3:43 pm | தலைப்புப் பக்கம்

உலகில் ஆறில் ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்கின்றார். இந்தியா ஒரு பல்லின பல்மொழி நாடு. 22 மொழிகள் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளாகவும், இந்தி தேசிய மொழியாகவும் உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக செயற்படுகிறது. மரபு வழி ஊடகங்களில் இந்திய மொழிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பத்திரிகைகள், இதழ்கள், தொலைக்காட்சி, திரைப்படம் ஆகியவை பெரும்பான்மையாக இந்திய மொழிகளிலேயே உள்ளன. இது...தொடர்ந்து படிக்கவும் »

மீளுகிறதா 1965? - 2    
ஆக்கம்: இராம.கி | February 6, 2009, 3:25 pm | தலைப்புப் பக்கம்

மொழித்திணிப்புக் கொள்கைக்கு எதிராக அன்றைக்கு எழுந்த தமிழ் மாணவர் போராட்டம் இப்பொழுது நினைவிற்கு வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்றும் அதே பேராயக் கட்சி தான் (ஆனால் ஒரு கூட்டணியமைப்பில்) நடுவணரசை ஆளுகிறது. இந்த ஆட்சியின் ஊடாக இன்றைக்குச் சிங்கள அரசின் தமிழின அழிப்புப் போருக்கு முற்றிலும் ஆதரவாய், ஆள்வலுவும், ஆயுத வலுவும், அரண வலுவும் சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்99 உதவிக்கு (0091) 99431 68304 அழையுங்கள்    
ஆக்கம்: ரவிசங்கர் | February 3, 2009, 10:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்99 முறையில் எழுதுவது, அதற்கான மென்பொருள்கள் குறித்த ஐயமா? உதவி வேண்டுமா? (0091) 99431...தொடர்ந்து படிக்கவும் »

மறந்துபோன தமிழ் சொற்கள்    
ஆக்கம்: கவிதா | Kavitha | February 2, 2009, 4:37 pm | தலைப்புப் பக்கம்

சந்தன முல்லை வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்ற தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறார்கள். இப்படி ஒரு தொடர் மிகவும் அவசியமானதாக தோன்றுகிறது. இதில் பதிவர்கள் நினைவில் வைத்து சொல்லும் எல்லா சொற்களையும் சேகரித்து சேமித்து வைக்கலாம்.எனக்கு நினைவில் தெரிந்து என்னுடைய தாத்தா நல்ல தமிழ் பேசுவார்கள், ஆயா, அப்பா எல்லாம் அவ்வளவு சுத்த தமிழ் சொற்கள் உபயோகிக்க' வில்லை என்றே...தொடர்ந்து படிக்கவும் »

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு)    
ஆக்கம்: சந்தனமுல்லை | February 1, 2009, 3:16 am | தலைப்புப் பக்கம்

வழக்கொழிந்த தமிழ் சொற்கள் எழுத அமித்து அம்மா சொல்லியிருக்காங்க! நன்றி அமித்து அம்மா!அவங்களே சொல்லியிருக்கற மாதிரி, உண்மையில் நாம் பேசுவது தமிழா என்பதில் சந்தேகமே! காலையில் எழுந்து “பல் விளக்கு” என்று பப்புவிடம் சொல்லாமல், “ப்ரஷ் பண்ணியா?” என்றுதானே கேட்கிறேன்!! ஆனால், என் ஆயா அப்படி கிடையாது. அவர் உபயோகிப்பதில் பாதியளவுதான் நான் தமிழ் வார்த்தைகள் பேசுகிறேன். அவர்...தொடர்ந்து படிக்கவும் »