மாற்று! » பகுப்புகள்

இசை 

Raaja Paarvai: Chords For Dummies    
ஆக்கம்: (author unknown) | September 5, 2009, 10:20 am | தலைப்புப் பக்கம்

Often while reading musical reviews or discussions of Ilaiyaraaja (or any genre of music that evolved in the past 50 years for that matter) a popular 'hip' word that one comes across is Chord. While a formal definition or a technical description of that word is available all over the internet, you are expected to be musically 'educated' or at least be aware of the basic anatomy of music to understand those references. Getting more confused, you would usually run for cover to your...தொடர்ந்து படிக்கவும் »

mAnasa guru guha - Anandabhairavi    
ஆக்கம்: Musical Scientist | June 28, 2009, 11:12 am | தலைப்புப் பக்கம்

The weather here in Bangalore today evening has a nice, steady breeze coupled with a beautiful "maN vAsanai" suggesting that its going to rain. The more I travel between Bangalore and Chennai, the more I am able to appreciate Bangalore's climate. Its hard to believe that 350 kilometres can make so much of a difference. However, being a hardcore chennaite in my heart and mind, I believe the special charm of the city more than makes up for the disastrously hot and humid weather conditions....தொடர்ந்து படிக்கவும் »

ரயில் சிநேகம் - இந்த வீணைக்கு தெரியாது    
ஆக்கம்: G3 | June 17, 2009, 4:00 am | தலைப்புப் பக்கம்

இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று என் சொந்த பிள்ளையும் அறியாது அதை தந்தவன் யாரென்றுஎனக்குள் அழுது ரசிக்கின்றேன்இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்இந்த வீணைக்கு தெரியாது இதை செய்தவன் யாரென்று மலையில் வழுக்கி விழுந்த நதிக்குஅடைக்கலம் தந்தது கடல் தானேதரையில் வழுக்கி விழுந்த கொடிக்குஅடைக்கலம் தந்தது கிளை...தொடர்ந்து படிக்கவும் »

அப்பன் மவனே! அருமை யுவனே!    
ஆக்கம்: Mugil | June 15, 2009, 11:03 am | தலைப்புப் பக்கம்

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில். சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற...தொடர்ந்து படிக்கவும் »

ஆயிரத்தில் ஒருவன் - இசை அறிமுகம்..    
ஆக்கம்: Saravana Kumar MSK | June 14, 2009, 5:43 pm | தலைப்புப் பக்கம்

இசையை கேட்க மட்டும்தான் எனக்கு தெரியும். இசை விமர்சனம் எல்லாம் சரியாக வராது. செல்வராகவன் எனக்கு மிக மிக மிக பிடித்த இயக்குனர் என்பதால், இன்று ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் வெளியாயிருப்பதால், இது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இசை அறிமுகம்.செல்வா- யுவன் - நா.முத்துக்குமார் கூட்டணியை நாமறிவோம். அத்தனை பாடல்களும் அனைவருக்கும் உளப்பூர்வமாகவும் நெருக்கமான பாடல்களாக...தொடர்ந்து படிக்கவும் »

அன்று இளையராஜா போட்ட மெட்டு; இன்றைய யுவனுக்கும் சேர்த்து    
ஆக்கம்: கானா பிரபா | June 7, 2009, 1:54 pm | தலைப்புப் பக்கம்

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பார்கள். தென்னிந்திய இசைச் சகாப்தத்தில் இசைஞானி இளையராஜாவின் இசைமரபினைப் பின்பற்றிய விழுதுகளாக அவரின் பாணியை எடுத்தாண்டு வாழ்ந்து போன இசையமைப்பாளர்கள் உண்டு, இன்று இசைஞானி இளையராஜாவின் திரையிசைப் பங்களிப்பு என்பது 80களில் கோலோச்சிய தனியதிகாரம் என்ற நிலை கடந்து இன்று மற்றைய இசையமைப்பாளர்களோடு பங்கு...தொடர்ந்து படிக்கவும் »

Raaja Hindustani III    
ஆக்கம்: Vignesh Subramanian | June 3, 2009, 9:40 pm | தலைப்புப் பக்கம்

Final post in my 3 part series and I must remind the readers of the focal points that I had in mind when I started these episodes. This post is about Raaja's ground breaking ideas on the use of Hindustani instruments and his adoption of other traditional concepts in routine film songs; These adoptions are so subtle that you will find no relevance to the songs specified and the original HCM (Hindustani Classical Music); We have already discussed his presentation of classical ideas in the...தொடர்ந்து படிக்கவும் »

வயலின் கலைஞர் - சி.சுப்ரமணிய அய்யர் (C.S.Iyer)    
ஆக்கம்: BeyondWords | May 10, 2009, 5:33 pm | தலைப்புப் பக்கம்

சி.வி.ராமனை தெரிந்த அளவிற்கு சி.சுப்ரமணிய அய்யரை (C.S.Iyer) தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு நோபல் பரிசால் இந்தியப் புகழ் அடைந்த சி.வி.ராமன், சந்திரசேகர் (இவர் மகன்) குடும்பத்தை சேர்ந்தவர் இவர். சி.வி.ராமனின் சகோதரர்.தன் தம்பி,  மகன் இருவரும் நோபல் பரிசைப் பெற்றவர்கள்;இவரோ இசை ஆர்வலர்,வயலின் இசைப்பதில் தேர்ந்த கலைஞர். The Art and Technique of Violin Play என்ற புத்தகத்தை 1941 எழுதியவர்.மெட்ராஸ்...தொடர்ந்து படிக்கவும் »

Make Mozart and Beethoven rock for you    
ஆக்கம்: (author unknown) | April 19, 2009, 3:46 pm | தலைப்புப் பக்கம்

For the last couple of years, I have been listening to symphonies, solos and concertos. What began as a lark has turned into an obsession. The problem is that I still haven’t cracked it. I am nowhere close to getting my arms around Mozart, Haydn and Verdi. I don’t mean in the mastery sense, which will take several lifetimes, but even in the “at last, I begin to get it” sense. Don’t go solo: To appreciate and enjoy Western classical music, find a guru. Dieter Nagl / AFP Western music, like...தொடர்ந்து படிக்கவும் »

கிடார் பிரசன்னாவுடன் ஒரு மாலை    
ஆக்கம்: (author unknown) | March 27, 2009, 5:41 am | தலைப்புப் பக்கம்

ரீதிகெளளை கட்டுரையில் மதுரை மணி ஐயரின் கச்சேரியைக் கேட்பதற்காக, வந்த சவாரியை வேண்டாமென்று ஒரு ரிக்ஷாக்காரர் சொன்னதாக திருவெண்காடு ஜெயராமன் சொன்னதை மேற்கோள் காட்டியிருந்தேன். அதைப் படித்துவிட்டு ஒரு நண்பர், “அவர்தான் சொல்கிறார் என்றால், நீங்களும் அதை நம்பிக் குறிப்பிட்டீர்களாக்கும்!” என்றார். “என்ன செய்வது நம்பமுடியாத அளவுக்கு நிலை மாறிவிட்டதுதான்! ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

தூள் - ஓராயிரம்    
ஆக்கம்: வெங்கட் | March 19, 2009, 2:20 pm | தலைப்புப் பக்கம்

இன்று தூள்.காம் தளத்தில் ‘இன்றைய பாடல்’ (Song of the Day) ஆயிரமாவது பாடலை வெளியிடுகிறது. தமிழ் இசைத் தளங்களுக்குள்ளே தூள் தனித்தன்மையானது. அதன் உச்சம் இன்றைய பாடல் பகுதி 2002 ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் மெகா தொடர் இது. ஆனால் முதலாவது பாடலில் இருந்த அதே சுவாரசியம் இன்று வரை குறையாமல் தொடருகிறது. ஆரம்ப நாட்களில் கிட்டத்தட்ட நாளுக்கு ஒன்று என்ற...தொடர்ந்து படிக்கவும் »

அத்னான் சாமியும், ஆசாத் அண்ணனும் அய்யனாரும்..பின்னே ஞானும்    
ஆக்கம்: ஆசிப் மீரான் | March 18, 2009, 7:59 am | தலைப்புப் பக்கம்

பொதுவாகவே எனக்கு ஹிந்திப் பாடல்களோ படங்களோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இந்த நிலையில் திடீர் மனமாற்றம் நிகழ்ந்ததற்கு 'ஏக் துஜே கேலியே'வில் எஸ்.பி.பியின் அதிரடி நுழைவு காரணமென்று வேண்டுமானால் சொல்லலாம். அந்தப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' யில் எல்லாம் உருகிக் கொண்டிருக்க எனக்குப் பிடித்திருந்தது 'மேரே ஜீவன் சாத்தி'தான். அந்தப் பாடலில் அவரது குழைவும் நெளிவும்...தொடர்ந்து படிக்கவும் »

Music review: Vizhiyum Seviyum (Tamil pop - Sami Yusuf & Premgi Am...    
ஆக்கம்: Karthik | March 10, 2009, 4:54 pm | தலைப்புப் பக்கம்

Oliye oliye clearly seems enamored by Rahman’s Vellai pookkal but its core melody is pleasing, while Unnai naan, Otrai paarvai and Iravil malarum use the Harris Jeyaraj template quite efficiently. The medley-styled theme music is actually pretty good fun even as Premgi’s guest composition, Burn in Da floor is excessively digitized and overdoes everything it attempts. Timmy’s As the sun shines manages to be unintentionally and the rap and hip hop-loaded tracks, Nee en vishiyai and...தொடர்ந்து படிக்கவும் »

ஐ லவ் இளையராஜா - 2    
ஆக்கம்: MSV Muthu | March 3, 2009, 7:57 am | தலைப்புப் பக்கம்

உத்த‌ர‌வு தேவி ; த‌த்த‌ளிக்கும் ஆவி from த‌லையைக்குணியும் தாம‌ரையேஇந்த‌ பாட‌ல் பார்ப்ப‌த‌ற்கு அவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்காது. முழு பாட‌லையும் இங்கே பார்க்க‌லாம். ர‌குவ‌ர‌னின் முக‌பாவனைக‌ள் அவ்வ‌ள‌வு ந‌ன்றாக‌ இருக்காது. :)The part I liked most:இர‌ண்டாவ‌து ஸ்டான்ஸாவில் ராஜா த‌டாடியாக‌ பாட‌லின் போக்கையே மாற்றியிருப்பார்."ச‌ரி ச‌ரி பூவாடைக்காற்று ஜ‌ன்ன‌லை சாத்து...உத்த‌ர‌வு தேவி...தொடர்ந்து படிக்கவும் »

ஐ லவ் இளையராஜா -1    
ஆக்கம்: MSV Muthu | March 2, 2009, 1:04 pm | தலைப்புப் பக்கம்

ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும். ஏதோ ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பொறுக்காமல் தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல! :) என்னுடைய அண்ணன் எங்கள் வீட்டில் இருக்கிற எல்லோரது விருப்பப் பாடலையும் கேட்டு அதை ஒரு சீடியில்...தொடர்ந்து படிக்கவும் »

இசை எனும் கலை    
ஆக்கம்: என். சொக்கன் | February 8, 2009, 5:39 am | தலைப்புப் பக்கம்

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி. நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன. ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | February 6, 2009, 12:47 am | தலைப்புப் பக்கம்

இன்னிய அணிபல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »

ஊர்ந்து போகும் தேரு    
ஆக்கம்: என். சொக்கன் | January 17, 2009, 8:50 am | தலைப்புப் பக்கம்

சில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. ’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள். கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக்...தொடர்ந்து படிக்கவும் »

நந்தலாலா - கைவீசி நடக்கற காத்தே - சில்லுன்னு ஒரு பாட்டு    
ஆக்கம்: கைப்புள்ள | January 16, 2009, 12:22 pm | தலைப்புப் பக்கம்

நேத்து சாயந்திரம் நந்தலாலா படத்து ஒலித் தகடு வாங்குனதுலேருந்து இந்த பாட்டை ஒரு 25-30 வாட்டி கேட்டிருப்பேங்க. சில பாடல்களைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இது அந்த மாதிரியான அருமையான ஒரு டூயட் பாட்டு. டூயட் பாட்டுன்னாலும் இது காதல் பாட்டு இல்லை. பெரும்பாலும் இயற்கையை வர்ணிச்சு இருக்கற ஒரு துள்ளலான பாட்டு. நந்தலாலா ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு. மூனு பாட்டை...தொடர்ந்து படிக்கவும் »

Naan Kadavul - Music    
ஆக்கம்: bsubra | January 3, 2009, 4:38 pm | தலைப்புப் பக்கம்

Music Reviews: Milliblog! » Blog Archive » Music review: Naan Kadavul (Tamil - Ilayaraja) ராம் சுரேஷ்: நான் கடவுள்‍ - பாடல் தம்பி: அண்ட பிரம்மாண்ட கோடி அகில பரிபாலனா Movie Previews: ராம் சுரேஷ்: நான் கடவுள் - பாலாவின் விகடன் பேட்டி: “பக்திப் படம் எடுப்பது என் வேலை இல்லை. எவருடைய நம்பிக்கை களையும் காயப்படுத்தக் கூடாது என்பது என் இயல்பு. அந்த அடிப்படை நாகரிகத்தில் நான் எப்போதும் தெளிவா இருக்கேன். இது விளிம்பு நிலை மனிதர்களின்...தொடர்ந்து படிக்கவும் »

நான் கடவுள்‍ - பாடல் விமர்சனம்    
ஆக்கம்: ராம்சுரேஷ் | January 2, 2009, 1:06 pm | தலைப்புப் பக்கம்

கண்ணில் பார்வை - ஷ்ரேயா கோஷல்கண்ணில் பார்வை போனபின்பும்கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்கண்ணிலாத பேதை கண்டால்கனாக்கள் கூட ஒதுங்கும் ஒதுங்கும்கண் தெரியாத ஒரு பெண்ணின் பார்வையில் பதியப்பட்டுள்ள பாடல். அழுதுகொண்டே பாடுவது போல் ஸ்ரேயாவின் குரல், வெண்ணெய் போல் அப்படியே உருகி பாடல் முழுவதும் வழிந்தோடுகிறது. கர்னாட்டிக் மியூசிக் சாயலிலும் உள்ளது.அம்மா உன் பிள்ளை -...தொடர்ந்து படிக்கவும் »

தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை    
ஆக்கம்: ஜீவா (Jeeva Venkataraman) | December 30, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.9. இராம நாடகம்இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!இராகம் : மோகனம்அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

Superhit Songs in Tamil Cinema - 2008 Year in Review    
ஆக்கம்: bsubra | December 29, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

நினைவுகூர்தல்: 1. Tamil Film Songs - Best of 2007 :: திரைப்பட இசை வரிசை 2. 2008 - பேசப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 3. தமிழ்ப்பதிவர்களின் விக்கி, வாக்கெடுப்பு: தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள் தமிழ்ப்பட பாடல் பட்டியல்: என்றும் கேட்கலாம் பத்து ஆழியிலே முக்குளிக்கும் அழகே - தாம் தூம் :: ஹாரிஸ் ஜெயராஜ் - ஹரிச்சரண் சூச்சூ மாரி - பூ :: எஸ் எஸ் குமரன் - மிருதுளா எஸ், பார்த்தசாரதி, ஸ்ரீமதி அனல் மேலே பனித்துளி - வாரணம்...தொடர்ந்து படிக்கவும் »

இளையராஜா - ஐ ஆம் வெரி சாரி!    
ஆக்கம்: SurveySan | December 23, 2008, 6:46 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இளையராஜாவை காணவில்லைன்னு ஒரு பதிவு போட்டிருந்தேன். சமீப காலமாய் ராஜா சார் கிட்டேருந்து பழைய கெத்துடன் ஒரு பாடலும் வராத ஏக்கம்/எரிச்சலில் போடப்பட்ட பொலம்பல் பதிவு அது. ஆனா, ஒவ்வொரு நாளும், ராஜாவின் பழைய பாட்டை கேக்கும்போதெல்லாம், ஒரு குற்ற உணர்வு உள்ளுக்குள்ள குருகுருத்துக்கொண்டே இருக்கும். ஆயிரம் இருந்தாலும், ராஜா நம்ம ராஜா இல்லியா? இப்ப...தொடர்ந்து படிக்கவும் »

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலம்    
ஆக்கம்: கானா பிரபா | December 5, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாக அமைந்த "மனசுக்குள் மத்தாப்பு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் ஆரம்பகாலப் பாடல்களைக் கொண்ட தொகுப்பாக இப்பதிவு அமைகின்றது. ஒரு நட்சத்திர ஹோட்டலின் வாத்தியக் கலைஞராக இருந்த இளைஞர் எஸ்.ஏ.ராஜ்குமார், இயக்குனர்கள் ராபட் ராஜசேகரனின் கண்ணில் படவும் "சின்னப்பூவே மெல்லப்பேசு" திரைப்படத்தின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 6    
ஆக்கம்: நாகார்ஜுனன் | November 26, 2008, 12:01 am | தலைப்புப் பக்கம்

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 4அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5இந்தியாவின் பிரதான செவ்வியல் இசைமரபுகள் இரண்டு - ஹிந்துஸ்தானி என்பது வடநாட்டு மரபு. தென்னாட்டு மரபைக் கர்நாடக இசை என்று...தொடர்ந்து படிக்கவும் »

காணாமல் போன பின்னணி பாடகர்கள்:    
ஆக்கம்: நாடோடி இலக்கியன் | November 25, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

புதிது புதிதாக எத்தனையோ இளமை மற்றும் திறமையான பாடகர்கள் தற்போது பாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இசை ஆர்வலர்களால் மறக்க முடியாத பாடல்களை பாடி தற்போது வாய்ப்புகள் இல்லாமலும் அல்லது முழுநேர பாடகர்களாக இல்லாமல் அவ்வப்போது ஒரு சில பாடல்களை மட்டும் பாடியிருக்கும் சில பின்னணி பாடகர்களை பற்றி ஒரு சிறிய நினைவூட்டல் இப்பதிவு.தீபன் சக்கரவர்த்தி:பழம்பெறும் பாடகரான...தொடர்ந்து படிக்கவும் »

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5    
ஆக்கம்: நாகார்ஜுனன் | November 24, 2008, 12:02 am | தலைப்புப் பக்கம்

இரண்டு ஆண்டுகள் இசைப்பயிற்சியில் கழிந்த போது, சென்னை அமெரிக்கத் தகவல் மையத்தின் உள்ள அருமையான அரங்கத்தில் திடீரென்று என்னைக் கச்சேரி செய்ய அழைத்தார்கள்! அப்போது பாடல்களைக் கற்பதைத் தவிர, ஏற்கனவே கற்றதை சொந்த மன்நிலைக்கேற்றவாறு செழுமைப்படுத்திப் பாடுகிற, மனோ-தர்ம சங்கீதத்தைப் பயின்றுகொண்டிருந்தேன். அதையெல்லாம் சரிவரச் செய்ய முடிகிறதா என்பதை சந்தேகத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »

காணாமல் போன இசையமைப்பாளர்கள்:    
ஆக்கம்: நாடோடி இலக்கியன் | November 22, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளைக்குப் பிறகு வேதம் புதிது படத்தின் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன்.இவ்வளவு அற்புதமான பாடல்களை தந்த இசையமைப்பாளர் தேவேந்திரன் ஏன் பெரிதாக அங்கீகரிக்கப்படவில்லை என்ற எண்ணம் தோன்றியதன் விளைவு இந்த பதிவு."கண்ணுக்குள் நூறு நிலவா","புத்தம் புது ஓலை வரும்"(வேதம் புதிது),"பொங்கியதே காதல் வெள்ளம்"(மண்ணுக்குள் வைரம்) போன்ற அற்புதமான மெலடிகளை தந்த தேவேந்திரன்...தொடர்ந்து படிக்கவும் »

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3    
ஆக்கம்: நாகார்ஜுனன் | November 19, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2டி. விஸ்வநாதன் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சி அளித்தது வாரத்தில் மூன்றுநான்கு முறை. பாடலின் தீவிரம் மற்றும் நீளத்தைப் பொறுத்து இவை அமையும். பிறகு வீட்டுக்குச்சென்று வரிகளை மனனம் செய்து பாடலைச் செழுமைப்படுத்த வேண்டும். அடுத்த பயிற்சி வரும்போது பாடிக்காட்ட வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2    
ஆக்கம்: நாகார்ஜுனன் | November 19, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1ஒரு வழியாக, அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில், தென்னாட்டு இசைக்கான கச்சேரி என்ற வடிவத்தை, அதன் இசைப்பதும் ரசிப்பதுமான வழிமுறைகளை நேரடியாக அறிந்துகொண்டேன். ரசிகர்கள் காலைநீட்டிக்கொண்டு கேட்கலாம். ஓரு மணி நேரம் கழிந்தால், கூர்ந்து கவனிப்பதால் தங்களுக்கு ஏற்படும் அயர்ச்சியைக் கொஞ்ச்ம் தணித்துக்கொள்வதற்காக...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 26 - லாலலா லாலலா லாலலா...!    
ஆக்கம்: கானா பிரபா | November 7, 2008, 8:45 am | தலைப்புப் பக்கம்

ஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர் ராகவேந்தனின் பின்னணி இசை கலந்து வருகின்றது. இந்தப் புதிரில் வரும் ஒலிப்பகிர்வு லாலலா லாலலா லாலலா என்று வருகின்ற ஒரு பின்னணிபாடல் மெட்டோடு கலக்கும் பின்னணி இசை இது. இப்படம் குறித்து அதிக உபகுறிப்புக்கள் தேவை இல்லை என்றாலும் கொடுக்கின்றேன். இப்படத்தின் கதாசிரியர் பின்னாளில் பிரபலமான இயக்குனரார். இப்படத்தின்...தொடர்ந்து படிக்கவும் »

* இசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி?    
ஆக்கம்: ILA | October 16, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்ச காலம் இந்தத் துறையில் இருந்ததால எனக்கு கொஞ்சம் இதைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருந்தேன்.இசையமைப்பாளருங்க எல்லாம் முழுமையான இசை தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாது. அதாவது எல்லா வாத்தியத்துக்கும் Notes எழுதி குடுக்க. கார்த்திக் ராஜாவுக்குதான் தமிழ்ல அதிகமான வாத்தியத்துக்கு குறிப்பு(Notes) எழுதித்தர முடியும். இசையமைப்பாளருங்களே குறிப்ப எழுதிக் குடுத்தாதான் அவுங்க...தொடர்ந்து படிக்கவும் »


மாமாமியா!! ஹாலிவுட் முயுசிகல்!!    
ஆக்கம்: நா.கண்ணன் | October 12, 2008, 11:17 pm | தலைப்புப் பக்கம்

நாற்பது வயதிற்கு மேலுள்ளோர்க்கு ஓர் திரைப்படத்தை சமர்ப்பணம் செய்திருப்பது சாதாரண விஷயமில்லை. உங்களில் எத்தனை பேர் 70களில் ABBA குழுவின் இசையில் சொக்கிப்போனதுண்டு? யாராவது கையைத் தூக்கினால் இப்படம் உங்களுக்கு சமர்ப்பணம் என்று கொள்ளலாம்! படமா இது? கவிதை!! இசையில், படப்பிடிப்பில், நடிப்பில், படத்தின் இடத்தேர்வில்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். மெரில்ஸ்டிரீப் சாகும்வரை...தொடர்ந்து படிக்கவும் »

"முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | September 21, 2008, 7:44 am | தலைப்புப் பக்கம்

"முதல் மரியாதை" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா உலக ரசிகர்களால் மரியாதைக்குரிய படமாகப் போற்றப்படுகின்றது. 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, தீபன், ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தனர். 1986 ஆம் ஆண்டில் தேசிய...தொடர்ந்து படிக்கவும் »

708. நீ மழை நான் இலை    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | September 18, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

நீ மழை நான் இலைஇதற்கு மேல் உறவில்லைவிடை கொடு போகிறேன்விடை கொடு போகிறேன்ஈரமாய் வாழ்கிறேன் நீ மழை நான் இலைஇதற்கு மேல் உறவில்லைவிடை கொடு போகிறேன்ஈரமாய் வாழ்கிறேன் நீ யாரோ நான் யாரோகண் தோன்றி கண் காண கண்ணீரோஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓஹோஹோஹோ.....படம்: ஆயுத எழுத்துஇசை: AR ரஹ்மான்பாடியவர்:...தொடர்ந்து படிக்கவும் »

boneyM-ஒரு இசை அட்டகாசம் -வீடியோ    
ஆக்கம்: சின்னக்குட்டி | September 17, 2008, 4:49 pm | தலைப்புப் பக்கம்

இந்த boneyM திரை இசை படம் 70 களில் யாழில் திரையிட்ட போது...தொடர்ந்து படிக்கவும் »

ரிச்சர்ட் ரைட் - பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்    
ஆக்கம்: admin | September 16, 2008, 2:40 pm | தலைப்புப் பக்கம்

ராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின் துணையுடன் பிங் ஃப்ளாய்ட் 1965 தொடக்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு இசையின் உச்சத்தையும் இரைச்சலின் துவக்கத்தையும் வேறுபடுத்திப்...தொடர்ந்து படிக்கவும் »

சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்    
ஆக்கம்: சரவணகுமரன் | September 15, 2008, 11:52 am | தலைப்புப் பக்கம்

மருதாணிநல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்!)."வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...காதல்...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்புதிர் 20 - எட்டு மெட்டுக்கள் போட்டு அதில் இரண்டு கலந்த பாட்ட...    
ஆக்கம்: கானா பிரபா | September 5, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

வழக்கமா நீங்க இளையராஜாவின் பாடல்களை வைத்தே அதிகம் புதிர் போடுவதால் உபகுறிப்புக்களின் வேலை மிச்சமாகுது" என்று என் தன்மானத்தைச் சீண்டிய ஜீ.ராவின் கூற்றை மாற்ற இந்த வாரம் ஒரு பழைய பாட்டு ஆனால் கேட்டால் இன்றும் இனிக்கும் பாட்டைப் பற்றிய புதிர்.கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்துக்காக அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும்,...தொடர்ந்து படிக்கவும் »

"காலாபாணி (சிறைச்சாலை)" - பின்னணி இசைத்தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | September 1, 2008, 9:33 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட புதிரின் விடையாக வந்தது "காலாபாணி" என்று மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகி பின்னர் தாணுவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த தியாகிகளை அந்தமானின் காலாபாணசிறைச்சாலையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்திய வரலாற்றைப் படம் பிடித்தது...தொடர்ந்து படிக்கவும் »

மழை வருது ....மழை வருது...    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 27, 2008, 11:57 am | தலைப்புப் பக்கம்

நேயர்கள் இன்று பார்க்க விருப்பது மனதைத்தொடும் மழைப் பாடல்கள். மழைக்காலம் நான் மிகவும் விரும்பும் காலம்.மழைத்துளி விழுந்த உடன் கிளர்ந்து எழும்அந்த மண்ணின் வாசம்..கார்கால மேகத்தைக் கண்டதும் என் மனம்எப்போதும் மயில் போல் துள்ளும்.மழை பெய்து முடிந்ததும் சைக்கிளில் செல்லமிகவும் பிடிக்கும். மழை, சூடாக மசாலா டீ, கொறிக்க ஏதாவதுஇப்படி கொண்டாடுவேன் மழைக்காலத்தை.வாருங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

Kaitlyn Maher - இன்னா அழகு, இன்னா பேச்சு, இன்னா கொரலு, கலக்கராபா!    
ஆக்கம்: SurveySan | August 20, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

"America got talent"னு ஒரு ப்ரோக்ராம இங்க போடராங்க. இந்த வருஷம், இந்த போட்டியில் பங்கு பெறும் Kaitlyn செம கலக்கல்.பாட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி, "Are you from Newyork?"னு கேட்டதுக்கு"I am from America"ன்னு அந்தப் பொண்ணு சொல்லுது கேளுங்க. தொடர்ந்து வரும் பாடலும், ஜூப்பர்.~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~பி.கு: என் முந்தைய ரூம் போட்டு யோசிக்கராங்க பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு...தொடர்ந்து படிக்கவும் »

தாளம் : உலகெங்கும் - 2    
ஆக்கம்: admin | August 18, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

உலகமெங்கும் பல சுற்று சுற்றிவந்த பிறகு என் மனதைக் கவர்ந்த முழுமையான தாள வாத்திய மன்னர் நீல் பீர்ட் என்றுதான் தோன்றுகிறது. நீல் பீர்ட் (Neil Peart, pronounced as Peert not Pert), ஹெவி மெட்டல், ப்ரொக்ரெஸ்ஸிவ் ராக் இரண்டிலும் ஜொலிக்கும் ரஷ் (Rush) என்ற இசைக்குழுவின் ட்ரம்ஸ் கலைஞர், ரஷ்ஷின் ஆஸ்தான பாடலாசிரியரும்கூட. சமகால ட்ரம்ஸ் கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் என்று பிற ட்ரம்ஸ் கலைஞர்களால், இசை...தொடர்ந்து படிக்கவும் »

"ஆண்பாவம்" பின்னணி இசைத்தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | August 18, 2008, 9:48 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிரில் இடம்பெற்ற புதிராக ஆண்பாவம் திரைப்படக் கேள்வி அமைந்திருந்தது. இயக்குனர் ஆர் பாண்டியராஜனின் "கன்னி ராசி" என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவதாக இயக்கிய படமே ஆண்பாவம். 1985 வெளியாகி வெள்ளி விழாக் கண்ட படம் இது. படத்தில் பெரும்பாலான நடிகர்களுக்கு அவர்களின் பெயரிலேயே இப்படத்தின் கதாபாத்திரப் பெயரும் அமைந்திருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »

"சுப்ரமணியபுரம்" இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஒலிப்பேட்டி    
ஆக்கம்: கானா பிரபா | August 11, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிர் 16 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அந்த இசை நினைவுபடுத்தும் பாட்டு எது என்று கேட்டிருந்தேன். பெரும்பாலானவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் "கண்கள் இரண்டால்" என்ற பாடலைக் கண்டுபிடித்துச் சொல்லியிருந்தீர்கள். இன்றைய பதிவில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் ஒலிப்பேட்டி...தொடர்ந்து படிக்கவும் »

யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்    
ஆக்கம்: சதீஷ் | August 8, 2008, 4:37 pm | தலைப்புப் பக்கம்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை. “எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” - நந்தா “நம்ம காட்டுல மழ பெய்யுது” - பட்டியல் “அறியாத வயசு, புரியாத...தொடர்ந்து படிக்கவும் »

தாளம் - உலகெங்கும் - 1    
ஆக்கம்: admin | August 4, 2008, 11:14 am | தலைப்புப் பக்கம்

சிறு வயதிலிருந்தே எனக்குத் தாள வாத்தியங்களின் மீது வேறெல்லா இசையையும் விட ஈர்ப்பு அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தெருக்கோடியிலிருக்கும் மிருதங்கங்கம் கணேசய்யர் அவரது சிஷ்யகோடிகளுக்குச் சொல்லிக் கொடுக்கையில் அவருக்கு அடுத்த வீட்டு மாமாவிடம் ஓசி ஹிண்டு வாங்கி படித்துக்கொண்டே தாளத்தில் மயங்கிக் கிடப்பேன். கணேசய்யருக்குக் காசுகொடுத்து படிப்பிக்க என்...தொடர்ந்து படிக்கவும் »

"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | August 3, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

கடந்த றேடியோஸ்புதிரில் கடலோரக் கவிதைகள் திரைப்படத்தின் பின்னணி இசை கொடுத்து அப்படத்தின் கதாசிரியர் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை இயக்குனர் ராஜேஷ்வர். கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்காக என்ற கே.சோமசுந்தரேஷ்வர் என்ற பெயரில் அவர் கதாசிரியராக இருந்தார். இப்படத்திற்கு வசனம்: ஆர்.செல்வராஜ். இயக்கம்: பாரதிராஜா. இயக்குனர் ராஜேஷ்வர் அவள் அப்படித் தான்,...தொடர்ந்து படிக்கவும் »

சிலம்பொலியும், குற்றாலச் சாரலும் - ஓர் இனிய இசைவிருந்து    
ஆக்கம்: kannan | July 31, 2008, 1:10 pm | தலைப்புப் பக்கம்

சிலப்பதிகாரம் என்று இசைத்தட்டில் பெயர் பார்த்ததும், என்ன, என்று ஆர்வமாய்ப் எடுத்தேன். அட்டையில் மருத்துவர் ராமதாசுவின் படம் பார்த்ததும், வேண்டாம், வைத்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றியது - மருத்துவர் அய்யாவின் சாதி அரசியல் மீது உள்ள வெறுப்பில்.  ஆனாலும், பின்னட்டையில் பாடகர்கள் தேர்வில சாதிச்சாயம் தெரியாததால், ஆர்வம் மேலோங்க சிலப்பதிகாரத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »

‘ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!’    
ஆக்கம்: ஜெயமோகன் | July 26, 2008, 2:10 am | தலைப்புப் பக்கம்

நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஷாஜி எழுதிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம்செய்துகொண்டிருந்தேன், உயிர்மை இதழுக்காக. வானொலி பற்றிய கட்டுரை. என்னுடைய வானொலி நினைவுகள் எழுந்தன. எங்கள் வீட்டில் வானொலி இல்லை. அப்பாவுக்கு அந்தமாதிரி நாகரீகமெல்லாம் பிடிக்காது– பிள்ளைகளை ‘அட்சர விரோதிகள்’ ஆக்கிவிடும் என்ற எண்ணம். ஓரளவு சர்¢தான் போலிருக்கிறது. நாங்கள் மூவருமே எதையாவது படித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

சாமான் நிக்காலோ, சரோசா!    
ஆக்கம்: bmurali80 | July 25, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

தோஸ்த்து படா தோஸ்த்து -யுவன் இசைக்கும் நட்புக்கான பாடல்கள் காத்திருந்து கேட்கலாம். பாடலின் முதல் இரு வரிகள் புரியவில்லை. அது என்ன “சவுத்…”? கோடான கோடி - மத்திய ஆசிய மற்றும் ஆரபு நாட்டின் இசை கலவை. தீ பிடிக்க தீ பிடிக்க பாடலை நினைவூட்டுகிறது. ஆட்டம் போடக்கூடிய பாடல். ரைனாவின் குரல் வசீகரம். நிமிர்ந்து நில் - ஓய் ஓய் ஓய் நிமிர்ந்து நில், இந்த பாடல் வகையை யுவன் வல்லவன்...தொடர்ந்து படிக்கவும் »

சத்தியம்: ஒரு குற்றபத்திரிக்கை (இசை விமர்சனம்)    
ஆக்கம்: bmurali80 | July 23, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

கடவுளே கடவுளே என்னை ஒரு பாரபட்சமற்றவனா ஹெரிஸ் ஜெயராஜின் சத்தியம் பாடல்களை கேட்கவிடு. கடவுள்: ”நானே ஹெரிஸ திருத்த முடியாமா முழிக்கறேன்”. நான்: “மன்னிக்கனும் சாமி”. ஆசைக்குமளவிருக்கு! சத்தியம் இசை வெளியீடு வழியா பத்து வருடங்களா ஒரே தாளம், ஒரே விதமானா பாடல் வகை (genere), ஒரே விதமான பாடல் வரிகள், ஒரே விதமான பாடகர்கள் என்று நம்மை மலரும் நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறார்...தொடர்ந்து படிக்கவும் »

"குணா" பின்னணி இசைத்தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | July 21, 2008, 8:48 am | தலைப்புப் பக்கம்

றேடியோஸ்புதிர் 13, மிகவும் சுலபமாக அமைந்து விட்டது. பலர் குணா என்ற சரியான விடையோ வந்திருந்தீர்கள். இந்தப் பதிவு குணா திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பாக அமைகின்றது. கமல்ஹாசன், புதுமுகம் ரோஷிணி, ரேகா, வரலஷ்மி ஆகியோர் நடித்த இந்தத் திரைப்படம் சாப்ஜானின் கதை, திரைக்கதையிலும் சந்தான பாரதி இயக்கத்திலும் வெளிவந்திருந்தது. குணா படத்துக்கான லொகேஷன் தேடியபோது கமலின்...தொடர்ந்து படிக்கவும் »

கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்    
ஆக்கம்: சதீஷ் | July 18, 2008, 3:18 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் - சுப்ரமணியபுரம். பாடல் : கண்கள் இரண்டால். ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம். எனக்குப் பிடித்த பாடல் - என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »

இன்னும் கொஞ்சம் ரசிக்கலாம்    
ஆக்கம்: para | July 17, 2008, 8:59 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நான் வியந்து ரசித்த இரண்டு கட்டுரைகள் இணையத்தில் எழுதப்பட்டவை. ஒன்று அருள் செல்வனுடையது. அடுத்தது ஆசாத் எழுதியது. அருளின் நோக்கம் அறிவியல். அதை எளிமையாகப் புரியவைப்பது. அதற்கு ஒரு திரைப்பாடலை அவர் உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அதன் மூலம் மெய்யியல் புரிதலுக்கு அஸ்திவாரமிடுகிறார். ஆசாத்துக்கு சினிமா ரசனை என்பது தவிர வேறு நோக்கங்கள் இல்லை. இருவரின்...தொடர்ந்து படிக்கவும் »

சக்கரகட்டி இனிக்கல    
ஆக்கம்: bmurali80 | July 16, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

சென்ற மூன்று மாதங்களில், சக்கரகட்டி, ஏ.அர். ரஹமானின் மூன்றாவது பாடல் ஆல்பம். வழக்கமா எ.அர்.அர் வருஷத்துக்கு நாலு இந்திய படங்களுக்கு இசையமைத்தால் பெரிய விஷயம். இப்ப எ.அர்.அர் பொட்டு தாக்குரார். இசைய விமர்சனம் செய்ய சற்று தயங்கினேன். இதற்கு முக்கிய காரணம் ஏ.அர்.அர் இசையமைத்தாலே அதற்கு ஈடு இணையில்லை என்று எண்ணும் ரசிகர் கூட்டம். அப்படி பயந்தா வேலைக்கு ஆகுமா என்ன? சரி நேரா...தொடர்ந்து படிக்கவும் »

புன்னகையில் மின்சாரம் - கலையும் வடிவும்.    
ஆக்கம்: அருள் செல்வன் கந்தசுவாமி | July 15, 2008, 6:01 pm | தலைப்புப் பக்கம்

(அன்றாட மெய்யியல் - 2)---------------- 1. கலையை யாரும் வெற்றிடத்தில் வடிப்பதில்லை. நம் நாட்டுக்கலைகள் முழுவதும் கூட்டுக்கலைகள்தாம். அல்லது கலைஞன் தன்னைத் தானே முன்னிறுத்தாதவைதாம். பாடல்கள், ஆடல்கள், சிற்பம், ஓவியம் என. பலர் சேர்ந்தோ அல்லது பெயரோ சொல்லாமலோ வடித்து விட்டுப்போன கலை நிகழ்வுகளே தமிழ் வரலாறு. இயல் சொல்லும் எழுத்து மட்டும் தனியானது. அதுவும் எழுத்து அல்ல....தொடர்ந்து படிக்கவும் »

சக்கரகட்டி இசை மதிப்பீடு    
ஆக்கம்: ஸ்ருசல் | July 15, 2008, 9:12 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு (அதாவது சிவாஜிக்குப் பிறகு), ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழில் ஓர் திரைப்படம். படத்தின் பாடல்கள் சென்ற வாரம் சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இன்னும் இசைத்தட்டு கைக்கு வரவில்லை. பாடல்களை, ஏதோ ஒரு புண்ணியவான், யூடியூப்பில் வெளியிட்டிருந்தார். அதனை நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்தார். அவருக்கு நன்றி. இருவரின் புண்ணியத்திலும் சனி,...தொடர்ந்து படிக்கவும் »

குசேலன் : பாடல்கள் எப்படி ? விரிவான அலசல்.    
ஆக்கம்: சேவியர் | July 2, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

1. பேரின்பப் பேச்சுக்காரா “சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா” ஒரு காலத்தின் பட்டி தொட்டியெல்லாம் பட்டையைக் கிளப்பிய பாடல். அதே போல எழுத முயன்ற யுகபாரதியின் பாடல் இது. பேரின்பப் பேச்சுக்காரன் – எனும் வார்த்தைப் பிரயோகம் வசீகரித்த அளவுக்கு பாடல் வசீகரிக்கவில்லை. துதி பாடும் வளையத்துக்குள் விழுந்து விட்ட நண்பர் யுகபாரதியைக் கேட்டால் காலத்தின் கட்டாயம் என சொல்லக்...தொடர்ந்து படிக்கவும் »

அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு    
ஆக்கம்: கானா பிரபா | June 23, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

றேடியோஸ்புதிர் 10 இல் ஒரு பின்னணி இசை கொடுத்து அப்படத்தைக் கேட்டிருந்தேன். அபூர்வ சகோதரர்கள் என்று சரியான விடையை ஒரு சில நேயர்கள் தவிரப் பலர் அளித்திருந்தீர்கள். அப்படத்தின் வசனகர்த்தா கிரேசி மோகன். அபூர்வ சகோதரர்கள், இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் (கெளரவ தோற்றம்) , சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் MP3 கிடங்குகள்    
ஆக்கம்: noreply@blogger.com (PKP) | June 15, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

தமிழ் MP3 இசை கோப்புகள் இலவசமாக இறக்கத்துக்கு இன்றைக்கு பரவலாக இணையம் எங்கும் கிடைக்கின்றது. கூகிளில் intitle:"index of" "parent directory" tamil எனத் தேடினால் அவன் "நேரடி" இறக்க வசதியுள்ள தளங்களை வரிசையிட்டு காட்டுகின்றான்.உதாரணத்துக்கு இங்கே...தொடர்ந்து படிக்கவும் »

மாயா அருட்பிரகாசம்...    
ஆக்கம்: டி.அருள் எழிலன் | June 4, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

"என்னால் இதை நம்பவே முடியவில்லை.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கைச் செலவுக்கு காசில்லாமல் எனது நண்பர்களிடம் நான் கடன் வாங்கியிருக்கிறேன்.பிடித்தமான ஒரு இசையரங்கிற்கு செல்ல வேண்டுமானால் அதற்கும் கடன்தான்.நான் கஷ்டப்படும் போது யாரெல்லாம் கடன் கொடுத்து உதவினார்களோ அவர்கள் எல்லாம் இன்று மேற்குலகில் என் வளர்ச்சியைக் கண்டு சந்தோசமடைகிறார்கள்" என தனது பாப்பிசையின்...தொடர்ந்து படிக்கவும் »

அதா - இசை விமர்சனம்    
ஆக்கம்: bmurali80 | June 3, 2008, 11:45 pm | தலைப்புப் பக்கம்

2002 ஆம் ஆண்டு தொடங்கி 2008 இல் வெளிவந்த இசை வெளியீடு அதா (ஹிந்தி). இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான். பாடல்கள் பத்து. பத்தும், பத்து விதம். என் மூளைக்கு எட்டின வரைக்கும் யாராலும் ஒவ்வொரு பாடலையும் இவ்வளவு வகை படுத்தி செய்ய முடியுமா என்று தெரியலை. ஒரு வரி விமர்சனம் கும்சும் கும்சும் - சிவாஜியின் சாஹானா ஹவா சுன் ஹவா - சொன்னாலும் கேட்பதில்லை, காதல் வைரஸ் இஷ்க் அதா (ஆண், பெண்) - வரிகள்...தொடர்ந்து படிக்கவும் »

அமர்க்களமான இசையமைப்பாளர் பரத்வாஜ்    
ஆக்கம்: கானா பிரபா | May 27, 2008, 10:44 am | தலைப்புப் பக்கம்

சரணுடன் இணைந்து கூட்டணி அமைத்து காதல் மன்னன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பரத்வாஜ் அடிப்படையில் ஒரு பட்டயக் கணக்கறிஞர். காதல் மன்னன் முதல் தொடர்ந்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ரோஜா வனம், பாண்டவர் பூமி, ஆட்டோ கிராப் என்று இவரின் பெரும்பாலான படங்களில் தனித்துவமான இவரிசையை ரசித்திருக்கின்றேன். பல படங்களின் மண்டலின் இசைக்கருவிக்கு முக்கியத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »

பூங்குலலி    
ஆக்கம்: para | May 26, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கவனிப்பது அங்கே இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களை. சுகமான ராகம், இசைக்குயில், மெல்லிசை மேகங்கள், இளராகங்கள் என்கிற பெயரில் எட்டுக்கு நாலு அளவில் பேனர் கட்டி ஒரு டிரம் செட், ஒரு யாமஹா கீபோர்ட், ஒரு செட் தபேலா, ஒரு ஜால்ரா, ஒரு கிடார் மற்றும் இரண்டு மைக்குகளுடன் எப்போதும் செக், செக் செக் என்று உதட்டுக்குள் சொல்லிக்கொண்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

சில சினிமாப்பாடல்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | May 25, 2008, 6:16 am | தலைப்புப் பக்கம்

 பாலு மகேந்திராவின் மாணவரான நண்பர் சுரேஷ் கண்ணன் அபூர்வ திரைப்பாடல்கள் என்ற ஒரு எம்.பி3 பதிவை அளித்தார். எம்.கெ.தியாக ராஜ பாகவதர் முதல் இளையராஜா வரையிலான இசையமைப்பாளர்களின் அடிக்கடி கிடைக்காத பாடல்கள். மீண்டும் மீண்டும் அதைக் கேட்கிறேன். பல பாடல்களை தொடர்ச்சியாக பலமுறை. கேட்க ஆரம்பித்தால் இரவெல்லாம் கேட்பது என் வழக்கம். நான் நல்ல இசை ரசிகனல்ல. ஒலிப்பிம்பங்களை...தொடர்ந்து படிக்கவும் »

பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்    
ஆக்கம்: மலைநாடான் | May 22, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடாLyrics music & sung by Varna.Rameswaran.mp3 - by Varna.Rameswaranசென்று வா...தொடர்ந்து படிக்கவும் »

தமிழிசை - புது அனுபவம்    
ஆக்கம்: செயபால் | May 20, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

கர்நாடக சங்கீதம் எங்களில் பலருக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம், பல பாடகர்கள் இலங்கை வானொலியில், ஒரு குறிப்பிட்ட சேவையில், "தரி னி னினி னானா னானா" என்று இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பதால் தொடங்கிய சில வினாடிகளில் வானொலியை நிப்பாட்டி விட்டு அப்பால் போய் விடுவோம், அதன் பின் எப்படிச் சங்கீதம் எங்களுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

சுடர்களின் நடனம்    
ஆக்கம்: aravind | May 20, 2008, 4:11 am | தலைப்புப் பக்கம்

மார்கோ அவ்வளவு சாதாரணமாக அழுபவன் அல்ல. ஒரு காதல் நிறைவேறாமல் போன பின்னும் அவன் அழவில்லை. லிடியாவைச் சந்தித்த சில நாட்களே ஆகிறது. அவள் காளைச் சண்டை வீராங்கனை. அபாயகரமான விதியுடன் கழிகிற ஒவ்வொரு நாளுடன் இருவருக்குள்ளான காதலும் பெருகுகிறது. நாளை பற்றியே நினைவே ஏதோ ஒரு பயத்தை தருகிறது. வீட்டில் பாம்பு புகுந்ததில் தொடங்கி எல்லாமே கெட்ட சகுணங்களாக தெரிகின்றன. ஒரு நல்ல...தொடர்ந்து படிக்கவும் »

இளையராஜா-தமிழ் மண்ணின் இசை......    
ஆக்கம்: மணி.செந்தில்குமார் | May 19, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

வணக்கம் தோழர்களே....சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த...தொடர்ந்து படிக்கவும் »

Legends: John Lennon (The Beatles)    
ஆக்கம்: பூனைக்குட்டி | May 15, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

“இசை எங்கேர்ந்து பிறக்குது தெரியுமா?” கேட்டதும் ஒரு கையை தூக்கி “எனக்கு தெரியும் சார்...” சொல்லிட்டு ஒரு மாதிரியா அசடு வழிஞ்சிக்கிட்டே, “ஆர்மோனியப் பெட்டியிலேர்ந்து சார்...” வடிவேலு சொல்வது போல் ஒரு காமடிக் காட்சி இருக்கும் கிங் திரைப்படத்தில்.நான் இதிலிருந்து அதிகம் வேறுபட்டவன் கிடையாது. வடிவேலு ஆர்மோனியம்னு சொன்னதை வேண்டுமானால் நான் கீபோர்ட்ன்னோ இல்லை...தொடர்ந்து படிக்கவும் »

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்    
ஆக்கம்: ஸ்ருசல் | May 13, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

1. ஒரு நாளுக்குள் எத்தனை கனவுபடம்: யாரடி நீ மோகினிபாடியவர்: கார்த்திக், ரீட்டாஇசை: யுவன் சங்கர் ராஜாசெல்வராகவனின் தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு, அவரது உதவியாளரின் இயக்கத்தில் வெளியாகியுள்ளது. கார்த்திக் நன்றாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இப்பாடல் இந்த ஆல்பத்தில் தனித்து நிற்கிறது. ஆனால் ஆரம்பத்தில் இப்படத்தில் இடம்...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரத்தில் காப்பியடிச்ச பாட்டு...    
ஆக்கம்: இரண்டாம் சொக்கன்...! | May 13, 2008, 2:22 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் தொன்னூறுகளில் வந்த மளையாள பட பாடலொன்றின் அப்பட்டமான தழுவல். பாடலை கேட்டுவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...இது தற்செயலா இல்லை அப்பட்டமான திருட்டா என....ம்ஹும்....இளையராஜா, ரஹ்மான், வித்யாசாகர் என உலகத்தரம் வாய்ந்த இசையமைப்பாளர்களெல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது இத்தனை செலவு செய்து...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் பாடல்கள்- வீடியோ துணுக்குகள்    
ஆக்கம்: பிரேம்ஜி | April 28, 2008, 3:49 am | தலைப்புப் பக்கம்

இரண்டாவது பாடலில் பாட்டியாக வருவது...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - பாடல்கள்    
ஆக்கம்: Lazy | April 28, 2008, 12:21 am | தலைப்புப் பக்கம்

மாற்றம் இல்லாததால் ஏமாற்றம். முகுந்தா முகுந்தாவில் மட்டும் சாதானா சர்கம் தெரிகிறார். இந்தப் பாடலில் கடைசியாக மொட்டைப் பாட்டியாக பாடும் கமலின் குரல் அவ்வளவு சிலாக்கியமில்லை. கல்லை மட்டும் பார்த்தால் பாடலின் கடைசி நிமிடத்தில் ஹரிஹரன், பாடலுக்கு ஜஸ்டிஸ் செய்கிறார். இப்படி எல்லாம் தேடித் தேடி நல்ல இடங்களை கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. கமல் பாடும் ஓ சனம்...தொடர்ந்து படிக்கவும் »

ஏமாற்றமளிக்கும் தசாவதாரம் பாடல்கள் - விமர்சனம்    
ஆக்கம்: கிரி | April 27, 2008, 9:58 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வருட உழைப்பு, நடிப்புகளின் மொத்த உருவம் கமல்ஹாசன், கமர்ஷியல் இயக்குனர், விளம்பரத்தின் மறு பெயர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், உலகிலேயே முதல் முறையாக ஒருவர் 10 வேடங்கள், படத்தயாரிப்பு செலவு 80 கோடி, பாடல் வெளியீட்டிற்கு மட்டும் 10 கோடி செலவு என்று செய்திகள் கூறுகின்றன (கொஞ்சம் குறைவு இருக்கலாம்), ஜாக்கிசான் பாடல் வெளியிடல் என்று பிரம்மாண்டகளுடன் அனைவரின்...தொடர்ந்து படிக்கவும் »

மலையாளத்தின் திரையிசை விருதுகள்    
ஆக்கம்: கானா பிரபா | April 23, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் (எம்.ஜெயசந்திரன்), சிறந்த பாடகி (ஸ்வேதா - சுஜாதா மகள்), சிறந்த பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகிய விருதுகள் நிவேத்யம் என்ற ஒரே படத்தில் கிடைத்தது. அப்படத்தில் இடம்பெற்ற அந்த இனிய பாடல் இதோ (ஏதோவொரு 80களில் வந்த தமிழ்ப்பாட்டு வாடை அடிக்குது, இருக்கட்டும்)கூடவே சிறந்த மலையாளத்தின் சிறந்த திரைப்படம் முதல் பல்வேறு விருதுகளை சூர்யா...தொடர்ந்து படிக்கவும் »

காப்பி வித் ஹர்ரிஸ் ஜெயராஜ்    
ஆக்கம்: .:: மை ஃபிரண்ட் ::. | April 22, 2008, 9:17 am | தலைப்புப் பக்கம்

போன பதிவில் சந்தோஷ் சுப்ரமணியம் பாடல் விமர்சனம் எழுதலாம்ன்னுதாங்க பதிவெழுத தொடங்கினேன். அது என்னமோ தெரியல வேற ஒரு ட்ராக் தேடி ஓடிடுச்சு. நோ ப்ராப்ளம். it's all in the game.இன்னைக்கு நான் எழுத போற மேட்டர் நீங்க படிக்கும் முன்னே, இந்த இரண்டு க்ளிப்பிங்ஸும் பாருங்க. இப்போ தெரிஞ்சிருக்கும் இன்று எதை பற்றி எழுத போறேன்னு. எப்பவும் தேவாதானுங்க கிங்! கிங் ஆஃப் காப்பி. காப்பி வித் அனுக்கே...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் Vs உதித் நாராயண்    
ஆக்கம்: ambi | April 21, 2008, 11:26 am | தலைப்புப் பக்கம்

எந்த மொழி பாட்டானாலும் அந்த பாடல் ஹிட்டாக மூன்றே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்னு அந்த பாடல் வரிகள், இரண்டு பாடல் வரிகளை அமுக்காத இசை, மூணு அந்த பாடலை பாடிய பாடகரின் தனிதிறமை. நான்காவதாய் படமாக்கிய விதத்தையும், அதில் நடித்த நடிக/ நடிகையரின் திறமையை சேர்த்து கொள்ளலாம், என்றாலும் அது இரண்டாம் பட்சமே! என்ன தான் கவிஞர் சிறப்பாக எழுதினாலும், இசை கருவிகள் அந்த வரிகளை...தொடர்ந்து படிக்கவும் »

குருவி- பாடல்கள்    
ஆக்கம்: ILA(a)இளா | April 17, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து.1. Happy New Year -சுனிதி செளகான், Dr Burn மற்றும் யோகி.பிநல்ல குத்துபாட்ட எப்படி கெடுக்கனும்னு யோகி குழுகிட்டே கேட்டு தெரிஞ்சிக்கனும். அருமையா பாடி இருக்காங்க சுனிதி. கரகாட்டகாரன் பாட்டுக்கு ஈடா வர வேண்டியது,...தொடர்ந்து படிக்கவும் »

பலான பலான    
ஆக்கம்: subbudu@kirukkal.com | April 17, 2008, 1:34 pm | தலைப்புப் பக்கம்

இப்படி எங்காவது 'பலான' என்ற வார்த்தையை பார்த்தாலும்/கேட்டாலும், எதோ ஒரு கவர்ச்சி நடிகை எசகுபிசகாக உட்கார்ந்து கொண்டு கண்களில் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்து கண் அடிப்பது போல் தோன்றுகிறதென்றால் நீங்கள் பலான விஷயத்தில் பழுத்துப் போனவர். இந்த 'பலான' என்பது தமிழில் உள்ள ஒரு வினோதமான, பிரபலமான சொல். காரணம் எந்த அகராதியிலும் இல்லாத, ஆனால் வழக்கத்தில் மட்டும் இருக்கும் பல...தொடர்ந்து படிக்கவும் »

ஆனந்தம்!!! ஆனந்தம்!! ஆனந்தமே!!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | April 16, 2008, 1:39 pm | தலைப்புப் பக்கம்

அருமையானப் பாடல். உங்களுக்கும் பிடிச்சிருக்கு தானே?இது மாதிரி ஒரு வைபவம் எங்கள் வீட்டிலே. என் அம்மம்மா, தாத்தாவிற்கு சதாபிஷேகம். (80 வயது முடிவடைவதை கொண்டாடுகிறோம்.)அம்மம்மா, தாத்தா உங்களை வாழ்த்த...தொடர்ந்து படிக்கவும் »

இன்று திருமணவாழ்வில் புகும் சிறப்பு நேயர் "அய்யனார்"    
ஆக்கம்: கானா பிரபா | April 16, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

"தனிமையின் சிறகுகளை விடுவித்துக் கொண்டது காலம் பாலை மணலுதறி பசுஞ்சமவெளியில் தடம் பதிக்கிறேன் நெடுகிலும் நின்று கொண்டிருக்கும் துளிர்க்காத மரங்களிலெல்லாம் நேரடியாய்ப் பூக்களைப் பிரசவிக்கின்றன நானொரு பெண்ணின் விரல்களை இறுகப் பற்றிக்கொள்கிறேன்......." மேற்கண்ட கவிதையையே தன் திருமணச் செய்தியில் கொடுத்திருந்த நம்ம நண்பர் அய்யனார் விஸ்வநாதன் இன்று கல்பனாவை தன்...தொடர்ந்து படிக்கவும் »

பாடகர் கமல்ஹாசன்....!    
ஆக்கம்: கானா பிரபா | April 12, 2008, 2:16 pm | தலைப்புப் பக்கம்

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று...தொடர்ந்து படிக்கவும் »

எம்.பி.த்ரி மை எம்.பி.த்ரி    
ஆக்கம்: கயல்விழி முத்துலெட்சுமி | April 12, 2008, 12:42 pm | தலைப்புப் பக்கம்

எந்த ஒரு பாடலோ ஒலியோ நீங்கள் கணினியில் கேட்பதை அப்படியே பதிவு செய்து எம்பித்ரி ஃபார்மட்டில் சேமித்துக்கொள்ளலாம்.. அதற்கு நல்ல தொரு சாப்ட்வேர் mp3mymp3 2.0 சர்வேசனின் ஜனகணமண பாடல் பாடவாங்க என்ற அழைப்பின் பதிவில் அவர் இந்த சாப்ட்வேர் பற்றி சொல்லி இருந்தார். அதன்பிறகு கொஞ்சநாட்கள் வெறுமே பாட்டை பாடி அப்படியே எம்பித்ரி ஃபார்மட்டில் சேமிக்கசெய்ய மட்டுமே பயன்படுத்தி...தொடர்ந்து படிக்கவும் »

இளைய நிலா மெட்டு ஹிந்தியில் இத்தனை பாட்டு    
ஆக்கம்: கானா பிரபா | April 10, 2008, 9:39 am | தலைப்புப் பக்கம்

"இளைய நிலா பொழிகிறதே" பாடல் இசைஞானி இளையராஜாவின் முத்துக்களில் விலக்கமுடியாதது. இந்தப் பாடல் இடம்பெற்ற "பயணங்கள் முடிவதில்லை" படமே ஒருவருடம் ஓடி வெற்றி கண்டது. குறித்த இந்தப்பாடலில் வரும் கிட்டார் இசையில் சிறப்பை சிலாகிக்காதோர் இல்லையெனலாம். இந்தப் பாடலின் மெட்டு ஹிந்திக்கும் தாவியிருந்தது. சிங்களத்திலும் கேட்டதாக ஞாபகம். இங்கே பாருங்கள் இந்த மெட்டு சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் "துளசி கோபால்"    
ஆக்கம்: கானா பிரபா | April 6, 2008, 1:09 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீராமின் விருப்பத்தைத் தாங்கி முத்தான ஐந்து பாடல்களோடு கடந்த வார சிறப்பு நேயர் விருப்பம் அமைந்திருந்தது. அவர் கேட்ட பாடல்கள் வரும்போது அவர் இலங்கையை விட்டு குடும்பமாக ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார். புது இடம் அவர்களுக்கு செளகரிகமான வாழ்வைக் கொடுக்கட்டும். சரி, இனி இந்த வார நேயர் பகுதிக்குச் செல்வோம். இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கவிருப்பவர்...தொடர்ந்து படிக்கவும் »

பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!    
ஆக்கம்: இரா. வசந்த குமார். | April 3, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

சம்போ.. சிவ சம்போ.. சிவ சம்போ..சிவ சம்போ..!ஜகமே தந்திரம்... சுகமே மந்திரம்... மனிதன் எந்திரம்... சிவ சம்போ..!நெஞ்சம் ஆலயம்... நினைவே தேவதை.. தினமும் நாடகம்... சிவ சம்போ..!மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்!மறுநாளை எண்ணாதே.. இன்னாளே பொன்னாளாம்.!பல்லாக்கைத் தூக்காதே... பல்லாக்கில் நீ ஏறு!உன் ஆயுள் தொண்ணூறு... எந்நாளும் பதினாறு! (ஜகமே தந்திரம்)அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள்...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் "ஸ்ரீராம்"    
ஆக்கம்: கானா பிரபா | March 28, 2008, 2:25 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் சினேகிதியின் வாரமாக அமைந்து இனிய பாடல்களோடு மகிழ்வித்தது. தொடர்ந்தும் உங்கள் ஆதரவுக்கு நன்றி கூறி இந்த வார சிறப்பு நேயர் விருந்துக்குச் செல்வோம். முத்தான ஐந்து பாடல்களுக்கு சுருக்கமான விளக்கம் தந்து இந்த வார சிறப்பு நேயராக வந்து சிறப்பிக்கின்றார் பதிவர் ஸ்ரீராம். இவர் பொதுவாகவே பதிவுகள் எழுதுவது அரிது, ஆனால் என்ன? வட்டியும் முதலுமாக இவரின் துணைவி...தொடர்ந்து படிக்கவும் »

ஏழு சுரங்கள் - 4    
ஆக்கம்: இராம.கி | March 24, 2008, 9:53 am | தலைப்புப் பக்கம்

ஆறாவது சுரம் தைவதம். இதைத் தெய்வதம் என்று சொல்லித் தெய்வத்தோடு தொடுக்கும் சங்கத விளக்கம் தட்டையாகவே தெரிகிறது. அது எப்படி இந்தச் சுரம் மட்டும் தெய்வம் நாடுவதாய் இருக்க முடியும்? மற்றவை எல்லாம் தெய்வத்தால் ஏற்காதவையா? "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய்......" என்றெல்லாம் பழம் பஞ்சுரப் பண்ணில், சுந்தரர் திருவாரூர் இறைவனை அழைத்திருக்கும் போது, எல்லாச் சுரமும் தெய்வத்...தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் "சினேகிதி"    
ஆக்கம்: கானா பிரபா | March 23, 2008, 8:12 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் ரிஷான் ஷெரிப்பின் தேர்வுகளோடு வந்த சிறப்பான நேயர் விருந்து பலரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது போல, அரைச்செஞ்சரி பின்னூட்டங்கள் வரை வந்து அவரைக் கெளரவித்தது. போதாதற்கு அவரின் தனிமடல் விபரம் கேட்டு விண்ணப்பங்கள் வேறு ;-) இந்த வாரம் வந்திருக்கும் சிறப்பு நேயர், எங்கட யாழ்ப்பாணத்துத் தங்கச்சி, உளவியல் நிபுணி "சினேகிதி". நான் வலைபதிய வந்த காலத்தில் எங்கட...தொடர்ந்து படிக்கவும் »

ஏழு சுரங்கள் - 3    
ஆக்கம்: இராம.கி | March 23, 2008, 5:48 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ச் சுரப்பெயர்கள் காரணப் பெயர்களாய் இருப்பதை முந்தையப் பகுதியிற் பார்த்தோம். இனி, சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் சங்கதப் பெயர்களின் விளக்கத்தை தமிழ் வழியே பெற முயலுவோம். முன்பே சொன்னது போல் பல சங்கதச் சொற்களின் தொடக்கம் பாகதத்துள் இருக்கிறது. அதே பொழுதில், சம கால மொழிகளான பாகதத்திற்கும் பழந்தமிழுக்கும் உறவு இருந்திருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் "சினேகிதி"    
ஆக்கம்: கானா பிரபா | March 23, 2008, 2:22 am | தலைப்புப் பக்கம்

கடந்த வாரம் ரிஷான் ஷெரிப்பின் தேர்வுகளோடு வந்த சிறப்பான நேயர் விருந்து பலரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது போல, அரைச்செஞ்சரி பின்னூட்டங்கள் வரை வந்து அவரைக் கெளரவித்தது. போதாதற்கு அவரின் தனிமடல் விபரம் கேட்டு விண்ணப்பங்கள் வேறு ;-) இந்த வாரம் வந்திருக்கும் சிறப்பு நேயர், எங்கட யாழ்ப்பாணத்துத் தங்கச்சி, உளவியல் நிபுணி "சினேகிதி". நான் வலைபதிய வந்த காலத்தில் எங்கட...தொடர்ந்து படிக்கவும் »

ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!    
ஆக்கம்: சினேகிதி | March 20, 2008, 10:24 pm | தலைப்புப் பக்கம்

இப்ப என் மனசில ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளையும் ஞாபகங்களையும் இந்த ஒரு பதிவுக்குள்ள அடக்க முடியுமா என்று தெரியேல்ல இருந்தாலும் எழுதுறதுதான் மனசை லேசாக்கும் என்றதால எழுதத் தொடங்கிட்டன்.அவளுக்கு பெயர் ஜீவிதா. முதலாம் வகுப்பில இருந்து 5ம் வகுப்பு வரைக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில படிச்சிட்டு பிறகு ஆறாம் வகுப்புக்கு இன்னொரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »

குத்துப்பாட்டு , இரு கடிதங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | March 20, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

எனக்குப் பிடித்த பத்து குத்துப் பாட்டுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்….உங்களுக்கும் இவை பிடிக்குமா?     1. குறுக்கு பாதையிலே, நிறுத்தி வழிமறிச்சி…. 2. மன்னார்குடி கலகலக்க, மதுர ஜில்லா மணமணக்க…. 3. கேட்டேளே அங்கே, அத பார்த்தேளா இங்கே…. 4. அண்டங்காக்கா கொண்டக்காரி…… 5. ஜனவரி மாதம் முன் பனிவிழும் நேரம்…. 6. ஆல்தோட்ட பூபதி நானடா.. 7. ஆழ்வார் பேட்ட ஆண்டவா.. வேட்டிய போட்டு தாண்டவா… 8....தொடர்ந்து படிக்கவும் »

ஏழு சுரங்கள் - 2    
ஆக்கம்: இராம.கி | March 19, 2008, 8:55 am | தலைப்புப் பக்கம்

சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயர்களுக்கும் உள்ள உறவைச் சட்டென்று ஆய்வின்றிச் சொல்ல முடியாது இருக்கிறது. சட்ஜம் என்பது குரல் என்றும் (இப்படிச் சொல்வது மேவுதிப் போக்கு - majority trend), இல்லையில்லை சட்ஜம் என்பது இளியே என்றும் (இப்படிச் சொல்வது நுணதிப் போக்கு - minority...தொடர்ந்து படிக்கவும் »

கத்தாழ கண்ணாலே    
ஆக்கம்: ஜெயமோகன் | March 18, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்

ஒரு குத்துப்பாட்டு கேட்டேன். ‘கத்தாழக் கண்ணாலே குத்தாதே நீ என்னெ..’. நல்ல பாடல். அதன் வரிகள் குத்துப்பாடல்களுக்கு உண்டான வழக்கமான வார்த்தைகளினால் உருவானவை. னால் அதன் மெட்டமைப்பிலும் இசைச்சேர்ப்பிலும் ஒலிப்பதிவிலும் உள்ள நுட்பம் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கவைத்தது. மூன்று மெட்டுகள் ஒன்றுடன் ஒன்று தழுவிச்செல்லும் பாடல் இது. பாடலின் மெட்டுக்கு அப்பால் ஷெனாய் ஒலி...தொடர்ந்து படிக்கவும் »

ஏழு சுரங்கள் - 1    
ஆக்கம்: இராம.கி | March 18, 2008, 6:25 am | தலைப்புப் பக்கம்

தொய்வில்லா நாரை ஒரு கவட்டையிற் கட்டி, வலிந்து இழுத்தால் சுர்ர்ர்.... என்று அதிருமே, அந்த அதிர்ச்சி ஒரு மொழிசாரா ஒலிக்குறிப்பு; (நார் என்ற சொல் கூட நுர்>நர்.... என்னும் ஒலிக்குறிப்பில் கிளைத்தது தான்.) இது போன்று வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் ஒலிக்குறிப்புகளைக் கொண்டு இயல் மொழிகள், தம் இயல்புக்கு ஏற்ப, ஒலிப் பொருளை உணர்த்தி, விதப்பான சொற்களை அமைத்திருக்கின்றன. நாரை...தொடர்ந்து படிக்கவும் »