மாற்று! » பதிவர்கள்

ve.sabanayagam

இரா.முருகனின் 'அரசூர் வம்சம்'    
March 16, 2009, 4:11 am | தலைப்புப் பக்கம்

1948ல் இந்தியாவில் திரையிடப்பட்ட ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லட்' படத்துக்கு 'ஆனந்த விகடனி'ல் விமர்சனம் எழுதிய பேராசிரியர் கல்கி அவர்கள் இப்படி எழுதினார்: 'அற்புதமான படம். ஒரு தடவை பார்த்தவர்கள் என்றும் மறக்க முடியாதபடி மனதில் ஆழ்ந்து பதிந்துவிடும் படம். மனித குலத்தின் மகோன்ன தத்தையும் நீசத்தனத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் படம். மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம். .    
June 21, 2008, 1:58 am | தலைப்புப் பக்கம்

1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 24. ந.பிச்சமூர்த்தி.    
June 15, 2008, 3:45 am | தலைப்புப் பக்கம்

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 23.. 'அகஸ்தியன்'    
June 15, 2008, 3:43 am | தலைப்புப் பக்கம்

( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.)1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22. எம்.டி.வாசுதேவன் நாயர்.    
June 15, 2008, 3:40 am | தலைப்புப் பக்கம்

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21. மகாகவி பாரதியார்    
June 15, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22 . எம்.டி.வாசுதேவன் நாயர்.    
May 22, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21 - மகாகவி பாரதியார்    
May 11, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 20 - அசோகமித்திரன்    
May 4, 2008, 6:28 am | தலைப்புப் பக்கம்

1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு மிகவும் அவசியம்.3. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

'எழுத்துக்கலை பற்றி இவர்கள்'- 19 -கி.ராஜநாராயணன்    
April 23, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ்.ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிட கடைசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்து க்கலை பற்றி இவர்கள்...........18 - வாசந்தி    
April 10, 2008, 1:29 am | தலைப்புப் பக்கம்

1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பது மட்டும் போதாது - நீங்கள் சொல்வதை வாசகர்கள் நம்ப வேண்டும் - உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். - அவர்களிடையே இத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலை பற்றி இவர்கள் - (17 ) வி.ஆர்.எம்.செட்டியார்.    
April 1, 2008, 11:54 pm | தலைப்புப் பக்கம்

1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள், சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற்பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில் சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும்.2. வாழ்க்கையைக் கண்டு அதைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 15.-ஜெயமோகன்.    
February 20, 2008, 11:53 pm | தலைப்புப் பக்கம்

1. சிறுகதை என்பது ஒரு அசைவை மட்டுமே பதிவு செய்யும் காமிரா ஷாட் போல. ஒரே ஒரு அசைவுக்குள் எவ்வளவோ சொல்லலாம். ஆனால் ஒரு அசைவு மட்டுமே.2. நாவல் என்பது எவ்வளவு வேண்டுமானாலும் நீட்டக் கூடிய காமிரா ஷாட்.3. சிறுகதைக்கு கட்டுக் கோப்பு இருக்க வேண்டும் என்பது அதன் செவ்வியல் விதி. அதை மாற்ற முயன்று எழுதப்பட்ட சிறுகதைகளில் கலைவெற்றிகள் பல உண்டு ஆனால் அவை மெல்ல மெல்ல சிறுகதையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்