மாற்று! » பதிவர்கள்

kuruvikal

இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது - டப்ளின் மக்கள் தீர்ப்பாயம்    
January 18, 2010, 7:23 am | தலைப்புப் பக்கம்

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு ஓர் இனப்படுகொலையினை செய்துள்ளது என டப்ளினில் கூடிய மக்கள் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிங்கள இராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

செயற்கை உயிரியை தயாரிக்கும் நிலையை மனிதன் நெருங்குகிறான்.    
August 24, 2009, 8:10 am | தலைப்புப் பக்கம்

செயற்கையான முறையில் மனிதன் தான் விரும்பிய வடிவில் பரம்பரை அலகுகளை வடிவமைத்து அதன் படி செயற்படக் கூடிய தானே, இனப்பெருக்கம் செய்யக் கூடிய உயிரினங்களை அல்லது உயிர்க் கலங்களை தயாரிக்கும் நிலையை மனிதன் எட்டிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள்.ஒரு பக்ரீரியாவின் பரம்பரை அலகுத் தொகுதியை (genome) மதுவம் (yeast) எனப்படும் ஒரு கல பங்கசுவில் செலுத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

வால்நட்சத்திரத்தில் உயிரின மூலக்கூறு கண்டுபிடிப்பு.    
August 18, 2009, 3:18 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் வால்நட்சத்திரம் ஒன்றில் இருந்து பெறப்பட்ட மாதிரியை ஆராய்ந்ததில் அதில் கிளைசின் (glycine) எனும் அமினோ அமிலம் இருந்ததை இனங்கண்டுள்ளனர்.அமினோ அமிலங்கள் உயிரினங்களை ஆக்கியுள்ள பெரிய இரசாயன மூலக்கூறுகளில் புரத மூலக் கூறுகளை ஆக்குவதில் பங்களிக்கும் ஒரு வகை எளிமையான உயிர் இரசாயனக் கூறுகள் ஆகும்.மனிதன் போன்ற உயிரினங்களில் மொத்தம் 20 அமினோ அமிலங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.    
August 6, 2009, 10:41 am | தலைப்புப் பக்கம்

உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடி...    
August 3, 2009, 7:14 am | தலைப்புப் பக்கம்

மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

சூரியப் படுக்கைகள் (Tanning Beds) ஆசனிக் போன்று ஆபத்தானவை.    
July 29, 2009, 10:06 pm | தலைப்புப் பக்கம்

சூரியப்படுக்கைகள் (sun beds அல்லது Tanning Beds) என்று அழைக்கப்படும் புறஊதாக் கதிர்ப்புக்கள் (ultraviolet) கொண்டு ஆக்கப்பட்டுள்ள படுக்கைகள் உடல் நலத்துக்கு தீங்கானவை என்றும் அவை ஆசனிக் மற்றும் நச்சு வாயுக்களுக்கு (Mustard Gas) இணையாக மனிதரை சிறுகச் சிறுகக் கொல்லும் இயல்புடையன என்றும் குறிப்பாக தோல் மற்றும் கண் புற்றுநோய்களின் பெருக்கத்துக்கு காரணமாக இருக்கின்றன என்றும் சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி மோதப் போகிறது.    
June 11, 2009, 2:31 pm | தலைப்புப் பக்கம்

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கிடையே மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள், கோள்களின் மற்றும் அவற்றின் சுற்றுப்பாதைகளின் எதிர்கால பரினாமத்தன்மைகள் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பூமியோடு செவ்வாய் அல்லது வெள்ளி கோள் மோதச் சந்தர்ப்பம் உள்ளதாகவும் ஆனால் அது இன்றோ நாளையோ நடக்கப் போவதில்லை என்றும் அது நடக்க குறைந்தது இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகள் எடுக்கலாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ஆவர்த்தன அட்டவணையில் சேரும் புதிய மூலகம்.    
June 10, 2009, 9:24 pm | தலைப்புப் பக்கம்

இரசாயனவியலில் ஆவர்த்தன அட்டவணை (Periodic table) பற்றி அறியாதவர்கள் அரிது என்றே கூறலாம். அந்தளவுக்கு அத்துறையில் குறித்த அட்டவணை செல்வாக்குச் செலுத்துகிறது.1869 இல் ரஷ்சிய விஞ்ஞானி Dmitri Mendeleev அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்ந்து வரும் ஆவர்த்தன அட்டவணையில் இன்று கிட்டத்தட்ட 117 தொடக்கம் 118 வரையான மூலகங்கள் அவற்றின் இரசாயன இயல்புகளின் அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

செக்ஸ் வேண்டாம் எறும்புகள்.    
April 15, 2009, 7:02 am | தலைப்புப் பக்கம்

அமேசன் பகுதியில் வாழும் ஒரு இன (Mycocepurus smithii) எறும்புகள் "செக்ஸ்" மூல இனப் பெருக்கத்தை முற்றாக கைவிட்டு இயற்கையான குளோனிங் முறை மூலம் எப்போதும் ராணி எறும்பில் இருந்து பெண் எறும்புகளையே உருவாக்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உயிரினக் கூர்ப்பில் இது அசாதாரணமாக விளங்குவதாக இருப்பினும் "செக்ஸ்" இன்றிய இனப்பெருக்கத்தில் நன்மைகளோடு தீமைகளும் அமைகின்றன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

15 ஆண்டுகள் சோடி மாறாது வாழும் பறவைகள்.    
April 12, 2009, 11:34 am | தலைப்புப் பக்கம்

உயிரினக்காப்பாளர்களால் கடந்த 15 ஆண்டுகளாக இனங்காணப்பட்டு வரும் 20 ஆண்டு கால வயதுடைய பெண் osprey (வல்லூறு வகைப் பறவைகள்) பறவை.கடந்த 15 ஆண்டுகளாக சோடி மாற்றமின்றி,ஆண்டு தோறும் கிட்டத்தட்ட 3000 மைல்கள் தாண்டி ஆபிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்து பிரித்தானிய ஸ்கொட்லாண்ட் பகுதிக்கு வந்து முட்டையிட்டு வரும் osprey வகை சோடிப் பறவைகள் இம்முறையும் அங்கு வந்து 53 வது முட்டையை வழமை போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செயற்கை முறையில் ஓ நெகட்டிவ் இரத்தம்.    
March 24, 2009, 8:45 am | தலைப்புப் பக்கம்

இரத்தம் என்பது மருத்துவ உலகில் இன்றியமையாத ஒன்று. குறிப்பாக சத்திர சிகிச்சைகளின் போது இவற்றின் தேவை அதிகம். இப்போது வரை மக்கள் வழங்கும் குருதிக் கொடை அல்லது இரத்த தானத்தை நம்பியே இரத்த வங்கிகளும் மருத்துவ உலகும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் ஏதேனும் மாறுதலை உருவாக்க முடியுமா என்று சிந்தித்த பிரித்தானிய ஆய்வாளர்கள் IVF முறையில் உருவாக்கப்படும் மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

வளிமண்டலத்தின் உச்சியில் சில உயிரினங்கள்.    
March 19, 2009, 8:07 am | தலைப்புப் பக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, 26.7 மில்லியன் கன அடிகள் கனவளவுள்ள பலூன் ஒன்றை பூமியின் காற்றுமண்டல உச்சிக்கு (upper stratosphere) அனுப்பி நடத்திய ஆய்வுகளில் இருந்து புறஊதாக் கதிர்ப்புக்களை (UV radiation) தாங்கி வாழக்கூடிய 3 புதிய இன பக்ரீரிய (bacteria) வகை நுண்ணங்கிகளைக் கண்டுபிடித்துள்ளது.குறித்த பலூன் பூமியின் வளிமண்டலத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 20...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மரக்கறிகளை உண்போருக்கு புற்றுநோய் குறைவு.    
March 16, 2009, 11:50 am | தலைப்புப் பக்கம்

தாவர (மரக்கறி) வகை உணவுகளை உண்போருக்கு புற்றுநோய்களின் தாக்கம் மாமிச உணவுகளை உண்பவர்களை விடக் குறைவென்று பிரித்தானியாவில் 52,700 க்கும் மேற்பட்ட 20 வயதுக்கும் 89 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள், பெண்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.ஆனால் வழமைக்கு மாறாக, முன்னைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டதற்கு மாறாக தாவர உணவுகளை உண்போர்கள் மத்தியிலும் சிவப்பு இறைச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நனோ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை.    
March 16, 2009, 6:57 am | தலைப்புப் பக்கம்

சத்திர சிகிச்சை மூலமாகக் கூட குணப்படுத்த முடியாத புற்றுநோய் தாக்கத்தை நனோ தொழில்நுட்பத்தை பாவித்து குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எலிகளில் வெற்றியளித்துள்ள இந்த பரிசோதனையின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கலங்களுக்குள் நனோ மூலக்கூறுகள் மூலம் குறிப்பிட்ட சில மரபணு அலகுகளை கட்டி வைத்து செலுத்தி அவை உருவாக்கும் புரதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நுட்பம்

அமெரிக்க - ரஷ்சிய செய்மதிகள் மோதி வெடித்தன.    
February 12, 2009, 7:28 am | தலைப்புப் பக்கம்

விண்வெளியில் பூமிக்கு மேலே (சைபீரியாவுக்கு மேலே) கிட்டத்தட்ட 800 கிலோமீற்றர்கள் உயரத்தில் சுமார் 560 கிலோ எடையுடைய அமெரிக்க தொலைத்தொடர்புச் செய்மதியும் (1997 இல் ஏவப்பட்டது) 950 கிலோ, ரஷ்சிய இயங்காத நிலை இராணுவச் செய்மதியும் (1993 இல் ஏவப்பட்டது) உச்ச வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதி வெடித்துச் சிதறியுள்ளன.அதனால் கிளர்ந்த முகில் போன்ற தூசிகள் விண்வெளி எங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

எமது அகிலத்தொகுதிக்கான கருந்துவாரம் கண்டுபிடிப்பு.    
December 10, 2008, 7:09 am | தலைப்புப் பக்கம்

எமது பூமி உட்பட்ட கோள்களும் பல நட்சத்திரங்களும் அடங்கும் எமது அகிலத் தொகுதி ( galaxy) க்குரிய கருந்துவாரம் (Black hole) ஜேர்மனிய வானியலாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கருந்துவாரம் பூமியில் இருந்து 27,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கிறது.சிலி நாட்டில் நிறுவப்பட்டுள்ள the European Southern Observatory இனைப் பாவித்து 16 ஆண்டுகளாக செய்யப்பட்ட விண்ணியல் ஆய்வில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது.    
December 6, 2008, 6:33 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

உயர்மதிநுட்பம் உள்ள ஆண்கள் சிறப்பான வளமுள்ள விந்துகளை உருவாக்குகின்றனர...    
December 5, 2008, 11:25 pm | தலைப்புப் பக்கம்

மதிநுட்பம் நிறைந்த ஆண்கள் சிறப்பான வளமுள்ள (விரைவாக நீந்திச் செல்லக் கூடிய) விந்துகளை உருவாக்குகின்றனர் என்று பிரித்தானிய ஆய்வாளர்கள் முன்னைய வியட்நாம் போரில் பணியாற்றிய அமெரிக்கப் படைவீரர்கள் உட்பட 425 பேர் மத்தியில் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர்.இவ்விரண்டு இயல்புகளையும் (மதிநுட்பம் மற்றும் விந்தின் தரம்) தீர்மானிப்பதில் பொதுவான மரபணு அலகுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

கடவுளின் துகள் தேடிப் பரிசோதனை உபகரணம் விபத்தால் சேதம்.    
December 5, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

இவ்வாண்டின் இறுதிக்காலாண்டின் முற்பகுதியில் இரண்டு புரோத்தன் கற்றைகளை தனித்தனியே எதிர் எதிர் திசைகளில் அதி உயர்வேகத்தில் வலம் மற்றும் இடஞ்சுழியாக சுழற்றி வெற்றி காணப்பட்டதாகச் சொல்லப்பட்ட பேரண்டப் பெருவெடிப்புக்கு சற்றுப் பின்னான சூழலை உருவாக்கும் அல்லது கடவுளித் துகள் தேடும் பரிசோதனையின் போது அங்கு கையாளப்பட்ட Large Hadron Collider (LHC)இல் கீலியம் வாயுக் கசிவினால் சுமார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நிலவை நோக்கிய இந்தியப் பயணம் ஆரம்பம்.    
October 20, 2008, 12:27 pm | தலைப்புப் பக்கம்

இந்திய விண்கலத்தின் பயணப்பாதை.வரும் புதன்கிழமை (22-10-2008) நிலவுக்கு செலுத்தப்படவுள்ள இந்திய ராக்கெட்டுக்கான கவுன்ட்-டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.இந்த 52 மணி நேர கவுண்ட்-டவுனின் இறுதியில் புதன்கிழமை 1,380 கிலோ எடையுள்ள சந்தராயன்-1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி-சி 11 ராக்கெட் விண்ணில் பாயும்.ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து இந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.    
October 17, 2008, 9:14 pm | தலைப்புப் பக்கம்

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »

மாத்திரைகளால் மூளைச் செயற்பாட்டை ஊக்குவிக்கலாம்.    
October 15, 2008, 4:50 am | தலைப்புப் பக்கம்

பரிந்துரைக்கப்பட்டும் Ritalin (methylphenidate) போன்ற அதிக துடிப்புள்ள சிறுவர்கள் மத்தியில் கற்றல் திறனை அதிகரிக்க தயாரிக்கப்படும் (a drug designed to treat hyperactive children - to maximise their learning power)மாத்திரை மற்றும் Provigil மாத்திரைகளைப் பாவிப்பதால் மூளையின் செயற்பாடுகள் மற்றும் ஞாபக சக்தி ( focus, concentration or memory) ஊக்கமடைவதாக பல்கலைக்கழக மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு

உலகின் மிகப் பழமையான உயிரி கண்டுபிடிப்பு.    
October 10, 2008, 9:15 pm | தலைப்புப் பக்கம்

தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை கொடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பூமி மேற்பரப்பில் இருந்து 2.8 கிலோமீற்றர்கள் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ள உருளை வடிவமான Desulforudis audaxviator என்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

WWW. க்கு வயது 15.    
April 30, 2008, 9:47 am | தலைப்புப் பக்கம்

www. ஐ கண்டறிந்து அதன் மூலம் இணைக்கப்படும் இணையத்தளங்களூடு தரவுகளை பகிர்வதை உலகுக்கு அறிமுகப்படுத்திய Sir Tim Berners-Lee. நாம் எல்லாம் இன்று இணைய உலகில் சஞ்சரிக்கவும் எம்மை அடையாளமிடவும் பாவிக்க உதவும் உலக வலைப்பின்னலுக்கான இணைய இணைப்புக் குறியீடான world wide web (www.)யும் இணையத்தையும் (internet) இணையத்தளப் பாவனையும் (web site) ஒருங்கிணைத்து பொது உலகுகப் பாவனைக்காக வெளியிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பூமிக்காக ஒரு மணி நேரம் இருளில் வாழ்ந்து பழகுவோமா..! (Earth Hour Aware...    
March 29, 2008, 10:18 am | தலைப்புப் பக்கம்

29 மார்ச் 2008 ஆகிய இன்று பூமி மணித்தியால நாள். இந்த நாளில் இரவு 8:00 மணி தொடக்கம் இரவு 9:00 வரையான ஒரு மணித்தியால காலப்பகுதியில் நீங்கள் வாழுமிடமெங்கும் இரவு விளக்குகளை நிறுத்தி சக்தியை சேமிக்க வேண்டிய அவசியத்தை உலகுக்கு உணர்த்தும் தினமாகும்.மின் சக்தி உட்பட்ட சக்திகளை உருவாக்க பெருமளவு சுவட்டு எரிபொருட்கள் (உயிர்த்திணிவு காபன் சார் எரிபொருட்கள்) நேரடியாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் நிகழ்ச்சிகள்

'கணணி விளையாட்டுகளாலும் குழந்தைகளுக்கு ஆபத்து உண்டு' - ஆய்வு    
March 27, 2008, 10:21 pm | தலைப்புப் பக்கம்

கணினியில் குழந்தைகள் விளையாட்டுகளினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டின்படி, புதிய தொழில்நுட்பங்கள் வியக்கத்தக்க வாய்ப்புகளை குழந்தைகளுக்கு வழங்கினாலும், டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள் பற்றியும் பெற்றோர் அறிந்துவைத்துக்கொள்ளுதல் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அந்தாட்டிக்கா பனி விரைந்து உருகிவருகிறது.    
March 26, 2008, 7:57 am | தலைப்புப் பக்கம்

பூமியின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் பனிப்படிவுகள் அண்மைக்கால பூமி வெப்பமுறுதல் ஏற்படுத்திய சூழல் வெப்ப அதிகரிப்பால் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட விரைந்து உருகி வருவதல் உலகில் பல சிக்கல்களைத் தோன்றிவித்து வருகின்றது.அந்த வகையில் அண்மையில் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்களைக் கொண்டு செய்யப்பட்ட அவதானிப்புக்களின் படி அந்தாட்டிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கூண்டோடு செத்து மடியும் தேனிக்கள்.    
March 25, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் இருக்கின்ற தேனிக்களெல்லாம் அண்மைக்காலமாக ஒட்டு மொத்தமாக கூட்டத்தோடு பறந்து சென்று செத்து மடிகின்றன. இந்தத் தேனிக்கூட்டம் அப்படியே கூண்டோடு செத்து மடிவதற்கான காரணம் என்ன என்பதை அறிய நிறைய பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். திடீரென தமது கூட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லும் தேனிக்கள் அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மிக மிகப் பழைய நட்சத்திர வெடிப்பு தற்போதே பூமியில் உணரப்படுகிறது.    
March 22, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

அகிலத்தின் (universe)தற்போது வரையான ஆயுள் காலம் அரைவாசியைக் கடந்த போது நிகழ்ந்த பெரியதொரு நட்சத்திர வெடிப்பின் வாயிலாகப் பிறந்ததாகக் கருதப்படும் கதிர்ப்புகள் நாசாவின் செயற்கைக்கோள் ஒன்றினால் அவதானிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 7.5 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள இந்த வெடிப்பு தற்போதுதான் பூமியில் உணரப்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் போது கிளம்பிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

மெதேன் மற்றும் நீராவியுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு.    
March 19, 2008, 10:17 pm | தலைப்புப் பக்கம்

எமது பூமியில் இருந்து கிட்டத்தட்ட 63 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திரம் ஒன்றை மிக நெருங்கிய பாதையில் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும், எமது சூரியக் குடும்பத்தில் உள்ள வியாழன் கோளை ஒத்த பருமனுடைய கோளின் வளிமண்டலத்தில் மெதேன் மற்றும் நீராவி போன்ற காபன் சார் உயிரின உற்பத்திக்கு அடிப்படையான இராசாயனக் கூறுகள் இருப்பதை விண்ணியல் ஆய்வாளர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

எறும்புகள் ஒற்றுமையின் கூட்றுறவின் சின்னமா.. இல்லவே இல்லை.    
March 12, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்

உலகில் கூட்டுச் செயற்பாடுக்கு உதாரணமாகப் பேசப்படும் எறும்புகள் உண்மையில் அப்படியன்று என்று மிகச் சமீபத்திய விஞ்ஞான ஆய்வென்று தெரிவித்திருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் இருந்து எறும்புகள் மத்தியில் சுயநலமும் துஸ்பிரயோகமும் தவறான வழிகாட்டலும் என்று கூட்டுறவுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

பெண்கள் மனக்கணிதத்தில் பலவீனமானவர்கள்.    
March 3, 2008, 10:24 am | தலைப்புப் பக்கம்

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து பெண்கள் மனக் கணிதத்தில் ஆண்களை விட பலவீனமானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக வயது வந்தவர்களில் நான்குக்கு ஒருவர் மனக்கணக்கில் பலவீனமாக உள்ளனர்.அதுமட்டுமன்றி இள வயதினர் (25 - 34)களில் ஐந்துக்கு ஒருவர் மனக் கணிதத்தில் பலவீனமாக உள்ளனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மனக் கணக்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

குறட்டை இதய நோய்க்கான அறிகுறி..!    
March 1, 2008, 9:45 pm | தலைப்புப் பக்கம்

சிலர் தூக்கத்தின் போது பயங்கரக் குறட்டை விடுவார்கள். அண்மையில் அப்படிப்பட்டவர்கள் 12000 பேரை உள்ளடக்கி ஹங்கேரி நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, தூக்கத்தின் போது அதிக சத்தத்துடன் குறட்டை விடுபவர்களுக்கு 34% அதிகமாக இதய நோயும் 67% அதிகமாக strokes (பக்கவாதம்)க்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறிந்துள்ளனர்.ஆனால் அதிக சத்தமில்லாது குறட்டை விடுபவர்களில் இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தாவர எண்ணெயை எரிபொருளாக கொண்டு முதல் விமானம் பயணம்.    
February 24, 2008, 9:48 pm | தலைப்புப் பக்கம்

தாவர எண்ணெயை ஒரு பகுதி பயன்படுத்திக் கொண்டு வர்த்தக விமானம் ஒன்று முதல் முறையாக ஒரு பயணம் பறந்து முடித்துள்ளது. விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 விமானம் ஒன்று அதன் 4 எந்திரங்களில் ஒன்று தாவர எண்ணெயில் இயங்கிச் செயற்படட்டு லண்டனிலிருந்து அம்ஸ்டர்டாம் சென்று சேர்ந்துள்ளது. தாவர எண்ணெயால் கார்பன் புகை அளவு குறையும், குறையாது என்ற வாதப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

அமெரிக்க செயற்கைக் கோள் அழிப்புடன் தீவிரமாகுமா நட்சத்திரப் போர்..?!    
February 21, 2008, 10:17 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க இராணுவ உளவு செயற்கைக் கோள் அமெரிக்க கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்ட முறை.1980 களில் பெரிதும் பேசப்பட்ட அமெரிக்காவின் நட்சத்திரப் போர்த்திட்டம் (விண்வெளியில் போரிடல்) தற்போது ஏவுகணை தடுப்பு சுவரெழுப்பல் என்ற அமெரிக்க அதிபர் புஷ்ஷின் புதிய உச்சரிப்பின் கீழ் தீவிரமடைய ஆரம்பித்திருக்கிறது.மூன்று கட்ட ஏவுகணையான அமெரிக்க எஸ் எம் 3 ஏவுகணை கடற்படைக் கப்பலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

காற்றில் ஓடும் கார் - காணொளி    
February 13, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

உலகம், சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் பல பாதகமான விளைவுகளை சந்தித்து வரும் வேளையில் அதற்கு மாற்றீடுகளை கண்டறியும் ஆய்வுகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டு வாகனப் பொறியியலாளர் ஒருவர் காற்றை இயக்குபொருளாக்கி காரைச் செலுத்தும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.இலகு எடையுள்ள காபன் இழை கொண்டு தயாரிக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாக...    
January 13, 2008, 9:58 am | தலைப்புப் பக்கம்

தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. இதற்கு ஒளவையார் காலத்துப் பாடல்களே சான்று. "வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்.. நெல்லுயரக் கோன் உயர்வான்" என்று..அன்றே ஒளவை உழவுத்தொழிலின் முக்கியத்துவத்தை அது மக்கள் மத்தியில் கொண்டுள்ள செல்வாக்கை எடுத்துச் சொல்லிவிட்டார்.நெல்லை மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உயிரம்புகள் திரை விமர்சனம்.    
January 12, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

அணு ஆயுதங்கள் போன்ற பேரழிவாயுதங்களைக் கொண்டும் அதி நவீன இராணுவ தொழில்நுட்பங்களாலும் உலகையே அச்சுறுத்தும் வல்லாதிக்க சக்திகளைக் கூட அச்சமடையச் செய்திருக்கும், உலகின் எந்த நாட்டினதும் நேரடி உதவியின்றி தங்கள் தாயக இருப்புக்காகப் போராடும் தமிழீழ மக்கள் தங்கள் போரியல் முறைகளில் ஒன்றாக உயிராயுதத்தைத் தாங்கி இருக்கின்றனர். மானுட ஆத்மாவை பிறருக்காய் உவந்தளிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

ஒளிரும் பன்றிக் குட்டி.    
January 10, 2008, 8:38 am | தலைப்புப் பக்கம்

ஒளிரும் தன்மைக்குரிய புரதத்துக்கான மரபணுவை செலுத்தி இயல்பு மாற்றம் பெற்ற பன்றிக்கு, சாதாரணமாகப் பிறந்த பன்றிக் குட்டியில் ஒளிரும் பகுதிகளை புற ஊதாக் (UV) கதிர்ப்பின் கீழ் பார்வையிடுதல்.சமீபத்திய தசாப்த காலமாக உயிரியல் மரபணு தொழில்நுட்பம் வியத்தகு சாதனைகளைப் படைத்து வருகிறது. அதன் தொடர்சியாக..கடந்த 2006 இல், பச்சை நிற ஒளிர்வைச் செய்யக் கூடிய புரதத்தை உருவாக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

ரஷ்யா 7000 கி.மீ. சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனை.    
January 10, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்

7000 கிலோமீற்றர்கள் சென்று துள்ளியமாக இலக்குகளை தாக்கவல்ல ரஷ்சியாவின் RS-24 ஏவுகணை- பரிசோதனை வெடிப்பின் போது.அண்மையில் அணுகுண்டினை விட சக்தி வாய்ந்த வெற்றிடக் குண்டினை (வாக்கொம் பொம்) வெற்றிகரமாக பரிசோதனைக்கு உட்படுத்திய ரஷ்யா, கடந்த வாரம் 7000ம் கிலோ மீற்றர்கள் சென்று (அதாவது பூமியை சுற்றி வரக்கூடிய தூரம்) இலக்கினை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணை இரண்டை பரிசோதனை செய்துள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மீண்டும் உயிர் பெறும் கபிள்.    
January 9, 2008, 2:36 pm | தலைப்புப் பக்கம்

விண்ணில் சஞ்சரிக்கும் கபிள் தொலைநோக்கி.நாம் இன்று விண்வெளியில் உள்ள கூறுகள் மற்றும் நிகழ்வுகள் பற்றி தெளிவான படங்களோடு விடயங்களை அறிய முடிகிறது என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று விண்வெளியில் சஞ்சரிக்கும் அமெரிக்காவின் நவீன வசதிகள் கொண்ட கபிள் தொலைநோக்கி என்றால் அது மிகையல்ல.கபிள் 1990 இல் விண்ணிற்குச் செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து சுமார் 600...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

புதிதாய் கோள்கள் எப்படிப் பிறக்கின்றன - தொலைநோக்கி துலக்கிய துப்பு.    
January 3, 2008, 8:02 pm | தலைப்புப் பக்கம்

நாம் வாழும் பூமி உட்பட கோள்கள் எப்படிப் பிறக்கின்றன என்பதற்கு சுமார் 8 தொடக்கம் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இளம் நட்சத்திரமொன்றைச் சுற்றி காணப்படும் தூசி வளையத்தில் இருந்து தோன்றிக்கொண்டிருக்கும் கோள் ஒன்றை ஜேர்மனிய வானியலாளர்கள் அவதானித்து அதன் தோற்றம் பற்றியும் விளக்கியுள்ளனர்.இந்தக் கோள் நமது வியாழனைப் போல 10 மடங்கு திணிவால் பெரியது என்பதுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மனிதப் பரம்பரையலகுப் பட்டியல் (Human Genome) - காணொளி    
December 30, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

Human genome என்பது ஒவ்வொரு தனி மனிதனிலும் உள்ள 23 சோடி நிற மூர்த்தங்களில் காணப்படும் பரம்பரை அலகுகளின் பட்டியல் என்பதாகும். மனிதனில் கிட்டத்தட்ட 30,000 பரம்பரை அலகுகள் இனங்காணப்பட்டுள்ளன.முன்னர் எதிர்வு கூறப்பட்டதை விட தனி மனிதர்களிடையே உள்ள பரம்பரை அலகு வேறுபாடென்பது அதிகம் என்று மனிதப் பரம்பரை அலகுப்பட்டியலை இவ்வாண்டில் (2007) இறுதி வடிவிட்ட போது தெரியவந்துள்ளது.மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உலகில் கடல் மட்டம் எதிர்பார்க்கப்பட்டதை விட விரைந்து அதிகரிக்கும்.    
December 18, 2007, 5:22 am | தலைப்புப் பக்கம்

பூமிப் பந்தின் மேற்பரப்பில் சுமார் 75% சமுத்திரத்தால் நிறைந்திருக்கிறது. இந்தப் பூமியில் சுமார் 0.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் மனிதனின் சூழல் மீதான செல்வாக்கு மிகுதியால் சமீப நூற்றாண்டுகளில் பல சூழல் மாற்றங்கள் துரிதப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் காபனீரொசைட்டின் அளவு அதிகரிப்பது உட்பட பல பாதகமான விளைவுகள் ஏற்பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

காச நோய் ( TB ) 5,00,000 வருடங்கள் பழமையானது.    
December 7, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

ஆதியான காசநோய்க்குரிய ஆதாரம் காணப்பட்ட மனிதச் சுவடு.தற்கால மனிதனின் முதன்மை மூதாதையர் சுமார் 5,00,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தனர் என்பது ஆய்வாளர்களின் கணிப்பீடு. அண்மையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இந்தியாவை மலேசியத் தமிழ் மக்கள் நம்பலாமா..??!    
December 2, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

நீண்ட காலமாக சிறுகச் சிறுக வளர்ந்து வரும் மலேசியப் பொருளாதாரம். அதில் தமிழர்களின் பங்களிப்பும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பசியோடு இருந்தல் வாழ்க்கைக் காலத்தை நீடிக்கிறது..?!    
November 26, 2007, 4:46 am | தலைப்புப் பக்கம்

பரிசோதனைக்கு உள்ளான சிறிய வட்டப்புழுக்கள்.நோய்களைத் தீர்க்க என்று செயற்கையான வகையில் பெறப்பட்ட இரசாயன மருந்துகளை உட்கொள்கின்றோம் இல்லையா..! அப்படி உட்கொள்ளும் மருந்துகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

காக்கைக்கு புத்தி அதிகம் தானாம் - கண்டுபிடிப்பு (Video Attached)    
August 17, 2007, 7:59 am | தலைப்புப் பக்கம்

பாட்டி வடை சுட.. காக்கா கொத்திட்டுப் போய் மரத்தில் இருக்க... அதைப் பறிக்க குள்ள நரி திட்டம் போட.. நரியின் திட்டத்தை காக்கா வென்றதாகவும் கதை சொல்வார்கள். பானை ஒன்றின் அடியில் தண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நவீன வாழ்க்கை முறையும் புற்றுநோய் அதிகரிப்பும்.    
August 11, 2007, 7:08 am | தலைப்புப் பக்கம்

நவீன வாழ்க்கை முறை நவ நாகரிகம்.. என்று உலகெங்கும் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலைத்தேய நாடுகளை விட கீழைத்தேய மக்களிடன் பாதுகாப்பான உணவுப் பழக்க வழக்கம் ஒரு காலத்தில் இருந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு