மாற்று! » பதிவர்கள்

kalaiyarasan

ஆண்டு"0",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு    
August 29, 2008, 10:29 pm | தலைப்புப் பக்கம்

பொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: "இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு"....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்    
August 28, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

"உலகப்போர்" , "பனிப்போர்", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. "முதலாம் உலகப்போர்" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது. "இரண்டாம் உலகப்போரில்" ஐரோப்பியரின் காலனி நாடுகளும் பங்குபற்றின(தமது எஜமானர்களுக்காக). அப்போதே ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்    
August 24, 2008, 5:01 pm | தலைப்புப் பக்கம்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்    
August 22, 2008, 8:06 pm | தலைப்புப் பக்கம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அமெரிக்கர்கள் ஆக்கிரமித்த ஆப்கானிஸ்தான் இன்று    
August 20, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க "தேவர்களால்", தலிபான் "அரக்கர்கள்", 7 வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, "விடுதலையடைந்த" ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலமை என்ன? மேற்கத்தைய கல்வி போதிக்கப்படுவதற்காக, நூற்றுக்கணக்கான பாடசாலைகள் எரிக்கப்படுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை படம்பிடிக்க சென்ற ஊடகவியலாளர் சிலர், எரித்த தலிபான்களையும், அப்போது பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?    
August 17, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

ஐரோப்பா மீண்டும் அணுவாயுத பேரழிவை நோக்கி நகர்த்தப்படுகின்றது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அமெரிக்க ஏவுகணைகளை தனது நாட்டினுள் வைத்திருக்க, போலந்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. உக்ரைனும் அதே வழியில் அமெரிக்காவுடன் நெருக்கமாகலாம். 20 ம் நூற்றாண்டு "பனிப்போர்" காலகட்டத்தில் நடந்தது போன்றே, நிகழ்கால பூகோள அரசியல் மாற்றங்கள் உள்ளன. பலமுறை வரலாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்    
August 9, 2008, 3:01 pm | தலைப்புப் பக்கம்

ஒசேத்தியா, லக்சம்பேர்க் அளவே ஆன, ஜோர்ஜியாவில் ஒரு சிறுபான்மைமொழி பேசும் மக்களின் மாநிலம். சோவியத் யூனியன் உடைந்த போது உருவான ஜோர்ஜிய குடியரசில் இருக்க விரும்பாமல், 1991- 1992 யுத்தம் மூலம் பிரிந்து தனியாட்சி நடத்துகின்றது. அன்று முதல் இன்று வரை அண்டை நாடும், வல்லரசுமான ரஷ்யா பாதுகாப்பு வழங்கியதால், 15 வருடங்களுக்கு மேலாக, சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத "தெற்கு-ஒசேத்தியா"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம்    
August 8, 2008, 9:08 pm | தலைப்புப் பக்கம்

லர்னகா விமான நிலையத்தில் வந்திறங்கும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்கள், கண்கள் நிறைய கனவுகளுடன் வருகின்றனர். தாயகத்தில் அவர்களின் வறுமையான குடும்ப பின்னணி, அவர்களை சைப்ரஸ் சென்றாவது திரவியம் தேடி வருமாறு நிர்ப்பந்தித்து இருக்கா விட்டால், “சைப்ரஸ்” என்ற நாட்டின் பெயரையே வாழ்க்கையில் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இலங்கையில் தேசத்தின் பொருளாதாரத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

குவைத் தொழிலாளரின் குமுறும் எரிமலை    
August 6, 2008, 5:49 pm | தலைப்புப் பக்கம்

குவைத்தில் அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்த, தெற்காசிய தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தப் பட்டனர். சில மாதங்களுக்கு முன்னர் துபாயிலும் இது போன்றே தொழிலாளர், தம்மை அடக்க ஏவிவிடப்பட்ட போலீசாரை எதிர்த்து போரிட்டனர். பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அரை பாலைவன வளைகுடா நாடுகள், துரித அபிவிருத்திக்கு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சைப்பிரசில் ஓர் ஈழம்    
July 22, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள்(கிறிஸ்தவம்,இஸ்லாம்), ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்ததன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது? ஐரோப்பாக் கண்டத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தையும் பிரிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

"இனம்" காணப்பட்ட தேசியம்    
June 19, 2008, 6:06 pm | தலைப்புப் பக்கம்

"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா? "Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய",...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்    
May 22, 2008, 11:38 am | தலைப்புப் பக்கம்

"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் சேர், மேடம்" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தென் ஆப்பிரிக்கா: "வெளிநாட்டவர் வேண்டாம்! வேலை வேண்டும்!!"    
May 19, 2008, 7:38 pm | தலைப்புப் பக்கம்

தென் ஆப்பிரிக்காவில், புலம்பெயர்ந்து வாழும் சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாட்டு மக்கள், கலவரத்தில் கொல்லப்பட்டனர். ஜோஹனஸ்பெர்க் நகரில் இடம்பெற்ற வெளிநாட்டவருக்கெதிரான கலவரத்தில், 22பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் பொலிஸ் நிலையங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்தனர். இது நிறவெறி ஆட்சிக்கு பிந்தைய தென்னாப்பிரிக்கவில் இடம் பெற்ற மிக மோசமான கலவரம். மேற்கத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்    
May 18, 2008, 11:02 am | தலைப்புப் பக்கம்

2007 ம் ஆண்டு, நியூசிலாந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் 18 பூர்வீக குடிமக்கள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நோக்கில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்ச்சியலைகளை தோற்றுவித்தது. வழக்கமாகவே அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

நெதர்லாந்து: புதுமணத்தம்பதிகளை பிரிப்போம்    
May 15, 2008, 6:41 pm | தலைப்புப் பக்கம்

உலகில் மனித உரிமைகள் மீறும் நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்தும் சேர்ந்துள்ளது. இவ்வாறு Human Rights Watch அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகின்றது. நெதர்லாந்தின் புதிய குடிவரவாளர் சட்டங்கள் கடுமையாக இருப்பதுடன், அது பல்வேறு நாட்டு மக்களை பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2006 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் படி, நெதர்லாந்து பிரஜை, அல்லது நெதர்லாந்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்    
May 12, 2008, 1:03 pm | தலைப்புப் பக்கம்

"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு    
May 10, 2008, 3:08 pm | தலைப்புப் பக்கம்

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அகதி வைரஸ் 2.0 (Made in Holland)    
April 22, 2008, 4:16 pm | தலைப்புப் பக்கம்

ஒல்லாந்து தேசியவாதிகள் உருவாகிய "நாடு காத்த சிறுவன்" கதை, நமது பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளதால், பலரும் அறிந்திருப்பர். கடல்மட்டத்திற்கு கீழே இருக்கும் ஒல்லாந்து நாட்டில் அடிக்கடி கடல் நீர் உள்ளே வந்து பேரழிவை ஏற்படுத்துவதால், அதை தடுக்கும் பொருட்டு, மிகப்பெரிய அணை கட்டினர். அப்படி கட்டிய அணையில் ஒரு முறை வெடிப்பு ஏற்பட்டு நீர் கசிவதை கண்ட சிறுவன் ஒருவன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

எகிப்து: மத அடிப்படைவாதம் சோறு போடுமா?    
April 18, 2008, 7:07 pm | தலைப்புப் பக்கம்

பண்டைய எகிப்து, ரோமர்கள் காலத்தில், ஐரோப்பாவின் உணவுக்களஞ்சியம் என்று பேர் எடுத்தது. உலகப்பேரழகி கிளியோபேட்ரா ஆட்சிக்காலத்தில் ஒருமுறை பஞ்சம் ஏற்பட்ட போது, அரச தாணியக்கிடங்கை திறந்து பொதுமக்களுக்கு உணவளித்ததாக சரித்திரம் கூறுகின்றது. இன்று உலகமயமாகிய பொருளாதரத்தில் அங்கம் வகிக்கும் காலத்தில், உணவுப்பொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்    
April 17, 2008, 4:18 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் சில நாட்களில் நேபாளம் குடியரசாகி விடும். மன்னர் கியேன்த்ரா, கத்மண்டு அரண்மனையை விட்டு செல்ல மூட்டை முடிச்சுகளை கட்டிகொண்டிருக்கிறார். கடந்த ஏப்ரல் பத்தாம் திகதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், நேபாளத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றி விட்டது. தெற்கு ஆசிய வரலாற்றில் ஒரு திருப்பு முனை, அந்த தேர்தல். 1996 ம் ஆண்டில் இருந்து, வெற்றிகரமான ஆயுதமேந்திய மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தலாய் லாமா! பொய் சொல்ல லாமா?    
April 14, 2008, 5:11 pm | தலைப்புப் பக்கம்

சீன ஆட்சிக்கெதிராக திபெத்தியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றி, மேற்கத்திய ஊடகங்கள் முந்தியடித்துக் கொண்டு தலைப்புசெய்தியாக போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. சாத்வீகமான போராட்டம் என்று கருதப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம், திடீரென வன்முறை வெடித்து, பௌத்த ஹான், முஸ்லீம் ஹுய் சீனர்களின் கடைகள், உடமைகளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவியுடை தரித்த திபெத்திய பௌத்த பிக்குகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தென் ஆப்பிரிக்காவில் மறைந்த அணு குண்டுகள்    
April 13, 2008, 1:54 pm | தலைப்புப் பக்கம்

"ஒரு முக்கியமான தகவலை நான் சொல்ல விரும்புகின்றேன். கியூபா துருப்புகள் அங்கோலாவில் இருந்த போது, அந்த நாடு (அன்றைய நிறவெறி) தென் ஆப்பிரிக்க இராணுவ படையெடுப்பிற்கு உட்பட்டிருந்தது. அதே நேரம் அமெரிக்கா சில அணு குண்டுகளை, ஹிரோஷிமா-நாகசாகி மீது போட்ட அதே குண்டுகளை, பாசிச நிறவெறி தென் ஆப்பிரிக்கவிற்கு அனுப்பி வைத்தது. பலர் இன்றைக்கு மறந்து விட்டாலும், அங்கோலா போர், எட்டு அணு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

வட கொரியாவில் தஞ்சம் கோரிய அமெரிக்கர்கள்    
April 11, 2008, 5:26 am | தலைப்புப் பக்கம்

ஒரு பெரும் நகரத்தையே இரண்டாக பிரித்த பெர்லின் மதில் கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரம், கம்யூனிச கிழக்கு பெர்லின் எல்லையில் காவல் கடமையில் இருந்த ஒரு போர் வீரன், தன் துப்பாக்கியை கீழே போட்டு விட்டு, "சுதந்திர" மேற்கு பெர்லின் நோக்கி ஓடும் காட்சியை எடுத்த புகைப்படம் உலகப்புகழ் பெற்றது (அல்லது பெற வைக்கப் பட்டது). அந்தப் படம் தற்போதும், அமெரிக்க, மேற்கு-ஐரோப்பிய நாடுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

திபெத் : மதம், விளையாட்டு, அரசியல்    
April 5, 2008, 8:08 am | தலைப்புப் பக்கம்

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்க ஒரு சில மாதங்களே இருந்த நேரம், திபெத் மாநிலம் சீனாவினால் இணைக்க பட்ட பிறகு ஏற்பட்ட எழுச்சியின் இருபதாம் ஆண்டு நிறைவுதினம், மீண்டும் கலகங்களையும், திபெத் சுதந்திர கோரிக்கையையும் கிளப்பி விட்டது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை சீன பாதுகாப்பு படைகள் கலைத்தத்தில் முப்பது அல்லது நாற்பது பேர் இறந்ததாகவும், அதை தொடர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

*குர்திஸ்தான், துருக்கியின் துயரம்* துருக்கியின் மிகப்பெரிய    
March 14, 2008, 8:59 am | தலைப்புப் பக்கம்

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

*மொரோக்கோ பயணக் கதை * * * சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு    
March 12, 2008, 8:25 am | தலைப்புப் பக்கம்

மொரோக்கோ பயணக் கதை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மொரோக்கொவை சேர்ந்த யாத்ரீகர் இபுன் படுதா தரை வழியாக பயணம் செய்து இந்தியா, இலங்கை, மாலை தீவுகள் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் வந்து பார்த்து குறிப்புகள் எழுதி வைத்திருந்திருக்கிறார். நம்பகத்தன்மை வாய்ந்த அந்த குறிப்புகள் இன்றும் பண்டைகால உலகம் எப்படி இருந்தது என்பதை காட்டுகின்றது. அந்த மாபெரும் யாத்ரீகரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் பயணம்

பைத்தியங்கள் பாராண்டால்... உலகில் மிகவும் சுதந்திரமான    
March 5, 2008, 3:32 pm | தலைப்புப் பக்கம்

பைத்தியங்கள் பாராண்டால்...உலகில் மிகவும் சுதந்திரமான (லிபரல்) நாடு, சகிப்புதன்மைக்கு பேர் போன நாடு, எந்த புதினமும் இல்லாத அமைதிபூங்கா, என்றெல்லாம் கருதப்படும் நெதர்லாந்திற்கு தற்போது என்ன நடந்து விட்டது? ஒரு காலத்தில் தாராள மனதுடன் நடந்து கொண்ட அரசாங்கம் தற்போது வலதுசாரி தீவிர பாதையை நோக்கி செல்கின்றது. தொன்னூருகலில் ஆட்சியில் அமர்ந்த அரசாங்கங்கள், சோஷலிச்ட்கள் ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

சிம்பாப்வே: கறுப்பர்களின் கடமை    
March 5, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

“வெள்ளையர்கள் எமது நாட்டுக்கு வந்த போது, அவர்கள் கையில் பைபிள் இருந்தது. எம்மிடம் நிலம் இருந்தது. எம்மை கண் மூடிதியானம் செய்ய சொன்னார்கள். கண் விழித்து பார்த்த போது,அவர்கள் கைகளில் நிலங்களும், எமது கைகளில் பைபிளும் இருந்தது.” - ஒரு தென் ஆப்பிரிக்க கவிஞர். மேற்கத்திய ஊடகங்கள் ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதி முகாபே பற்றி ஒரு போதும் நல்லதாக சொல்வதில்லை. அவர்கள் பார்வையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

*கியூபா பயணக்கதை* பிடல் காஸ்ட்ரோ கடும்சுகவீனமுற்று அரசியலை கை    
February 25, 2008, 5:09 pm | தலைப்புப் பக்கம்

கியூபா பயணக்கதை பிடல் காஸ்ட்ரோ கடும்சுகவீனமுற்று அரசியலை கை விட்டு விட்டு ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த நேரம். கியூபாவின் நீண்ட கால ஆட்சித்தலைவர் மரணப்படுக்கையில் விழுந்து விட்டார். காஸ்ட்ரோவிற்கு பின் கியூபா ஜனனயகதிட்கும், சுதந்திரதிட்கும் கதவுகளை திறந்து விடும், என்று மேட்கதய ஊடகங்கள் ஆருடம் சொல்லிக்கொண்டிருப்த நேரம். இப்படி ஒரு திருப்புமுனையை வெளிஉலகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்