மாற்று! » பதிவர்கள்

era.murukan

என்ன செய்து கொண்டிருக்கிறேன்?    
June 14, 2009, 3:47 am | தலைப்புப் பக்கம்

திரைப்படம்‘உன்னைப் போல் ஒருவன்’ கதை வசனம் எழுதும் பணி பூர்த்தியாகிப் படப்பிடிப்பும் முடியும் தருவாயில் உள்ளது.கமல் அவர்களோடு அவருடைய caravan-ல் நடத்திய படம் குறித்த நீண்ட உரையாடல்கள், கதையமைப்பு குறித்த விவாதங்கள், இயக்குனர் நண்பர் சக்ரியோடு நட்போடு புரிந்த வாக்குவாதங்கள் பற்றி எல்லாம் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் – Sight at Shoot.என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நண்பர் மனுஷயபுத்ரன் கடிதம் - urgent please    
March 1, 2008, 6:45 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள முருகன் இத்துடன் சுஜாதா இரங்கல் கூட்ட அழைப்பிதழை இணைத்துள்ளேன். எழுத்தாளர்கள், திரைப்பட கலைஞர்கள் , பத்திரிகையாளர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வு குறித்த இந்த செய்தியினை உங்கள் நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன். மேலும் இணைய தளங்களில் குழுமங்களிலும் இச்செய்தியினை இடம் பெறச் செய்தால் மிகவும் நல்லது. உங்கள் உதவியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

என் குருநாதர் காலமானார்    
February 27, 2008, 5:25 pm | தலைப்புப் பக்கம்

என் பேரன்புக்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளார் சுஜாதா அவர்கள் காலமான செய்தியை வருத்தத்தோடு பகிர்ந்து கொள்கிறேன்.அண்மையில் எனக்கு அவர் எழுதிய கடிதத்திலிருந்து - “55 is too early to retire. I suggest you get an extension. At 72 I am still working part time. Atleast give an opportunity for your wife to be alone for a few hours..”நாலு வரிக் கடிததிலும் தெறிக்கும் இந்த நகைச்சுவை உணர்வு தான் சுஜாதா.பழக இனியவர். பண்பாளர். என்னையும் எத்தனையோ கவிஞர்களையும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சிவகங்கையில் ஒரு சின்னப் பையன்    
December 25, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

சிவகங்கை சிவன்கோவில் எதிர் வசத்து ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்தபோது எனக்கு ஏற்பட்ட பெருமகிழ்ச்சியை உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதை ஆழ்ந்த வருத்ததோடு தெரிவித்துக்கொள்கிறேன். எப்படி முடியும்? உங்களுக்கு எப்போதாவது ஒன்பது வயது முடிந்திருக்கிறதா? நீங்கள் அரை டிராயர் அணிந்திருக்கிறீர்களா? குருசாமி டெய்லர் தைத்துக் கொடுத்ததா அது? அழுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒண்ணித் திலநகை - ஓரம்போ;ஆழி மழைக் கண்ணா, ஆடி வா    
December 20, 2007, 1:51 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு மார்கழி நாலு. 'ஆழி மழைக்கண்ணா' திருப்பாவைத் தினம். 'ஆழியில் புக்கு முகந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிந்து, வாழ உலகில் பெய்திடாய்' என்று நாச்சியார் உளமுருக இயற்கையை வேண்டும்போது அறைக்கு வெளியே குளிரக் குளிர ஒரு பெருமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.விஜய் தொலைக்காட்சியில் டாக்டர் வெங்கடகிருஷ்ணன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

ஒரு நவம்பர் கச்சேரி    
December 16, 2007, 1:03 pm | தலைப்புப் பக்கம்

மியூசிக் அகாதமி – உஸ்தாத் ஃபத்தே அலிகான் – நவம்பர் 10 இரா.முருகன்சென்னை நகரத்துக்கும் இந்துஸ்தானி சங்கீதத்துக்கும் தாயாதி பங்காளி உறவு. டிசம்பர் இசைவிழாவின் போது மூக்கில் நுழைத்து உறிஞ்ச விக்ஸ் இன்ஹேலர், கம்பளி மப்ளர், இருமல் மாத்திரை சமாச்சாரங்களோடு ராத்திரி கச்சேரியாக பீம்சென் ஜோஷியைக் கேட்க பெருந்திரளாக ஆஜாராகி விடுவார்கள் நம்ம மக்கள்.‘இதான் கிரானா கரானா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஓர்ம்மகளுடெ விருந்நு    
November 9, 2007, 8:44 am | தலைப்புப் பக்கம்

காலம் என்ற பரிமாணம் சுருங்கிக் கொண்டே வருவதாகத் தோன்றுகிறது. அது வெறும் தோற்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஒரு புத்தகம் - ஒரு முன்னுரை    
November 6, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

குளிக்கக் காசு கேட்கிற ஸ்காட்லாந்தில், என் பக்கத்து வீட்டுக்காரர் வித்தியாசமான பேர்வழி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ப்ரூஃப் ரீடர்    
October 21, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

நல்ல நண்பர்கள். ஆனாலும் வேலைப் பளுவும் பொழுது போய்ப் பொழுது வந்து ஒரே மாதிரியான வேலையும் சேர்ந்து அவர்களை ஒருவழி பண்ணிவிடுகிறது. ப்ரூஃப் ரீடர்களைச் சொல்கிறேன். நான் எழுதுவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

அரண்மனை பன் சிங்கிள் டீ    
October 3, 2005, 12:15 pm | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாயை எப்படிச் செலவழிப்பது? அதுவும் ஒரே வருடத்தில். வெரி சிம்பிள். தின்றே தீர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நகைச்சுவை