மாற்று! » பதிவர்கள்

bmmaran

Redbelt (2008): வாழ்க்கையில் ரெட்பெல்ட் பெறுவது எப்படி?    
April 4, 2009, 2:29 am | தலைப்புப் பக்கம்

வழமையான தமிழ்படங்களிலிருந்து, வரிக்கு வரி வேறுபடுவதான ஒரு படம் பார்க்க வேண்டுமோ? இந்தப் படத்தைப் பாருங்கள். படத்தின் கதையைப் பற்றி விலாவாரியாக இங்கு சொல்வது சரியில்லை. படம் மைக் (Chiwetel Ejiofor) என்ற, ஜி-யுட்ஸு என அழைக்கப்படும் தற்பாதுகாப்பு கலையக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரின் வாழ்க்கைப் பற்றிச் சொல்கின்றது. வாழ்க்கையில் நேர்மையையும், கண்ணியத்தையும் நூறுவீதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Secret Life of Bees (2008): தேன் கூடுபோல குடும்பத்தைக் கட்டலாமே…    
April 3, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

Obama ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் இந்தக் காலத்தில், இந்தப் படத்தைப் பார்க்கும்போது, “வாவ்! அமெரிக்கா ஒரு நாற்பத்து ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தூரம் வந்திருக்கின்றது!” என்று வியப்படைவதைத் தவிர்க்கமுடியவில்லை. இப்படத்தின் கதை பெரும்பாலும் அன்பைத்தேடியலையும் ஒரு சிறுமியை மையமாகக் கொண்டிருந்தாலும், 1960களில் கறுப்பர்களிற்கான அடக்குமுறை அமெரிக்க மண்ணில் வேரோடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Spirit (2008): படத்தில் உயிரோட்டமே இல்லை    
April 2, 2009, 3:28 am | தலைப்புப் பக்கம்

காமிக்ஸ் புத்தகங்களை வெள்ளித்திரைக்கு கொண்டுவருவது அண்மையில் வாடிக்கையாகிவிட்டது. அதில் இதுவும் ஒன்று. “Sin City”, “300″ போன்ற வித்தியாசமான வெற்றிப்படங்களைத் (அவைகளும் காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து திரைக்கு வந்தவைதான்) தந்த இயக்குணர் Frank Miller‘இன் இன்னொரு படைப்பு இது. Sin City எடுக்கப் பட்ட அதே விதத்தில் இந்தப் படத்தையும் எடுத்திருக்கின்றனர். ஆனால், தனியே திரைபட வடிவமைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

RockNRolla (2008): லண்டன் தாதாக்களின் ஆடு புலி ஆட்டம்.    
April 1, 2009, 4:39 am | தலைப்புப் பக்கம்

முழங்கால் அளவுக்கு தண்ணி இருக்கும் குட்டைக்குள்ள எருமை மாட்டை விட்டு குழப்பின மாதிரி ஒரு கதை. அந்தளவு குழப்பத்தையும் ஒரு ரசனையோடு எடுத்திருக்கிறாங்கள் பாருங்கோ, அதுதான் அருமை! எழுத்தாளர், இயக்குணர் Guy Ritchie‘இன் முன்னைய படங்களைப் பார்த்திருந்தீர்களென்றால் உங்களிற்கு விளங்கும். பாதாள உலகு (underworld) தாதாக்களை மையமாக வைத்த படம்தான். படத்தில நல்ல மனுசன் எண்டு ஒருத்தரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Ong Bak 2 (2008): தாய்லாந்திலிருந்து வந்து இறங்கும் அதிரடி    
March 31, 2009, 4:16 am | தலைப்புப் பக்கம்

Bruce Lee, Jackie Chan, Jet Li எல்லாரும் Martial Arts படங்களில் தங்களிற்கென ஒரு முத்திரை பதித்துச் சென்றவர்கள். அதில் ஒருவர் காலமாகிவிட, மற்ற இருவரும் முதுமை எய்திவிட, புதிதாக தாய்லாந்திலிருந்து வந்து இறங்கியிருக்கின்றார் Tony Jaa. தனக்கென்று சொல்லி Muay Thai என்று சொல்லப் படும் புதுவித சண்டைக் கலையை திரைக்கு அறிமுகப் படுத்தியிருக்கின்றார். முதலாவது Ong Bak (2003) படத்தோடு ஆக்ஸன் பட ரசிகர்கள் அனைவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Other End of the Line (2008): சிரியாவின் ஹாலிவூட் படம்    
March 31, 2009, 3:37 am | தலைப்புப் பக்கம்

அண்மைக் காலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் தாக்கம் ஹாலிவூட்டில் தெரியத்தொடங்கியிருக்கின்றது. “Inside Man” ரகுமானின் “சய்ய சய்யா” இசையோடு ஆரம்பித்தது; அண்மையில் வந்த “The Accidental Husband” பல ரகுமான் இசையை கொண்டிருந்ததுடன், ஒரு முழு “தெனாலி” படப் பாட்டோடு முடிவடைந்தது. ஆஸ்கார் வரை சென்ற “Elizabeth: The Golden Age“இன் பின்னணி இசையில் ரகுமானின் பங்கும் உண்டு. இவ்வாறு ரகுமான் ஹாலிவூட்டில் நுளைந்து பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Reader (2008): காலத்தை வென்ற காதல்    
March 28, 2009, 5:30 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக Drama வகையிலான படங்கள் எனக்குப் பொருத்தமானவையல்ல — அவற்குக்கு கவனம் கொடுத்து பார்த்து முடிப்பது என்பது எனக்குக் கொஞ்சம் கஸ்டமான விடயம். அப்படியான என்னையும் சிந்தை சிதறாது இரண்டு மணித்தியாலம் கட்டிவைத்திருந்தது இந்தப் படம்! ஐந்து ஆஸ்காரிற்கு தெரிவாகி, அவற்றில் ஒன்றைத் தட்டிக் கொண்டு போன படம்; அது ஏன் என்பது படத்தைப் பார்க்கும்போது தெளிவாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Marley & Me (2008): ஒரு நாயின்/மனிதனின் கதை.    
March 27, 2009, 6:31 am | தலைப்புப் பக்கம்

நட்புக்கும் விசுவாசத்திற்கும் பெயர் பெற்றது நாய்கள். ஒரு நாயிற்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையிலான பிணைப்பை அழகாக எடுத்துக்காட்டுகின்றது இந்தப்படம். படம் John’உம் (Owen Wilson) Jennifer’உம் (Jennifer Aniston) திருமணம் முடிப்பதோடு ஆரம்பிக்கின்றது. இருவரும் பத்திரிகைத் தொழில் சார்ந்தவர்கள். முழு எதிர்காலத்தையுமே விலாவாரியாக திட்டமிட்டு நடத்திவருபவர் Jennifer. ஒரு சிறந்த களமுனை நிருபராக வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Inkheart (2008): எழுதப்பட்ட வார்த்தைகளின் சக்தி    
March 26, 2009, 5:05 am | தலைப்புப் பக்கம்

Fantasy எனப்படும் மந்திர தந்திரங்கள் கலந்த நாவல் வகை இங்கே மேற்குலகில் பிரபல்யம். இப்போது, Lord of the Rings, Harry Potter பட வரிசைகளின் வெற்றிக்குப் பிறகு, இவ்வகையான கதைகள் திரையரங்குகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான ஒரு படமே Inkheart ஆகும். படம் 12 வயது சிறுமி Maggie’ஐப் (Eliza Bennett) பின்தொடர்ந்து போகின்றது. தான் மூன்று வயதாக இருக்கும் போது தனது தாய் Resa (Sienna Guillory) தன்னை கைவிட்டுவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Winged Creatures (2008): சிறகுடைக்கப் பட்ட மனிதர்கள்    
March 25, 2009, 3:40 am | தலைப்புப் பக்கம்

ஒரு துப்பாக்கியோடு ஒரு பொது இடத்துக்குள் நுழைவது, சும்மா எழுந்தமாதிரியாக கொஞ்சப்பேரைச் சுட்டுக்கொல்வது, பிறது தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்வது, இது கிட்டத்தட்ட ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது வட அமெரிக்காவில் இப்போது! இப்படியான ஒரு சம்பவத்தில் மாட்டி உயிர் தப்பும் ஐந்து பேரின் வாழ்வினை பின்தொடருகின்றது இந்தப் படம். சிறுமி Anne (Dakota Fanning) தனது அப்பாவோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Zack and Miri Make a Porno (2008): பேசாமல் அதையே எடுத்திருக்கலாம், இந்...    
March 24, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்

ஹாலிவூட்டில் இடைக்கிடை நகைச்சுவைக்கும் அருவருப்புக்கும் இடையில் நின்று ஊசலாடுகின்ற மாதிரி சில படங்கள் வரும். அந்த வகையில் இதுவும் ஒன்று. படம் தணிக்கையின் கத்திரிக்கோலில் இரண்டு தரம் மாட்டுப்பட்டு கடைசியாக ஒருவாறு ‘R’-முத்திரையுடன் வந்திருக்கின்றது. இந்த படத்தின் முகப்புப் படத்தைக்கூட (poster) தணிக்கை அனுமதிக்காமல் கடைசியாக இங்கே பக்கத்தில் காட்டப்பட்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Happening (2008): என்ன நடந்தது சியாமளனுக்கு..?    
March 22, 2009, 3:51 am | தலைப்புப் பக்கம்

“The Sixth Sense” (1999) பார்த்த காலத்திலேயிருந்து Night சியாமளனின் தீவிர ரசிகன் நான். அதன் பின் வந்த அவரது சகல படங்களையும் பார்த்திருக்கின்றேன். என்றாலும், The Sixth Sense அளவுக்கு இன்னொரு படத்தை தர அவரால் முடியவில்லை. “Night சியாமளன் தரமான முடிவு” மாதிரியான முடிவை நாங்கள் படத்தில் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதுதான் அதற்கு காரணமோ தெரியாது. இதுவரை காலமும் வந்த இவரது படங்களிலேயே மிகப் பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Bedtime Stories (2008): நிஜத்திற்கு வரும் கதைகள்.    
March 21, 2009, 4:45 am | தலைப்புப் பக்கம்

Walt Disney தயாரித்து அளிக்கும் படங்கள் என்றால் குடும்பத்தோடு நம்பிப்போய், சந்தோசமாக கொஞ்ச நேரத்தை செலவழித்துவிட்டு வரலாம். அந்த வரிசையில் இன்னொரு படம் இது. படத்தைப் பார்க்கும்போது நீங்கள் ஞாபகம் வைக்கவேண்டிய விடயம் இது சிறாரிற்கான படம் என்பதுதான். அதுக்குள் கதையிலேயும், லாஜிக்கிலேயும் பிழைபிடிக்கின்ற நோக்கில் இருப்பீர்கள் என்றால் இது உங்களிற்கான படம் இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Tale of Despereaux (2008): சின்னஞ்சிறு நாயகனும், பென்னம் பெரிய படி...    
March 20, 2009, 5:13 am | தலைப்புப் பக்கம்

அண்மைக் காலத்தில் பார்த்த காட்டூன் படங்களிற்குள் வித்தியாசமான படம். நகைச்சுவையும், கலகலப்பையும் மட்டும் வைத்து படத்தை எடுக்காமல், நல்ல பல செய்திகளையும் புகுத்தி தந்திருக்கின்றார்கள். கிராபிக்ஸின் தரத்திலும் குறை வைக்கவில்லை. புத்தகத்திலிருந்து திரைக்கு வந்த கதையாதலால், இந்தத் திரைக்கதையை வழமையான காட்டூன் படங்களின் கதைகளைப்போல இரண்டு வரியில் சொல்லிவிட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Swing Vote (2008): ஒற்றை வோட்டில் ஜனாதிபதி.    
March 18, 2009, 4:37 am | தலைப்புப் பக்கம்

மனைவி விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட, வாழ்க்கை வெறுத்து உதவாக்கரை அப்பாவாக வாழ்கின்றார் Bud Johnson. வயது பன்னிரண்டு என்றாலும், வீட்டையும், அப்பாவையும், தன்னையும் பராமரிக்கும் பொறுப்பை அநாசயமாக எடுத்து நடத்துகின்றாள் மகள் Molly. இப்படியாக இவர்கள் இருக்க, நாட்டில் ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. புத்திசாலியான Molly, நாட்டின் இறைமை, அரசியல் என்பவற்றில் மிகவும் அக்கறை உடையவள்; Bud’ஓ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Women (2008): பெண்களை வைத்து, பெண்களிற்காக, பெண்களைப் பற்றி…    
March 17, 2009, 3:21 am | தலைப்புப் பக்கம்

“மகளிர் மட்டும்” என்று சொல்லி ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கும்; என்றாலும் இந்தப் படம்தான் மகளிர் மட்டும் என்பதற்கு வரைவிலக்கணம். படத்தில் மருந்துக்கும் ஆண் வாடை இல்லை! அட, கதாநாயகி வீட்டில் இருக்கும் நாய் கூட பெண் நாய்தான்!! அப்பிடி ஒரு படத்தை துணிந்து எடுத்திருக்கின்றார்கள். நல்ல முயற்சிதான்; பிழைப்பது என்னவென்றால், இப்படியான ஒரு நடிகர் குழுவை வைத்து எடுக்கக்கூடிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Mamma Mia (2008): ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.    
March 16, 2009, 3:12 am | தலைப்புப் பக்கம்

ABBA என்பது 1970, 80′களில் உலகைக் கலக்கிச் சென்ற ஒரு சுவீடன் நாட்டு இசைக் குழு. இப்போதும் அவர்களின் பாடல்கள் எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அந்த குழுவின் பாடல்களை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம்தான் இது; “mamma mia” என்பது அந்தக் குழுவின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று. உங்களிற்குத் தெரியுமோ தெரியாது, இந்தியப் படங்கள் மேலை நாட்டுத் திரயரங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Watchmen (2009): அவரசரப்பட்டு பார்க்கத் தேவையில்லை    
March 14, 2009, 3:46 am | தலைப்புப் பக்கம்

காமிக்ஸ் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களிலிருந்து என்ன எதிர்பார்ப்பீர்கள்? நிறைய ஆக்ஸன் இருக்கும், எல்லாரும் பார்க்கக் கூடியதாக இருக்கும், விறுப்பாக கிட்டத்தட்ட ஒரு இரண்டு மணித்தியாலம் சந்தோசமாக நேரத்தை ஓட்டலாம் — இப்பிடித்தானே நீங்கள் சொல்லுவீர்கள்? இந்த வரைவிலக்கணத்திற்கெல்லாம் வெகுவாக தள்ளி நிற்கின்றது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Other Boleyn Girl (2008): ஒரு பெண் மனது வைத்தால்…    
March 12, 2009, 4:29 am | தலைப்புப் பக்கம்

16′ஆம் நூற்றாண்டின் இங்கில்லாந்து அரசன் 8′ம் ஹென்றி காலத்தில், பணம், புகழ், செல்வாக்கு எவ்வாறு இரு ஆருயிர் சகோதரிகளின் வாழ்க்கைகளை சிதைக்கின்றது என்பதை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தில் வரும் முக்கிய பாத்திரங்கள் யாவரும் இங்கிலாந்தின் சரித்திரத்தில் உண்மைப் பாத்திரங்கள்; பெரும்பான்மையான சம்பவங்களும் உண்மைதான். அவற்றிற்கு ஒரு கற்பனையான கதைப் பிணைப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Twilight (2008): காதல், இரத்தத்தில்…    
March 11, 2009, 5:53 am | தலைப்புப் பக்கம்

என்னவோ தெரியாது, இங்கே மேற்கத்தைய மக்களிற்கு இரத்தக்காட்டேறி (vampire) சம்பந்தப்பட்ட படங்கள் என்றால் அப்பிடியொரு நாட்டம். அப்பிடிப்பட்ட படம் எப்பிடியும் வருடத்திற்கு ஒன்றாவது வந்து விடும். அப்பிடியிருக்கையில் இரத்தக்காட்டேறியை மையமாகக் கொண்டு Stephenie Meyer எழுதிய Twilight புத்தகத்தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாகிவிட அதை விட்டுவைப்பார்களோ? அந்தத்தொடரின் முதலாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Bolt (2008): பொய்யினில் வளர்ந்து, மெய்யினில் விழுந்து…    
March 10, 2009, 3:50 am | தலைப்புப் பக்கம்

இவ்வளவு காட்டூன் படங்களை எடுத்துத் தள்ளிய பிறகும், இன்னுமொன்ரு காட்டூன் படத்தை எடுத்து சிரிக்கவைப்பதற்கும், வியக்கவைப்பதற்கும் இயலும் என்றால் Walt Disney தயாரிப்பாளர்களால்தான். ok, “Finding Nemo” அளவுக்கு நகைச்சுவை இல்லையென்றாலும் சந்தோக்ஷமாக படம் எடுத்திருக்கின்றார்கள். காட்டூன் தரத்திலும் Pixar அளவுக்கு தயாரித்திருக்கின்றார்கள். சிறுவயதிலிருந்தே தொலைக்காட்சித் தொடர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Transporter 3 (2008): ம்ம்ம்… மூன்றாம் பாகம்? OK…    
March 8, 2009, 11:13 pm | தலைப்புப் பக்கம்

எண்ணக் கருக்களுக்கு தட்டுப்பாடு இருந்தால் படத்தை எடுக்காமல் விட வேண்டியதுதானே, ஏன் இந்த பழஞ்சோறு வடிக்கிற வேலைக்கு போகவேண்டுமோ தெரியவில்லை. சிக்கென்று ஒரு ஹீரோ, வேகமாய் போகின்ற கார், மணமூட்டுவதற்கு புதிதாய் இறக்குமதி செய்யப்பட்ட கதாநாயகி இவ்வளவும் ஒரு படம் தயாரிப்பதற்கு போதும் என்று தீர்மானித்து படத்தை எடுத்திருக்கின்றார்கள். எனவே Transporter பட வரிசையின் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Punisher: War Zone (2008): ஆளைத் தூக்கு!    
March 8, 2009, 3:13 am | தலைப்புப் பக்கம்

ஆங்கில படங்களில் ஆக்ஸன் படங்கள் என்று ஒரு வகை, ‘gore’ என்று அழைக்கப்படும் இரத்தம் சிந்துகின்ற, அங்க அவயவங்கள் பறப்பதாக இன்னொரு வகை. இந்தப் படம் இரண்டு வகையிலும் சேர்ந்து நிற்கின்றது. படம் அநியாயத்தைத் தட்டிக்கேட்பதற்காக ஆயுதம் எடுக்கும் ஒருவரைப் பற்றியது. Frank Castle (Ray Stevenson) ஒரு விசேட இராணுவ படைத்துறையில் பயிற்றுவிப்பனராக இருந்தவர். மனைவி, பிள்ளையோடு பொதுவிட பூங்காவொன்றிலே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Burn After Reading (2008): குழப்பமோ, குழப்பம்; சிரிப்போ, சிரிப்பு!!    
March 7, 2009, 6:32 pm | தலைப்புப் பக்கம்

வாவ்! ஒரு இடியப்ப சிக்கல் கதையை தெளிவாக எடுத்து, அதை நகைச்சுவை படமாகத் தந்திருக்கிறார்கள். கதை என்னவென்று சொல்ல வேண்டுமோ, சரி அது இதுதான்: CIA’இல் பல்லாண்டுகள் வேலை செய்து வந்த Osbourne (John Malkovich) உள்பகை காரணமாக ராஜினாமாச் செய்கின்றார். இப்போது வேலைவெட்டி எதுவுமின்றி இருப்பதால் தனது CIA அனுபவத்தை கதையாக எழுத முனைகின்றார். இவரது மனைவி Katie (Tilda Swinton) — ஒரு வைத்தியர். மணவாழ்வில் சுகமற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Australia (2008): அழகான ஒரு அவுஸ்ரேலியப் பயணம்.    
February 24, 2009, 10:26 pm | தலைப்புப் பக்கம்

அவுஸ்ரேலியாவின் சுற்றுலாத்துறைக்கு ஒரு விளம்பரமாகக் கருதப்பட்ட/கருதப்படும் ஒரு படம். படத்தைப் பார்ப்பவர்கள் அவுஸ்ரேலியாவின் இயற்கை அழகில் மயங்கிவிடுவார்கள் என்று சொல்லப் பட்டது. என்றாலும் எனக்கு அப்படி மயக்கம் ஒன்றும் பெரிதாக வரவில்லை. பெரும்பாலும அவுஸ்ரேலிய பாலைவனப் பரப்பிலேயே படம் சுற்றி சுற்றி ஓடுகின்றது. படத்தின் கதையைப் பார்த்தால் இரண்டு புத்தகங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

City of Ember (2008): உலகைத் தொலைத்த பின் 200 ஆண்டுகளிற்குப் பிறகு…    
February 19, 2009, 6:42 pm | தலைப்புப் பக்கம்

பூவுலகம் போன்ற கற்பனை உலகம் ஒன்றில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் கதை — அது எமது பூமியில் நடக்கும் கதைதான் என்று வாதிப்பதற்கும் சாத்தியமுண்டு. ஒரு காலப்பகுதியில் உலகத்தின் வெளிப்பரப்பு மனித வாழ்க்கைக்கு தகுதியில்லாது போய்விடுகின்றது. அதன் காரணமாக பாதாள நகரமொன்றை மனிதர்கள் உருவாக்குகின்றார்கள். இது மின்சாரம் போன்ற, ember என அழைக்கப்படும், ஒரு சக்தியினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Body of Lies (2008): low-tech பயங்கரவாதத்தை முறியடிப்பது எப்படி?    
February 17, 2009, 10:49 pm | தலைப்புப் பக்கம்

Roger Ferris’உம் (Leonardo DiCaprio) Ed Hoffman’உம் (Russell Crowe) CIA உளவாளிகள் என்றாலும் இருவருக்கும் இடையே மடுவுக்கும் மலைக்கும் இடையிலான ஒற்றுமை — களமுனையில் நின்று, உயிரை பணயம் வைத்து ஒற்றறியும் வேலை Roger’இனது; Bluetooth தொலைபேசியுடனும், செய்மதி படங்களினுடம் அமெரிக்க சொகுசுடன் இருந்து Roger போன்ற களமுனை ஒற்றர்களிற்கு ஆணையிடும் வேலை Ed’இனது. இவர்கள் இருவரும் Al Saleem எனப்படும் இஸ்லாமிய பயங்கரவாதியொருவனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Vicky Cristina Barcelona (2008): முக்கோண, நாற்கோண, ஐங்கோண காதல் கதை.    
February 17, 2009, 9:26 pm | தலைப்புப் பக்கம்

படத்தின் பெயர் உண்மையிலேயே “Vicky and Cristina in Barcelona” என்றுதான் இருந்திருக்கவேண்டும். அதுதான் படத்தின் கதையும். Vicky’யும் (Rebecca Hall) Cristina’வும் (Scarlett Johansson) ஆத்மாந்த நண்பிகள் எனினும் காதல் விடயத்தில் எதிரும் புதிருமான எண்ணப்பாடு கொண்டவர்கள் — மனதுக்குப் பிடித்த, வாழ்க்கைகு ஏற்றவன் ஒருவனோடு வாழ்வில் settle ஆவதற்குத்தான் காதல் என்பது Vicky’யின் கொள்கை; காதல் ஒரு adventure என்பது Cristina’வினது கொள்கை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Taken (2008): மகளைத் தொலைத்த அப்பாவின் சீற்றம்.    
February 17, 2009, 8:26 pm | தலைப்புப் பக்கம்

சில படங்கள் வெளியுலகெல்லாம் ஓடி, DVDயிலும் வந்த பிறகுதான் வட அமெரிக்க வெள்ளித்திரைகளிற்க்கு வரும் — அவ்வாற படங்களில் இதுவும் ஒன்று. பிந்தி வந்தாலும், வெகுவாக பாராட்டுக்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. சாதாரணமான ஒரு ஆக்ஸன் கதைதான். என்றாலும் சிறந்த ஒரு முன்னணி நடிகர், செறிவான இயக்குணர், விறுவிறுப்பான படத்தொகுப்பு என்பவற்றை புகுத்திவிட கிடைக்கின்றது காற்றெனப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Kit Kittredge: An American Girl (2008): அமைதியான, அழகான ஒரு குடும்பப் ...    
January 15, 2009, 5:37 pm | தலைப்புப் பக்கம்

பத்து வயதில் Little Miss Sunshine படத்திற்காக ஆஸ்கார் விருதுக்கு தெரிவானவர் Abigail Breslin! அந்த நடிப்புத்திறனை தொடர்ந்து எடுத்துச் செல்கின்றார் இந்தப் படத்திலும். வருடம் 1934; அமெரிக்காவும் the great depression என்று அழைக்கப்படும் பாரிய உலகளாவிய ரீதியிலான பொருளாதார சிக்கலில் மாட்டி தவிக்கின்றது. Kit Kittredge (Abigail Breslin) சாதாரண ஒரு சிறுமி — பத்திரிகை செய்தியாளராக வரவேண்டும் என்ற பெரிய கனாவுடன். இவள் தனது கனவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Righteous Kill (2008): கொலையெல்லாம் சரிதான், கதைதான் சரி இல்லை.    
January 15, 2009, 4:23 pm | தலைப்புப் பக்கம்

Robert De Niro‘வும் Al Pacino‘வும் ஆங்கில பட உலகின் மைல் கற்களில் இருவர். இதில் யாராவது ஒருவரைத் தூக்கி ஒரு படத்தில் போட்டால் போதும், படம் ஒரு நல்ல படமாகிவிடும். எனவே இந்த இருவரையும் சேர்த்துப் போட்டால் எதுவுமே பிழைக்காது என்று முற்றுமுழுதாக நம்பி ஒரு படத்தை எடுத்திருக்கின்றார்கள். (இந்த சோடியின் முன்னைய படைப்புக்கள் (The Godfarther II, Heat) வெற்றிப்படங்கள் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Max Payne (2008): புளித்துப்போன பழிவாங்கல்    
January 14, 2009, 9:38 pm | தலைப்புப் பக்கம்

Max Payne ஒரு முன்னாள் துப்பறிவாளர். இவரது மனைவியும், கைக்குழந்தையும் வீடுடைப்பு கொள்ளையின் முடிவில் கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளிக் கும்பலில் இருவரை இவர் பதிலுக்கு கொலைசெய்யமுடிந்தாலும், ஒருவன் தப்பியோடிவிடுகின்றான். அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட காவல்துறை அந்த வழக்கை தீர்க்க முடியாத கேஸ் ஆக தூக்கிப் போட்டுவிட்டு மறந்துவிடுகின்றது. என்றாலும் அதை மறக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Sisterhood of Travelling Pants 2 (2008): அழகான ஒரு இரண்டாம் பாகம்    
January 14, 2009, 6:07 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாவது பாகம். நான்கு நண்பிகள், ஒரு pair of pants. வெவ்வேறு வடிவிலும் அளவிலும் இருந்தாலும் இந்த நான்குபேரிற்கும் அளவாயிருக்கின்றது அந்த pants. அதை தமது நட்பின் சங்கிலிக் கயிறு என்று நம்பும் இவர்கள் மாதத்திற்கு மாதம் அதை மாற்றி மாறி பாவிக்கின்றார்கள்; அது தமது வாழ்வில் நன்மையைக் கொண்டுவரும் என்றும் நம்புகின்றார்கள். இவர்களது வாழ்வின் நாட்குறிப்பேடுபோன்றதே படம். அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Day the Earth Stood Still (2008): சலிப்படைய வைக்கும் மீளாக்கம்    
January 14, 2009, 5:32 pm | தலைப்புப் பக்கம்

1951ஆம் படத்தின் மீள்வடிவம். வெளி உலகில் இருந்து பூமிக்கு வருகை தருகின்றார் Klaatu — மனிதர்களோடு தொடர்பாடல்களை ஏற்படுத்துவதற்காக, மனித உருவத்தோடு. கூடவே பாதுகாப்பிற்காக பிரமாண்டமான ஒரு இயந்திரமனிதனும். New Yorkல் வந்து இறங்கும் Klaatu, ஐ.நா. சபையோடு பேச வேண்டும் என்கின்றார். வழமைபோல மனித இனம் அதை ஒரு அச்சுறத்தாலாக எடுத்துக்கொள்கின்றது. Klaatuவிடம் இருந்து வேறுலகவாசிகளைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Eagle Eye (2008): அனைத்தும் அறிபவள்…    
December 23, 2008, 1:57 am | தலைப்புப் பக்கம்

ஒரு விறுவிறுப்பான sci-fi (விஞ்ஞான கற்பனை) திரைப்படம். எதிர்காலத்தில் மிகவும் தொலவிற்குச் சென்று விடாமால் 2009 ஆண்டு நடப்பதாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள் (சும்மா ஒரு ‘இது’க்குத்தான்!) முன்பின் சம்பந்தமில்லாத கதாநாயகனுக்கும் நாயகிக்கும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றது. என்னவென்று கேட்டால், கேள்வி ஏதும் கேட்காமல் அதைச்செய் இதைச்செய் என்று ஒரு பெண்குரல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Mummy: Tomb of the Dragon Emperor (2008): தேவைதானோ?    
December 22, 2008, 8:28 pm | தலைப்புப் பக்கம்

Mummyஐப் கண்டுபிடித்தார்கள்; அது உயிர்பெற்று எழுந்தது; அதைத் திருப்பியும் கொன்று முடித்தார்கள். இந்த உதவாக்கரை கதையை எப்பத்தான் மூட்டைகட்டி வைக்கப் போறார்களோ தெரியாது!! அதுக்குள் எனது பிரியமான நடிகர்கள் Jet Li, Michelle Yeoh, மற்றும் Maria Belloவை கொண்டுபோய் வீணடித்திருக்கிறார்கள். படத்தில் புதினமாக ஒன்றும் இல்லை; நேரத்தை கொல்லுவதற்குப் பார்க்கலாம். “The Mummy: Tomb of the Dragon Emperor” IMDB Link Posted in ஆங்கிலத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Quantum of Solace (2008): விறுவிறுப்பு தொடர்கிறது    
December 22, 2008, 7:05 pm | தலைப்புப் பக்கம்

Casino Royal கதை முடிந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5 நிமிடம் கழித்து இந்தப் படத்தின் கதை தொடர்கிறது. எடுத்தவுடன் காரில் துரத்தலென்று ஆரம்பிக்கின்றார்கள். Vesperஐ இழந்து கொலைவெறியில் இருக்கும் James Bondஐ தத்ரூபமாக வெளிக்கொண்டுவந்து இருக்கின்றார் Daniel Craig. தனது புலனாய்வின் பாதையில் வரும் எதையும், எவரையும் கரிசனை எதுவுமின்றி தூக்கிப் போட்டுக்கொன்று செல்கிறார். Casino Royalஇன் கதையிலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

War, Inc. (2008): பாதை தவறிய படம்    
September 4, 2008, 4:34 pm | தலைப்புப் பக்கம்

நல்லதொரு நோக்கத்தோடு படத்தை எடுக்கத்தொடங்கிவிட்டு பாதைதவறித் தடுமாறியிருக்கின்றார்கள். உலகத்தில் நடக்கும் போர்கள் எல்லாவற்றிற்கும் பின்னால் வல்லரசுகளின் வணிக இலாபமே உள்ளது என்பதை ஒரு கடி நகைச்சுவை படமொன்றின் மூலம் காட்ட முயன்றிருக்கின்றார்கள். கடைசியில் கடியும் நகைச்சுவையும் இருக்கின்றதே ஒழிய சொல்லவந்த செய்தி பின்புலத்திற்குப் போய்விட்டது. காசிற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

No Country for Old Men (2007): ஆஸ்கார் வென்ற கண்ணாம் பூச்சி ஆட்டம்    
September 4, 2008, 3:40 pm | தலைப்புப் பக்கம்

சில ஆஸ்கார் வென்று செல்லும் படங்களை ரசிக்கவும் இயலாது, ரசிக்காமல் இருக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த படம்’ ஆஸ்கார் வென்ற இந்தப் படமும் அந்தவகையில் ஒன்று. கதையில் எவ்வித புதுமையும் இல்லை. என்றாலும் அந்தக் கதையை எடுத்தவிதத்தை மட்டும் வைத்தே இந்தப் படத்திற்கு ஆஸ்காரைக் கொடுக்கலாம். ஒளிப்பதிவும் அந்தமாதிரி, ஒரு இலக்கண சுத்தமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

In the Valley of Elah (2007): டேவிட்டும் கோலியாத்தும்    
September 3, 2008, 8:57 pm | தலைப்புப் பக்கம்

டேவிட் - கோலியாத் கதையைப் பால்யப் பருவத்தில் படித்திருப்பீர்கள்: மாமேரு மலைபோலிருந்த கோலியாத்தை சின்னஞ்சிறு சிறுவன் டேவிட் கவண்கல்லுக் கொண்டு வெற்றியடைந்த கதை. அந்த டேவிட்-கோலியாத் சண்டை நடந்த பள்ளத்தாக்குக்குப் (valley) பெயர்தான் Ella. அந்த புகழ்பெற்ற கதையை பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் சண்டையோடு ஒப்பிட்டு படம் எடுத்திருக்கின்றார்கள். என்றாலும் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Expired (2007): சிந்திக்கவைக்கின்ற காதல் கதை.    
August 20, 2008, 9:55 pm | தலைப்புப் பக்கம்

சாதாரணமாக காதல் படங்கள் என்றால் அவை chick-flick (பெண்கள் மட்டும் விரும்பிப்பார்க்கும் படம்) என்று முத்திரை குத்தப்படுவது வழமை. நிச்சயமாக அந்த வரையறையை தப்பி நிற்கிறது இந்தப்படம். வீதியோர கார் தரிப்பிடங்களை நெறிப்படுத்தும் வேலை Claireவினது. தவறாக தரிக்கப்பட்ட கார்களிற்கு தண்டம் விதிப்பது Jay’யின் வேலை. வாழ்கையின் நடுப்பகுதியில் ஒண்டைக்கட்டையாக நிற்கும் இருவரும் அடிப்படையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Hunting Party (2007): போரின் கொடுமைகளும், அரசியலும்.    
August 20, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்

போரின் கொடுமையையும், சர்வதேச அரசியலின் அவலங்களையும் எடுத்துக்காட்டும் படம். சோகம், நகைச்சுவை, திகில், விறுவிறுப்பு என்று பலவித உணர்வுகளையும் அவ்வப்போது கலந்தாலும், சொல்லவந்த விடயத்தின் தீவிரத்திலிருந்து சற்றும் விலகாமல் அழகாக படத்தை எடுத்திருக்கின்றார்கள். உலகில் நடக்கும் போர்களின் நடுவில் சென்று தகவல் திரட்டும் செய்தியாளர் Simon Hunt (Rechard Gere); கூடவே ஒளிப்பதிவாளர் Duck (Terrence...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Horton Hears a Who! : “எல்லாரது வாழ்வுமே முக்கியாமானதுதான்”    
August 20, 2008, 8:18 pm | தலைப்புப் பக்கம்

அண்மைக்காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் Jim Carreyஐயும் Steve Carellஐயும் பலர் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. இந்த காட்டூன் படம் இந்த இருவரின் பின்னணிக்குரலையும் பிரதானமான கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தங்கள் பாத்திரத்தை அழகாக உயிரேற்றியிருக்கின்றார்கள். மிகவும் விசுவாசமான, வெள்ளையுள்ளம் கொண்ட யானை Horton (Jim Carrey). ஒரு ஒதுக்குப்புறமான ஒரு குகைக்குள்...தொடர்ந்து படிக்கவும் »

Flawless (2007): சுவார்சியமான வைரக்கொள்ளை.    
August 14, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட காலத்தின் பின்னர் Demi Moore‘இன் ஒரு படம். படம் 1960ஆம் ஆண்டில் லண்டனில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. “London Diamonds” என்பது உலகின் பிரதான வைரக்கல் மையம். தென்னாபிரிக்காவின் பல சுரங்கங்களிருந்தும் வைரக்கல்லை கொள்ளூபடி செய்து உலகின் பலபாகங்களிற்கும் சந்தைப்படுத்தும் நிறுவனம். மில்லியன் கணக்கில் காசு புரளும் இந்த நிறுவனத்தில் பகுதி நிர்வாகியாக இருப்பவர் Laura (Demi Moore). வேலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

The Russell Girl (2008): கைக்குட்டை அவசியம்    
August 10, 2008, 5:14 am | தலைப்புப் பக்கம்

Hallmark என்று சொன்னால் வாழ்த்து அட்டை செய்யும் நிறுவனம் என்றுதான் பலருக்குத்தெரியும். ஆனால் அது திரைப்படங்களையும் தயாரிப்பதுண்டு. Hallmark திரைப்படங்கள் எல்லாவுமே மிகவும் மென்மையானதாகவும், அன்பு, குடும்பம், சமுகம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் மனித உணர்வுகளின் வெவ்வேறு பரிணாபங்களையும் கிண்டிப்பார்ப்பதாக இருக்கும். The Russell Girl உம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Forgetting Sarah Marshall (2008): காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்கு…    
August 9, 2008, 9:56 pm | தலைப்புப் பக்கம்

தயாரிப்பாளர் Judd Apatowஇன் இன்னுமொரு சினம்பிடிக்கவைக்கின்ற நகைச்சுவைப்படம். என்னதான் பாராட்டுப்பட்ட படம் என்றாலும் என்னால் பெரிதாக ரசிக்க முடியவில்லை: ஒன்று உதவாக்கரை கதாநாயகன், அடுத்தது அருவருக்க வைக்கின்ற நகைச்சுவைகள். Chick-flick இல்லாமல், ஆண்களும் ரசிக்கின்றமாதிரி ஒரு காதல்படம் எடுக்க வேண்டும் என்றால், இப்படித்தான் எடுக்கவேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

My Sassy Girl (2008): ஒரு முட்டாள்தனமான காதல் கதை    
August 9, 2008, 9:26 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கொரியன் படத்தின் மீள்வடிவம் (remake). வாழ்க்கையில் எல்லாவற்றையும் திட்டமிட்டு, முறைப்படி செய்துகொண்டிருக்கும் Charlie, கண்டதும் காதல் என்று விழுகின்றான் Jordanஉடன். காட்டுப்பறவைபோல் இருக்கும் Jordanஆல் Charlieயின் வாழ்வு தலைகீழாகின்றது. பல்வேறு கோமாளிக்கூத்துகளிற்குப் பிறகும், காதலை தக்கவைத்துக்கொண்டிருக்கிறான் Charlie. எல்லாக்கூத்துக்கும் உச்சக்கட்டமாக, காரணம் ஏதுமின்றி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

In Bruges (2008): யாரை யார் கொல்வது?    
August 6, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

மிக மிக வித்தியாசமான படம். அது ஏனென்று விபரிப்பது மிகவும் கடினம். படத்தைப் பார்த்துத்தான் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். காசிற்காக கொலைசெய்வது Rayஇன் (Colin Farrell) வேலை. ஒரு கொலை நிகழ்வின்போது தற்செயலாக ஒரு சிறுவனையும் சேர்த்து கொலை செய்து விடுகின்றான் Ray. உடனடியாக இவனையும் இவனது கூட்டாளியான Kenஐயும் (Brendan Gleeson) பெல்ஜியம் நாட்டிலிருக்கும் புறூஜ் (Bruges) என்னுமிடத்திற்கு அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Bank Job (2008): கொள்ளைக்கு பின்பும் திட்டம் தீட்டவும்    
August 6, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

1971ம் ஆண்டு நடந்த லண்டன் லொயிட்ஸ் வங்கி கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். நிலத்திற்கடியில் சுரங்கம் கிண்டி வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறைக்குள் (safety deposit box vault) நுழைந்து கொள்ளை அடித்திருக்கின்றார்கள். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு இற்றைவரைக்கும் தெளிவாகத்தெரியாது, ஏனெனில் அங்கு கணக்கு வைத்திருந்த பெரும்பாலானோர் தாங்கள் என்ன பொருட்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Vintage Point (2008): விறுவிறுப்பு, பல கோணங்களில்…    
August 4, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சம்பவம் நடக்கும்போது, அவரவர் நிற்கும் இடத்தைப் பொறுத்து, ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தைப் வெவ்வேறுவிதமாகப் பார்க்கின்றார்கள். இந்த ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தையும் vantage point என்று சொல்வார்கள். இந்தகோட்பாட்டை வைத்தே இந்த விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கின்றார்கள். ஸ்பெயினில் ஒரு சர்வதேச கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் அமெரிக்க ஜனாதிபதி. இவரைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Miss Pettigrew Lives for a Day (2008): இதயத்திற்கு குளிர்ச்சி    
August 4, 2008, 3:27 pm | தலைப்புப் பக்கம்

1939, இரண்டாம் உலகப்போரின் வாயிற்படியில் நிற்கின்றது London. Miss Pettigrew (Frances McDormand) ஒரு நடுத்தர வயதடைந்த, ஒண்டிக்கட்டையான governess - ஒரு குடும்பத்தின் தேவைகளை மேற்பார்வை செய்யும் வேலை (சாதாரண வேலைக்காரியின் வேலையைவிட சற்றே உயர்ந்த பதவி). ஒரு பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இவர் சாதாரண மக்களின் நெறிகெட்ட வாழ்க்கைகளை ஏற்பதாக இல்லை. தனது கண்ணியங்களை தனது எஜமானர்கள்மீது திணிக்கமுற்படுவதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Dark Knight: ஆக்ஸன் படங்களிற்கு ஒரு புதிய பரிமாணம்    
August 2, 2008, 8:58 pm | தலைப்புப் பக்கம்

எல்லாரும் ஆகா, ஓகோ என்று பாராட்டிய படத்திற்கு போனால் பொதுவாக அது அவ்வளவு தூரம் எழுப்பமாக இருக்காது. அதையும் மீறி பிரமிக்க வைக்கிறது “The Dark Knight” (Batman பாகம் 2)!! எனது நண்பன் படம் முடிந்தவுடன் கூறியது போல: “It’s too good to be true!” - நம்பமுடியாத அளவுக்கு வெழுத்து வாங்கியிருக்கிறார்கள். முதலாவது பாகத்தைப் (Batman Begins) போலன்றி, கதையோட்டத்தில் நேரத்தை பெரிதாக செலவழிக்கவில்லை. எடுத்தவுடனேயே அடிதடி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Wanted (2008)    
July 30, 2008, 5:28 pm | தலைப்புப் பக்கம்

logicஐத் தூக்கி பத்திரமாக ஒரு இரும்புப்பெட்டிக்குள் போட்டு, அதுக்கு ஒரு பெரியதொரு பூட்டும் போட்டு, அதை ஒரு 100அடிக்கு கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு வந்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்!! படத்தின் trailersகளைப் பார்த்தும் அது உங்களிற்குப் புரியவில்லை என்றால், படம் தொடங்கி 5 நிமிசத்திற்குள்ளாவது உங்களிற்குப் அது புரிய வேண்டும். அதைப் பற்றி உங்களிற்கு எவ்வித ஆட்சேபனையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Smart People    
July 27, 2008, 5:17 am | தலைப்புப் பக்கம்

ஒரு சோகமான குடும்பத்தைப் பற்றிய கதை. அதை சற்றே நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். மனைவியின் இறப்பிலிருந்து பலவருடங்களாக மீளமுடியாமல் தவிக்கும் ஒரு பேராசிரியர், தனது வாழ்க்கையின் எல்லாப்பகுதியையும் தானாகவே சிதைத்துக்கொண்டிருக்கிறார். இது அவரை மட்டுமல்லாது அவரின் இரு பிள்ளைகளைகளின் வாழ்க்கைகளையும் பாதிக்கின்றது. இது போதாதென்று ஓசிச்சோற்றுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Nim’s Island    
July 26, 2008, 2:40 pm | தலைப்புப் பக்கம்

ஒரு அப்பாவும், 11வயது மகள் Nimஉம் பசுபிக் சமுத்திரத்தின் நடுவில் உள்ள ஒரு தீவு ஒன்றில் தனியே வசிக்கிறார்கள். அப்பா ஒரு marine biologist (கடல்வாழ் உயிரின ஆய்வாளர்.) Nimஇன் வாழ்க்கை அப்பாவையும், அந்தத்தீவையும், தனது செல்லப்பிராணிகளயும் சுற்றிப்போகின்றது. இவற்றைத்தவிர Nimஇன் பொழுதுபோக்கு ஒரு கற்பனை கதாநாயகன் Alex Roverஇன் சாகசக் கதைத்தொடர்கள். ஆனால் Nimஐப் பொறுத்தவரை Alex Rover ஒரு நிஜ மனிதர்.  உலகின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hancock    
July 24, 2008, 5:20 pm | தலைப்புப் பக்கம்

Hancock ஒரு வித்தியாசமான படம். அதை அப்படியாகவே விளம்பரப்படுத்தியிருக்கலாம் -  அதைவிட்டுவிட்டு படத்தின் trailers எல்லாம் இதை ஒரு நகைச்சுவைப் படமாக சித்தரித்திருக்கின்றன. விளைவு சற்றே ஏமாற்றம். படத்தின் பல்வேறு trailersகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால், படத்தில்வரும் நகைச்சுவைக் கட்டங்களையெல்லாம் (பெரும்பாலும்) பார்துவிட்டீர்கள் என்று அர்த்தம். படம் ஒரு superman மாதிரியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Batman Begins (2005)    
July 23, 2008, 6:52 pm | தலைப்புப் பக்கம்

“Batman: The Dark Knight” படத்தைப் பார்க்க முதல் அதன் முந்திய பாகம் “Batman Begins” பற்றி எழுதிவிட்டுப்போகலாம் என்று பார்க்கிறேன். நீங்கள் ஒரு ஆக்சன் பட ரசிகர் என்றால் “Batman Begins” கட்டாயமாக பார்க்கவேண்டிய ஒரு படம். Batman பற்றி எல்லாருக்கும் தெரியும்; 1989-1997 காலப்பகுதியில் 4 batman திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. இவவாறு இருக்கையில் இந்தப்படத்தில் என்ன விசேசம்? முதலாவது கதையோட்டம்: “Batmag Begins”, batman...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Get Smart    
July 23, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

Steve Carelஐ ஹாலிவூட்டின் புதிய Bill Murray (அல்லது, Jim Carrey) என்று சொல்லலாம். (Bill Murray அல்லது Jim Carrey யார் என்று தெரியவில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது! :-D) மிகவும் சிக்கலான, சிலவேளைகளில் குழந்தைத்தனமான, முகபாவங்களால் நகைச்சுவையை கொண்டுவருவதில் Steve Carel ஒரு விண்ணர்! அவருடன் ஒரு புத்திசாலித்தனமான நகைச்சுவை நிறைந்த உரைநடையையும் இணைத்துவிட பிறக்கிறது வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்ற “Get...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Wall-E: ஒரு காட்டூன் classic    
July 21, 2008, 8:02 pm | தலைப்புப் பக்கம்

பிக்சார் (Pixar) காட்டூன் படங்கள் ஒவ்வொன்றுமே காட்டூன் படங்களின் எல்லையை முட்டிப்பார்ப்பதாகவே இருக்கும் (இன்னமும் நீங்கள் “finding nemo” “incredibles” படங்களைப் பார்க்கவில்லை என்றால், முதலில் அதைச்செய்யுங்கள்!!); Wall-E அந்த எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததுமட்டுமல்ல, அதையும் தாண்டிச்சென்றுவிட்டது. போர்வைக்கு ஒரு சிறுவர்களுக்கான காட்டூன் படமாகத்தோற்றம் தந்தாலும், உள்ளுக்குள் Wall-E...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்