மாற்று! » பதிவர்கள்

Thanjavure

தஞ்சாவூர் ஓவியங்கள்...THANJAVUR PAINTINGS...    
May 18, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

தஞ்சாவூர், மதுரை நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆளத் தொடங்கிய நாயகர் ஆட்சியின்போது ஆந்திராவின் ராயலசீமா பகுதியிலிருந்து ஓவியக் குடும்பங்கள் தமிழ் மண்ணில் வந்து வாழத்தொடங்கின. தஞ்சாவூர் பாணி ஓவியங்கள் அவர்களால் குலத் தொழிலாக படைக்கப்பட்டன. தஞ்சாவூர்- திருச்சி பகுதியில் ‘ராஜு’ என்றும் மதுரையில் ‘நாயுடு’ என்றும் அவர்கள் அறியப் பட்டனர்.பொதுவாக பெரிய அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

தீமிதி திருவிழா...FIRE WALKING FESTIVAL...IMAGES    
May 2, 2008, 11:55 pm | தலைப்புப் பக்கம்

தீமிதி திருவிழா தென்னிந்தியாவில் தோன்றியது. வழக்கமாக ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் விழா இது. மகாபாரதக்கதையின் திரெளபதி மாரியம்மனின் அவதாரமாக கருதப்படுகிறார். தீமிதி திருவிழாவிற்கு முன்பாக மகாபாரதக்கதை கூறப்படும். சில இடங்களில் நாடகமாக நடிக்கப்படும். இந்தியாவில் மட்டுமல்லாது சிங்கப்பூர், மலேசியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் தென்னிந்தியர்கள் அதிகமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் சித்திரம்

தடம் பதிக்கவேண்டும்......தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள்............    
April 3, 2008, 12:47 am | தலைப்புப் பக்கம்

தாய்த்தமிழ் மழலையர் தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தின் புதிய வரவல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயக்கமாக விரிவடைந்து வேரூன்றத் தொடங்கியுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 63 தாய்த்தமிழ் மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவை காலத்தின் கட்டாயம்.இவை எண்ணிக்கையில் குறைவானவை. எளிமையானவை; மேலும் உண்மையான தமிழுணர்வில் முகிழ்த்து எழுந்தமையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

ப்ரஹன் நாட்டியாஞ்சலி    
March 15, 2008, 11:35 pm | தலைப்புப் பக்கம்

மகாசிவராத்திரியை ஒட்டி நடைபெறும் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், சிதம்பரம் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம்.2008 ஆம் ஆண்டில் மார்ச் 5 முதல் 10வரை தஞ்சாவூர் ப்ரஹன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தஞ்சாவூரில் இயங்கும் தென்னக பண்பாட்டு மையம், மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோரின் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடைபெற்றது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

வடுவூர் ஏரிக்குப்போவோம்.........வாங்க!    
March 11, 2008, 11:30 pm | தலைப்புப் பக்கம்

வடுவூர் இப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள பறவைகள் புகலிடம் ஆர்வலர்களின் கண்களில்பட்டு ஆட்சியாளர்களின் கவனத்தைத்தொட்டது 1990ல் தான். பக்கத்தில் உள்ள நகரம் தஞ்சாவூர். அரைமணிநேர கார் பயணம். வெறும் 25 கிலோமீட்டர்!40 வகையான பறவைகள் இங்கே வலசை வந்து ஏரியில் உள்ள கருவேல மரங்களில் தங்கி குடும்பத்தை பெருக்கிக்கொண்டு செல்லுகிறார்கள். அதற்கு ஒத்தாசை செய்வது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்