மாற்று! » பதிவர்கள்

Srimangai(K.Sudhakar)

எங்கூரு பேப்பருலா!    
March 3, 2009, 9:59 am | தலைப்புப் பக்கம்

போன வருடம் விநாயக சதுர்த்திக்கு இரு வாரங்கள் முன்பு சிவனே என சிக்னலுக்காகக் காத்திருந்தபோது , குறுக்காகச் சென்ற மும்பை நகரப் பேருந்தைப் பார்த்து என் மகன் கத்தினான் “ அப்பா , என்னமோ தமிழ்ல எழுதியிருக்காங்க”. கொட்டையெழுத்தில் “மும்பையில் விரைவில் வருகிறது - தினத்தந்தி” என விளம்பரம் பார்த்து வியந்தேன். அட, நம்மூரு சமாச்சாரம்..தினமலர், மாலைமுரசு எனப் பல பேப்பர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் வாழ்க்கை

உலகத் தமிழன்?    
March 1, 2009, 3:35 am | தலைப்புப் பக்கம்

”இத்தனை பேரு சாகறாங்களே? இதே சண்டை பங்களாதேஷ்-ல நடந்திருந்தா பிரணாப் முகர்ஜி என்ன செஞ்சிருப்பாரு?” கேட்டவன் தமிழனில்லை. ப்ரமோத் ஷிண்டே என்னுடன் பணிசெய்யும் ஒரு சாதாரண மும்பைக்காரர். 7.20 ரயிலில் டோம்பிவில்லியில் தொத்தி, காட்கோப்பரில் இறங்கி அவசரமாக ஒரு பேருந்தில் திணிபட்டு , ஐ.ஐ.டி பவாய் அருகில் துப்பப்படு, அலுவலகத்திற்கு கசங்கி வரும் ஒரு பெயரில்லா மும்பைக்கர்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் ஈழம்

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?    
September 10, 2008, 9:10 am | தலைப்புப் பக்கம்

இந்தி, இந்தியாவின் தேசிய மொழியா?இந்தனை நாள் கழித்து எழுதவர்றவன் ஒழுங்கா வேற எதாச்சும் எழுதக்கூடாதா? எனக் கோபப்படுபவர்கள் சிறிது பொறுக்கவும்.ஜெயா பச்சன் குண்டக்க மண்டக்க எதோ பேசப்போக, ராஜ் தாக்கரே வரிந்துகட்டிக்கொண்டு " உ.பி பையாக்களே, அலகாபாத் ரயில் இந்த பிளாட்பாரத்தில் வரும்" எனக் கையை காடியது நேற்றுத்தான் என்றாலும்..."சரிடே, என்னதான் இருந்தாலும், இந்திதானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சமூக இடைவெளி ( முடிவு)    
March 8, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

சில நாட்கள் முன் மீண்டும் ரோஷனை சந்தித்தேன். சட்டென வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது." அந்தப் பையனை வேலைக்கு எடுத்த்தீர்களா? " என்றேன். சுத்தமாக அந்த நேர்முகத்தேர்வு நிகழ்ச்சியை மறந்தே போயிருந்தான்."ஆங்.. ஞாபகமில்லையே" என்று சிரமித்தவன், " அவன் பேர் தெரியுமா?" என்றான்."தெரியாது" என்றேன். "எத்தனையோ பேர் வர்றாங்க. யாருன்னு எப்படி கண்டுபிடிக்கறது" என்று ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சுஜாதா - சில எண்ணங்கள்    
February 29, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவின் மரணம் குறித்து மரத்தடியில் அறிந்தேன்.ஒரு மானசீக வழிகாட்டியை தொலைத்திருக்கும் கனத்தில் மனசு இடறியதில் கொஞ்சம் எழுதத் தோன்றியது.அவரது கதைகளின் மூலமே கொஞ்சம் தரமான கதைகள் பக்கம் கால்வைத்த பலர் உண்டு.குறிப்பாக 70, 80களில் "அட, இப்படியும் போகுமா கதை?" என ஆச்சரியமாக சிறுகதைகள் படித்தவர்களில் நானும் ஒருவன். "ராகினி என் வசமாக' என்ற கதையின் இறுதியில் " நான் இறங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சமூக இடைவெளி (4)    
January 13, 2008, 6:16 pm | தலைப்புப் பக்கம்

சமூக இடைவெளி (4)அடிப்படையில் கிராம, ரெண்டுங்கெட்டான் நகர வளர்ப்பில் ஒரு பிழை.அடக்கம் என்பது கோழைத்தனம் இல்லை. கர்வத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு மெல்லிய இடைவெளி இருக்கிறது. நல்ல பையன் என்றாலே நாம் என்ன சொல்லிக் கேட்டிருக்கிறோம்?. "அடக்கமா இருக்கணும். கேட்டால் மட்டுமே பதில் சொல்லணும். கீழ்ப்படியணும்" இது விபரீதமானது. தைரியத்தைக் குறைத்த மாணவன் நல்ல பையனாகிறான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கல்வி

சமூக இடைவெளி (3)    
January 13, 2008, 6:13 pm | தலைப்புப் பக்கம்

சமூக இடைவெளி (3)இண்டர்வியூ பற்றி மேலும் தொடருமுன் ஒரு சிறுநிகழ்ச்சி குறித்து....இரு நாட்கள்முன் அகமதாபாத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் எங்கள் மென்பொருள்குறித்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது.சென்னையிலிருந்து - தெரியாத எண். " உங்கள் கடனட்டையின் பேரில் பெர்சனல் லோன் தருகிறோம்" பலான வங்கியின் கால்? எரிச்சலோடு எடுத்ஹ்டேன். தன்னை சுருக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சமூக இடைவெளி-2    
January 6, 2008, 9:58 am | தலைப்புப் பக்கம்

சமூக இடைவெளி-21985 என நினைக்கிறேன். தூத்ஹுக்குடியில் இளநிலை இயற்பியல் படித்த காலம். துறைமுகக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு இளைஞர் குழு அமைத்து நாங்கள் தடுமாறி உலகம் கண்ட நாட்கள் அவை.ஸ்பிக் கம்பெனியிலிருந்து திரு. ஜி.டி.ஷர்மா அவர்களை ஒருமுறை எங்கள் குழுவில் பேச அழைத்திருந்தோம். மெலிதான உடல். சீரான தாடியுடன் அவரது தோற்றம் எங்களை அசர வைத்திருந்தது. சிறிது காலம் முன்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சமூக இடைவெளி -1    
January 6, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்

சமூக இடைவெளி-1ஒரு மாதம் முன் டிஜிட்டல் டிவைட் ( Digital Divide)குறித்து என் நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். " இதைவிட தீவிரமாக நாம் ஆலோசிக்கவேண்டிய இடைவெளி ஒன்று இருக்கிறது" என்றேன் நடுவில் புகுந்து. "தெளிவாக எனக்கு அதனைப் பெயரிடத் தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொருத்தமாக இருக்கலாம்" என்றேன் ஒரு முன்னுரையாக. நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை.. அலுவலக வேலைகலை முடித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்