மாற்று! » பதிவர்கள்

Sridhar Narayanan

மேற்கிலிருந்து கிழக்கே - 1    
July 25, 2009, 5:33 am | தலைப்புப் பக்கம்

ஏறக்குறைய இரண்டு வருடமாக அமெரிக்க மேற்கு கடற்கரை ஓரமாக Bay Area என்று சொல்லப்படும் சிலிக்கன் பள்ளதாக்கில் குப்பை கொட்டிவிட்டு இப்பொழுது கிழக்கு கடற்கரைக்கு வேலை நிமித்தமாக பயணமாகிறேன். இக்கரையிலிருந்து அக்கரைக்கும் கிட்டத்தட்ட 3000 தூரம் இருக்கும். Coast-to-Coast கார் பயணம் செய்ய வேண்டும் என்று ரொம்ப நாட்களாக ஒரு ஆசை உண்டு. இந்த இடமாற்றத்தை சாக்கிட்டு அந்தப் பயணத்தை செய்து விட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உஷ்! சைலன்ஸ்!    
July 8, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

’Silence' என்ற பலகையை பெரும்பாலும் நூலகத்திலும், ஆஸ்பத்திரிகளிலும்தான் பார்க்க முடியும். சிறு வயதிலிருந்தே நூல்களோடு பரிச்சயம் அதிகம் இருந்தாலும், நூலகங்களோடு அதிகப் பரிச்சயம் இல்லை. காரணம் எனது மாமா வீட்டிலேயே பீரோ பீரோவாக பைண்ட் புத்தகங்களாக பெரிய நூலகமே வைத்திருந்தார். எல்லா வார / மாத இதழ்களும் வீட்டிலேயே கிடைத்ததனால் நூலகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதேயில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை புத்தகம்

திருத்தி எழுதியவன்    
February 28, 2009, 5:35 am | தலைப்புப் பக்கம்

வசுமதி அக்கா நல்ல நெகுநெகுவென்று உயரமாக செம்பு நிறத்தில் இருப்பார். சாட்டை போல் நீண்டிருக்கும் பின்னலை முன்னாடி எடுத்து விட்டு நீவிக் கொண்டே காதருகே குனிந்து ‘என்னதான் சொல்றார் உங்க சார்?’ என்று அவர் கேட்கும்போது கண்களில் குறும்பு மின்னும். பாலமுருகன் சார் கொடுக்கும் கடிதத்தை பாதுகாப்பாக அரைஞான் கொடியின் பக்கவாட்டில் சொருகி வைத்திருந்து வசுமதி அக்காவிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

7 திரைப்படங்கள்    
November 27, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தை பின்னிரவில் பார்ப்பது சமீபத்திய வழக்கமாகி விட்டது. இந்த genre என்று இல்லாமல் ஏற்கெனவே பார்த்தவர்களின் சிபாரிசை மட்டும் வைத்துக் கொண்டு படங்களை தேடிப் பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் பார்த்த ஏழு படங்களைப் பற்றி குட்டி விமர்சனங்கள். மற்ற தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.The Lives of Others (German) சென்ற வருடத்தின் சிறந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

முட்டாள் பெட்டி    
November 9, 2008, 10:08 pm | தலைப்புப் பக்கம்

'நீங்கள் ரெகுலராக டிவி பார்ப்பவரா?''ஆமாம்'.'டிவியில் உங்களுக்கு பிடித்தது என்ன?''டிவியை அணைக்கும் சுவிட்ச்தான்'மிகப் பழைய ஜோக். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறேன். அதற்கு முன்னால் வாராந்திர விடுமுறையானாலும், இல்லை விநாயகர் பிறந்த விடுமுறை தினமானாலும், டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்தான். வாஸ்து பிரகாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தொடர்ச்சியாக - சரோஜா முதல் சாருவரை    
September 9, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

சரோஜா - வெங்கட் பிரபுவின் இரண்டாவது படம். முதல் படம் பிரம்மாண்டமான வெற்றியான இயக்குநர்கள் பலர் இரண்டாவது படத்தில் சறுக்கியிருக்கிறார்கள். விதிவிலக்குகள் வெகு சிலர்தான். வெங்கட் பிரபு தப்பித்துவிட்டார். ஒரு புத்துணர்ச்சி படம் முழுவதும் விரவி இருக்கிறது. ஃபார்முலா கதை, க்ளிஷேக்கள் போன்றவற்றை கவனமாக தவிர்த்துவிட்டு படத்தை வெகு திறமையாக இயக்கியிருக்கிறார். நான்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் திரைப்படம்