மாற்று! » பதிவர்கள்

Siddharth

காட்சியாய் வாழ்தல்    
September 21, 2008, 9:00 pm | தலைப்புப் பக்கம்

“கார்னகி மெலன் பல்கலைக்கழக நண்பர்கள், நமது தேவாலயம், உற்றார் உறவினர் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். நீங்கள் செய்த அனைத்திற்கும் கடமைப்பட்டுள்ளோம். இந்த கதைக்கு சுகமான முடிவு இல்லை, மன்னிக்க வேண்டும்.” - ராண்டி பாஷ் [Randy Pausch] (ஆகஸ்ட் 27, 2007). ராண்டி பாஷ் - குடும்பத்துடன். கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியரான ராண்டி பாஷுக்கு கணைய புற்றுநோய் இருப்பது 2006ஆம் ஆண்டின்...தொடர்ந்து படிக்கவும் »

குறுங்கதை மொழிபெயர்ப்பு    
May 21, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

Selected Shorts என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் நியூ யார்க் நகரில் உள்ள Symphony Space என்ற அரங்கில் நிகழ்த்தப்படுகிறது. சிறுகதை என்ற வடிவத்தை கொண்டாடுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். ஒவ்வொரு மாதமும் தேர்ந்த மேடை நடிகர்களை கொண்டு சிறந்த சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சி நியூ யார்க் வானொலியில் ஒலிபரப்பாகிறது. New York Public Radio இவற்றை பாட்காஸ்டுகளாக(Podcast) இணையத்திலும் வெளியிடுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சொல் விரிவு - இரு புறநானூற்றுப் பாடல்கள்    
April 14, 2008, 5:29 am | தலைப்புப் பக்கம்

விதிர்²-த்தல் [ vitir²-ttal ] 11 v vitir. [T. Tu. vedaru, K. bidiru.] intr.–1. To tremble, quiver; நடுங்கு தல். 2. To be afraid; அஞ்சுதல். (W.)–tr. 1. To scatter, throw about; சிதறுதல். சொல் என்பதோர் ஒலி வடிவம். சொற்களால் ஆனதல்ல மொழி. சொல் எவற்றின் ஒலியாகிறதோ அவற்றால் ஆனது மொழி. இரு சற்றே மாறுபட்ட பொருட்கள் ஒரே சொல்லை குறிப்பானாய் கொண்டிருப்பதும், இடம் பொறுத்து அர்த்தம் கொள்ளப்படுவதும் வழக்கம் தான். புறநானூற்று கவிதைகள் இரண்டு. இரண்டிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

விடியற்பொழுதின் தோழமை - குல்சார் மொழிபெயர்ப்பு    
April 11, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

இரவின் சஞ்சலம் பனியென இறங்கி மனதினை கனம்கொள்ளச்செய்கிறது விடியற்பொழுதுகளில். எப்புள்ளியிலும் குவிமையம் கொள்ளாது கனத்துக்கிடக்கும் மனதினை ஒன்றும் செய்வதற்கில்லை, பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர. துஞ்சுதல் சாத்தியமற்ற இது போன்ற பொழுதுகள் கவிதைகளுக்கு உரியவை. இன்று அதிகாலையில் இணைய வேட்டையில் சிக்கியவை குல்சாரின்  மூன்று உருது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மோரியோடான செவ்வாய் கிழமைகள் - 4    
April 10, 2008, 2:49 pm | தலைப்புப் பக்கம்

ஒளியும் ஒலியும் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள். ஏ.பி.சி தொலைக்காட்சியின் “நைட்லைன்” நிகழ்ச்சியை நடத்தும் டெட் கோப்பலின் கார்  மேற்கு நியூட்டன், மாஸஷூடஸ்சில் உள்ள  பனிபடர்ந்த மோரியின் வீட்டை அடைந்தது…  இப்போதெல்லாம் மோரி எந்நேரமும் சக்கர நாற்காலியிலேயே இருந்தார். தன்னை தனது உதவியாளர்கள் சாக்கு மூட்டையைப் போல படுக்கைக்கும் நாற்காலிக்கும் மாற்றுவதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

மோரியோடான செவ்வாக்கிழமைகள் - 3    
April 7, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

மாணவன் அந்த கோடை நாளில் எனது பேராசிரியரை கட்டிப்பிடித்து, தொடர்பில் இருப்பேன் என கூறிய பிறகு எனக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்த கட்டத்தில் சொல்ல வேண்டும். நான் அவருடன் தொடர்பில் இருக்கவில்லை. உண்மையில், என்னுடன் பியர் குடித்த தோழர்கள், நான் முதன்முதலில் படுத்துறங்கி விழித்தப்பெண் என நண்பர்கள் பலருடனும் எனக்கு தொடர்பற்றுபோயிருந்தது. பட்டமளிப்பிற்கு பின் வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அலகிலா சாத்தியங்களினூடே….    
March 9, 2008, 6:54 pm | தலைப்புப் பக்கம்

ஒரு படைப்பிற்கு, படைப்பாளியை தருவது என்பது அப்படைப்பிற்கு ஓரு முற்றுப்புள்ளியை, முடிவான அடையாளத்தை தந்து, “எழுதுதலை” முடித்துவைக்கும் செயலாகும். - ரோலண்ட் பார்த்தெஸ் (”ஆசிரியனின் மரணம்” கட்டுரையில்) நான் வாசித்தவரை, குறுந்தொகையை உரையாடல்களின் தொகுப்பு என பொதுவாக வகைப்படுத்தலாம். தலைவியும் தோழியும் தலைவனும் தோழனும் தத்தமக்குள் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

நுண்ணோக்கு - தொலைநோக்கு - ஓர் மட்டைப்பந்து    
January 16, 2008, 1:42 pm | தலைப்புப் பக்கம்

நுண்ணோக்கு - தொலைநோக்கு - ஓர் மட்டைப்பந்து மட்டை விட்டகன்று நேர்கோட்டில் பயணித்து எல்லையில் நின்றவனின் கைநழுவி சாலையில் வழிந்தோடிய சிறுபந்து என் பாதம் தொட்டு நின்றது. வரும் வழியில்… சில்லரை திருட்டிற்காய் சிக்கி கடைசி கணம் தப்பித்ததை குறித்த மட்டைக்காரனின் நினைவையும் கிடைக்கவிருந்த முத்தம் கைப்பட்டுச்சிதறிய கண்ணாடிக்கோப்பையின் ஒலி பாய்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் - 2    
January 8, 2008, 6:39 am | தலைப்புப் பக்கம்

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் அத்தியாயம் இரண்டு பாடத்திட்டம் அவரது மரணம் 1994ன் கோடையில் வந்தது. யோசித்துப்பார்க்கையில், அதற்கு வெகு முன்பே ஏதோ கெட்டது வரப்போகிறதென அவருக்கு தெரிந்துவிட்டதென்றே தோன்றுகிறது. நடனமாடுவதை நிறுத்திய நாளே அவருக்கு தெரிந்துவிட்டது. எனது முதிய பேராசிரியர், எப்போதுமே நடனக்காரராகவே இருந்தார். இசை பற்றிக் கவலையில்லை. அதிரடி இசை, மெல்லிசை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பாரதிராஜாவின் மண்ணின் மைந்தர்கள்    
October 25, 2007, 6:08 am | தலைப்புப் பக்கம்

சென்ற நூற்றாண்டின் கடைசியில் - சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1894ல் - பிரான்ஸில் இருந்த ஜெர்மானிய தூதரகத்தின் அறை ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருந்த பிரென்ச் வேலைக்காரியின் கைகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண் : ஆண்டாள் திருப்பாவை - 19    
July 30, 2007, 4:06 pm | தலைப்புப் பக்கம்

குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக் கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய் மைத் தடம் கண்ணினாய் நீ...தொடர்ந்து படிக்கவும் »

பின்னிரவும் கபிலரும் சந்தித்த போது…    
July 28, 2007, 7:53 pm | தலைப்புப் பக்கம்

இரு குறுந்தொகை கவிதைகள். கபிலர் எழுதியவை. இரண்டையுமே பெண்கள் பாடுகிறார்கள், இழப்பின் வலியின் வெளிப்பாடாய். இக்கவிதைகளின் அழகியல் அப்பெண்கள் தங்களது இன்னலுக்கு இயற்கையை சாட்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உந்து மத களிற்றன் : ஆண்டாள் திருப்பாவை - 18    
July 28, 2007, 7:57 am | தலைப்புப் பக்கம்

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப் பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின...தொடர்ந்து படிக்கவும் »

அம்பரமே தண்ணீரே : ஆண்டாள் திருப்பாவை - 17    
July 27, 2007, 7:28 pm | தலைப்புப் பக்கம்

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய் அம்பரம் ஊடறுத்து ஓங்கி...தொடர்ந்து படிக்கவும் »

ஔவையின் அகவன் மகள்    
July 21, 2007, 9:39 am | தலைப்புப் பக்கம்

  அகவன் மகளே அகவன் மகளே மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல் அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டேஅவர் நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே. -ஔவையார். (குறுந்தொகை - 23) அகவனின் மகளே, அகவனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மிளைப் பெருங்கந்தனாரும் கலாப்ரியாவும்    
July 20, 2007, 9:21 pm | தலைப்புப் பக்கம்

கலாப்ரியாவின் “வனம் புகுதல்” என்ற கவிதைத் தொகுப்பில் இரு கவிதைகள். “தெரு விளக்கு”, “வீதி விளக்குகள்” என்ற அந்த இரு கவிதைகளிலும், “திடீரென அணைந்த நேரம் கள்ளன் போலீஸோ கல்லா மண்ணாவோ” என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கடந்து சென்ற கவிதைகள் சில    
July 18, 2007, 9:12 pm | தலைப்புப் பக்கம்

மனதிற்கு மிக அருகில் வந்த கவிதைகளை, எக்காலத்தைச் சேர்ந்தவையாயினும், அவற்றை “கடந்து சென்ற கவிதைகள் சில” என வகைப்படுத்தி இங்கு பதித்து வைக்கலாம் என பார்க்கிறேன். தேவதைக்கதைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை இலக்கியம்

மணிக் கதவம் தாள் திறவாய் : ஆண்டாள் திருப்பாவை - 16    
July 14, 2007, 12:46 pm | தலைப்புப் பக்கம்

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய் ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

கவிதையில் ஓர் உரையாடல் : ஆண்டாள் திருப்பாவை - 15    
July 12, 2007, 8:02 am | தலைப்புப் பக்கம்

எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ சில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் : ஆண்டாள் திருப்பாவை - 14    
July 11, 2007, 10:09 am | தலைப்புப் பக்கம்

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார் எங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

புள்ளின் வாய் கீண்டானை - ஆண்டாள் திருப்பாவை - 13    
July 10, 2007, 9:58 am | தலைப்புப் பக்கம்

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் : ஆண்டாள் திருப்பாவை - 12    
July 9, 2007, 6:41 am | தலைப்புப் பக்கம்

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய் பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச் சினத்தினால் தென்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி : ஆண்டாள் திருப்பாவை 11    
July 7, 2007, 10:04 am | தலைப்புப் பக்கம்

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து  செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்  குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே  புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்  சுற்றத்து தோழிமார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? : ஆண்டாள் திருப்பாவை - 10    
July 6, 2007, 9:59 am | தலைப்புப் பக்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய். மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ! - ஆண்டாள் திருப்பாவை - 9    
July 5, 2007, 5:05 am | தலைப்புப் பக்கம்

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும் மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

கீழ்வானம் வெள்ளென்று : ஆண்டாள் திருப்பாவை - 8    
July 4, 2007, 4:57 am | தலைப்புப் பக்கம்

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

கீசு கீசு என்று எங்கும் : ஆண்டாள் திருப்பாவை - 7    
July 3, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிரரவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

புள்ளும் சிலம்பின காண்… ஆண்டாள் திருப்பாவை - 6    
July 2, 2007, 5:47 am | தலைப்புப் பக்கம்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஆண்டாள் திருப்பாவை - பாடல் 5    
July 1, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெரு நீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஆண்டாள் திருப்பாவை - பாடல் 4    
June 30, 2007, 9:19 am | தலைப்புப் பக்கம்

  ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஆண்டாள் திருப்பாவை - பாடல் 3    
June 29, 2007, 8:05 am | தலைப்புப் பக்கம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஆண்டாள் திருப்பாவை - பாடல் 2    
June 28, 2007, 5:40 am | தலைப்புப் பக்கம்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்     செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி     நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

இதயதேவி - வைக்கம் முகம்மது பஷீர்    
June 5, 2007, 3:03 pm | தலைப்புப் பக்கம்

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது. நினைவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அழைப்பு - சிறுகதை    
June 3, 2007, 7:35 pm | தலைப்புப் பக்கம்

மூலம் : ஓ. வி. விஜயன் ******* அவனது நினைவுகள் அந்த அழைப்பில் இருந்தே தொடங்கின, “போதவிரதா!” அவன் பதில் கூறினான், “இதோ நான் வந்துவிட்டேன்!” “போதவிரதா!” தாய் அழைத்தார், தந்தை அழைத்தார், ஆசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் கதை

கடல் குறித்த சில பகிர்வுகள்    
June 3, 2007, 12:29 pm | தலைப்புப் பக்கம்

நிலவைச் சுமந்த நடுக்கம் அகலவில்லை கடலுக்கு இந்த அமாவாசை இரவிலும்… * கடலின் பிம்பமென விரிகிறது கரையோரத்து சாலை… * அவனும் கடல் பார்க்கிறான் என நினைத்திருந்தேன் தூண்டிலில் மீனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஓ.வி. விஜயன் - ஓர் அறிமுகம்    
June 3, 2007, 8:37 am | தலைப்புப் பக்கம்

ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)  பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் இலக்கியம்

ஆறு சொற்களில் சில கதைகள்…    
March 10, 2007, 9:37 pm | தலைப்புப் பக்கம்

எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிக புகழ்பெற்ற ஆறு சொல் கதை ஒன்று உண்டு. விற்பனைக்கு: குழந்தை காலணிகள். உபயோகப் படுத்தப் படாதது. (for sale: baby shoes. not used.) இதைப் போலவே 6 சொற்களுக்குள்ளான கதைகளை எழுதச்சொல்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை தமிழ்

அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள் - 1    
February 28, 2007, 11:59 am | தலைப்புப் பக்கம்

அறிவியல் குறித்த பொதுமக்களின் மனப்போக்குகள் - ஸ்டீவென் ஹாக்கின்ஸ் (தமிழில் : சித்தார்த்) நாம் விரும்புகிறோமோ இல்லையோ, நாம் வாழும் உலகம் கடந்த நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்