மாற்று! » பதிவர்கள்

PKP

கூகிள் மாயங்கள்    
May 7, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

கூகிள் சம்பந்தமாக பதிவு போட்டு ரொம்ப நாளாயிற்று. முன்பெல்லாம் கூகிளின் வலைப்பதிவோவென சந்தேகப்படும் அளவுக்கு அடுக்கடுக்காய் கூகிள் பற்றி எழுதியிருக்கின்றேன் ..ம்.ம்..அதெல்லாம் அந்தக்காலம். சமீபத்தில் நான் அறிய வந்த சில கூகிள் மாயங்களை மட்டும் இங்கு பார்க்கலாம்."குருவி" பார்க்கலாம்னு இருக்கீங்களா? சென்னையில் எங்கெங்கு அது ஓடுதுனு தெரியுமோ? தெரியாதுனு வைச்சுக்கங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தொட்டணைத்தூறும் மணற்கேணி    
May 6, 2008, 3:39 am | தலைப்புப் பக்கம்

நாம் ஏற்கனவே இங்கு பேசிய Lyricsplugin சில தமிழ் MP3 பாட்டுகளுக்கும் வேலை செய்கின்றது என நண்பர் கிருஷ்ணமூர்தியும், நண்பர் படகோட்டியும் உறுதிபடுத்தியுள்ளார்கள். ஆனால் அவை தமிங்கிலீஷில் வருவதாக சொன்னார்கள். "பாட்டை ஓட விட்டவுடன் அது இன்டெர்நெட்டிற்குப் போய்த் தேடுகிறது. அதே சமயம் நீங்களும் பாடல் வரிகளைத் தரலாம். அது இணையத் தளத்தில் போய் சேமித்துவிடும். பிறர் அதே Plug-in ஐ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்    
May 4, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

வழக்கமாக எனது பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களெல்லாம் ஒன்றோ அல்லது இரண்டோ வரிகளில் நிற்கும். ஒரு முறை நண்பர் தமிழ்நெஞ்சம் மட்டும் தன் வலைப்பதிவை Google analytics-ல் அலசி மிக விரிவாய் எழுதியிருந்தார். மகிழ்சியாய் இருந்தது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நண்பர் சமீபத்தில் தன் கதையை இங்கு பெரியதொரு பின்னூட்டமாய் இட்டிருக்கின்றார்.அவர் கதை இதோ."Hello PKP நான் உங்களோட பதிவுகளை படிக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சில பதில்கள்    
May 2, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

பக்கத்திலுள்ள படத்தை பார்த்ததும் ஏதோ சீன மொழில் எழுதியிருக்கின்றது என்று தானே நினைக்கின்றீர்கள். அது தான் இல்லை. சீனாக்காரர்களின் கண் போலவே உங்கள் விழிகளையும் 95 சதவீதம் மூடிக்கொண்டு கூச்சக்கண்ணில் இப்படத்தைப் பாருங்கள். வாவ்....படித்திருப்பீர்களென நினைக்கின்றேன்.சரி விஷயத்துக்கு வருவொம்.கடந்த பதிவொன்றில் மீடியா பிளயரில் பாட்டு கேட்பதோடு அதன் வரிகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இலவச குறுஞ்செய்திகள்    
May 1, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்

அவசரமாய் அமெரிக்காவிலுள்ள ஒரு நண்பரை தொடர்புகொள்ள வேண்டுமா? நீங்கள் ஒரு மின்னஞ்சல் செய்தால் போதும். அது அமெரிக்காவிலிருக்கும் உங்கள் நண்பரின் அலைபேசியில் குறுஞ்செய்தியாக கிடைக்கும்.அதற்கான வசதி நெடுநாட்களாகவே இருந்து வருகின்றது.ஆனாலும் உங்களில் தெரியாதோருக்கு மட்டும் இத்தகவல் இங்கே. அதாவது நீங்கள் இலவசமாய் நண்பருக்கு மின்னஞ்சல் வழியாய் குறுஞ்செய்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

மீடியா பிளயரில் பாடல்வரிகள்    
April 28, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

Eminem, Enrique, Eagles என்று ஆங்கில MP3 பாடல்களை அதிகமாய் கேட்கும் ரகமா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் இந்தப் பாடல்களை நீங்கள் உங்கள் கணிணியில் கேட்கும் போது கூடவே அந்த பாடல்களின் வரிகளையும் (Lyrics) காணலாம். அதாவது விண்டோஸ் மீடியா பிளயரானது தன் திரையில் அந்த பாடல் வரிகளை உங்களுக்கு காண்பிக்குமாறு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ் கண்ட சுட்டியில் சென்று Lyrics Plugin for...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ரொம்ப வருத்தம்    
April 27, 2008, 8:56 pm | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவை நான் வெளியிடுவேனென்று என்றுமே நான் நினைத்ததில்லை. சொல்லவேண்டிய சில காரியங்களை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தால் இங்கு சொல்கின்றேன். அப்படி நான் ஒன்றும் புண்ணியவான் இல்லை. நமீதா 200ரூவா ஆபாசம் விசிடி பற்றி பதிவுகளில் கேள்விபட்ட உடனே அதிஷ்டமோ என்னமோ அதற்கான சுட்டியும் நம்மிடம் மாட்டிவிடுகின்றது.எல்லாம் 8 நிமிட கப்சா வீடியோக்கள்.ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பிடிஎப் கோப்புகள் இணைப்பான்    
April 26, 2008, 3:12 pm | தலைப்புப் பக்கம்

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய உலகத் தமிழர்களின் அபிமான நாவலான "பொன்னியின் செல்வன்" PDF வடிவத்தில் இணையத்தில் கிடைக்கின்றது. ஆனால் அதில் ஒரு சிக்கல். இந்த நாவல் Part 1,Part 2a,Part 3c அப்படி இப்படியென துண்டு துண்டாகவே பல Pdf கோப்புகளாக கிடைக்கின்றன. இந்த துண்டுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு கோர்வையில் ஒரே பிடிஎப் ஆக்க விரும்பினேன். அனைத்து பகுதிகளையும் இறக்கம் செய்தாயிற்று....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பரிமளா போன பாதை    
April 23, 2008, 3:42 am | தலைப்புப் பக்கம்

வெள்ளிக்கிழமை என்றாலே பக்கத்து வீட்டு பரிமளாவுக்கு ஏகத்துக்கும் குஷிதான்.ஏனென்றே எனக்கு தெரிந்ததில்லை. கார் சாவியை சுழற்றிச்சுழற்றி ஏதோ ஒரு பாடலை முணங்கிக்கொண்டே அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும் அவள் அரைமணிநேரத்தில் ரெடியாகிவிடுவாள். கிளம்பி போனவள் போனவள் தான். திரும்பிவர நள்ளிரவும் தாண்டிவிடும்.இதையெல்லாம் இங்கு நான் கட்டாயம் சொல்லத்தான் வேண்டுமாவென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

இந்தியா .in    
April 21, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்

இங்கு நீங்கள் பார்க்கும் உலக வரைபடம் சற்று வித்தியாசமானது. அதை சொடுக்கி நீங்கள் பெரிது படுத்திப் பார்த்தால் உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும் கொடுக்கப்பட்டுள்ள டொமைன் பெயரை அது காட்டும்.(இந்தியாவிற்கு .in போன்று)சரி விஷயத்துக்கு வருவோம்.எனது முந்தைய இணையவிலாஸ் பதிவினைத் தொடர்ந்து எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு இங்கு நான் பதிலளிக்கலாம் என்றிருக்கின்றேன்.நண்பர் Thameem...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

வறட்சியான வளர்ச்சி    
April 16, 2008, 3:16 am | தலைப்புப் பக்கம்

கடந்த இருபது ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்ட வளர்ச்சி எத்தனை பிரமாண்டம் எனச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. மேலே படத்தை பார்த்தாலே நன்கு புரியும். 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த 1GB ஹார்டுடிஸ்க்கை தூக்க குறைந்தது இருவர் வேண்டும். இன்றைய 1GB SD டிரைவ் விரல் நுனியில் நின்றுவிடுகின்றது. இது இப்படியேப் போனால் பத்துவருடம் கழித்து விரல் நுனியில் என்ன இருக்கும் என யோசித்துகூட பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »

அலைப்பேசியும் .jar கோப்புகளும்    
April 16, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்

முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இணைய விலாஸ்    
April 15, 2008, 12:24 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கடலூர் நண்பர் சிவாவிடமிருந்து ஒரு பின்குறிப்பு."திரு பிகேபி அவர்களே, உங்கள் பதிவுகள் பலருக்கு உபயோகமாய் இருக்கும். நான் கடலூரில் வெளியிடும் ஒரு விளம்பர இதழில் தங்களின் FREE HIDE FOLDER குறித்து செய்தி (பக்கம் 2ல்) வெளியிட்டுள்ளேன். கவனிக்கவும் -நன்றி, சிவாhttp://tamilnadu-freead.blogspot.comhttp://shiva-telecom.blogspot.com"மகிழ்ச்சியாய் இருந்தது. எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதப்படும் ஏதோ ஒரு விஷயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

விண்டோஸ் ஹீரோஸ்    
April 13, 2008, 7:44 pm | தலைப்புப் பக்கம்

பதிவுகள் போட்டு ரொம்ப நாளாயிற்று. இல்ல இணைய இணைப்பு மக்கர் பண்ணியதால் அதை சரிசெய்யும் வரை அமைதி காக்கவேண்டியிருந்தது. அலுவல் இடத்திலிருந்து பிலாகு பதிக்கும் பாவங்களை செய்யக்கூடாதுவென தனி பாலிசியே வைத்திருக்கின்றேன். மேய்வதோடு சரி. மின்னஞ்சல் வழி தொடர்புகொண்டோரிடம் மட்டும் பேச்சை நிறுத்தவில்லை. இங்கு வருபவர்களில் பலரும் கணிணியையும் அலைபேசியையும் அக்குவேராய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

இப்படியும் ஒரு தமிழ் சேவை    
April 6, 2008, 4:19 am | தலைப்புப் பக்கம்

பலரும் பலவிதமான வழிகளில் சமுதாயத்திற்கு பல சேவைகளையும், தேவையுள்ளவர்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகின்றார்கள். சேவைகளிலே சிறந்த சேவை எது என மகாகவி பாரதியாரை கேட்டால் அவர் சொல்லுவார் "அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி புத்தகம் தமிழ்

கணிணி மொழிகளின் நிலவரம்    
April 4, 2008, 3:39 am | தலைப்புப் பக்கம்

தற்செயலாக இணையத்தில் நீங்கள் பக்கத்தில் காணும் வரைபடத்தை காண நேரிட்டது. இன்று மார்க்கெட்டில் சூடான கணிணி பாஷை எது? எந்த கணிணி புரோகிராமிங் மொழி முந்தி செல்கின்றது? எது பிந்துகின்றது என்பவற்றை இது அழகாய் காட்டுகின்றது. ஜாவா கொஞ்ச நாட்களாகவே சூப்பர்ஸ்டார் தான்.2005-ல் அதற்கு "பாபா" நேரம் போலும். அவ்வருடம் சி அதை முந்தி டாப்பிலிருந்தது. எனினும் பீனிக்சாய் எழும்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ஒண்ணாய் இருக்க கத்துக்கனும்    
April 3, 2008, 2:03 am | தலைப்புப் பக்கம்

மனிதனை ஒன்றாயிருக்க விட்டால் அவன் நம்மளையே கவுத்துடுவான்னு நினைச்சதாலோ என்னவோ கடவுள் ஊருக்கு ஊரு அவனிடையே பிரிவினைகளை விட்டு வைத்தான்.ஜாதியால் அவர்களுக்குள் சண்டை போட விட்டான்,மதத்தால் ஒன்றாய் இருந்தவர்களை பிரிய விட்டான்,மொழியால் பிரியவிட்டு நன்றாக அவர்களை முட்டி மோத விட்டான், கலரால் துரைகள் அடிமைகளென பிரித்து அவர்களை வகைவகையாக்கினான்,நிலத்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வைரஸை படைத்து...    
March 31, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

புதிதாய் ஒரு ஆண்டி வைரஸ் ஸ்கானெரை யாரோ உங்களுக்கு அறிமுகப்படுத்தியதால் அதை இப்போதுதான் உங்கள் கணிணியில் நிறுவியிருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு ஆன்டி வைரஸ் ஸ்கேனர் ஏற்கனவே உங்கள் கணிணியில் ஓடிக்கொண்டிருக்கிறதென வைத்துக் கொள்வோம். இந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது?.அதற்காக எங்காவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

உலக கரன்சிகளில் தமிழ்    
March 27, 2008, 11:52 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.இங்கே உங்கள் பார்வைக்காக அவற்றின் அணிவகுப்பு.மேலே நீங்கள் காண்பது இலங்கை காசுவில் தமிழ்மேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர் காசுவில் தமிழ்மேலே நீங்கள் காண்பது இந்திய பணத்தில் தமிழ்மேலே நீங்கள் காண்பது இலங்கை பணத்தில் தமிழ்மேலே நீங்கள் காண்பது சிங்கப்பூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் தமிழ்

மறைத்து வாழ வேண்டும்    
March 26, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்

மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

மின்புத்தகங்கள் பற்றி    
March 26, 2008, 12:36 am | தலைப்புப் பக்கம்

இணையம் இந்த சமூகத்தில் செய்த இன்னொரு மாயாஜாலம் எங்கோ ஏதோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சாதாரண கலைஞனையும் ஊர் தெரிய சந்திக்கு கொண்டு வந்தது தாம்.ஏற்கனவே புகழ் பெற்று உச்சியிலிருப்போர் காப்பிரைட் பற்றி கவலைப்பட சாதாரண கலைஞனுக்கு காப்பிரைட் பெரிதாய் படவில்லை. அடையவேண்டும் என் கைங் காரியங்கள் உலகமுழுக்க அடைய வேண்டுமென ஆசைபட்டான். எழுதுவோன் பிலாகில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

மைக்ரோசாப்ட் ஆபீஸில் தமிழ்    
March 23, 2008, 11:41 pm | தலைப்புப் பக்கம்

என்னிடம் அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று "எப்படி சார் மைக்ரோசாப்ட் Word டாக்குமென்டில் தமிழில் எழுதறது? தமிழில் எழுதினாலோ அல்லது வேறெங்காவதிருந்து காப்பி பேஸ்ட் பண்ணிணாலோ ஒரு மாதிரி எழுத்துக்கள் கட்டம் கட்டமாய் வருகின்றதே.இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்பதாகும்."சமீபத்தில் இது பற்றி நண்பர் Purushothaman.M.S. என்னிடம் விசாரித்திருந்தார். "வணக்கம், விகடனில் தற்போது UNICODE...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

அருமை எருமையே    
March 22, 2008, 1:09 pm | தலைப்புப் பக்கம்

நியூயார்க், நியூஜெர்சி பகுதிகளில் மட்டும் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். ஒரேயடியாய் 750 மைல்கள் தொலைவிலுள்ள மிச்சிகனில் கடாசிவிட்டார்கள். 12 மணிநேர சாலை பயணம். பெரிதாய் களைப்பு ஒன்றும் இல்லை.வந்து சேர்ந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நாளைக்கு இங்கு தான். மிச்சிகன் ஏரி கடல் போல் கிடப்பது பிரம்மிப்பாய் இருக்கின்றது. அமெரிக்காவை பற்றி ஏழுதி ரொம்ப நாளாகி விட்டது.ஆரம்ப காலங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ?    
March 20, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

ஹாயாக இணையத்தை ஒரு சுற்று மேய்ந்து விட்டு, சில பல தெரிந்த தெரியாத மென்பொருள்களை விளையாட்டாக இறக்கம் செய்து இயக்கிவிட்டு தூங்கிப்போனீர்கள். திடீரென விழித்து பார்த்தால் உங்கள் கணிணி ஹார்ட்டிரைவ் லைட் மின்னி மின்னி பிஸியாக இருக்கின்றது.மோடம் லைட்டுகள் பலவாறாக மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஏதோ மர்மம் அங்கு நடப்பது போல் காட்டுகின்றது. நீங்கள் நினைப்பது போல் இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பாட்டியின் கணக்கு    
March 13, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

"எப்பாவூ! என்ன நகநட்டா வாங்கப் போற,இப்ப வாங்காத, பொங்கலு கழிஞ்சு வாங்கு.கூடுன வெல அப்ப கொறஞ்சு வரும்.இந்த கெழடு அனுபவஸ்தி சொல்றேன் கேளூ"-ன்னு அந்த வயதான பாட்டி அப்போது சொன்னது ஒன்றும் தப்பாய் தெரியவில்லை. அவளை பொறுத்தவரை அவள் காலத்திலெல்லாம் அப்படிதான் இருந்து வந்திருக்கின்றது. பொங்கல் தீபாவளி வந்தால் கல்யாணகாலங்கள் வந்தால் சில சரக்குகளின் விலை கூடுவதும் அப்புறம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

நமக்குள்    
March 12, 2008, 9:49 pm | தலைப்புப் பக்கம்

இங்கே பக்கத்தில் நீங்கள் படங்களில் காணும் அபார அனிமேசன் அசைவுகள் GIF கோப்புகளுக்கேயுரியன.நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.GIF பைலை JPEG ஆக மற்ற முடியுமா?இது பெரிய காரியமல்லவே.எல்லா கணிணியிலும் இருக்கும் Paint எனும் மென்பொருளால் நீங்கள் குறிப்பிட்ட GIF பைலை திறந்து Save as JPEG-னு கொடுத்தால் முடிஞ்சுபோச். அல்லது நண்பர் Jafar Safamarva சொன்னவழியிலும் முயலலாம்.அவர் தீர்வு இதோ"GIF பைலை JPEG ஆக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நான்கு ஆண்டுகள்    
March 9, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

வாய்க்காகவும் வயிற்றுக்காகவும் செய்யப்படும் அன்றாட வேலைகளுக்கும் அப்பாற்பட்டு நாம் ஒவ்வொருவருக்கும் மனதை நிறைவுபடுத்தும் ஒரு பொழுது போக்கு கண்டிப்பாய் இருக்கவேண்டும் என ஒரு பெரியவர் ஒருமுறை சொன்னது நெஞ்சில் அப்படியே ஆணி அடித்தாற் போல் பதிந்து போனது.அவர் அதற்கு சொன்ன காரணம் தினசரி சிக்கல்களிலிருந்து மனது சிறிது திரும்பி இலகுவாய் இருக்கவும், ஓய்வூர்தியம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

எத்தனை திறவுசொல்கள் வைத்தாய் இறைவா    
March 6, 2008, 10:20 pm | தலைப்புப் பக்கம்

அடப்பாவமே! இந்த நவீன மின்னணு உலகில் எத்தனை கடவுசொல்கள் தான் நினைவில் வைத்திருப்பதோ? வங்கி ஏடிஎம் போனால் அங்கு ஒரு கடவு சொல்.ஆன்லைன் பாங்கிங்கில் நுழைந்தால் அங்கு ஒரு கடவு சொல். கிரெடிட்கார்டு கணக்குக்குள் நுழைய இன்னொன்று.ஜிமெயில் பார்க்க இன்னொன்று.அப்பப்போ கவுந்து வயிற்றை கலக்கும் பங்கு சந்தையில் பரிமாற்றம் செய்ய இன்னொரு பாஸ்வேர்ட். இப்படி ஒவ்வொன்றுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இனி மறுக்க முடியாதே    
March 4, 2008, 4:35 am | தலைப்புப் பக்கம்

கத்துக்குட்டி நண்பர் ஒருவருக்கு முக்கிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருந்தேன்.அந்த மின்னஞ்சல் கிடைக்கவேயில்லை-னு அய்யா புரூடா விட்டார்.ஆனால் அவர் அந்த மின்னஞ்சலை படித்தார் என்பதற்கு என்னிடம் சரியான ஆதாரம் உள்ளது.எப்படி?பாஸிடம் ஒரு அனுமதிகேட்டு மின்னஞ்சலிட்டேன். படித்துவிட்டும் அவர் "ஸாரிப்பா படிக்கவில்லை"-ங்கிறார்.எனக்கே டிமிக்கியானு கேட்கலாம் போலிருந்தது.ஆமாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நாமும் ஓர் பயணி    
March 3, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் தனது கடைசிநாட்களில் இப்படிச் சொன்னதாய்ச் சொல்வார்கள். கண் கலங்கி தன்னை பார்க்க வருபவர்களை பார்த்து "எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு முடிவு வந்து தானே ஆகனும். முடிவே இல்லாத ஒரு கிரிக்கெட் ஆட்டம் சுவாரஸ்யமாய் இருக்குமா என்ன?"ன்னு சொல்லி சிரிப்பாராம். எவ்வளவு சரியாய்ச் சொன்னார் பாருங்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வானத்திலே திருவிழா    
February 27, 2008, 1:54 pm | தலைப்புப் பக்கம்

சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உங்களிடமிருந்து    
February 22, 2008, 9:39 pm | தலைப்புப் பக்கம்

பக்கத்திலோடும் 279 KB அளவேயான gif படக்கோப்பு என்னமாய் நீளக் கதை சொல்லுகிறதென பாருங்கள். மிக அருமையல்லவா?. சரி.விசயத்துக்கு வருவோம்.நண்பர் இஸ்மாயில் கனி கேட்டிருந்தார்.ஒரு VIDEO file-லிருந்து தேவையான பகுதி மட்டும் வெட்டி எடுக்க, மற்றும் வெட்டி எடுத்த பகுதிகளையெல்லாம் ஒரு கோப்பாக செய்ய Video cutter or VCD CUTTER செயலி பற்றி அறிய தாருங்களேன்.இலவச வீடியோ எடிட்டரான Virtual Dub -ஐ நீங்கள் முயன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கொஞ்சம் சுயபுராணம்    
February 21, 2008, 8:03 pm | தலைப்புப் பக்கம்

என்னைப் போன்ற சராசரி தமிழ் பேசுபவனுக்கு தெரிந்த சில சமாசாரங்களை, இன்னொரு சாமானிய தமிழனுக்கு சொல்லத் தான் இந்த வலைப்பதிவு இதுவரை ஓட்டப்பட்டு வருகின்றது. வழக்கமாய் வந்து கேள்விகளை கேட்டு, பின்னூட்டங்களை இட்டு உற்சாகப்படுத்தும் அநேக நண்பர்களுக்கு இடையே திடீரென சில நாட்களுக்கு முன்பு ஒரு ஆனந்த அதிர்ச்சி. பிரபல பத்திரிகையாளரும் வெகுஜன எழுத்தாளருமான அன்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பிரிப்போம், சேர்ப்போம்    
February 19, 2008, 2:53 pm | தலைப்புப் பக்கம்

100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் "சாரி"...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

போட்டு தாக்கு    
February 15, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்

நாமெல்லாரும் இருப்போம், கட்டிடங்களெல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பால் நாம் சென்றிருப்போம். என்ன? கால எந்திரம் பற்றி எதாவது கூறுகிறேனென நினைத்தீர்களா? இல்லை நான் இங்கு சொல்ல வருவது ஈ-பாம்(E-bomb) அதாவது மின்காந்த வெடிகுண்டு (Electromagnetic Bomb) பற்றி.நவீன கால இந்த E-bomb ஒரு நகரில் போடப்பட்டால் உருவாக்கப்படும் மாபெரும் மின்காந்த புலமானது அப்பகுதியிலுள்ள அனைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அறிவியல்

Pdf டு Doc    
February 13, 2008, 5:45 pm | தலைப்புப் பக்கம்

நாலும் தெரிந்திருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். இதில் அந்த நான்கும், நான்கு வேதங்களை குறிக்கின்றதா அல்லது நான்கு திசைகளை குறிக்கின்றதாவென தெரியவில்லை. ஆனாலும் நாலு திசைகளிலும் நடப்பனவற்றை நாளும் நாம் அறிந்து வைத்தல் நம்மெல்லாருக்கும் பயனாயிருக்கும்.News-ன் விரிவாக்கம் North East West South ஆக இருக்க இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.கொஞ்சம் தெரிந்த நமக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

வின்டோஸ் சிடி கீ மாற்றி    
February 12, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

தற்போதைய உங்கள் வின்டோஸ் கணிணியின் Product Key என்னவென கண்டுகொள்ளவும், தேவைப்பட்டால் அக்கீயை மாற்றவும் ஒரு இலவச மென் பொருளை நண்பர் தமிழ் நெஞ்சம் அவர்கள் தனது பின்னூட்டம் வழி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.அதன் பெயர் Magical Jelly Bean Keyfinder என்பதாகும். இதனை கீழ்க் கண்ட சுட்டியை சொடுக்கி இறக்கம் செய்து கொள்ளலாம்.Download Magical Jelly Bean Keyfinder v1.51அது சரி.எதற்காக உங்கள் Windows Product Key-யை மாற்ற வேண்டும்?இங்கு நண்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

யுத்தம் ஒன்று    
February 8, 2008, 10:12 pm | தலைப்புப் பக்கம்

புதிய நூற்றாண்டை ஆரம்பிக்கும் உற்சாகத்தில் உலகமே கொண்டாடிக் கொண்டிருக்க இரு வல்லரசுகளுக்கு மட்டும் நெஞ்சம் பக் பக்கென்று கொண்டிருந்தனவாம். Y2K என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் பழுது தவறுதலாய் ஒரு அணுஆயுதப்போரையே தொடக்கிவிடக்கூடாதேவென அவர்களுக்கு அச்சம். அதாவது அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளெல்லாம் தயார் நிலையில் இருக்கின்றன.ஏதாவதொரு மனிதனுக்கோ அல்லது கணிணிக்கோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இலக்கியம்?    
February 4, 2008, 10:07 pm | தலைப்புப் பக்கம்

"சீக்கு பிடித்த கோழி மாதிரி" என்ற வாக்கியத்தில் வரும் சீக்கு எனும் வார்த்தை Sick எனப்படும் ஆங்கில வார்த்தையிலிருந்து இங்கு தமிழுக்கு வந்ததா அல்லது தமிழிலிருந்து அங்கு போனதா? சுத்தமாய் தெரியவில்லை.இத்தனைக்கும் இதுமாதிரியான வார்த்தைகளை படித்த இலக்கியவாதிகள் பயன்படுத்துகின்றார் என நாம் கூறவில்லை. ஆங்கிலம் துளிகூடா அறியா கிராமத்து தமிழச்சிகள் பயன் படுத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மீடியா ஸ்பெஷல்    
January 31, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

பொதுவான மற்றும் தனிநபர் குடும்ப வீடியோக்களை வலை ஏற்றம் செய்வது ஒன்றும் இப்போதெல்லாம் புதிதல்ல. பலரும் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். தனிப்பட்ட அல்லது குடும்ப சம்பந்த பட்ட வீடியோக்களுக்கு கூடுதல் கவனம்செலுத்துதல் நலம். அவற்றை உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடையே அல்லது உறவினர்களிடையே மட்டும் பகிர்ந்து கொள்ள வசதிகள் இது மாதிரி வீடியோ ஷேரிங் சைட்களில் உள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம் ஊடகம்

இன்னா எழுத்துரு இது?    
January 29, 2008, 5:56 am | தலைப்புப் பக்கம்

நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்துருக்களை வைத்துக்கொண்டு தளத்துக்கு ஒரு எழுத்துருவென கணிணியில் நிறுவி கஷ்டப்பட்டு வந்தது அந்தக்காலம். இப்போது யூனிக்கோடு (Unicode) அல்லது ஒருங்கெழுத்து எனப்படும் தமிழ் எழுத்துரு பரவலாக எல்லா இணையதளங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. விகடன் போன்ற விஐபி வெப்தளங்களும் கடைசியாக இந்த எழுத்துருவின் பக்கம் வந்து விட்டன. இன்னும் சில விஐபி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

படம் சுட்டு கதை கட்டு    
January 25, 2008, 8:53 pm | தலைப்புப் பக்கம்

இனிமேலும் புகைக்காத முன்னாள் "புகைவண்டி"யை இப்போது "தொடர்வண்டி" என்கின்றோம். டிஜிட்டல் கேமராக்கள் முலம் உருவாகும் படங்களை இனிமேலும் புகைப்படங்கள் எனலாமா?.தெரியவில்லை. அதற்கொரு வார்த்தை இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கலாம்.நம் விசயத்துக்கு வருவோம்.பிறந்த நாள் விழாவாகட்டும், வளைகாப்பு விழாவாகட்டும் அல்லது வீட்டில் ஏதோ ஒரு குடும்ப விழாவாகட்டும். வரவேற்பறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

உங்கள் கேள்விகள்    
January 24, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

நண்பர் உடன்பிறப்பு கேட்டிருந்தார்.இந்த நர்சரி பாடல்கள் mp3 வடிவில் கிடைக்குமா? கிடைத்தால் பகிர்ந்து கொள்ளவும், நன்றிஇதோ இங்கே சுட்டி கொடுத்துள்ளேன்.Download Nursery Rhymes in Mp3 format. நண்பர் Nijam கேட்டிருந்தார். P.K.P சார் தகவல்களுக்கு நன்றி.மேலும் ஒரு டவுட் சார்.Windows XP,Windows 2003 server ஆகியவற்றில் Administrator-ன் பாஸ்வேர்ட் தவறிவிட்டால் வேறு ஏதாவது வழி உண்டா சார்?உங்களுக்கு கீழ்கண்ட எனது முந்தைய பதிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பறிபோகும் பிரைவசி    
January 23, 2008, 4:09 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாட்களாகவே யாரோ என்னை கண்காணிப்பது போலவும்,நோட்டம் விடுவது போலவும் தோன்றிக் கொண்டே யிருந்தது. இன்றைக்கேனும் எப்படியும் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு யாருக்கும் தெரியாத கண்காணாத பிரதேசத்திற்கு போய்விடவேண்டும் என தோன்றியது.அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டேன்.கையில் செல்போனை வைத்திருந்தால் என் செல்போன் தொடர்பு கொள்ளும் டவரை வைத்து எளிதாய் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வின்டோஸ் XP கையேடு    
January 18, 2008, 1:17 pm | தலைப்புப் பக்கம்

முன்பெல்லாம் பெரிது பெரிதாய் மொத்த மேஜையையும் ஆக்கிரமிக்கும் CRT மானிட்டர்களோடு கூடிய பெருத்த மண்டை கணிணிகள் வந்து கொண்டிருந்தன. இன்று எல்லாமே உலக அழகி கணக்காலும் ஸ்லிம்மாகி விட்டன. கார்ப்பரேட் கியூப்களிலும் சரி அல்லது வீட்டு வரவேற்ப்பறைகளிலும் சரி தட்டை திரை (Flat Screen) கணிணிகள் அணியாய் அணியாய் அலங்கரிக்கின்றன. மேஜையிலும் தாராளமாய் இடம் கிடைக்கின்றது. மடிக்கணிகளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

குழந்தைகளுக்கான கதைகள்    
January 17, 2008, 3:37 pm | தலைப்புப் பக்கம்

இப்பதிவுகளை அல்லது மின்னஞ்சல்களை அவ்வப்போது படிக்கும் நண்பர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் பின்னூட்டங்கள் வழி அல்லது ஈமெயில்கள் வழி கேட்டவண்ணம் இருக்கின்றார்கள். அவர்களுக்கான பதில்களையும் விளக்கங்களையும் என்னால் முடிந்த அளவுக்கு சீக்கிரமாய்,தெரிந்த அளவுக்கு விளக்கமாய் பதிவிக்க முயற்சிக்கின்றேன்.சிலரின் குறிப்பிட்ட தேவைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

விர்சுவல் லேப்கள்    
January 15, 2008, 9:26 pm | தலைப்புப் பக்கம்

இணைய இணைப்புப் பட்டையானது (Bandwidth)நம்மிடையே தடிமனாக தடிமனாக முன்பு சாத்தியமில்லாதன வெல்லாம் இன்று சாத்தியகிக் கொண்டிருக்கின்றன. மெல்லிய டயலப் கனெக்ஸனை வைத்துக்கொண்டு மோடம் வழி டயல் செய்து அது தான்பாட்டுக்கு ஒரு பாட்டுப்பாடிக் கொண்டு விஎஸ்என்எல்லோடு இணைய, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். பின் சிறிது நேரத்தில் இணையஇணைப்பு பட்டென கட்டாகிவிடும். படு பேஜாரா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நீங்கள் கேட்டன    
January 14, 2008, 11:12 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் NIjam இப்படியாக கேட்டிருந்தார்."பிகேபி சார். இந்த "pdf" File களை எதில் ஓப்பன் செய்து படிக்க வேண்டும்"எதாவது ஒரு பிடிஎப் ரீடரை பயன்படுத்தலாம். உதாரணமாய் அடோபி அக்ரோபாட் ரீடர் அல்லது பாக்ஸ்இட் ரீடர் பயன்படுத்தலாம். உங்களுக்காக இங்கே சுட்டிகளை கொடுத்துள்ளேன்.Right click and save.Download Adobe PDF Reader direct linkFoxit PDF Reader direct linkமேலும் இன்னொரு கேள்வி கூட NIjam கேட்டிருந்தார்.PKP, இரண்டு XP SYSTEM ஐ PROXY SERVER மூலம் INSTALL செய்து INTERNET...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

வயர்லெஸ் கீ போர்டு அபாயம்    
December 24, 2007, 5:59 pm | தலைப்புப் பக்கம்

வயர்லெஸ் கீ போர்டு, வயர்லெஸ் மவுஸ் என வைத்துக்கொளல் இப்போதெல்லாம் ஆடம்பர விஷயமல்ல. வீடுகளிலும் அலுவலகங்களிலும் இவை மிக சகஜமாகிவிட்டன. அசோக்நகர் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பின் முதலாவது மாடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு வயர்லெஸ் கீ போர்டுவழி உங்கள் கணிணியில் ஏதோ டைப்புகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அது ஏதோ ஒரு பாங்கிங் சைட் பாஸ்வேர்டாக கூட இருக்கலாம். அதை அப்படியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

கைப்பேசியிலிருந்து கணிணிக்கு    
December 18, 2007, 3:34 pm | தலைப்புப் பக்கம்

ஒரு காலத்தில் கேமரா தயாரிப்பில் கொடிகட்டி பறந்த நிறுவனங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டு இன்றைக்கு உலகில் அதிக அளவு கேமராக்களை தயாரித்து உலகில் உலவவிட்டுக்கொண்டிருக்கிறது "கைப்பேசி நிறுவனம்" நோக்கியா. முன்பெல்லாம் சுற்றுலா செல்லும் போதும் முக்கிய நிகழ்வுகளிலும் மட்டுமே தேடப்படும் கேமராக்கள் இப்போது எல்லாருடைய கையிலும் எல்லா நிமிடமும் செல்போன் வடிவில்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி