மாற்று! » பதிவர்கள்

Online Galatta

எனக்கு பிடித்த கரு. பழனியப்பன்    
May 12, 2008, 1:50 pm | தலைப்புப் பக்கம்

இன்று வெற்றிகரமாக 100+ வது முறையாக 'பிரிவோம் சந்திப்போம்' படத்தை பார்த்தேன். DVD-யில் தான். 2 முறை தான் தியேட்டரில் பார்த்தேன். ஏனோ இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதில் வரும் சாலாவின் (சினேகா) தனிமையை நானும் அனுபவித்து இருக்கிறேன். அதனாலோ என்னவோ எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் அலுப்பதே இல்லை. இப்போதெல்லாம் என் அறையில் default-ஆக இந்த படம் தான் ஓடுகிறது. சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அட்டக்கட்டி, குமரன், கார்த்திக், வாசுகி, மீரா    
May 12, 2008, 1:46 pm | தலைப்புப் பக்கம்

அட்டக்கட்டிக்கு வந்தாலே கதாநாயகிகளுக்கு sound collection மீது ஒரு ஈடுபாடு வந்துவிடும் போல. "பிரிவோம் சந்திப்போம்" படத்தில் தனிமை தாங்காமல் சினேகா தன்னை சுற்றிய சப்தங்களை பதிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன்பு டி.டி-1-ல் வந்த "ரயில் சினேகம்" நாடகத்தில் கதாநாயகி இதையே செய்கிறாள், அதுவும் அதே அட்டக்கட்டியில். நான் 7-வது படிக்கும் போது டி.டி-1 ல் கே. பாலசந்தர் இயக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பட்டிக்காட்டு கிருஷ்ணன் - எண்டமூரி விரேந்திரநாத்    
April 30, 2008, 4:58 pm | தலைப்புப் பக்கம்

இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

காதல் சதுரங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன்    
April 30, 2008, 4:55 pm | தலைப்புப் பக்கம்

இந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

24 ரூபாய் தீவு - சுஜாதா    
April 30, 2008, 4:51 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மாயமாக போன நிலாக்காலம்    
March 3, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

இது என்ன Chicken flu மாதிரி Writer Flu-வா? அடுத்தடுத்து எழுத்தாளர்கள் இறக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார். அந்த துக்கம் அடங்கும் முன்பே இடியென இறங்கியது எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை செய்தி. தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் எவருக்குமே அவரது எழுத்துக்கள் மீது மோகம் இல்லாமல் இருக்கமுடியாது. அவரது "அது ஒரு நிலாக்காலம்" படித்தவுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்    
January 22, 2008, 8:21 am | தலைப்புப் பக்கம்

நான் படித்த ஜெயகாந்தனின் இரண்டாவது நாவல். ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால் இது ஒரு முதிர்ச்சியான & அற்பமான காதல் கதை. அற்பம்? ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'காதல் மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும்'. நாமெல்லாம் காதல் என்று நினைத்து செய்யும் ஆக்கிரமிப்பையும், காதலை ஏற்றுக்கொள்வது என்ற பெயரில் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்