மாற்று! » பதிவர்கள்

N.Kannan

Dr. Seuss' Horton Hears a Who!    
April 27, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

இந்த வருடத்தின் மிகச் சிறந்த கார்ட்டூன் படமாக திகழப்போகிறது "ஹார்டன்" எனும் 20 நூற்றாண்டு நரியின் திரைப்படம்.ஹார்ட்டன் என்பதொரு யானை. காட்டில் பாடம் சொல்லித்தரும் வாத்தியார். பாவம் ஈ, எறும்பிற்குக் கூட குந்தகம் நினைக்காத நல்ல ஜீவன். அது ஜாலியாகக் குளித்துக் கொண்டிருக்கும் போது ஒரு தூசு ப்றந்து வர அதிலிருந்து "உதவி" எனும் குரல் கேட்கிறது. யானைக்குத் தோன்றுகிறது அந்தச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆகஸ்ட் ரஷ்    
April 25, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

அனாதைச் சிறுவன் ஒருவன். அபரிதமான இசை ஞானம் குழந்தையிலேயே. காற்றினிலே வரும் கீதத்தை உணரும் திறன். வண்டின் ரீங்காரம், புல்லின் அசைவு, ஜன்னல் கதவு இழுக்கும் ஓசை..இவையெல்லாம் அவனுக்கு இசை வடிவாய் தெரிகின்றன. இப்பிள்ளை எப்படிப் பிறந்தான்? ஒரு குழுப்பாடகன். நல்ல குரல் வளம் உள்ளவன். ஒரு சாஸ்திரீய இசைக் கலைஞி. அவளுக்கும் இசையில் அதிக ஈடுபாடு உண்டு. இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுஜாதா நினைவுகள்    
March 28, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

இதுதான் நான் பேச நினைத்தது:இரங்கற் கூட்டம் என்பது மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. காக்கைகள் கூட இரங்கற் கூட்டம் நடத்துகின்றன. என்ன கொஞ்சம் கூச்சல், குழப்பம் அதிகமிருக்கும். நாம் ஒப்பாரி வைத்து, குய்யோ, முறையோ என்று கத்துவது போல. ஆனால், யானைகள் மிக நளினமாக இரங்கற் கூட்டங்கள் நடத்துகின்றன. மிக அமைதியாக இறந்து பட்ட உடலைச் சுற்றி நிற்கின்றன. தங்கள் துதிக்கையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அவரின் இருப்பிற்குச் சாட்சி - சுஜாதா    
February 28, 2008, 7:45 am | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்தாளர் சுஜாதா மறைவு குறித்த செய்தி களப்பணியிலிருந்த எனக்கு மின்தமிழ் ஊடாகத்தெரிய வந்தது. செய்தி கொடுத்த "தமிழ்க் கொங்கு" நா.கணேசன் அவர்கள், சுஜாதாவின் பரம ரசிகரான தேசிகனின் வலைப்பதிவை சுட்டியிருந்தார். சுஜாதாவிடம் இல்லாத கதை கூட தேசிகனிடமுண்டு என்பது பிரசித்தி. தேசிகன் ஆடிப்போயிருப்பதை அவர் வலைப்பதிவு சுட்டியது."எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கலக்கல் இசை    
February 20, 2008, 11:15 pm | தலைப்புப் பக்கம்

இதைக் கேட்டு விட்டீர்களோ? தமிழும் வடமொழியும் கலப்பது மணிப்பிரவாளம். தமிழும் ஆங்கிலமும் கலப்பது 'கலக்கல்'. உண்மையில் மிகவும் மெனக்கெட்டு இவ்விசை உருவாகியிருப்பது தெரிகிறது. பல இடங்களில் கிச்சு, கிச்சு மூட்டுகிறது. பல இடங்களில் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இடையிடையே "சொல்றோம் இல்ல" போன்ற தூவல்கள், கடைசியில் எம்.ஆர்.ராதாவின் முத்தாய்ப்பு வசனம். நெத்தியடி சமாச்சாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

மூலிகை - தென்கொரியப் படம்    
February 19, 2008, 11:57 pm | தலைப்புப் பக்கம்

허브 (Heo-beu)அழகு என்பது அவரவர் பார்வையைப் பொறுத்த விஷயம். பெரும்பாலும் நாம் கண்டு கொள்ளாத கருப்பொருளைக் கலைக் கண்ணோடு ஒரு கலைஞன் பார்க்கும் போது சாகா இலக்கியம், சாகாத் திரைப்படம் பிறக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் இவைகளுக்கென்று மிக நீண்ட பாரம்பரியமுண்டு. ஆனால் கொரியாவிற்கு அத்தகைய பாரம்பரியம் கிடையாது. ஆனால், ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பின் வீறுகொண்டு எழுந்த கொரியா இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கூட்டத்தோடு கோவிந்தா!!    
February 13, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

நான் இசை ஞானம் அற்றவன் என்று சொல்ல முடியாது. உண்மையில் கர்நாடக இசை எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற இசைகளும் கூட. அதனால்தான் இப்பதிவு.தியாகராஜ ஆராதனை வீடியோவை இன்று குமுதம்.காமில் கண்ணுற நேரிட்டது. அதன் பாதிப்பு கீழே...தியாகராஜர் பக்த சிரோமணி. அவர் கீர்த்தனைகள் அமிர்தம். பக்தி என்பது தனி மனித ஆராதனை என்ற அளவில் அது மகாப் பெரிய விஷயம். ஆனால் இப்படி ஆராதனை என்ற பெயரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

மாற்றம் எப்போது நிகழும்?    
January 26, 2008, 2:40 am | தலைப்புப் பக்கம்

இலக்கியவாதியாக இருப்பதொரு அவஸ்தை :-) உலகின் நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டுக் கவிதையாகின்ற அதே பொழுதில் உலகின் துன்பம், சமனற்ற தன்மை, பாசாங்குத்தனம், ஏழ்மை, கீழ்மை இவையெல்லாம் துன்புறுத்தும். தாங்கிக் கொள்வது கூட அவ்வளவு பிரச்சனையில்லை, ஆனால் அதை மாற்ற மனது துடிக்கும். இலக்கியத்தில் என்று புகுந்தேனே அன்றிலிருந்து இது அழியாத ஒரு அவஸ்தையாகத் தொடர்கிறது!இலக்கியம் முதலில்...தொடர்ந்து படிக்கவும் »

கும்பல் நடனம்    
January 21, 2008, 1:13 am | தலைப்புப் பக்கம்

தென்கொரியாவை 60களில் பார்த்திருந்தால் இது உலகின் 11வது சிறந்த பொருளாதாரமாக 40 வருடங்களில் உயரும் என்று யாரும் கனவு கண்டிருக்க மாட்டார்கள். ஆனால், அந்த அதிசயத்தை நடத்திக் காட்டியுள்ளனர் கொரியர்கள். இதற்குக் காரணம் கடின உழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு முயற்சி. சும்மாப் பேசிக்கொண்டே இல்லாமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பது மேல் என்பது இங்கு நடைமுறை! இதோ பாருங்கள், இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் அனுபவம்

Mr. and Mrs. Iyer - திரைப்படம்    
January 20, 2008, 9:46 am | தலைப்புப் பக்கம்

சினிமா என்பது நம்ப வைக்கும் கலை. ஒரு பிம்பத்தைக் காட்டி, பெயர் வைத்து, பெயருக்குப் பின்னால் ஒரு கதை சொல்லிவிட்டால் போதும். நாம் நம்பி சினிமாவில் ஊறிப்போய்விடுவோம். காட்சியில் மயங்கி கண் கலங்குவோரும் உண்டு. இந்தக் கலை சினிமாப் பார்க்கும் போது மட்டும் நடப்பதல்ல. நிஜ வாழ்வும் மிகச் சரியாக சினிமா போலவே நடப்பதுதான் அதிசயம்!பிறந்தவுடன் நமக்கொரு பெயர் சூட்டுகின்றனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒன்பது ரூபாய் நோட்டு - படம்    
January 19, 2008, 2:49 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் மலைநாடன் இரண்டு படங்கள் சிபாரிசு செய்து மாதமாகிறது. இப்போதுதான் பார்க்க முடிந்தது. இரண்டாவது படம் ஒன்பது ரூபாய் நோட்டு.தங்கர்பாச்சான் தேர்ந்த சிற்பியின் நுணுக்கத்துடன் படத்தை செதுக்கி இருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் அற்புதம். 100% மண்ணின் மணம் வீசும் படம். இப்படியெல்லாம் கூட நிறைவான படங்களை நம்மால் எடுக்கமுடிகிறது! பெரியாருக்குப் பிறகு சத்யராஜுக்கு இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கல்லூரி - சினிமா    
January 18, 2008, 2:32 pm | தலைப்புப் பக்கம்

இத்திரைப்படம் பார்த்த கையோடு எழுதுகிறேன்.அருமையான படம். திறமையான இயக்கம். மிகவும் இயல்பான நடிப்பு. கிராமம் மெல்ல, மெல்ல கல்லூரிக்கு வரும் அவஸ்தை கதைக்கரு. 'அசால்டான' வசனம். ஒரே கிளப்பல், கலக்கல். நல்ல பாடல்கள்.ஆனாலும் இரண்டு விஷயங்கள் நெருடுகின்றன.1. தமிழ்க் கதாநாயகி என்பவள் "கட்டாயம்" சிவப்பான பெண்ணாக இருக்க வேண்டும் என்பது எழுதாத விதியா? (அந்தப் பெண் சிறப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பனிச் சிற்பக்காட்சி    
January 11, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பனி பற்றி அதிகம் பேசமுடியாது. கவிஞர் நா.விச்வநாதன் எனக்கொருமுறை எழுதினார் "சார்! ரொம்ப பனியாப் போச்சு! சண்டை போட்டுக் கொண்டு போக வேண்டியதாப்போச்சு" என்று. அதுதான் நம் நாட்டுப் பனி அநுபவம்.இங்கெல்லாம் அப்படியில்லை. பனி பெய்து ஊரைக் குளிர்விக்கும். அது சமயம் பனிச் சிற்ப வேலைகள் கூட நடக்கும். ஜப்பானின் ஹொகைதோவில்தான் இது மிகப்பிரபலம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

பேசும் படம் - 07    
January 6, 2008, 12:37 pm | தலைப்புப் பக்கம்

1960ல் களத்தூர் கண்ணம்மா வெளிவருகிறது. நம் தலைமுறையின் ஒரு அதிசயக் கலைஞனை இப்படம் அறிமுகப்படுத்துகிறது. இன்று 'உலக நாயகன்' என்று பெயர் பெற்று தன் தொழிலில் வெற்றிபெற எத்தகைய வேஷயங்களையும் எப்பாடு பட்டாவது செய்து சினிமாத் தொழிலிலும் செம்மை (professionalism) இருக்க வேண்டும் காட்டிவரும் கமலஹாசனை அறிமுகப்படுத்திய படம்!1961ல் தமிழ் சினிமா உலகம் மறக்கமுடியாத காவியமான "பாசமலர்" வருகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆகா! எஃப்-எம் தமிழிசைச் சேவை!    
January 5, 2008, 6:52 am | தலைப்புப் பக்கம்

எப்படியோ தடிக்கி ஆஹா! FM 91.9 வலைக்குள் விழுந்துவிட்டேன். வாரக்கடைசியில் காலை 7-9 மணிவரை (ISI) கர்நாடக இசைச்சேவை செய்கிறார்கள். பிரபல இளம் கலைஞர்களை அழைத்து அவர்கள் இஷ்டத்திற்கு இந்த நிகழ்ச்சியை சனி, ஞாயிறு நடத்தச் சொல்கிறார்கள். நான் கேட்ட சில நிகழ்ச்சிகள் அற்புதமாக இருந்தன. பாரதியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி ஒருவாரம் நடத்தினார். பாரதிக்குள்ள அதே நேர்மை, யார்க்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

காமராஜர் - சூத்திரதாரி (பட விமர்சனம்)    
December 3, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

நேற்றுதான் காமராஜ் படம் பார்த்தேன். இது வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ஆனால் நல்லவேளையாகப் பார்த்துவிட்டேன். நான் காமராஜர் காலத்தில் வாழ்ந்தவன். அவர் வந்து சிறப்பித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேசும் படம் - 06    
December 1, 2007, 10:16 am | தலைப்புப் பக்கம்

50 களின் சினிமா பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் சில சுவாரசியமான தகவல்கள் தொலைந்து போன சினிமா சரித்திரம்! எனும் பதிவிலிருந்து கிடைத்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேசும் படம் - 05    
November 25, 2007, 9:27 am | தலைப்புப் பக்கம்

இலக்கியம் எப்படி வாழும் சூழலைப் பிரதிபலிக்கிறதோ அதே போல்தான் சினிமாவும். இலக்கியத்தின் மொழி எழுத்து என்றால் திரைப்படத்தின் மொழி பேசும் படம்! எனவே திறமையான இயக்குநருக்கு நல்ல காட்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேசும் படம் 04    
November 24, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

பராசக்தி 1952கா! கா! சி.எஸ்.ஜெயராமனின் குரலுக்கு சிவாஜி வாயசைப்பு:மனோகரா 1954சிவாஜி கணேசன், கண்ணாம்பா வசனம்!மிஸ்ஸியம்மா 1955ஜெமினி கணேசன், சாவித்திரி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேசும் படம் - 03    
November 22, 2007, 4:31 pm | தலைப்புப் பக்கம்

50 தொடங்கி 60வரையிலான இந்த ஐந்தாம் பத்தில் (50s) வருடத்திற்கு குறைந்தது 15 படங்களென்று வந்திருக்கின்றன! தொழில்நுட்பம் சிறந்துள்ள இந்த நூற்றாண்டில் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேசும்படம்-02    
November 22, 2007, 2:39 am | தலைப்புப் பக்கம்

ஒரு வகையில் பார்த்தால் 60-70கள் தமிழ் உணர்ச்சியின் பொற்காலம் எனலாம். இதைத் திரையுலகம் நன்கு பயன்படுத்திக் கொண்டது அல்லது திரையை தமிழர்கள் இந்த உணர்விற்குப் பயன்படுத்திக் கொண்டனர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பேசும் படம் - 01    
November 21, 2007, 7:26 am | தலைப்புப் பக்கம்

சினிமா என்பதற்கு மிகவும் அழகான தமிழ்ச்சொல் பேசும்படம். நான் பேசும் படம் காலத்தில் பிறந்தவன். அதற்கு முன் பேசாப்படங்கள் ஓடியிருக்கின்றன. பின்னால் சார்லி சாப்ளின் படங்களின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பாரு! பாரு! பயோஸ்கோப்பு பாரு! பாரு!    
November 21, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

வரும் சந்ததியினருக்கு நான் சிபாரிசு செய்யும் சினிமா என்று எழுதுமாறு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உன்னாலே-உன்னாலே    
September 17, 2007, 2:53 pm | தலைப்புப் பக்கம்

கொரிய நாட்டின் தேசியக் குறியீட்டுடன் (யின்-யான்) படம் ஆரம்பிப்பதால் மட்டும் இந்தப்படம் எனக்குப் பிடிக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்