மாற்று! » பதிவர்கள்

Mads

என் வீட்டுத் தோட்டத்தில்    
July 8, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

என் வீட்டு சுட்டிப் பயல் ஒரு இயற்கை விரும்பி.  என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பூச்சிகளுக்கும் அவனைப் பிடிக்கும். குறிப்பாக அவனை முத்தமிடுவது அவைகளுக்கு பிடித்தமான செயல்களில் ஒன்று. கஷ்டம் எங்களுக்குத்தான். சுவடைப் பார்த்து - இது கொசு முத்தம், இது எறும்பு முத்தம், இது என்ன முத்தம் என்று தெரியவில்லை ஓடு மருத்துவரிடம் - என்று முத்தங்களுக்கேற்ப செயலாற்ற வேண்டும். நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஏன் கமல், ஏன்?    
June 23, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள திரு. கமலஹாசன் அவர்களுக்கு, தசாவதாரம் மூலம் என்ன செய்ய/சொல்ல நினைத்தீர்கள்? நான் உலக நாயகன், (முதலீட்டாளர்) கிடைத்தால், உலகளாவிய பொருட்செலவில் என்னால் படமெடுக்க முடியும் என்றா? மசாலாவில் தங்களுடைய சக நடிகருக்கு சற்றும் இளைதவனில்லை என்று காட்டவா? குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று நிரூபிக்கவா?   ”எல்லாமே நானாய், நானே எல்லாமுமாய்” விஸ்வரூபம் எடுக்க எண்ணமோ? தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கடவுளும் மயிரும்    
June 9, 2008, 4:01 am | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சி பெட்டியை திருகிய போது முத்துராமனும் விஜயகுமாரியும் ”யமுனா நகரில் தமிழ்ச் சங்கம்” என்று பாடிக்கொண்டு இருந்தார்கள். ஒரு காட்சியில் முத்துராமன் (பொருத்தமில்லாமல்) கிருஷ்ணன் வேடத்தில் வந்தார். கிருஷ்ணனைப் பார்த்தேன். மழு மழுவென்று மழிக்கப்பட்ட முகம் - இல்லை இல்லை - உடம்பு. கிருஷ்ணரை நான் நேரில் பார்த்ததில்லை. திரைப்படங்கள் மூலமாகத்தான் பரிச்சயம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: