மாற்று! » பதிவர்கள்

M Sheik Uduman Ali

கஜினி (ஹிந்தி)    
December 27, 2008, 8:44 am | தலைப்புப் பக்கம்

ஹிந்தி கஜினியை பார்ப்பதிலும் விமர்சிப்பதிலும் ஒரு தர்மசங்கடம் இருக்கின்றது. தமிழில் சூர்யா மற்றும் அஸினின் அருமையான நடிப்பும், சிறப்பான திரைக்கதை,  ஹிட்டான பாடல்களுமாக பெரிய வெற்றி பெற்ற படத்தை ஹிந்தியில் பார்க்கும் போது நமது அணுகுமுறை ஒப்பீட்டளவிலேயே அமைந்துவிடும். ஆனால் அதையும் தாண்டி பிரம்மாணடமாக அமீர்கான் & டீம் ஜெயித்திருக்கிறது. கொஞ்ச நேரமே ஹீரோவிற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குசேலன் – விமர்சனம்    
August 5, 2008, 6:34 pm | தலைப்புப் பக்கம்

யாரோ ஒரு அபிமானி ரஜினியின் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை பட வரிசைகளில் குசேலனுக்கும் இடமுண்டு என்று சொன்ன ஞாபகம். இப்போ மட்டும் அந்த அபிமானி கையில் கிடைத்தால்…. நற..நற… நல்ல கதையில்லாத படத்தில் இந்த அசோக்குமார் (இதுதான் குசேலனில் நிஜ சூப்பர்ஸ்டாராகவே வரும் ரஜினியின் பெயர், பேசாம ராஜகுமாருனே வைத்திருக்கலாமோ!) நடித்திருந்தாலும் யாரும் தியேட்டர் பக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சுப்ரமணியபுரம் – விமர்சனம்    
July 26, 2008, 7:01 pm | தலைப்புப் பக்கம்

படம் ரிலீஸாகி நாலு வாரமாகியும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒன்று பரவலாக தியேட்டர்களில் ரிலீஸாகவில்லை. இன்னொன்று டிக்கெட். நாளையக் காட்சிகளுக்கு இன்றே ஹவுஸ்புல் என்று போர்டு போட்டிருப்பார்கள். ஆனால் பிளாக்கில் கொள்ளை விலை. சரினு முயற்சித்தும் கிடைக்கவில்லை. பிறகு நாலு வாரம் கழித்து “சத்யம்“, “ஐநாக்ஸ்“ல் படம் ரிலீஸ். ம்ம்ம். இதுவே ஒரு சோறு பதம். பாலா, அமீர் ஆகியோரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம்    
June 18, 2008, 5:21 pm | தலைப்புப் பக்கம்

பிரேசிலில் ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்துப் பறந்தால் டெக்ஸாஸில் டொரண்டோ வர வாய்ப்பிருக்கிறதா? என்ன பிசிறு பிடித்திருக்கென்று நினைக்கின்றீர்களோ? இதற்கு பெயர் தான் சாஹ்ஷ் தியரி (பட்டர்பிளை விளைவு என்றும் அழைப்பர். நன்றி http://en.wikipedia.org/wiki/Chaos_theory) . மிகவும் சென்ஸிடிவான எந்தவொரு நிகழ்வுகளும் அதன் ஆரம்ப நிலைகளில் மிகச்சிறிய மாற்றத்தை சந்தித்தாலும் விளைவுகள் பெரிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அறையின் எண் 305ல் கடவுள்    
April 28, 2008, 2:51 am | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய இயக்குநர் சிம்புதேவன் அவர்களுக்கு முதலில் ஒரு விண்ணப்பம். மற்ற அரை வேக்காட்டுத்தனமான சினிமாக்கள் மாதிரியே சாஃப்ட்வேர் துறையைப் பற்றியும் அதில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்டும் இளைஞர்களை பற்றியுமான கிண்டல் தொனியை தாங்களுமா எடுத்துக் கொண்டீர்கள். 200% வரை லாபம் வைத்து விற்கும் அல்லது ஏமாற்றும் மருந்து வியாபாரிகளோ, ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அஞ்சாதே – விமர்சனம்    
February 24, 2008, 1:37 pm | தலைப்புப் பக்கம்

மாறுபட்ட அணுகுமுறை, தெளிவான திரைக்கதை மற்றும் கூரிய கண்ணோட்டம் என அசத்தலான ஓபனிங்குடன் ஆரம்பிக்கிறது அஞ்சாதே. இயக்குநர் மிஷ்கினுக்கு நிறைய நன்றிகள்: திரைக்கதையில் கதாபாத்திரங்களை எந்தளவு அணுக வேண்டுமென்ற வரையறைக்குள் நின்றதற்கு (மிகைப்படுத்தப்படாத ஹீரோ மற்றும் வில்லன்). காம்ப்ரமைஷ் செய்து கொள்ளாத தெளிவான ஸ்கீரின்பிளே. “காக்க காக்க, வேட்டையாடு விளையாடு“...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தாரே ஜமீன் பர் – விமர்சனம்    
February 10, 2008, 5:27 am | தலைப்புப் பக்கம்

  கணிதக் குறியீடுகள், மொழிகளின் எழுத்து வடிவங்கள் இவை மனதில் தங்க மறுத்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?  உங்கள் குழந்தைகளுக்கு!. எதிர்காலம் ஒன்றை மட்டுமே மனதில் இருத்தி குழந்தைகளின் அழகான சின்னஞ்சிறு உலகம் பாழாக்கப்படுவது எவ்வளவு கொடுமை.  இவற்றை அவ்வளவு அழகாக அக்கறையாக பேசியிருக்கிறார் அமீர்கான். எழுத்துக்கள் சித்திரக் குழப்பங்களாகவும், எதையும் கூர்நோக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிரிவோம் சந்திப்போம் – விமர்சனம்    
January 29, 2008, 2:23 am | தலைப்புப் பக்கம்

சுற்றிலும் கற்றாழை, அவரைச் செடிகள் சூழ்ந்த கிராமத்து தார்ச் சாலையில் மருதை மர நிழலில் மெதுவாக சைக்கிளில் பயணிப்பது போலொரு சுகானுபவம் பிரிவோம் சந்திப்போம். பாட்டி, தாத்தா, நாத்தனார், மாமியார் என சுக துக்கங்களை பங்கு போடும் கூட்டுக் குடும்ப சூழலை விரும்பும் மனைவி; தனிமையான இல்லறத்தை விரும்பும் கணவன். இவர்களுக்கிடையேயான தாம்பத்யச் சதுரங்கத்தை ஆர்பாட்டமில்லாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பீமா – விமர்சனம்    
January 17, 2008, 5:28 pm | தலைப்புப் பக்கம்

விக்ரம், பிரகாஷ்ராஜ், ரகுவரன் என பசியோடு நீந்திக் கொண்டிருக்கும் மூன்று நடிப்பு திமிங்கலங்களுக்கு இரை போட வந்திருக்கிறார் லிங்குசாமியின் பீமா. கடந்தாண்டு பிரம்மாண்ட படைப்புகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் சிவாஜி மற்றும் பில்லா. அந்த வரிசையில் மிச்ச சொச்சமாக வந்திருக்கிறார் பீமா. ஆச்சர்யமான விசயம் இந்த படங்களுக்கிடையேயான ஒரு ஒற்றுமை. நிறைய எதிர்பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பில்லா – விமர்சனம்    
December 25, 2007, 2:53 pm | தலைப்புப் பக்கம்

எல்லா தமிழ் சினிமா ஹீரோக்களுக்கும் ஒரு மோகம் (அல்லது லட்சியம்) உண்டு.  அது சூப்பர் ஸ்டார் மோகம்.  அதற்காக ரஜினியின் சினிமா ஸ்ட்ரடஜியையோ, அவரது பெர்சனல் ஸ்டைலையோ பின்பற்றுவது பழக்கம்.  இதிலிருந்து மாறுபட்டு அவரது பிளாக் பஸ்டர் சினிமாவான பில்லாவை கையிலெடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார் அஜீத்.  இதற்கு ஷாரூக்கின் டானும் அதன் பிரும்மாண்ட வெற்றியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கல்லூரி – விமர்சனம்    
December 8, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

சீரியஸான “சிவாஜி” பட டிஸ்கஸனில் ஏதோவொரு இடைவெளியில் பாலாஜி சக்திவேல் ஷங்கரிடம் பேசி சம்மதம் வாங்கிருப்பாரோ என்னவோ இந்த “கல்லூரி”. ஒரு தெற்கத்தி தமிழ் மண்ணின் கல்லூரி வளாகத்தில் ஒரு நண்பர்கள் வட்டத்தின் மூன்று வருட அனுபவங்களையும் அவர்களின் கனவு பொசுங்கலையும் லேசாக சினிமா(த்தனம்) கலந்து சொல்லியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். தமனாவை தவிர அனைவரும் அக்மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்