மாற்று! » பதிவர்கள்

Lakshmi Sahambari

நத்தைக்கூடு    
May 26, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

அணிந்து கொண்டதோஅணிவிக்கப்பட்டதோ தெரியாது நத்தை கொண்ட ஓடு .நகர்வுகள் அனைத்திலும் உடன் பயணித்து வரும் ஓடு சுமையாகவும் ஈர்ப்பின் இருப்பிடமாகவும் அழகானதொரு கூடாகவும் ...ஓட்டை தவிர்த்த நத்தைகற்பனைகளில் தோன்றுவதில்லை உடன்வரும் ஒன்று அதற்கான அடையாளமாய் ... நத்தை கொண்ட கூட்டிற்கான நகலாய் பெண்ணின் வரையறைகள் அணிந்து கொண்டதோஅணிவிக்கப்பட்டதோ தெரியாது ஈர்ப்பின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒற்றையாய் சில நட்சத்திரங்கள்    
May 2, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

என் கூரைகளை வானங்களாக்கிக் கொண்டஅன்பு மனைவிக்கு ....உணர்வுப் பகிர்தலுக்காக ஏங்கும்அறுபதைத் தொடும் உன்னவன் எழுதுவது .மறக்க முடியாத சில தருணங்கள் மனதில் நிழலாடுகிறது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது ,பாசிபடிந்த பழையவைகளை .. ஞாபகம் வருகிறதா ,என் பார்வைக்கு பதிலளித்த உன் புன்னகை ..அந்த செண்பகப்பூ புன்னகையை எண்ணி நான் பூரிக்காத நாளில்லை .பிற்பொழுதுகளில் ,உன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காதல் - இதுவாகவும் .. இதுபோலவும் !    
February 27, 2008, 11:50 pm | தலைப்புப் பக்கம்

தொலைந்தது அறிந்திருந்தும் தொடர்கின்ற பயணம்=====================மீட்கப்படாத வீணை தந்த கேட்கப்படாத ராகம்=====================இருவரும் ... இருவரில்ஒளிந்து கொள்ளும் கண்ணாமூச்சி =======================திரியும் நெருப்பும் முத்தமிடும் புள்ளி ======================பிறந்த குழந்தையின்சுண்டுவிரல் நகம்=========================அலைகள் விட்டுச் செல்லும்மணலைக் கொஞ்சும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதைஇனியும் வரப்போவதில்லை ...    
February 1, 2008, 5:19 pm | தலைப்புப் பக்கம்

அன்றைப் போன்ற அழகானதொரு நாள் இனியும் வரப்போவதில்லை ...பிரபஞ்சத்தின் ,ஒற்றை ஆண்மகனோ நீ - எனுமாறு அகன்ற என் விழிகள் ...நான் மட்டும் தான் அழகியா - எனச் சுயசோதனை செய்யச் சொன்ன தீர்க்கமான உன் பார்வை ,இனியும் வரப்போவதில்லை ...அலைகளைத் தாண்டிய ஆழ்கடல் அமைதியை நினைவுறுத்தும் மௌனத்தை மையப்படுத்திய நம் உரையாடல்கள் ,இனியும் வரப்போவதில்லை ...அர்த்தமற்ற பரிமாற்றங்கள் ஆயினும்அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை