மாற்று! » பதிவர்கள்

Jayashree Govindarajan

மாங்காய்ப் பச்சடி (3) [வேப்பம்பூப் பச்சடி, உகாதிப் பச்சடி]    
March 27, 2009, 6:08 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: மாங்காய் - 1 (சிறியது) வெல்லம் - 1 கப் புளி - நெல்லிக்காய் அளவு கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் ஏலப்பொடி - 1 சிட்டிகை உப்பு - 1 சிட்டிகை மிளகாய்த் தூள் - 1 சிட்டிகை கார்ன் ஃப்ளோர் = 1/2 டீஸ்பூன் நெய் - 1 டீஸ்பூன் தாளிக்க: நெய், கடுகு, வேப்பம்பூ. செய்முறை: மாங்காய், தேங்காயை சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிஸ்ஸி ரொட்டி (2) - பஞ்சாப் (Missi Roti, मिस्सी रोटी)    
March 18, 2009, 12:03 pm | தலைப்புப் பக்கம்

மல்லிகை மகள் மே 2008ல் பிரசுரமானது. வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம். தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 3 கப் கடலை மாவு - 1 கப் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் ஓமம் - 1 டீஸ்பூன் எள் - 2 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 2 (பெரியது) கொத்தமல்லித் தழை - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்த கதை    
January 7, 2009, 10:16 am | தலைப்புப் பக்கம்

விடுமுறைக்கு ஸ்ரீரங்கம்போய் வந்ததை பாதி எழுதி வைத்திருந்தேன். அதற்குள் பொட்டி இயக்கத்தை நிறுத்த… அதை இனி தொடருவது அநியாயத்துக்கு மலரும் நினைவுகள் ஆகிவிடும். ஸ்ரீரங்கம் எங்கே போகிறது? அடுத்தவருடம் எழுதவேண்டியதுதான். ஆனால் அதன் கடைசிப் பகுதி மட்டும்.. எக்கச்சக்கமான ஊர்சுற்றல், சினிமா, ஹோட்டல் பேச்சு, சிரிப்பு, டென்ஷனே இல்லை, சமையல் என்ன என்று யோசிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

குடமிளகாய் கொத்துக்கடலை ஸ்டூ    
April 2, 2008, 5:50 am | தலைப்புப் பக்கம்

மிகக் கொஞ்சமாய் காய், சுவை குறைந்த கடுமையான காய் அல்லது கீரை வகைகள், பருப்பு வேக வைக்க நேரமின்மை, தேங்காய் அதிகம் சேர்க்க விரும்பாமை இப்படி பல காரணங்களுக்காக, இந்தக் கூட்டில் சேர்த்திருக்கும் மசாலாவை உபயோகிப்பது நல்லது. எல்லாக் குறைகளையும் மறைத்து, அடர்த்தியான கிரேவியுடன் மிகுந்த மணமாகவும் சுவையாகவும் இருக்கும். தேவையான பொருள்கள்: குடமிளகாய் - 1/4 கிலோ வெள்ளைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மோர்க் குழம்பு [3]    
April 1, 2008, 5:11 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கெட்டித் தயிர் - 2 கப் (லேசாகப் புளித்தது) தேங்காய்த் துருவல் - 1 கப் பச்சை மிளகாய் - 5, 6 துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் மல்லி விதை - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பெருங்காயம் மஞ்சள் தூள் உப்பு கொத்தமல்லித் தழை காய்கறி: முருங்கை, பூசணி, வெண்டை, சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய்…. இவற்றில் ஏதாவது ஒன்று. தாளிக்க:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அரிசி சேவை (Instant)    
March 31, 2008, 4:22 am | தலைப்புப் பக்கம்

சேவை என்பது ப்ரும்மப் பிரயத்னமாக இருந்த காலத்திற்குப்பின் இன்ஸ்டண்ட் சேவை வந்து வாழ்க்கையை சுலபமாக்கியது. இது ஒரிஜினலுக்கு ஈடே ஆகாது என்றாலும் நிச்சயம் புறக்கணிக்கக் கூடியதும் அல்ல. எப்பொழுதும் Concord சேவை(200 கிராம் 20 ரூபாய்) உபயோகித்துக் கொண்டிருந்தேன். இப்போது புதிதாக MTR நிறுவனத்தினர்  With Low Glycemic Index என்கிற லேபிளோடு புதிதாக ஒரு இன்ஸ்டண்ட் சேவையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வாழைத்தண்டு மோர்க் கூட்டு    
March 29, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: வாழைத் தண்டு - 3 கப் (நறுக்கியது) தேங்காய் - 1 மூடி பச்சை மிளகாய் - 5, 6 கெட்டியான மோர் - 1 கப் (புளிக்காதது) சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு பெருங்காயம் தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை. செய்முறை: வாழைத் தண்டை பட்டை, நார் நீக்கி, (கருக்காமல் இருக்க)மோர் கலந்த நீரில் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும். தேங்காய், பச்சை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளிக் காய் கூட்டு - [2]    
March 28, 2008, 7:44 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தக்காளிக்காய் - 1/4 கிலோ கத்தரிக்காய் - 1/4 கிலோ நிலக்கடலை - ஒரு கைப்பிடி  வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப் பால் (அல்லது தேங்காய்ப் பால்) - அரை கப் மஞ்சள் தூள் உப்பு கொத்தமல்லித் தழை  வறுத்து அரைக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4, 5 தனியா - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 1/4 கப் தாளிக்க: எண்ணெய்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிஸ்ஸி ரொட்டி (1) - குஜராத் (Missi Roti, मिस्सी रोटी)    
March 19, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 1 கப் மைதா மாவு - 1 கப் பட்டாணி மாவு - 1 கப் * பச்சை மிளகாய் - 3 மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயம் - 1 (பெரியது) பசலைக் கீரை - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் நெய் அல்லது வெண்ணெய் செய்முறை: கழுவிய பசலைக் கீரை, வெங்காயத்தை மிகமிகப் பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவு, மைதா, பட்டாணி மாவு, மிளகாய்த் தூள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கேரட் அல்வா    
March 17, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கேரட் -  1/2 கிலோ (துருவல் - 4 கப்) பால் - 1 லிட்டர் சர்க்கரை - 3 முதல் 4 கப் நெய் - 1/2 கப் கோவா - 100 கிராம் (விரும்பினால்) ஏலப்பொடி குங்குமப்பூ வெள்ளரி விதை முந்திரிப் பருப்பு செய்முறை: அல்வா செய்ய, சிவப்பாக இருக்கும் டில்லி கேரட் மிகவும் ஏற்றது. கேரட்டை நன்கு கழுவி, சிறிய அளவுத் துருவியில் துருவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் (நான்-ஸ்டிக் விரைவாகவும் சுலபமாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாகற்காய் பிட்லை    
March 15, 2008, 4:17 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பாகற்காய் - 1/4 கிலோ கொத்துக்கடலை - ஒரு கைப்பிடி புளி - சிறிய எலுமிச்சை அளவு துவரம் பருப்பு - 1/4 கப் தேங்காய் - 1/2 கப் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெல்லம் - சிறு கட்டி (விரும்பினால்)   வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் - 4 உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1 டீஸ்பூன் தனியா - 1 டேபிள்ஸ்பூன் தாளிக்க:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பூசணிக்காய் புளிக் கூட்டு    
March 14, 2008, 4:38 am | தலைப்புப் பக்கம்

இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் - 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி - 1/4 கப் புளி - சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் - 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கருணைக் கிழங்கு மசியல்    
March 13, 2008, 6:41 am | தலைப்புப் பக்கம்

கருணைக்கிழங்கு பழைய கிழங்காக இருந்தால் அரிக்காமல் இருக்கும். மேல்த் தோலை கீறிப் பார்த்து, உள்ளே சிவப்பாக இருந்தால் புதிது. அப்படி இருந்தாலும் வாங்கி வீட்டில்வைத்து, 20 அல்லது 25 நாள்களுக்குப் பிறகுஓரளவு உள்பகுதி வெள்ளையானதும் உபயோகிக்கலாம். அதற்கு மேலும் காரல், அரிப்பு இல்லாமல் இருக்க, எப்பொழுதும் கருணைக்கிழங்கை அரிசிகளைந்த நீரிலேயே வேகவைக்க வேண்டும். மூலநோய்க்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எலுமிச்சை ரசம்    
March 11, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தக்காளி - 4 (பெரியது) பச்சை மிளகாய் - 2, 3 இஞ்சி - சிறு துண்டு மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் பெருங்காயம் உப்பு - தேவையான அளவு ரசப் பொடி - 1/2 டீஸ்பூன் பருப்பு வேகவைத்த நீர் - 2 கப் தேங்காய்ப் பால் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) கொத்தமல்லித் தழை எலுமிச்சை ரசம் - 2 டேபிள்ஸ்பூன் தாளிக்க: நெய் (எண்ணெய்), கடுகு, சீரகம், கறிவேப்பிலை. செய்முறை: துவரம் பருப்பு வேகவைத்த நீர் இரண்டு கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முள்ளங்கி பயத்தம்பருப்புக் கறி    
February 26, 2008, 7:41 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: முள்ளங்கி - 1/2 கிலோ பயத்தம் பருப்பு - 1/4 கப் காய்ந்த மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம். செய்முறை: பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். அந்த நேரத்தில் முள்ளங்கியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மேத்தி சப்பாத்தி / ரொட்டி [मेथी रोटी, Methi Roti]    
February 23, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 2 கப் வெந்தயக் கீரை - 1 கப் கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் நெய் - 1 டீஸ்பூன் எண்ணெய் செய்முறை: வெந்தயக் கீரையை, தனித் தனி இலையாக ஆய்ந்து ஒரு கப் எடுத்து, தண்ணீரில் அலசி நீரை வடியவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு கீரையை லேசாக 2, 3 நிமிடங்கள் வதக்கிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தயிர்ப் பச்சடி [राइता, Raitha]    
February 23, 2008, 6:19 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தயிர் - 1 கப் வெங்காயம் வெள்ளரிக்காய் கேரட் கோஸ் (உள்பாகம்) தக்காளி …. …. கறிவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயம் கருப்பு உப்பு [काला नमक, Black Salt] - (விரும்பினால்) உப்பு தாளிக்க: எண்ணெய், கடுகு, பச்சை மிளகாய். செய்முறை: வெங்காயம், தக்காளி, கோஸ், கறிவேப்பிலை, கொத்தமல்லியை மிகப் பொடியாக அரிந்துகொள்ளவும் வெள்ளரி, கேரட் போன்ற காய்களை துருவிக் கொள்ளவும். நறுக்கிய,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மெந்தி புலுசு [Menthi Pulusu]    
February 19, 2008, 5:23 am | தலைப்புப் பக்கம்

நன்றி: ஜெயஸ்ரீ சூர்யநாராயணன்    தேவையான பொருள்கள்: புளி - சிறிய எலுமிச்சை அளவு வெங்காயம் - 2 வெல்லம் - பெரிய நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு வறுத்து அரைக்க: (வெறும் வாணலியில்) காய்ந்த மிளகாய் - 6, 7 வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன் அரிசி - 1/2 டீபூன் தாளிக்க: நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை. செய்முறை: புளியை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரவா தோசை    
February 18, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: ரவை - 1 கப் அரிசி மாவு - 1/2 கப் மைதா - 2 டேபிள்ஸ்பூன் கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் மிளகு சீரகம் முந்திரிப் பருப்பு தேங்காய் இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை உப்பு பெருங்காயம் எண்ணெய் நெய் செய்முறை: ரவை, அரிசிமாவு, மைதா, கடலைமாவை உப்பு, பெருங்காயம், தயிர் சேர்த்து தேவையான தண்ணீரில், நீர்க்க கட்டிகளில்லாமல் கரைத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆலூ கோபி [Aloo Gopi - dry]    
February 14, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: காலிஃப்ளவர் - அரைக்கிலோ உருளைக் கிழங்கு - 2 (பெரியது) பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி (விரும்பினால்) வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - சிறுதுண்டு பூண்டு - 4 பல் தனியாத் தூள் - 2 டீஸ்பூன் சீரகத் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன் (விரும்பினால்) எலுமிச்சைச் சாறு - சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இஞ்சித் துவையல்    
February 14, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: இஞ்சி - 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது) தேங்காய்த் துருவல் - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 1 உளுத்தம் பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 4 ஈர்க்கு பெருங்காயம் புளி - சிறு நெல்லிக்காய் அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: இஞ்சியைத் தோல்சீவி, நன்றாகக் கழுவி, சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மூங் மசாலா (Moong Masala - dry)    
February 12, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சைப் பயறு  - 1 கப் வெங்காயம் - 2 தக்காளி - 2 மஞ்சள் தூள் -  1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு பெருங்காயம் எலுமிச்சைச் சாறு - சில துளிகள் கொத்தமல்லித் தழை  அரைக்க: பச்சை மிளகாய் - 2 இஞ்சி - சிறு துண்டு தனியா = 1 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) தாளிக்க: எண்ணெய்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மசாலா பெசரட்டு (3) [Pesarattu 3]    
February 7, 2008, 7:35 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சைப் பயறு  - 1 கப் பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) வெங்காயம் - 1 (விரும்பினால்) சீரகம் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் தாளிக்க: எண்ணெய், சீரகம். காய்கறி: வெங்காயம், கேரட், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை. செய்முறை: பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பெசரட்டு (2) - உப்புமா - இஞ்சிச் சட்னி [Pesarattu 2]    
February 7, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சைப் பயறு  - 1 கப் பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) வெங்காயம் - 1 (விரும்பினால்) பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் தாளிக்க: எண்ணெய், சீரகம்.                                       செய்முறை: பச்சைப் பயறு, பச்சரிசியை குறைந்தது 12 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பெசரட்டு - (1) [Pesarattu 1]    
February 7, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பயத்தம் பருப்பு - 1 கப் ரவை - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2, 3 இஞ்சி - சிறு துண்டு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் தாளிக்க: எண்ணெய், சீரகம். செய்முறை: பயத்தம் பருப்பை 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு ஆனால் மிக மிக நைசாக அரைத்து அத்துடன் ரவையையும் கலந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இஞ்சிச் சட்னி    
February 7, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: இஞ்சி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் புளி - நெல்லிக்காய் அளவு வெல்லம் -நெல்லிக்காய் அளவு காய்ந்த மிளகாய் - 2, 3 உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள்டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் உப்பு - தேவையான அளவு தாளிக்க - எண்ணெய், கடுகு. செய்முறை: இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆலூ போஹா [Aloo Poha]    
February 5, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

நான் திருமணமாகி, மஹாராஷ்டிரா வந்தபோது, ஊருக்கு வந்து இறங்கியதும் ஊர்த்தலைவர் தன் வீட்டிற்குக் கூட்டிப்போய் கொடுத்ததிலிருந்து இந்த ஆலூ போஹா அறிமுகம். அதற்குப்பின் தொடர்ந்து யார் வீட்டிற்குப் போனாலும் எல்லா உணவுகளோடும் நிச்சயம் இது உண்டு. பத்தே நிமிடங்களில் தயாரித்து, ஒரு சிறிய தட்டில் வைத்துக் கொடுக்கப்படும் இந்த உணவின் சுவை என்னை அவ்வளவு ஈர்த்தது. இதற்காகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மைதா தோசை    
February 4, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்

ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து,  புதிதாய்  சமைப்பவர்கள்  கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.   தேவையான பொருள்கள்: மைதா மாவு - 1 கப் ரவை - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) உப்பு -  தேவையான அளவு பெருங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை தாளிக்க - எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய். செய்முறை: மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பப்பு புலுசு [pappu pulusu]    
February 4, 2008, 11:54 am | தலைப்புப் பக்கம்

முக்கல புலுசு போலவே இந்த உணவும் நம் ஊர் பருப்புக் குழம்பின்  ஆந்திர  வெர்ஷன் தான்.  தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு துவரம் பருப்பு - 3/4 கப் காய்கறி - 2 கப் தக்காளி - 2 வெங்காயம் - 1 (விரும்பினால்) பூண்டு - 4 பல் (விரும்பினால்) பச்சை மிளகாய் - 2 உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் வெல்லம் - நெல்லிக்காய் அளவு கொத்தமல்லித் தழை வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 5, 6 கடுகு - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முக்கல புலுசு [mukkala pulusu]    
January 31, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

இந்த உணவு நம் ஊர் சாம்பாரின் ஆந்திர வெர்ஷன். மற்ற நாள்களிலும் இதை தயாரித்தாலும் முக்கியமாக நாம் வருடப் பிறப்பிற்கு அறுசுவையில் மாங்காய்ப் பச்சடி செய்வதுபோல் அவர்கள் இதை அறுசுவை உணவாக தெலுங்குவருடப் பிறப்பன்று(உகாதித் திருநாள்) செய்கிறார்கள்; மற்றும் முக்கியமான பண்டிகை நாள்களிலும் செய்கிறார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த பல ஆந்திரப் பெண்களுக்கு இது குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பருப்புக் குழம்பு [வாழைத் தண்டு]    
December 28, 2007, 12:53 pm | தலைப்புப் பக்கம்

குழம்பு வகைகளில் முதலில் இதைத்தான் சொல்லியிருக்க வேண்டும். விட்டுப் போய்விட்டது. சாம்பார்ப் பொடி தயாராக இருந்தால் போதும். அரைச்சல்ஸ் வேலைகள் இல்லாமல் விரைவில் தயாரித்துவிடலாம். அதிகம் மசாலா இல்லாததால் பிரச்சினை இல்லாதது. நாட்டுக் காய்கறிகளில் செய்யவும், தினசரி சமையலுக்கும் மிகவும் ஏற்றது. தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு வாழைத் தண்டு - ஒரு சாண் நீளம் துவரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மட்டர் பனீர்    
December 27, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சைப் பட்டாணி - 200 கிராம் (அல்லது முக்கால் கப் காய்ந்த பட்டாணி) பனீர் - 200 கிராம் (அல்லது ஒரு லிட்டர் பால்) வெங்காயம் - 3 (பெரியது) தக்காளி - 3 (பெரியது) பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 6 பல் முந்திரிப்பருப்பு - 6, 7 தனியா - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலாத் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/4...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

நெல்லிக்காய்த் தொக்கு    
December 25, 2007, 4:35 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுகள் தாண்டிய நண்பர் ஒருவர், இந்தக் குறிப்பில்   தேடு வசதி, பதிவின் பக்கவாட்டில் இருப்பதாக நான் எழுதியபின், முதன்முறையாக அதை அப்போதுதான் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு, தமிழில் தட்டத் தெரியாததால் அங்கே இங்கே என்று எழுத்துகளைப் பிடித்து ஒட்டுப்போட்டு ‘நெல்லிக்காய்’ என்ற ஒரு வார்த்தையை உருவாக்கி (தமிழில் வேறு வார்த்தையே கிடைக்கவில்லையா? அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

நெல்லிக்காய் ஊறுகாய்    
December 24, 2007, 3:55 am | தலைப்புப் பக்கம்

நெல்லிக்காய் எல்லாவிதச் சத்துகளும் நிறைந்தது. ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சையாகவோ, தேனில் ஊறவைத்தோ சாப்பிடுவது அதைவிட நல்லது. இரும்புச் சத்து, எக்கச்சக்கமாக வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. தலைமுடி, நகம் இவற்றுக்கு வலுவூட்டும். உடலுக்கு, முக்கியமாக கண்களுக்குக் குளிர்ச்சி, இன்னும்…… மேற்கூறிய காரணங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஊறுகாய்ப் பொடி    
December 24, 2007, 3:38 am | தலைப்புப் பக்கம்

திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பரிமாறப்படும் ஊறுகாய்கள் சுவையாக இருக்கும். ஆனால் அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது. அதிகம் அடுப்பில் கொதிக்க வைக்காமல், அதிகம் எண்ணெய் விடாமல் தயாரிப்பதால் சீக்கிரம் கெட்டுவிடலாம். ஆனால் மொத்தமாகச் செய்து அதிக நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்போது சேர்க்க வேண்டிய அதிக எண்ணெய், அதன்பொருட்டு நாம் சேர்க்கும் அதிக உப்பு, காரம் இவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சாதாக் கூட்டு - (2) [கத்தரிக்காய்]    
December 22, 2007, 6:14 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கத்தரிக்காய் - 1/2 கிலோ பயறு - 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித் தழை வறுத்து அரைக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3, 4 தனியா - 1 டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் - 1/2 மூடி தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மார்கழித் திங்கள்    
December 17, 2007, 12:44 am | தலைப்புப் பக்கம்

நண்பர் ஸ்ரீகாந்த் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடல்கள் குறித்து எழுத இருக்கிறார் என்று தெரிகிறது. ஆர்வமுள்ளவர்கள் இங்கு சென்று படிக்கலாம். http://bhakthi.wordpress.com/ -0-  எழுத்தாளர் மாலதி சதாரா– ஏராளமான எழுத்துத் தகுதிகளுக்கும் அப்பால் முக்கியமாக “திருப்பாவை பிரவசனம் பண்ணுவதுண்டு. அது என் ஆன்மா” என்று சொல்லிக்கொண்டவர் இரண்டு வருடங்கள் முன்பு ராயர் காப்பி கிளப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் உணவு

அரைக்கீரைச் சுண்டல்    
December 14, 2007, 5:35 am | தலைப்புப் பக்கம்

நன்றி: எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சொன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன். ”அரைக்கீரை ரொம்ப நல்லதுண்ணு சொல்லுகா ஜெயமோகன். அரைக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணுகிண்ணு போக சுத்தம் பண்ணி வாணலிய அடுப்பில ஏத்தி ஒரு கரண்டி தேங்காயெண்ணைய விட்டு அதில போட்டு கொஞ்சம் உப்பு தெளிச்சு நல்லா சுண்டவச்சு அப்டியே ஒரு பாத்திரத்தில கொட்டிட்டு இன்னொரு வாணலிய அடுப்பில வச்சு கொஞ்சம் எண்ணைய விட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கறிவேப்பிலைத் துவையல்    
December 14, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

தலை”மை“ப் பண்புக்கு அஞ்சுபவர்கள் அடிக்கடி உணவில் சேர்க்கவேண்டிய துவையல். ஆனால் எழுத்துலகின் ‘பிதாமகன்‘ வேடத்திற்குப் பொருந்துவதாக நினைப்பவர்கள், தனக்கும் எழுத்தெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம், முதலில் கெட்டப் மட்டுமாவது வரட்டும் என்று விரும்புபவர்கள், இதைத் தவிர்த்தல் நலம். [பெண்கள் இலக்கியவாதிகளே ஆனாலும் இந்த மாதிரி எல்லாம் ரிஸ்க் எடுத்து ரஸ்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வாழைத்தண்டுக் கறி    
December 14, 2007, 5:33 am | தலைப்புப் பக்கம்

வாழைத்தண்டை பாட்டியோ அம்மாவோ நறுக்குவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அலுக்காது. வட்ட வட்டமாக நறுக்கி, ஒவ்வொருமுறையும் அரிவாள்மணையில் இழுத்துக்கொண்டு வரும் நாரை ஆள்காட்டிவிரலில் சுற்றிக் கொண்டே, அடுத்த வட்டம், அடுத்த நார்ச் சுற்று…. என்று ஓரளவு வந்ததும், கையில் இருக்கும் நாரை நீக்கிவிட்டு தொடர்ந்து…. வட்டங்களை ஐந்தாறாக அடுக்கிக்கொண்டு, சரக் சரக்கென்று குறுக்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளிக்காய்த் துவையல்/சட்னி    
December 13, 2007, 7:22 am | தலைப்புப் பக்கம்

நன்றி: எழுத்தாளர் ராமசந்திரன் உஷா. பத்து நிமிடங்களுக்கு மேல் உட்காரமுடியாமல் முதுகுவலியால் கஷ்டப்பட்டாலும் தொலைப்பேசியியில் குறிப்பைப் பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் ராமச்சந்திரன் உஷாவிற்கு நன்றி. அவர் விரைவிலேயே நலம்பெற்று இன்னும் பல நல்ல குறிப்புகளைப் பகிர்ந்துகொள்வார் என்று நம்புவோம். பிசிபேளாவிற்கு– ஏற்கனவே கவிஞர் ஹரன்பிரசன்னா என் பிசிபேளாக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளிக் கூட்டு    
December 11, 2007, 4:18 pm | தலைப்புப் பக்கம்

பின்னால் சேர்த்த முன்குறிப்புசாட் _______________________________________________________________________________ me: ஹாய் கவிஞர், There? haranprasanna is online. haranprasanna: (வந்துட்டாங்கப்பா. இன்விசிபிள் மோட் இல்லாத ஜிசாட் ஒழிக!) வணக்கம் ஜெயஸ்ரீ. me: என்ன செஞ்சுகிட்டிருக்கீங்க? haranprasanna: வண்டி துடைத்துக்கொண்டிருக்கிறேன், பார்த்தால் தெரியவில்லையா? கணினி முன்னால் அமர்ந்து ஒரு கவிஞன் என்னசெய்துகொண்டிருப்பான்? இதெல்லாம் ஒரு கேள்வியா? இப்படிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

புடலங்காய்க் குடல் துவையல்    
December 10, 2007, 5:43 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புடலங்காய்க் குடல் - 2 கப் புளி - நெல்லிக்காய் அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2, 3 பச்சை மிளகாய் - 1 உளுத்தம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) பெருங்காயம் கறிவேப்பிலை - 2 ஈர்க்கு கொத்தமல்லித் தழை உப்பு - தேவையான அளவு செய்முறை: புடலங்காய் நறுக்கும்போது, உள்ளிருந்து நீக்கிய குடல் பகுதியை எடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சாதாக் கூட்டு (புடலங்காய்)    
December 7, 2007, 3:06 pm | தலைப்புப் பக்கம்

முதலில் இந்தச் சாதாரண கூட்டுகளை எழுத வேண்டுமா என்று நினைத்து கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் எழுதாமல் இருந்தேன். திடீரென்று எதையுமே விடாமல் எழுதித் தள்ளிவிடவேண்டும் என்று தீவிரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளிக்காய் கூட்டு - (1)    
December 5, 2007, 9:47 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தக்காளிக் காய் - 1/2 கிலோ பச்சை மிளகாய் - 5, 6 தேங்காய் - 1 மூடி சீரகம் - 2 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் உப்பு கொத்தமல்லித் தழை தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கார்த்திகை வடை [திருக்கார்த்திகை]    
November 24, 2007, 4:46 pm | தலைப்புப் பக்கம்

இந்த வடைக்கு என்று எதுவும் தனியாக யாரும் பெயர் வைக்கவில்லை போலிருக்கிறது. கார்த்திகையன்று (மட்டும்) செய்வதால் கார்த்திகை வடை என்றே நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பால் அப்பம் [திருக்கார்த்திகை]    
November 23, 2007, 10:38 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே சொல்லியிருக்கும்  பாகு செலுத்திச் செய்யும் அப்பம் தான் கார்த்திகைக்கும் செய்வார்கள். ஒரு மாறுதலுக்காக இதையும் நான் அடிக்கடி செய்வேன். தேவையான பொருள்கள்: ரவை - 1 கப் மைதா - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

நெல்ப் பொரி உருண்டை [திருக்கார்த்திகை]    
November 22, 2007, 4:15 pm | தலைப்புப் பக்கம்

முன்பெல்லாம் பாட்டி காலத்தில் எங்கள் வீட்டில் நெல்லை மணலோடு சேர்த்து வறுத்து, மணல் சூட்டோடு நெல் பொரிந்ததும் மணலைச் சலித்து, நெல் உமியை சுளகில் புடைத்து நீக்கி, அப்புறம் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

Reliance Fresh Vs. ….    
November 21, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

அன்னிக்கு ரங்கமணி ஆபீசுக்கு ‘சும்மா’ லீவ். இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் எனக்கு அத்திப் பூத்த மாதிரி எப்பவோ கிடைக்கற வாய்ப்பு. விடலாமா? நேத்தி, நாம நாளைக்கு D-Mart shopping போகலாமான்னு கேட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் உணவு

கோதுமைப் பால் அல்வா    
November 3, 2007, 11:54 am | தலைப்புப் பக்கம்

பெண்களுக்கு மல்லிகைப் பூவோடு ஏன் அல்வாவைப் பிடிக்கும் என்று முடிவெடுத்தார்கள், தெரியவில்லை. இது தமிழ் கலாசாரத்தில் (அதாங்க தமிழ் சினிமாவில்!) மட்டும் தானா அல்லது இந்தியாவுக்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

திருநெல்வேலி அல்வா    
November 3, 2007, 11:53 am | தலைப்புப் பக்கம்

உன்பேரைச் சொன்னாலே உள்நாக்கில் தித்திக்குமே நீ எங்கே நீ எங்கே உன்னோடு சென்றாலே வழியெல்லாம் பூப்பூக்குமே நீ எங்கே நீ எங்கே ஒன்றா இரண்டா ஒரு கோடி நியாபகம் உயிர் தின்னப் பார்க்குதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகாய் பஜ்ஜி இன்ன பிற…    
September 28, 2007, 11:32 am | தலைப்புப் பக்கம்

பஜ்ஜி குறித்த முந்தைய பதிவு தேவையான பொருள்கள்: கடலைப் பருப்பு - 1 கப் பச்சரிசி - 1/3 கப் துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்) காய்ந்த மிளகாய் - 5 அல்லது 6 பெருங்காயம் எண்ணெய் உப்பு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பஜ்ஜி    
September 28, 2007, 11:30 am | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உப்புக் கொழுக்கட்டை [விநாயகர் சதுர்த்தி]    
September 11, 2007, 11:10 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: சொப்பு செய்ய: பச்சரிசி - 1 கப் தண்ணீர் - 2 1/2 கப் உப்பு - 1 சிட்டிகை நல்லெண்ணெய் (அல்லது தேங்காயெண்ணெய்) பூரணம் செய்ய: உளுத்தம் பருப்பு - 1 கப் துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இனிப்புக் கொழுக்கட்டை [விநாயகர் சதுர்த்தி]    
September 11, 2007, 11:06 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: சொப்பு செய்ய: பச்சரிசி - 1 கப் தண்ணீர் - 2 1/2 கப் உப்பு - 1 சிட்டிகை நல்லெண்ணெய்   பூரணம் செய்ய: தேங்காய்த் துருவல் - 1 கப் வெல்லம் - 1 கப் ஏலப்பொடி செய்முறை: சொப்பு: முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உப்புச்சார் (3)    
September 10, 2007, 6:09 am | தலைப்புப் பக்கம்

“இன்னிக்கு ஆத்திலே என்ன தளிகை?” “பொன்னா தளிகையை கேக்கணுமா? பருப்பு, உப்புச்சார், தக்காளி சாத்தமுது நிறைய கொத்துமல்லி போட்டு, வாழைக்காய் கறியமுது, அவியல், பொரிச்ச அப்பளம்.” – புலிநகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தேங்காய் சீரகக் குழம்பு    
September 10, 2007, 6:07 am | தலைப்புப் பக்கம்

இதுவும் ஒரு திருநெல்வேலி பக்கக் குழம்பு. நன்றி: ச.திருமலை தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கறிவேப்பிலை உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முள்ளு முறுக்கு [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 6:36 pm | தலைப்புப் பக்கம்

 1. தேவையான பொருள்கள்: பச்சரிசி - 2 கப் பாசிப் பருப்பு - 3/4 கப் கடலைப் பருப்பு - 1/4 கப் எள் - 1 டீஸ்பூன் உப்பு செய்முறை: அரிசியைக் களைந்து, நிழலில் உலர்த்தி, மிக்ஸியில் அரைத்து, சலித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கைமுறுக்கு [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 6:36 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 2 கப் உளுத்தம் பருப்பு - 1/4 கப் சீரகம் - 2 டீஸ்பூன் பெருங்காயம் உப்பு வெண்ணை தேங்காய் எண்ணெய் செய்முறை: அரிசியைச் சூடு வர சற்று வறுத்துக் கொண்டு, சூடு ஆறியபின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தட்டை [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

1. தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி - 2 கப் உளுத்தம் பருப்பு - 1/4 கப் பொட்டுக் கடலை - 4 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு - 4 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு -  4 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 4...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தேன்குழல் [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

1. ஒரு கப் பயத்தம் பருப்பை ஒரு கப் தண்ணீரில் குக்கரில் வேகவைத்து, நன்றாக மசித்து, அத்துடம் 4 கப் பச்சரிசி மாவு கலந்து, தேவையான உப்புத் தூள், எள் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து தேன்குழல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காரச் சீடை [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 6:32 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: அரிசி மாவு - 2 1/2 கப் உளுத்தம் மாவு - 1/2 கப் பச்சை மிளகாய் - 10 எள் - 1 டீஸ்பூன் தேங்காய்ப் பால் பெருங்காயம் வெண்ணை உப்பு எண்ணெய் செய்முறை: பச்சை மிளகாய், உப்பு, காயம் இவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உப்புச் சீடை [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 6:32 pm | தலைப்புப் பக்கம்

1. தேவையான பொருள்கள்: பச்சரிசி - 2 கப் உளுத்தம் மாவு - 4 டேபிள்ஸ்பூன் கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை - 1 டேபிள்ஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - 2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காப்பரிசி [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

இதை அநேகமாக எங்கள் வீட்டில் குழந்தை பிறந்து தொட்டிலிட்டு, பெயர்வைக்கும் நாளிலும் முதல் ஆண்டுநிறைவன்று காதுகுத்தும் நாளிலும் செய்வார்கள். தேவையான பொருள்கள்: பச்சரிசி - 2 கப் வெல்லம் - 2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எள் உருண்டை [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:41 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: எள் - 2 கப் வெல்லம் - 1/2 கப் கொப்பரை ஏலக்காய் சுக்கு நெய் செய்முறை: எள்ளைக் களைந்து, நீரை வடிகட்டி, வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன், வெல்லம், நறுக்கிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பால் அவல் [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:40 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: சன்னமான அவல் - 1 கப் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 1/2 கப் ஏலப்பொடி குங்குமப் பூ பச்சைக் கற்பூரம் செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும். சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அவல் பாயசம் [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:39 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கெட்டி அவல் - 1 கப் பால் - 1/2 லிட்டர் தேங்காய்ப் பால் - 1/2 கப் சர்க்கரை - 1 கப் ஏலப் பொடி முந்திரி கிஸ்மிஸ் பச்சைக் கற்பூரம் நெய் செய்முறை: அவலை நெய்யில் சிவக்க வறுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அவல் கேசரி [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: அவல் - 1 கப் சர்க்கரை - 1 1/2 கப் ஏலப்பொடி கேசரிப் பவுடர் பச்சைக் கற்பூரம் நெய் முந்திரி கிஸ்மிஸ் செய்முறை: அடுப்பில் வாணலியில் நெய் விட்டு, அவலைப் பொரித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அவல் புட்டு [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:37 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: அவல் - 1 1/2 கப் வெல்லம் - 1 1/2 கப் பயத்தம் பருப்பு - 1 கப் தேங்காய்த் துருவல் - 1/2 கப் ஏலப்பொடி முந்திரி கிஸ்மிஸ் நெய் செய்முறை: அவலை வறட்டு வாணலியில் கைவிடாமல் வறுத்து, லேசாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சர்க்கரை அதிரசம் [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 2 கப் சர்க்கரை - 1 கப் தேங்காய்த் துருவல் - 1/2 கப் சமையல் சோடா - 1 டீஸ்பூன் ஏலப்பொடி எண்ணெய் செய்முறை: பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெல்ல அதிரசம் [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:35 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: அரிசி - 2 கப் வெல்லம் - 2 கப் ஏலப்பொடி நெய் அல்லது டால்டா அல்லது எண்ணெய் செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அப்பம் [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:34 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் வெல்லம் - 1 கப் தேங்காய் ஏலப்பொடி எண்ணெய் செய்முறை: முதல் நாளே, அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து, சிறிது உலர்த்தி, மிக்ஸியில் பொடித்து, நைசான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சர்க்கரைச் சீடை [ஸ்ரீஜயந்தி]    
September 3, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: கோதுமை மாவு - 1 1/2 கப் அரிசி மாவு - 1/2 கப் தேங்காய்த் துருவல் - 1 கப் சர்க்கரை - 1 லிருந்து 1 1/4 கப் ஏலப்பொடி பால் எண்ணெய் செய்முறை: அரிசி மாவையும் கோதுமை மாவையும் சலித்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கண்டத்திப்பிலி ரசம்    
August 29, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்

கடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மைசூர் ரசம்    
August 29, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்

நான் சமைக்க ஆரம்பிச்சு முதல்முதல்ல செஞ்ச ரசம் இதுதான். ஐயோ, முதல்லயே கஷ்டமானதா எதுக்கு செஞ்ச? சிம்பிளா எதாவது வறுக்காம அரைக்காம செய்யற சாத்துமதா செஞ்சிருக்கலாமேன்னு அம்மா பயந்தாங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பயத்தம் பருப்புக் கூட்டு    
August 28, 2007, 9:06 am | தலைப்புப் பக்கம்

அதிகம் மசாலா சேர்க்காமல், எளிமையான கூட்டு. அநேகமாக எல்லாக் காய்களிலும் இதைச் செய்யலாம். தேவையான பொருள்கள்: காய் - 1/2 கிலோ பயத்தம் பருப்பு - 1/2 கப் கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தேங்காய்த் துவையல்    
August 28, 2007, 9:06 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தேங்காய்த் துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 3, 4 பச்சை மிளகாய் - 1 உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் புளி - சுண்டைக்காய் அளவு பெருங்காயம் கறிவேப்பிலை எண்ணெய் உப்பு - தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காளன் (கேரளா)    
August 27, 2007, 11:41 am | தலைப்புப் பக்கம்

எனக்குத் தெரிந்து மற்ற குழம்பு வகைகள் இல்லாவிட்டாலும், இந்த மோர்க் குழம்பு மட்டும் எல்லா மாநிலங்களுக்குமென்று பிரத்யேகமாக ஒரு வகை இருக்கிறது. இன்று காளன். மற்றவை அப்புறம். தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெண்டைக்காய் தக்காளி சப்ஜி    
August 27, 2007, 10:48 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: வெண்டைக்காய் - 1/2 கிலோ தக்காளி - 3 சின்ன வெங்காயம் - 5, 6 பச்சை மிளகாய் - 2 காரத் தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் தனியாத் தூள் - 1 டீஸ்பூன் ஆம்சூர் பொடி -  1 டீஸ்பூன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெண்டைக்காய் ஃப்ரை    
August 27, 2007, 10:17 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: வெண்டைக்காய் - 1/2 கிலோ தயிர் - 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தாளிக்க:  எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பயத்தம் பருப்புப் பாயசம்    
August 27, 2007, 8:41 am | தலைப்புப் பக்கம்

தேங்காய்ப் பாலுக்கு அடுத்ததாக மிக எளிமையான பாயசமாக பருப்புப் பாயசத்தைத் தான் நினைக்கிறேன். அதிகம் நெய் எல்லாம் சேர்க்காமல் செய்தால் விரத நாள்களில் கூட ஒரு இடைக்கால உணவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பருப்புத் துவையல்    
August 21, 2007, 5:36 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு - 1/2 கப் பெருங்காயம் எண்ணை - 1 டீஸ்பூன் தேங்காய் - 1 டீஸ்பூன்(மட்டும்) உப்பு - தேவையான அளவு செய்முறை: அடுப்பில் வாணலியில் எண்ணை விட்டு துவரம் பருப்பு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகுக் குழம்பு (3)    
August 21, 2007, 5:33 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் உப்பு - தேவையான அளவு தேங்காய் - 1 பத்தை நல்லெண்ணெய் வறுக்க: காய்ந்த மிளகாய் - 2 மிளகு - 1 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு - 1/2 டீஸ்பூன் கடலைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகுக் குழம்பு (2)    
August 21, 2007, 5:29 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு மிளகு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5 உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் பெருங்காயம் மஞ்சள் தூள் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் தாளிக்க:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகுக் குழம்பு (1)    
August 21, 2007, 5:28 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு மிளகு - 2 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு - 2 டீஸ்பூன் பூண்டு - 4 பல் மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் தாளிக்க - எண்ணெய், 3 அல்லது 4...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பால்கோவா / திரட்டுப் பால் (ஸ்ரீவில்லிபுத்தூர்)    
August 15, 2007, 3:10 am | தலைப்புப் பக்கம்

திருவாடிப் பூரத்தை முன்னிட்டு… தேவையான பொருள்கள்: கெட்டியான பால் - 2 லிட்டர் சர்க்கரை - 200 கிராம் ஏலக்காய் - 10 பச்சைக் கற்பூரம். செய்முறை: காலையில் கறந்த பாலை மாலையில், அல்லது மாலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை உணவு

கற்றதும் பெற்றதும்    
August 14, 2007, 4:10 am | தலைப்புப் பக்கம்

அத்யாவசிய முன்குறிப்பு:  யாராவது தலைப்பைப் பார்த்து, சுஜாதைவை கற்றதும் பெற்றதும் பகுதிக்காக தாக்கியிருக்கேன்னு நினைச்சு இந்தப் பக்கம் திறந்திருந்தா, தயவுசெய்து சன்னலை மூடிடுங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை உணவு

பல்லாங்குழி    
August 13, 2007, 9:11 am | தலைப்புப் பக்கம்

“அம்மா, என்னோட பல்லாங்குழி ஒன்னு இருக்குமே அது இப்ப எங்க?” இப்படி ஃபோன்பேசி வீட்டுக்குக் கேட்டு சில மாசங்கள் இருக்கும். “யாருக்குத் தெரியும்? அதான் வீடு இடிச்சுக் கட்டும்போது எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் உணவு

திருநெல்வேலிக் குழம்பு    
August 9, 2007, 11:25 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புளி - சிறிய எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு தாளிக்க - எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம். வறுத்து அரைக்க: காய்ந்த மிளகாய் - 5 துவரம் பருப்பு - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அனுமார் வடை (சுசீந்திரம்)    
August 9, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: முழு உளுந்து - 2 கப் சீரகம் -  2 டீஸ்பூன் மிளகு - 3 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய். செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். உளுந்தைக் நீரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகு வடை (காளஹஸ்தி)    
August 9, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: உளுத்தம் பருப்பு - 1 கப் இஞ்சி - சிறு துண்டு மிளகு - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை செய்முறை: உளுத்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகு அரிசி வடை    
August 9, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 2 கப் மிளகு - 2 டேபிள்ஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி உப்பு - தேவையான அளவு எண்ணெய் செய்முறை: அரிசியை மிக்ஸியில் அரைத்து மாவாக்கி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகு உளுந்து வடை    
August 9, 2007, 11:24 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தோல் உளுத்தம் பருப்பு - 1 கப் கடலைப் பருப்பு - 1/4 கப் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 2 டீஸ்பூன் அரிசி - 2 டீஸ்பூன் பெருங்காயம் உப்பு - தேவையான அளவு எண்ணெய் செய்முறை: கருப்புத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உப்புச்சார் (1)    
August 8, 2007, 12:06 pm | தலைப்புப் பக்கம்

நன்றி: ச.திருமலை   தேவையான பொருள்கள்: புளி - எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை காய்கறி. தாளிக்க - எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம். வறுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு வாழ்க்கை

பாகற்காய் கறி    
August 8, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பாகற்காய் - 1/2 கிலோ புளி -  சுண்டைக்காய் அளவு மஞ்சள் தூள் -  1 சிட்டிகை மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன் கறி மசாலாப் பொடி - 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 1/2 கப் உப்பு   தாளிக்க -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு வாழ்க்கை

எள் சாதம் [சனிப் பெயர்ச்சி :)]    
August 5, 2007, 6:30 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் எள் - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 6 பெருங்காயம் உப்பு - தேவையான அளவு தாளிக்க - நல்லெண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தேங்காய் சாதம் [ஆடிப் பெருக்கு]    
August 3, 2007, 6:49 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் நெய் - 1 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 2, 3 கறிவேப்பிலை. தோசை மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எலுமிச்சை சாதம் (2) [ஆடிப் பெருக்கு]    
August 3, 2007, 6:48 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் நெய் - 1 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் - 2 (பெரியது) மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை காய்ந்தமிளகாய் - 4,5 கடுகு - 1/2 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் வெல்லம் - சிறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எலுமிச்சை சாதம் (1) [ஆடிப் பெருக்கு]    
August 3, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் பச்சை மிளகாய் - 4,5 எலுமிச்சம் பழம் - 2 (பெரியது) பெரிய வெங்காயம் - 1 (விரும்பினால்) பச்சைப் பட்டாணி (விரும்பினால்) குடமிளகாய் - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளி சாதம் [ஆடிப் பெருக்கு]    
August 3, 2007, 6:46 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் நெய் - 1 டீஸ்பூன் தக்காளி - 3 பச்சை மிளகாய் - 3,4 வெங்காயம் - 1 (விரும்பினால்) பச்சைப் பட்டாணி (விரும்பினால்) மஞ்சள் துள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெந்தயக் குழம்பு    
August 1, 2007, 6:19 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புளி - சிறிய எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு.   பொடிக்க: காய்ந்த மிளகாய் - 3  துவரம் பருப்பு  - 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு - 1டீஸ்பூன் வெந்தயம் - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தவலை அடை (2)    
July 30, 2007, 5:30 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 கப் துவரம் பருப்பு - 1 கப் கடலைப் பருப்பு - 1 கப் உளுத்தம் பருப்பு - 1/2 கப் காய்ந்த மிளகாய் - 4 மிளகு - 1 டீஸ்பூன் தேங்காய்த் துருவல் - 1/2 கப் உப்பு - தேவையான அளவு எண்ணை -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மோர்ச் சாத்தமுது    
July 26, 2007, 6:07 am | தலைப்புப் பக்கம்

ஏனோ தக்காளி ரசம், மிளகு ரசம், எலுமிச்சை ரசம் என்றெல்லாம் சொல்வதுபோல் மோர் ரசம் என்று சொல்ல வரவில்லை. அதனால் மோர்ச் சாத்தமுது என்றே இருக்கட்டும். தேவையான பொருள்கள்: தயிர் - 1 கப் (அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காஞ்சிபுரம் இட்லி    
July 26, 2007, 4:24 am | தலைப்புப் பக்கம்

பத்மாவிற்காக…. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதம். தேவையான பொருள்கள்: பச்சரிசி - 3 கப் உளுத்தம் பருப்பு - 2 கப் வெந்தயம் - 2 டீஸ்பூன் மிளகு - 2 டீஸ்பூன் சீரகம் - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பருப்பு உருண்டைக் குழம்பு    
July 24, 2007, 1:46 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: புளி -  எலுமிச்சை அளவு மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தாளிக்க - எண்ணை, காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தேங்காய்ப் பால் (ஆடி மாதப் பிறப்பு)    
July 17, 2007, 11:31 am | தலைப்புப் பக்கம்

தேங்காய்ப் பால் பாயசம், சின்ன வயதில் பிடித்துப் போனதற்கு அதில் இடையில் திடப்பொருள்கள் எதுவும் இல்லாமல் நீராக இருந்ததும், முழுங்க சுலபமாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். “பாட்டி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அரவணை    
June 28, 2007, 4:46 pm | தலைப்புப் பக்கம்

காஞ்சிபுரத்திற்கு அருகே ‘கூரம்‘ என்ற ஊரில் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தவர் திருமருமார்பன். (இவர் தான் பிற்காலத்தில் கூரத்தாழ்வார் என்ற பெயரில் இராமானுஜரின் பிரதம சிஷ்யரானவர்.)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் உணவு வரலாறு

கீரை மசியல்    
April 10, 2007, 7:47 am | தலைப்புப் பக்கம்

கீரையை அதிகம் படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சமைக்கும் எளிய முறை. தேவையான பொருள்கள்: கீரை - 2 கட்டு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 1 சிட்டிகை தாளிக்க - எண்னை, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சாதாக் கறி [காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!]    
April 9, 2007, 6:14 pm | தலைப்புப் பக்கம்

கறி/கூட்டு பகுதியில் முதலில் இந்தப் பதிவைத் தான் நான் எழுதியிருக்க வேண்டும். அநேகமாக திருமணத்திற்கு முன்பு(அல்லது சமைக்க ஆரம்பித்ததற்கு முன்பு) நான் சாப்பிட்ட காய்கறிகளை உருளை, கீரை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கல்கண்டுப் பொங்கல்    
April 1, 2007, 12:31 pm | தலைப்புப் பக்கம்

பங்குனி உத்திர நாளில் பொதுவாக அக்கார அடிசில் அல்லது சர்க்கரைப் பொங்கல் தான் செய்வோம். ஸ்ரீரங்கத்தில் அநேகம் பேர் பெருமாள் தாயாரை சேர்த்தித் திருக்கோலத்தில் தரிசிக்கும் வரை எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சதாரா மாலதி…    
March 28, 2007, 6:00 am | தலைப்புப் பக்கம்

கவிஞரும் எழுத்தாளருமான தற்போது பெங்களூரில் வசித்து வந்த சதாரா மாலதி நேற்று இரவு இயற்கை எய்தினார்.   குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ரா.கா.கிளப்பில் அருமையாக திருப்பாவைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் உணவு

வாழை சேனை எரிசேரி    
March 28, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

கேரள மாநில உணவு. ஆனால் நாகர்கோயில் கன்யாகுமரி பக்க சைவ வேளாளர் அல்லது சைவப் பிள்ளைமார் உணவு என்று இங்கே சொல்கிறார்கள். தெரியவில்லை. தேவையான பொருள்கள்: வாழைக்காய் - 2 சேனைக் கிழங்கு - 250...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வடைபருப்பு (ஸ்ரீராம நவமி)    
March 27, 2007, 12:41 am | தலைப்புப் பக்கம்

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு… தேவையான பொருள்கள்: வெள்ளரிக் காய் - 2 பயத்தம் பருப்பு - 1/4 கப் மாங்காய் - ஒரு சிறு துண்டு கறிவேப்பிலை -  சிறிது கொத்தமல்லித் தழை - சிறிது உப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

நீர்மோர் (ஸ்ரீராம நவமி)    
March 27, 2007, 12:36 am | தலைப்புப் பக்கம்

சக்ரவர்த்தி திருமகனின் பிறந்தநாளை முன்னிட்டு…  தேவையான பொருள்கள்: தயிர் - ஒரு கப் தண்ணீர் - 3 கப் இஞ்சி - சிறு துண்டு கறிவேப்பிலை - 4,5 இலை கொத்தமல்லி - சிறிது பச்சை மிளகாய் - 1/2 உப்பு - தேவையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பானகம் (ஸ்ரீராம நவமி, மங்களகிரி)    
March 27, 2007, 12:30 am | தலைப்புப் பக்கம்

ஸ்ரீரங்கத்தில் சித்திரை மாதம் வரும் புனர்பூசம்/நவமி திதிக்குத் தான் ஸ்ரீராம நவமி கொண்டாடுவோம். இருந்தாலும் ஊரோடு ஒத்து வாழும் பொருட்டும், மெனக்கெட்டு மஹாராஷ்டிரா அரசு பள்ளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மாவடு    
March 26, 2007, 1:18 pm | தலைப்புப் பக்கம்

ஸ்ரீரங்கம் வடக்குவாசலில் சுண்டைக்காயோடு போட்டி போடும் சைஸில் மலை வடு கிடைக்கும். அப்படியே பச்சை மாவடுவை கதவிடுக்கில் நசுக்கினால், காக்காய்க் கடியாய் பகிர்ந்து கொள்ளலாம். பல் கூசும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஒரு நாளைக்கு ஒருத்தருக்கு 6 கிராம்…    
March 26, 2007, 12:37 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்… மும்பையில் மாடுயுலர் கிச்சன் சம்பந்தப் பட்ட ஒரு கடைக்குப் போய் படம் எடுத்துப் போடவேண்டும் என்பது நீண்ட நாள் பெண்டிங் வேலை. ஒரு intro வாக இங்கே. ஹூம்ம்…...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அடை    
March 23, 2007, 1:25 pm | தலைப்புப் பக்கம்

தென்மாநிலங்களைத் தாண்டி இருக்கும் பலருக்கு நமது ஸ்பெஷல் உணவாக இட்லி, தோசை தெரியும் அளவுக்கு அடை பற்றித் தெரிவதில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கும். (அவர்களாகவே நம் ஊர்ப் பக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சாம்பார்    
March 21, 2007, 1:16 pm | தலைப்புப் பக்கம்

இந்தச் சமையல் குறிப்பு இகாரஸ் பிரகாஷுக்கு… பெண்ணியவாதிகள் ஏதாவது இதற்கு சன்மானம் கொடுக்க நினைத்தால் அதை பிரகாசருக்கே அனுப்பிவைக்கவும். :)) முதலில் சாம்பார் குறித்த என் தனிப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (காரம்)    
March 14, 2007, 12:06 pm | தலைப்புப் பக்கம்

காரடையான் நோன்பு அன்று இனிப்புக் கொழுக்கட்டை செய்வார்கள் என்றாலும் அத்துடன் சேர்த்து இதையும் செய்து பார்க்கலாம். தேவையான பொருள்கள்: அரிசி மாவு - 1 கப் தண்ணீர் - 1 1/2கப் துவரை அல்லது தட்டப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு)    
March 14, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

காரடையான் நோன்பு குறித்து…. சுட்டி 1| சுட்டி 2 தேவையான பொருள்கள்: அரிசி மாவு - 1 கப் தண்ணீர் - 1 கப் வெல்லம் - 1 கப் துவரை அல்லது தட்டப் பயறு - 1 பிடி தேங்காய் - சிறிது ஏலப் பொடி - 1/2 டீஸ்பூன் நெய் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிசிபேளா பாத்    
March 13, 2007, 8:48 am | தலைப்புப் பக்கம்

கர்நாடக மாநில உணவு. பொதுவாக விருந்து போன்ற நேரங்களில் ஏராளமான சாதம் சாம்பார் என்றெல்லாம் தனித் தனியாக இழுத்துவிட்டுக் கொண்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஒரே ஐட்டமாகச் செய்வதால் நேரம்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பரித்ரானாய ஸாதூனாம்…    
March 13, 2007, 5:22 am | தலைப்புப் பக்கம்

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. இதை எல்லாம் செய்ய எனக்கு ஒரு முழு மாசம் நெட் பிச்சுக்கணும். இந்த வரிகளை இந்தப் பதிவில் சிரித்துக் கொண்டே நான் தட்டியபோது, விதியும் என்னோடு சேர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »

தக்காளி ரசம்    
February 21, 2007, 6:29 pm | தலைப்புப் பக்கம்

“எனக்கு சாப்பாட்டில் கட்டாயம் சாத்தமுது இருந்தாகணும்…” – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.  “எனக்கு சாத்தமுது மட்டும் இருந்தாலே போதும்; முழுச் சாப்பாடாய் நினைத்து திருப்தியடைவேன்.” –...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரசப் பொடி    
February 21, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: காய்ந்த மிளகாய் -  200 கிராம் தனியா - 4 கப் துவரம் பருப்பு - 1  1/2கப் கடலைப் பருப்பு -  1/4 கப் மிளகு - 1 1/2 கப் சீரகம் - 1/2 கப் வெந்தயம் -  1 டீஸ்பூன் கடுகு - 2 டீஸ்பூன் பெருங்காயம் -  50...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பெண்.. ஈயம்.. இடுக்கிப்பிடி..    
February 21, 2007, 6:18 pm | தலைப்புப் பக்கம்

“என்ன சமைச்சடா இன்னிக்கி?” “என்ன சமைச்சன்னு கேக்காதம்மா. எவ்ளோ சமைச்சன்னு கேளு. ரசம் செஞ்சா அதுபாட்டுக்கு 3 நாளைக்கு வரது!” “கொஞ்சமா செய்யணும். ரெண்டு பேருக்கு எவ்ளோடா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மேல்க்கோட்டைப் புளியோதரை    
February 19, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1/2 கிலோ சின்ன கொத்துக்கடலை - 50 கிராம் தேங்காய் - சிறிது வறுத்துப் பொடிக்க எண்ணை - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கப் கடுகு - 1 டேபிள்ஸ்பூன் முழு கருப்பு உளுந்து - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

புளியோதரை (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்)    
February 19, 2007, 10:40 am | தலைப்புப் பக்கம்

 ”தாயார் சன்னதியில் தரிசனம் முடித்துக்கொண்டு திரும்புகையில் மடைப்பள்ளிப் பிரசாதக் கடையில் சுறுசுறுப்பாக விற்பனை நடந்து கொண்டிருந்தது. சர்க்கரைப் பொங்கல் கேட்டேன். தீர்ந்துவிட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஐயங்கார் புளியோதரை    
February 19, 2007, 10:36 am | தலைப்புப் பக்கம்

நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

புளியோதரை    
February 19, 2007, 10:31 am | தலைப்புப் பக்கம்

நேயர் விருப்பம்.   தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1/2 கிலோ நல்லெண்ணை - 2 டேபிள்ஸ்பூன் கடுகு - 2 டீஸ்பூன் முந்திரிப் பருப்பு - 25 (விரும்பினால்) வெள்ளை எள் - 2 டீஸ்பூன்  வறுத்துப் பொடிக்க நல்லெண்ணை - 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

எனக்கு ஜல்ப்பாயிடும்!    
February 7, 2007, 10:55 am | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் கிட்டிய சுட்டிகள்…   நமது வெளித் தோற்றத்துக்கு மட்டுமே கவனம் செலுத்திவிட்டு, ஒரு பிரச்சினை என்று வருகிறவரை உள்ளே என்னென்ன ரகளை நடக்கிறதென்றே தெரியாமல் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் உணவு

சம் சம் (chum chum)    
January 23, 2007, 1:31 am | தலைப்புப் பக்கம்

இன்று பஞ்சமி திதி. இதை வங்காளிகள் வசந்த பஞ்சமி அல்லது ஸ்ரீபஞ்சமி என்று சொல்லி, சரஸ்வதிக்கு பூஜை செய்கிறார்கள். எங்கள் வளாகத்தில் எல்லா வங்காளிகளும் பேசிவைத்துக் கொண்டு ஒரே இடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சுஜாதா, வாத்தியார், சமகால இலக்கியம், இலக்கியப் பதிவு, மின்னூல் இன்ன பி...    
January 22, 2007, 1:30 am | தலைப்புப் பக்கம்

அது என்ன, சமையல் குறிப்புகள் பதிவில் சுஜாதா பற்றி என்று கேட்கலாம். இலக்கியம்(தான்) காலத்தின் கண்ணாடியாமே. சாப்பாடெல்லாம் இல்லையாமே! அதனால் எந்தக் காலத்தில் இந்தக் குறிப்புகளை எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்