மாற்று! » பதிவர்கள்

Grenouille

பத்து உலகத்திரைப்படங்கள்    
April 12, 2009, 6:31 am | தலைப்புப் பக்கம்

என்னை யாரும் ஒரு நாலு நல்ல உலக திரைப்படம் சொல்லுன்னு கேட்காவிட்டாலும், கருத்து கந்தசாமியாகிய நான் இங்கும் வந்து என் கருத்து சொல்லவேண்டிய நிலை. காரணம் ரவி. எனக்கு மிகவும் பிடித்த உலகத்திரைப்படங்கள் (இந்திய திரைப்படங்கள் தவிர்த்த மற்ற படங்கள் தான் இந்த இடத்தில் உலகத் திரைப்படம் என்று எண்ணுகிறேன்). City Lights Color of Paradise Amadeus (என்னுடைய சிறுகுறிப்பு) Perfume Hero In mood for love Ratatouille Little Miss Sunshine March of the Penguins...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Bernard Bate    
March 17, 2009, 5:38 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை கலைஞர் தொலைக்காட்சியில், ரமேஷ் பிரபாவுடன் ஒருவர் அழகான தமிழில் உரையாடிக்கொண்டிருந்தார். பார்க்க வெற்றுநாட்டவர் போல இருந்ததால், அலுவலகம் கிளம்புவதை சற்றே தள்ளிப்போட்டுவிட்டு பார்க்கத்தொடங்க்கினேன். அந்த மனிதர், பெர்னார்ட் பேட் என்ற யேல் பல்கலைக்கழக பேராசிரியர். தமிழின் மேடைப்பேச்சு பற்றியும், திராவிட கட்சிகள் வந்த பிறகு அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எஸ்.இளையராஜா - திராவிட பெண்கள்    
March 11, 2009, 6:02 pm | தலைப்புப் பக்கம்

எனக்கு இயக்குநர் பாலுமகேந்திரா பிடித்து போன பல காரணங்களில் ஒன்று: அவருடைய முக்கியமான பல நாயகிகள் மாநிறம் அல்லது வெளுப்பு/சிவப்பு இல்லா நிறம் கொண்டவர்கள் (ஸ்ரீதேவி தவிர்த்து அர்ச்சனா, ரோகினி, ப்ரியா மணி, சரிதா போன்றோர்). மாநிறம் மற்றும் கருமையே திராவிட மக்களின் நிஜமான நிறம் என்ற மாற்றமுடியாத கற்பிதம் கொண்டவன் நான் (எந்த தியரினை அடிப்படையாகக் கொண்டு என்றேல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

2009    
February 3, 2009, 11:28 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சம் தாமதம் தான், இருந்தாலும் தப்பில்லை. 2009 என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற ஒரு அவா பட்டியல். பனிரெண்டு கிலோ குறைப்பு - 72 கிலோவுக்கு இந்த வருடம் முடியும் முன்பு அடையவேண்டும். முதுகுவலி மறுபடியும் ஹெர்னியா போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட இது தான் எளியவழி. அரிசி மற்றும் பால் சார்ந்த பொருட்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். கோதுமை, ராகி, சிவப்பு அரிசியினை அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரிச்சர்ட் லிங்க்லேட்டர்    
May 13, 2008, 6:31 pm | தலைப்புப் பக்கம்

ரிச்சர்ட் லிங்க்லேட்டர் என்ற பெயர் “ஸ்கூல் ஆஃப் ராக்” படம் பார்த்த போது தான் எனக்கு அறிமுகம். ஜாக் ப்ளாக்கும் சில வாண்டுகளும் சேர்ந்து ராக் இசைக்குழு ஆரம்பிக்கும் கதையினை ஜாலியாக எடுத்திருந்தார். ஒரிரு பிங்க் ஃப்ளாய்ட், வீ வில் ராக் யூ தவிர வேறு ஏதும் தெரியாத ராக் இசை அறிவிலியான எனக்கு ராக் ஹிஸ்டரி, பங்க், சைக்கடெல்லிக், ஆன்க்கோர் ( அப்படீன்னா ஃப்ரெஞ்ச்சில் ஒன்ஸ்மோர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

March of the Penguins    
May 5, 2008, 5:20 pm | தலைப்புப் பக்கம்

சமீபகாலமாக விவரணை படங்கள் மீது எனக்கு காதல்.   அதைப்பற்றி எழுதலாம் என்று எண்ணம். எனக்கு மிகவும் பிடித்த, மனதை தைத்து நின்ற “March of the Penguins“ல் துவங்குகிறேன். அண்டார்ட்டிக்காவில் பென்குவின்களோடு பென்குவின்களாக ஒன்பது மாதம் எலும்பை ஒடிக்கும் கடும்குளிரில் வாழ்ந்து படம்பிடித்துள்ளனர். நூற்றுக்கணக்கான் எம்ப்பரர் பென்குவின்கள் ஒரு இடத்தில் குவிந்து, அவைகள் தன்னுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்