மாற்று! » பதிவர்கள்

G.Ragavan

சினிமாப் பைத்தியம்    
October 14, 2008, 9:41 pm | தலைப்புப் பக்கம்

நம்மளையும் பதிவர்னு அப்பப்பக் காட்டிக்கிறதுக்குன்னே கண்டுபிடிச்சதுதான் இந்தத் தொடர்பதிவுகள் போல..... ஸ்ரீதர் அண்ணாச்சியும் பிரபா அண்ணாச்சியும் கலக்கல் பதிவுகள் போட்டுட்டாங்க. எனக்கும் ஏதோ தெரியும்னு கூப்டுட்டாங்க. நாமள்ளாம் சினிமாலயே பொறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்குறவங்களாச்சே. கொஞ்ச நாளா எழுதாம வேற இருந்தேனா.... வெட்டிப்பய பாலாஜி வேற...என்னது ஒன்னுமே எழுத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்    
July 31, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் (ஆகித் தொலைந்தால் என்று படிக்க விரும்புகிறவர்கள்...அப்படியும் படித்துக் கொள்ளலாம்)முதலமைச்சர் அலுவலகத்தில் (சும்மாக்காச்சுக்கும் கூட செயிண்ட் ஜார்ஜ் கோட்டைன்னு சொல்ல மனசு வரலைங்க) உட்கார்ந்திருக்கிறார்."நாராயணா.. நாராயணா..."ரஜினிகாந்தின் அழைப்பைக் கேட்டு ஓடி வருகிறார் உதவியாளர்."என்னங்க சத்தியத்த விட்டுட்டீங்க? நன்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தசாவதாரம் விமர்சனம்    
June 14, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

ஹறி ஓம் நாறாயணாய நமகஇனிமேல் இந்த விமர்சனத்தைப் படிக்கின்றவர்கள் ஹறியருளால் திரைப்படத்தின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்படியால்...விரும்பதாவர்கள் மேற்கொண்டு படிக்காமலும்...விரும்புகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இல்லாதிருக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.உலகநாயகன் என்று தமிழ் கூறும் திரையுலகத்தாலும் ரசிகர்களாலும் போற்றப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு    
March 25, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

சுருளிராஜன் நகைச்சுவை 70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மிகவும் பிரபலம். அப்பொழுது இரண்டு திரைப்படங்களில் வந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலம். ஒன்று "உப்புமா கிண்டி வையடி" என்ற பாடல். இதில் மலேசியா வாசுதேவன் சுருளிக்கும் வசந்தா சச்சுவிற்கும் பாடியிருப்பார்கள். நடுவில் சுருளியும் சச்சுவும் பேசியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் இசை. படத்தின் பெயரும்...தொடர்ந்து படிக்கவும் »

தங்க மரம் - 8    
March 3, 2008, 6:10 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம்ஆலோரின் சுடர்மகளான லிக்திமாவிற்கு ஆதி முத்தைப் பரிசளித்தது அவளது கணவன் சாண்டாவிற்குப் பொறாமையை உண்டாக்கியது. எப்படியாவது முத்தைக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன். அப்பொழுது...பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8அந்தப் பளபளக்கும் முத்தின் மேல் சாண்டாவிற்கு ஆசை கூடிக்கொண்டே போனது. இப்படியெல்லாம் ஆசை உண்டாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தங்க மரம் - 7    
February 25, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம்கதிரவனும் சித்திரையும் ஆலமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு பெட்டியையும் செங்கோலையும் சேர்த்து வைத்து உரசினார்கள். அப்பொழுது...பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5பாகம் - 6பாகம் - 7கிணிகிணியென்ற மணியோசையும் துண்டு துண்டாக வந்து விழுந்த சொற்களும் இருவரையும் குழப்பியது. உரசிக்கொண்டிருக்கும் பொழுதே பெட்டியும் கோலும் ஒன்றோடொன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சால்சா மோனிகா பால் - 2    
February 19, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்

முதல் பாகம் இங்கேஎன்னடா...காதல் கதைன்னு சொல்லீட்டு காதலே வரலைன்னு சொல்றீங்களா? அது வர்ரதுக்குக் காரணம் வேணும்ல. அந்தக் காரணத்துக்குத்தான் வெச்சோம் ஒரு பயணம். விமானப் பயணம். லண்டன்ல சாக்ஸ் சண்முகசுந்தரத்துக்கும் மோனிகா பாலுக்கும் சண்டை வந்துச்சுல்ல. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பாரீசுக்குப் போறாங்க. சென்னை பாரீஸ் இல்லைங்க. இது பிரெஞ்சுப் பாரீசு. அதுக்குக் காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

தங்க மரம் - 6    
February 18, 2008, 9:32 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம்இருண்டு கிடக்கும் ஆலோர் கிரகத்தைப் பிழைப்பிக்க தனிமாவாலும் பிடிமாவாலும் மட்டுமே முடியும் என்று அரசி சொன்னதைக் கேட்டுச் செயல் முடிக்க வாக்குறுதி அளித்தாள் தனிமா. பாதி உண்டிருந்த கிரகத்திற்காகப் புறப்பட்டாள் தனிமா.....பாகம் - 1, பாகம் - 2, பாகம் - 3, பாகம் - 4, பாகம் - 5தங்க மரம் - 6நடுக்கோபுரத்தின் உச்சியில் இருந்தார்கள் தனிமாவும் பிடிமாவும். தனிமாவை ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சால்சா மோனிகா பால் - 1    
February 12, 2008, 6:24 pm | தலைப்புப் பக்கம்

வாங்க வாங்க வாங்க.... இது காதல் மாசம். இந்தக் காதல் மாசத்துல ஒங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப் போறேன். இதத்தான் சினிமாவா எடுக்கப் போறோம். வார்னர் பிரதர்ஸ் மொதமொதல்ல தமிழ்ல எடுக்கப் போற படம். கதாநாயகரா சூர்யாவா அஜீத்தான்னு யோசிச்சோம். அவங்க ரொம்பவும் பிசியா இருந்தா டாம் குரூஸ் கிட்ட பேசிக் கால்ஷீட்டோ..கைஷீட்டோ....அட...பெட்ஷீட்டாவது வாங்கிப் படத்த எடுக்கனும்னு ஒரே முடிவோட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தங்க மரம் - 5    
February 11, 2008, 8:00 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம்கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான். ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தங்க மரம் - 4    
February 4, 2008, 9:36 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம்கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான். பாகம்-2 மற்றும் பாகம்-3பாகம் - 4தாய் கொடுத்த பெட்டியை புது வேட்டியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தங்க மரம் - 3    
January 28, 2008, 7:18 pm | தலைப்புப் பக்கம்

முன்கதைச் சுருக்கம்கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் சென்றான்.ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

தங்க மரம் - 1    
January 14, 2008, 8:46 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் அன்று இந்தப் புதிய தொடரை இடுகிறேன். இது காதல், ஆன்மீகம் என்றில்லாமல் விட்டலாச்சார்யா படம் போலச் செல்லும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரி கதைக்குப் போகலாம்.---------------------------------------------------------"கதிரவா, இன்றோடு உனக்கு வயது பதினெட்டு. இந்த நாளுக்காகத்தான் நான் காத்துக் கொண்டிருந்தேனப்பா. உன்னுடைய தந்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நஒக - மஞ்சனத்தி    
December 17, 2007, 10:59 pm | தலைப்புப் பக்கம்

இந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா? எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்தாம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.எங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கேட்ட பாடல்கள் - 9-12-07 வரையில்    
December 14, 2007, 9:34 pm | தலைப்புப் பக்கம்

ஒக்க பிருந்தாவனம் இது தமிழில் அக்னி நட்சத்திரம் என்ற படம். தெலுங்கில் கர்ஷனா என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தமிழில் பாடியவர் ஜானகி. தெலுங்கில் வாணி ஜெயராம். இருவருமே அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இசை இளையராஜா. வாணி ஜெயராமின் மிருதுவான குரல் பாவமும் தவறில்லாத தெலுங்கு உச்சரிப்பும் மிகமிக அருமை.மற்றொரு தெலுங்குப் பாடல். இயக்குனர் கே.விஷ்வநாத்தின் ஸ்வர்ண கமலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பூர்ணிமா    
December 6, 2007, 7:55 pm | தலைப்புப் பக்கம்

ஞாயிறு காலை. டெல்லி ஏர்போர்ட். சென்னைக்குச் செல்லும் ஜெட் விமானத்தில் ஏறி என்னுடைய இருக்கையில் அமர்ந்தேன். எக்கானமி கிளாஸ்தான். ஜன்னலோரம் எனக்கு மிகவும் பிடிக்கும். கேட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வீட்டோடு மருமகளாகப் போகலாமா?    
November 28, 2007, 7:48 am | தலைப்புப் பக்கம்

மகாமடமை பொருந்திய தமிழ்ப் பெண்களே!என்ன மடமைன்னு திட்டுறேன்னு பாக்குறீங்களா? அது பெருமைமிகு தமிழ்ப் பெண்ணின் அருங்குணங்கள்ள ஒன்னு மடமை. அப்படியாகப் பட்ட மடத் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

காதல் குளிர் - 9    
November 19, 2007, 6:02 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பாகத்தை இங்கே படிக்கவும்பக்கத்தூர் என்பது ஏதோ பெரிய ஊர் என்று எண்ணிவிட வேண்டாம். பட்டிக்காட்டிலிருந்து பட்டிக்காட்டிற்கு வந்தார்கள். அங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் குளிர் - 8    
November 12, 2007, 6:43 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பகுதி இங்கேஏன் கத்தினாள் ரம்யா? அப்படியென்ன நடந்தது? இதுதானே உங்கள் கேள்வி. இதோ சொல்கிறேன்.காரை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் குளிர் - 7    
November 5, 2007, 9:21 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பகுதிக்கு இங்கே சொடுக்கவும்.ரம்யா கேட்ட கேள்வி புரிந்ததா புரியவில்லையா என்றே ப்ரகாஷாவுக்குப் புரியவில்லை. ஆத்திரப்படும் அப்பாவை நினைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் குளிர் - 6    
October 30, 2007, 7:17 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பகுதிக்கு இங்கே செல்லவும்.ஓ ஆமோர்பூ வண்ணம்சஜோனி கோபோல மின்னும்சித்ரா பெங்காலியில் பாடினாள். சப்யா தமிழில் பாடினாள். ரெண்டும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காதல் குளிர் - 5    
October 22, 2007, 5:55 pm | தலைப்புப் பக்கம்

சென்ற பாகத்திற்கு இங்கே சுட்டவும்.ரம்யா அமைதியாக ப்ரகாஷாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றும் பேசவில்லை. அவன் சொன்னதை முழுமையாக மனசுக்குள் நினைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

66. அபூர்வமான முருகன் பாட்டு    
September 13, 2007, 8:12 pm | தலைப்புப் பக்கம்

ஒரு அபூர்வமான பாட்டு கேப்போமா இன்னைக்கு? அதுவும் இளையராஜா இசைல?அதுல என்ன அபூர்வம்? இளையராஜா இசையில முருகன் பாட்டு சினிமாவுல ரெண்டே ரெண்டுதான் எனக்குத் தெரிஞ்சி வந்திருக்கு. கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

பூங்கா - கவிதை    
August 3, 2007, 8:35 pm | தலைப்புப் பக்கம்

கவிதைகள் எழுதப்படுவதில்லை. பிறக்கின்றன. பிரசவத் தேதியைக் கூட கவிதைக் குழந்தைதான் முடிவு செய்கிறது என்று நம்புகிறவன் நான். ஆகையால்தான் கவிதை எழுத நான் முயற்சிப்பதில்லை. இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஹாரி பாட்டரும் இனவெறியும்    
July 23, 2007, 5:48 am | தலைப்புப் பக்கம்

ஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு?ஏன் இப்பிடி பைத்தியமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

புகைப்படப் போட்டிக்கு    
July 17, 2007, 9:39 pm | தலைப்புப் பக்கம்

புகைப்படப் போட்டிக்குதலைப்பு : இயற்கைமுதற்படம்இரண்டாம் படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

3 இன் 1 மூன்று சுரங்களுக்குள் அபூர்வ ராகம்    
July 11, 2007, 5:49 pm | தலைப்புப் பக்கம்

இசையின்பம் வலைப்பூவுல 3 இன் 1 மூன்று ஸ்வரங்களுக்குள் அப்படீன்னு ஒரு பதிவு போட்டிருந்தாங்க நம்ம ஜீவா. அதுல மகதிங்குற ராகத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

மாமாமாமாமாமாமாமா இப்பிடி இருக்கனும்!    
June 23, 2007, 10:42 pm | தலைப்புப் பக்கம்

மாமாமாமாமாமாமாமான்னா புரியலையா...ஒரு மா ரெண்டு மா....அட எட்டுமா...அட எட்டுமா இப்பிடி இருக்கனும்! அதாங்க தலைப்பு. நம்மளப் பத்தி எட்டு தகவல்கள் சொல்லனுமாமே. அமெரிக்காவுல ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

எம்.ஆர்.ராதா பாடிய தேவாரம்    
June 19, 2007, 10:22 pm | தலைப்புப் பக்கம்

எம்.ஆர்.ராதா எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். அருமையான குணச்சித்திர நடிகர். நகைச்சுவை..எதிர்மறை...அட...என்ன படங்க அது...பார் மகளே பார்...அதுல நட்டுவாங்கனாரா வருவாரே....சூப்பருங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஜெயலலிதாவை இன்னமுமா கைது செய்யலை?    
June 7, 2007, 7:09 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்துல எல்லாரும் இதத்தானய்யா பேசுறாங்க. அந்தம்மா தப்பு செஞ்சாங்கன்னு இவரு சொல்றாரு. தப்புன்னா தேர்தல்ல நிக்க முடியாமப் போறது மட்டுந்தான் தண்டனையா? சட்டத்தை ஏமாத்துனதுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

54. கே.பி.சுந்தராம்பாளா?    
June 4, 2007, 7:27 pm | தலைப்புப் பக்கம்

ஏலா ஒனக்குக் கே.பி.சுந்தராம்பாள் தெரியுந்தானே?ஆமு. தெரியும்.எப்படில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

48. இளையராஜாவே எழுதிப் பாடியது    
June 4, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

சில சமயங்களில் சில பாடல்கள் மிகவும் அபூர்வமாக அமைந்துவிடுவதுண்டு. ஆமாம். மிகப் பிரபலமான பாடகராக இருப்பார். மிகப் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பார். ஆனால் ஒரு பாட்டுதான் இருவரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பெரியார் - திரைப்படம்    
May 21, 2007, 8:20 pm | தலைப்புப் பக்கம்

பெரியார் பற்றிய தெரிதலும் புரிதலும் மிகக் குறைவுதான் எனக்கு. பள்ளிக்கூடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

043. தாய்ப்பால் கொடுத்தாள்    
May 13, 2007, 11:03 am | தலைப்புப் பக்கம்

குமரகுருபரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பாண்டி நாட்டில் பிறந்த தமிழ் முத்து....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் இசை

குற்றப்பத்திரிக்கை - விமர்சனம்    
May 7, 2007, 8:54 am | தலைப்புப் பக்கம்

இந்தப் படத்தை எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்கதானே? 1994லயோ என்னவோ எடுத்த படம். கிட்டத்தட்ட பன்னிரண்டு வருட இருட்டறை வாசத்திற்குப் பிறகு வெள்ளித்திரையைத் தொட்டு அதே வேகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அழகிய தமிழ்மகள் இவள்    
April 20, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

கண்ணுக்கு மையழகுன்னு கவிஞர்கள் பாடியிருக்காங்க. அதே மாதிரி வலைப்பூக்கள்ள நண்பர்கள் எல்லாரும் அழகு பத்தி ஏற்கனவே பதிவு போட்டாச்சு. நம்மள குமரனும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

037. பத்துமலைத் திரு முத்துக்குமரனை    
April 12, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

ஒரு பாடல் இசையமைக்கப்பட வேண்டும். அதுவும் ஏற்கனவே எடுக்கப்பட்ட படக்காட்சிக்கு. படக்காட்சியின் நீளம் கிட்டத்த பத்தரை நிமிடங்கள். அந்தப் படக்காட்சியும் மலேசிய பத்துமலை முருகன் கோயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் தமிழ்

40. செரு    
March 21, 2007, 12:16 pm | தலைப்புப் பக்கம்

கவுண்டமணி அன்று பள்ளிக்கூடத்திற்கு ஆய்வாளராக வந்திருக்கிறார். தலைமை ஆசிரியர் உசிலைமணி அவரை வரவேற்று ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் செல்கையில் செந்தில் தமிழ்ப்பாடம் எடுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

நான் கொஞ்சம் weird    
March 21, 2007, 5:37 am | தலைப்புப் பக்கம்

இப்ப வலைப்பூக்கள்ள எல்லாரும் அஞ்சு அஞ்சுன்னு சொல்றாங்களே. அதுக்காக அஞ்சாமலும் இருக்க முடியுமா? அஞ்சுவது அஞ்சாமை பேதமையாச்சே. நம்ம கோபிநாத்தும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்    
March 20, 2007, 7:02 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கே"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

11ம் பகுதி கள்ளியிலும் பால்    
March 15, 2007, 8:15 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கே"உண்மையாவா சொல்ற சந்தியா? நெஜமாவா?" நமக்கு ஒரு குழந்தை இருந்து அது நமக்கே தெரியாமல் இருந்து...பிறகு தெரிய வந்தால்? இவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

முருகனும் தெய்வயானையும்    
March 12, 2007, 12:21 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் முருகனைப் பற்றி ஹரிஹரன் ஒரு பரபரப்புப் பதிவு போட அதற்குப் பதிலாக விடாதுகருப்பு ஒரு பதிவு போட. பிறகு முத்துக்குமரனின் வடமொழி பற்றிய ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் விழுந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

9ம் பகுதி கள்ளியிலும் பால்    
March 8, 2007, 4:55 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கேசந்தியாவைப் பற்றி நாம் நிறைய பார்த்து விட்டோம். ஆனால் சரவணனைப் பற்றி? சரவணன் பல பெண்களோடு பழக்கம் உள்ளவன். புகை அவனுக்கும் பகை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

8ம் பகுதி கள்ளியிலும் பால்    
March 7, 2007, 4:06 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பாகம் இங்கே.அலுவலகத்தில் சந்தியாவிடம் அன்று பேசியவர்கள் எல்லாரும் காயங்களோடு திரும்பினார்கள். அந்த அளவிற்குக் கடித்து வைத்திருந்தாள். விமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

காலபைரவன் - விமர்சனம்    
March 6, 2007, 4:45 am | தலைப்புப் பக்கம்

இவருதாங்க காகாகாகாலபைரவன்தூத்துக்குடியில் ஒரு பொழுது போகாத சனிக்கிழமை மதியம் பார்த்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

7ம் பகுதி கள்ளியிலும் பால்    
March 1, 2007, 3:21 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கே.ராஜம்மாள் அப்படிக் கேட்டதும் வாணிக்கு எரிச்சல் வந்தது. வெளியில் காட்ட விரும்பவில்லை. அத்தோடு அமைதியாக எடுத்துச் சொல்ல விரும்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

6ம் பகுதி கள்ளியிலும் பால்    
February 27, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பாகம் இங்கே.அந்த வாரம் படபடவென ஓடியது. சனிக்கிழமையும் வந்தது. ஏற்கனவே சிவகாமியிடம் தொலைபேசியில் சொல்லியபடி வாணி பெசண்ட் நகர் வந்தாள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

5ம் பகுதி கள்ளியிலும் பால்    
February 19, 2007, 8:04 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கே"ஹலோ தேன் தூங்கீட்டியா?""ஹே சந்தீ....இல்லடீ. அதுக்குள்ளயா? புத்தக வெளியீடு இருக்குல்ல. அதுக்குத்தான் மகளத் தூங்க வெச்சுட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

4ம் பகுதி கள்ளியிலும் பால்    
February 13, 2007, 3:44 am | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கேகுளித்து முடித்துக் கிளம்பத் தயாராக இருந்தார் சுந்தரராஜன். கண்ணன் ஏற்கனவே அலுவலகம் கிளம்பிச் சென்றிருந்தான். காலை டிபனாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

32. அருணாக்கொடி    
February 9, 2007, 12:44 pm | தலைப்புப் பக்கம்

மதியம் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து டொண்டக்க டொண்டக்க என்று கொட்டடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி. அந்தப் பக்கமாக அவசரமாக ஓடி வந்த செந்திலை நிறுத்தினார்."டேய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

3ம் பகுதி கள்ளியிலும் பால்    
February 6, 2007, 4:27 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பகுதி இங்கேகேள்வி: ஜயண்ட் வீல் ராட்டிணம் எல்லாருக்கும் தெரியும். அதில் ஏறிச் சுற்றுவது நன்றாக இருக்கும். அதே ஜயண்ட் வீல் கரகரவென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

2ம் பகுதி - கள்ளியிலும் பால்    
January 30, 2007, 5:34 am | தலைப்புப் பக்கம்

"இந்தாம்மா காஃபி." கோப்பையை சந்தியாவிடம் நீட்டினார் சிவகாமி. மடியில் சுந்தரை வைத்திருந்த சந்தியா ஒற்றைக் கையால் கோப்பையை வாங்கினாள். காஃபியைச் சிறிது உறிஞ்சியவள்..."அப்பா எப்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

1ம் பகுதி - கள்ளியிலும் பால்    
January 23, 2007, 3:06 pm | தலைப்புப் பக்கம்

நகத்தைக் கடித்தபடி காத்திருந்தாள் சந்தியா. வந்து பத்து நிமிடங்களாகிறது. அதனால்தான் கொஞ்சம் டென்ஷன். விரல்களைக் கைகளின் உட்பக்கமாக மடக்கி விரல்களைப் பார்த்தாள். அழகான விரல்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

05. கின்னிக்கோழியும் சிவன்கோயில் கடையும்    
January 16, 2007, 5:26 pm | தலைப்புப் பக்கம்

முந்தைய பாகம் இங்கே. தீபாவளிச் சுற்றுப்பயணம் எழுதத் தொடங்கி பொங்கலும் வந்துருச்சு. இனியும் இத ரொம்ப நீட்டுனா மக்கள் அடிக்க வந்துருவாங்க. ஆகையால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பொய் - விமர்சனம்    
December 25, 2006, 4:17 pm | தலைப்புப் பக்கம்

கடலை வாங்கிச் சாப்பிடும் பொழுது ஒரு சொத்தைக் கடலை தின்று விட்டு அடுத்து எந்தக் கடலையைத் தின்றாலும் அது நன்றாக இருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால்..கடைசியாகப் பார்த்த தமிழ்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

40. படைப்பில் அடைப்பில்லாமல் இருக்க    
October 31, 2006, 1:38 am | தலைப்புப் பக்கம்

ஏழு பிறப்பு என்று சொல்கின்றோமே! அதென்ன ஏழு பிறப்புகள்! வள்ளுவர் சொல்கிறார். மாணிக்கவாசகர் சொல்கிறார். அருணகிரி சொல்கிறார். எல்லோரும் சொல்கின்றார்கள். அதென்ன ஏழு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தென்னவன் தீதிலன்    
June 27, 2005, 8:45 am | தலைப்புப் பக்கம்

"யோவ்! இன்சுபெக்டரு! வெளங்குவயாய்யா நீ. என்னத்தப் படிச்சி போலீசு வேலைக்கு வந்த? காசு குடுத்து வந்தியா? குத்தவாளிய கண்டுபிடிக்காம ஒரு தப்புஞ் செய்யாதவகள பிடிச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பாண்டி பஜாரில் விஜய டி ராஜேந்தர்    
June 22, 2005, 9:38 am | தலைப்புப் பக்கம்

அடுக்கு மொழிக்காரர் டி.ஆர். அவரை ஒரு முறை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. சந்திப்பும் ரொம்பக் கொஞ்ச நேரந்தான். இது அவர் விஜய டி ராஜேந்தராக மாறும் முன் நடந்தது.தியாகராய நகரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொளுத்துவோம்    
June 9, 2005, 11:39 am | தலைப்புப் பக்கம்

மடமையைக் கொளுத்துவோம் "தாயே! அண்ணல் காத்துக்கொண்டிருக்கிறார். பல்லக்கும் ஆயத்தமாக இருக்கிறது. புறப்படலாமா அம்மா?". பணிவோடு கேட்டுவிட்டு மறுமொழிக்காக அன்னையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பெண்ணைப் பெற்றவன்    
June 7, 2005, 7:50 am | தலைப்புப் பக்கம்

பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்