மாற்று! » பதிவர்கள்

Arunn

கோனிங்ஸ்பெர்கின் ஏழு பாலங்களும் வரைகோலங்களும்    
August 24, 2009, 5:41 pm | தலைப்புப் பக்கம்

டோப்பாலஜி என்பது தொடர்ச்சியாக உருமாறும் பொருட்களின் எத்தன்மைகள் அல்லது குணங்கள் மாறுபடாமல் இருக்கிறது என்பது பற்றி படிக்கும் கணிதவியலின் ஒரு பிரிவு. டோப்பாலஜிக்கு  தமிழில் இடவியல் என்கிறார்கள்; எனக்கென்னவோ இதை வடைவியல் என்றும் கூறலாமே என ஆசை. சென்ற கட்டுரையில் இதைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டவர்களுக்கு ஏன் என்று புரியும். வேடிக்கை தாண்டி, இங்கு, அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

விழித்திரை லேசர் சிகிச்சையின் ஒப்பியலாக்கம்    
August 17, 2009, 11:36 am | தலைப்புப் பக்கம்

[அறிவிப்பு: காரைக்குடி அறிவியல் கருத்தரங்கத்திற்கு சமர்ப்பித்த நீட்டிக்கப்பட்ட ஆராய்ச்சியுரைச் சுருக்கம்  இங்கு கொடுத்துள்ளேன். கட்டுரையில் வரும் கலைச்சொற்களும் அதன் ஆங்கில சம வார்த்தைகளும், உரையின் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கிறோம். சமர்ப்பித்த முழுக்கட்டுரையும், செப்டம்பர் கருத்தரங்கிற்கு முன்னால் இங்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

உலகே உன் உருவம் என்ன    
August 10, 2009, 6:27 pm | தலைப்புப் பக்கம்

[அபாய அறிவிப்பு: கட்டுரை சற்று நீண்டுவிட்டது. பாதியில் கொட்டாவி வந்தால், மீண்டும் வந்து, விட்ட இடத்தில் இருந்து மறக்காமல் படித்துமுடித்துவிடுங்கள். இல்லை எரடோஸ்தனஸும் நியூட்டனும் வருந்துவர். பெரியவர்கள் பொல்லாப்பு சும்மா விடாது. ஜாக்கிரதை.] டெர்ரி பிராட்ச்செட் படித்திருக்கிறீர்களா? டக்ளஸ் ஆடம்ஸிற்கு (ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு ட்டு த காலக்ஸி எழுதியவர் – படித்ததில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

நமக்கு எவ்வளவு அறிவியல் தெரிந்திருக்கவேண்டும்?    
August 6, 2009, 9:16 am | தலைப்புப் பக்கம்

தினம் அறிவியலில் பல விஷயங்களை கண்டுபிடிக்கின்றனர். அவற்றில் சில விஷயங்கள் ஏதோ வகையில் பொதுமக்கள் வரை நீட்சி பெறுகிறது. மருந்துகள், வாகனங்கள், செல்ஃபோன், இணையம், ஏகே47, காண்டம், சௌபாக்கியா வெட்கிரைண்டர் இப்படி. உலக மக்கள் அனைவரும் பங்கெடுத்து, சிந்தித்து, தங்களுக்கு எது தேவை என்று பரிந்துரைக்கவும் பல கண்டுபிடிப்புகளையும், கவலைகளையும் அறிவியல் காட்டிக்கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வௌவால், பற பற    
August 4, 2009, 3:53 pm | தலைப்புப் பக்கம்

வௌவால் பார்த்திருக்கிறோம். அவை பறக்கையில் மீயொலியை (ultrasound) உபயோகித்து தங்கள்முன் இருக்கும் தடுப்புகளை, எதிரிகளை கண்டுணர்ந்து அவற்றில் மோதாமல், சிக்காமல் திசைமாறும் திறனுடையவை என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். சட்டென்று இருட்டான கிராமத்து வீட்டு ரேழியினுள் நாம் செல்கையில் அவை லாவகமாக நம்மீது படாமல் பறந்து நழுவுவதையும் பார்த்திருக்கிறோம். வௌவாலின் பறத்தலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

வலையில் அறிவியல் விளக்கங்கள் எழுதுவது வீண்?    
August 3, 2009, 3:12 pm | தலைப்புப் பக்கம்

அறிவியல் பற்றி அதை உருவாக்கும் அல்லது பயன்படுத்தும் அறிவியலாலர்களும், தன்ஆர்வலர்களும், சாமான்யர்களுக்கு நிறைய சொல்லவேண்டும் என்று நமக்கு பொது எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி செய்ய முன்வராதபோதோ அல்லது அவ்வகை முயற்சிகள் நமக்கு சரியாக பலனளிக்காதபோதோ கோபப்படுகிறோம். பல வேளைகளில், கண்மூடித்தனமாக. முக்கியமாக தாய்மொழியில் அறிவியலை முழுவதுமாக பழகிக்கொண்டால் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

நானோ ஃப்லூயிட்ஸ்    
May 23, 2008, 7:57 pm | தலைப்புப் பக்கம்

வலையில் அறிவியல் பக்கங்களில் அவ்வப்போது அகழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால் நானோ திரவங்கள் அல்லது நானோ ஃப்லூயிட்ஸ் (nanofluids) என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன என்று சற்று விரிவாக தமிழில் பார்ப்போம். நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் நூறு கோடி பாகம். ஒப்புமைக்காக பார்த்தால், ஒரு அனுவின் அளவு ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் ஆயிரம் கோடி பாகம். நானோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

டர்புலன்ஸ் பாகம் மூன்று    
May 4, 2008, 5:06 pm | தலைப்புப் பக்கம்

தினவாழ்வில் வீட்டில் நாம் உபயோகிக்கும் குழாய் நீரோட்டம், டர்புலன்ட் ஃப்ளோ, அமளி நீரோட்டத்திற்கு ஒரு எளிதான உதாரணம் என்று சென்ற பாகத்தில் பார்த்தோம். இதை முதலில் கவனித்து படம் வரைந்தவர் லியனார்டோ டா வின்ஸி என்றும் முதல் பாகத்தில் பார்த்தோம். இங்கு குழாயில் அமளியை சற்று விரிவாக விவாதிப்போம். ஹேகன் (Hagen) மற்றும் பாஸ்யூஹ் (Poiseuille) 1839, 1840 வருடங்களில் குழாய்களில், லாமினர் ஃப்ளோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இளம் பேராசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள்    
April 30, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

சற்று ஹாஸ்யமாக யோசித்தால், இந்தியாவில் தொழில்நுட்ப ஆராய்ச்சியை வேலையில் ஒரு பகுதியாக கொண்ட ஸ்தாபனங்களில் வேலை செய்யும் இளவயது ஆசிரியர்கள் கூறும் டாப் ட்வென்டி பொய்கள் வருமாறு 1. ம்ஹும்…என்னுடைய உண்மையான சாதிக்கும் திறன் மேற்கில்தான் நிதர்சனமாகும். 2. ஆனால் என் மனைவிக்கு அந்த ஊர் சீதோஷணத்தில் அடிக்கடி சளி பிடிக்கிறது என்பதால் மேற்கில் இருக்கும் ஸ்தாபனங்களில் நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

டர்புலன்ஸ் பாகம் இரண்டு    
April 20, 2008, 4:33 pm | தலைப்புப் பக்கம்

திரவங்களின் ஓட்டத்தை சீரோட்டம் (laminar flow) அமளி ஓட்டம் (turbulent flow) என்று வேறுபடுத்த முடியும். அமளியை கொந்தளிப்பு, கலவரம் என்றெல்லாம் எழுதலாம். சீரோட்டத்தை தகடொத்த ஓட்டம் என்று லாமினரை தமிழ்படுத்தி எழுதலாம். புரியும் வார்த்தையை வைத்துக்கொள்ளுங்கள். விஷயம் ஒன்றுதான். சரி பாகுபண்பின் அல்லது பாகுநிலையின் (viscosity) வீரியத்திற்கேற்ப (மதிப்பிற்கேற்ப) திரவங்கள் சீரோட்டத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

டர்புலன்ஸ்    
April 14, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்

குழாயினுள்ளோ கடலிலோ, திரவங்களின் ஓட்டத்தை விஞ்ஞானிகள் பொதுவாக இரு பிரிவுகளாக்கி புரிந்துகொள்ள முயலுகின்றனர். ஒன்று லாமினர் (laminar), மற்றொன்று டர்புலன்ட் (turbulent). இவற்றை முறையே சீர் ஓட்டம், அமளி ஓட்டம் என்று எழுதினால் புரியும் என்று நினைக்கிறேன். வீட்டில் சாமிபட ஊதுபத்தி புகை சற்று உயரம்வரை சீராக ஒரே தடிமனில் மேலெழும்பி சடாரென குழப்பமாகி மேனி முழுவதும் உடைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

காள காள அபத்த காள    
February 9, 2008, 10:52 am | தலைப்புப் பக்கம்

காளை என்று எழுதி காள என்று ஐகாரக்குறுக்கத்துடன் படிக்கவேண்டிய ஒரு படத்தை நண்பருடன் நைட்ஷோ சென்று பார்த்து கண் (நிலா), காது (ஒரே சத்தம்), தொண்டை (கோலா), மனம் புண்பட்டுக்கொண்டேன். படத்தில் ஜீவா என்று நிறையபேர் வருகிறார்கள். வைத்துக்கொண்டு ஏதாவது செய்திருக்கலாம். சமீப தூரத்தை ஸ்லோமோஷனில் நிறைய நேரம் கடக்கிறார்கள். சென்னை-தேனி தொலைவை கண்சிமிட்டும் நேரத்தில் சில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஹைக்கூவும் பொய்க்கூவும்    
January 24, 2008, 5:13 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதா எழுதிய ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் (உயிர்மை பதிப்பு) என்ற புத்தகத்தை படித்ததில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களை பற்றியும், ஜப்பானிய கவிதைகளின் இலக்கணங்களையும், அவைகளின் தமிழோடு உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் அறிமுக நிலையில் புரிந்துகொள்ளமுடிந்தது. ஹைக்கூ பற்றி குன்ஸாகத்தான் புரிந்தது. என் குறைதான். நிறைய பொய்க்கூக்களை இதுவரை படித்துவிட்டதனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை புத்தகம்

புத்தக கண்காட்சியில் வாங்கியவை    
January 24, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். தொடர்ந்து தேய்த்ததில் கிரெடிட் கார்டிலிருந்து பூதம் கீதம் வந்துவிடப்போகிறதோ என்று உடன் வந்தவருக்கு சந்தேகம். வாங்கிவந்து ஒரு வாரமாகியும், ஜுரம் விட்டபாடில்லை. கார்ட் இன்னும் சூடாகத்தான் இருக்கிறது. வீட்டு நிர்வாகியும்தான். இனி பட்டியல் Copyright © 2008 ஒம்மாச்சி. This Feed is for...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சென்னை புத்தக கண்காட்சி 2008 அனுபவம்    
January 18, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

இந்தியன் கிரிக்கெட் டீம் போல் இரண்டு நாள் ஸ்டார்டிங் டிரபிளுக்கு பிறகு ஒரு கட்டாய லீவு நாளில் சாயங்காலம் சென்றால் கூட்டமாக இருக்கும் என்று காலையில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து புத்தக கண்காட்சியை பத்தரை மணிக்கு அடைந்தால், திறக்கவில்லை. லைனாக நில்லுங்கள் சார், நான் ஏன் சார் உங்கள் பின்னால் நிற்கவேண்டும், நான்தான் முதலில் வந்தேன், நீங்க வேணா என் பின்னாடி வாங்க...தொடர்ந்து படிக்கவும் »

சென்னையில் சங்கமம் 2008    
January 11, 2008, 7:30 pm | தலைப்புப் பக்கம்

கையில் வாட்டர்பாட்டில், குழந்தை, கேமரா சகிதம் சென்னையில் சங்கமம் 2008 நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். முக்கியஸ்தர்கள் பலர் வருகையால் பந்தோபஸ்து அதிகமாக இருந்ததால் நேற்று செல்லவில்லை. இன்றும் சற்று தாமதமாகவே, யாரோ ஒருவர் சற்று அபஸ்வரமாக இறைவந்தனம் செய்துமுடிக்க திடலின் உள்ளே நுழைந்தேன். நல்ல கூட்டம். தமிழ் கலை நிகழ்சிக்கு ஆரம்பம் முதலில் கூட்டம் இருப்பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்