மாற்று! » பதிவர்கள்

ஹாலிவுட் பாலா

Inside Deep Throat (2005) [18+]    
March 11, 2010, 5:29 pm | தலைப்புப் பக்கம்

நானொரு அப்பாவிங்க. ஏன்னு கடைசியில் சொல்லுறேன். அதுக்கு முன்னாடி, நம்ம யூத் சங்கர் பிறந்து பத்து பதினைஞ்சு வருஷம் கழிச்சி, 1972-ல் வந்த Deep Throat படத்தை கேள்விப் பட்டிருப்பீங்க. நீங்க அடுத்த பாராவை ஸ்கிப் பண்ணிடுங்க. இந்தப் பாரா படாதவங்களுக்கு!! Deep Throat, வெறும் $22,500 டாலரில் எடுக்கப்பட்ட போர்னோ. ஹாலிவுட் படங்கள், எதோ ஃப்ரீ செக்ஸ்னா அமெரிக்காங்கற மாதிரி பில்டப் கொடுத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Oscar Winners (2010)    
March 8, 2010, 12:07 am | தலைப்புப் பக்கம்

நானூறு மில்லியன் டாலர் படத்தோடு, பத்து மில்லியன் டாலர் படம் போட்டியிட்டதோடு, ஆறு வெற்றி (ஏழுப் பிரிவுகளில் நேரடிப் போட்டி). இந்த வருடத்தின் ஸ்பெஷல், பெண் இயக்குனர் ஒருவர் முதன் முதலாய் ஆஸ்கர் வாங்கியது. என்னுடைய ‘பிக்’கை.. கடைசி வரிகளில் கொடுத்திருந்தேன். அதில் 10தான் நடந்திருக்கு. அடுத்த முறை இன்னும் கவனமா இருக்கணும். திரைப்படம் படம்தயாரிப்பாளர் An EducationFinola Dwyer, Amanda Posey A Serious...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Born into Brothels (2004)    
March 3, 2010, 12:27 am | தலைப்புப் பக்கம்

ஸானா ஆண்டி, எங்களை இன்னைக்கு பீச் கூட்டிட்டுப் போனாங்க. இதுவரைக்கும் நான் கடலைப் பார்த்ததேயில்லை. ஸானா ஆண்டி மாதிரி நல்லவங்களை பார்க்கவே முடியாது. எங்களை ஸூ-வுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. அப்படி என்ன இல்லாததையா காட்டிட்டாங்க? அந்தச் சேரியும், சேரிவாழ் மக்களும் நாம் உருவாக்கிய சமூகம்தானே? -ன்னு.. யாரோ, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வக்காலத்து வாங்கிய போது......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Heist (2001) - [Hollywood Robbeires 04]    
March 2, 2010, 2:09 pm | தலைப்புப் பக்கம்

Mamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம். 01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி. 02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Heist (2004) - [ Hollywood Robbeires 04 ]    
March 2, 2010, 2:05 pm | தலைப்புப் பக்கம்

Mamet Speak -ன்னா என்னன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? இல்லைன்னா, படத்தைப் பத்தி பேசும் முன்.. இது என்னன்னு பார்த்துடுவோம். ஒரு படத்தின் டயலாக், கீழ்கண்ட ஸ்டைலை பின்பற்றி எழுதியிருந்தா.. அதை Mamet Speak ஸ்டைல்ன்னு சொல்லுவாங்களாம்.01. வாயைத் திறந்தால் கூவம் தேவலாம்-ங்கற அளவுக்கு அள்ளி விடுவது. வேகமான டயலாக் டெலிவரி. 02. ஒருவர் பேசும் போது, அடுத்தவர் குறிக்கிடுவது. குறிக்கிடும் போதே.. முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Daybreakers (2010)    
March 1, 2010, 10:25 am | தலைப்புப் பக்கம்

சினிமா கண்டுபிடித்ததில் இருந்து, இதுவரை... வெளிவந்துள்ள 1000 சொச்சம் வேம்பயர் படங்களிலும்... சொல்லாத ஒரு விசயம், Daybreakers -ல் உண்டு. இதற்கு முன், மூன்றுப் படங்களில், 99% மனித இனமும் அழிஞ்சது போல காட்டியிருப்பாங்க (28 Days After, I am Legend, Zombieland). ஆனால் அந்தப் படங்களில் காட்டதது, மொத்த மனித இனமும் அழிந்தால், இந்த வேம்பயர்கள், ‘இரத்தத்திற்கு’ என்னப் பண்ணுவாங்க? தங்களின் எதிர்கால ‘இரத்தத் தேவை’க்கு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Oscar Nominees (2010)    
February 2, 2010, 10:03 am | தலைப்புப் பக்கம்

ஆல்ரைட்..!!! இந்த வருட ஆஸ்கர் நாமினேஷன் வந்தாச்சி. லிஸ்டில் நிறைய ஆச்சரியங்கள். ஒவ்வொரு வருடமும்... பெயரில்லாத சிலப் படங்கள் நிறைய இடத்தைப் பிடிக்கும். அதுமாதிரி இந்த முறை லிஸ்டில் வந்திருக்கும் படங்கள்ன்னு பார்த்தா... Up In The Air, Precious, The Hurt Locker அப்புறம் Nine. அதைவிட இன்னொரு ஆச்சரியம், 1991-ஆம் வருடம் டிஸ்னியின் Beauty and the Beast அனிமேஷன் படம் மட்டும்தான் இதுவரை.. சிறந்தப் படங்கள் வரிசையில்.. மற்றப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Food, Inc [Best of 2009 - 06.2]    
January 28, 2010, 11:38 pm | தலைப்புப் பக்கம்

அந்த ரெண்டு இளைஞர்களும்... ஒரு யுனிவர்சிட்டிக்குள் போறாங்க. ரெண்டு பேரின் முடியும்.. கொஞ்சம் வெட்டப் பட்டு.. பரிசோதிக்கப் படுது.  முடிவு.... ரொம்ப ஆச்சரியமா இருக்கு.  அவங்க முடியில் கலந்திருப்பது....... சாட்ச்சாத் நம்ம மக்காச்சோளம். இந்த ரிசல்ட்டைப் பார்த்து ஆச்சரியப் படும் ரெண்டு பேரும்..., அமெரிக்காவின் மத்தியில் இருக்கும் Iowa மாநிலத்தில் பயிரிடப் படும்... சோளம்.., எப்படி......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Food, Inc [Best of 2009 - 06.1]    
January 28, 2010, 12:08 am | தலைப்புப் பக்கம்

நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரியே..., எத்தனை மானநட்ட வழக்கு போட்டாலும்..., இவங்க ஜெயிப்பதில்லை. ஆனாலும்.. இன்னைக்கு வரைக்கும், தங்களைப் பத்தி.. யாராவது கொஞ்சம் தப்பா பேசிட்டாலோ, அல்லது அவங்க ப்ராடக்டை சாப்பிடாதீங்கன்னு சொல்லிட்டாலோ முடிஞ்சது கதை. அது தெருப் பிச்சைக்காரனா இருந்தா கூட, அவன் மீது ஒரு கேஸ் போட்டு... கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுதான் இவங்க வேலை.  நம்மை மாதிரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Blind Side [Best of 2009 - 04]    
January 25, 2010, 11:39 am | தலைப்புப் பக்கம்

கதையை படிச்சிட்டு, எதோ கண்ணைக் கசக்கற படம்னோ, அமெரிக்கன் ஃபுட்ஃபால் தெரியாம எப்படிப் படம் பார்க்கறதுன்னோ நினைச்சிடாதீங்க. இது 100% FEEL GOOD படம். “பெரும்பாலான நேரம், பந்தை கையில் வைத்துக் கொண்டேயிருக்கும் இந்த விளையாட்டை ஏன் ஃபுட்பால்-ன்னு கூப்பிடுறீங்க”-ன்னு, சுத்தியிருக்கும் அத்தனை அமெரிக்கரிடமும் கேட்டு சலிச்சாச்சி. யாருக்கும் பதில் தெரியலை. ஆனால் இவர்களிடம்... நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Lovely Bones (2009)    
January 23, 2010, 11:17 am | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட 4 வருட வனவாசம் முடிந்து, கிங்காங் படத்துக்குப் பிறகு பீட்டர் ஜாக்ஸன் இயக்கத்தை பார்க்கும் வாய்ப்பு. சத்தமேயில்லாம... கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடி (லிமிடட்), ஒரு வழியாக போன வாரம் வைட் ரிலீஸ் கிடைக்க..... 2002 -ல் இதே பெயரில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு நாவலை..., பீட்டர் பெரிய திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். கதை???? மார்க் வாபெர்கின், சந்தோஷமான குடும்பம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Saw I - VI [18+] Part 4    
January 22, 2010, 2:56 pm | தலைப்புப் பக்கம்

Saw VI கிட்டத்தட்ட இங்கிருந்து ஆரம்பிக்கிறது. இதில் வரும் சில காட்சிகள்.. முதல் பதிவில் உள்ளது. மறந்திருப்பவர்கள் திரும்ப படித்துக் கொள்ளவும். அதற்கு முன் நடந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் என்றால்... 01. ஜிக்ஸாவின் உடல் பிரேத பரிசோதனையின் போது, அவர் வயிற்றில் இருந்து கிடைக்கும் ஒரு டேப்.  அந்த டேப், மார்க் ஹாஃப்மேனுக்கானது. அமேண்டா உட்பட அத்தனை பேரையும், டெஸ்டிற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Saw I - VI [18+] Part 3    
January 19, 2010, 11:51 pm | தலைப்புப் பக்கம்

மார்க் ஹாஃப்மேன் & டேனியல் ரிக் (Rigg)-கின்,  [பெண்] பார்ட்னர் ஆலிஸன் கெல்லி-யை, மார்க் ஹாஃப்மேனும், அமேண்டாவும் கடத்தி, ஒரு ஆஸிட் குடுவைக்குள் சாவியை போட்டு அதை எடுத்து தன் பூட்டைத் திறந்தால் தப்பிப்பது, இல்லையெனில் உடம்பின் சதைகள் பிய்ந்து போவது போல ஒரு ட்ராப்பை உருவாக்கியிருப்பார்கள். பூட்டைத் திறந்தாலும், அதிலிருந்து தப்ப முடியாதவாறு, அமேண்டா அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Up In The Air (2009) [Best of 2009 -03]    
January 18, 2010, 8:18 pm | தலைப்புப் பக்கம்

அடுத்தவர்களிடன்... “ஸாரி.. உங்களுக்கு இன்னையோட வேலை போய்டுச்சி” என சொல்வதே ஒருவனின் முழு நேர வேலையாக இருந்தால் எப்படியிருக்கும்? Up In The Air-ல் ஜார்ஜ் க்ளூனியின் 365 நாள் வேலையும் அதுமட்டும் தான்!! கார்பொரேட் டவுன்சைஸர்ஸ் : இந்த வேலை இந்தியாவில் பிரபலமான்னு தெரியலை. இந்த நாட்டில் சக்கை போடு போடுதாம்.  இந்த மாதிரி கம்பெனிகளின் வேலை, பெரிய - நடுத்தர - சிறிய கம்பெனி என எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Saw I - VI [18+] Part 2    
January 18, 2010, 1:33 pm | தலைப்புப் பக்கம்

நவம்பர் 22-ல் முதல் பாகம் எழுதிட்டு.., நடுவில் 18+ பதிவுகள், அவதார், ஹண்டர் என டெக்னாலஜிப் பதிவுகள் குறுக்கே வந்து... அடுத்த பாகம் எழுத ரொம்ப நாள் எடுத்துகிட்டாச்சி. ரியல்லி.. சாரி. நினைவில்லாதவங்க.. ஒரு முறை முதல் பாகத்தையும் படிச்சிடுங்க. லெஸ்ட் மூவ் ஆன். டெஸ்டில் இருந்து தப்பித்தால்.. அவர்களை உயிருடன் விடுவது ஜானின் கொள்கை என்றால், சிஷ்யை அமேண்டாவிற்கோ... தப்பிப்பவர்களையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Book of Eli (2010)    
January 16, 2010, 11:08 pm | தலைப்புப் பக்கம்

இன்னையோட பதிவெழுத ஆரம்பிச்சி, ஒரு வருஷம் முடிஞ்சது. எல்லா ஏற்ற இறக்கத்தையும்.. ஒரு பதிவா எழுதினேன். அப்புறம்.. அந்தக் கொடுமையை வேற நீங்க படிக்கணுமான்னு விட்டுட்டேன். இருந்தாலும்..., ஒரு வருஷமா என்னை சகிச்சிகிட்டு இருக்கும் உங்களுக்கு ஒரு ஃப்லீங்ஸோட நன்றி சொல்லாட்டி எப்படி??!! ‘நீயெல்லாம் ஏன்டா எழுத வந்தே’-ன்னு கேட்கனும்னு நினைக்கறவங்க எல்லாம்... ‘உங்களை யாருங்க அவனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Chasing Amy (1997) [18+]    
January 16, 2010, 1:17 am | தலைப்புப் பக்கம்

டிஸ்க்ளெய்மெர் எல்லாம் போடுற ஐடியா இல்லை. வயசுக்கு வராத பசங்க எல்லாம் சொன்னா மட்டும் கேட்கவா போறீங்க. ஹோல்டன் : ஆண் - பெண் உடலுறவில் மட்டும்தான் பெனட்ரேஷன் கிடைக்கும். நீங்க ரெண்டு பேரும் எப்படி.......????? அலீஷா : நல்லா கவனி!!! ( கட்டை விரலையும், ஆட்காட்டி விரலையும் ஒரு வளையம் போல பிடித்து..... இன்னொரு கையை... அந்த வளையத்திற்குள் முழங்கை அளவுக்கு உள்ளே நுழைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Cove (2009) [Best of 2009 - 02]    
January 13, 2010, 9:52 pm | தலைப்புப் பக்கம்

இன்வெஸ்டிகேட் ஜர்னலிஸம்!!! எத்தனை டாகுமெண்ட்ரிகளில் பார்த்திருப்போம். புஷ்ஷின் அரசியல் வரலாறையே மாற்றியமைக்கப் பார்த்த Fahrenheit 9/11, போலிச் சாமியார்களின் திரையை கிழித்த Religulous, அமெரிக்க ரேட்டிங் சிஸ்டத்தின் தோலை உறித்த This Film Is Not Yet Rated, துப்பாக்கிக் கலாச்சாரத்தின் பின்புலன்களை சுட்ட Bowling for Columbine மாதிரி.. நூற்றுக் கணக்கில் டாகுமெண்ட்ரிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hurt Locker (2008) [Best of 2009 - 01]    
January 12, 2010, 9:35 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வெடிகுண்டு வெடிக்கும் போது, அதன் மைய அழுத்தம், ஒரு சதுர இன்ச்சிற்கு 700 பவுண்ட். அதிலிருந்து கிளம்பும் அதிர்வலையின் வேகம் 1300 மைல்கள்/மணி. தெறிக்கும் துளிகளின் தூரம் 2700 அடி. இதை செயலிழக்க வைக்கும் ஒவ்வொரு பாம் ஸ்வாடின் இறப்பு விகிதம்..., மற்ற போர் வீரர்களை விட ஐந்து மடங்கு அதிகம்.2008-ல் வந்திருக்க வேண்டிய படம். Paranormal Activity, Bad Lieutenant -மாதிரியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Clerks (1994) [18+]    
January 3, 2010, 7:25 pm | தலைப்புப் பக்கம்

உலகத்திலேயே போரான வேலை எதுன்னு கேட்டீங்கன்னா, இந்த கன்வீனியன்ஸ் ஸ்டோர், கேஸ் ஸ்டேஷன் மாதிரி இடங்களில் கவுண்டரில் நிற்கறதுதான்னு சொல்லுவேன். ஒரு மணி நேரத்துக்கு $6-9 தருவாங்க. ட்ரெய்னிங்ல இருந்தா அதுவும் கிடையாது. சவுத் ஃப்ளோரிடா மாதிரி இடங்களில் நிறைய இல்லீகல் ஸ்பானிஷ் மக்கள் இருப்பதால், பெரும்பாலும் இந்த  மக்கள்தான், இந்த வேலைக்கு வருவாங்க. காரணம்.... இது கேஷ் ஜாப்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Sherlock Holmes (2009)    
December 25, 2009, 8:44 pm | தலைப்புப் பக்கம்

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் : ஆங்கில துப்பறியும் சாம்பு-வை பத்தி அறிமுகம் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அப்படியும் இந்தப் பெயரை கேள்விப் படாதவர்களும், பின்ணணி கதைகள் தேவைப் படுபவர்களும், செ. சரவணக்குமாரின், இந்தப் பதிவையும், கருந்தேள் கண்ணாயிரத்தின் இந்தப் பதிவையும் படிச்சிட்டு மேலே தொடரலாம்.கதை பரபரப்பாக ஆரம்பிக்குது. லார்ட் ப்ளாக்ஹுட் என்னும் மிகப் பெரிய மந்திரவாதி, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Hunter (2009) - டெக்னாலஜி 02    
December 24, 2009, 11:20 pm | தலைப்புப் பக்கம்

இப்படி என்னை B. பாபு சிவன் ரேஞ்சுக்கு ஆக்குவீங்கன்னு தெரியாம போய்டுச்சிங்க!  அதனால சொல்லிட்டே ஆரம்பிக்கிறேன்.ஜோஸப் ச்சேண்ட்ரா = விஜய் ஜோஸப் சந்திரசேகர் ::::: பாப் உசிவ் = பாபு சிவன் ::::: VJ ஆண்டனி = விஜய் ஆண்டனி. வேணும்னா இதையும் சொல்லிடுறேன்.The Hunter = வேட்டைக்காரன்ரொம்ப பேர் கீழ வரைக்கும் படிக்கறதில்லைங்கறனால... கடைசி பாராவா எழுதினதை, மொதல்லயே போட்டுடுறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Hunter (2009) - டெக்னாலஜி 01    
December 23, 2009, 2:51 pm | தலைப்புப் பக்கம்

ஹோ..... யா!!! டாக்டர். ஜோஸப் ச்சாண்ட்ரா ஈஸ் பேக், பேபி...............!!!!!!!!!!!!!*****************************மை காட்..!! எத்தனை நாளாச்சி.. இப்படியொரு படத்தை மொத்த தியேட்டரும் பார்த்து-ரசித்து-சிரித்து!!! எங்களை மாதிரி பாவப் பட்ட ஜனங்கள் இருக்கும், இந்த இத்துப் போன ஃப்ளோரிடாவில் எப்பவாவது தாங்க.., உலகப் படம் பார்க்க முடியும்.! ப்ரீமியர் ஷோவெல்லாம்... ஒரு வாரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Avatar - டெக்னாலஜி 02 [3D]    
December 21, 2009, 8:14 pm | தலைப்புப் பக்கம்

“ஒரு கண்ணை மூடிப்  பார்த்தால் அது 2டி-”ன்னு சுஜாதா எளிமையா சொல்லியிருப்பார் - அப்படின்னு குரு மேல பழியை போட்டுட்டு எஸ்கேப் ஆகலாம்னு பார்த்தா, அது திருப்பி எனக்கே ரிவிட் அடிச்சிடுச்சி. போனப் பதிவு ரெண்டு பேர்க்கு (வெளிச்சத்தில் & விஜய்) புரியலைன்னு சொல்லிட்டாங்க (எழுதிகிட்டு இருக்கும்போதே.. லிஸ்ட் அதிகமாகிடுச்சி).போனப் பதிவில் சொன்னது 3மேட்டர். 01. DAS - இதில் விளக்க எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Princess and the Frog (2009)    
December 14, 2009, 9:55 pm | தலைப்புப் பக்கம்

பிக்ஸார் தொடரின் இறுதி அத்யாயத்தில் எழுதிய மேட்டர்தான் இது. அனிமேஷனில் 3டி கேரக்டர்களை புகுத்தியதில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போன 2டி அனிமேஷனை... அந்த 3டி-யை அறிமுகப் படுத்தி அழித்த ஜானும், எட்வினும்.... 2004-ல் டிஸ்னி மூடிய 2டி அனிமேஷன் பிரிவை மீண்டும் திறந்து... அதிலிருந்து வெளிவந்திருக்கும் முதல் 2டி படம் The Princes and the Frog.படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Bad Lieutenant: Port of Call - New Orleans (2009)    
December 14, 2009, 9:32 am | தலைப்புப் பக்கம்

பல்ப் ஃபிக்ஸனின் ப்ராப்ளம் சால்வர், ஹார்வி கெய்டல், 1992-ல் நடித்தப் படத்தின் ரீமேக்கில், விளக்கெண்ணை மன்னன் 'நிக்கலஸ் கேஜ்' நடித்து, கடந்த ஒரு வருடமாக வெளிவர துடித்துக் கொண்டிருக்கும் படம். 1992- படத்தைப் பார்த்தவர்களுக்கு இது எந்த அளவுக்கு பாதிப்பைத் தரும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தப் பதிவு... 2009-ஐ மட்டும்தான் பார்க்க போகிறோம். ஹரிகேன் கட்ரீனா அடித்து ஓய்ந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Precious (2009)    
December 8, 2009, 8:55 pm | தலைப்புப் பக்கம்

ஒரு மாதம் முன்பே வெளியானப் படம். படத்தின் ஒரு தயாரிப்பாளர் Oprah Winfrey. தியேட்டருக்குப் போக பயந்த, முக்கியக் காரணம் இந்தப் பெயர்தான். அக்கா... அங்கேயும் ஒரு கர்ச்சிப்பை இலவசமாக கொடுத்துவிடுவாரோ என நினைத்தேன். எங்கே தியேட்டரில் அழுது, மானத்தை வாங்கிக்  கொள்வேனோ என பயந்து கொண்டே போகாமல் இருந்து, கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டுப் பார்த்தால்..., இந்த ஆண்டுக்கான சிறந்த படத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Saw I - VI [18+] Part 1    
November 22, 2009, 8:21 pm | தலைப்புப் பக்கம்

முதல் ஐந்து பாகத்தையும் முழுதாக பார்க்காதவர்கள், இந்தப் பதிவை படிக்க வேண்டாம். 100% புரியாது!!! ஆறாவது பாகத்தில் எந்த சஸ்பென்ஸும் இல்லை என்பதால்... அதற்கு விதிவிலக்கு.Saw-வின் ஆறாம் பாகம் போன மாதம் வெளி வந்ததும், பதிவை போடுவதற்குள், விஜய் மத்த ஐந்து பாகங்களையும் ‘சுருக்கமாக’வாவது எழுதிட்டு... ஆறை எழுதச் சொன்னார். ’சுருக்கமா’ என்னை எழுதச் சொல்லுறாரே-ன்னு ரொம்ப.. நாளா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

New Moon (2009)    
November 20, 2009, 2:32 am | தலைப்புப் பக்கம்

ஹும்..! இனிமே அவரசத்தில்.. பதிவு எழுதிட்டு போகக் கூடாதுன்னு.. சத்தியம் பண்ணிகிட்டேன். ரெண்டு தப்பு... பண்ணிட்டு.. திரும்ப படிக்காமலே.. போய்ட்டேன். எழுத்து போட்டவுடனே.. முதல் தப்பு.. நினைவு வந்தது.படத்தின் பெயர் New Moon. நான் Full Moon-ன்னு அடிச்சிட்டு போயிருக்கேன். நல்லவேளை இது யார் கண்ணிலும் படலை.  ஹைய்யோ.... அடுத்த பிரச்சனை.. வந்தப்ப.. அதுக்கப்புறம்.. என்னால் படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Twilight (2008)    
November 19, 2009, 9:41 pm | தலைப்புப் பக்கம்

நீங்க காலேஜ் போற பையனா இருந்தா... பிஸ்ஸா - பர்கருக்கு அடுத்து Twilight படத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கனும். இல்லைன்னா... உங்களை யாரும் மதிக்க மாட்டாங்க. தெரியுமில்ல?????ஒரு ‘என்றும் பதினேழு’ வௌவால் மனிதனுக்கும்,  ஒரு சாதாரண பதினேழு வயது பெண்ணுக்கும் வரும் காதலை, கவிதையாக சொல்ல முயற்சித்தப் படம் Twilight. இன்று இந்தப் படத்த்தின் அடுத்த பாகமான New Moon...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Couples Retreat (2009)    
October 10, 2009, 2:11 pm | தலைப்புப் பக்கம்

ஏ.ஆர். ரஹ்மானின் முதல் ஹாலிவுட் எண்ட்ரி என்பதாலேயே, நம் எல்லோருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு, இந்தப் படத்திற்கு இருப்பது/இருந்தது நிஜம்.  அந்த பெயர் இல்லையென்றால் நான் கூட தியேட்டர் பக்கம் எட்டிப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகம்தான். எதுக்கும் போய் பார்ப்போமே என்று பார்த்தால்...........நான்கு நண்பர்கள். குடும்பஸ்தர்கள்! அவர்களில் ஒருவரின் திருமண வாழ்க்கை, முறிந்துவிடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The 40 Year Old Virgin (2005) [18+]    
October 8, 2009, 1:04 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப் பதிவில் சந்திப்போம். எக்ஸ்ட்ரா டிஸ்க்: இந்தப் பதிவு எந்த பதிவரையும் மனதில் வைத்து எழுதியதில்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அதிக பட்சமாக, பதினாறு வயதுக்குள், அமெரிக்காவில் எல்லோருக்கும் எதாவது ஒரு வகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Zombieland (2009)    
October 6, 2009, 10:48 pm | தலைப்புப் பக்கம்

இது ஹாலிவுட்டின், சின்ன பட்ஜெட் படங்களின் வெற்றி வருடம் போல.  Gran Torino, The Hangover, District 9.... தொடர்ந்து இந்த வாரம் Zombieland. கூழுக்கும் ஆசை... மீசைக்கும் ஆசை கணக்காய், பேய்ப் படமும் பார்க்கனும்... ஆனா பயமாவும் இருக்கக்க் கூடாது-ன்னு (என்னை மாதிரி) நினைக்கிற ஆளா நீங்க? Zombieland-க்கு ஒரு டிக்கட்டை போடுங்க!நீங்க Shaun of the Dead படத்தின் ரசிகர் என்றால்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Surrogates (2009)    
September 26, 2009, 8:24 am | தலைப்புப் பக்கம்

இதுக்கு முன்னாடி வந்த Sci-Fi படங்களில் இருந்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்-னு உருவி, Die Hard -ன்னு ஒரு படம் வந்தா-தான் நினைவுக்கே வர்ற ப்ரூஸ் வில்லிஸ்-ஐ ஹீரோவாய் போட்டு... நேத்து ரிலீஸ் ஆகியிருக்கற படம்தாங்க... Surrogates!என்னடா.. ஆரம்பமே சரியாயில்லன்னு பார்க்கறீங்களா.  இதுக்கு மேல... உங்க வாழ்க்கையில் வேஸ்ட் பண்ண, ரெண்டு நிமிஷம் இருந்தா மேல படிங்க.  89 நிமிஷம் இருந்தா படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Heat (1995) - [ Hollywood Robberies 02 ]    
September 23, 2009, 12:14 am | தலைப்புப் பக்கம்

நான்கு ப்ரொஃபஷ்னல் திருடர்கள்;  எவ்வளவு பெரிய திருட்டென்றாலும்... அதிகபட்சமாக 3-4 நான்கு நிமிடத்துக்கு மேல் எடுத்துக் கொள்ளாதவர்கள்; படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் ஒரு திருட்டில்... நடக்கும் ஒரு அசம்பாவிதத்தில் இருந்து, நூல் பிடித்த மாதிரி.. தொடரும் பிரச்சனைகளையும், ப்ளாக் டிக்கட் விற்ற தியேட்டர்காரர்களுக்கு குடைச்சல் கொடுத்த நம்ம உ.த மாதிரி, அந்த திருடர்களை, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Score (2001) - [Hollywood Robberies - 01]    
September 22, 2009, 3:59 pm | தலைப்புப் பக்கம்

திறமையாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவ் டைப் படங்களை விட, திட்டம் போட்டு கொள்ளையடிக்கும் படங்கள், சுவாரசியமாக இருக்கும்-ங்கறது என்னோட எண்ணம்.  இந்த விசயத்தில் மட்டும்தான்..., தப்பு பண்ணுறது ஹீரோ-வில்லன் யாராக இருந்தாலும்..., நமக்கு குற்றவாளிகளை மன்னித்துவிடும் மனப்பக்குவம் இருக்கும். இந்த மாதிரி ‘கொள்ளை’ படங்களை ஒரு சீரீஸா.. எழுதனும்னு நினைச்சப்ப முதல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Cloudy With a Chance of Meatballs (2009)    
September 19, 2009, 9:19 am | தலைப்புப் பக்கம்

1980-களில்.. எழுதிய ஒரு குழந்தைகள் புத்தகத்தை அடிப்படையாக வைத்து, சோனி அனிமேசன்ஸ் தயாரிப்பில் 3D-யில் வெளிவந்திருக்கும் படம்.  வழக்கமாக குழந்தைகள் படமெல்லாம் கோடை/கிறிஸ்துமஸ் விடுமுறைகளில்தான், வெளிவரும். இதுமாதிரி ஹாஃப் சீசனில் படம் வருதே..., நல்லாயிருக்குமோ... இருக்காதோன்னு... பயந்துகிட்டே... கலைச்சேவை செய்ய.. ஐமேக்ஸ் போய் உட்கார்ந்தா.....ஃப்ளிண்ட் (Flint)-க்கு எப்பவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Bowling for Columbine (2002)    
September 17, 2009, 11:32 pm | தலைப்புப் பக்கம்

“A well regulated militia, being necessary to the security of a freestate, the right of the people to keep and bear arms, shall not be infringed."-Second AmendmentUnited States of AmericaPrivilege -க்கும், Rights -க்குமான வித்தியாசம் நமக்கு தெரியும்! Privilege -ங்கற கொடுக்கப்பட்ட உரிமையை எப்ப வேணும்னாலும் திரும்ப பறிக்க முடியும் (எந்த காரணமும் இல்லாமல் கூட).  Rights -ங்கற பிறப்புரிமையை கடவுளே வந்தாலும்... ஒன்னும் பண்ண முடியாது (அதை கெடுத்துக்காத வரையில்).அமெரிக்காவில்... உங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

24 [2001 - Present]    
September 13, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்

“ஐயோ... கொல்றாங்களே.. கொல்றாங்களே”-ன்னு கத்துவதில், நம்ம ஐயாவுக்கே... அமெரிக்கன் கன்சர்வேடிவ்ஸ் பாடம் எடுப்பாங்க. அதிலும்... அவங்களை சப்போர்ட் செய்யும் ஃபாக்ஸ் & ஃபாக்ஸ் நியூஸ் சேனல்கள்... அந்த ஒப்பாரியை ஆரம்பிச்சா..., நிறுத்தவே மாட்டாங்க.9/11 -க்கு பிறகு இவங்க அடிக்கிற கூத்துக்கு அளவே இல்லாம போய்டுச்சி.  9/11-க்கு காரணமே பில் க்ளிண்டனும், லிபரல் கட்சியும்தான் என அன்னைக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Pulp Fiction (1994) - Looking Gradient    
September 13, 2009, 6:34 am | தலைப்புப் பக்கம்

திரைக்கதை எழுதுவது எப்படி? -புத்தகத்தில், சுஜாதா (கிட்டத்தட்ட) இந்த மாதிரி சொல்லியிருப்பார். “படத்தின் முதல் பகுதியில், கேரக்டர்களின் அறிமுகமும், அவர்களுக்கு இடையிலான தொடர்புகளும் (ரிலேஷன்ஷிப்) அவர்களின் பிரச்சனையும், இரண்டாம் பகுதியில் அந்த பிரச்சனையின் டெவலப்மெண்ட்டும்,  மூன்றாம் பகுதியில், அந்த பிரச்சனையின் முடிவும் சொல்லப்பட வேண்டும்”.பல்ப் ஃபிக்‌ஷன், த்ரீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Pulp Fiction (1994) - படம் வரைந்து பாகம் குறித்து    
September 11, 2009, 8:57 pm | தலைப்புப் பக்கம்

சோத்தாங்கையாண்ட திர்ம்பி, ஸ்டெர்ய்ட்டா கீய வந்து, பீச்சாங்கை பக்கமா திர்ம்பி... மேல் போயி.. திர்ம்ப ஒர்தபா ரைட்டு ஒடிச்சி.. இன்னொரு தபா ரைட்டு வலிச்சா... லெஃப்ல.......ஒரு தமிழ்ப் படத்தில், மணிக்கூண்டுக்கு வழி சொல்ற மாதிரிதான், பல்ப் ஃபிக்‌ஷனின் திரைக்கதை.  வழக்கமான 3 ஆக்ட் முறையில்லாமல்... (க்ரைம்) நாவல்களை போல, சேப்டர்.. சேப்டராக பிரித்து எழுதியிருந்தாலும், முன்னும் பின்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Pulp Fiction (1994) - A Chronological View    
September 11, 2009, 12:02 am | தலைப்புப் பக்கம்

PUMPKIN (Yelling to all)Everybody be cool.  This is a robbery!HONEY BUNNYAny of you fu*kin' pricks move and I'll execute every one of you motherfu*kers! Got it?CUT TO:CREDIT SEQUENCE:ஒரு படம் மூன்று Act-க்கு மேல் இருக்கக் கூடாது.  ஒரு சீன்.. மூன்று பக்கத்துக்கு மேல் போகக் கூடாது.  அந்த சீன் படத்தில்.. மூன்று நிமிடத்துக்கு மேல் இருக்கக் கூடாது. இது ஹாலிவுட்டின் மசாலா ஃபார்முலா.பல்ப் ஃபிக்‌ஷன் - இதை தூக்கி பரணில் போட்டு விட்டு எழுதின படம்.  திரைக்கதைக்கு ஆஸ்கர் வாங்கி கொடுத்த்த,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Everybody Loves Raymond (1996-2005)    
September 10, 2009, 8:45 pm | தலைப்புப் பக்கம்

Marriage is like an unfunny, tense version of Everybody Loves Raymond, only it doesn't just last 22 minutes... it lasts forever!!!-Judd Apatow, Directorfrom Knocked Upநம் குடும்பத்துக்குள் நடக்கும், அடி-தடி, பாசம், சண்டை, சச்சரவு, என அத்தனையையும், யாரோ வீட்டுக்கு வெளியே மறைந்து நின்று பார்த்து, அதை காமெடியாக நமக்கே சொன்னால் எப்படியிருக்கும்?  அல்லது நம் வீட்டு நிகழ்வுகள் அத்தனையும் காமெடியாக நடந்தால் எப்படியிருக்கும்?Everybody Loves Raymond-ன் சக்ஸஸ் ஃபார்முலா, அதுதான்.  கிட்டத்தட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Two and a Half Men (2003-Present)    
September 10, 2009, 12:15 pm | தலைப்புப் பக்கம்

ஆலன்: இன்னைக்கு அப்பாய்ண்ட்மெண்ட் எப்படியிருக்கு?ரிஷப்ஷனிஸ்ட்: Pretty Tight!ஆலன்: 8.30-க்குதான் முதல் அப்பாய்ண்ட்மெண்டா?! அதுவரைக்கும் ஸ்கெட்யூல்ட்?ரிஷப்ஷனிஸ்ட்: Wide Open!மேலே பேசற டயலாக், அப்பாய்ண்ட்மெண்ட் பத்திதான்னு நீங்க நினைச்சா..., நீங்க Two and a Half Men பார்க்க தகுதியில்லாதவர்! செக்ஸ் கலந்த ஹாரர் படங்கள் எவ்வளவு போதையோ, அதே மாதிரிதான்... முகம் சுளிக்க வைக்காத டபுள் மீனிங் காமெடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Lost (2004-Present)    
August 30, 2009, 9:03 am | தலைப்புப் பக்கம்

நீங்க, டிவி நாடகங்கள் - என்பது மூக்கை சிந்த வைக்க மட்டுமே! மூளையை சிந்திக்க வைக்க அல்ல-ன்னு நினைப்பவரா..? அப்ப இது உங்களுக்கான பதிவு இல்லை. இங்கயே எஸ்ஸாய்டுங்க!!! உங்களுக்காகவே குங்குமச் சிமிழ், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள் கயிறு, மாஞ்சா கயிறு நாடகங்கள் எல்லாம் வெய்ட்டிங். மத்தவங்க மட்டும் ஃபாலோ மீ..!!!ஆஸ்த்திரேலியாவில் இருந்து புறப்படும் ஒரு ஃப்ளைட், பஸிஃபிக் கடல் வழியா, லாஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Brüno (2009) [18+ Only]    
July 17, 2009, 9:50 pm | தலைப்புப் பக்கம்

ரேட்டிங்கிற்கு முதன்முதலாக அனுப்பும்போதே... NC-17 வாங்கி, தன் வரவை கட்டியம் கூறியது ப்ரூனோ! ஆனா.. அப்படி என்ன கண்றாவியை ‘கட்’ பண்ணி... இந்த படத்துக்கு 'R' ரேட்டிங் கொடுத்தாங்க, இந்த MPAA புண்ணியவான்கள்-ன்னுதான் ஒன்னும் புரியலை!சாஷ்சா பாரொன் கொஹன், அலி ஜி, போரட் படங்களுக்கு பின், தன்னோட கடைசி கேரக்டரை பெரிய திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். MTV அவார்ட் ஷோவில் ’எம்மினெம்’ முகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Transformers 2 (2009)    
July 16, 2009, 11:17 pm | தலைப்புப் பக்கம்

இயக்குனர் மைக்கெல் பே-வின் ஃபோன் நம்பர், கதாநாயகன் ஷைஹா-வின் ஃபோனில், ‘Pick Up' என்ற பெயரில்தான் லிஸ்ட் ஆகியிருக்குமாம். இந்த படம் எடுக்க கூப்பிடும்போது, “Pick Up..... Pick Up....."-ன்னு ரிங் ஆகும்போது, ஷைஹா பிக்கியிருக்கிறார். நிச்சயம் கூடவே இன்னொரு வார்த்தையையும் (Don't), இப்போ ஆட் பண்ணியிருப்பார்-ன்னு நினைக்கிறேன்.ஹைய்யா..., இந்த முறை.. கதை சொல்லத்தேவையில்லை. எழவு.. அப்படி ஒன்னு இருக்கனும். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Job (2009)    
June 25, 2009, 3:48 am | தலைப்புப் பக்கம்

1918-ல், தாத்தாவுக்கு அப்பா, காரையும், கருங்கல்லும் சேர்த்து கட்டிய வீட்டில், இருபது வருடம் வாழ்ந்து விட்டு, மழை பெய்யும் போதெல்லாம் அதை கரித்துக் கொட்டிவிட்டு, “வீட்டில் ஏசி வேணும்.., கான்க்ரீட் ரூஃப் வேணும்..., ஓட்டு வீட்டில் எப்படி ஏசி போட முடியும்..., வீட்டை வித்துட்டு வேற புது வீடு வாங்குங்க...” என்று சொல்லி ரெண்டு மாதத்திற்கு முன் அந்த நியாபக வீட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

X-Men Origins: Wolverine (2009)    
June 12, 2009, 3:12 am | தலைப்புப் பக்கம்

மே ஒன்றாம் தேதி தயாரிப்பளர்களாலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘ரசிக கண்மணிகளாலும், ‘ரிலீஸ்’ செய்யப்பட்டு... புண்ணியம் தேடிக்கொண்ட படம். ப்ளூ-ரே மீது பண்ணிய சத்தியத்தை காப்பாற்ற, வழக்கம் போல.. முதல் நாளே.. தியேட்டரில் ‘உள்ளேன் அய்யா’ போட்டு உட்கார்ந்து விட்டேன்.இதுவும் ஸ்டார் ட்ரெக் போலவே Prequel டைப், படம். அதனால் இதனுடைய பழைய மூன்று படங்களையும் பார்த்திருக்க வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Hangover (2009)    
June 9, 2009, 5:44 pm | தலைப்புப் பக்கம்

வாலிப... வயோதிக அன்பர்கர்களே..., நீங்க சிடுமூஞ்சியா..? சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சா..? நரசிம்ம ராவ் பேரனா..? விஜிபி கோல்டன் பீச்... சிலை மனிதனா...? இரண்டு மணி நேரம் தொடர்ந்து சிரிக்க உடம்பில் ‘தெம்பிருக்கான்னு’ செக் பண்ணனுமா...? கவலைய விடுங்க. நம்ம கிட்ட மருந்திருக்கு. அத்தனை ‘குஷ்டரோகங்களுக்கும்’ ஒரே நிவாரணியான... ‘சிரிப்பு’. ஆனா... சைட் எஃபெக்டா... பல் சுலுக்கும், வயிற்று வலியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Star Trek (2009)    
June 7, 2009, 6:14 pm | தலைப்புப் பக்கம்

முதல் க்ளியரன்ஸ்: ஸ்டார் ட்ரெக், T4-க்கு ஜஸ்ட் எதிர்ப்பதம். இந்தப்படத்தை பார்க்க முதலில்.. வேறு எந்த ஸ்டார் ட்ரெக் படத்தையும் பார்த்திருக்கத்தேவையில்லை. 1966-ல் ஸ்டார் ட்ரெக் சீரியல் ஆரம்பித்த இடத்திற்கு முன்னிருந்த காலத்தைதான் இதில் காட்டியுள்ளார்கள் (Prequel/Reboot). அதனால் பயப்படாமல் போய் உட்காரலாம். ஆனாலும் ஒரு பிரச்சனை இதிலும் உண்டு. அது பின்னாடி..........1980-களில், தூர்தர்ஸனில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Terminator Salvation (2009)    
June 1, 2009, 5:22 pm | தலைப்புப் பக்கம்

ஹோல்டான்..!!! நீங்க T1, T2, T3 மூணும் பார்த்திருக்கீங்களா? இருந்தா மட்டும், T4 தியேட்டர் பக்கமா போங்க. ஏன்னா... இது Fill-In-The-Blanks படம். ஏற்கனவே மூணையும் பார்த்து 'தலை-கால் புரியாம' இருந்தால்... T4-ஐ ‘தாங்கிக்கிறது’ கொஞ்சம் சிரமம்தான். அதனால், T4-க்கு முன்னாடி... மத்த மூன்றையும் ஒரு முன்னூட்டமா பார்த்தீங்கன்னா....T1: 2029-ஆம் ஆண்டில் இருந்து டெர்மினேட்டர் T-850 மாடல் 101-லும் (அர்னால்ட்), கைல் ரீஸ்-ஸும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Up 3D (2009)    
May 30, 2009, 3:19 am | தலைப்புப் பக்கம்

இதோடு சேர்த்து மொத்தம் பத்தே படங்கள். போன ஒன்பது படங்களில் மொத்தம் 22 ஆஸ்கர் விருதுகள். ஒரு படம் கூட ஆஸ்கர் வாங்காமல் வந்ததில்லை. தோ.... அடுத்த வருடம் இன்னும் 1-2 வாங்க, UP இப்பவே ரெடி. அது எப்படி... பிக்ஸார் மட்டும்.. சொல்லி சொல்லி அடிக்குது? ஒவ்வொரு பிக்ஸாரின் படங்களும் அதனோட எதிர்பார்ப்பு எல்லையை உயர்த்திக்கிட்ட இருக்கும் போதும், இவர்களால் மட்டும் அதை எப்படி எட்டிப்பிடிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Just Interval, not The End! (2009)    
April 17, 2009, 3:58 pm | தலைப்புப் பக்கம்

நேத்து வரைக்கும் நல்லாதான் இருந்துச்சிங்க.  ’எக்ஸ்டென்சன் தானே.. அதுக்கென்ன... ஆறு வருசமா... ரியல் எஸ்டேட் கம்பெனின்னு கூட பார்க்காம, எனக்காக சாஃப்ட்வேர் கம்பெனி ஆஃபர் எல்லாத்தயும் விட்டுட்டு, இந்த கம்பெனியை ஆட்டோமேட்டடா மாத்தியிருக்க.  உனக்கு அப்ளை பண்ணாம வேற யாருக்கு பண்ணப்போறோம்”-ன்னுதான் தல சொல்லிட்டு இருந்தார்.  நானும் எக்ஸ்டென்ஷன் அப்ளை பண்ணிட்டாங்கன்னே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Following (1998)    
April 17, 2009, 2:18 am | தலைப்புப் பக்கம்

16mm-ல் வரவேண்டிய Reservoir Dogs, ஸ்ரீதேவியின் கடைக்கண், க்வெண்டின் மேல் பட்டதில், அவருடைய முதல் படமே சினிமாஸ்கோப் கலரில் வெளியானது. பாவம்... நோலனுக்கு, ஸ்ரீதேவியின் அக்காவின் கண்தான் பட்டுச்சி போல. தன்னோட முதல் படத்தை 16mm கருப்பு வெள்ளையில்தான் எடுக்க முடிஞ்சிருக்கு. ‘ஃபிலிம் சிறுத்தாலும், காரம் குறையாதாமே’. மெமண்டோல தலைகீழா ஃபிலிம் காட்டினவரு, இதில் தலை சுத்தற மாதிரி!!!கமேண்டோவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

21 (2008)    
April 7, 2009, 8:26 am | தலைப்புப் பக்கம்

ஸ்ட்ரிப்பர்ஸ் ப்ளாக்ஜேக் (Stripper's Blackjack), விளையாடி இருக்கீங்களா? 21-ஐ கற்றுக்கொள்ள அதைவிட எளிய வழி வேறில்லை. உடனே படமும் ‘ஸ்ட்ரிப்பர்’ பத்தின்னு நினைச்சவங்க ”வாய்ல இருந்து வர்ற வாட்டர் ஃபால்ஸை க்ளோஸ் பண்ணுங்க”!. இது, தன் Harvard Medical கனவு படிப்பு செலவுக்காக, “கார்ட் கவுண்டிங்” (Card Counting) முறையை உபயோகித்து, ப்ளாக்ஜேக் விளையாட்டில் மில்லியன் கணக்கில் காசு பார்த்த ஒரு அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

02 - DVD Ripping In(!) & Out(?)    
April 4, 2009, 4:33 pm | தலைப்புப் பக்கம்

இந்த மாதிரி ஸ்டேண்டர்கள் உருவாக்குற சில குழுக்களில் நாம பார்க்கப்போகும் கோடக்களின் (CoDec: Coder-Decoder), ஸ்டேண்டர்களை உருவாக்கியிருக்கறது மொத்தம் மூணு க்ரூப்.MPEG = Moving Pictures Experts GroupITU-T = International Telecommunication Union (Telecommunication Sector)SMPTE = Society of Motion Picture and Television Engineersஇதில் MPEG நாம வருசக்கணக்கா கேள்விப்பட்டதுதான். அவங்க Mpeg-1, Mpeg-2, Mpeg-4 (அடுத்தது Mpge-7?)-ன்னு ரிலீஸ் பண்ணியிருக்காங்க. நாம இதையெல்லாம் போன பதிவுலயே பார்த்துட்டோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் நுட்பம்

Fast & Furious (2009)    
April 3, 2009, 8:38 pm | தலைப்புப் பக்கம்

New Model... Original Parts - விளம்பரத்தோடு இன்று வந்திருக்கும் Fast & Furious, 2001-ல் வெளிவந்த The Fast & The Furious படத்தின் நான்காம் பாகம். முதல் பாகத்தில் நடித்த நான்கு பேரும் திரும்பியுள்ளனர். முதல் பாகத்தை போல அடுத்த இரண்டு பாகமும் இல்லை என ஏற்கனவே கம்ப்ளெய்ண்ட். நான்காவது பெயரை காப்பாற்றியதா? முதல் மூன்று பாகங்களையும் பார்க்காதவர்களுக்கு, இதை பார்த்தால் புரியுமா? ஒரு பிரச்சனையும் இல்லை. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Full Metal Jacket (1987)    
April 3, 2009, 3:59 am | தலைப்புப் பக்கம்

மிலிட்டரி ட்ரெய்னிங், நேற்றுவரை புழு-பூச்சியை கூட நசுக்க யோசிக்கும் ஒருவனை, எப்படி ‘கில்லிங் மெஷினா’க மாற்றுகிறது? படத்தில் ‘வியட்னாம்’ என்பது ஒரு தளம். அதில் உங்களுக்கு தெரிந்த எந்த யுத்த களத்தையும் வைத்துப்பார்க்க முடியும். இராக்காகவும் இருக்கலாம். இலங்கையாகவும் இருக்கலாம். அதனாலேயே war படங்களில் என்னுடைய ஃபேவரைட், Full Metal Jacket. The Shining -ல் வயிற்றை கலக்கிய ஸ்டேன்லி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

GoodFellas (1990)    
March 31, 2009, 11:57 pm | தலைப்புப் பக்கம்

ஒரு திருடன், தனக்கே ‘உத்தமன்’- என பெயர் வைத்த கதைதான் படத்தின் டைட்டில். வாழ்க்கை முழுக்க கொள்ளை, கொலை என செய்யும் ஒரு ‘தாதா’ கும்பல், தங்களை அழைத்துக்கொள்ளும் செல்லப்பெயர்தான் ‘GoodFellas'. தமிழ் சினிமாவின் கத்தி குத்து காட்சிகளை, “யார் யாரை குத்தியது என்றே தெரியாமல்”, குத்திய-குத்தப்பட்ட இருவரும் ஒரே மாதிரி கண் முழி வெளியே தெறிப்பதுபோல முழிக்கும் நம்ம ஊரு படங்களையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Game (1997)    
March 31, 2009, 12:19 am | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு கிடைக்கும் ஒரு பிறந்த நாள் பரிசு, அடுத்த சில நாட்களுக்கு உங்களை விரட்டி விரட்டி அடித்து, கையிலிருக்கும் அறுநூறு மில்லியன் டாலர்களையும் (அறுநூறு டாலர் கூட என்கிட்ட இல்லீங்க) பிடுங்க்கிக்கொண்டு பிச்சைக்காரனாய், மெக்ஸிகோவின் நடுத்தெருவில் நிறுத்தினால்?தன்னுடைய தந்தை, வீட்டு மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்வதை பார்த்ததிலிருந்து, எதிலும் பிடிப்போ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Last Emperor (1987)    
March 29, 2009, 12:55 am | தலைப்புப் பக்கம்

வாழ்ந்து கெட்ட ஜமீன்தாரை பார்த்திருப்பீர்களே?! எல்லாம் போய்விட்டாலும்,இன்னும் அந்த வெட்டி கௌரவமும், அகந்தையும், ‘நம்மையெல்லாம் யாரு மதிக்கிறா’ என்ற ரெக்கார்டட் பேச்சும், என டிபிகலாக இருப்பார்கள்! வாழ்ந்து கெட்ட அரசனை, அதுவும் ‘பேரரசனை’ பார்க்க வாய்ப்பு கிடைத்ததுண்டா? The Last Emperor, கம்யூனிச சீனாவின் கடைசி அரசரை பற்றிய அறிதான ஹாலிவுட் மாணிக்கம்!முதல் காட்சியிலேயே நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Monsters VS Aliens 3D (2009)    
March 27, 2009, 7:03 pm | தலைப்புப் பக்கம்

படம் இன்னைக்கு ரிலீஸ். இண்டெலின் Tru3D அனுபவம், ஐமேக்ஸ்-ல் 3D படம் என்பது பட அனுபவத்தை ரெட்டிப்பாக்கும் என்பதால், IMax-ல் அடிச்சி பிடிச்சி பார்த்துட்டு வந்தாச்சேய்!!! நேரடியா விமர்சனத்துக்கு போய்டுவோம்.இது சுருக்கம். சூசனுக்கு இன்று திருமணம். ஆனால் திருமணத்திற்கு சற்று முன், ஒரு எரிகல் அவள் அருகில் விழுந்து, அதிலிருந்து க்வாண்டேனியம் என்னும் ஒரு வேதிப்பொருள் அவளுள் புக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Knowing (2009)    
March 26, 2009, 2:11 am | தலைப்புப் பக்கம்

”அதாகப்பட்டது பையனுக்கு சிம்ம லக்னம். தனுசு ராசி. பொறந்த நேரம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி இருந்தாலும், தெரியாதத கூட தெரிஞ்ச மாறி பீலா உட்டு 16,825 தடவ படிக்கிறவங்கல ஏமாத்திடுவான். சுக்கிரன் நாலிலும், குரு ஏழிலும் இருக்கறதால, இந்த ஹாலிவுட் பாலா, படம் பார்த்து, ப்லாக் எழுதியே அழிஞ்சி போய்டுவான்னு நான் சொல்லலை.... கட்டம் சொல்லுது”! இப்படி ஏதாவது ஒரு ஜோசியர் எங்கம்மா கிட்ட நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Mongol (2007)    
March 25, 2009, 11:50 am | தலைப்புப் பக்கம்

டெமுஜின் (Temüjin) யாரென தெரிகிறதா? ஆறாவது பாட புத்தகத்திலிருந்து, ‘வந்தார்கள் வென்றார்கள்’ வரை நமக்கெல்லாம் மிகக்கொடூரமான ஒரு அரசனாகவே அறிமுகப்படுத்தப்பட்டவன், இன்னொரு பெயர் செங்கிஸ்கான் (Genghis Khan). அப்படிப்பட்டவனின் சிறுவயது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? காதலித்திருப்பானா? காதலிக்காகவும் அவன் என்னென்ன செய்திருப்பான்? ஒரு மிகப்பெரிய அரசனாக வருவதற்கு அவன் பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Eagle Eye (2008)    
March 21, 2009, 11:26 am | தலைப்புப் பக்கம்

’வெயில் பின்னாடி அடிக்குது. அப்படி என்ன தூக்கம்... எந்திரி..! போய் பல்லை விளக்கிட்டு வா... அப்புறம்தான் காப்பி! தட்ட பார்த்து சாப்பிடு... அப்பவும் டிவி என்ன வேண்டி கிடக்கு..! ஆஃபீஸ்க்கு டைமாச்சி... கல்யாணம் மட்டும் பண்ணினா போதுமா..., ஏதாவது சம்பாதிச்சி வாங்கிதர வக்கில்லை! நான் சீரியல் பார்க்கும்போதுதான் CNN கேக்குதா... அதெல்லாம் ரிமோட்டை தரமுடியாது! காலைல இருந்து வேலை செஞ்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Religulous (2008) [21+ Only]    
March 21, 2009, 1:05 am | தலைப்புப் பக்கம்

டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும், இதன் பின்னூட்டங்களும் 21 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்புடையதாய் இல்லாமலிருக்கலாம். எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப்பதிவில் சந்திப்போம்.எதற்காக... அல்லது எப்படி... அல்லது எப்பொழுதில் இருந்து ‘சாமி’ கும்பிட ஆரம்பித்தோம் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிச்சயமாக... எந்த கடவுளும் உங்கள் முன் வந்து என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Se7en (1995)    
March 19, 2009, 11:17 pm | தலைப்புப் பக்கம்

அட தேவுடா..., காலேஜ்ல படிச்ச (ச்சும்மா.. ச்சும்மா....) “பாரடைஸ் லாஸ்ட்”-இதுக்கெல்லாம் கூட பயன்படுமா?  ஜான் மில்டனின் மாஸ்டர்பீஸில் மொத்தம் ஏழே வார்த்தைகளை எடுத்துக்கொண்ட Se7en, டேவிட் ஃபின்சரின் மாஸ்டர்பீஸ்.  என்னால் எதுவும் பண்ண முடியலீங்க.  சுத்தி சுத்தி போனாலும், கூடவே இந்த சீரியல் கில்லருங்க எல்லாம் வந்துடுறாங்க. முதல்லயே.. சொல்லிடுறேன்.  இந்த படத்தின் க்ளைமேக்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

BoЯat (2006)    
March 18, 2009, 5:12 pm | தலைப்புப் பக்கம்

எந்த நேரத்துல ‘தமிழ்மண ப்ளாகர் பட்டை’ பத்தி எழுதினனோ தெரியல. தமிழ்மண சைட்டே.. சுத்தமா படுத்துடுச்சி. பட்டை லோட் ஆக.. வருச கணக்காவுது... பட்டை அடிச்ச மாதிரியே..! அதனால... டெம்பரரியா.. டிஸேபிள் பண்ணியிருக்கேன்."இவ பேரு நடாலியா. உ 1 ம்ம் 2 ம்ம்ம் 3 ம்ம்ம்ம் 4 ம்ம்ம்ம்ம் 5 ம்ம்ம்ம்ம்மா. இவ என் தங்கச்சி. கஸகஸ்தான்லயே இவதான் நாலாவது பெரிய ப்ராஸ்டிட்யூட்!!!!இப்படி ஆரம்பிக்கும்... Borat-டின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Prestige (2006)    
March 15, 2009, 5:03 am | தலைப்புப் பக்கம்

“போர்டன், ஆன்ஜிரை ஒரு தண்ணீர் தொட்டியில் போட்டு, திறக்க முடியாதபடிக்கு அதன் தாழ்பாளை மாற்றி, மூச்சு திணறடிக்க கொன்ற குற்றத்திற்காக, சாகும்வரை தூக்கிலிட இந்த கோர்ட் உத்தரவிடுகிறது! ஆர்டர்.... ஆர்டர்....! த கோர்ட் இஸ் நௌ அட்ஜர்ண்ட்!’The Prestige... The Prestige... The Prestige... -ன்னு பின்னூட்ட நண்பர்கள் நிறைய பேர் திடீரென இதற்கு விமர்சனம் கேட்க ஆரம்பித்ததில், ‘அப்படி என்னதான் இருக்கு’ என பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Usual Suspects (1995)    
March 14, 2009, 9:45 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் திறந்த வாயை மூடவில்லை, நான்! உங்களுக்கு கெய்ஸர் யார் எனத்தெரிய வேண்டுமா? மிகச்சுலமான ஒரு வழி உள்ளது. The Usual Suspects-ல் வரும் எல்லோரையும் சந்தேகப்படுங்கள். கடைசி ஃப்ரேம் வரை... ரகசியம் காக்கும் நிறைய படங்களை பார்த்திருப்போமில்லையா? அட் லீஸ்ட்.. அந்த படங்களில்.. எங்காவது ஒரு காட்சியிலோ.. வசனத்திலோ.. க்ளூ கொடுத்துவிடுவார்கள். The Usual Suspects அந்த வகையும் கிடையாது. நாம் என்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Identity (2003) - பார்த்தவர்களுக்கு மட்டும்    
March 14, 2009, 4:33 am | தலைப்புப் பக்கம்

Spoiler Alert: இந்த பதிவு... நிச்சயம் படம் பார்த்தவர்களுக்கு மட்டும். நீங்கள் ஏற்கனவே படம் பார்த்திருந்தால் மட்டும், மேற்கொண்டு படிக்கவும்.படத்தின் ஆரம்ப காட்சிகளில், மனோதத்துவ டாக்டர், டேப் ரெக்கார்டரில் போட்டு கேட்கும் சில வாய்ஸ் ஓவர்களும், வேகமாக எடிட் செய்யப்பட்ட காட்சிகளும் நமக்கு சொல்லுவது.1. மால்கம்மின் அம்மா.. ஒரு ப்ராட்டிடியூட். அவள் பலமுறை ஃப்ளோரிடா போலீசாரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Shining (1980)    
March 13, 2009, 11:10 pm | தலைப்புப் பக்கம்

இத்தனைக்கும் பட்டப்பகலில் பார்க்க ஆரம்பித்த படம். ஒரு 30 நிமிடம் கழித்து தெரிந்துவிட்டது, ’இன்னொரு ஆள் கண்டிப்பாய் துணைக்கு வேண்டும்’! என்னை விட தைரியசாலியான என் மனைவியையும் சேர்த்துக்கொண்டு (”ஷீபா... உனக்கு தைரியமிருந்தா... முடிஞ்சா... இந்த படத்தை பார்க்கமுடியுமா? நான் வேணும்னா உனக்கு பக்கத்துல துணைக்கு இருக்கேன்!”) பார்க்க ஆரம்பித்தேன். பார்த்தபின் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Memento (2000)    
March 11, 2009, 2:19 am | தலைப்புப் பக்கம்

Memento = ¿ I ma erehWட்ரிங்... ட்ரிங்....-ஹலோ.... நான் முருகதாஸ் பேசறேன். நீங்க?-சார், நான் டிவிடி கடைல இருந்து சண்முகநாதன் பேசறேன். மெமண்டோன்னு ஒரு படம் வந்திருக்கு. பாக்கறீங்களா?-அப்படியா? சப் டைட்டில் இருக்கா?-இல்லீங்க சார். இது ஸ்க்ரீன் ப்ரிண்ட்டு. அதனால் சப் டைட்டில் வராது.-சண்முகம்... சப் டைட்டில் இருந்தாலே... நமக்கெல்லாம் புரியாதே.. அப்புறம்?-சார்.. ஒன்னும் கவலை படாதீங்க. நெஜமாவே இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Boys Don't Cry (1999) [18+ Only]    
March 9, 2009, 11:09 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஏற்புடையதாய் இல்லாமலிருக்கலாம். எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப்பதிவில் சந்திப்போம்.This Film is Not Yet Rated பார்த்தவர்களுக்கு, இந்த படத்தின் (Boys Don't Cry) காட்சிகள் அதில் காட்டப்பட்டு, அப்படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அதைப்பற்றி விவரித்ததை பார்த்திருப்பீர்கள். முடிந்தால் படத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Identity (2003)    
March 7, 2009, 11:11 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்க்: எத்தனை முறைதான் இதை திருப்பி திருப்பி எழுதுவது? எப்படி எழுதினாலும் படத்தின் சஸ்பென்ஸை சொல்லாமல் வரிகள் நகர மறுக்கின்றன. இது என் கடைசி முயற்சி. எங்கேனும் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்தால்... மன்னியுங்கள்.... நான் பொறுப்பல்ல.நெவாடா மாநிலத்தில், லேக் வொர்த் என்ற நகரின் ஒரு அப்பார்ட்மெண்ட். அதன் குடித்தனக்காரர்களில், ஆறு பேர் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். கைது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Watchmen (2009)    
March 6, 2009, 11:40 pm | தலைப்புப் பக்கம்

அப்பாடா... ப்ளாக் ஆரம்பிச்சதுல இருந்து... சுடச்சுட இன்னைக்குதான் முதன் முறையா விமர்சனம். மிகப்பெரிய பில்டப் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியுள்ள படம் Watchmen.தியேட்டரில் கரை புரளும் கூட்டம். 300 என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. அடித்து பிடித்து தியேட்டர் போய் அமர்ந்து ‘பாப்கார்னை’ கொரிக்க ஆரம்பித்த போது....டங்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Part 2 :: ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்க போறீங்களா?    
March 6, 2009, 7:59 am | தலைப்புப் பக்கம்

எல்.சி.டி========இப்ப எல்.சி.டி டீவி வாங்கறீங்கன்னா.. அதுலயும்.. நல்லது கெட்டது எல்லாம் நெறய இருக்குங்க.நல்லதுன்னு பார்த்தா...1. ‘பொசுக்கு’ன்னு அந்த காலத்து சிம்ரன் மாதிரி இருக்குங்க. என்னோட பானாசோனிக் ப்ளாஸ்மா டிவி 99 பவுண்ட் (45 கிலோ). ஆனா சாம்சங் டிவியோட எடை வெறும் 58 பவுண்ட்தான் (26.4 கிலோ). 2” சின்னதுனாலும்.. பெரிய எடை வித்தியாசம் இருக்கு.2. Pause பண்ணுறதுல எந்த பிரச்சனையும் இல்லீங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

Part 1 :: ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்க போறீங்களா?    
March 5, 2009, 7:44 pm | தலைப்புப் பக்கம்

‘என்னது.. தலைவர் படத்தை Blu-Ray-ல ரிலீஸ் பண்ண போறாங்களா? அந்த டைம்ல நம்ம கிட்ட ஒரு ஃப்ளாட் ஸ்கீரீன் டிவி இல்லன்னா அப்புறம் தலைவருக்கு என்ன மரியாதை?’இப்படிதாங்க.. என்னோட ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்கற கதை ஆரம்பிச்சது? நடந்தது 2007-ல். சரியான சமயத்துல ‘Thanks Giving Day' வந்துச்சி. Blu-Ray - HD-DVD சண்டை வேற அப்ப உச்சத்தில இருந்தது. எந்த கடைல போனாலும், டிவி-ப்ளூரே பேக்கேஜ்-ன்னு சொல்லி இஷ்டத்துக்கு விலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

The Shawshank Redemption (1994)    
March 2, 2009, 9:43 am | தலைப்புப் பக்கம்

The Chronicles of Bow படத்தை ‘வில்லு’ என்று கண்டுபிடித்த ‘கேபிள்’ சங்கர், வினோத் கௌதம், வண்ணத்துப்பூச்சியார், கண்ணன், இந்தியன், பிரேம்ஜி மற்றும் ஸ்ரீ ஆகியோருக்கு என் வருத்தம் கலந்த வாழ்த்துகள். கண்டுபிடிக்க முடியாத ஷண்முகப்ரியன் மற்றும் மோகன்குமார் அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த வருத்தங்கள்.சென்ற வாரம் நான்கு அருமையான படங்களை பார்க்கும் வாய்ப்பு. எதை எழுதலாம் என்ற தடுமாற்றமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Boy in the Striped Pajamas (2008)    
February 25, 2009, 3:07 am | தலைப்புப் பக்கம்

ஸ்பீல்பெர்கின் யுத்தப்படங்களை பார்த்த பொழுது காட்சியின் வன்முறைகளே அதன் தாக்கத்திற்கு காரணம் என நேற்று வரை நினைத்திருந்தேன்.வயறு கிழிந்து, குடல் சரிந்து வெளியே தெரிந்தால் மட்டுமே, வன்முறையை உணர முடியுமா? நூற்றுக்கணக்கில் யூதர்களை வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவராக நிற்க வைத்து சுட்டு, குண்டு தீர்ந்த துப்பாக்கியை மீண்டும் நிரப்பி சுட்டால் மட்டுமே... அதன் வலி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Chronicles of Bow (2009)    
February 23, 2009, 12:53 pm | தலைப்புப் பக்கம்

பார்த்து முடித்த கையோடு அல்லது கண்ணோடு வேறு எந்த படமும், கணினியை நோக்கி என்னை செலுத்தியதில்லை. ஒரு சில படங்களே, ‘End Credit’ ஓடும்போதும் எழுந்திருக்க மனமில்லாம் உட்கார வைக்கும். The Chronicles of Bow அந்த வகை. இந்த வருடத்தில் நான் பார்த்த முதல் ‘Feel Good' படம்.இன்றுதான் இதை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இரண்டு ப்ரிட்டிஷ் படங்களுக்கும், ஒரு ப்ரான்ஸ் படத்திற்கும் விமர்சனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Bank Job (2008)    
February 22, 2009, 12:12 am | தலைப்புப் பக்கம்

ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அவருதான் இந்தியாவுக்கே கடே.......சி சக்ரவர்த்தியாம். அவருக்கு ரெண்டு பொண்ணுங்களாம். மூத்தவ கொஞ்சம் நல்லமாதிரி ஊரு வாய்ல வுலாம இருக்க.... எளயவ மட்டும் வூட்டுக்கு அடங்காம திரிஞ்சிட்டு இருந்தாளாம். சும்மா விடுவானுங்களா சோமாறி பசங்க..? எளயவ கொஞ்சம் ‘அப்டி.. இப்டி’ இருக்கறப்ப... போட்டோ படம் புடிச்சிட்டானுங்க களவானி பய புள்ளைங்க.போன பாராவில் சொன்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Defiance (2008)    
February 19, 2009, 5:31 am | தலைப்புப் பக்கம்

Schindler's list - பரிதாபம், Munich - பழிவாங்குதல், The Pianist - சர்வைவல்; இந்த வரிசையில் Defiance - வீரம். வழக்கமாக ‘ஸ்பீல்பெர்க்’, யூத மக்களை தாங்கி பிடிப்பதுபோல படம்மெடுப்பார். அவர் வழியில் இன்னொரு இயக்குனர். ஒப்பீட்டளவில் கிட்டத்தட்ட முக்கால் கிணறு தாண்டியுள்ளார் எட்வர்ட் ஸ்விக்.-“யூத மக்கள் எதில் மிகச்சிறந்தவர்கள்?”-“சாவதில்”படத்தில் வரும் இந்த வசனமே கதையின் கரு. இதுவரை ‘திருப்பி அடிக்காத’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hannibal Lecter Series - Part 5/5    
February 16, 2009, 9:02 am | தலைப்புப் பக்கம்

Hannibal Raising (2007)இந்த தொடர் முழுவது படித்த கோடிக்கணக்கான வாசகர்களுக்கும் (முறையே 60, 36, 42, 34 - இதில் யாராவது வோட்டு/பின்னூட்டம் போட்டிருக்க மாட்டார்களா என ஒவ்வொரு மணி நேரமும் நான் ‘ஹிட்’டியது பாதியிருக்கும்), ஆயிரக்கணக்கில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் (முறையே 4, 3, 3, 1 - இதில் என்னுடைய ஒரு ஓட்டும் அடக்கம் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்), நூற்றுக்கணக்கில் பின்னூட்டமிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hannibal Lecter Series - Part 4/5    
February 14, 2009, 1:21 pm | தலைப்புப் பக்கம்

Hannibal (2001)இதன் நாவலில் தெறித்த வன்முறையிலேயே டரியல் ஆன, The Silence of the Lambs-ன் இயக்குனர் ஜோனதனும், திரைக்கதாசிரியர் டெட் டேலியும் எஸ்கேப் ஆகிவிட, வன்முறையும் ஒரு காரணம் (இன்னொரு காரணம் சம்பளம்) என ஜூடியும் விலகிவிட (மூவரும் The Silence of the Lambs-ற்கு ஆஸ்கர் வாங்கியவர்கள்), ஹாப்கின்ஸ் மட்டும் தாங்கிப்பிடித்த படம் 'Hannibal'. துணைக்கு இயக்குனர் ரிட்லி ஸ்காட்.The Silence of the Lambs-ன் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hannibal Lecter Series - Part 3/5    
February 14, 2009, 9:34 am | தலைப்புப் பக்கம்

The Silence of the Lambs (1991)ஹாரர் திரில்லர் படங்களின் தலையெழுத்தை மாற்றியது, 16 நிமிடங்களே வரும் ஒரு பாத்திரம், ‘சிறந்த நடிகரு’க்கான விருது வாங்கியது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதை என ஆஸ்கரின் மிக உயரிய விருதுகளை தட்டிச்சென்றது (ஒரு சிலப்படங்களே இதுபோல வென்றுள்ளன) என பல சிறப்புகளை பெற்றது The Silence of the Lambs.Red Dragon- இதுபோல முடியும்... “FBI -ல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hannibal Lecter Series - Part 2/5    
February 12, 2009, 10:13 am | தலைப்புப் பக்கம்

Red Dragon (2002)[இத்தொடரின் முதல் பாகத்தை படிக்காதவர்கள், அதை படித்துவிட்டு இதை தொடரவும்]1986-ல் Manhunter-ஆக வெளிவந்து, 2002-ல் ரீமேக் செய்யப்பட்ட படம் Red Dragon. தப்பாக ‘நோட்’ வாசிக்கும் ஒரு இசை கலைஞரை சூப்பு வைத்து, அந்த குழுவினருக்கே பரிமாறும், ஒரு சைக்கோ சீரியல் கில்லர், டாக்டர் ஹானிபல் லெக்டர்.இன்னொரு புறம், பல தொடர் கொலைகாரர்களை கண்டுபிடிக்க FBI ஏஜண்ட் ‘வில் க்ரஹாமி’-ற்கு உதவுபவர். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Hannibal Lecter Series - Part 1/5    
February 8, 2009, 9:34 pm | தலைப்புப் பக்கம்

ஒரு அனானி இரண்டு முறை (அல்லது இரண்டு அனானிகள் தலா ஒரு முறை) "The Silence of the Lambs" படத்தை பற்றி எழுதுமாறு கேட்டுக்கொண்டும், மறுத்துவிட்டேன். காரணம், அது மிகப்பிரபலமான ஒரு திரைப்படம். பெரும்பாலானவர்கள் ஏற்கனவே பார்த்திருக்க 100% வாய்புள்ளது.அதன் தொடர்ச்சியான மற்ற 3 பாகங்களை பலபேர் பார்த்திருக்க / கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே இந்த பதிவு. ஏற்கனவே பார்த்திருப்பவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

This Film is Not Yet Rated (2006) [18+ Only]    
February 6, 2009, 8:51 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்க்: இப்படத்தின் கருவும், விமர்சனமும் 18 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக ஏற்புடைது இல்லை. எனவே தயவு செய்து, இங்கேயே விலகி விடுங்கள். அடுத்தப்பதிவில் சந்திப்போம்.=================================================================='Be Cool' என்றொரு காமெடி படம். ஜான் ட்ரவோல்டா-உமா த்ருமன் நடித்து 2005-ல் வெளிவந்தது. அதில் ஜானும் அவரது நண்பரும் ஒரு திரைப்படம் எடுப்பது பற்றி விவாதித்து கொண்டிருக்கும் பொழுது, பேசும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Paul Blart: Mall Cop (2009)    
February 4, 2009, 6:50 pm | தலைப்புப் பக்கம்

மதிப்பிற்குரிய தோழர்களே, வாசகர்களே, தமிழிஷ்/தமிழ்மண வாக்காள பெருமக்களே.....!!!! இலவச பிரியாணி கூட வாங்கிக்கொள்ளாமல் உங்கள் பொன்னான வாக்குகளை என் பதிவுகளுக்கு அளித்தது மட்டுமல்லாது, ‘1000 ஹிட்’களை அளித்த உங்களுக்கும்(அதுல என்னோடது எத்தனையோ), என்னை எழுத ஊக்கமளித்த தலைவர் “கேபிள் சங்கர்” அவர்களுக்கும்.... நன்றி.. நன்றி.. நன்றி..!!!!கெவின் ஜேம்ஸ் (Kevin James), கிங் ஆஃப் க்வின்ஸ் (King of Queens)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Mamma Mia (2008)    
February 3, 2009, 9:51 pm | தலைப்புப் பக்கம்

“இரண்டு கல்யாணம், ஒரு இழவு, பதினாலு பாட்டு”-ன்னு நம்ப ஊரு படம் “ஹம் ஆப்கே ஹெயின் கோன்”-ஐ சொல்லுவோமில்லையா?! “மாம்மா மியா” கொஞ்சம் உல்டா. இதில் “ஒன்னரை கல்யாணம்.. நோ சோகம்.. இருபத்தியோரு பாட்டு”.பின்னூட்ட நண்பர் “ஸ்பைடி” கேட்ட ‘Feel Good' படங்களில், சமீப காலத்தில் நான் பார்த்த படம் (படம் வெளிவந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது).வருடத்திற்கு ஒரு முறையேனும் இதுபோல ஒரு ம்யூசிகல் படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Taken (2009)    
February 3, 2009, 2:21 pm | தலைப்புப் பக்கம்

ஃப்ரெஞ்ச்காரர்கள் சேர்ந்து ஆங்கிலத்தில் எடுத்திருக்கும் ஒரு இந்தியத்தனமான மசலா ஆக்சன் படம் ‘டேக்கன்’. ஃப்ரான்சில் ஒரு வருடம் முன்பே ரிலீஸ் ஆகிவிட்டதாம். இங்கு இப்பொழுதுதான் வந்துள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் நம்மூரிலும் வந்துவிடும்... அக்‌ஷய்குமாரோ... விஜயகாந்தோ யாரவது நடித்து.கதையென்றெல்லாம் யாரும் மெனக்கெடவில்லை. ஒரு முன்னாள் சிஐஏ ஒருவரின் மகள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Milk (2008)    
February 2, 2009, 9:32 pm | தலைப்புப் பக்கம்

மலேசிய தமிழ் தொலைக்காட்சிக்கு, அளித்த பேட்டியில் கமல் கூறியது: “ஹாலிவுட்டில் கூட மிகத்திறமையான நடிகர்களுக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது மிகத்தாமதமாக கிடைத்திருக்கலாம்.... ஷான் பென் -னுக்கு கிடைத்தது போல”!அவர் சொன்னது 100/100 உண்மை என்பது Dead Man Walking அல்லது I am Sam பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட சிறந்த நடிகரே 2003-ல் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் தயாரித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Frost/Nixon (2008)    
January 30, 2009, 4:43 pm | தலைப்புப் பக்கம்

இது சினிமா: ஒரு ஜர்னலிஸ்ட், ஒரு முதல்வர்... ஒரு நேர்காணலில் இருவரும் காரசாரமாக விவாதம் செய்துகொள்ள, இறுதியில் ஜர்னலிஸ்ட் வெல்கிறார். பிறகு நிறைய காட்சிகள் மாறி, முதல்வர் ”முன்னாள்” ஆகி இறுதிக்காட்சியில் சொல்லும் பல அர்த்தங்கள் பொதிந்த, மிகப்பிரபலமான அந்த வசனம்....தட் வாஸ் எ குட் இண்டர்வியு!!!******************************************இது நிஜம்: ஒரு மிகத்திறமையான ஜர்னலிஸ்ட், ஒரு முன்னாள் முதல்வர்......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Gran Torino (2008)    
January 29, 2009, 11:29 pm | தலைப்புப் பக்கம்

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood), ஹாலிவுட்டின் 78 வயது “தாத்தா கமல்”-ன்னு சொல்லலாம்ங்கற அளவுக்கு எல்லா விசயத்துலயும் புகுந்து விளையாடுறவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை, பாடல்-ன்னு கலந்து கட்டுறவர்.நம்ப ஊர் மாதிரி “கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்”-ன்னு எல்லாம் ஒரே ஆளே, ஹாலிவுட் படங்க்ள்ல போட்டுக்க முடியாது. அதையும் மீறி.. ஒரு சிலர் மட்டுமே, ஒரே படத்தில் 2-4 துறைகள்ல வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Waltz with Bashir (2008)    
January 29, 2009, 12:07 am | தலைப்புப் பக்கம்

ஒரு கார்ட்டூன் படம் உங்களோட மனதை எப்பொழுதாவது மிகக்கடுமையாக பாதித்ததுண்டா? கார்ட்டூன் படங்கள் என்பவை வெறும் ’பொழுதுபோக்கு சித்திரங்கள்’ மட்டுமே என நினைத்திருந்தேன்.. இப்படம் பார்க்கும் வரை!!!2008-ற்கான சிறந்த அன்னிய மொழி திரைப்படத்திற்கான “கோல்டன் க்லோப்” விருதை வென்று, ஆமிர்கானின் “தாரே ஸமீன் பார்”, 2008 ஆஸ்கர் இறுதிச்சுற்றில் தகுதி பெறாததற்கு, இந்த இஸ்ரேலிய படமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்