மாற்று! » பதிவர்கள்

ஹரன்பிரசன்னா

மாடலன் சொன்ன கதை    
June 11, 2010, 9:25 am | தலைப்புப் பக்கம்

கண்ணகியும் சிலப்பதிகாரமும் இன்று அரசியலாக்கப்பட்டுவிட்ட நிலையில், ‘சிலப்பதிகாரம் (நாவல் வடிவில்)’ என்னும் புத்தகத்தைப் படித்தேன். பெரியார் கேட்ட கேள்விகள் நினைவிலாடின. கண்ணகியை மறுக்கவேண்டியதற்கான நியாயங்களை முன்வைத்தார். சிலப்பதிகாரத்தை எரிக்கச் சொன்னார் என நினைக்கிறேன். முரண் என்னவென்றால், இன்று கண்ணகியும் சிலப்பதிகாரமும் தமிழ் வடிவங்களாக, அவரைத் தலைவராகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மூன்று கவிதைகள்    
December 1, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

இருக்கை எனக்கு முன்னுள்ள இருக்கையில்முதலில் ஒரு பட்டாம்பூச்சி வந்தமர்ந்ததுபின்பு ஒரு பெருநோய்க்காரன் வந்தமர்ந்தான்ஒரு விபசாரி வந்தமர்ந்தாள்யோகி போல் வேடமணிந்தசிறு குழந்தை ஒன்றமர்ந்ததுயாருமற்ற பெருவெளியில்தனித்திருக்கும்அவ்விருக்கையில்நான் சென்று அமர்ந்தபோதுஎன் வெளியேறுதலுக்காகக்காத்திருக்கிறது பெருங்கூட்டம்துடுப்புகளற்ற படகுஅமைதியற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ராமையாவின் குடிசை - அணைக்க முடியாத நெருப்பு    
November 26, 2008, 2:08 am | தலைப்புப் பக்கம்

நீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த 'ராமையாவின் குடிசை' என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.ராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.தனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.02....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

குசேலன் - பெண்களின் கிருஷ்ணன்?    
August 3, 2008, 2:28 am | தலைப்புப் பக்கம்

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலெல்லாம் நெளிய ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல் போல ஆளாளுக்கு பேசும் வசனங்கள். ஒரு நல்ல கதையை கமர்ஷியலாக்குகிறேன் என்று அதீத தன்னம்பிக்கையில் (அகம்பாவத்தில்) கதையைக் கூறு போட்டு, 'ஒரு சீன் பசுபதி சார், அடுத்த சீன் வடிவேலு சார்' என்று யோசித்துவிட்டார் பி.வாசு. வடிவேலு வரும் காட்சிகள் மருந்துக்கும் சிரிப்பைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தசாவதாரம் - ஒட்டாத முகங்கள்    
June 16, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்

இன்னும் விமர்சிக்க என்னவிருக்கிறது என்ற அளவிற்கு ஆளாளுக்கு விமர்சித்தாகிவிட்டது. தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்காதவர்களுக்கு வலைப்பதிவர்கள் சங்க அட்டை கிடைக்காது என்று கேள்விப்பட்டேன். தசாவதாரம் பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி, வலைப்பதிவாளர்கள் சங்கத்தில் என் பெயரை தக்க வைத்துக்க்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன காரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வசியம் - சிறுகதை    
April 4, 2008, 1:56 am | தலைப்புப் பக்கம்

கடும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார் பூபதியாப்பிள்ளை. சிவந்த மேனியோடு லேசான தொந்தியுடன் 'ஹோவ்' என்ற சத்ததோடு ஏப்பம் விட்டபடியே சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நாற்பது வயதில் நிம்மதியான உறக்கமின்றி அலையும் மனதோடு அவர் பெரும் கொதிப்பிலிருந்தார். உடலெங்கும் சின்ன சின்ன வேர்வைத் துளிகள் பனித்திருந்தன. 'தானா வேர்த்தா நல்லதுடே' என்று என்றோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வயிறு - சிறுகதை    
March 23, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

சதாசிவப் பண்டாரத்தின் சங்கொலி இரவின் எல்லாத் திசைகளிலிலும் பரவி அதிர்ந்தது. சிறிய சலசலப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியும் எப்போதும் சிரித்து அருள் பாலிக்கும் முருகனும் வேப்ப இலைகளைக் கூட்டி தீமூட்டி கொசு விரட்டும் பாண்டியும் தவிர யாரும் அதைக் கேட்டிருக்கமுடியாது. பண்டாரம் அதிகக் கவலை கொள்ளும்போதோ பழம் நினைவுகள் அவரைத் துரத்தும்போதோ அன்றைய இரவுகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பிரிக்க முடியாத மௌனம். - சுஜாதாவிற்கான அஞ்சலி - எஸ்.ராமகிருஷ்ணன்    
February 28, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

பிரிக்க முடியாத மௌனம் - சுஜாதாவிற்கான அஞ்சலி - எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையை வாசிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சுஜாதா - சில கணங்கள்    
February 28, 2008, 2:24 am | தலைப்புப் பக்கம்

1997ல் TACல் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்த புத்தகசாலையில் இருந்த புத்தகங்களில் சுஜாதாவின் புத்தகங்களை ஒன்றுவிடாமல் வரிசையாக வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது தொடங்கிய சுஜாதா எழுத்தின் மீதான மோகம் இன்றுவரை அப்படியே தொடர்வதை நினைக்கும்போது, காலம் காலமாகத் தன் எழுத்தின் மூலம் வாசகர்களைக் கட்டிப்போட்ட அவரது அசாத்திய திறமை ஆச்சரியம் அளிக்கிறது. அந்த நேரத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வலைக்கும்மி    
January 21, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ் எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி, வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

நதியின் பக்கங்கள் - கவிதை    
January 18, 2008, 6:51 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாள்களுக்குப் பின்புரட்டியபோதுஅடையாளம் தெரியாமல்சிதைவுற்றிருந்ததுபழம்புத்தகத்தின் பக்கங்களில் தடங்கள்எண்களை இணைத்துசித்திரம் கூட்டுதல் போலகோடுகளை ரொப்பபுதிய தடங்கள்காற்றெங்கும் தீராத ஒலிகளை நிரப்பிஎன் காலடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

புத்தகக் காட்சி - என் கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்    
January 13, 2008, 3:46 am | தலைப்புப் பக்கம்

இந்தப் புத்தகக் காட்சியில் என் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களைப் பட்டியலிட்டிருக்கிறேன். நான் பட்டியலிடும் புத்தகங்கள் இந்த ஆண்டு வெளிவந்தவை மட்டுமல்ல, வந்து பல ஆண்டுகள் ஆன புத்தகங்களாகவும் இருக்கலாம். என் கண்ணில் பட்டு, கவனத்தை ஈர்க்க, அதைப் பட்டியலிட்டிருக்கிறேன். அதேபோல், பட்டியலிடும் எல்லாப் புத்தகங்களும் நான் வாசித்தவை அல்ல. இன்னொரு விஷயம், சில புத்தகங்கள் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மக்கள் தொலைக்காட்சியில் பரன் - இரானியத் திரைப்படம்    
December 24, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

மக்கள் தொலைக்காட்சியின் சாதனைகளில் இதுவும் ஒன்று. உலகத் திரைப்படங்கள் வரிசையில் இத்திரைப்படம் ஒளிபரப்பாகிறது. எந்த திரைப்படங்கள் என்று ஒளிப்பாகிறது என்று கண்டறிவது பெரிய சங்கடமாக இருக்கிறது. தொலைபேசியில் கேட்டால் 'மக்கள் பாருங்க, அதுல படம் எப்ப போடுவோம்னு சொல்லுவோம்' என்கிறார்கள். இதனால் முக்கியமான இந்தப் படங்களைப் பார்க்காமல் போக நேரிடுகிறது. நேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் திரைப்படம்

களியாட்டம் - மலையாளத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் - 04)    
December 20, 2007, 8:39 am | தலைப்புப் பக்கம்

கேரளாவின் வடக்குப் பகுதியில் மரபாக வரும் களியாட்டம் என்பது தெய்வத்தின் ஆட்டம் (தெய்யம் அல்லது தெய்யாட்டம்) என்று நம்பப்படுகிறது. கண்ணகி போன்ற, உயிருடன் வாழ்ந்த மனிதர்களை தெய்யங்களாக வரித்து ஆடும் ஆட்டம் இது. சமூகத்தையும் தாங்கள் வாழும் கூட்டத்தையும் இந்தக் களியாட்டம் காக்கும் என்று நம்பினார்கள் இதை ஆடுபவர்கள். வேலன், மலையன், பெருவண்ணன் போன்ற சாதிகளைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு - டிசம்பர் 2007    
December 16, 2007, 1:52 am | தலைப்புப் பக்கம்

* மனுஷய புத்திரன் வரவேற்புரை கூற விழா தொடங்கியது.* இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்றார். தமிழனவனின் 'வார்ஸாவில் ஒரு கடவுள்' புத்தகத்தை வெளியிட்டு, அதைப் பற்றிப் பேசினார். தான் வார்ஸாவில் வாழ்ந்த காலத்தில் பார்த்த மனிதர்களுக்கும் தற்போது தமிழவன் தன் நாவல் வழியாகக் கண்டடைந்த மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். தான் வாழ்ந்த காலத்தில் ராணுவத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

5 கவிதைகள்    
December 15, 2007, 9:15 am | தலைப்புப் பக்கம்

01. வழிநிர்ணயிக்கப்பட்டசாலைகளில்பயணம்அலுப்பாயிருந்ததுவழி தப்பிய தட்டான்பேருந்துக்குள்நுழையும்வரை02. கவிதையைக் கற்பித்தல்"குழலினிது""குழலினிது""யாழினிது""யாழினிது""என்பர்தம்""என்பர்தம்""மக்கள்""மக்கள்""மழலைச்சொல்""மழலைச்சொல்""கேளா""கேளா""தவர்""தவர்"03. எதிர்பாராத கவிதைசூரியனருகேசுற்றிக் கொண்டிருக்கும் பறவைகீழே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கல்லூரி திரைப்படம் - சில குறிப்புகள்    
December 12, 2007, 11:39 am | தலைப்புப் பக்கம்

கல்லூரி படம் பார்த்தேன். (சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் அந்தப் படத்தைப் பார்த்து எழுதுவது என்பது பெரிய விஷயமாகத்தான் போய்விட்டது எனக்கு!)முடிவின் கனத்தில் முன்னோக்கி நகரும் இன்னொரு படம். நடிகர்களின் தேர்வு வெகு யதார்த்தம். எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் கதாநாயகியாக வரும் நடிகையின் முக பாவங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. காதல், நட்பு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நிழற்படங்கள் (PIT டிசம்பர் போட்டிக்கு)    
December 9, 2007, 1:10 am | தலைப்புப் பக்கம்

வீட்டின் வெளியில் மண்டிக்கிடக்கும் குப்பையில் இருந்த இரண்டு மலர்களின் நிழற்படங்கள் போட்டிக்கு. எடுத்த நேரம் காலை ஆறு மணி, 09.12.07தென்னையை விஞ்ச நினைக்கும் எருக்கம்பூக்கள்பூவே நீ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

சனி - சிறுகதை    
December 6, 2007, 4:22 pm | தலைப்புப் பக்கம்

கஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சுப்ரமண்ய ராஜு கதைகள் - சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்    
December 4, 2007, 4:00 pm | தலைப்புப் பக்கம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'வைப் படித்து இப்படி ஒரு எழுத்தாளர் தமிழின் கொடை என ஏங்கிக் கிடந்த காலங்களில் பாலகுமாரன் வழியாக எனக்குத் தெரிந்த பெயர் சுப்ரமண்ய ராஜு.பாலகுமாரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இரு கவிதைகள்    
December 2, 2007, 1:56 pm | தலைப்புப் பக்கம்

பிரதிமுடிக்கும்போது இருப்பதில்லைதொடக்கம்எழுத்து மாறாமல்பிரதி எடுக்கும்போதுகூடஇரண்டு அ-க்கள் ஒன்றுபோல் இருக்கவில்லைவானெங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சில கவிதைகள்    
November 27, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

1.நதியின் படிக்கட்டில்நீரில் எழுதிய கோடுகள்விரிந்து விரிந்துஒன்றோடு ஒன்றிணையஇடையில் கிடக்கின்றனநீரால் நனைக்கப்படாதகட்டங்கள்என் கவன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மஜித் மஜிதியின் பரன் - இரானியத் திரைப்படம் (Majid Majidi's Baran -...    
November 25, 2007, 1:09 pm | தலைப்புப் பக்கம்

பரன் (இரானியத் திரைப்படம்)கதை: (கதையை விரும்பாதவர்கள் இதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து வாசிக்கவும்!)மஜித் மஜிதி (Majid Majidi) 2001ல் இயக்கி வெளிவந்த திரைப்படம். உலகப் புகழ் பெற்ற Children of Heaven...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சொற்கள் - சிறுகதை    
November 24, 2007, 10:59 am | தலைப்புப் பக்கம்

எப்போதும்போல் அன்றும் தூக்கம் வரவில்லை. தெருவில் எரியும் சோடியம் விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சம், அலங்கோலமாகக் கிடக்கும் ஜன்னலின் மூடப்படாத இடங்களின் வழியே உள்ளே தெறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சூரஜ் கா சாத்வன் கோடா - ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் ...    
November 21, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

படம்: சூரஜ் கா சாத்வன் கோடா (சூரியனின் ஏழாவது குதிரை)இயக்கம்: ஷ்யாம் பெனகல்மொழி - ஹிந்திஷ்யாம் பெனகலின் 'சூரியனின் ஏழாவது குதிரை திரைப்படம்', அலஹாபாத்தில் வசிக்கும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மீன்காரத் தெரு - புத்தகப் பார்வை    
November 21, 2007, 10:09 am | தலைப்புப் பக்கம்

மீன் விற்று வறுமையில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கைக்குள் நிகழும் போராட்டங்களை, ஜாதிய அடக்குமுறைகளை, வறுமையை முன்வைத்து பெண்கள் போகப்பொருளாக்கப்படும் விஷயத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சில கவிதைகள்    
October 21, 2007, 5:16 am | தலைப்புப் பக்கம்

புதுஎழுத்துநீண்ட வாக்கியங்களில்நம்பிக்கையற்றுப் போனபோதுவார்த்தைகளில் விழுந்தேன்அவையும் அதிகமென்றானபோதுஎழுத்துகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு குழந்தையின் நிமிடங்கள் - கவிதை    
September 28, 2007, 12:45 am | தலைப்புப் பக்கம்

ஏதோ காரணத்துக்காக அழுததுசுவரில் அசையாமல் அமர்ந்திருக்கும்வண்ணத்திப் பூச்சியின் மெல்ல அசையும் சிறகையும்ஆயிரம் எறும்புகள்ஊர்ந்து செல்லும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாஸே சாஹிப் - ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் - 02)    
September 16, 2007, 4:30 am | தலைப்புப் பக்கம்

Director/Story : Pradip KrishenCamera : R. K. BoseEditor : Mohan KaulMusic : Vanraj BhatiaCast : Raghuvir Yadav, Barry John, Arundhati Roy, Virendra Saxena 1986/ 118 Mins/ Hindi/ Social Thanks: http://www.nfdcindia.com/view_film.php?film_id=36&show=all&categories_id=81986 இல் வந்த திரைப்படம். இந்த அருமையான திரைப்படத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சில இந்தியத் திரைப்படங்கள் - 01    
September 11, 2007, 4:26 pm | தலைப்புப் பக்கம்

உலகம் முழுக்க சிறந்த படங்களாகப் போற்றப்படும் உலகத் திரைப்படங்களின் டிவிடி விசிடிக்களைக் கொஞ்சம் முனைந்தால் வாங்கிவிட முடிகிறது. ஆனால் சிறந்த இந்தியப் படங்களை வாங்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு கவிதை, சில ஹைக்கூக்கள்    
August 3, 2007, 12:32 pm | தலைப்புப் பக்கம்

முடிவுஇணைகோட்டின் ஆளுக்கொரு பக்கத்தில் நின்றுகொண்டுநான் கல்லெறியத் தொடங்கினேன்நீ எச்சிலை உமிழ்ந்தாய்சில யுகங்கள் காலச் சுழற்சியில் நம்மிரு இடங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரு கவிதைகள்    
July 29, 2007, 2:35 pm | தலைப்புப் பக்கம்

புகைப்படம் எடுத்தல்மிகுந்த களேரபத்திற்குப் பின்னரே குடும்பத்தின் புகைப்படம் எடுத்தோம்ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கும் பாட்டியைஐந்து நிமிடம் பேசாமல் இருக்க வைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Life is beautiful - தொடரும் பதட்டம் (திரைப்பார்வை)    
July 21, 2007, 2:34 pm | தலைப்புப் பக்கம்

Joshua orefice (ஜோஷ்வா ஆர்ஃபிஸ்) தன் தந்தையின் தியாகத்தைப் பற்றிச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. Guido Orefice (கைடோ ஆர்ஃபிஸ்) என்கிற இத்தாலி நாட்டுக்கார யூதர் இரண்டாம் உலகப்போர் தொடங்கும் சமயத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மூன்று கவிதைகள்    
June 30, 2007, 2:33 pm | தலைப்புப் பக்கம்

1.இன்றைய பொழுதுஅணிலை வரைய தேடியெடுத்தவெள்ளைக் காகிதங்களில்மிச்சமிருக்கின்றன சில கோடுகள் மட்டும்என் விருப்பப் பாட்டுஅறையெங்கும்வெறும் சொல்லாக மிஞ்சிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை