மாற்று! » பதிவர்கள்

ஷைலஜா

இந்த தமிழ் படுத்தும் பாடு...!!    
May 18, 2008, 9:41 am | தலைப்புப் பக்கம்

தமிழ் அழகுமொழி.அதே சமயம் சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் அர்த்தத்தையே மாற்றிவிடும்!பாண்டியன் "கொண்டு அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா" கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா என்பது சரியாகப் புரியாததனால் என்னவெல்லாம் விபரீதம் நிகழ்ந்தது? இலக்கியத்தைவிடுங்கள்..பள்ளியிலொரு மாணவன் 'கண்ணகி மாசற்றவள்'என எழுதுவதற்குபதிலாய்,'கண்ணகி மாசுற்றவ்ள்'என 'ச' விற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மாங்காய்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!    
May 7, 2008, 4:56 am | தலைப்புப் பக்கம்

மாங்கா சீசன் ஆரம்பிச்சாச்சு..பீச்ல ரோட்ல எல்லாம் மாங்காயை சீப்பின் பற்களா நறுக்கி வச்சி உச்சில சிவப்பா மிள்காப்பொடி ஜொலிக்க வியாபாரம் செய்யறாங்க...பத்தை மாங்காய்! எங்கும் மாங்காய் பத்தையாவதாரம்!! தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலாம்! மாம்பழம்கூட மெதுவா எட்டிப்பார்க்குது.ஆனா இன்னும் நல்லதரமான மாம்பழம் மார்கெட்லவரல்...பச்சைபச்சையாவும் அசட்டு மஞ்சளாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கவிதைச்சரம்!    
April 29, 2008, 3:27 am | தலைப்புப் பக்கம்

கனித்தமிழில் கற்கண்டு சொல் எடுத்து கட்டிய கவிதைச்சரம் இது..கவிதைகளை மட்டும் அறிமுகப்படுத்தும் இந்த பதிவில் முதலில் கவிதை என்றால் என்ன என்று கொஞ்சம் பார்க்கலாமா?கவிதையை உண்மையில் நாம் எழுதுவதில்லை. வாழ்க்கைதான் நம்மீது கவிதையை எழுதுகிறது எனலாம். கவி உலகம் சுதந்திரப்பறவைகளின் சரணாலயம். இங்கே தன் ராகத்தை திர்மானித்துக்கொள்ள ஒவ்வொரு பறவைக்கும் உரிமை உண்டு. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ்க்கடல்!    
April 13, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பலசொற்கள்(பெயர்கள்) மிகுந்தே இருக்கின்றன.அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக்கருத்தை உணர்த்துகின்றன.கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல் கடலில் மீன் பிடித்தல் கடல்விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அனுமத் ஜெயந்தி: சொல்லின் செல்வன் அனுமன்!    
January 8, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

உலகில் எத்தனையோ அமரகாவியங்கள் உருவாகியுள்ளன. ஆனால் நம்முடைய பாரத இதிகாசங்களான ராமாயணம் மஹாபாரதம் போல மானுட வாழ்வின் ஒட்டுமொத்த செறிவுகளை பிரதிபலிக்கும் ஒரு இயக்கம் வேறு எங்கும் இல்லை.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் என்றும் பொருந்தும் விதமாக அதன் உணர்ச்சிக் களன் அமைத்திருப்பது இன்றைய ஹைடெக் விஞ்ஞானத்தில் உன்னதமான ஒரு கண்டுபிடிப்புக் கூடத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

80. இச்சுவை தவிர யான் போய்....    
December 31, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறான் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் - பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சைஎன ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான்.பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.பாற்கடலில் வாசுதேவன்,சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,அநிருத்தன்என்கிற திருமேனிகளோடு நிற்கிறான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்