மாற்று! » பதிவர்கள்

வெங்கடேஷ்

மிகைபடக் கூறுதல்    
October 22, 2009, 3:48 am | தலைப்புப் பக்கம்

திருக்குறளைப் பற்றி சமீபத்தில் ஒரு பேச்சு வந்தது. குறள் இதுதான்: எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. இதில் சொல்லப்படும் எண்ணும் எழுத்தும் நம்பர்களும் ஆல்ஃபபெட்டுக்களும் அல்ல. இதன் பொருள் வேறு என்றார் ஒவ்வை நடராஜன். பரிமேலழகர் இந்த உரையைத்தான் சொல்லியிருக்கிறார். எண் என்பது எண்ணுதல், சிந்தனை செய்தல், யோசித்தல். எழுத்து என்பது இலக்கியம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யுடிலிட்டி வேல்யூ!    
October 14, 2009, 3:10 pm | தலைப்புப் பக்கம்

நூல்களின் மேல் பெரும் காதல் உடையவர்களாக நூலகர்கள் இருப்பார்கள் என்று நான் மிகவும் தப்பாக ஆசைபட்டிருக்கிறேன். சின்ன வயதில் இருந்து அரசு நூலகங்கள், பள்ளி, கல்லூரி நூலகங்கள் என்று தொடர்ந்து பல நூலகங்களில் இருந்து நூல்களை வாங்கிப் படித்துவந்திருக்கிறேன். அரசு நூலகங்களில் உள்ள நூலகர்கள் பலருக்கு, நூல்களின் பெருமை தெரியுமோ தெரியாதோ ஆனால், அதைப் பத்திரமாகப் பாதுகாக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

அவையத்து முந்தியிருப்பச் செயல்    
October 14, 2009, 3:05 pm | தலைப்புப் பக்கம்

எல்லா அப்பாக்களுக்கும் உள்ள அதே கவலைதான் எனக்கும். என் பெண் எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள். இன்னும் நான்கு ஆண்டுகளில் பள்ளி வாழ்க்கை முடிந்துவிடும். கல்லூரியில் அவளை என்ன படிக்க வைக்கவேண்டும்? கல்வித் துறை பற்றியும் அதில் வரும் புதுப் படிப்புகள் பற்றியும் ஓரளவுக்கு நான் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறேன், வருகிறேன். இதுதான் வருங்காலத்தில் முக்கியப் படிப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

உள்ளடக்கமும் விலையும்    
October 14, 2009, 3:02 pm | தலைப்புப் பக்கம்

வீட்டில் நான் நான்கு தினசரிகள் வாங்குகிறேன். பல ஆண்டுகளாக ஹிந்து. தினத்தந்தியையும் தினமலரையும் ஆன்லைனில் படித்துவிட்டாலும் வீட்டுக்கு தினமணி வேண்டும் என்று அதை வாங்க ஆரம்பித்தேன். அது அப்பா வீட்டுப் பழக்கம். பிசினஸ் தினசரிகளில் என் தேர்வுகள் தி மிண்ட்டும் பிசினஸ்லைனும் பிசினஸ் ஸ்டேண்டர்டும். இகனாமிக் டைம்ஸை நான் நம்புவதில்லை. பிசினஸ்லைன் நான்கு ரூபாய் பேப்பரை 1.72...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

முகங்கள்: ஆனைமலை ரங்கநாதன், வசந்தா ரங்கநாதன்    
October 7, 2009, 12:05 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில், வள்ளலார் மகாத்மா காந்தி விழாவை அருட்செல்வர் நா. மகாலிங்கம் நடத்தி வருகிறார். இது 44 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. காந்தியப் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் முக்கியமானவர்களைக் கூப்பிட்டு அருட்செல்வர், ‘அருட்ஜோதி காந்திய விருது’ வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இந்த ஆண்டு (2009) இவ்விருதைப் பெற்றிருப்பவர் ஆனைமலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

‘பெற்றோர்களுக்கான விதிகள்’ – புதிய நோக்கு    
October 7, 2009, 11:50 am | தலைப்புப் பக்கம்

கிழக்கு பதிப்பகத்துக்காக ரூல்ஸ் ஆஃப் பேரண்டிங் என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘பெற்றோர்களுக்கான விதிகள்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியர் ரிச்சர்ட் டெம்ப்ளர். இப்போது இப்புத்தகம் அச்சாகி விற்பனைக்கு வந்திருக்கிறது என்றார் பத்ரி சேஷாத்ரி. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கவேண்டும். எனக்குத் தனிப்பட்ட வகையில் மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »

கொச்சைப்படுத்தும் பேட்டிகள்    
September 30, 2009, 11:00 am | தலைப்புப் பக்கம்

தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பிதழ், ‘தினமணி கதிர்’. 27.09.09 தேதியிட்ட இதழில் மூத்த கவிஞர் கலாப்ரியாவின் ஒரு பக்க பேட்டி வெளிவந்திருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகள் இவை: 1. உங்களைப் பற்றி? 2. உங்கள் இயற்பெயரே கலாப்ரியா தானா? 3. கவிதை ஆர்வம் வந்தது எப்படி? 4. உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யார்? 5. மரபுக் கவிதைகளை விட்டு நவீன கவிதைகளைத் தேர்வு செய்தது ஏன்? 6. வெளிநாட்டுப் பயணம்? 7. கவிதைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

9வது உலகத் தமிழ் மாநாடு – என் கோரிக்கைகள்    
September 23, 2009, 10:22 am | தலைப்புப் பக்கம்

ஜனவரி 21 – 24, 2010ல், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு, கோவையில் கூடப் போகிறது. தமிழக அரசே நடத்தப்போவதால், கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்கப் போவதில்லை. பல்வேறு துறைகளில், தலைப்புகளில் கூட்டங்கள், கட்டுரை வாசித்தல் எல்லாம் இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற 8வது மாநாட்டுக்கு நான் போயிருக்கிறேன். அந்தக் கொண்டாட்டம் இன்னும் நினைவில் இருக்கிறது. வழக்கம்போல், இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழ் புத்தக விநியோகம்: என்ன பிரச்னை?    
September 23, 2009, 10:18 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் பதிப்புலகத்தின் மார்க்கெட் சைஸ், வளர்ச்சி விகிதம், மொத்த ஆக்டிவ் பதிப்பாளர்கள் பற்றி என்னுடைய முந்தைய கட்டுரையான ‘தமிழ் பதிப்புலகம் – இன்றும் நாளையும்’ கட்டுரையில் பேசியிருந்தேன். அக்கட்டுரையைப் படித்த நண்பர்கள் கேட்ட கேள்விகளில் முக்கியமானது, ஏன் தமிழில் புத்தக விநியோகம் வளரவில்லை? இங்கே என்ன பிரச்னை என்பதுதான். தமிழில் புத்தக விநியோகம் என்பது சவலைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் புத்தகம்

குறும்படங்களுக்கு ஒரு வாய்ப்பு    
September 23, 2009, 10:15 am | தலைப்புப் பக்கம்

சென்ற ஞாயிறு அன்று, சென்னை திரைப்பட சம்மேள அரங்கத்தில் மூன்று குறும்படங்களை வெளியிடும் விழா நடைபெற்றது. ஈஸ்வர் என்ற நாடக எழுத்தாளர் தயாரிக்க, ஜெயக்குமார் என்னும் 40 ஆண்டுகால டிவி, சினிமா, நாடக நடிகர் இயக்கிய குறும்படங்கள் அவை. மேடையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன், திருப்பூர் கிருஷ்ணன், பர்வீன் சுல்தானா, நடிகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்