மாற்று! » பதிவர்கள்

வின்சென்ட்.

மண்புழு உரப்படுகை - எளிய தொழில்நுட்பம்    
October 23, 2009, 5:40 pm | தலைப்புப் பக்கம்

எதிர்பார்த்தபடி அக்ரி இன்டெக்ஸில் சில எளிய தொழில் நுட்பங்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.அவைகளில் ஒன்று மண்புழு உரம் தயாரிக்க உதவும் மண்புழு உரப்படுகை. மண்புழு உரம் தனியாக தேவைப்படுவதால் நாமே இதனை வாங்கி உபயோகிக்கலாமென்று வாங்கி நிறுவி பார்த்ததில் எளிமையாக உள்ளது. நிறுவுவதும் மிக எளிது. காற்று படுகையினுள் சென்றுவர வசதியாக வலைஅமைப்பு உள்ளது.மண்புழுகுளியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மண் அரிப்பை நிறுத்தும் “வெட்டி வேர்”    
September 28, 2009, 3:35 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மழைக்கு தண்ணீர் அதிகம் ஓடியதால் ஓரு குறிப்பிட்ட பகுதியில் மண் அரிப்பு அதிகமாக இருந்தது. சில வெட்டிவேர் நாற்றுகளை நட்டிப் பார்த்ததில் குறிப்பிடும் அளவிற்கு மண் அரிப்பு தடுக்கப்பட்டிருந்தது. அவைகள் புகைப்படமாய் உங்கள் பார்வைக்கு. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

“பூஜ்ய விவசாயம்” (Zero Farming)    
July 10, 2009, 3:56 pm | தலைப்புப் பக்கம்

எம். கே. கைலாஷ்மூர்த்தி வங்கித் தொழிலை விட்டுவிட்டு விவசாயத்தை மேற்கொண்டவர். கர்நாடகா மாநில சாம ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள டோடின்டு வாடி கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது 6.5 ஏக்கர் பண்ணையில் ‘பூஜ்ய விவசாய முறை’யைக் கடைப்பிடிப்பதாகக் கூறுகிறார். அப்படியென்றால்...? இயற்கைக்குத் தன்னைப் பராமரிப்பது எப்படி என்று தெரியும்... அதன் போக்கிலேயே விட்டுவிடுவது நல்லது... நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எளிதில் மரம் வளர்க்க சில உத்திகள்.    
June 11, 2009, 6:03 pm | தலைப்புப் பக்கம்

1970 களின் பிற்பகுதியில் என் தந்தை இளம் தேயிலை நாற்றுகளுக்கு மூங்கில் வகையை சார்ந்த கணு இடைவெளி அதிகமுள்ள “ஓடை” என்னும் துவாரமுள்ள குச்சியை வெட்டி அதனை நாற்றின் வேருக்கருகே வைத்து கோடை காலத்தில் நீரூற்றி காப்பாற்றியதை நான் பார்த்திருக்கிறேன். நாள்பட அவை மக்கிவிடும் அதற்குள் செடி நன்கு வளர்ந்து விடும். பின்னாட்களில் நாங்கள் தண்ணீர் பற்றாக்குறை மிகுந்த பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை-வீடியோ    
April 4, 2009, 3:40 pm | தலைப்புப் பக்கம்

ஆஸ்திரேலியாவின் மர்ரே டார்லிங் நதி படுகை பற்றி DW-TV ஒரு வீடியோ காட்சி உங்கள் பார்வைக்காக. பறவைகள், மீன்கள் இல்லாத ஒருநிலை. கடைசி காட்சி என்னை அதிரவைத்தது. மழை இல்லாமல் போனால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நமக்கு பாடமாக தந்துள்ளார்கள். அவசியம் கடைசிவரை பாருங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் நிகழ்படம்

செயல் ஓன்று பாதிப்பு இரண்டு.    
March 11, 2009, 2:02 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக நகரத்து வீதிகளில் இருக்கும் மரங்கள் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்க்க ஆரம்பித்தவுடன்அது வேண்டாத குப்பையென எண்ணி மக்கள் தீ வைத்து அழித்துவிடுவார்கள். அது ஒரு மிக சிறந்த இயற்கை உரம் என்பதை அவர்கள் அறியாமலே தீ வைப்பதால் புகை உண்டாகி வளிமண்டலமும் மாசுபடுகிறது. அதனை ஓரிடத்தில் சேர்த்து வைத்து மண்புழுக்களை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கலாம் அல்லது ஓரிடத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

உலக தண்ணீர் தினத்திற்கு நாம் செய்ய வேண்டியது.    
March 2, 2009, 2:52 pm | தலைப்புப் பக்கம்

உலக தண்ணீர் தினத்தை வலைப் பதிவர்களாகிய நாம் நம் மக்களிடையே பிரபலபடுத்தவேண்டும். என் மனதிற்கு பட்டவற்றை பட்டியலிடுகிறேன். முடிந்தால் நீங்களும் கண்டிப்பாக செய்யுங்கள் அல்லது நீங்கள் சொல்லுங்கள் நாம் அனைவரும் செய்வோம். இது நமது வளமான வருங்கால வாழ்கைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.1. உலக தண்ணீர் தினத்தின் 2009 அதிகாரபூர்வமான வலைதளமான http://www.unwater.org/worldwaterday/flashindex.htmlதொடுப்பு தருவது.2....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தமிழ்நாட்டுப் பாம்புகள்    
February 16, 2009, 8:30 am | தலைப்புப் பக்கம்

பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக குறைந்து இன்று பூங்காக்களில் காட்சி உயிராக இருக்கும் அளவிற்கு மோசமான நிலைக்கு வந்து விட்டது. “பாம்பை கண்டால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி.. ஆனால் பல்வேறு காரணங்களால் இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் எலிகளின் எண்ணிக்கையும் தொல்லையும் அதிகரித்துவிட்டது(வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் பூக்கிறதென்றால் அம்மாநில அரசுகள் இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மானாவாரியில் நெல் சாகுபடி ??????    
February 10, 2009, 1:02 pm | தலைப்புப் பக்கம்

படிப்பதற்கு ஏதோ கற்பனை போன்று தோன்றும். ஆனால் கோவையின் அருகிலுள்ள “அட்டப்பாடி” மலைப் பகுதிகளில் “புழுதி நெல்” சாகுபடி என்று இதனை அழைக்கின்றனர். காலம் காலமாக அங்கு வசிக்கும் மக்கள் பாரம்பரியமாக இதனை ஏப்ரல் மாதம் இங்கு பெய்யும் கோடை மழையிலோ அல்லது ஜுன் மாதம் தொடங்கும் தென்கிழக்கு பருவ மழையிலோ விதைகளை தூவி பின் உழுகின்றனர். மழை ஈரத்திலே அவை முளைத்துவிடுகின்றன. பின் 3...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

ஈரியோபைட் தாக்கிய தென்னங்காய்களை எளிதாக வெட்டும் கருவி..    
January 31, 2009, 6:41 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக ஈரியோபைட் (Eriophyte mite )தாக்கிய தென்னங்காய்களில் மட்டை எடுப்பதென்பது சற்று கடினமே. எனவே மட்டை எடுப்பவர்கள் இதனை தவிர்க்க முயல்வர் அல்லது அதிக கூலி கேட்பார்கள் இல்லையேல் யாருக்கும் உதவாமல் வீணாகும். விவசாயிகளுக்கு இதில் மேலும் நஷ்டம். நல்ல காய்களை மட்டை எடுக்க ஒரு காய்க்கு 40 பைசா வரை செலவு ஆகின்றது. அவ்வாறு அதிக கூலியின்றி 1 மணி நேரத்தில் இரு நபர்கள் சுமார் 500 - 600...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மாண்பு மிகு மண்புழுக்கள்.    
January 24, 2009, 7:50 am | தலைப்புப் பக்கம்

இறைவன் கொடுத்த உதவியாளர்களில் மண்புழு மிக சிறந்த உதவியாளர். மண்ணை உழுவதிலிருந்து கழிவுகளை மறுசுழற்சி செய்து நல்ல உரமாக மாற்றி விவசாயிகளின் நண்பன் என்று பெயரெடுத்த இவரை இரசாயன உரம், பூச்சி மற்றும் களை மருந்துகளால் மண்ணை விட்டே விரட்டிவிட்டோம். விவசாயம் மூச்சு திணறிய போது திடீர் ஞானோதயம் உடனே அதற்கென கட்டிடம் கட்டி வளர்த்தால் உரம் கிடைக்கும் அதுதான் நல்லது என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இப்படியும் வளரும் மரங்கள்.    
January 6, 2009, 1:30 pm | தலைப்புப் பக்கம்

நண்பர் ஒருவர் மரம் பற்றிய சில புகைபடங்களை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தார். வித்தியாசமாக வளரும் அவைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

இயற்கை வேளாண்மையில் பூச்சிகளின் மேலாண்மை மற்றும் தேனீ வளர்ப்பு - பயிலர...    
December 24, 2008, 12:53 pm | தலைப்புப் பக்கம்

இன்றைய விவசாயம் என்பது பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் முக்கியமானது பூச்சிகளின் மேலாண்மை. அதிலும் இன்றைய காலகட்டத்தில் இரசாயான பூச்சிகொல்லிகளால் சுற்றுசுழலும் கெட்டு முடிவில் விவசாயிகளின் தற்கொலைகளில் முடிவடைகிறததை நாம் தினசரிகளில் படிக்கிறோம். நம் முன்னோர்கள் எப்படி மேலாண்மை செய்தார்கள்? இயற்கை முறையில் பூச்சிகளின் மேலாண்மை சாத்தியமா? ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் நிகழ்ச்சிகள்

“Birds of Tamilnadu” - முனைவர்.K.ரத்னம் அவர்களின் பயன்மிக்க நூல்.    
December 18, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

இயற்கையைப் பராமரிப்பதில் பறவைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. விதைகளை எல்லா இடங்களுக்கும் பரப்பி வனத்தை விரிவுபடுத்துவதிலும் , பூச்சியினங்களை கட்டுப்படுத்துவதிலும், சுற்றுசுழல் மாசுபடாமல் சுத்தம் செய்வதிலும் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்.பறவைகளின், மிருகங்களின் உணவுப்பாதையில் சென்றுவரும் விதைகள் அதிக முளைப்புத் திறன் பெற்றவை என்பது நாம் அறிந்ததே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

உலக சர்க்கரை நோய் தினம் மற்றும் நோயை குறைக்க உதவும் தாவரங்கள்.    
November 14, 2008, 4:21 pm | தலைப்புப் பக்கம்

டாக்டர். பிரடரிக் கிரண்ட் பாண்டிங் என்ற கனடா நாட்டு மருத்துவர் தன் சகாக்களுடன் ஆராய்ச்சி செய்து இன்சுலின் கண்டுபிடித்தார். அவர் பிறந்த தினமான நவம்பர் 14 ஐ உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடித்து நிறைய கண்காட்சிகளும், விளக்கக் கூட்டங்களும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு குறிப்பாக குழந்தைகளுக்கு என விசேஷமாக நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200 குழந்தைகள் இவ்வியாதிக்கு ஆளாவதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

குழந்தைகளின் பார்வையில் புவிவெப்பம்- ஓவியமாய்    
October 17, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

சுற்றுச்சுழல் மற்றும் கானுயிர் திரைப்பட விழா, கோவை 2008 டின் ஒரு பகுதியாக குழந்தைகளைக் கொண்டு புவிவெப்பம் குறித்து ஓவியம் தீட்ட வைத்தனர். குழந்தைகள் புவிவெப்பம் என்பது என்ன ? என்று மிக மிக அழகாக தீட்டிய ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சூழல்

“ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்”-- திரு. ஜான் பெர்கின்ஸ...    
October 16, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

சில மாதங்களுக்கு முன் “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்” (Confessions of an Economic Hit man By John Perkins. Year 2004) என்ற நூலில் திரு. ஜான் பெர்கின்ஸ் அவர்களின் வாக்கு மூலத்தை படித்தபோது தற்போது நடக்கும் அமெரிக்கப் பொருளாதாரச் சரிவு இவ்வளவு விரைவாக உலகயே உலுக்கியெடுக்கும் என்று நான் எண்ணவில்லை. நியுயார்க் டைம்ஸின் சிறந்த விற்பனை நூலாக 70 வாரங்கள் (Newyork Times Bestsellers ) இருந்த இந்நூல் 30 மொழிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

வீணாக்கப்பட்ட உணவு என்பது வீணடிக்கப்பட்ட நீர் ஆகும்:- சில உண்மைகள்.    
September 15, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரின் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமணம் மிக விமரிசையாக நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு நண்பருடன் உணவருந்த சென்றேன். வந்த விருந்தினர்கள் நன்கு விருந்துண்ண வேண்டுமென பல வகை உணவு பதார்த்தங்களை மிக நேர்த்தியாக தயாரித்திருந்தனர். ஆனால் 10% - 20% உணவுப் பொருட்கள் வீணாக்கப்படுவதை கண்டு நண்பரும் வருந்தினார். அவர்கள் உணவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டென்மார்க்கை முன்மாதிரி நாடாக ஏற்றுக் கொள்ளவோமா ?????    
August 22, 2008, 12:41 pm | தலைப்புப் பக்கம்

1973 ஆண்டு ஒபெக் நாடுகள் எண்ணெய் கட்டுப்பாட்டை கொண்டுவந்த போது 99% எண்ணெய்யை பல்வேறு பணிகளுக்கு ஏரிபொருளாக பயன்படுத்திய டென்மார்க் நாட்டின் பொருளாதாரம் ஆடித்தான் போனது. ஆனால் ஆட்சியாளர்கள் துவண்டுவிடாமல் சரியான திசையில் செயல்பட்டதால் இன்று தன்னிறைவு பெற்று இப்போதுள்ள எண்ணெய் நெருக்கடி காலத்தில் கூட அதிக பாதிப்பின்றி செயல்படுகிறார்கள். காரணம் இயற்கையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் சூழல்

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 63 வது நினைவுநாள்.    
August 5, 2008, 3:42 pm | தலைப்புப் பக்கம்

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 63 வது நினைவுநாள் (இன்று ஆகஸ்ட் மாதம் 6 ஆம் நாள்). லட்ச கணக்கான மக்களை தீப்பிழம்புகளால் அழித்த நாள். போர் வெறியின் உச்சம் என்றால் மிகையில்லை. கதிர்வீச்சால் சுற்றுச்சுழல் மாசுபாடு ,மற்றும் நோய்களுக்கும் குறைவில்லை. இவ்வளவையும் கடந்து ஜப்பான் முக்கிய நாடாகிருப்பதும் அந்நாட்டின் நிறுவனங்கள் சுற்றுச்சுழல் பற்றிய அக்கரையுடன் பல்வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அலையாத்தி காடுகளின் அறிஞர் திரு.கள்ளன் பொக்கூடன்    
July 30, 2008, 1:31 pm | தலைப்புப் பக்கம்

26 டிசம்பர் 2004 காலை நேரத்தை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இயற்கை சுனாமியாக வந்து உயிர், பொருள்,சேதத்தை ஏற்படுத்தியது. இன்றளவும் விவசாய நிலங்களை பயிரிட ஏற்றதாக மாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். அதே சமயம் அலையாத்தி காடுகள் இருந்த முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருந்ததும், பங்களாதேஷை அதிக உயிர், பொருள் சேதமின்றி நவம்பர் 2007...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மருத்துவ கழிவுகளும், வன உயிர்களும்.    
July 12, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

சென்ற வாரம் மலையோர கிராமத்திற்கு சென்றபோது சாலையின் அருகே மருத்துவ கழிவுகள் பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு அவை வன உயிர்களால் பிரிக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. உயிர்களை காக்கும் ஒரு மருத்துவமனையின் செயல் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. என் ஆதங்கமெல்லாம் மனிதனுக்கு வியாதி பரவக்கூடாது என்று யாருக்கும் தெரியாமல் மருத்துவ கழிவுகளை அகற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

கோவை மக்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்???????    
June 29, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

கோவை மாநகராட்சியின் முயற்சியை தொடர்ந்து RAAC (Residents Awareness Association of Coimbatore) அமைப்பு தன் பங்கிற்கு சிறந்ததொரு விழிப்புணர்வு செயலை நகரின் நான்கு முக்கிய இடங்களில் சினிமா புகழ் "டெர்மினேட்டர்" போன்று இந்த "பிளாஸ்டினேட்டர்" பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அசுரன் பொம்மை அமைக்கப்பட்டிருந்தது. வ.உ.சி பூங்கா மைதானத்தில் அமைந்த இந்த பிளாஸ்டினேடர்" சுமார் 30 அடி உயரம். மிக பிரமாண்டமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இன்றைய மரம் நடும் விழாக்களின் தந்தை.    
April 21, 2008, 10:44 pm | தலைப்புப் பக்கம்

திரு. ஜுலியஸ் ஸ்டெர்லிங் மோர்டன் 1854 ஆண்டு புது மனைவியுடன் அமெரிக்காவின் மிசிகன் பகுதியிலிருந்து நெப்ரஸ்கா பகுதிக்கு குடியேறியவர். நெப்ரஸ்கா பகுதியின் முதல் நாளிதழின் ஆசிரியர், அரசியல்வாதி ஆனால் மரங்களின் அருமையை உணர்ந்தவர். தனது பத்திரிக்கையிலும் ,சிறந்த பேச்சினாலும் அப்பகுதி மக்களிடையே மரங்களின் அவசியத்தை உணர வைத்தார். பின் நாட்களில் திரு.க்ரோவர் கிளிவ்லாண்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

போட்டிக்கு எனது புகைப்படம்    
April 7, 2008, 8:05 am | தலைப்புப் பக்கம்

இம்மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தது யார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

வசந்தகாலம்    
April 3, 2008, 3:06 am | தலைப்புப் பக்கம்

வசந்தகாலம் பொதுவாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவம். தளிர்க்கும்,பூக்கும் தாவரங்கள்,பாடித் திரியும் பறவைகள் என கூர்ந்து நோக்கினால் மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கும்.அவ்வாறு என்னை வியக்க வைத்த சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு சிவந்த தளிர்கள் 17 நாட்களில் நிற மாற்றமடைதல்காய்ந்த இலைகளோ,தளிர்களோ அல்லது பூக்களோ அல்ல அவ்வளவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

புவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு (Earth Hour)    
March 29, 2008, 10:09 am | தலைப்புப் பக்கம்

The logo for Earth Hourபுவி வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த World Wide Fund for Nature-Australia (WWF)வும், சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் இணைந்து சென்ற வருடம் மார்சு 31 ஆம் தேதியன்று சிட்னி மாநகரில் மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை 1 மணி நேரம் மின்சாரம் உபயோகிக்காமல் தவிர்த்தனர். சுமார் 2.2 மில்லியன் மக்கள் தவிர்த்ததாக கணக்கிட்டனர். உடனே அது மற்ற நாடுகளையும் கவர்ந்தது. எனவே இந்த ஆண்டு (2008 ) நிறைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

உலக நீர் நாள் மார்ச் 22 ஆம் நாள்    
March 22, 2008, 8:14 am | தலைப்புப் பக்கம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்வான்இன்று அமையாது ஒழுக்கு. --திருக்குறள் --அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். --பைபிள் சங்கீதம் /33/7 ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே நீரைப் பற்றி அதன் மறைமுக சிறப்பு பற்றி வள்ளுவர் மிக தெளிவாகக் கூறிவிட்டார். உண்மையான சொத்து (பொக்கிஷம்) துருவப் பனியும் நிலத்தடி நீரும் தான் என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

உலக வனநாள்    
March 21, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். -திருக்குறள் காடு இல்லை என்றால் நாடு இல்லை.வனம் அழிந்தால் தனம் அழியும். அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.திரு.மாசானபு புகோகா.தலை சிறந்த ஜப்பானிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பசுமை விகடனில் " வெட்டி வேர்"    
March 15, 2008, 12:49 pm | தலைப்புப் பக்கம்

பசுமை விகடன் இம்மாத முதல் இதழில் வெட்டி வேருக்கென 6 பக்கங்களை சிறப்பாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. கட்டுரையின் சிறப்பம்சமும் முக்கியமானதும் சென்னை மாநகர மேயர் திரு.மா.சுப்பிரமணியன் வெட்டி வேரை குறித்து அறிந்து கொண்டு ஆக்கப்பூர்வமாக பரிட்சார்த்த முறையில் கூவத்தை சுத்தப்படுத்த வெட்டி வேரை பயன்படுத்தலாம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே போன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

கேரள மாநில விவசாய கண்காட்சியில் பார்த்தவை.    
March 10, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாத இறுதியில் எர்ணாகுளம் நகரில் நடந்த விவசாய கண்காட்சியில் பார்த்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நேர்த்தியாக வகைபடுத்தி காட்சிக்கு வைத்தது மிகச்சிறப்பாக இருந்தது.சேனைக் கிழங்கு (பெரியது) சுமார் 62 கிலோ எடை என்றார்கள்.1 அடிக்கு மேல் காய்க்கும் தட்டைக் காய் பப்பாளி ஆர்கிட் மலர்கள் பல வண்ண யுபோர்பிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

போட்டிக்கான எனது புகைபடங்கள்    
March 10, 2008, 3:51 am | தலைப்புப் பக்கம்

உதகைக்கு மிக அருகிலிருந்தாலும் மக்கள் அதிகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

வன உயிர்களின் நகர் வலம்    
March 7, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

பொருளாதார மாற்றம் கிராம மக்களை நகரம் நோக்கி வர வைத்தால் ,சுற்றுச்சுழல் மாற்றம் வன உயிர்களை நகரம் நோக்கி வர வைத்துள்ளது என்பதும் உண்மை தானோ? கடந்த இரு மாதங்களாக கோவை மாவட்ட வன துறையினர் அரும்பாடு பட்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து சுமார் 20 கி.மீ தூரம் பயணம் செய்து சூலூர் வரை நகர் வலம் வந்த யானைகளை கஷ்டப்பட்டு திருப்பி அனுப்பினர்.தற்சமயம் எங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

சீனாவில் வெட்டிவேர்    
March 6, 2008, 12:30 pm | தலைப்புப் பக்கம்

சீனாவின் Prof. Liyu Xu அவர்கள் சீனாவில் வெட்டிவேர் 20 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப் படுத்தப்பட்டு எவ்வாறு அவர்கள் அதனை பயன்படுத்தி வெற்றிகரமாக சாலை, இரயில்பாதை, ஆற்றங்கரையோரம், கடலோரம் ஆகியவற்றை ஸ்திரபடுத்தி பொருளாதார மேம்பாடு அடைந்துள்ளனர் என்பதை விளக்கினார்.முடிந்தவுடன் கேரளாவின் "குட்டநாடு" பகுதி விவசாயி ஒருவர் மகிழ்ச்சியில் தங்கள் பகுதி விவசாயப் பிரச்னைக்கு தீர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தா(வரம்) ஒன்று பயன்கள் பல.    
March 3, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

வெட்டி வேரின் பயன்கள்1. மண் அரிப்பைத் தடுக்கிறது.2. மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.3. நிலத்தடி நீர் உயர உதவுகிறது.4. மண் வளம் பாதுகாக்கிறது.5. இலை மூட்டாக்கு இட பயன்படுகிறது6. கால்நடை தீவனமாகப் பயன்படுகிறது.7. பூச்சி , களை நிர்வாகத்தில் பயன்படுகிறது.8. காளான் வளர்ப்பில் பயன்படுகிறது.9. எண்ணை எடுக்கப்பயன்படுகிறது.10. கைவினைப் பொருட்கள் செய்யப்பயன்படுகிறது.11. உயர்அழுத்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

விருது வாங்கித் தந்த வெட்டி வேர்    
February 29, 2008, 8:06 am | தலைப்புப் பக்கம்

இந்தோனேஷ்யாவின் பாலி பகுதி மலை கிராம மக்கள் வெளி உலக தொடர்பின்றி நோயினாலும், சாலை வசதியின்றி, கல்வி பெறாமல் இருந்த போது கட்டிட பொறியாளர் திரு.டேவிட் பூத் MBE தன் தொழிலில் சிறந்து இருக்கும்போது அதனை உதறிவிட்டு சேவை நோக்குடன் 1998 ஆம் ஆண்டு அங்கு வந்து தங்கி வெட்டி வேர் உதவியுடன் சாலை அமைத்து, குழந்தைகளுக்கு கல்வி தந்து, வெட்டி வேரின் மூலம் மண் அரிப்பை தடுத்து, இயற்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வளர்ச்சியா? அல்லது வீழ்ச்சியா?    
February 27, 2008, 4:53 pm | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படத்திற்கு துல்லியமான வரலாறு தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படமாக இருக்கலாம் . உடை , குதிரை இவைகளை வைத்து சுமார் 80 - 100 ஆண்டுகள் என கொள்ளலாம்??? வீழ்ந்த மரத்தின் மேல் குதிரைகள் செல்வதை சற்று கவனமாக உற்று நோக்கினால் பார்க்கலாம். இதுபோன்ற மரங்கள் நிறைந்த இப்பூவுலகை மனிதன் தன் சுய நலத்திற்காக அழித்துக் கொண்டு வருங்கால சந்ததியினரையும் பிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தாய்லாந்து நாட்டின் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள்.    
February 25, 2008, 5:30 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் பார்க்கின்ற கைவினைப் பொருட்களின் சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்தும் வெட்டி வேரின் புல்(இலை) கொண்டு செய்யப்பட்டவை. தாய்லாந்து நாட்டின் மன்னர் வேரை உபயோகிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டத்திற்கு இணங்க (வேரை எடுத்தால் மண் அரிப்பு ஏற்படும்) இந்த அழகான பொருட்கள். உயர் அழுத்ததில் இலை கொண்டு உருவாக்கப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் சூழல்

வெட்டி வேர் கைவினை பொருட்கள்    
February 24, 2008, 7:39 am | தலைப்புப் பக்கம்

கண்காட்சியிலிருந்த இந்திய வெட்டி வேர் கைவினை பொருட்களின் காட்சி. முழுவதும் வேரினால் செய்யப்பட்டது. அழகாகவும், மணத்துடனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ஆனந்த விகடனில் எனது வலைப்பூ    
February 23, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

வெட்டிவேர் பயிற்சி பட்டறையின் முதல் நாள் முடிந்து மகிழ்ச்சி,ஆதங்கம், வருத்தம் என பல மனநிலைகளுடன் இருந்த போது நண்பர் திரு. மகாலிங்கம் அவர்கள் ஆனந்த விகடனில் எனது வலைப்பூ பற்றி வந்திருப்பதாக அறிவித்த போது இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். காரணம் வெட்டிவேர் பற்றி மேலும் மக்கள் அறிய ஒரு வாய்ப்பை தந்த ஆனந்த விகடனுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.மகிழ்ச்சி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் முதல் வெட்டிவேர் பயிலரங்கம்.    
February 1, 2008, 11:09 pm | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் முதல் வெட்டிவேர் பயிலரங்கம் பிப்ரவரி மாதம் 21 முதல் 23 முடிய கேரளா மாநிலத்தின் கொச்சி மாநகரிலுள்ள ஹோட்டல் சரோவரம் ( HOTEL SAROVARAM ) என்ற இடத்தில் நடைபெறுகிறது. அது சமயம் திரு. ரிச்சர்டு க்ரிம்ஷா OBE ( Chairman ,The Vetver Network International USA ) , திரு.பால் டிருங் (Director,TVNI and Managing Director, Vetiver Consulting, Australia ) , திரு. ஹரிதாஸ், திரு. லட்சுமணபெருமாள்சாமி போன்ற வல்லுனர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். மிகவும் பயனுள்ள இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

புகைப்பட போட்டிக்கு எனது மலர்கள்    
December 7, 2007, 9:22 am | தலைப்புப் பக்கம்

முதல் இரண்டும் போட்டிக்கு மற்றவை பார்வைக்கு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

தமிழகத்தில் பேரீட்சை மரம்!!!!!!!    
December 6, 2007, 4:19 pm | தலைப்புப் பக்கம்

பன்னாட்டு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் வறட்சியை தாங்கி வளரும் பயிருக்கு மரபணு மாற்றம் (வறட்சியை தாங்க), மாற்றுப்பயிர் (உ.த. காட்டாமணக்கு ) என கோடிகளில் செலவு செய்து விவசாயிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சூழல்

செடிகள் வளர்க்கும் பை (Grow Bag )    
November 26, 2007, 3:36 pm | தலைப்புப் பக்கம்

மாற்றம் நிலையானது என்பார்கள்" இந்த வழியில் விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் மண்ணில்லா விவசாயம் (Soil less culture). பொதுவாக நகர பகுதியில் இட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ஒன்றும் வாங்கக்கூடாத நாள் (BUY NOTHING DAY) 24-11-2007    
November 24, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

இப்படி கூட ஒரு நாள் இருக்கிறதாவென்று நீங்கள் வியப்படையக்கூடும். ஆனால் கனடா நாட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அமெரிக்காவின் இழப்பு உலகிற்கும் இழப்புத்தான்.    
November 20, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

2005 ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய காத்ரீனா மற்றும் ரீட்டா புயல் காற்றுகள் சுமார் 32 கோடி மரங்களை மிசிசிப்பி, அலபாமா பகுதிகளில் அழித்துள்ளது என கணக்கிட்டுள்ளனர். அதேபோன்று சென்றமாதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ப்ரோமிலைட்ஸ் (Bromeliads) தாவரத்தின் புகைப்படங்கள்    
November 16, 2007, 6:56 am | தலைப்புப் பக்கம்

என்னிடமுள்ள ப்ரோமிலைட்ஸ் (Bromeliads) என்ற வகை தாவரத்தை நான் பார்க்கும் போது கீழ் கண்ட வாசகம் என் நிணைவிற்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. IF YOU LOVE THE MOUNTAINS, RIVERS & TREES, SOONER OR LATER YOU WILL SEE...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

23 நாட்களில் இயற்கையின் வர்ணஜாலம்.புகைப்படம்    
November 4, 2007, 8:51 am | தலைப்புப் பக்கம்

இயற்கையை நாம் ரசித்தால் அது செய்கின்ற மாற்றங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தும். இந்த வருட துவக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த புங்கன் மரம் 23 நாட்களில் தன் பழுப்பு இலைகளை உதிர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பருவகால மாற்றம் உண்மைதானா? புகைப்படம்.    
November 4, 2007, 7:29 am | தலைப்புப் பக்கம்

பொதுவாக பருவகால மாற்றத்தை நமக்கு எளிதில் உணர்த்துவதில் தாவரங்களின் பங்கு அதிகமானது. புவிவெப்பம் காரணமாக இந்த பருவகால மாற்றத்தில் முரண்பாடுகள் தோன்ற ஆரம்பித்துள்ளது. வழக்கமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் சித்திரம்

இயற்கையும் செல்வந்தனும்    
October 15, 2007, 8:31 am | தலைப்புப் பக்கம்

செல்வந்தனே நீ ஆயிரம் பேருக்கு எஜமானாய் இருக்கலாம்ஈ, எறும்பு ஒன்றுக்காவது நீ எஜமான் ஆகமுடியுமா?தெருவென்ன ஊரே உன்னை சீமான் என்று சொல்லாம்சிட்டுக் குருவியொன்று உனக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மரங்களுக்காக உயிரையும் கொடுத்தவர்கள்    
October 1, 2007, 12:06 pm | தலைப்புப் பக்கம்

சுற்றுச்சுழல் அதிகம் மாசுபடாமல் இருந்த 1730 ஆம் ஆண்டுகளிலேயே மரங்களுக்காக 363 பேர் ஒரே நாளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மழைநீர் சேமிப்பு- புகைபடங்கள்    
September 25, 2007, 6:55 am | தலைப்புப் பக்கம்

வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கும் நேரத்தில் விவசாய நிலங்களிலும் வீடுகளிலும் எவ்வாறு மழைநீரை சேமிக்கலாம் என்ற புகைபடங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் சூழல்

"நீர் மேலாண்மை"க்கு ஆஷ்டென் விருது    
September 15, 2007, 11:49 am | தலைப்புப் பக்கம்

குறைந்த செலவில் மிகுந்த பயன் தரும் பம்புகள்,சொட்டு நீர் பாசன அமைப்புக்கள், மற்றும் எளிய தண்ணீர் தொட்டி என சுமார் 450,000 ஏழை விவசாய்களின் அன்றாட விவசாய தேவைகளை பூர்த்தி செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்கள் 2007.    
September 14, 2007, 3:00 am | தலைப்புப் பக்கம்

இயற்கை ஆயிரமாயிரம் தாவரங்களையும்,உயிரினங்களையும்,படைத்து பாதுகாத்து வந்துள்ளது. ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளாக மனிதன் தன் அறிவினாலும், ஆராய்ச்சிகளாலும், துணிச்சலான பயணங்களாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

புற்று நோயும், கோதுமை புல் சாறும்.    
September 9, 2007, 3:35 pm | தலைப்புப் பக்கம்

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

திரு.மாசானபு புகோகா.    
August 28, 2007, 7:53 am | தலைப்புப் பக்கம்

அறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

விவசாயத்தில் விந்தை புரியும் இரு நாடுகள்    
August 27, 2007, 11:36 am | தலைப்புப் பக்கம்

1. கியுபாபல நூறு ஆண்டுகள் பழமை கொண்ட வெப்ப மண்டல தீவு நாடு. 1959 ஆண்டு முதல் சோஷியலிச நாடாக மாறியது. திரு. பிடல் காஸ்ட்ரோ அவர்களின் தலைமையில் இன்று வரை வெற்றிகரமாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பூமி-- 1800 களில் அமெரிக்க சிவப்பிந்திய தலைவரின் பார்வையில்.    
August 21, 2007, 7:00 am | தலைப்புப் பக்கம்

இந்த பூமியே நமக்கு தாய். இந்த பூமியில் சம்பவிப்பவைகள் அணைத்தும் இந்த பூமித்தாயின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

கண்கள் ஒளி பெற...    
August 13, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்

இயற்கைக்கு எதிராய் இன்றைய வாழ்கை. தூங்கும் நேரத்தில் வேலை, வேலை(பகல்) நேரத்தில் தூக்கம், அமர்ந்த இடத்திலேயே பணி, போக்குவரவிற்கு சொகுசு வாகனங்கள், பொழுது போக்கிற்கு தொலைகாட்சி, கணனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

படித்ததும் பார்த்ததும்    
August 10, 2007, 10:15 am | தலைப்புப் பக்கம்

படித்ததுஅசோக சக்ரவர்த்தி சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்டினார்.பார்த்ததுகோவையில் - அவனாசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் சூழல்

சுத்தமான சுற்றுப்புற சூழலுக்கு ஓரு அரிய கண்டுபிடிப்பு.    
August 7, 2007, 8:59 am | தலைப்புப் பக்கம்

கோவை - பொள்ளாச்சி பாதையின் ஓரங்களில் மலை மலையாய் குவிக்கப்பட்டிருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

புகைப்படம்    
July 24, 2007, 10:48 am | தலைப்புப் பக்கம்

என் வழி , தனி வழி !!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

இழப்பும், அருமையும்.    
July 21, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை ஒரு பொருள் நம்மை அடையும் வரை உணர்வதில்லை- அதே போன்றுஒரு பொருளை இழக்கும் வரை அதன் அருமையை நாம் உணர்வதில்லை.60 ஆம் ஆண்டுகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

புகைப்படம்.    
July 20, 2007, 7:33 am | தலைப்புப் பக்கம்

அழகாக இருக்கிறேனா ?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மழைநீர் சேமிப்பின் பயன்கள்.    
July 16, 2007, 10:30 am | தலைப்புப் பக்கம்

1. நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. 2. நீர் பற்றாகுறை குறைகிறது.3. நீரின் கார அமில (pH value) தன்மை சமன் செய்யப்படுகிறது.4. விவசாய நிலங்களில் மண்அரிப்பைதடுக்கிறது.5....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பரிசும், பாடமும்.    
July 12, 2007, 4:18 am | தலைப்புப் பக்கம்

பரிசும், பாடமும்.1994 ஆம் ஆண்டு திரு. கேவின் கார்டரால் ''சூடான்'' நாட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

தெரிந்தால் சொல்லுங்களேன் என்னிடமுள்ள சோற்றுக் கற்றாழையின்    
July 10, 2007, 12:50 pm | தலைப்புப் பக்கம்

தெரிந்தால் சொல்லுங்களேன்என்னிடமுள்ள சோற்றுக் கற்றாழையின் படங்கள் இவை.கற்றாழை வாசமும் இல்லை.சாப்பிட்டால் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

உணவா ? எரிபொருளா ? இன்று எல்லா ஊடகங்களிலும் பரவலாக புவி    
July 7, 2007, 1:56 pm | தலைப்புப் பக்கம்

உணவா ? எரிபொருளா ? இன்று எல்லா ஊடகங்களிலும் பரவலாக புவி வெப்பம், சுற்றுப்புற சூழல் மாசுபாடு, பயோ-டீசல் என்று விவாதம் தொடர் கதையாக உள்ளது. கடந்த 15...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

மழை நீர் சேமிப்பு    
June 29, 2007, 3:51 am | தலைப்புப் பக்கம்

திட்டமிடத் தவறுகிற போது, தவறு செய்ய திட்டமிடுகிறோம்.நீர் பற்றாக்குறை உண்மைதான். ஆனால் இயற்கை தரும் மழையை நாம் எந்த அளவிற்கு சேமிக்கிறோம். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

புவி வெப்பத்திற்கெதிராய் நம்மால் முடிகின்ற 20 செயல்கள்    
June 24, 2007, 1:28 pm | தலைப்புப் பக்கம்

1. தேவைபடும் நேரம் மட்டும் மின் விளக்கு, மின் விசிறி, தொலைகாட்சி, கணினி இவைகளை உபயோகிப்போம்.2. குளிர்சாதன பெட்டி, குளிரூட்டிகளை முடிந்த வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்