மாற்று! » பதிவர்கள்

வித்யா

தித்தி(க்கும்)த்த தீபாவளி    
November 1, 2010, 4:29 am | தலைப்புப் பக்கம்

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.வயது ஏற ஏற பண்டிகைகளின் மீதான ஆர்வம் குறைவதுபோல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தூக்கமும் கண்களை தழுவட்டுமே...    
July 15, 2010, 4:08 am | தலைப்புப் பக்கம்

வாழ்க்கைல நிம்மதி தரக்கூடிய விஷயங்களில் தூக்கமும் ஒன்று. சிலருக்கு தூக்கத்துல கூட நிம்மதி இருக்காது. எதுனா டெரரான கனா வந்து எழுப்பிவிட்டுடும். சிலரோ அவங்க நல்லா தூங்கினாலும் பெரிசா கச்சேரி பண்ணி பக்கத்துல படுத்துருக்கவங்கள தூங்க விடாம பண்ணிடுவாங்க. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்கப்பெற்றவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள். நானும் அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Toy Story 3    
July 6, 2010, 4:14 am | தலைப்புப் பக்கம்

பிக்சார் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் 3D அனிமேட்டட் படம் டாய் ஸ்டோரி 3. பொதுவாக ஹாலிவுட்டில் sequel 100 சதவிகிதம் திருப்தியளிப்பது குறைவே. ஆனால் டாய் ஸ்டோரி 3 அற்புதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன் காட்டப்படும் Day & Night குறும்படம் விஷுவலைசேஷன் மூலம் மனதை கொள்ளை அடிக்கிறது.கதையின் நாயகர்களான பொம்மைகளுக்கு சொந்தக்காரனான andy காலேஜ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பஸ் நம்பர் 1    
March 24, 2010, 4:00 am | தலைப்புப் பக்கம்

பள்ளி, கல்லூரி, அலுவலகம் என மூன்று கட்டங்களில் பேருந்து என்பது எனக்கு தவிர்க்க இயலாத ஒரு விஷயமாகவே இருந்தது. எந்தக் காலத்திலும் பேருந்து பயணத்தில் காதல் வயப்படவில்லை (சத்தியமா. நம்புங்க). பள்ளியின் போது பொறுப்பான ரெப்ரசெண்டேடிவாய் ஜூனியர்களை ஒழுங்குப்படுத்தி அமர வைப்பது, யாரும் கூச்சலிடாமல் பார்த்துக்கொள்வது என பல வேலைகள். பொறுப்பு நம்மிடமிருக்கும்போது நாமளே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நொன் தூ தீ    
October 19, 2009, 8:33 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளாயிற்று ஜூனியர் அப்டேட்ஸ் எழுதி.எக்கச்சக்கமான விஷயங்கள் இருந்தாலும் ஏனோ எழுத விருப்பமில்லை. ஒன்னே ஒன்னு மட்டும். ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து 2 வாரங்கள் ஆகிறது. 7.30 மணிக்கெல்லாம் எழுந்து "அம்மா தூல்" என்று பையை மாட்டிக் கொள்பவன், கீழே இறங்கி ஆட்டோவைப் பார்த்தவுடன் காவிரியை ரிலீஸ் செய்கிறான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என நினைக்கிறேன்."சஞ்சு 1 2 3...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பயணத்திற்க்கு உதவும் checklist    
February 24, 2009, 8:22 am | தலைப்புப் பக்கம்

தொலைதூர பயணமாகட்டும், இல்லை அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வதாகட்டும் இந்த பேக்கிங் வேலை ரொம்ப கஷ்டம். எப்படியாவது எதையாவது மறந்துவிடுவோம். அதுவும் கைக்குழந்தைகளோடு பிரயாணம் செய்கையில் ரொம்பவே கஷ்டம். அதற்காக நான் தயாரித்த செக்லிஸ்ட் இது. உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்:)உடைகள்:(குளிர் பிரதேசமெனில்) உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள்(குளிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பறவைகள் பலவிதம்.....    
February 12, 2009, 7:18 am | தலைப்புப் பக்கம்

ஸ்கூல் படிக்கும்போது சுற்றுலான்னு கூட்டிக்கிட்டு போற இடம் ஒன்னு மகாபலிபுரம் இல்லைன்னா வேடந்தாங்கல். வரிசைல நின்னுகிட்டு டவர்ல ஏறி பார்த்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா பறவைங்க உக்காந்திருக்கும். "ஏய் எவ்ளோ நேரம் பார்ப்ப"ன்னு டீச்சர் கத்தினதுக்கப்புறம் தான் நகருவோம். கொசுவத்தி சுத்தியபடியே வேடந்தாங்கலில் இறங்கினோம்.முருகன் என்பவர் உடன் வந்தார். 15 வருடங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

உன்னையெல்லாம் படிக்க வெச்சது வேஸ்ட்    
January 5, 2009, 5:12 am | தலைப்புப் பக்கம்

பி.டெக் மூன்றாம் ஆண்டு இறுதியில் என்னோட மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்கள். CTS-ல் ஆணி புடுங்கறதுக்கு என்னை தேர்வு செய்திருந்தார்கள். பரம்பரையில் முதல் engineer என்பதோடு இல்லாமல், அவ்ளோ சம்பளத்தில் வேலை கிடைத்தது எனக்குத்தான். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப பெருமை. என் தம்பிக்கு அப்போதே அட்வைஸ் இம்சைகள் ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா படிப்ப முடிச்சுட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜூனியரின் க்ளிக் கலாட்டா    
December 16, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

டிஸ்கி : எப்பவோ எடுத்த ஜூனியரின் போட்டோஸையும் சில பதிவர்களையும் கோர்த்து விட்டுருக்கேன். யார் மனசாவாது கஷ்டப்படறமாதிரி இருந்தா சொல்லுங்க டெலீட்டிட்றேன்.கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொள்கைகளும் சில காம்பரமைஸ்களும்    
December 5, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

டிஸ்கி : இது அரசியல் பதிவல்ல.அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்    
November 28, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

அன்று--------கம்பெனியிலிருந்து இ-மெயில் : தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஒரு நாள் தாமதமாக சம்பளம் கிரெடிட் செய்யப்படும்.ரகு - What the hell? அவனவன் ஆயிரம் பிளான்ஸ் வச்சிருப்பான். கொஞ்சங்கூட பொறுப்பே இல்ல.நேற்று---------கம்பெனியிலிருந்து இ-மெயில் : மும்பை அசம்பாவிதம் காரணமாக வங்கிகள் இயங்காததால் சம்பளம் திங்கள்கிழமை அன்று கிரெடிட் செய்யப்படும்.ரகு - (பழைய சம்பவத்தை நினைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நல்லாருங்கப்பு    
November 27, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.மாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ம்மா    
November 20, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உஷார் மேன் ஹை    
November 17, 2008, 6:55 am | தலைப்புப் பக்கம்

மளிகைப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். பாதி நாள் ஊரிலிருக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகவே வாங்கினேன். ஆனாலும் பில் கூட வந்திருப்பதாக சின்ன உறுத்தல். செக் பண்ணிப்பார்க்கையில் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு நான் வாங்காத பொருட்களையும் சேர்த்திருந்தார்கள். நான் சுட்டிக்காட்டியபோது அசடு வழிந்துக்கொண்டே ஸாரி என்றார்கள். இதில் காரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நீ இல்லாம கஷ்டமா இருக்குடா    
November 14, 2008, 1:44 pm | தலைப்புப் பக்கம்

ஏதோ எழுதுனம்னு வந்து உட்கார்ந்துட்டேன். ஆனா கமல் சொல்ற மாதிரி வார்த்தையே வரலை. என்னத்த சொல்ல. கடந்த ஒன்றரை வருஷமா அவன பிரிஞ்சு ஒரு நாள் கூட இருந்ததே இல்லை. வீட்டுக்கு வந்து எங்க பார்த்தாலும் அவன்தான் தெரியுறான். நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குடா செல்லம். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தேன்னா அழுதுடுவேன்னு நினைக்கிறேன். கலைக்க நீயில்லாமல் மூலையில் அடுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: