மாற்று! » பதிவர்கள்

வடுவூர் குமார்

Ruwi - ரூவி    
September 20, 2009, 6:18 pm | தலைப்புப் பக்கம்

இதுவரை பார்த்ததில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடம் இது தான்.மஸ்கட் வந்த முதல் நாள் சாப்பாட்டுக்கு அலைந்த போது எங்கள் பொது நல அதிகாரியிடம் கேட்ட போதும் சரியான விபரம் கிடைக்கவில்லை.நான் ஏற்கனவே அலசி வைத்திருந்த விபரங்கள் மூலம் “காமத்” மற்றும் “சரவண பவன்” உணவகங்கள் இங்கு தான் இருக்கின்றன என்று தெரிந்தது.மூன்றாம் நாள்: புதிதாக குடியேற உள்ள வீட்டுக்கு படுக்கை/இருக்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தரம்.    
June 28, 2009, 9:03 am | தலைப்புப் பக்கம்

எப்போதோ திரு அப்துல் கலாம் பேசிய பேச்சு ஞாபகத்துக்கு வந்து போகுது.. ஆதாவது வெளிநாட்டவர்கள் கூட இந்தியாவில் தான் பொருட்களை வாங்க வேண்டும் அதன் மூலம் நம்மவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று.நம்மூர் தயாரிப்பு இப்படி இருந்தால் இனி அதே மாதிரி செய்யலாம் என்ற எண்ணத்தையும் மிக மிக பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டியது தான்.மேலே படியுங்கள்.இம்முறை சென்னை போன போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொடைக்கானல் பயங்கரம்!!    
June 17, 2009, 4:21 am | தலைப்புப் பக்கம்

சென்னை வெய்யில் மண்டையை பிளக்கும் நேரத்தில் வீட்டுக்காரம்மா எங்கேயாவது போய்வரலாம் என்று “பிளான்” போட்டு ஒரு மலைவாசஸ்தலம் போய் வந்தோம்.இங்கிருந்து ரயிலில் மதுரை பிறகு அங்கிருந்து வாடகை மகிழுந்தில் கொடைக்கானல்.கொடைக்கானலை நெருங்கும் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள எல்லோரும் நிற்கும் இடம் தான் “டும் டும் பாறை”.இங்கிருந்து பார்த்தால் எலி வால் நீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கனியன்    
September 2, 2008, 1:10 pm | தலைப்புப் பக்கம்

கனியன் - இவர் நம்மைப்போல் தமிழில் ஒரு பிளாக்கர் வைத்துள்ளார்,பிறர் பதிவுகளை படிப்பதோடு சரி,பின்னூட்டம் எல்லாம் அவ்வளவாக போடாததால் பலருக்கு அவரைப்பற்றி தெரியாது.இவரின் அறிமுகம் எனக்கு சில வருடங்கள் ”முத்தமிழ் மன்றம்” மூலமாகத்தான் கிடைத்தது.அவரும் சிங்கையில் இருந்ததால் தொலைப்பேசி எண்களை பரிமாறிக்கோண்டோம் ஆனால் பேசியதோ ஒரே ஒரு முறை தான்,அதுவும் சுமார் 1.5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் நிகழ்படம்

கட்டுமானத்துறை பத்திரிக்கை    
August 12, 2008, 2:04 pm | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படத்தை பாருங்கள் “பில்டர்ஸ்” என்று பெயருடன் தமிழகத்திலிருந்து வெளிவருகிறது,ரூபாய் 15 தான்,மாதம் ஒரு முறை வெளியிடுகிறார்கள்.கூடிய வரையில் தமிழ் மொழியை உபயோகப்படுத்தியிருக்கிறார்கள்.புதிய தொழிற்நுட்பம்,கட்டுமானத்துறை பொருட்களின் விலைப்பட்டியல்,தொழிலாளர் பிரச்சனை மற்றும் குத்தகைக்காரர்களின் பேட்டி என்று பல வேறு பகுதிகளை கொண்டதாக இருக்கிறது.15...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இது என்ன பூ?    
August 12, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

சாயங்கால வேளையில் மெது நடைபோகும் வழியில் இருக்கும் இப்பூவை பார்த்ததும் மிகவும் வித்தியாசமாக இருந்தது.அடுத்த படத்தை பார்க்காமல் இது என்ன பூ? என்று சொல்லமுடியுமா?ரோடு ஓரத்தில் இப்படி பல பலா முசுக்கள் காய்த்துதொங்கிக்கொண்டு இருக்கு.பலா இனத்தை சார்ந்திருந்தாலும் இது அளவில் சிறியதாகவும் நீட்டு வாக்கில் இருக்கிறது.இது பழுத்தவுடன் இதன் சுளைகள் மிகவும் சுவையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாவம் நம் மக்கள்!!    
July 11, 2008, 8:23 am | தலைப்புப் பக்கம்

சற்று முன் தி.நகர் பக்கம் போனேன்.முன்பகல் வேளை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.பனகல் பார்க்கை சுற்றி சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமே பிரத்யோகமாக உள்ள நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவுடன் கட்டணத்துக்காக அனுகியவுடன் அங்கிருந்தவர் வெளியேரும் போது எங்கள் கடையில் வாங்கிய ரசீதை மட்டும் காண்பியுங்கள் போதும் என்றார்.அட! நிறுத்தம் இலவசமா? என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் பேச்சாளர்கள்.    
May 25, 2008, 4:36 am | தலைப்புப் பக்கம்

சிங்கையில் தமிழ் வாசிக்க வைக்க ஒரு கூட்டம் என்று வைத்து அதற்கு இந்தியாவில் இருந்து பிரபலங்களை கூட்டி வந்து மேலும் மெருகேற்றுகிறார்கள்.அதோடு பேச்சாளர்களையும் உருவாக்குவதிலும் சில இம்மாதிரியான நிகழ்வுகளை நடத்தி மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.மீதியை நகர் படத்தில் காணலாம். ...தொடர்ந்து படிக்கவும் »

எஸ். ராமகிருஷ்ணன்- சிங்கையில்    
May 18, 2008, 4:34 am | தலைப்புப் பக்கம்

போன வாரம் செய்திகள் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சொன்னது.இங்கு நடைபெரும் " வாசிப்போம் நேசிப்போம்" நிகழ்ச்சிக்காக சிங்கை திரு ராமகிஷ்ணனை அழைத்துள்ளது.ஜூலை மாதத்தில் அவர் சிங்கை வரக்கூடும். அவரை சில புத்தகங்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச்சொல்லியுள்ளதாகவும் அதில் சொல்லியுள்ளார்கள்.முழுப்படமும் வரமறுக்கிறது,வட்டில் பிரச்சனை என்று நினைக்கிறேன்.சிங்கையில் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

உணவைத் தேடி    
May 17, 2008, 12:40 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு யோகன் பாரீஸ் ஒரு பதிவை இங்கு போட்டிருந்தார்.சற்று முன் இந்த நகர் படத்தை பார்க்கும் போது அது தான் ஞாபகம் வந்தது அதை நீங்களும் பாருங்களேன்.Searching For Food - For more of the funniest videos, click hereகுழந்தைகள் உலகில் நமக்கு...தொடர்ந்து படிக்கவும் »

காவிரி கரை மீது (3)    
May 3, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்

ஆமாம் இந்த பீம் எல்லாம் மேலே வைத்து கான்கிரீட் போடுகிறார்களா? இல்லை என்றால் அதை எப்படி மேலே கொண்டு வருகிறார்கள்?பார்ப்போமா?இந்த பால வேலை - Design இடத்துக்கு தகுந்த மாதிரியா அல்லது இந்த டிசைன் தான் வேறு இடத்தில் கடைபிடிக்கப்பட்டு ஒன்றும் பிரச்சனையில்லாத்தால் இங்கும் கடைபிடிக்கப்படுகிறதா? என்று தெரியவில்லை.இன்றைய நிலமையை பார்க்கும் போது கட்டுமான வேலைகள் ஆரம்பித்து 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

காவிரி நதி மீது (2)    
May 1, 2008, 2:06 am | தலைப்புப் பக்கம்

இது பால பீம்களை தாங்கும் சப்போர்ட்கள்இது கான்கிரீட் போட்டுள்ள சப்போர்ட்கள்.மேலே உள்ள படத்தில் பல பாதுக்காப்புக்குறைகள் உள்ளன.மேலே வேலை செய்யும் தொழிலாளர்கள் வெளியே தவறி விழ பல வாய்ப்புகள் உள்ளது.அதே போல் த்ரையில் இருந்து மேலே வர அவ்வளவு நீளமான ஏணி கூட சரியான அனுகுமுறை அல்ல.கீழே உள்ள படத்தில் உள்ளது,பீமும் அதன் சப்போர்ட்டும் நெருக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

காவிரி நதி மீது (1)    
April 29, 2008, 3:28 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற போது பேருந்தில் பாலத்தை கடக்கும் போது இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் மேம்பால பணி கண்ணில்பட்டது,அது உங்கள் பார்வைக்கு....இப்போது இருக்கும் பாலத்தின் மீது நின்றுகொண்டு காவிரி அழகை காணலாம் என்று நின்றால் ,அங்கு போய் கொண்டு இருக்கும் வண்டிகள் மூலம் பால அதிர்வு இருப்பதை நன்கு உணர முடியும்.1979 களில் முதன்முறையாக இங்கு சென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நான் தனியாள்.    
April 25, 2008, 9:57 am | தலைப்புப் பக்கம்

இவர் தனியாளா?நேற்று பழவந்தாங்கல் ரயில் நிலய மேடையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

தோள் காணேன்... (கத்திப்பாரா பாலம்)    
April 23, 2008, 1:52 am | தலைப்புப் பக்கம்

15ம் தேதி ஏப்ரல் டைகர் விமானச்சேவை மூலம் சிங்கையில் இருந்து புறப்பட்டேன் சென்னைக்கு.கிளம்பும் நேரத்துக்கு சற்று முன்பே எடுத்துவிட்டார்கள்.விமானம் முழுவதுமாக நிரம்பவில்லை.இது விழாக்காலம் அல்லது பள்ளி விடுமுறை காலம் இல்லை என்பதால் கூட்டம் நிரம்பி வழியவில்லை போலும்.ஒவ்வொருவருக்கும் 15 கிலோ எடை என்பதால் வெகு சிலரே அதனை தாண்டி அங்கிருந்தவர்களுடன் பேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நடத்துனர் எச்சில் நமக்கில்லை    
April 20, 2008, 2:44 am | தலைப்புப் பக்கம்

1980 களில் சென்னை வந்த புதிதில் பல பஸ்களில் பயணம் செய்யும் போது நடத்துனர்களின் இந்த எச்சில் பழக்கம் வெகுவாகவே என்னை கஷ்டப்படுத்தும்.அந்த மாதிரி சமயங்களிலும் ஓரிரு பஸ்களில் உள்ள நடத்துனர்கள் கைவிரலில் ஒரு மோதிரம் போட்டுக்கொண்டு அதன் மேல் பகுதியில் சின்ன ஈர பஞ்ஜை வைத்துக்கொண்டு அதனை தொட்டுக்கொண்டு பயணச்சீட்டு கொடுப்பார். அப்போது அது ஒரு அருமையான கண்டுபிடிப்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சென்னை - புதிய முகம்    
April 18, 2008, 1:47 am | தலைப்புப் பக்கம்

நாளுக்கு நாள் சென்னையின் முகம் மாறிக்கொண்டு வருகிறது.நேற்று மின்வண்டி எடுக்கும் நேரத்தில் ஒரு ஓரத்தில் இந்த மாதிரி ஒன்றை நிறுத்திவைத்திருந்தார்கள்,என்ன ஏது என்று பார்க்கும் வரை அதன் பக்கம் மனித சஞ்சாரமே இல்லை.ஆதாவது வரிசை பிடித்து நிற்காமல் ஸ்மார்ட் கார்ட் கொண்டு பயணச்சீட்டு வாங்க வைத்துள்ளார்களாம்.அதிலும் ஏதோ குளருபடிகள் நிகழ்வதால் அந்த பக்கம் மக்கள் கூட்டமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் அனுபவம்

தி.நகர் அபாயம்!!    
April 17, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

இன்று மதியம் தி.நகர் பக்கம் போக வேண்டிய வேலை வந்தது.பழவந்தாங்களில் இருந்து மின் வண்டி மூலம் மாம்பலம் வந்துசேர்ந்தேன்.மாடிப்படி மூலம் கீழிறங்கி ரங்கநாதன் சாலையில் கால வைத்தவுடன் காண நேர்ந்த காட்சி தான் கீழே உள்ள படங்கள்.கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி காட்சியை காண நேர்ந்தால் அங்கு நடக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

உருட்டுச் சக்கரம்    
April 13, 2008, 12:15 pm | தலைப்புப் பக்கம்

இதைப்பற்றி ஏற்கனவே இங்கு சொல்லியிருந்தேன்.இந்த மகா சக்கரம் வரும் 15ம் தேதியில் இருந்து அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறந்துவிட இருக்கிறார்கள்.30 நிமிட நேர பயணத்துக்கு 30 வெள்ளிக்கட்டணம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் சிறிய சலுகை அளிக்கப்பட்டுள்ளதாம்.பலரும் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக குறைப்பட்டுக்கொள்வதை கீழே காணலாம்.நல்ல கால நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

மொழி சாகுமா?    
April 13, 2008, 11:31 am | தலைப்புப் பக்கம்

ஒரு மொழி அதுவும் ஒரு சிறிய மாநிலத்தில் மட்டுமே பரவலாகப்பேசப்படும் மொழி சாகுமா?அப்படி என்றால் எப்படி சாகும்?அதை சிங்கை வாழ் தமிழ் பேசும் இந்தியர்கள் எப்படி வாழவைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அது எப்படி சாகும் என்பதையும் சொல்கிறார்கள்,வாருங்கள் கேட்போம்.கீழே உள்ள நகர்படத்தின் மூலம் காணலாம்.வரும் 27ம் தேதிவரை சிங்கையில் நடக்கும் வெவ்வேறு தமிழ் மொழிக்...தொடர்ந்து படிக்கவும் »

வீணை நாதம்    
April 11, 2008, 1:41 pm | தலைப்புப் பக்கம்

காட்சிக்கு வைக்கும் வீணைதான் என்றாலும் மீட்டும் போது நம்மையும் சேர்த்து மீட்டுது.மீதி அதை மீட்டுபவரே சொல்கிறார்,பாருங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

நெகிழி ஆட்டம்    
April 11, 2008, 1:08 pm | தலைப்புப் பக்கம்

நெகிழி அதாங்க பிளாஸ்டிக்கை வைத்து யார் யாரோ என்னென்னோவோ செய்யும் வேலைகளில் இது வித்தியாசமாக இருக்கு பாருங்க.கீழே ஓடும் ரயிலின் மூலம் வெளியேற்றப்படும் காற்றை வைத்து ஒரு ஆட்டம் போடுவதை கீழே உள்ள சலனப்படத்தில் பாருங்கள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

மிதிவண்டி டியூப்    
April 8, 2008, 8:56 am | தலைப்புப் பக்கம்

இதில் காணப்பட்டுள்ள அனைத்து படங்களும் நண்பர் மூலம் மின் அஞ்சலில் வந்தது. பதிவு கொஞ்சம் பெரிதாக இருக்கும்.(படமாக போடலாம் என்றிருந்தேன்) வண்டி வந்திடுச்சி.. மீதி கிழே கையினால் பயனில்லை என்றாலும் இவரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ் பேசும் அமைச்சர்    
April 7, 2008, 11:55 am | தலைப்புப் பக்கம்

போன 5ம் தேதியில் இருந்து சிங்கப்பூரில் தமிழுக்காக விழா ஒன்று நடந்துவருகிறது,அது 27ம் தேதிவரை நடக்க இருக்கிறது.நேற்று நடந்த இந்த விழாவில் இங்குள்ள தொழிற்துறை அமைச்சர் பேசும் அழகான தமிழை கேளுங்கள்.போன வருடத்தில் இவர் இப்படி பேச மிகவும் கஷ்டப்பட்டார்.பிரத்யோக பயிற்சி எடுத்துக்கொள்கிறார் போலும்,அசத்துகிறார்.பாருங்கள்.வாழ்த்துக்கள்: தொழிற்துறை அமைச்சர் திரு ஈஸ்வரன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நிகழ்படம்

சதுரகிரி    
April 6, 2008, 3:10 am | தலைப்புப் பக்கம்

சந்திரபுரியில் கோரக்க சித்தர்போன வாரம் முழுவதும் இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தேன்.பேரை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கே புரியுமோ புரியோதோ என்று தான் எடுத்துவந்தேன்.இதை எழுதியவர் திரு கமலக்கண்ணன் என்று போட்டிருந்தது,சரி நம் பதிவர்களில் இவர் பெயர் கொண்டவர் ஒருவர் இருக்கிறாரே அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.முழுவதும் படித்த பிறகு தான் தெரிந்தது இவர் 79...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழில் போட்டி..    
March 31, 2008, 2:06 pm | தலைப்புப் பக்கம்

சிங்கையில் இளைஞர்களை தமிழில் பேச அதுவும் பள்ளியில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து தெலோக் பிளங்கா சமூக நிலையம் ஏற்படுத்திய விழாவை கீழே காணுங்கள். நன்றி: வசந்தம் சென்ரல்.என்ன? குழந்தைகள் பேசும் தமிழ்கூட அம்மாக்களால் பேசமுடியாதை சலனப்படத்தின் கடைசியில் காணலாம்.இவுங்க எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கப் போறாங்க என்று நினைத்தால் சிறிது...தொடர்ந்து படிக்கவும் »

தமிழுக்கு விழா    
March 31, 2008, 1:24 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூர் சின்ன நாடு தான் அதில் தமிழர் இனமும் சின்னது தான் ஆனால் அரசாங்க மொழியாக்கப்பட்டதும் அதற்கான மரியாதை தர இந்த அரசாங்கமும் மனிதர்களும் தவறுவதில்லை.கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,தமிழுக்காக 22 நாட்கள் விழா எடுக்கிறார்களாம். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் தமிழ்

துர்கா வீணை வாசித்த கோவிலுக்கு .....    
March 29, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு நம் சகபதிவர் துர்கா வீணை கச்சேரி நடந்தது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.அப்போது அந்த கோவில் புனரமைப்பு வேலைகளில் இருந்தது.போன வாரம் அந்த வேலைகள் எல்லாம் முடிந்து குடமுழுக்கு செய்யப்பட்டதை காட்டும் சலனப்படம் கீழே உள்ளது,பார்த்து மகிழுங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

புனிதப்பசு!!    
March 29, 2008, 5:32 am | தலைப்புப் பக்கம்

சில நாட்களுக்கு முன்பு செய்திகளின் இந்த பசுவின் கதையை காண நேரிட்டது.குஜராத்தில் ஒரு பசு தீவனத்தை சாப்பிடும் போதே பாலையும் கொடுத்துவிடுகிறதாம்.மீதி விபரங்கள் கீழே.. நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

இது கொஞ்சம் அதிகமாக தெரியலை!!    
March 29, 2008, 5:22 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சியில் இதை காண நேர்ந்தது.சிங்கப்பூரையே தூக்கி போய் இந்தியாவில் வைத்தா சரியா போய்விடுமா? மிஸ்டர் மதராஸ்??இருந்தாலும்,கன்னடக்காரர் தமிழில் பேசியதற்கு ஷொட்டு கொடுக்கலாம்.அதற்கு அடுத்த மலையாள பைங்கிளி சொல்வது அபதத்திலும் அபத்தம்.இங்குள்ளவர்கள் தமிழை சுத்தமாக பேசுகிறார்களாம்.பேச மாட்டேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

பாட்டுத்திறன் போட்டி    
March 25, 2008, 2:01 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் வானொலி - ஒலி 96.8 ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களுக்கான பாட்டுத்திறன் போட்டி பற்றிய தொகுப்பு கீழே உள்ள சலனப்படத்தில் பார்க்கலாம்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

ஹோலி பண்டிகை    
March 25, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்

தீபாவளிக்கு அடுத்த படியாக இந்தியாவில் பெருமளவில் கொண்டாடப் படுவது ஹோலி பண்டிகை தான் என்று சொல்கிறார்கள்.அந்த ஜுரம் இங்கும் வந்துவிட்டது போலும்.கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.மழையுடன் ஆட்டமும் வெகு ஜோராக வந்துள்ளது. நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

ஆமைகள் கூட பறக்கமுடியும்    
March 19, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்

"Turtles Can Fly" -இப்படி ஒரு படம்,எல்லாமே உருதுவில் இருந்தும் பார்த்துமுடித்தேன்.இராக்கில் நடப்பது போல் உள்ள கதை.முழுக்க முழுக்க சிறுவர்களையே வைத்து அவர்களை செம வேலை வாங்கியிருக்கார்.சிறுவர்களும் நடித்திருக்கார்கள் என்பது தெரியாமல் அட்டகாசமாக செய்திருக்கார்கள்.இதில் ஒரு சிறுமி அப்படியே "அஞ்சலியை" நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.அவர் படம் கீழே.ஆங்கில உரை நடை ஓடாததால் ஓரளவே ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விபத்து எப்படி நடக்குது?    
March 18, 2008, 1:03 pm | தலைப்புப் பக்கம்

கட்டுமானத்துறையில் எப்படியெல்லாம் விபத்து நடக்குது பாருங்க..ஹூம்!!!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் பணி

செவ்வாய்க்கு போகலாமா?    
March 16, 2008, 5:00 am | தலைப்புப் பக்கம்

வான்வெளித்துறையில் ஆர்வம் உண்டா?கீழ் உள்ள சலனப்படத்தை பாருங்கள்..நன்றி: smvans7இங்கிருந்து அங்கு போய் சேர 7...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நிகழ்படம்

விளம்பரம்    
March 15, 2008, 7:40 am | தலைப்புப் பக்கம்

தொலைக்காட்சியில் வரும் சில விளம்பரங்கள் மெல்லிய புன்னகையை வரவழைத்து நம்மை கவர்ந்துவிடும்.கீழே உள்ள விளம்பரத்தை பாருங்கள்.இங்கு பல நாட்களாக ஓடிக்கொண்டு இருந்தாலும்...இன்று தான் பிடித்து போடனும் என்று தோனியது.பார்த்து மகிழுங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம் நிகழ்படம்

எப்போது திருந்துவது???    
March 15, 2008, 7:34 am | தலைப்புப் பக்கம்

இரட்டை குழந்தை,ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் எல்லாம் இப்போது அதிசியமில்லை தான்.சில சமயம் கருவில் உண்டாகும் குழந்தைகள் முழுவதுமாக வளராமல் மற்றொன்றுடன் இணைந்து வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதுண்டு,அப்படி ஒரு நிகழ்வை வட இந்தியாவில் சிலர் கீழ்கண்டவாறு மாற்றிவிட்டார்கள்.குழந்தை “ஆண்டவா”!!! நீயாவது காப்பாற்று. வீடியோ தெரியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நிகழ்படம்

தட்டாமாலை    
March 11, 2008, 5:46 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள படங்கள் எனக்கு தெரிந்தவர் மூலம் ஸ்லைட் ஷோ ஆக வந்தது,அதை பிச்சி தேவையான படங்களை உங்கள் பார்வைக்காக வைத்துள்ளேன்,அனுபவிங்க.இந்த இடம் இங்கிலாந்து நாட்டில் உள்ளது.பொறியாளர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.மேலேயும் தண்ணி,கீழேயும் தண்ணி,இரண்டிலும் படகு ஓடுது... எப்படி?முழு வியூவும் உள்ள மற்றொரு படம் கீழேதொட்டி மாதிரி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் பணி நுட்பம்

19 வயதுக்கு கீழ்..    
March 8, 2008, 3:51 pm | தலைப்புப் பக்கம்

ஏம்ம்பா? நம் ஆட்கள் அதுவும் 19 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தனியாக மலேசியா வந்து நம் நாட்டுக்காக கோப்பையையும் வென்றிருக்கிறார்கள்,யாராவது வீடியோ போடுவாங்க என்று பார்த்தால்.... ஒன்று கூட அகப்படவில்லையே.சரி.. சரி ..சின்னக்குட்டி எடுத்து போடுவதற்குள், போட்டுவிடுகிறேன்.பார்த்து மகிழுங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »

தத்துவம் (தேர்தலுக்காக!!)    
March 8, 2008, 3:38 pm | தலைப்புப் பக்கம்

தேர்தல் வந்தாலே போதும் விதம் விதமான பேச்சுகள் வெளியில் வரும்,அதுவும் தமிழர் போட்டியிடக்கூடிய இடம் என்றால் நவரசத்துக்கு குறைவில்லாமல் யாருக்கும் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை பலர் போட்டுக்காண்பிப்பார்கள்.இன்று மலேசியாவில் தேர்தல்,என்ன தான் ஆளுங்கட்சிக்கு பயமில்லாமல் இருந்தாலும் இந்த இண்டிராப் வந்து அவுங்க கேக்கில் கொஞ்சம் வெட்டி எடுத்துட்டு போயிடுவாங்களோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கை வண்ணம்    
March 6, 2008, 8:18 am | தலைப்புப் பக்கம்

இன்று காலை ஒரு மெயிலில் வந்த படங்கள் இது.இவை அத்தனையும் காகிதத்தில் செய்துள்ளார்கள்.சில படங்கள் நெடுக்கு வசத்தில் இருப்பதால் கீழ் பகுதி வெட்டப்பட்டுவிடுகிறது.இவர்கள் கற்பனைத்திறனும் கை வண்ணமும் வியக்காமல் இருக்க முடியவில்லை.காகிதத்தை எப்படி வெட்டுகிறார்களோ அதையே உருவமாக வைக்கவேண்டும் போல்.நன்றி: படங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

Batu Kawa- East Malaysia    
March 4, 2008, 6:50 am | தலைப்புப் பக்கம்

இது நாங்கள் கிழக்கு மலேசியாவில் பண்ண ஒரு பால கட்டுமான பணிகளின் படங்களின் தொகுப்பு.போட்டோ பக்கெட்டில் இந்த வசதியை பார்த்ததும் முயன்று பார்க்கலாமே என்று முயற்சித்ததின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் பணி

எஸ்.ராமகிருஷ்ணன்    
February 20, 2008, 6:56 am | தலைப்புப் பக்கம்

எழுதுவது ஏன்?இப்படிப்பட்ட கேள்வி வாசகனுக்கோ எழுதுபவர்களுக்கோ ஏற்பட்டால்...இங்குபோய் பார்க்கவும்.திரு ராமாகிருஷ்ணனின் எழுத்து எனக்கு ஆனந்தவிகடன் மூலம் தற்செயலாக அறிமுகமானது.நான் விரும்பி படிக்கும் பாலகுமாரனுக்கு அடுத்து இவர் புத்தகங்களை தான் தேடுவேன்.என்ன எழுதினாலும் நம்மையும் அவருடனே கட்டி இழுத்துக்கொண்டு போகும் கலையை அவர் எழுத்தை படிப்பதன் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஹைட்ரஜன் கார்    
February 18, 2008, 1:16 pm | தலைப்புப் பக்கம்

வர வர கார்களின் எரி பொருளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கிவிட்டது என்பதை தான் இந்த சலனப்படம் காண்பிக்கிறது.எல்லாம் போய் இப்போது ஹைட்ரஜன் மூலப்பொருள் கொண்டு இக்காரை இயக்குகிறார்களாம்.எரி பொருள் செலவு இப்போதைக்கு அதிகமாக தெரிந்தாலும் நாள் ஆக ஆக பழக்கமாயிடும் என்று சொல்லவில்லை. :-))கட்டுப்படியாகும் என்று சொல்கிறார்கள்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் சூழல்

ரியாக்டர்-தமிழில் மறந்து போய் விட்டது.    
February 16, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்

நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இந்த படங்களைஅனுப்பியிருந்தார்.கட்டுமானத்துறையில் இப்போது கான்கிரீட் பயண்பாட்டை குறைத்து ஸ்டீலுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த விதத்தில் இந்த் ரியாக்டர் எப்படி ஆரம்பித்து எப்படி வெளியேறுகிறது என்று பாருங்கள்.கிழே உள்ள படத்தில் உள்ள ரியாக்டர் வெல்டிங் வேலைகள் முடிந்து டெஸ்டிங்காக தயார் நிலையில் இருக்கிறது.பூஜையை...தொடர்ந்து படிக்கவும் »

பாலகுமாரனின் ஹிந்தி    
February 15, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

நான் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தாலும் பாலகுமாரனின் படிப்புகளை படிக்கும் போது பல முறை கால நேரம் தெரியாமல் போயிருக்கிறது,மூழ்கிவிடுவேன்.இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் “கருணை மழை” நாவலில் உள்ள இரண்டாம் பகுதியில் உள்ள ”சரஸ்வதி” என்ற கதையில் வரும் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக.படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.இவர் நாவலில் வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை புத்தகம்

களவு தொழிற்சாலையாம்!!    
February 14, 2008, 4:54 am | தலைப்புப் பக்கம்

முதலில் இப்புத்தகத்தை பார்க்கும் போது, தலைப்பில் ஏதோ தவறா? என்று எண்ணத்தோணியது.கனவுத் தொழிற்சாலையை என்கிற சினிமா தொழிலைப்பற்றி தான் அப்படி சொல்லியிருக்கார்.படிக்க.. படிக்க.. அதன் நீள,அகல மற்றும் உயரங்களை திரு பிஸ்மி என்பவர் உரித்துக்காண்பித்துள்ளார். சினிமா தொழிலில் உள்ள கயமைத்தனங்களை அப்படியே சொல்லியுள்ளார்.இவரே ஒரு தயாரிப்பாளர் போலும்,தார்மீக கோபம் சில...தொடர்ந்து படிக்கவும் »

ஆ மெங்க்    
February 13, 2008, 11:45 am | தலைப்புப் பக்கம்

என்ன தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கா?வேற ஒன்றும் இல்லை இங்குள்ள மிருககாட்சி சாலையில் இருக்கும் ஒரு ஓரங்குட்டான் குரங்கின் செல்லப்பெயர்.இதனுடன் உட்கார்ந்து காலை டிபன் சாப்பிட்டிருக்கிறார்கள் பல உள்ளூர் வெளியூர் மக்கள்.இதன் உருவம் சிஙக்ப்பூர் ஜூவின் ஒரு ஐகான் என்றால் மிகையாகாது.வயசாகி/பாட்டியானதால் காலன் அழைத்துக்கொண்டான் போலும்.மீதி கீழே... நன்றி: வசந்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

சிங்கப்பூர் சக்கரம்    
February 13, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

பிரிட்டனில் உள்ளது போலவே இங்கும் ஒரு சக்கரம் நிறுவி சுற்றுப்பயணிகளை கவர வேண்டும் என்று சுமார் 1.5 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தாக ஞாபகம்.வரும் ஏபரல் முதல் பொது மக்களுக்கு திறந்து விட எண்ணியிருக்கும் இந்த “சிங்கப்பூர் பிளையர்” சுமார் 42 மாடி உயரம் உள்ளது.இதிலிருந்து (மேக மூட்டம்/தூசி மூட்டம் இல்லாத நாட்களில்) பார்த்தால் மலேசியாவும் & இந்தோனேசியாவும் தெரியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

புதுசா ஒரு வேலை!!    
February 7, 2008, 5:42 am | தலைப்புப் பக்கம்

புது மாதிரியான வேலையை உருவாக்கி அதைவைத்து ஒரு 20 நிமிடங்கள் ஆளை சிரிக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.மென்பொருள் துறையில் உள்ளவர்கள் இன்னும் ரசிக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.இங்கு சொடுக்குங்கஇந்த ரமணி ரமணி தொடர் ஒரு காலத்தில் சிங்கையிலும் ஒளி பரப்பப் பட்டது.இப்போ எந்த தொலக்காட்சி ஒளிபரப்புகிறது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

புகை வண்டி    
February 4, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

நம்மூர் பல பகுதிகளில் இந்த புகைவண்டி காணமல் போய்கொண்டிருக்கும் வேளையில்....பார்த்து மகிழ,இங்கே ஒரு சலனப்படம்.யூ டியூபில் போட்ட புண்ணியவான் is1943...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

”கோலங்கள்”- நாடகத்தொடர் அல்ல    
February 3, 2008, 6:05 am | தலைப்புப் பக்கம்

மறைந்துகொண்டிருக்கும் பல கலைகளில் இந்த கோலக்கலையும் ஒன்று, அதுவும் நகர வாழ்கையில் அதற்கென்று ஒட்டி கூட வந்துவிட்டதால் கோலம் போடக்கூடிய அவசியமும் இல்லாது போய் கொண்டிருக்கிறது.ஏதோ, இன்னும் கிராமங்களில் வாசலை அடைத்து கோலம்போடுபவர்கள் இருப்பதால் இந்த மாதிரி சலனப்படத்தின் மூலமாவது பார்க்கமுடிகிறதே!!கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்/கேளுங்கள்.நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் பண்பாடு

ஸ்தல புராணம்-வடுவூர்.    
January 31, 2008, 3:59 am | தலைப்புப் பக்கம்

இது நான் எழுதியது அல்ல.நண்பர் மூலம் மின் அஞ்சலில் வந்து சேர்ந்தது.திரு ஜோ.மகேஷ் மகேஷ்வரன் என்பவர் எழுதியுள்ளார்.வடுவூரில் பிறந்திருந்தாலும்,இதில் இருக்கும் பல விஷயங்கள் எனக்கும் புதிது தான்.திருவாரூர் தேரழகு, மன்னார்குடி மதிலழகு, வடுவூர் சிலையழகு என்று ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில் கூறுவார்கள். முதலிரண்டு விஷயங்களும் பெருமபாலானவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

திரு சிவ சிதம்பரம்    
January 29, 2008, 1:30 pm | தலைப்புப் பக்கம்

கடந்த 27ம் தேதி நடந்த கும்பாபிஷேகம் ஒன்றுக்காக திரு சிவ சிதம்பரம் கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது போலும்,அதை செய்திகளில் காண்பித்தார்கள்.உங்கள் பார்வைக்காக கீழே உள்ள சலனப்படம். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

காளை “ஆட்டம்”.    
January 29, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

இது சிம்பு நடிக்கும் காளை படத்தை பற்றி அல்ல.மேல் விபரங்களுக்கு படத்தை பாருங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

இணைய வேகம்    
January 27, 2008, 9:14 am | தலைப்புப் பக்கம்

என்னுடைய "ஆப்பிள் கணினி" பதிவில் நம் சக பதிவாளர் "திவா" சிங்கப்பூரில் இணைய வேகம் எவ்வளவு இருக்கும் என்று கேட்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.//இங்கு சிங்கையில் தேவைக்கு அதிகமாகவே வேகம் கிடைக்கிறது.//எவ்வளவு என்று கேட்டு பெருமூச்சு விட நான் தயார் இல்லை!:-)அவர் கேட்காட்டி என்ன சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையே?கீழே இருக்கும் படத்தை பாருங்கள்.கடந்த 2 மாதங்களாக முட்டி மோதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சாலை தடுப்புச்சுவர்    
January 25, 2008, 1:06 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாள் ஆயிற்று இங்கு கட்டுமானப்பதிவை போட்டு.கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,இந்த இயந்திரம் சாலையில் இரு ஓரங்களில் வரும் சிறிய தடுப்புச்சுவரை அதாகவே போட்டுக்கொண்டு நகருகிறது என்று.ஓரளவுக்கு நேராகவோ அல்லது ஏற்ற இறக்கம் உள்ள சாலைகளில் இதன் பயண்பாடு மிக அதிகம்.குறைந்த ஆட்கள் இருந்தால் போதுமானது.இந்த இயந்திரத்தை பல மாதிரிகளில் பயண்படுத்துவதால்,ஒரு இயந்திரம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

ஜெயந்தி சங்கர் -பாகம் 2    
January 22, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

போன பதிவில் “இன்பா” பற்றி சொல்லியிருந்தேன் அதில் அவர் சொல்லிய முக்கியமான விஷயம் ஒன்று விட்டுப்போய்விட்டது.குழந்தைகள் பெரியோர்களை வயதான காலத்தில் கவனித்துக்கொள்வதில்லை என்ற பொதுவான கருத்து நிலவுதலை கொண்ட ஒரு கதையை(ஜெயந்தி சங்கர் எழுதியது) பற்றி குறிப்பிட்டு அதன் தொடர்பில் ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.ஒருமுறை அலுவலகத்தில், முதியோர் நல அமைப்புக்காக நிதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஜெயந்தி சங்கர் -பாகம் 1    
January 20, 2008, 12:03 am | தலைப்புப் பக்கம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு இருக்கும்,ஒரு மின் அஞ்சல் திரு ஜெயகுமார் என்பவரிடம் இருந்து அதைத்தொடர்ந்து ஜெயந்தி சங்கரிடம் இருந்து வந்ததுயார் இந்த ஜெயந்தி சங்கர்?தமிழ் பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு இவரை தெரியும் (சமீபத்தில் அவர் பதிவுகளை பார்க்கமுடியவில்லை) அதோடு சிங்கையில் தமிழ் புத்தகங்களை படிப்பவர்களுக்கு இவரை அறிமுகம் செய்ய தேவையில்லை.அவ்வளவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஆப்பிள் கணினி    
January 18, 2008, 11:39 am | தலைப்புப் பக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனம் எடை குறைவான தக்கை போன்ற கணினியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது.இதில் வட்டு போடும் வசதியில்லை ஆனால் அது பெரும் குறை அல்ல என்று சொல்லி பல சினிமாக்களை குறைந்த விலையில் இணையம் மூலம் பெற வசதிசெய்து வருகிறதாம்.பாட்டும் இணையதில் வாங்கிய பிறகு வட்டு எதற்கு?மேல் விபரங்கள்.. கீழே.நன்றி :...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

பொங்கல்- வித்தியாசமாக    
January 17, 2008, 1:52 pm | தலைப்புப் பக்கம்

பொங்கல் அன்று தொலக்காட்சியில் போட்டது இது,பார்க்க முடியாதவர்கள்/பார்க்காதவர்களுக்காக..பெருமாள் தரிசனத்தோட.சிங்கையில் இந்த முறை புதிதாக பொங்கலை பள்ளிக்குள்ளும் கொண்டு போய் மாணவர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.அடுப்பை விசிற விசிறி இல்லாவிட்டால் என்ன பிளாஸ்டிக் தட்டு போதும்,பால் பொங்குவதற்கு நேரம் பிடிக்கிறதா? அதற்கு மூடி போட்டு அதை விரைவுப்படுத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

மாட்டுப் பொங்கல்    
January 14, 2008, 1:15 pm | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு என்று ஒரு பதிவு போட்டாகிவிட்டது,அடுத்து மாட்டுப்பொங்கலுக்கு போடாட்டி எப்படி?மாடு முட்ட வந்துவிடும் என்பதால்.... நன்றி: வசந்தம் சென்ரல்.எனக்கென்னவோ இது பல வருடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோவோ என்ற சந்தேகம்.சில வருடங்களுக்கு முன்பே ஒளிப்பதிவானதாக ஞாபகம்.ஒரு வேளை மக்களின் ஞாபகசக்தியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம் பண்பாடு

பொங்கலோ பொங்கல்.    
January 11, 2008, 11:11 pm | தலைப்புப் பக்கம்

பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தாலும்,சிங்கப்பூரில் எதுவும் கொஞ்சம் முன்னாடியே நடக்கும்,அந்த வரிசையில் இதுவும்.இட பற்றாக்குறையோ அல்லது தமிழக கலைஞர்கள் கிடைக்கவில்லையோ என்னவோ? முன்னமே செய்து அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு அரிசியும் போட வைத்துவிட்டார்கள்.நாட்டுப்புற பாட்டுகளின் அரசி “திருமதி நவநீத கிருஷ்ணன்” அவர்களின் பேச்சையும்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு    
December 22, 2007, 11:56 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள சலனப்படம் சிங்கை தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு வந்தது.தமிழ் எழுத்தாளர்களை சிங்கை அரசாங்கம் எப்படி ஊக்குவிக்கிறது என்பதை பற்றியும் தங்கப்பேனா விருதை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புறையும் கருத்தும் இருக்கிறது, பாருங்கள். நன்றி:...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் நிகழ்படம்

இயற்கையின் அதிசியம்    
December 6, 2007, 1:47 pm | தலைப்புப் பக்கம்

அவ்வப்போது தினசரி மற்றும் ஊடகங்களில் இயற்கைக்கு முரனாக நாய்,பூனை குட்டிக்கு பால் கொடுப்பது,நாயும் குரங்கும் நண்பர்களாக இருப்பது என்று நம்மை அதிசியத்தில் ஆழ்த்தும்.அதே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

மலேசியா கிருஷ்ணர்    
November 28, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காதது.நான் பல தடவை வெளியில் சுற்றும் போது பேருந்து அல்லது ரயிலில் போகும் போது குழந்தகளையே ரசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்படம்

வாசிப்பை நேசிப்போம்    
November 27, 2007, 1:11 pm | தலைப்புப் பக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கையில் தமிழ் வாசிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊக்கப்படுத்த வேண்டி கல்வி அமைச்சு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்திருந்தார்கள்.அதை...தொடர்ந்து படிக்கவும் »

சிங்கை வடிவேலு    
November 27, 2007, 11:31 am | தலைப்புப் பக்கம்

உலகத்தில் நகைச்சுவை நடிகை/நடிகர்களுக்கு எப்பவுமே மவுசு தான்.தமிழ்நாட்டில் இப்போது கொடி கட்டி பறக்கும் திரு வடிவேலு/திரு விவேக் மாதிரி இங்கும் சிலர் இருக்கின்றனர்.தமிழில்...தொடர்ந்து படிக்கவும் »

கத்திப்பாரா பாலம்.    
November 19, 2007, 6:59 am | தலைப்புப் பக்கம்

நேற்று இரவு ஊருக்கு கிளம்பும் முன்பு மனைவிவீட்டாரிடம் சொல்லிவிட்டு பெற்றோர் இருக்கும் இடம் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தேன்.போரூரில் இருந்து வந்தாலும் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

இரட்டை இயங்கு தளம்    
June 20, 2007, 9:33 am | தலைப்புப் பக்கம்

கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.இரட்டை இயங்குதளத்தை எப்படி நிறுவுவது என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

லினக்ஸில் தமிழ்-2    
June 9, 2007, 7:44 pm | தலைப்புப் பக்கம்

போன பதிவில் லினக்ஸில் எப்படி தமிழில் உள்ளீடு செய்வது என்று வரியில் எழுதியிருந்தேன்.அது ஒருவருக்கு சரியாக வரவில்லை என்று சொல்லியிருந்தார்.அவர் குறையை நீக்க படத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்