மாற்று! » பதிவர்கள்

லேகா

ஆர்.கே.நாராயணனின் "மால்குடி டேய்ஸ்"    
May 20, 2009, 12:58 pm | தலைப்புப் பக்கம்

மால்குடி டேய்ஸ் - பலருக்கும் பரிட்சயமான பெயர் இது.முன்பு தொலைகாட்சியில் தொடராய் வந்த ஆர்.கே நாராயணனின் சிறுகதை தொகுப்பு.தமிழ் அளவிற்கு ஆங்கில இலக்கியம் படிக்க ஆர்வம் இருப்பதில்லை.முதல் முயற்சியாய் இந்த சிறுவர் இலக்கியத்தை படித்து முடித்தேன்."மால் குடி" நாராயணனின் கற்பனை கிராமம்,அதன் சூழல்,அதன் மனிதர்கள் இவற்றை மையப்படுத்தி வெகு எளிமையாய் சொல்லபட்டுள்ள கதைகளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கல்யாண்ஜியின் தேர்ந்தெடுத்த கவிதைகள்    
January 17, 2009, 2:08 pm | தலைப்புப் பக்கம்

கல்யாண்ஜியின்(கதை உலகில் வண்ணதாசன்) தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு நான் விரும்பி வாசித்த முதல் கவிதை நூல்.வண்ணதாசனின் சிறுகதைகளோடு இருந்த பரிட்சயம் அவரின் கவிதைகளோடு இருந்ததில்லை.இத்தொகுதியின் கவிதைகள் யாவும் நம்மை சுற்றி தொடரும் தினசரி நிகழ்வுகளை,எந்திர வாழ்கை ஓட்டத்தில் கவனிக்க மறந்தவற்றை நினைவூட்டுபவை.மிகபிடித்த சில வரிகளை இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இந்திய திரைப்படம் "PAGE 3" - ஓர் நிதர்சன பதிவு!!    
December 19, 2008, 12:01 pm | தலைப்புப் பக்கம்

இந்தியில் அரிதாய் வெளிவரும் நல்ல படங்களுள் ஒன்று.2005 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் மதூர் பண்டார்கர்.இவரின் முந்தைய படம் தபு நடிப்பில் வெளிவந்த "சாந்தினி பார்' வெகுவாய் பாராட்ட பெற்று விருதுகள் பெற்றது.முதல் முறை இப்படம் பார்க்க ஒரே காரணம் கொங்கனா சென்.Mr & Mrs ஐயர் திரைப்படத்தில் வெளிப்பட்ட அவரின் ஆபார நடிப்பே அதற்கு காரணம்.படம் தொடங்கிய பிறகு கொங்கனாவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" - குறுநாவல் தொகுப்பு    
December 16, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

ஆதவனின் படைப்புகள் ஆச்சர்யம் கூட்டுபவை.இவரின் "என் பெயர் ராமசேஷன்" மற்றும் "காகித மலர்கள்" தந்த அனுபவம் அலாதியானது,பல விஷயங்கள் குறித்த மாற்று பார்வையை தந்தவை. புதுமைபித்தனின் எழுத்துக்களை போலவே இவரின் எழுத்துகளும் எல்லா காலங்களுக்கும் பொருந்தி வருது.1977 வெளிவந்த இத்தொகுப்பின் கதைகள் யாவும் கால இடைவெளியை நினைவுறுத்தாது இன்றைய தலைமுறைக்கென சொல்லப்பட்டது போல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இமயத்தின் "கோவேறு கழுதைகள்" மற்றும் பாமாவின் "கருக்கு&q...    
December 1, 2008, 11:06 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் படித்த இவ்விரண்டு தலித் நாவல்களும் என்னை மிகவும் பாதித்தது.இதுவரை சில எழுத்துக்களின் மீது கொண்டிருந்த அபிமானம் நொடி பொழுதில் மறைந்தது.தமிழில் வெளிவந்த மிக சிறந்த தலித் இலக்கியமாக இவ்விரு நாவல்களும் கருதப்படுகின்றன.பொதுவாக எந்த நாவல் படித்தாலும் அதன் குறைகளை நீக்கி,பெற்று கொண்டதை எண்ணி நிறைவாய் உணர்வேன்.புனைவாய் சொல்லப்பட்ட சோக கதைகள் கூட அதிக ரணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"வேட்டி" - கி.ராவின் சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்பு    
November 24, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

கி.ரா வின் கதைகள் யாவும் கரிசல் மண்ணின் அனுபவ பகிர்தல்கள்.சற்றே கற்பனை கலந்து கேட்பவனை தன்வச படுத்த கதை சொல்லும் யுக்தி கதை சொல்லிகளுக்கே உண்டானது.அவ்வகையில் கி.ரா வின் கதைகளில் வரும் கற்பனை காட்சிகள் சுவாரசியமானவை.சில எழுத்துக்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காத வசீகரத்தை கொண்டிருப்பவை,கி.ரா வின் எழுத்துக்களை போல.நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் படித்த பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

"Me You Them" - பிரசிலிய திரைப்படம்    
November 21, 2008, 1:00 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஆண் தன் வாழ்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சந்தித்த பெண்களை,அவர்களோடு கொண்டிருந்த காதலை,சிநேகத்தை சொல்லும் ஆட்டோக்ராப் திரைப்படம் வெளிவந்த சமயம் இதே கதை ஒரு பெண்ணை மைய படுத்தி வெளிவந்தால் சமூகம் ஏற்குமா என்ற கேள்வி பரவலாய் இருந்தது.அதற்கான சூழலும்,தைரியமும் தற்சமயம் இங்கில்லை.பிரேசிலில் நடந்த நிஜ கதையை மையமாய் கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வாசிப்பு..தனிமையின் தேடல்!!    
November 20, 2008, 10:42 am | தலைப்புப் பக்கம்

சில விஷயங்கள் எத்தனை முறை பேசினாலும் அலுப்பு தருவதில்லை.இலக்கியம்,இசை,சினிமா இவை குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும்,வெவ்வேறு பார்வைகள்,ரசனைகள்,விமர்சனங்கள்,எதிர்ப்புகள்..எது எப்படியாயினும் கால சுழற்சியில் நம்மை விட்டு நீங்காது சில காரியங்கள் தொடர்ந்து கொண்டே வருபவை..வாசிப்பும் அதில் ஒன்று.வாசிப்பு அனுபவம் குறித்த தொடர் பதிவிற்கு அழைத்த நர்சிமிற்கு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பெருமாள் முருகனின் "ஏறுவெயில்"    
November 6, 2008, 11:12 am | தலைப்புப் பக்கம்

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் இழப்புகளை மிக விரிவாய் நாயகனின் பார்வையில் சொல்லும் நாவல் "ஏறு வயல்".சமுதாய மாற்றங்களினால் கிராமங்கள் மறைகின்றன,விலை நிலங்கள் அழிகின்றன,குடும்ப உறவுகளுக்குள்ளான பிரியங்கள் பின் தள்ளப்பட்டு பணம் முதன்மை பெறுகின்றது இவை யாவையும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளோடு சொல்லி இருக்கின்றார் பெருமாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பாவண்ணனின் "எனக்கு பிடித்த சிறுகதைகள்" மற்றும் "கடலோர வ...    
October 31, 2008, 1:47 pm | தலைப்புப் பக்கம்

நாவலோ சிறுகதையோ படிக்கும் பொழுது அதன் மனிதர்களும்,நிகழ்வுகளும் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு மிக நெருக்கமாய் தோன்றலாம்.அவ்வாறு தான் மிகவும் நெருக்கமாய் உணர்ந்த சிறுகதைகளை தனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணி கொண்டு தொகுத்துள்ளார் பாவண்ணன்.தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அனைவரின் சிறுகதைகளும் இதில் அடக்கம்.நாம் படித்த மற்றும் படிக்காத சிறுகதைகளை குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: