மாற்று! » பதிவர்கள்

லதானந்த்

கண்டம் விட்டுக் கண்டம் தாவும் பறவைகள்    
July 6, 2009, 3:12 pm | தலைப்புப் பக்கம்

அத்தியாயம் 1 “மாமா! உங்க வீட்டுக்கு ஒரு முறைதான் வந்திருக்கேன். அதனாலே வழி தவறிப் பக்கத்துக் குவார்டர்ஸுக்குள்ளே போயிட்டேன்” என்றாள் புதிதாக ஃபாரஸ்ட் காலனிக்கு வந்திருந்த ஜெயலஷ்மி.“ஏம்மா! இவ்வளவு பக்கத்திலிருக்கிறப்போவே வழியை மறந்திட்டியே! சில பறவைங்க லட்சக் கணக்கான மைல் பறந்து கரெக்டா போய்ச் சேர வேண்டிய நாடுகளுக்குப் போவுதே தெரியுமா?” என்றார் ரேஞ்சர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

எறும்பு தின்னி    
June 14, 2009, 2:55 pm | தலைப்புப் பக்கம்

“பல்லே இல்லாத ஒரு பாலூட்டி மிருகத்தைப் பத்திச் சொல்லட்டுமா?” என்ற பீடிகையோடு பேச ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.சுட்டிகள் ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார்கள்.“எறும்பு தின்னிதான் அது!” என்றவரை இடைமறித்தான் மாதப்பன். பல்லே இல்லாத அது அப்புறம் எப்படி மாமா தன்னோட ஆகாரத்தை மெல்ல முடியும்?”“பொறுடா முந்திரிக்கொட்டை! மொதல்ல அதைப் பத்திப் பொதுவான விஷயங்களைச் சொல்றேன்” என்றார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் சூழல்

வனவிலங்குக் கணக்கெடுக்கும் பணி    
March 27, 2009, 12:24 pm | தலைப்புப் பக்கம்

வனவிலங்குக் கணக்கெடுப்பில ஆர்வம் இருக்கா ஒங்களுக்கு?வாலண்ட்டிர்களையும் இந்தப் பணிக்குச் சேத்துக்கிறோம். மொத்தம் 3 நாள் பணி. இது பிக்னிக் இல்லீங்க. சீரியஸான வேலை. காட்டுக்குள்ளாற வனவிலங்குகளைக் கணக்கெடுக்கிற பணி. ஏப்ரல் மொதோ வாரத்தில இருக்கும். கலந்துக்கணும்னு நெம்பப் பிரியப்படுறவிங்க எனக்கு போன் மூலம் சொல்லுங்க. பாப்பம்.போன் நெம்பரா? அது தெரிஞ்சவிங்க நெம்பப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் நிகழ்ச்சிகள்

இரு வாட்சிப் பறவை (ஹார்ன் பில்)    
March 2, 2009, 7:30 pm | தலைப்புப் பக்கம்

மாமா! பறவைகள் பத்தி ஏதாவது இன்ட்ரஸ்டிங்காச் சொல்லுங்க” என்றாள் மெஹருன்னிஸா.“ஆனை மலைப் பக்கம் கேம்ப் போயிருந்தப்போ இருவாட்சிப் பறவை களைப் பார்த்தது சுகமான அனுபவம்” என்று ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.“சுமார் நாலு அடி நீளத்தோட இருக்கிற இருவாட்சிப் பறவைகளின் இறக்கைகள் மஞ்சள், சிகப்பு கருப்பு, வெள்ளை போன்ற வண்ணங்களின் கலவையாக அட்டகாசமாக இருக்கும். இவை அடர்ந்த காடுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பண்டிதன் கடிதம்    
February 2, 2009, 6:53 am | தலைப்புப் பக்கம்

ஆசீர்வாதம்!பாமரன் கடிதம் என்றவொரு பேராலே ஏற்கனவே ஒரு மஹானுபவன் கடிதாசுகளையும் வியாசங்களையும் எழுதிவருகிற படியாலேயும் உண்மையிலேயே பாமரனாகிய நாம், “பண்டிதன் கடித”மென்கிற பேராலே இப்பதிவையெழுத அவாவுற்றதன் விளைவே நீவிர் தற்போது காண்பது.தமிழுக்கும் சமூகத்துக்கும் சேவை செய்யப் ப்ரதிக்ஞை கொண்ட பெருஞ் சான்றோராகிய திரைக் கவி வாணர்களுக்கு எழுதுவதே பொருத்தமென்று நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தந்தம்    
January 20, 2009, 1:03 pm | தலைப்புப் பக்கம்

“விலையுயர்ந்த பல்லைப் பற்றிச் சொல்லட்டுமா?” என்று சுட்டிகளைக் கேட்டார் ரேஞ்சர் மாமா. சுட்டிகள் ஆர்வமாய்த் தலையாட்டினர். “யானையோட குறிப்பிட்ட சில பற்கள்தான் தந்தமாய் மாறுபாடு அடையுது. யானையோட வாயிலிருந்து வெள்ளையாய்க் கொம்பு மாதிரி நீட்டிகிட்டு அது இருக்கும். இங்கிலீஷில் இதை ‘டஸ்க்' (tusk) அப்படின்னும் அது உருவாகியுள்ள பொருளை ‘ஐவரி' (ivory) அப்படின்னும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஜான் கீட்ஸ்    
November 19, 2008, 4:21 am | தலைப்புப் பக்கம்

ஜான் கீட்ஸ் கவிஞர்கள் பலவிதம். ‘உள்ளத்தில் உள்ளது கவிதை' எனப் பீறிட்டெழுவதை வார்த்தைகளில் வடிப்போர் ஒரு வகை. எழுதியே ஆவது எனும் தீர்மனத்தில் எழுதுவோர் இன்னொரு வகை.வார்த்தைகளில் பாசாங்கு கலக்காமல், சொற் சிலம்பம் ஆடாமல், தான் உணர்ந்ததை வாசகனும் உணர வேண்டும் என்ற நோக்கில் கவிதை பொழிந்தவர் ஜான் கீட்ஸ்.1795 ம் வருடம் அக்டோபர் மாதம் பிறந்த ஜான் கீட்ஸ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்    
August 11, 2008, 12:43 pm | தலைப்புப் பக்கம்

அன்புள்ள பரிசல்காரன்!நலம். நாடலும் அஃதே! கவனச் சிதறலுக்கு இடம் கொடாதிருக்கும் பொருட்டுப் புகைப் படங்களையும் வண்ணங்களையும் தவிர்த்து இதை எழுதுகிறேன். தங்களின் வலைப்பூ அரும்பாக இருந்தபோதிலிருந்து வாசித்து வருகிறேன். மெள்ள நகர்ந்து, வேகமெடுத்துப் பதிவுகள் மழையாகப் பொழியும் இன்னேரம் வரை உங்களது பதிவுகளை இயன்ற அளவில் வாசித்தும் வருகிறேன். அவ்வப்போது எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கடைசிக் குறிப்பு    
June 25, 2008, 1:21 pm | தலைப்புப் பக்கம்

“புரபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்” என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். “ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பேஷண்ட் பக்கத்து அறையில் இருக்கார். நீங்க அவசியம் சந்திக்கணும்” என்று பக்கத்து அறைக்குப் புரபசர் நரேந்திரனை அழைத்துச் சென்றார்.கோவையின் மிகப் பெரிய தனியார் மருத்துவ மனை அது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எரிச்சலூட்டும் கலை    
June 24, 2008, 4:42 pm | தலைப்புப் பக்கம்

எரகாம்பட்டிச் சித்தப்பான்னு எனக்கு ஒரு சொந்தக்காரார். அவரோட ஊரு எரகாம்பட்டி. அதனால அந்தப் பேரு. என்ர அம்மாளோட தங்கச்சி புருசன். நெறையச் சித்தப்பாங்க இருந்ததாலே அடையாளத்துக்கு அவர எரகாம்பட்டிச் சித்தப்பான்னு கூப்புடுவோம். என்ன இருந்தாலும் சித்தப்பா இல்லியா? பேரச் சொல்லிக் கூப்பிட முடியாது பாருங்க! அதனாலதான் அப்பிடி!அவரு இல்லாத நேரத்திலே எரகான் அப்பிடின்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அசைவம் சாப்பிடும் தாவரம் -நெபந்தஸ்    
May 28, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

ரேஞ்சர் மாமா வார இறுதியில் கோயமுத்தூருக்கு வந்து விட்டால் அவர் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சுட்டிகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான்! “ரேஞ்சர் அங்கிள்! ஃபாரஸ்ட் பத்தி ஏதாவது சொல்லுங்க அங்கிள்!” என்று நச்சரித்து விடுவார்கள். அவரும் சளைக்காமல் சுவையாகப் பல செய்திகளைச் சொல்லுவார். ரேஞ்சர் மாமா மொட்டை மாடியில் ஹாயாக நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

ஸ்நேகா பற்றிய இரண்டு கூடுதல் தகவல்கள்    
May 20, 2008, 5:06 am | தலைப்புப் பக்கம்

தகவல் நம்பர் 11999லிருந்து 2001 வருசத்துக்குள்ளாற எதோ ஒரு நாள்.அப்ப இந்த ஸ்நேகாஅம்மிணி தமிள்ல இவ்வளவு பிரபலம் இல்லே. ஊட்டிப் பக்கம் ஒரு ஷூட்டிங்குக்காக என்னோட ஏரியாவுக்கு வந்திருந்தாங்க. நீலக் கலர் பொடவை கட்டிட்டு இருந்தாங்க. கூலிங் கிளாஸ் போட்ட ஒயரமான தெலுங்கு ஹீரோ ஒத்தன் கூட டேன்ஸ் சீன்! “நீ கோஸம் நா கோஸம்” அப்படின்ற வரியவே 12 தடவை படமாக்கினாங்க. அம்பது அறுவது பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

“சொல்லிப் பார்” – டாக்டர் மு.வ. அவர்களின் எளிய ஆலோசனை    
May 17, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

தமிழய்யா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க.முத்துச்சாமி அவர்களோட கட்டுரை இது.அச்சு மற்றும் இணயம் இரண்டிலும் வெளியாகும் தமிழ் ஆக்கங்களை நோக்கும்போது மிக வேதனையாயிருக்கிறது. ஆங்கிலம் பிழையாய்ப் பேசிடும் போது எழும் கூச்சம் தமிழைப் பிழையாய் எழுதுங்காலை ஏற்படாதது வியப்பாயுமிருக்கிறது.வல்லின இடையின பேதங்களைக் காட்டிலும், printer’s devil எனப்படும் அச்சுப் பிழைகளைக் காட்டிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மருதமலை அறுபடை வீடுகளுள் ஒன்றா?    
May 15, 2008, 4:17 am | தலைப்புப் பக்கம்

என்ர ரெண்டாவது பையன் கிரிதர் என்ர கட்டாயத்தின் பேரிலே மாணவ நிருபர் பரிச்சை எளுதினான். அந்தப் பரிச்சையிலே "மருதமலை அறுபடை வீடுகளுள் ஒன்றா?" ங்கிற கேள்விக்கு "ஆமாம்"னு பதில் சொல்லித் தேர்வு ரிசல்ட் ஊத்திகிருச்சுங்கிறதை ஏற்கனவே லேசா சொல்லியிருக்கேன்."ஏஞ்சாமி அப்பிடிச் சொல்லிப்போட்டே"ன்னு கிரிதரைக் கேட்டேன். "மருதமலை அறுபடை வூட்டிலே ஒண்ணுன்னு சொன்னாத்தானே செலக்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: