மாற்று! » பதிவர்கள்

ரவிபிரகாஷ்

சந்தித்தேன் பாட்டுத் தலைவனை!    
April 30, 2008, 5:36 pm | தலைப்புப் பக்கம்

டி.எம்.எஸ்.! தமிழக மக்களைத் தனது கம்பீரக் குரலால் நாலு தலைமுறைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்த ஏழிசை வேந்தன். தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு, தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன். பாடல் வரிகளில் உணர்ச்சியைக் குழைத்து, உயிரூட்டிய இசை பிரம்மா. தமிழ் மக்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்கள், சிவாஜி ரசிகர்கள் என இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில், இரு தரப்பினரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இன்னிசை சகாப்தம் டி.எம்.எஸ்.!    
April 30, 2008, 5:22 pm | தலைப்புப் பக்கம்

அரசியல்வாதிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் என்றால், எனக்கு அலர்ஜி! பத்திரிகைத் துறைக்கு நான் வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், பத்திரிகை தொடர்பாகக் கூட அவர்களைச் சந்திப்பதை நான் தவிர்த்தே வந்திருக்கிறேன்.விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்டு விழாவில் நடிகர்திலகம் சிவாஜிகணேசனைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஒரு நிமிடக் கதைகள் (மூன்றாம் பத்து)    
April 6, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

சிக்கனம்ரமேஷின் மனைவி சுதா, மாதாமாதம் வீட்டுச் செலவுக்காக அவன் தரும் சம்பளப் பணத்தில் மிச்சம் பிடித்து, ரெண்டாயிரம் ரூபாய் வீதம் சேமித்து வருகிறாள். ரமேஷின் சம்பளம்தான் அண்ணன் ராஜேஷுக்கும்! ஆனால், அவன் மனைவி மாதம் நூறு, இருநூறு சேமித்தால் அதிகம். இதில் அவனுக்கு ரொம்பவே வருத்தம்தான். அன்றைக்கு ரமேஷ், ராஜேஷ் வீட்டுக்கு வந்திருந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

டயரி எழுதலையோ, டயரி!    
April 3, 2008, 6:14 pm | தலைப்புப் பக்கம்

பிளாக் எழுதுவது, கிட்டத்தட்ட டயரி எழுதுவது போன்றதுதான். என்ன ஒன்று... இது எல்லோரையும் படிக்க அனுமதிக்கும் டயரி!தவிர, தினம் தினம் எழுதவேண்டாம்; தினம் தினம் நடப்பவற்றையெல்லாம் பதியவேண்டாம். மனசுக்குத் தோன்றுகிறபோது, தோன்றுகிற விஷயத்தை எழுதி வைக்கலாம். இதனாலெல்லாம்தான் டயரி எழுதுவதை விட, பிளாக் எழுதுவது எனக்குச் சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.நான் என் பள்ளிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நன்றி... நன்றி... நன்றி..!    
April 3, 2008, 4:50 pm | தலைப்புப் பக்கம்

பிளாக் எழுதத் தொடங்கியது முதலே, எனது ஜிமெயில் இன்பாக்ஸில் தினசரி இரண்டு மூன்று புதியவர்களின் இ-மெயில்களாவது வந்து விழுகின்றன. புதிய புதிய முகம் தெரியாத நண்பர்கள் தினம் தினம் கிடைப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷம் தருவதாக இருக்கிறது. என் பிளாக் குறித்து எனது ஜிமெயிலுக்கு வந்த ஒரு சிலரின் கடிதங்களை இங்கே கொடுத்துள்ளேன். தவிர, என் பிளாகிலேயே காமென்ட்ஸ் பகுதியில் சிலர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஒரு நிமிடக் கதைகள் (இரண்டாம் பத்து)    
March 30, 2008, 7:26 pm | தலைப்புப் பக்கம்

1. கடவுளைத் தொலைத்தவன்!சோனா, பப்லு ரெண்டு குழந்தைகளும் குறும்பென்றால் குறும்பு... அத்தனைக் குறும்பு! ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டார்கள். என்னமாவது சேட்டை செய்து, அப்பா அம்மாவுக்கு செலவும் வேலையும் வைத்துக்கொண்டே இருப்பார்கள்.டி.வி. ரிமோட்டை எடுத்து நாலாவது ஃப்ளோரிலிருந்து கீழே போடுவார்கள். டி.வி. மேலிருக்கும் அழகான கதகளி பொம்மையைப் போட்டு உடைப்பார்கள். செல்போனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ரவிபிரகாஷா, பாவிபிரகாசமா?    
March 30, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

மிகச் சமீபத்தில் என் நண்பர் ஒருவர், ஒரு ஜெராக்ஸ் பிரதியை என்னிடம் கொடுத்து, "இதைப் படிச்சுப் பாருங்க, ரவி!" என்றார்.வாங்கிப் பார்த்தேன். அது ஒரு சிறுகதை. எப்போதோ தினமணிகதிரில் வெளியாகி, எப்போதோ வந்த புத்தகத் தொகுப்பு ஒன்றில் இடம்பெற்றிருந்த கதை. இப்போதுதான் யதேச்சையாக நண்பர் கண்ணில் பட, உடனே என் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.16 ஆண்டுகளுக்கு முன் சாவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பச்சைப் புல்லில்... - கண்ணன் மகேஷ்    
March 30, 2008, 7:12 pm | தலைப்புப் பக்கம்

"சார், இதுதானே கோவி பத்திரிகை ஆபீஸ்? முன்புறம் போர்டு எதையும் காணோம்?""இதேதான். மெயின் கெட்ல நுழையாதீங்க. அது கோவிந்தன் சார் வீடு. சைடுல சின்ன கேட். கடைசீல கார் ஷெட்..."சின்ன கேட்டில் நுழைந்து கோவி பத்திரிகை அலுவலகத்தை அணுகுகையில் என் மனதில் சந்தோஷ அலை.இந்தப் பத்திரிகையை ஒவ்வொரு புதன் இரவிலும் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புகையில் பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் புக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

கற்பனைக் கேள்வி பதில்!    
March 29, 2008, 3:03 pm | தலைப்புப் பக்கம்

வேலை தேடிச் சென்னைக்கு வந்து, தெருத் தெருவாக அலைந்துகொண்டு இருந்த ஒரு நாளில், திடுமென மண்ணடி போஸ்ட் ஆபீஸுக்குள் புகுந்து, ஒரு இன்லாண்டு லெட்டர் வாங்கி, அங்கேயே அமர்ந்து, கல்கி பத்திரிகைக்கு எழுதிப் போட்ட நகைச்சுவைக் கட்டுரை இது. எழுதிப் போட்ட இருபதே நாளில் பிரசுரித்து, கல்கி பிரதி ஒன்றையும் அனுப்பி வைத்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது கல்கி வார இதழ். என் முதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை அனுபவம்

வேலை வேணும், வேலை!    
March 29, 2008, 2:10 pm | தலைப்புப் பக்கம்

கல்கியில் இரண்டு கதைகளும், விகடனில் ஒரு கதையுமாக எழுதிப் பிரசுரமான கையோடு, வேலை தேடி நான் சென்னைக்கு வந்திருந்த சமயம் அது. 'வேலை தேடி' என்றதும், என்னவோ பெரிய படிப்பு படித்துவிட்டு மேனேஜர் உத்தியோகம் தேடி வந்ததாகக் கற்பனை செய்துகொள்ளாதீர்கள். எஸ்.எஸ்.எல்.சி-யில், அதாவது அந்தக் காலத்துப் பதினொன்றாம் வகுப்பில் ஃபெயிலானவன் என்கிற மானக்கேட்டுக்கு ஆளாகாமல், தர்ம பாஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஆழ்வாரும் அல்லாவும்! - சுஜாதா    
March 9, 2008, 6:37 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதாவைப் பற்றி நினைக்க நினைக்க, அவர் இன்று நம்மிடையே இல்லையே என்ற குறை மனசை விண்டுபோகச் செய்கிறது. உயிர்மை பதிப்பகத்திலிருந்து சுஜாதாவின் மொத்த புத்தகங்களையும் விகடனுக்காகத் தருவித்தேன். எல்லா தளங்களிலும் தன் எழுத்தின் ஒளியைப் பிரகாசிக்கச் செய்தவர் சுஜாதா என்பது ஏற்கெனவே புத்திக்குத் தெரிந்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக அவரது புத்தகங்களைப் பார்க்கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

ஒரு நிமிடக் கதைகள் (முதல் பத்து)    
March 4, 2008, 7:21 pm | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு கோணம்! எனக்கு ஒரு கஷ்டம் என்றால், ஓடி வந்து உதவுவான் என் அருமை நண்பன் தனசேகர். என் மீது அத்தனை அன்பு அவனுக்கு! சென்ற வாரம், என் மகனுக்கு காலேஜ் ஃபீஸ் 15,000 ரூபாய் கட்டவேண்டியிருந்தது. வழக்கம்போல் தனசேகர்தான் உதவினான். பிறகுதான் தெரிந்தது... நான் கேட்ட சமயத்தில் அவன் கையிலும் பணம் இருந்திருக்கவில்லை. மனைவியின் நகையை வந்த விலைக்கு விற்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

சுஜாதாவும் நானும் (கட்டுரை)    
March 3, 2008, 2:04 am | தலைப்புப் பக்கம்

சுஜாதாஎன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசையில் சுஜாதா பற்றியும் எழுதுவதாக இருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு சந்தோஷமான ஒன்றாக அமையாமல், திடுதிப்பென ஒரு துக்ககரமான சம்பவத்தில் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.கடந்த 27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் அனுபவம்

சுஜாதா (கட்டுரை)    
March 3, 2008, 1:56 am | தலைப்புப் பக்கம்

''விகடன் பிரசுரத்திலிருந்து வெளியாகும் 'விகடன் புக் கிளப்' புத்தகத்துக்காக சுஜாதா பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுங்கள்'' என்று 27.2.2008 புதன்கிழமை இரவு போன் பண்ணிக் கேட்டார் பொன்ஸீ. சுஜாதா மறைந்த தினம் அது. மறுநாள் வியாழனன்று காலையில் கம்போஸ் செய்யத் தொடங்கி, அடுத்தடுத்து வந்த விசாரிப்பு போன்கால்களால் எட்டரை மணிக்கு எழுதி முடித்த கட்டுரை கீழே!சுஜாதா பேரைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஜோக்ஸ்    
February 20, 2008, 3:12 pm | தலைப்புப் பக்கம்

ஒருவர்: "நான் வக்கீலா இருக்கேன்!"மற்றவர்: "உண்மையாவா?"ஒருவர்: "அதெப்படி இருக்கமுடியும்?"- ஷைலுஅப்பா: "சூரியனும் ஒரு நட்சத்திரம்தான், தெரியுமா!"சிறுமி: "பின்னே எப்படிப்பா காலைல அது மறுபடி சூரியனாயிடுது?"- ரஜ்னீஷ்ஆசிரியர்: "உங்க அப்பா என்ன வேலை செய்யறார்?"மாணவன்: "எங்க அம்மா என்னென்ன வேலை சொல்றாங்களோ, அத்தனையும்!"- ஷைலுடாக்டர்: "தினமும் காலைல ஜாகிங்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

கரிநாக்கு (என் முதல் சிறுகதை)    
February 20, 2008, 2:51 pm | தலைப்புப் பக்கம்

"சங்கர்... ரோட்டுல நீ ரொம்ப வேகமாப் போறே! இவ்வளவு வேகம் கூடாது. என்னிக்கோ தெரியலே, நீ லாரியிலோ பஸ்ஸிலோ மாட்டிண்டு சாகப்போறே!"'அப்பா அந்தக் காலத்து மனுஷர் இல்லியா! பாவம்... வீணாகப் பயந்து நடுங்கறார். இன்றைய இளம் தலைமுறையினரின் தனி 'கெபாசிட்டி' பற்றி அப்பாவுக்கு என்ன தெரியும்?'சங்கரின் கால்கள் சைக்கிள் பெடலை மிதித்துக்கொண்டு இருக்க... சக்கரங்கள் 'சரசர'வெனச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை