மாற்று! » பதிவர்கள்

முரளிகண்ணன்

2000 - 2009 பத்தாண்டுகளில் அறிமுக நடிகர்கள்.    
January 19, 2010, 1:18 pm | தலைப்புப் பக்கம்

70களில் அறிமுகமான (நாயகர்களாக) கமல்ஹாசனும்,ரஜினிகாந்தும் 80,90,1 என 3 தசாப்தங்களைக் கடந்தும் இன்னும் ஸ்டெடியாக இருக்கிறார்கள். 70களின் இறுதியில் வந்த விஜயகாந்தும் இந்த மூன்று தசாப்தங்களில் நின்று காண்பித்து விட்டார். பாக்யராஜ் 80களின் இறுதிவரை நிலைத்து நின்று தொண்ணூறுகளில் ஆரம்பத்தில் பீல்ட் அவுட் ஆனார்.80களில் அறிமுகமாகி வெற்றிக்கொடி நாட்டிய ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என்னமோ போடா மாதவா - ஜனகராஜ் - பகுதி 1    
June 29, 2009, 6:49 am | தலைப்புப் பக்கம்

கதாநாயக கனவுகளுடன் கோடம்பாக்கத்தில் அடியெடுத்து வைத்த ஆயிரக்கணக்கானோரில் ஜனகராஜும் ஒருவர். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் ஒரு சிறுவேடத்தில் அறிமுகமாகி பின்னர் பாலைவனச்சோலை திரைப்படத்தில் ஐந்து கதை நாயகர்களில் ஒருவராக வெளிச்சத்துக்கு வந்த ஜனகராஜ் ஒரு பன்முகக்கலைஞன். தற்கால மிமிக்ரி ஆர்டிஸ்டுகள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பதியவைத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இயக்குநர்களில் ஒரு துருவ நட்சத்திரம் - கே சுப்ரமணியம் பகுதி -1    
May 25, 2009, 10:47 am | தலைப்புப் பக்கம்

தமிழ் என்னும் மொழியை திரைப்படம் பேசத் தொடங்கி 78 ஆண்டுகள் ஆகிவிட்டன. 31 ஆம் ஆண்டு ஒரு படம் மட்டுமே வெளியானது. பின் வருடத்திற்க்கு வருடம் எண்ணிக்கையில் கூடிக்கொண்டே சென்று 40 களில் வருடத்திற்கு 30 படம் என்ற நிலையை அடைந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய கால கட்டத்தில் பிலிம் ரோல்தட்டுப்பாடு காரணமாக 11000 அடியில் முழுப் படத்தையும் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்சினிமாவில் அம்மாக்களின் கட்டுடைப்பு    
March 28, 2009, 8:53 am | தலைப்புப் பக்கம்

மனோகரா காலம் தொட்டு சமீப காலம் வரை தமிழ்சினிமாவில் மகா புனிதமாக கருதப்பட்டு வந்த கதாபாத்திரம் அம்மா கதாபாத்திரம்தான். அதுவும் மக்கள் அபிமானம் பெற்ற கதாநாயகனின் அம்மா என்றால் அது தெய்வத்திற்க்குச் சமமாகவே படைக்கப்பட்டிருக்கும். எம் ஜி யார் தன் படங்களில் மட்டுமில்லாமல் தலைப்பிலும் தாயை கைவிட்டதில்லை. தாய் சொல்லை தட்டாதே, தாய்க்கு தலை வணங்கு, தாயின் மடியில் என அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா – பகுதி -3    
March 4, 2009, 9:38 am | தலைப்புப் பக்கம்

ஐமேக்ஸ்க்கு முன்னாடியாக கருதப்படுவது சினிராமா என்னும் தொழில்நுட்பம். இது சினிமாஸ்கோப் வருவதற்க்கு முன் அகலத்திரையில் படம் காண்பிக்க உபயோகப் படுத்தப்படுத்தப் பட்டது. இந்த முறைப்படி ஒரு குறிப்பிட்ட காட்சியை மூன்று 35 எம் எம் பிலிம் உள்ள கேமிராக்கள் கொண்டு படம் எடுத்து பின் மூன்று புரஜெக்டர்களின் மூலம் அதை திரையில் காட்டுவது.எடுத்துக்காட்டுக்கு வல்லவன் படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் திரைப்படம்

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா? பகுதி – 2    
March 2, 2009, 4:42 pm | தலைப்புப் பக்கம்

முதல் பகுதியில் ஹாலிவுட் திரைத் துறையினர் தொலைக்காட்சியின் தாக்கத்தினால் அகலத் திரையை நோக்கிச் சென்றனர் எனப் பார்த்தோம். 1950களின் நடுவில் இது நிகழ்ந்தது. இந்த நிலை நம் தமிழ்சினிமாவுக்கு 90களில் தான் ஏற்பட்டது.இதற்க்கு காரணங்கள்கொடைக்கானலில் தொலைக்காட்சி சிக்னலை ஒளிபரப்பும் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதும் தான் தமிழகத்தில் பரவலாக தொலக்காட்சிப் பெட்டிகளை மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா?    
February 28, 2009, 10:16 am | தலைப்புப் பக்கம்

தற்போது இந்தியாவில் மும்பை,ஹைதராபாத்,அஹமதாபாத், கல்கத்தா ஆகிய இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்கங்கள் உள்ளன. ஐமேக்ஸ் (இமேஜ் மாக்ஸிமம்) திரையரங்கில் உபயோகப் படுத்தப்படும் திரையானது குறைந்தபட்சம் 72 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இதைவிட அதிகமான அளவிலேயே தற்போது ஐமேக்ஸ் திரை செய்யப்படுகிறது. 2010க்குள் சென்னையிலும், பெங்களூருவிலும் தலா ஒரு ஐமேக்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »

காம்போசிட் - 2    
January 22, 2009, 5:10 pm | தலைப்புப் பக்கம்

பாலிமர் அடிப்படைக்கட்டு(Matrix) காம்போசிட் தற்போது உலகில் அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது இந்தவகை காம்போசிட்களே. வாகனங்கள், விளையாட்டு உபகரணங்கள், மீன் பிடி தூண்டில்கள், தலை கவசம் (ஹெல்மெட்) என இவை இல்லாத இடமே இப்போது இல்லை எனலாம். வெயிலுக்கு மறைப்பாக போடப்படும் கூரைகளுக்கு இப்போது இவ்வகை காம்போசிட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறன. பாலிமரில் இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

காம்போசிட்    
January 22, 2009, 7:59 am | தலைப்புப் பக்கம்

காம்போசிட் என்ற வார்த்தையை இப்போது நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். காம்போசிட் என்பது என்ன? இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட வேறு வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இணைந்து உருவாக்கும் முற்றிலும் புதிய பண்பு கொண்ட பொருளே காம்போசிட் எனப்படும். எடுத்துக் காட்டாக, நமது வீடுகளில் உள்ள கான்கிரீட்டை எடுத்துக் கொள்வோம். சிமெண்ட்,மணல்,தண்ணீர் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நெத்தியடி    
January 20, 2009, 6:45 am | தலைப்புப் பக்கம்

தகவல் புரட்சியால் அதிகமாக பாதிக்கப்பட்ட பத்து பேர்களை கணக்கெடுத்தால் எனக்கு அதில் ஒரு இடம் நிச்சயம் இருக்கும். எனக்கு முந்தைய செட்டில் பி காம் முடித்து கம்பெனியில் சின்ன வேலை பார்த்தாலும் பெண் கிடைத்தது. இப்பல்லாம் தரகர் கூட ஜாதகத்தை வாங்க மாட்டேங்கிறார். நான் ஒன்னும் டாடா பேமிலியிலயோ இல்லை தமன்னா பேமிலியிலயோ பொண்ணு வேணுமின்னு கேட்கலை. போனா வந்தா கறி சோறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகள் - குமுதம் சர்வே    
January 14, 2009, 4:14 am | தலைப்புப் பக்கம்

இந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர்.இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதி வந்தது. தற்போது குமுதத்திலும் இது பற்றி செய்தி வருவது மிக மகிழ்ச்சிகரமானது. விகடன் சென்று சேராத சில இடங்களில் குமுதம் செல்லும். எனவே வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ கூடுதல் வாய்ப்பு.குமுதம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தமிழ் சினிமாவில் தயாரிப்பு நிர்வாகிகள்    
January 6, 2009, 4:07 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் கடினமான வேலைகளுள் ஒன்று தயாரிப்பு நிர்வாகி வேலை. அச்சாணியாக இருந்து தேரை திரையரங்கில் நிலை நிறுத்தும் வரை அவரது பணி ஓய்வில்லாமல் இருக்கும். ஒரு நல்ல தயாரிப்பு நிர்வாகியால் பட செலவை 20% வரை குறைக்கலாம் என்பதில் இருந்தே அவர்களின் முக்கியதுவத்தை தெரிந்து கொள்ளலாம்.ஒரு தயாரிப்பு நிர்வாகியின் பணி என்ன?ஒரே ஒரு நிமிடம் வரும் காட்சியை எடுத்துக் கொள்வோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

1985 ல் தமிழ்சினிமா – ஒரு பார்வை    
January 4, 2009, 7:35 am | தலைப்புப் பக்கம்

1985 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவுக்கு பல புதுவரவுகளை தந்தது. மணிரத்னம் பகல்நிலவு படம் மூலம் தமிழில் தன் முதல் படத்தை இயக்கினார். கல்யாண அகதிகள் மூலம் நாசர் என்னும் அற்புத நடிகர் அறிமுகமானார். கன்னிராசி படத்தின் மூலம் இயக்குனராக பாண்டியராஜன், பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நதியா, தென்றலே என்னைத் தொடு மூலம் ஜெயஸ்ரீ, ஆண்பாவம் மூலம் சீதா என 1985 பல முகங்களை தமிழுக்கு தந்தது. சாவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஐ ஐ டி யில் பி எச் டி படிப்பு – வாய்ப்புகள்    
November 30, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

ஐ ஐ டி க்களில் கீழ்கண்ட துறைகளில் பி எச் டி படிப்பிற்க்கான வாய்ப்புகள் உள்ளன1 அனைத்து பொறியியல் துறைகள்2 உயிரி தொழில்நுட்பம்3 இயற்பியல்,வேதியியல்,கணிதம்4 மேலாண்மைகல்வித்தகுதி1 பொறியியல் துறை பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஓரளவு மதிப்பான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். (70 சதவீதத்துக்கு மேல்). இதில் வெட்டு மதிப்பெண் வரும் விண்ணப்பங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

நாகேஷின் வித்தியாச வேடங்கள்    
November 29, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்திரையுலகம் கண்ட மாபெரும் கலைஞர்களில் முக்கிய மானவர் நாகேஷ். நகைச்சுவை நடிகராகவே பெரும் பாண்மையானோர் மனத்தில் இடம் பெற்றிருக்கும் நாகேஷ் ஆரம்ப காலத்தில் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்தவர். பதினாறு வயதினிலே படத்திற்க்கு கூட பாரதிராஜா சப்பாணி வேடத்திற்க்கு நாகேஷைத்தான் மனதில் வைத்திருந்தார். தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரிலேயே கமலிடம் கதை சொல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்சினிமாவின் முக்கிய காதல் படங்கள் பகுதி - 3    
November 29, 2008, 5:54 am | தலைப்புப் பக்கம்

அன்புடன்அருண்விஜய், ரம்பா, வினுசக்கரவர்த்தி,வையாபுரி நடிப்பில் வெளிவந்த படம். கதையின் நாயகியை கடைசிவரை காட்டாமல்,பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை திரையில் கொண்டுவந்த படம் இது. இதற்க்கு முன்னால் தாமரைநெஞ்சம் (நாகேஷ்), சொல்லாமலே (லிவிங்ஸ்டன்), அலைபாயுதே (விவேக்) என ஆண்கள் தாழ்வுமனப்பாண்மையை சித்தரித்த பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் பெண்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

1979 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்    
November 22, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்

கடந்த 75 ஆண்டுகளில் சிறந்த 10 தமிழ்படங்களை பட்டியலிடுமாறு எந்த பிரபலங்களைக் கேட்டாலும் இரண்டு படஙகள் மட்டும் தவறாமல் அந்த பட்டியலில் இடம் பெறும். அவள் அப்படித்தான் மற்றும் உதிரிப் பூக்கள். இந்த இரண்டுமே 79 ஆம் ஆண்டு வெளிவந்தவை. இவை தவிர இன்னும் ஏராளமான வித்தியாச கதைக் கருவை கொண்ட படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன.அவள் அப்படித்தான்பெண் நதியைப் போல. ஆணாதிக்கம் எனும் பெரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் ஆவது சுலபமா – பகுதி 2    
November 13, 2008, 12:23 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்சினிமாவில் நடைமுறையில் இருக்கும் வினியோக முறைகள்.நேரடி வெளியீடுதயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவது. இதற்க்கு தயாரிப்பாளரிடம் பெரிய நெட்வொர்க் இருக்க வேண்டும். தமிழக திரையரங்குகள், அவற்றின் கேட்ச்மெண்ட் ஏரியா [அந்த குறிப்பிட்ட திரையரங்குக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் – எங்கெல்லாம் இருந்து? எவ்வளவு பேர்? அவ்ர்களின் பொருளாதார பலம்?] போன்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் திரைப்படம்

ரஜினியும் ரீமேக் படங்களும்    
October 18, 2008, 3:10 pm | தலைப்புப் பக்கம்

ரஜினி நடித்த பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் அவருடைய இமேஜையும் உயர்த்தின.தில்லுமுல்லு (கோல்மால்)பில்லா (டான்)குப்பத்து ராஜா (தோ யார்)நான் வாழ வைப்பேன் (மஜ்போர்)தீ (தீவார்)விடுதலை (குர்பானி)அடுத்தவாரிசு ( ராஜாராணி)நான் மகான் அல்ல (விஸ்வனாத்)நான் சிகப்பு மனிதன் (ஆஜ் கி ஆவாஸ்)நான் அடிமை இல்லை (பியார் ஷுக்தா நஹின்)தர்மத்தின் தலைவன் (கஷ்மே வாடெ)குரு சிஷ்யன் (...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்சினிமாவில் குழந்தை தொழிலாளர் சித்தரிப்பு    
October 12, 2008, 10:07 am | தலைப்புப் பக்கம்

குழந்தை தொழிலாளர் பிரச்சினையை கதைகருவாக கொண்ட படங்கள் தமிழ்சினிமாவில் மிக குறைவு. அப்படங்களையும், இப்பிரச்சினையை அடிநாதமாக கொண்டு வெளிவந்த சில படங்களையும் பார்ப்போம்.குட்டிஜானகி விஸ்வனாதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம், சிறு குழந்தைகளை வீட்டு வேளைக்கு வைப்பதை பற்றி பேசியது. கிராமத்தில் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வறுமையில் வாடும் நாசர் தன் மகளை படிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் திரைப்படம்

தமிழ்சினிமாவில் இயக்குநர்களின் பொற்காலம் எவ்வளவு?    
June 23, 2008, 6:30 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டு இயக்குநர்கள் பலரின் சிறந்த படங்கள் எல்லாமே அவர்கள் துறைக்கு வந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ( கல்யான சாப்பாடு இயக்குநர்களான எஸ் பி முத்துராமன்,பி வாசு,கே எஸ் ரவிக்குமார், ஷங்கர், ஹரி போன்றவர்கள் பட்டியலில் இல்லை) உதாரணமாகஸ்ரீதர் – காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம்பாலசந்தர் – எதிர் நீச்சல், பாமா விஜயம், அவள் ஒரு தொடர்கதை (எல்லை மெகா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ் சினிமாவில் சிறு நகரங்களின் சித்தரிப்பு    
June 7, 2008, 7:17 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவின் கதைக்களம் பொதுவாக இரண்டு எல்லைகளில் அடங்கிவிடும். கிராமபுற அல்லது பெருநகர படங்கள். அவர்கள் பாஷையில் சொல்வதானால் சிட்டி சப்ஜெக்ட், வில்லேஜ் சப்ஜெக்ட். இந்த சிட்டி வகையறாவில் வெளிநாடு,ஊட்டி போன்றவை அடங்கும். வில்லேஜ் வகையறாவில் பாரதிராஜா,சேரன்,அமீர்,தங்கர் பச்சான் போன்றோர் எடுக்கும் இயல்புக்கு ஓரளவு ஒட்டிய படங்களும், கே எஸ் ரவிக்குமார், ஹரி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ராமராஜன் திரைப்படங்களின் உளவியல் – சுகுணா திவாகர் கருத்தை முன்வைத்து.    
May 22, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

கமலின் தீவிர ரசிகனான எனக்கு ராமராஜன் படங்களை சுத்தமாகப் பிடிக்காது. அவர் படங்களுக்கு செல்வோரை நக்கல் செய்வது எனக்கு ஒரு பொழுது போக்கு. ஒருமுறை “என்னப் பெத்த ராசா” என்ற படத்துக்கு நண்பன் அழைத்த போது நூறு ரூபாயும்,ஒரு கர்ச்சீப்பும், பஞ்சும் கொடுத்தாலும் வரமாட்டேன் என்று மறுத்திருக்கிறேன். அப்போது அவர் படங்களைப் பற்றிய பொதுவான விமர்சனம்1. ஸ்டில்களில் இணைந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சிலந்தி இன்னொரு கற்றது தமிழ்?    
May 20, 2008, 9:32 am | தலைப்புப் பக்கம்

சமுதாயத்தில் நடப்பதைத்தான் நாங்கள் காட்டுகிறோம் என்று திரைத்துறையினர் அடிக்கடி பேட்டி கொடுப்பார்கள். மசாலா படங்களைத் தவிர்த்தால் தமிழில் மீதம் இருக்கும் சில படங்களைப் பார்த்தால் இந்த எண்ணம் நமக்கும் வரும். எண்பதுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்த நாட்களில் வந்த படங்களில் (வறுமையின் நிறம் சிகப்பு .... ) அப்பிரச்சினை பேசப்பட்டிருக்கும். மேலும் நான் B.A , M.A ஆனால் வேலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விஜயகாந்த்தின் அரசாங்கம் எதிர்பாராத ஆச்சரியம்    
May 11, 2008, 1:17 pm | தலைப்புப் பக்கம்

இந்த வாரம் நண்பர்கள் எல்லாரும் குருவி போகலாம் என்று நினைத்திருந்தோம். இணைய விமர்சனைங்களை பார்த்து அதை தவிர்த்திருந்த நிலையில் நேற்று இரவு வேறுவழியில்லாமல் விஜயகாந்த்தின் அரசாங்கம் பார்க்க சென்றோம். நான் கூட பதிவு போட நல்ல மேட்டர், குருவியை எல்லாரும் கலாய்த்தது போல நாமும் இதை ஒரு வழி பண்ணிவிடுவோம் என்று ஆர்வத்துடன் போனேன். ஆனால் என்ன ஒரு ஆச்சரியம். படம் பார்க்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்