மாற்று! » பதிவர்கள்

முனைவர் மு.இளங்கோவன்

இலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா    
April 19, 2010, 8:31 pm | தலைப்புப் பக்கம்

அந்தனி ஜீவாபுதுச்சேரியில் நாளொரு இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும்.நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா,நினைவுநாள் விழா,பாராட்டுவிழா,புத்தகக் கண்காட்சி,பக்தி விழாக்கள்,சிறப்பு உரையாளர் பேச்சு, அறக்கட்டளைப்பொழிவு,வரவேற்பு விழா,வழியனுப்பு விழா,பாரதி விழா, பாவேந்தர் விழா எனப் பல வடிவில் விழாக்கள் நடக்கும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்!    
March 22, 2010, 2:31 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் விக்சனரி முகப்புதகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது.இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது.தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது.தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும்,தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புதுச்சேரி முதுமக்கள் தாழிகள் கி.மு.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு ...    
February 2, 2010, 8:09 pm | தலைப்புப் பக்கம்

எலும்புத்துண்டுகள் உள்ள தாழிபுதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் வீடு கட்டுவதற்குத் தோண்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் கி.மு. 3 அல்லது 4-ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தொல்பொருள் ஆய்வுத் துறையினர் கூறுகின்றனர்.எனவே தமிழக வரலாற்றின் தொன்மையை அறிவதற்கு இந்தச் சான்றுகள் பேருதவிபுரியும்.சென்னைத் தொல்பொருள் துறையின் துணை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவையா?    
January 30, 2010, 7:13 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்கிற பூதம் மீண்டும் கிளம்பியிருக்கிறது. தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் தேவை என்று அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது(07.01.2010 மாலைமலர்). தமிழ் அறிஞர்கள், மொழியியல் அறிஞர்கள் எல்லாம் விழிப்புற வேண்டிய காலகட்டம் இது. மேடைகளிலும், அச்சிலும் பரவுவதற்கு முன்பே இணையத்தில் இது தொடர்பான விவாதங்கள் வேகமாக உலவி வருகின்றன. இணையம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன்,சட்டதிட்டங்கள்,1952    
January 3, 2010, 1:33 am | தலைப்புப் பக்கம்

மேலட்டைபர்மா திராவிட முன்னேற்றக்கழகம், இரங்கூன், சட்டதிட்டங்கள்(1952) என்ற சிறு நூல் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்தது.திராவிட இயக்கம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட மாணவன் என்ற அடிப்படையில் திராவிட இயக்கம் பற்றிய பல ஆவணங்களை வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் பாதுகாத்து வந்தேன்.அந்த நூலின் படி ஆய்வாளர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் என் பக்கத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு ...    
July 22, 2009, 3:29 pm | தலைப்புப் பக்கம்

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.மாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009இடம்: மொழித்துறை,தென்கிழக்குப்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை...    
June 29, 2009, 4:28 am | தலைப்புப் பக்கம்

அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வலப்பக்கமாக அறிஞர் வ.ஐ.சு.வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள்(பழையத் தோற்றம்)உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியன அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவம் பயனளிக்காமல் இன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னி...    
June 18, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் புன்னியாமீன்இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கல்வி

வலைப்பதிவுலகில் திரட்டிகளின் பங்களிப்பு    
May 24, 2009, 2:39 pm | தலைப்புப் பக்கம்

தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவியை மக்களுக்குச் செய்துவருகிறது. பரந்து கிடக்கும் உலக மக்களை இணைப்பதுடன் அவர்களுக்குப் பயன்படும் தகவல்களையும் உடனுக்குடன் வழங்குவதில் முன்னிற்பது இணையமாகும்.இணையத்தில் ஆங்கிலமொழியில் தகவல்கள் பரிமாறும் நிலை தொடக்கத்தில் இருந்தது.அயல்நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் தங்கள் தாய்மொழியான தமிழில் தகவல்களைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஈழத் தமிழர்களுக்காக வேடப்பர் கோயிலை நோக்கி...    
April 17, 2009, 2:36 am | தலைப்புப் பக்கம்

பேருந்து நிலையத்திலிருந்து கோயிலை நோக்கி படைப்பாளிகள்தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் சார்ந்தவர்கள் ஈழத்தமிழர்களின் சாவுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கும்படி தங்கள் விருப்பத் தெய்வமான விருத்தாசலம் அருகில் உள்ள வேடப்பருக்குச் சீட்டெழுதிக் கட்டித் தங்கள் வேண்டுதலைத் தெரிவித்துள்ளனர். அருள்மிகு வேடப்பர்வேடப்பர் பொல்லாதத் தெய்வம் எனவும் இந்தப் பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

வரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி    
April 11, 2009, 10:16 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் இராசசேகர தங்கமணிதமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)    
April 10, 2009, 7:56 pm | தலைப்புப் பக்கம்

முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992).பின்பகுதியில் பேரா.மா.இரா,பேரா.அரு.மருததுரைபுதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன்(1992-93).அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன்.நேர்காணல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

கயிலைமாமுனிவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் அடிகளார்    
April 8, 2009, 8:13 pm | தலைப்புப் பக்கம்

தவத்திரு கயிலைமாமுனிவர் முத்துக்குமாரசாமித்தம்பிரான் அடிகளார்தமிழகத்துத் திருமடங்களுள் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்குத் தனி இடம் உண்டு. தவத்திரு குமரகுருபர சுவாமிகளின் பெருமுயற்சியால் உருவான காசித் திருமடத்தின் கிளை மடமாகத் திருப்பனந்தாளில் இம்மடம் அமைக்கப் பெற்றாலும் காசியில் இருக்கும் மடத்தை நிருவகிக்கும் அளவிற்கு இம்மடம் இன்று சிறப்புற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ்நூல் காப்பகத் தந்தை பல்லடம் மாணிக்கம்    
April 5, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

பல்லடம் மாணிக்கம்இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கு நடைபெறும் கல்வி நிறுவன வளாகங்களில் பேராசிரியர் மெய்யப்பன் ஐயாவுடன் இணைத்துப் பார்க்கும் அறிஞராகப் பல்லடம் மாணிக்கம் ஐயா அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிந்தார்கள். அதுபோல் நூல்கள் வெளியீடு காணும் இடங்கள்,புத்தகக் கண்காட்சிகள், இலக்கியச் சந்திப்புகளிலும் பல்லடம் மாணிக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம்    
April 4, 2009, 8:03 pm | தலைப்புப் பக்கம்

அறிவுநூல்கள் கொண்ட தமிழ்நூல் காப்பக மாளிகைபல்லடம் மாணிக்கம் அவர்களுடன் மு.இஆய்வேடுகளைச் சுமந்து நிற்கும் நூலகம்நூலகத்தில் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் காட்சிபயன்பாட்டில் நூலகம்அரிய அகராதி ஒன்றைப் பல்லடம் மாணிக்கம் காட்ட பார்வையிடும் நான்நூல்களின் கண்கவர் அணிவகுப்புமு.இ நூலகத்தில்பல்லடம் மாணிக்கம் தம் நூல்களுக்கு இடையே...நூல்களின் அணிவகுப்புவனப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் புத்தகம்

நூல் தொகுப்பாளர் நாமக்கல் ப.இராமசாமியுடன் ஒரு சந்திப்பு    
March 29, 2009, 9:03 pm | தலைப்புப் பக்கம்

நா.ப.இராமசாமிநாமக்கல் என்றால் நமக்கு முட்டைக்கோழியும்,சரக்குந்துகளும்தான் நினைவுக்கு வரும்.அதனை விடுத்துச் சிந்தித்தால் நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்வோரும் உண்டு.அண்மையில் நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.அங்கு நாமக்கல் மாவட்டத்து நூலகர்கள் பயிற்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையத்தளங்கள் குறித்த என் சி...    
March 27, 2009, 6:28 am | தலைப்புப் பக்கம்

கோயமுத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் இளம் முனைவர்,முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாம் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கருத்தரங்கமும் கலந்துரையாடலும் நடைபெறுவது வழக்கம்.அவ்வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(29.03.2009) காலை 10.30 மணிக்குத் தமிழ் இணையத்தளங்களும் வலைப்பூக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நிகழ்ச்சிகள்

உலகு தழுவிய தமிழ்த்தொடர்...    
March 21, 2009, 8:51 pm | தலைப்புப் பக்கம்

அயலகத் தமிழறிஞர்கள் தொடருக்குப் பின்னுரையாய் அமையும் முன்னுரை...தமிழ் ஓசை நாளிதழின் களஞ்சியம் பகுதியில் அயலகத் தமிழறிஞர்கள் பற்றித் தொடர் எழுதும் வாய்ப்பு வழங்கிய தமிழ் ஓசை இதழின் ஆசிரியர் அவர்களுக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி உரியதாகும்.நூல்கள்,உரையாடல், மடல், தொலைபேசி, செல்பேசி, மின்னஞ்சல்,இணையக்குழுக்கள் வழியாகத் தொடருக்கு உதவிய அன்புள்ளங்களுக்கும் என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் கணினி,இணையத்தம...    
March 20, 2009, 11:58 am | தலைப்புப் பக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முகப்புபெரம்பலூரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்ததேசியக்கருத்தரங்கம் இன்று(20.03.2009) காலை 11.00மணிக்குத் தொடங்கியது.முனைவர் நா.சானகிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.கல்லூரி இயக்குநர் முனைவர் ம.நல்லு அவர்கள் தலைமை தாங்கினார்.சென்னை மாநிலக் கல்லூரி இணைப்பேராசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நிகழ்ச்சிகள்

பாவலர் குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)-மலேசியா    
March 17, 2009, 8:34 pm | தலைப்புப் பக்கம்

குறிஞ்சிக்குமரனார்(சா.சி.சுப்பையா)தமிழகத்தில் பலர் மொழிஞாயிறு பாவாணர்தம் தமிழ்ப்பணி அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.மலசியாவில் திராவிடர் கழகம்.தமிழ்நெறிக்கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறப் பாடுபாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

தமிழறிஞர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்    
March 10, 2009, 8:49 am | தலைப்புப் பக்கம்

சட்டப்பேரவைத் தலைவராகப் புலவர் கா.கோவிந்தன் அவர்கள்தமிழிலக்கிய உலகில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கித் தமிழகச் சட்டப்பேரவையில் தலைவராக அமர்ந்து கடமையாற்றி அனைவராலும் மதிக்கத் தகுந்தவராக விளங்கியவர் புலவர் கா.கோவிந்தன் அவர்கள் ஆவார்.வடார்க்காடு மாவட்டம்(இன்றைய திருவண்ணாமலை மாவடம்) செய்யாறு பகுதியில் வாழ்ந்த திரு காங்கன் முதலியார் சுந்தரம் அம்மாளுக்கு மகனாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

திருக்குறள் உரையாசிரியர்கள்    
March 9, 2009, 8:30 pm | தலைப்புப் பக்கம்

1. மணக்குடவர் (1917-25)2. பரிப்பெருமாள் (1948)3. பரிதியார் (1938-48)4. காலிங்கர் (1948)5. பரிமேலழகர் (1861)6. திருத்தணிகை சரவணப்பெருமாள் (1838)7. இராமாநுசக் கவிராயர் (1840)8. களத்தூர் வேதகிரியார் (1850)9. இட்டா குப்புசாமி (1873)10. சுகாத்தியர் (1889)11. சுந்தரம் (1893)12. கோ. வடிவேலு (1904)13. அயோத்திதாசன் (1914)14. கா. சுப்பிரமணியனார் (1928)15. க.சு.வி. இலட்சுமி (1929)16. ஆ. அரங்கநாதனார் (1932)17. வ.உ. சிதம்பரனார் (அறத்துப்பால்) (1935)18. திரு.வி. கலியாணசுந்தரம் (1941)19....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

தமிழ்நெறிப் பாவலர் அ.பு.திருமாலனார்(மலேசியா)    
March 7, 2009, 6:31 pm | தலைப்புப் பக்கம்

அ.பு.திருமாலனார்சிங்கப்பூரில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் கலந்துகொண்டு பழையன புகுதலும்... என்ற தலைப்பில் கட்டுரை படித்தேன்(2001,செப்டம்பர்).உலகின் பல நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொண்ட உண்மையான பன்னாட்டுக் கருத்தரங்காக அது நடந்தது.மலேசியாவிலிருந்து அம்மாநாட்டில் கலந்துகொண்ட ஓர் அன்பர் என் பேச்சைக்கேட்டு, கைகுலுக்கி என்னை மலேசியாவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை(இலங்கை)    
February 28, 2009, 11:06 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளைஈழப்போராட்டம் பல்லாயிரம் மக்கள் உயிரைக் காவு வாங்கியதுடன் அறிவுக்களஞ்சியமான யாழ்ப்பாண நூலகம் உள்ளிட்ட நூலகங்களையும் இல்லாமல் செய்துவிட்டது.நிறுவன நூலகங்கள் மட்டும் இல்லாமல் தனியார் நூலகங்கள் பலவும் சிதைந்து போயின.மிகப்பெரிய நூல் வளத்தையும், செல்வவளத்தையும்,நிலபுலங்களையும் இழந்து ஏதிலிகளாக அயல் நாட்டுக்குச் சென்றவர்களுள் அறிஞர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

பேராசிரியர் நா.வானமாமலை எழுத்துரைகள் இருநாள் கருத்தரங்கு    
February 24, 2009, 7:41 pm | தலைப்புப் பக்கம்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும்,புதுநூற்றாண்டுப் புத்தக நிறுவனமும்(நியு செஞ்சுரி)2009,பிப்ரவரி 24,25 நாள்களில் தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வின் முன்னோடியாக விளங்கும் பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் எழுத்துரைகள் குறித்த இருநாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்து நடத்துகின்றன.தொடக்க விழாவில் தமிழியற்புல முதன்மையர் பேராசிரியர் அ.அறிவுநம்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

நெஞ்சக நோய்சுமந்தும் தமிழ்ப்பணியாற்றும் புலவர் பா.கண்ணையனார்    
February 22, 2009, 7:17 pm | தலைப்புப் பக்கம்

புலவர் கண்ணையன் அவர்கள்(படம்:மு.இ)பத்தாண்டுகளுக்கு முன்னர்(1997- 98) யான் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணிசெய்துகொண்டிருந்த பொழுது தினமணி அலுவலகம் சென்றுவரும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி அமையும் திரு.சுகதேவ் அவர்கள் தினமணிக் கதிரின் ஆசிரியராக இருந்து எம்போலும் இளைஞர்களுக்கு அப்பொழுது எழுதுவதற்கு நல்ல வாய்ப்பு வழங்கி வந்தார்கள். ஆசிரியர் பொறுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்(இலங்கை)    
February 21, 2009, 7:27 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் நா.சுப்பிரமணியன்தமிழ் இலக்கியங்களைப் பொருத்தவரை சமய இலக்கியங்களை ஒதுக்கிவிட்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றை முழுமைப்படுத்தி எழுத இயலாது.அந்த அளவு இடைக்காலத் தமிழக வரலாற்றை அறிய சமய நூல்கள் துணைசெய்கின்றன.இச்சமய இலக்கியங்களில் நல்ல பயிற்சிபெற்று, இன்று வாழும் அறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.யாழ்ப்பாணப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

பேராசிரியர் ம.ஆ.நுஃமான்(இலங்கை)    
February 14, 2009, 7:39 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் ம.ஆ.நுஃமான்இலங்கைப் பேராசிரியர்கள் க.கைலாசபதி,கா.சிவத்தம்பி உள்ளிட்ட அறிஞர்களைப்போல் தமிழகத்து அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நன்குஅறிமுகமானவர் பேராசிரியர் ம.ஆ.நுஃமான் அவர்கள் ஆவார்.இலங்கையின்கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில்10.08.1944 இல் பிறந்தவர்.தந்தையார் பெயர் மக்புல் ஆலிம்.அவர் ஒரு மௌலவி,அரபு ஆசிரியர்;தாயார் பெயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

கலிங்கநாட்டுத் தமிழ் ஆய்வாளர் பாலசுப்பிரமணி B+ve    
February 8, 2009, 6:06 pm | தலைப்புப் பக்கம்

பாலசுப்பிரமணிஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள் சிலர் என்னை அணுகும்பொழுது ஆய்வு செய்ய ஏதேனும் ஒரு தலைப்பு கொடுங்கள் என்பார்கள்.அல்லது நீங்கள் சொல்லும் தலைப்பில் ஆய்வு செய்கிறோம் என்பார்கள்.தலைப்பு கொடுத்த பிறகு பல மாதங்கள் தலைமறைவாகி விடுவார்கள். பல்கலைக்கழகம் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முந்திய கிழமை வந்து ஆய்வேடு எழுதுவது எப்படி என்பார்கள்.பழைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

பேராசிரியர் சான் இரால்சுடன் மார் (இலண்டன்)    
February 7, 2009, 6:13 pm | தலைப்புப் பக்கம்

அறிஞர் மார்தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களை முதற்கண் முனைவர் பட்டஆய்வுக்கு உட்படுத்திய ஐரோப்பியநாட்டு அறிஞர் முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் ஆவார்.அடிப்படையில் இங்கிலாந்து இராணுவத்தில் தம் தொடக்ககால வாழ்க்கையை ஈடுபடுத்திக்கொண்ட மார் அவர்கள் பின்னாளில் தமிழ்மொழியையும் தமிழர்களின் இசையான கர்நாடக இசையையும் அறிந்து தமிழுக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

தமிழகப் பல்கலைக்கழகங்களில் இன்னிய அணி உருவாகட்டும்...    
February 5, 2009, 6:47 pm | தலைப்புப் பக்கம்

இன்னிய அணிபல்கலைக்கழகங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பட்டமளிப்பு விழாக்கள் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கிற்கு வரும் ஆளுநர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களைத் துணைவேந்தர்,பதிவாளர் உள்ளிட்ட உயர்பொறுப்பில் உள்ளவர்கள் இசைக்கருவிகள் முழங்க அழைத்து வருவார்கள்.அவ்வாறு அழைத்துவரும்பொழுது ஆங்கிலேயர் காலத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை பண்பாடு

கங்கைகொண்ட சோழபுரத்தின் வரலாற்று எச்சங்கள்...    
February 2, 2009, 6:19 pm | தலைப்புப் பக்கம்

கங்கைகொண்டசோழபுரம் கோயில்அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது.சற்றொப்ப 350 ஆண்டுகள் தென்கிழக்கு ஆசியநாடுகளுக்கே தலைநகராக விளங்கிய இந்த ஊரில் கங்கைகொண்ட சோழீச்சுரம் என்ற கோயிலை இராசேந்திரசோழன் கட்டினான்.அந்தக் கோயில் மட்டும் இன்று மிகப்பெரிய வரலாற்றைச் சுமந்துகொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சங்க இலக்கியச் செம்பதிப்பாளர் முனைவர் ஈவா வில்டன் (செர்மனி)    
January 31, 2009, 6:43 pm | தலைப்புப் பக்கம்

ஈவா வில்டன்தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் செர்மனி நாட்டு அறிஞர்கள் பலவகையில் தொண்டு புரிந்துள்ளனர்.தமிழ் இலக்கியங்கள் சார்ந்த பல ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள்,சிலைகள் செர்மனி நாட்டில் இன்றும் உள்ளன.செர்மனி நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.ஆய்வுப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.மேலைநாடுகளில் முன்பெல்லாம் சமற்கிருதமொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

முதலாவது பன்னாட்டுச் செவ்வியல்மொழி மாநாடு-கருத்தரங்கம்    
January 21, 2009, 7:42 pm | தலைப்புப் பக்கம்

திருச்செங்கோடு கே.எசு.ஆர்.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வரும் 2009 ஏப்பிரல் மாதம்25,26 இருநாள் நடைபெற உள்ளது.கருத்தரங்கின் மையப்பொருள் செவ்வியல் - மொழிகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பதாகும்.கருத்தரங்கில் படிக்கத் தக்க கட்டுரையைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து முதல் பத்துப் பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நிகழ்ச்சிகள்

தமிழ்-சப்பானிய மொழியறிஞர் சுசுமு ஓனோ(23.08.1919 -14.07.2008)    
January 18, 2009, 7:23 pm | தலைப்புப் பக்கம்

சுசுமு ஓனோ அவர்கள்உலகில் முன்னேறிய நாடுகளில் சப்பான் நாடு குறிப்பிடத் தகுந்தது.சப்பானியர்களின் கடும் உழைப்பும் சுறுசுறுப்பும் நேர்மையும் இவர்களுக்கு உலக அளவில் நற்பெயரைப் பெற்றுத்தந்தன.அறிவாற்றலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் இவர்கள் மொழி,பண்பாட்டாலும் உயர்வுடையவர்கள் என்ற உண்மை தெரிந்ததும் மிக மகிழ்ந்தனர். ஆம்.சப்பானிய மொழி உலகில் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

வரலாற்று முதன்மை இடமான ஆலம்பரைக்கோட்டை...    
January 14, 2009, 7:43 pm | தலைப்புப் பக்கம்

இடைக்கழிநாடு பெயர்ப்பலகை12.01.2008 காலை புதுச்சேரியில் புறப்பட்டு சென்னை நோக்கி மகிழ்வுந்தில் செல்லும் வாய்ப்பு அமைந்தது.கிழக்குக்கடற்கரைச்சாலை வழியில் எங்கள் பயணம் அமைந்தது.நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த கடப்பாக்கம், அருகில் உள்ள ஆலம்பரைக்கோட்டையைப் பார்க்க நினைத்தோம்.கடப்பாக்கம் பகுதி சங்க காலத்தில் இடைக்கழிநாடு எனப்பட்டது.இன்றும் அப்பகுதியில் இடைக்கழிநாடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு

கணிப்பொறித்துறை வல்லுநர் கோபி அவர்களுடன் நேர்காணல்    
January 10, 2009, 7:36 pm | தலைப்புப் பக்கம்

கோபி அவர்கள்கணிப்பொறித்துறையில் உழைப்பவர்களை இருவகைப்படுத்திப் பார்க்கலாம்.தங்கள் குடும்பம், வயிற்றுப்பாட்டுடன் பெங்களூர் அல்லது சென்னை முடிந்தால் அயல்நாடுகளில் தங்கித் தொழில் செய்யும் ஒரு வகையினர்.இவர்களால் நம் மொழிக்கோ, இனத்துக்கோ சிறு பயனும் இல்லை.இன்னொரு வகை தொழில் நிமித்தம் வேறு இடங்களில் வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்ணையும் மக்களையும் மறவாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ் நபர்கள்

தமிழ் தமிழர் இன்றையநிலை...    
January 10, 2009, 11:26 am | தலைப்புப் பக்கம்

தமிழில் சற்றொப்ப இருபத்தைந்து மொழிகளின் சொற்கள் கலந்துள்ளன.75 விழுக்காட்டுப் பிறமொழிச்சொற்களை நாம் அன்றாடம் கலந்து பேசுகிறோம். (எ.கா) "இந்த வருஷம் ஜாஸ்தி லீவு" என்று பேசும் நான்கு சொற்களில் நான்கும் நான்கு மொழிச்சொல்லாக இருப்பதை அறிஞர் அருளி அவர்கள் தம் நூலில் குறிப்பார்.இந்த-தமிழ்; வருஷம்-சமற்கிருதம்;ஜாஸ்தி -உருது; லீவு- ஆங்கிலம்.இப்படி பன்மொழிகளைக் கலந்து பேசக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

காஞ்சிபுரத்தில் கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத...    
January 4, 2009, 7:10 pm | தலைப்புப் பக்கம்

அரங்கப் பலகை04.01.2009 ஞாயிறு பிற்பகல் மூன்று மணிக்குக் காஞ்சிபுரத்தில் ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இசைமேதை காஞ்சிபுரம் நயினாப்பிள்ளை நினைவுச் சொற்பொழி வாக நடைபெற்ற கர்நாடக இசைக்கும் நாட்டுப்புற இசைக்கும் உள்ள வரலாற்றுத் தொடர்பு குறித்த ஆய்வரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.காஞ்சிபுரம் சார்ந்த தெருக்கூத்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982)    
January 3, 2009, 7:12 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் க.கைலாசபதிஇலங்கை என்றதும் தமிழ் இலக்கிய உலகம் இரண்டு பேராசிரியர்களை இணைத்து நினைவு கூர்வது உண்டு.முதலாமவர் க.கைலாசபதி.மற்றவர் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள். சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி ஆவார்.இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...    
December 30, 2008, 8:01 pm | தலைப்புப் பக்கம்

அழகர் கோயில் யானை முகப்பு அழகர்கோயில்(கங்கைகொண்டசோழபுரம்) யானை...கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள ஊர் சலுப்பை. அதற்கு முன்பாகவே சத்திரம் என்னும் ஊர் உள்ளது.சலுப்பை - சத்திரம் சந்திக்கும் இடத்தில் புகழ்பெற்ற அழகர் கோயில் உள்ளது.அக்கோயிலில் "துறவுமேல் அழகர்" உள்ளார்.துறவியாக வாழ்ந்து அடக்கமான அழகர் இறப்புக்குப் பிறகு இன்றுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் கலை

அலெக்சாண்டர் மிகையுலுவிச் துபியான்சுகி    
December 27, 2008, 8:10 pm | தலைப்புப் பக்கம்

அறிஞர் அலெக்சாண்டர் துபியான்சுகிசென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு முன் யான் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.நிறுவனத்தில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் அந்நாளைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அடுக்குமொழியில் அழகிய தமிழில் பேசினார்கள்.தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் அவர்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

கங்கைகொண்டசோழபுரம் - மாளிகை மேட்டு அகழ்வாராய்ச்சி நிலை...    
December 26, 2008, 8:24 am | தலைப்புப் பக்கம்

மாளிகைமேடு திசைகாட்டிப் பலகைகங்கைகொண்ட சோழபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இராசேந்திரசோழன் மாளிகை அமைத்து அரசாட்சி செலுத்தினான்(கி.பி.10 ஆம் நூற்.) என்பதை வரலாற்றில் நீங்கள்படித்திருக்கலாம். கங்கைகொண்டசோழபுரம் சற்றொப்ப முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கெல்லாம் தலைநகராக விளங்கியது.இந்தியா,இலங்கை,மலேசியா(கடாரம்),...தொடர்ந்து படிக்கவும் »

எங்கள் ஊர் திரைப்பா ஆசிரியர் கு.ம.கிருட்டினன்...    
December 22, 2008, 6:59 pm | தலைப்புப் பக்கம்

கு.ம.கிருட்டினன்எங்கள் ஊருக்குச் செல்லும்பொழுது குருவாலப்பர்கோயிலில் இறங்கி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் எங்கள் வீட்டுவரியைக் கட்டிவிட்டுத் திரும்பிப் பார்த்தால் என்னுடன் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை(1977-82) ஒன்றாகப் பயின்ற நண்பர் கமலக்கண்ணன் நின்றார்.அவரிடம் நம் ஊரில் கு.ம.கிருட்டினன் என்பவர் இருந்தார்.அவர் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியுமா? என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் அ.சண்முகதாசு - முனைவர் மனோன்மணி    
December 20, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் அ.சண்முகதாசுமுனைவர் மனோன்மணி சண்முகதாசுதமிழ் தொடர்பிலான கருத்தரங்குகள் எந்தப் பொருளில் எங்கு நடந்தாலும் கலந்துகொண்டு கட்டுரை படித்துத் தம் ஆய்வுத்திறமையால் அனைவரது உள்ளத்திலும் இடம்பிடிக்கும் இலக்கிய இணையர்கள் பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் முனைவர் மனோன்மணி சண்முகதாசு அவர்களும் ஆவார்கள்.இவர்கள் இலங்கையை மையமிட்டு வாழ்ந்தாலும் உலக அளவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

புதுச்சேரியில் தேசியப் புத்தகக் கண்காட்சி    
December 17, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரிப் புத்தகக் கூட்டுறவுச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தேசியப் புத்தகக் கண்காட்சியைப் புதுச்சேரியில் நடத்துகிறது.இந்த ஆண்டு பன்னிரண்டாவது புத்தகக் கண்காட்சி புதுச்சேரியில் சிறப்பாக நடைபெற உள்ளது.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள் சற்றொப்ப அறுபதாயிரம் தலைப்புகளில் அமைந்த புத்தகங்களைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்க உள்ளனர்.இதில் தமிழ்,...தொடர்ந்து படிக்கவும் »

தாமசு லேமான்(செர்மனி)    
December 14, 2008, 7:07 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் தாமசு லேமான்தமிழ்மொழி வளர்ச்சியில் செர்மனி நாட்டிற்கும் பங்கு உண்டு.செர்மனியில் கலோன் பல்கலைக்கழகம்,கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகம் என்னும் இரண்டு பல்கலைக்கழகங்களில் தமிழாராய்ச்சிப் பிரிவு சிறப்புடன் இயங்குகின்றது(ஏறத்தாழ 12 பல்கலைக்கழகங்களில் சமற்கிருத ஆய்விருக்கைகள் உள்ளதையும் கவனத்திற்கொள்க).கைடல்பெர்க்குப் பல்கலைக்கழகத்தில் முனைவர் அ.தாமோதரன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நபர்கள்

தமிழ்த்தூதர் சேவியர் தனிநாயகம் அடிகளார்(02.08.1913- 01.09.1980)    
December 3, 2008, 7:21 pm | தலைப்புப் பக்கம்

தனிநாயகம் அடிகளார்இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வடமொழி வால்லாண்மை மேல்நாடுகளிலும் கொடிகட்டிப் பறந்தது.அதன் பயனாக உலக மொழியியல் அறிஞர்கள் பலரும் தொடக்கதில் சமற்கிருதப் பட்டம் பெறுவதை இந்திய இலக்கியத்தை அறிவதன் உயர் தகுதியாக நினைத் திருந்தனர்.இன்று அறியப்பட்டுள்ள அயலகத் தமிழறிஞர்கள் என்பவர்கள் பெரும்பாலும் சமற்கிருத மொழிப்பயிற்சியுடையவர்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

புலவர் நாகி (நா.கிருட்டிணசாமி)    
November 24, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

புலவர் நாகி அவர்கள்புதுச்சேரிப் புலவர்களுள் குறிப்பிடத் தகுந்த பெருமைக்கு உரியவர் புலவர் நாகி அவர்கள் ஆவார்.சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்களின் வழியில் அரசியல் சார்பும் தமிழனப் பற்றும் சிலப்பதிகார ஈடுபாடும் கொண்ட இவரைப் பலவாண்டுகளாக யான் நன்கு அறிவேன்.புதுச்சேரியில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவருடன் அண்மைக் காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அமெரிக்கப் பேராசிரியர் அ.கி.இராமானுசன் (16.03.1929 - 14.07.1993)    
November 22, 2008, 6:37 pm | தலைப்புப் பக்கம்

அ.கி.இராமானுசன் அவர்கள்அமெரிக்கா உள்ளிட்ட மேனாடுகளில் இந்திய இலக்கியம் என்றால் சமற்கிருத இலக்கியம் எனவும்,இந்தியமொழி என்றால் சமற்கிருத மொழி எனவும் கருத்து நிலவிய ஒரு காலம் இருந்தது. அதனால் அவ்விலக்கியம், அம்மொழியை அறிவதில் அயலகத்தார் கவனம் செலுத்தினர்.பலர் சமற்கிருத மொழியைக் கற்று முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி செய்தனர்.அதுபொழுது தமிழைத் தாய்மொழியாகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய சில குறிப்புகள்    
November 22, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

சேர மன்னர்களை இரு பிரிவினராகக் கொள்ள இடம் உள்ளதை அறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்(பக்.8).அவை ஒரு சாரார் உதியன் மரபினர் எனவும் மற்றொரு சாரார் இரும்பொறை மரபினர் எனவும் அழைக்கப்படுவதைக் குறிப்பிடுவார்.உதியன் மரபினர் தம்பெயரில் குட்டுவன் என்ற பெயரை இணைத்து வழங்குவதையும் இரும்பொறை மரபில் அம்மரபைக் காணமுடியவில்லை எனவும் குறிப்பிடுகிறார்.இமயவரம்பன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள் யார்?    
November 21, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன.தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா,கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர்.இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

செக் நாட்டு அறிஞர் கமில் சுவலபில் (17-11-1927 )    
November 15, 2008, 6:23 pm | தலைப்புப் பக்கம்

கமில் சுவலபில்இருபதாம் நூற்றாண்டு தமிழ் மொழிக்கு ஆக்கமான நூற்றாண்டாக அமைந்தது.தமிழ்க் கவிதைத்துறையும் உரைநடைத் துறையும் மிகப்பெரிய வளர்ச்சி பெற்றது.தகவல் தொழில் நுட்பங்கள் தமிழ் மொழிக்கு மிகப்பெரிய ஆக்கம் நல்கின. அயல்நாட்டு அறிஞர்கள் பலர் தமிழ்மொழி,இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டுத் தமிழை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றனர்.எமனோ,பர்ரோ,மார்,கமில் சுவலபில் ,சுசுமு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்    
November 8, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் ஆ.இரா.சிவகுமாரன்தமிழ்நாட்டு மக்களுக்குச் சிங்கப்பூர் கனவுநாடாக உள்ளது.மிகச் சின்னஞ் சிறு தீவாக உள்ள சிங்கப்பூர் 09.08.1965 இல் மலேசியாவிலிருந்து பிரிந்தது.இரு நாடுகளும் எந்தப் பகை உணர்வும் இல்லாமல் அமைதியாக உலகத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. சிங்கப்பூரில் இயற்கை வளமோ,தொழிற்சாலைகளோ எதுவும் இல்லை.இன்னும் சொல்லப் போனால் குடிநீருக்கே அண்டைநாடான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அமெரிக்க அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டு    
November 1, 2008, 7:31 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டுஉலகெங்கும் தோன்றிய தொடக்க கால இலக்கியங்கள் தொன்மைக் கதைகளையும் கற்பனைக் கதைகளையும் உள்ளடக்கங்களாகக் கொண்டு விளங்கத் தமிழில் தோன்றிய சங்கஇலக்கியங்கள் தமிழ்மக்களின் வாழ்வியலை விளக்கும் இலக்கியமாக வளர்ந்து நிற்பது நம் இலக்கியத்தின் தனித் தன்மையை அறிவிக்கும் சான்றாக உள்ளது.இத்தகு பெருமையான மரபிற்கு உரிமையு டையவர்களாக நாம் இருந்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முனைவர் நா.கண்ணன்(கொரியா)    
October 18, 2008, 7:38 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் நா.கண்ணன்இணையத்தில் உலா வருபவர்களுக்குத் தமிழ்மரபு அறக்கட்டளை என்னும் பெயரும் அவ்வமைப்பு செய்யும் பணியும் நன்கு அறிமுகமாகி இருக்கும்.தமிழ் மரபுச்செல்வங்களை அழியாமல் மின்வடிவப்படுத்திப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தமிழ் மரபு அறக்கட்டளையாகும்.இவ்வமைப்பின் சார்பில் TAMIL HERITAGE.ORG என்னும் இணையத்தளம் உள்ளது.இத்தளத்தில் அரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

முதுபெரும்புலவர் ஆ.சிவலிங்கனார்(30.11.1922)    
September 21, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்

அறிஞர் ஆ.சிவலிங்கனார்உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பிய உரைவளப் பதிப்புகளால் புகழ்பெற்றவர் அறிஞர் ஆ.சிவலிங்கனார்.இவர் கடலூர் புதுவண்டிப் பாளையத்தில் (கரையேறவிட்ட குப்பம்) 30.11.1922 இல் பிறந்தவர். பெற்றோர் ஆறுமுகனார் - பொன்னம்மாள்.நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஆ.சிவலிங்கனார் தொடக்கக் கல்வியைக் கடலூர் நகராட்சி(முனிசிபல்)பள்ளியில் பயின்றவர்.பிறகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை    
September 21, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

அறிஞர் இரா.சாரங்கபாணியார்பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பழுதறக் கற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்தபடி வருகிறது. இலக்கியங்களைத் தவிரப் பிற உலகியல் வாழ்க்கை தெரியாமல் வாழ்ந்ததால் பழங்காலத்துப் புலவர்கள் வறுமையில் வாடியதாக அறிகிறோம்.இன்று தமிழ் , மேடைகளில் முழங்கப்படும் வணிகப் பொருளாகிவிட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களின் வாய்வீச்சுகளும்,கவிதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

புதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்    
September 20, 2008, 8:14 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் இரா.திருமுருகனார் (16.03.1929) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணப் புலவர்களில் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர் ஆவார்.இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர் இவர்.இவர் குழல் இசைப்பதில் தனித்திறம் பெற்றவர்.அதுபோல் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். நாளும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

படைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு    
September 20, 2008, 10:49 am | தலைப்புப் பக்கம்

படைப்புவேந்தர் தகடூரான் அவர்கள் தருமபுரி பண்டைக்காலத்தில் தகடூர் என அழைக்கப்பெற்றது.அதியமான் ஒளவையார் வழியாகத் தமிழக வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் ஊராக இவ்வூர் விளங்குகிறது.இத்தகடூர் பெயரை நினைவூட்டும் முகமாகத் தகடூரான் என்னும் புனைபெயரில் பல நூல்களை எழுதியவர் அறிஞர் கிருட்டிணன் அவர்கள் ஆவார்.இவர் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பொம்மிடியை அடுத்த புது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்    
September 16, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் கடவூர் மணிமாறன் தனித்தமிழில் பாடல் புனையும் ஆற்றலும்,தமிழ்மொழியில் மிகச்சிறந்த புலமையும் கொண்டவர் முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள்.இவர் தம் இயற்பெயர் ப.முத்துசாமி என்பதாகும்.இயற்பெயர் மறைந்து, புனை பெயர் நிலைபெறும்படி தொடர்ந்து இயங்கிவருபவர். பேச்சும் வாழ்க்கையும் இரண்டாக இல்லாமல் ஒன்றென வாழும் இயல்பினர். கருவூர் அருகில் உள்ள கடவூரை அடுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை    
September 15, 2008, 7:51 pm | தலைப்புப் பக்கம்

முனைவர் அ.அறிவுநம்பி முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகதின் தமிழியல்துறைத் தலைவராகவும்,புல முதன்மையராகவும் விளங்குபவர்.1992-இல் நான் இளம் முனைவர் பட்டம் படிக்க புதுவைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபொழுது மாணவர்களின் உள்ளங்கவர் பேராசிரியராக விளங்கியவர்களுள் அவரும் ஒருவர்.அவர்தம் நகைச்சுவை கலந்த பேச்சும்,எடுத்துரைக்கும் சில நறுக்குகளும் எங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு வ...    
August 27, 2008, 7:20 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் தமிழண்ணல்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா இன்று 28.08.2008 வியாழக்கிழமை மாலை ஆறு மணிக்கு மதுரையில் உள்ள திருவள்ளுவர் அரங்கம் நான்காம் மாடியில்(நியூ காலேஜ் கவுசு)- நடைபெறுகிறது.மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்கள் இவைகளாகும்.மெய்யப்பன் பதிப்பகத்தைச் சேர்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

செங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் சிற்பங்கள்    
August 15, 2008, 8:21 pm | தலைப்புப் பக்கம்

எங்களூர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ள இடைக்கட்டு என்பது. அம்மாவைப் பார்க்கவும் நில புலங்களைப் பார்க்கவும் மாதம் ஒருமுறை புதுச்சேரியிலிருந்து சென்று வருவது வழக்கம்.100 அயிரமாத்திரி(கி.மீ)புதுச்சேரியிலிருந்து எங்கள் ஊர் உள்ளது. நேற்று அவ்வாறு சென்றேன். செயங்கொண்டம் குறுக்குச்சாலையில் இறங்கியபொழுது நினைவுக்கு வந்தது. செங்கமேட்டுக் காளி.ஆம்.எங்கள் அம்மா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

மண்மொழி எழுதிய மக்கள் பாவலர் பேராசிரியர் த.பழமலை    
August 14, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் த.பழமலை நூல்களுக்கு இடையே...பேராசிரியர் த.பழமலைபேராசிரியர் தங்கப்பாவுக்கு அடுத்து நான் கண்ட இயற்கை ஈடுபாட்டுப் பாவலர்களுள் பேராசிரியர் த.பழமலை குறிப்பிடத் தகுந்தவர்.அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது(1991).தமிழ்வழிக்கல்வி குறித்த ஒரு மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது அவர் பாடல் இசைப்பதாக இருந்தது.ஒருமுகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அடிகளாசிரியர்    
August 10, 2008, 5:29 pm | தலைப்புப் பக்கம்

அடிகளாசிரியர்அடிகளாசிரியர்அடிகளாசிரியர்பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1993 ஆம் ஆண்டளவில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு,மதிப்பீடு என்னும் பொருளில் யான் முனைவர் பட்டப் பேற்றிற்கென ஆய்வு செய்த பொழுது தமிழகத்துப் பாவலர் பெருமக்கள் எழுதிய பலதிறத்துப் பாட்டு நூல்களையும் கற்பதில் பேரார்வம் கொண்டிருந்தேன்.அவ்வாறு கற்ற...தொடர்ந்து படிக்கவும் »

தமிழையும் தொல்காப்பியத்தையும் உலக அளவில் பரப்பியதமிழ்ப் பல்கலைக்கழகத்த...    
August 4, 2008, 10:27 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் அவர்கள்(அகவை 79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 04.08.2008 திங்கள் கிழமை காலை 11 மணியளவில் நேர்ச்சி இடத்திலேயே இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாள்அவர்களும்(அகவை 78)ஓட்டுநர் சீவபாலன்(அகவை 28) ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சங்கநூற் சொல்லடியம் கண்ட மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்    
July 23, 2008, 7:49 pm | தலைப்புப் பக்கம்

<மருதூர் முனைவர் பே.க.வேலாயுதம் அவர்கள்(11.07.1938)திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் யான் முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்த பொழுது(1993-97) எனக்குப் பழகுவதற்குக் கிடைத்த அறிஞர்களுள் பேராசிரியர் பே.க.வேலாயுதம் அவர்கள் குறிப்பிடத் தகுந்தவர்.என் பிறந்த ஊர் செல்லும் பொழுதெல்லாம் அவர்தம் தமையனார் பேராசிரியர் மருதூர் இளங்கண்ணனார் அவர்களுடன் நான் நெருங்கிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் புத்தகம்

தமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு...    
July 22, 2008, 8:51 pm | தலைப்புப் பக்கம்

அறிஞர் தமிழண்ணல் அவர்கள்தமிழறிஞர்களால் தமிழண்ணல் என அழைக்கப்படும் இராம.பெரியகருப்பன் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்படத் தகுந்தவர்.மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி இவர் ஆற்றிய பெரும்பணிகள் இலக்கிய உலகில் என்றும் நினைவு கூரத்தக்கன.அறிஞர் மு.வ,அறிஞர் வ.சுப,மாணிக்கம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்களின் தகு தலைமையின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கல்வெட்டியல் அறிஞர் புலவர் செ.இராசு அவர்கள்    
July 21, 2008, 7:16 pm | தலைப்புப் பக்கம்

புலவர் செ.இராசு அவர்கள்திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் யான் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது நடைபெற்ற இலக்கியமன்ற விழாவில் அறிஞர்கள் பலர் உரையாற்ற அழைக்கப் பெற்றிருந்தனர். அவர்களுள் எளிய தோற்றத்துடன் ஒருவர் மிகச் சிறந்த கல்வெட்டுச் செய்திகளை அவைக்கு வழங்கிக்கொண்டிருந்தார்.தமக்குத் தொடகத்தில் பேச இயலாத தன்மை இருந்ததாகவும் பின்னர் பேசிப்பேசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

நீ.கந்தசாமிப் பிள்ளை (09.06.1898 -18.06.1977)    
June 30, 2008, 6:06 pm | தலைப்புப் பக்கம்

நீ.கந்தசாமிப் பிள்ளைநீ.கந்தசாமிப் பிள்ளை அவர்கள் தஞ்சைக்கு அருகில் உள்ள பள்ளியகரம் என்ற ஊரில் பிறந்தவர்.பெற்றோர் நீலமேகப் பிள்ளை,சௌந்தரவல்லி அம்மாள்.தஞ்சையில் உள்ள தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.பிறகு தாமே அறிஞர்களிடம் அக்கால வழக்கப்படி பாடங்கேட்டு,பலவற்றையும் கற்று அறிஞரானவர்.அவ்வகையில் தம் பன்னிரண்டாம் அகவையில் சாமிநாதப் பிள்ளை என்பவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

திருநெல்வேலிக் கருத்தரங்கு நா.கணேசன் உரை...    
June 7, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் நாசா விண்வெளி ஆய்வுநிறுவனத்தில் பணிபுரியும் நா.கணேசன் அவர்கள் :தமிழ்மணத்தைக்காசி அவர்கள் தொடங்கும் பொழுது 100 அளவில் பதிவர்கள் இருந்தனர்.இன்று 4000 பேர் பதிவர்கள் உள்ளனர். நாள்தோறும் இன்று பலர் இணைகின்றனர்.இதில் பல வசதிகள் உள்ளன.தமிழ் வளர்த்த பல பெரியவர்கள் வாழ்ந்த பகுதி நெல்லைப்பகுதி.குமரகுருபரர் போன்ற தமிழ் முனிவர் பிறந்த பகுதி இது.நெல்லையில் வாழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »

திருநெல்வேலிக் கருத்தரங்கில் பேசப்பட்டவை...    
June 7, 2008, 8:28 am | தலைப்புப் பக்கம்

திருநெல்வேலிக் கருத்தரங்கில் முனைவர் சங்கரபாண்டி அவர்கள் இணையம்பற்றியும் அமெரிக்காவில் தமிழ்நிலை பற்றியும் விளக்கிப்பேசினார்.அடுத்து காசி அவர்கள் தமிழ்மணம் பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கினார்.தமிழ் மணத்தில் உள்ள பல்வேறு வசதிகளை அவர் செய்முறை விளக்கம்வழி விளக்கினார்.பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் இணையத்துறையில் தொடங்கபட்டுள்ள இம் முயற்சியைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் தொடக்க விழா...    
June 4, 2008, 4:02 am | தலைப்புப் பக்கம்

தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கத்தின் தொடக்கவிழா 14.06.2008 காரி(சனி)க்கிழமை மாலை 3மணிக்கு சென்னை இராசா அண்ணாமலைபுரத்தில்(ஐயப்பன் கோயில் அருகில்) உள்ள இமேச் அரங்கில் நடைபெற உள்ளது.குத்துவிளக்கேற்றி அமைப்பைத் தொடங்கிவைத்து விழாப் பேருரையாற்ற மருத்துவர் இராமதாசு அவர்கள் இசைந்துள்ளார்.பாவலர் த.பழமலை அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் ஓவியர் வீர.சந்தானம் அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

நாட்டுப்புறவியல் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் மறைவுக்கு வருந்துகிறேன்...    
May 20, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

பாளையங்கோட்டை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் அவ்வூர் நினைவுக்கு வரும்.புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் பல உள்ளதால் கற்றவர்களுக்கு அவ்வூர் கல்வி சார்ந்து நினைவுகளை ஏற்படுத்தும்.புகழ்பெற்ற பேராசிரியர்கள் பலர் ஆவ்வூரில் கல்விப்பணி செய்துள்ளனர் அவர்களுள் பேராசிரியர் தே.லூர்து அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். நாட்டார் வழக்காற்றியல்(நாட்டுப்புறவியல்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பரம்பரை கண்ட பாவேந்தர்    
April 29, 2008, 6:41 am | தலைப்புப் பக்கம்

காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆத்தங்குடி என்னும் ஊரில் திராவிடர் கழகத்தின் கிளை தொடங்குவதற்கு ஏற்பாடாகி, மாலை 5.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. அப்பகுதியின் பெரிய மனிதர் ஒருவர் வேட்டையாடுவதில் வல்லவர். காட்டிற்குச் சென்று பறவைகளை, விலங்குகளைத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அப்பெரிய மனிதரின் முரட்டுத்தனம் அப்பகுதி மக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்    
April 18, 2008, 8:49 pm | தலைப்புப் பக்கம்

தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன் கருத்துகளை அறிஞர்கள் பலரும் காலந்தோறும் பலவகையில் பயன்படுத்தியுள்ளனர். சங்கநூல்களிலும், சிலம்பு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சங்க காலத்து நவிரமலைப் படங்கள்    
April 10, 2008, 8:20 pm | தலைப்புப் பக்கம்

நவிரமலை உச்சியில் போகர் சிலைஅம்மையின் சிலைமலைச்செலவில் ஈடுப்பட்ட குழு(மலையுச்சி)காரியுண்டிக் கடவுள்ஆபத்தான பாதையில் ஏறிவரும் என் மாணவர் கா.இரமேசு(குறவரும் மருளும் குன்றம்)நவிரமலையைக் கண்ட் மகிழ்ச்சியில் நான்(மலையுச்சி)கோயில் முகப்புமலைப்பாதைமலையின் நடுவிடத்தில் ஓய்வெடுக்கும் மண்டபம்.நவிரமலை( NAVIRAMALAI ) என்று சங்க காலத்திலும்(மலைபடுகடாம்) பர்வதமலை என இன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

சங்க காலத்துச் சான்றாக நிற்கும் நவிரமலை - படங்கள்    
April 9, 2008, 8:03 pm | தலைப்புப் பக்கம்

வரலாற்றைச் சுமந்து நிற்கும் நவிரமலையின் தூரக்காட்சிமலைப்பாதை(இந்த வழியில்தான் நடக்கவேண்டும்)மலைப்பகுதிகளை இணைக்கத் தண்டவாளங்கள் இன்று பொருத்தப்பட்டுள்ளனநன்னனின் பழைய கோட்டை அமைப்புஅறிஞர் மா.இராசமாணிக்கனார் தம் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலில் மலைபடுகடாம் நூலில் இடம்பெறும் நவிரமலையில் ஏறித் தம் ஆராய்ச்சியை முழுமையடையச் செய்ய விரும்பியதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் வரலாறு

மடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையளிக்கும்! -துணைவேந்தர...    
April 6, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

முனைவர் மு.பொன்னவைக்கோ(கோப்புப்படம்)பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து அலுவலக முறையில் மடல்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தால் தமிழில்தான் வரவேண்டும்.ஆங்கிலத்தில் வந்தால் பல்கலைக்கழகம் விடையளிக்காது எனப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.திருவாரூர் நேதாசி சுபாசு சந்திரபோசு கல்லூரியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

அகநானூறு அறிமுகமும் பாடிய புலவர்களும்    
February 29, 2008, 7:23 pm | தலைப்புப் பக்கம்

சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பற்றிய செய்திகளை விரிவாகத் தரும் நூல் அகநானூறு ஆகும்.அகம்+நானூறு என இதனைப் பிரித்துப் பார்க்கலாம். அகப்பொருள் தொடர்பான நானூறு பாடல்களைக் கொண்டது என்ற அடிப்படையில் இந்நூல் நானூறு பாடல்கலைக் கொண்டுள்ளது.கடவுள் வாழ்த்தாக ஒரு பாடல் உள்ளது.இதனைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.13 அடி சிறுமையும் 31 அடி பெருமையும் கொண்ட பாடல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கவிதை

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகபுகு வஞ்சி    
February 14, 2008, 10:56 pm | தலைப்புப் பக்கம்

தனித்தமிழில் படைப்புநூல்கள் பலவற்றை வழங்கியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.பாடலாகவும், உரைநடையாகவும், உரையாகவும்,பாட்டும் உரையாகவும், பாவியமாகவும் விரிந்துநிற்கும் இவர்தம் தமிழ் இலக்கியப் பணியில் 'மகபுகு வஞ்சி' குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.பெண்களுக்கு அறவுரை கூறுவதாக அமைவதோடு தமிழ் யாப்பில் மிகுதியாகப் பயன்படுத்தப்படாத வஞ்சிப்பாவால் இந்நூல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழ் ஒருங்குகுறி(unicode)ஆர்வலர்களுக்கு...    
February 6, 2008, 1:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ் ஒருங்குகுறி(unicode) தொடர்பில் தமிழ் மொழிக்கு உரிய இடம் தேவை எனப்பல ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.அண்மையில் இது தொடர்பான சில மகிழ்ச்சி செய்திகளைப் புதுச்சேரியில் நடைபெற்ற வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்றிய பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்தார்கள்.அப்பேச்சு இப்பொழுது செயல்வடிவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

ஏறு தழுவுதல்(சல்லிக்கட்டு)வரலாறு    
January 13, 2008, 6:50 pm | தலைப்புப் பக்கம்

ஏறுதழுவுதல்,ஏறுகோள்,மாடுபிடித்தல்,சல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு,பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பலபெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.இவ்விளையாட்டு,முல்லைநில(ஆயர்கள்) மக்களின் திருமணத்துடன் தொடர் புடையதாகப் பண்டைக்காலத்தில் இருந்தது.முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் தென் தமிழகத்தின் மதுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பண்பாடு

சிலப்பதிகார உரைகளும் பஞ்சமரபு வெண்பாக்களும்    
January 12, 2008, 8:13 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின் நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின் உரை பெரிதும் துணைசெய்கின்றன. இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவர்கள் மேற்கோளாகக் காட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன் நன்னனின் வரலாறு    
January 9, 2008, 7:34 pm | தலைப்புப் பக்கம்

பத்துப்பாட்டு நூலுள் நிறைவாக வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும். இதனை இயற்றியவர் இரணிய முட்டத்துப் பெங்குன்றூர் பெருங்கொளசிகனார் ஆவார்.இந்நூலின் பாட்டுடைத் தலைவன் செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் எனும் அரசனாவான். இவன் கொண்கான நாட்டில் ஏழில் மலையையும், பாரம் என்ற நகரையும் ஆண்ட நன்னனின் மகன் என்பதை மலைபடுகடாம் நூலின்வழியும், நச்சர் உரை வழியும் பிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

தமிழகப் பல்கலைக்கழக இணையதளங்கள் யாருக்கு?    
December 19, 2007, 2:46 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் ஆட்சிமொழிச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அச்சட்டம் நடைமுறையில் இல்லை என்பதற்குப் பலசான்றுகள் உள்ளன.தமிழகத்தில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்களின் தகவல்கள் யாவும் ஆங்கிலத்தில் உள்ளமையை இங்கு நினைவிற்கொள்க.பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்,பதிவாளர்கள் தமிழ்ப்பற்றாளர்களாக இல்லாமையே இதற்குக்காணரம்.தமிழ்ப்பற்றுடன் விளங்கிய முனைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழில் இணைய இதழ்கள்    
December 10, 2007, 3:07 am | தலைப்புப் பக்கம்

இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன.அச்சுவடிவிலும்,ஒலி,ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் நுட்பம் தமிழ்