மாற்று! » பதிவர்கள்

மருதன்

காந்தியால் துயருறும் பெண்கள்    
February 9, 2010, 9:05 am | தலைப்புப் பக்கம்

காந்தி குறித்த எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக, தி கார்டியன் இதழில் வெளிவந்த Michael Connellan-ன் கட்டுரையை ரவிபிரகாஷ் தனது வலைப்பதிவில் மொழிபெயர்த்து அளித்துள்ளார். நன்றியுடன் இங்கே அதனை மீள்பதிவு செய்கிறேன்.0காந்தியால் துயருறும் பெண்கள்பெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காந்தியின் பெண்கள்    
January 29, 2010, 7:18 am | தலைப்புப் பக்கம்

காந்தி குறித்து தி கார்டியன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.விக்கிபீடியா மூலமாகவும் ரிச்சர்ட் அட்டன்பரோ மூலமாகவும் மட்டுமே காந்தியை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். ஏற்படுத்தியிருக்கிறது.காந்தி இப்படிப்பட்டவராக இருப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை, it's shocking என்கிற ரீதியில் சிலர் இந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மீன்    
January 25, 2010, 9:18 am | தலைப்புப் பக்கம்

கே. குணசேகரன் எழுதிய இருளர்கள் புத்தகத்துக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பழங்குடி இனங்கள் குறித்த விரிவான மற்றொரு புத்தகத்துக்காக தற்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.இருவாட்சி இலக்கிய இதழ் வெளியிட்டுள்ள பொங்கல் சிறப்பு வெளியீட்டில் குணசேகரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். தலைப்பு, சென்னம் பட்டணம். அதிலிருந்து ஒரு பகுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

எரியும் பனிக்காடு : தேயிலைத் தோட்டங்களின் கதை    
March 11, 2009, 11:49 am | தலைப்புப் பக்கம்

முதல் உலகப் போர் நடைபெற்றது கருப்பன், வள்ளி இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியா பிரிட்டனின் காலனி தேசமாக இருப்பது தெரியாது. இந்திய தேசிய காங்கிரஸ் தெரியாது. வங்கப் பிரிவினை தெரியாது. காந்தி தெரியாது. தென் ஆப்பிரிக்கப் போராட்டம் தெரியாது. சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம், ரவுலட் சட்டம், ஜாலியன்வாலாபாக், சைமன் கமிஷன், பகத் சிங், தண்டி யாத்திரை எதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சே குவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம்    
February 27, 2009, 6:30 am | தலைப்புப் பக்கம்

ஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கியது அந்தப் பயணம். எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றிவருவதாகத் திட்டம். பெரிய முதுகுப்பை தயாராகிவிட்டது. உள்ளே ஏராளமான காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி துண்டுகள். ஆந்திய மலைப் பகுதிகளில் தொடங்கி சாண்டியாகோ வழியாக சிலி செல்வதாகத் திட்டம். மலை, ஏரி அத்தனையையும் மோட்டார் சைக்கிள் தாக்குபிடிக்கவேண்டும் என்பதற்காக எல்லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கெரில்லாக்கள் எப்படி உருவாகிறார்கள்?    
February 22, 2009, 2:28 pm | தலைப்புப் பக்கம்

ஒரு கெரில்லா இயக்கத்தை ஆரம்பிப்பது சிரமமானது. அதைவிட சிரமமானது இயக்கத்தை தொடர்ந்து நடத்துவது. தொடர்ந்து நடத்துவதைக் காட்டிலும் சிரமம் தரக்கூடியது புரட்சி நடத்தி வெற்றி பெறுவது. வெற்றி பெறுவதைக் காட்டிலும் சிரமமானது எது தெரியுமா? வெற்றிக்குப் பிறகும் புரட்சியைத் தொடர்வது. The Battle of Algiers என்னும் ஃபிரெஞ்சுத் திரைப்படத்தில், FLN (National Liberation Front) இயக்கத்தைச் சேர்ந்த மூத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஈழக்குறிப்புகள் : பத்திரிகை தர்மம் -- என். ராமும் லசந்த விக்கிரமதுங்கவ...    
February 2, 2009, 4:22 pm | தலைப்புப் பக்கம்

தி சண்டே லீடரில் வெளிவந்த லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கத்தின் தமிழ் வடிவம் இங்கே. ஜனவரி 8, 2009 அன்று காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். என்று, எவ்வாறு நிகழும் என்பதை மாத்திரம்தான் லசிந்தவால் முன்கூட்டியே ஊகிக்கமுடியவில்லை. மற்றபடி, தன் மரணத்தை அவர் எதிர்பார்த்திருந்தார். நிச்சயம் அரசாங்கம்தான் பொறுப்பாளி என்று தெளிவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம்

க்யூபா 50    
January 21, 2009, 5:40 am | தலைப்புப் பக்கம்

ஆரவாரங்கள் தொடங்கும்போதே ஃபிடல் காஸ்ட்ரோ தெளிவாக அறிவித்துவிட்டார். ஜனவரி 1, 1959 அன்று. புரட்சி வெற்றி பெற்றுவிட்டது. கொடுங்கோல் அரசாங்கத்தை நாம் வெற்றிகரமாகத் தூக்கியெறிந்துவிட்டோம். உண்மை. ஆனால், இனி தேனாறும் பாலாறும் இங்கே ஓடப்போகிறது, இனி சிரமம் என்பதே உங்கள் வாழ்வில் இருக்காது என்று என்னால் சொல்லமுடியாது. போராட்டம் இனிதான் தொம்டங்கப்போகிறது. இனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள்    
December 16, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

வெளிவந்து 160 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படுகிறது. கொண்டாடப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதலில் வெளிவந்தது 1848ம் ஆண்டில். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த அறிக்கை பெர்லினில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. அதற்கு பிறகு பல்வேறு மொழிகளில் பல்வேறு பதிப்புகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

அயர்லாந்து - 800 ஆண்டு கால போராட்டம்    
December 15, 2008, 11:41 am | தலைப்புப் பக்கம்

என். ராமகிருஷ்ணனின் அயர்லாந்து அரசியல் வரலாறு சமீபத்தில் கிழக்கில் வெளிவந்துள்ளது. எனக்குத் தெரிந்து தமிழில் அயர்லாந்து பற்றி விரிவாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எஸ்.வி. ராஜதுரை ஒரு புத்தகம் எழுதியிக்கிறார். நான் இன்னும் வாசிக்கவில்லை.ரஷ்யப் புரட்சியைப் போலவே அயர்லாந்து போராட்டமும் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காந்தியின் அறவழிப் போராட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் புத்தகம்

மாவோ : என் பின்னால் வா!    
December 13, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

கடுமையைப் பிரயோகிக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்போதே நாலு தட்டு தட்டி வைக்கவேண்டும். இல்லாவிட்டால், ஒட்டுமொத்தமாக அழிந்துபோகவேண்டியதுதான். செம்படைவீரர்களைத் திரட்டினார். தோழர்களே, உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறேன். நீங்கள் அனைவருமே என் தோழர்கள்தாம். ஆனால், உங்களில் சிலர் நம் இயக்கத்துக்கு விரோதமான...தொடர்ந்து படிக்கவும் »

சே, காஸ்ட்ரோ, லெனின் - சில குறிப்புகள்    
December 13, 2008, 9:34 am | தலைப்புப் பக்கம்

‘...ஒருபக்கம் வெடிமருந்துகள், ஆயுதங்கள். மற்றொரு பக்கம் மருந்துகள். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே நான் சுமந்துசெல்லவேண்டும். இப்படி ஒரு சங்கடமான சூழ்நிலையில் நான் மாட்டிக்கொள்வது இது தான் முதல் முறை. நான் இப்போது என்ன செய்யவேண்டும்? ஒரு மருத்துவனாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு புரட்சிக்காரனாகவா? இரண்டு பெட்டிகளுமே என் கால்களுக்கு கீழே கிடக்கின்றன. பேசாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பாம்பு மனிதர்    
December 11, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்

எழுத விருப்பம் என்று சொல்லி வந்தார் குணசேகரன். அமர வைத்து பேசிக்கொண்டிருந்தேன். நேரு, எமர்ஜென்சி, காரல் மார்க்ஸ், சோழர்கள், தோழர்கள், சிப்பிக் காளான், சிங்கப்பூர், லாலா லஜபதி ராய், பழங்குடிகள், பறவைகள், சங்க இலக்கியம் என்று நிறைய பேசினார். பாம்புகள் பற்றியும். சரி இங்கிருந்தே ஆரம்பியுங்கள் என்றேன்.வாரத்துக்கு நான்கு முறை அலுவலகம் வந்துவிடுவார். முந்தைய தினம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மீடியாவை நம்பலாமா?    
November 29, 2008, 12:07 pm | தலைப்புப் பக்கம்

நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது. வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் ஊடகம்