மாற்று! » பதிவர்கள்

பைத்தியக்காரன்

சாரு: ஹிட்லர் ரிட்டர்ன்ஸ்!    
June 27, 2009, 9:21 am | தலைப்புப் பக்கம்

சாரு, தன் வளர்ப்பு மகளை வன்புணர்ச்சி செய்யப் போனதால்தான், அவரது முதல் மனைவி அவரை அடித்து விரட்டினார். சாருவுக்கு இதைவிட வேறு தண்டணை வேண்டியதில்லை...இப்படிச் சொன்னால் எப்படியிருக்குமோ அப்படித்தான் ஒரு பொய்யான குறிப்பைச் சமீபத்திய தன் பதிவின் முடிவில் எழுதியிருக்கிறார் சாரு. 'அமர்நாத்' என்பவரின் கடிதத்துக்கு பதில் அளிக்கையில், ஜெயமோகன் குறித்து இறுதியில் அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காம அரசியல், காமத்தின் அரசியல், காமமும் அரசியல், காமமே அரசியல்    
June 17, 2009, 8:44 am | தலைப்புப் பக்கம்

சற்றே நீளமான பதிவுக்காக முதலில் பதிவுலக நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுகிறேன். இந்தப் பதிவை எழுத தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. காமமானது அரசியலாக எப்போது உருவாக ஆரம்பித்தது என 'ரூம் போட்டு யோசித்தபோது' தோன்றிய விஷயங்களை வைத்து பதிவுல நண்பர்களுடன் உரையாடலாம் என்று தோன்றியது. அதனால்தான் இந்தப் பதிவு. மற்றபடி எதுவுமே இறுதி முடிவல்ல என்பது இந்தப் பதிவுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யெஸ். பாலபாரதி, தமிழ்மணம், மற்றும் பதிவுலக நண்பர்களுக்கு...    
May 30, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் என் நன்றி. இது எனது 50வது பதிவு. 50 பதிவுகளை நிறைவு செய்வது என்னை பொருத்தவரை பெரிய விஷயம். காரணம், நான் பைத்தியக்காரன்.நிலையான மனநிலையோ, தெளிவான புத்தியோ எனக்கு கிடையாது. சொந்த அறிவும், ஆழ்ந்து வாசிக்கும் திறனும், அலசி ஆராயும் பக்குவமும், வாசித்ததை அசை போடும் இயல்பும் எனக்கு எட்டா கனிகள். பதற்றமும், பரபரப்பும், கோபமும், இயலாமையும், கோழைத்தனமும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்தியாவில் போலீஸ் ஆட்சி    
May 28, 2008, 10:14 am | தலைப்புப் பக்கம்

1914ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு பாரதியார் எழுதிய கடிதம் இது. சென்ற பதிவில் குறிப்பிட்டபடி 'காலச்சுவடு' பதிப்பகம் வெளியிட்டுள்ள 'பாரதி கருவூலம்: 'ஹிந்து' நாளிதழில் பாரதியின் எழுத்துக்கள்' என்ற நூலிலிருந்து இந்த கடிதத்தை பதிவில் ஏற்றுகிறேன். இந்த நூலின் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் நன்றி.குறிப்பு 1: இக்கடிதம் Agni and Other Poems... ... (1980)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

‘ஹிந்து’, பாரதி, இந்தியா!    
May 28, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

‘காலச்சுவடு’ பதிப்பகம் சமீபத்தில் ‘பாரதி கருவூலம்: ‘ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துக்கள்’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறது. அந்த நூல் குறித்த ஒரு அறிமுகமாக இந்தப் பதிவு அமைகிறது. கவனிக்க, அந்த நூல் குறித்த விமர்சனப் பதிவு அல்ல இது. அந்த நூலிலிருந்து ஒரு அத்தியாயத்தை இன்று மாலைக்குள் தனி பதிவாக வெளியிடலாம் என நினைக்கிறேன். அதற்கு முன்பு அந்த நூலை குறித்து பதிவுலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஃபூக்கோவின் முதல் நூல் குறித்து தம்மாத்துண்டு அறிமுகம்!    
March 26, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

மீண்டும் ஃபூக்கோ. என்ன செய்ய? வேண்டுமானால் ஃபூக்கோமேனியாவால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இந்தமுறை புடலங்காய் சமாச்சாரமாக இல்லாமல் அவர் எழுதிய முதல் நூலை குறித்து உரையாடலாம் என நினைக்கிறேன்.ஒரு நபர். அவரது கருத்துக்கள். திடீரென்று ஒருநாள் அதன்மீது ஃபூக்கோ தடுக்கிவிழுந்தார். மூச்சு திணறத் திணற அந்த கருத்துக்களை சுவாசித்தார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

இராமாயணத்தில் வரும் ‘லங்கா’ என்பதும் இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றா?    
March 20, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்

இல்லை என்பதற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு ஆங்கில நூலை குறித்து ‘சஞ்சாரம்’ அரசியல், சமூக, கலை, இலக்கிய காலாண்டிதழின் முதல் இதழில் (மார்ச் - மே 2008) அ. மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரைக்கு அ. மார்க்ஸ் கொடுத்திருக்கும் தலைப்பு, ‘இராமன் கடந்த தொலைவு’. அந்த ஆங்கில நூலை அ. மார்க்ஸிடம் கொடுத்தவர் அவரது நண்பரான ராமாநுஜம். ‘Ramayana and Lanka' என்ற அந்த நூலை எழுதியவர் டி. பரமசிவ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

HANA - Bi ஜப்பானிய படம் குறித்த பார்வை    
March 19, 2008, 8:42 am | தலைப்புப் பக்கம்

உலகப் படங்களை பார்த்து ரசிக்கும் ஆசை இருக்கிறது. தங்குதடையின்றி பைரேடட் டிவிடி கிடைப்பதால் அந்த ஆசையும் நிறைவேறவே செய்கிறது. ஆனால், ஆசை இருக்கும் அளவுக்கு அதை முழுமையாக விமர்சிக்கும் பக்குவம் எனக்கில்லை. எந்த விஷயத்திலுமே பக்குவமில்லை என்பது ஒருபுறமிருக்க, இந்த எனது போதாமையை மனதில் கொண்டே இந்தப் பதிவையும் படிக்கும்படி பதிவுலக நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Silence - ஈரானில் தடைசெய்யப்பட்ட திரைப்படம் குறித்த பார்வை    
March 7, 2008, 10:23 am | தலைப்புப் பக்கம்

கதை சொல்லாத நாவுகளே இந்த உலகில் இல்லை. உமிழ் நீரை விட கதைகளையே நாவுகள் அதிகம் சுரக்கின்றன. உற்பத்தி செய்கின்றன. சக மனிதர்களோடு உரையாடுகையில் கதைகளுக்கு இருக்கும் பங்கு வேறு எதற்குமே இல்லை. காரணம், பகிர்தலின் அடிப்படை அலகாக கதைகளே இருக்கின்றன. பிணைப்பின் ஆழமாக சம்பவங்களே ஜீவிக்கின்றன. அனைத்தையுமே கதைகளாக சொல்வதில் இருக்கும் ஆனந்தமே வாழ்க்கையை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

The Color of Paradise - ஈரானிய படம் குறித்த பார்வை!    
February 26, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

ஈரானிய படங்களின் சிக்கலே இதுதான். படம் முடிந்த பல இரவுகள் உறங்கவே முடியாது. பகல் முழுக்க அலைகழிப்பு விரட்டிக் கொண்டே இருக்கும். வாழ்க்கையின் புதிர் முடிச்சுகளை அவிழ்க்க மனம் எத்தனிக்கும். குழந்தைகளின் மீதான அன்பு பெருகும். நம்மை வெறுக்கும் சக மனிதனின் உணர்வுகளை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும். பார்சி மொழியில் அவர்கள் பேசினாலும் நம் மொழியில் நம்மால் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜெயமோகன், ஆனந்தவிகடன், நாகார்ஜுனன் மற்றும் கருத்து கந்தசாமி    
February 15, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

ஆக ஜெயமோகன் குறித்து உரையாட வேண்டிய நிலை வந்திருக்கிறது. காரணம் ஆனந்த விகடன். தனது வலைச்சரத்தில் வெளியான இரு பதிவுகளின் பகுதிகளை அட்டைப்பட கட்டுரையாக வெளியிட்டிருப்பதால் விகடனை கண்டித்து ஜெயமோகன் பதிவு எழுதியிருக்கிறார். பார்க்க http://jeyamohan.in/. நாகார்ஜுனனும் விகடனின் இந்த செயலை தனது வலைச்சரத்தில் கண்டித்திருக்கிறார். பார்க்க http://nagarjunan.blogspot.com/இந்த இடத்தில் பிரெஞ்சு சமூக,...தொடர்ந்து படிக்கவும் »

தமிழுக்கு வரப்போகும் கொரிய காதல் படம்    
February 13, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

முதலில் கிசுகிசுகோடம்பாக்கம் முழுக்க இந்தப் படத்தின் டிவிடி ரகசியமாக உலவுகிறது. குறைந்தது பத்து இயக்குனராவது இந்தப் படத்தை ‘தமிழுக்கு’ ஏற்றபடி மாற்றியிருக்கிறார்கள். முதலில் படம் பண்ணப்போகும் அதிர்ஷ்டசாலி யாரோ?!ஒரு முன் - பின் குறிப்புஇந்த சினிமா விமர்சனத்தில் முன், பின் நவீனத்துவத்தை தேடாதீர்கள். அதாவது - இது பக்கா, கமர்ஷியல், காதல் படம். இதை ரசித்தவனும் சரி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தி லெஜண்ட் ஆஃப் 1900 - சினிமா விமர்சனம்    
February 11, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

வாழ்க்கைதான். இருப்புதான். மகிழ்ச்சிதான். துக்கம்தான். சிரிப்புதான். உணர்வுகள்தான். உணர்ச்சிகள்தான். சந்தேகமே இல்லை. வாழத்தான் பிறந்திருக்கிறோம். அனுபவிக்கத்தான் வளர்கிறோம். அசை போட்டபடி இறுதி நாட்களை கழிக்கத்தான் சபிக்கப்பட்டிருக்கிறோம். இந்த நியதியில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், சொற்கள் திறக்கும் ஜன்னல்களைவிட, நினைவுகள் பொங்கி வழியும் கடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்