மாற்று! » பதிவர்கள்

பாச மலர்

வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்/ வ(ப)ழக்கமாகிப் போன ஆங்கிலச் சொற்கள்    
March 5, 2009, 4:53 am | தலைப்புப் பக்கம்

திகழ்மிளிர் இத்தொடரை எழுதச் சொல்லி நாட்கள் பலவாகிவிட்டன. சரி, பொதுவாக வழக்கில் ஒழிந்து நிற்கும் சொற்களைப் பற்றி எழுதலாம் என்று முதலில் நினைத்தேன். என் வழக்கிலேயே ஒழிந்து போய்விட்ட சொற்களைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது.கடந்த வருடம், ஒரு நண்பர் பொதுவாக நாம் உபயோகிக்க மறந்த தமிழ்ச் சொற்களைப் பட்டியலிட்டு, (கிட்டத்தட்ட 100க்கும் மேல்..மேலோட்டமாகப் பட்டியலிட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

விஸிட் விஸா    
February 23, 2009, 2:23 pm | தலைப்புப் பக்கம்

ஷ்..ஷ்..ஷ்...குக்கர் விசில் அடிக்க, 'ஏய் மாலூ குக்கரைநிறுத்துடி..'குளியலறையில் துணிகளை இயந்திரத்துக்குள் திணித்துக்கொண்டிருந்த சாந்தி கத்தினாள்.அடுத்த இரண்டு நொடியில் மீண்டும் 'ஷ்..ஷ்..'இவ என்னிக்கிதான் சொன்ன பேச்சக்கேட்டிருக்கா' முணுமுணுத்தவாறே அடுக்களைக்கு விரைந்து அணைத்தாள். மீண்டும் குளியலறைக்கு விரைய,இப்போது போன்...இன்னிக்கு என்ன நிம்மதியா ஒரு வேலையை முடிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முரண்கள் பலவிதம் (2)    
February 15, 2009, 7:18 pm | தலைப்புப் பக்கம்

எதிர்காலக் கனவுகளில் வீணாகின்றனபல நிகழ்கால நிஜங்கள்.ஊருக்கு உணவு படைத்துவீட்டுக்கு வந்த உணவகச் சமையல்காரன்வீட்டின் அடுப்பில்தூங்குகிறது பூனை.'நொடிகள் சேமிப்பது எப்படி?'மணிக்கணக்கில் பேசினார்விழாப் பேச்சாளர்.'ஆண்டவா! எல்லோரும் நல்லா இருக்கணும்'ஆலயத்தில் வேண்டிவிட்டுவெளியே வந்தவர் வேட்டியில் சேற்றை வாரிச் சென்றவாகன ஓட்டுனரைச் சாடினார்..'நாசமாப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வேற்றுமையில் ஒற்றுமை    
October 24, 2008, 6:34 pm | தலைப்புப் பக்கம்

அரசியல் கட்சிகளில்ஆயிரம் வேற்றுமைஆளுங்கட்சி எதிர்க்கட்சிஇலக்கணங்களில்பதவி பண ஆசைகளில்கட்சித் தாவலில்வாக்குறுதி வழங்கலில்வார்த்தை மீறலில்இரட்டைநாக்கு மொழிகளில்அடடா என்ன ஒற்றுமை..தொலைக்காட்சி அலைவரிசைகளில்ஆயிரம் வேற்றுமைநிகழ்ச்சிகளின் நிரலில்தொடர்களின் தரத்தில்குடியரசு தினம் தொடங்கிமதவாரியாய்ப் பண்டிகைகள் வரைநடிகையின் நாய்க்குட்டியும்நல்கும்...தொடர்ந்து படிக்கவும் »

தோள் கொடுக்கிறதா தோழமை?    
May 21, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

இயந்திர முலாம் பூசிய செயற்கையான வாழ்க்கைமுறை நடுவில் உறவுகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது கூடப் பல சமயங்களில் இயலாமல் போய்விட்ட ஒன்று. 'வாழ்வு முழுவதும் தொடரும் தோழமை' என்ற கூற்று அர்த்தமற்றதாகிவருகின்றதோ என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.'உயிர் காப்பான் தோழன்', 'உடுக்கை இழந்தவன் கை' என்ற வாக்கியங்கள் இலக்கிய அளவில்மட்டும்..ஏட்டுச் சுரைக்காயாக மட்டும்உலவி வருகின்றன. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ரசனை மாற்றம் Vs கருத்து வேறுபாடு Vs பலப்பரிட்சை    
March 17, 2008, 9:27 am | தலைப்புப் பக்கம்

இட்லிக்கு எந்தச் சட்னி பிடிக்கிறது என்று சமையலில் தொடங்கி சகலமும் ரசனைகளின் அடிப்படையில்தான்..ஏதோவொன்றின் மீது ஏற்படும் பிடித்தம் அல்லது ஈடுபாடு அளவுக்கதிமாகும் போது ரசனையாதல் இயல்பு. இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை.பள்ளிப் பருவத்தில் ரஜினி - கமல், ஸ்ரீதேவி - ஸ்ரீப்ரியா/ரத்தி, யேசுதாஸ் - எஸ்.பி.பி , சுஜாதா - பாலகுமாரன், பாலசந்தர் - பாரதிராஜா ... இது போல் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாதனை Vs வேதனை    
March 15, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

(ரத்னேஷ் அவர்களின் பதிவு படித்து அங்கே பின்னுட்டமாய்ப் பகிர்ந்து கொண்ட செய்தியைச் சற்றே விரிவாகப் பதிவிடுகிறேன்..)"மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லிக் காட்டு..""ABCD சொல்லிக்காட்டு..""திருக்குறள் மொத்தமும் நேர்வரிசை, தலைகீழ் வரிசையில் தப்பு விடாமச் சொல்லுவா..""நீயுந்தான் இருக்கியே..கணக்கு வாய்ப்பாடு ஒழுங்காச் சொல்லத்தெரியுதா..அந்தப் பொண்ணைப் பாரு...உலக நாடுகளின் கரன்ஸி, தலைநகரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

பள்ளியில் சேர்க்கும் போது கவனிக்க வேண்டியவை    
March 12, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

"ஆமா..இப்பவேருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாதான் ஸ்கூல் போறப்ப கஷ்டமிருக்காது"ன்னு சொல்லி ABCD சொல்லிக்கொடுக்கிறாங்க அம்மா..அப்பாவுக்கும் அதே மனநிலை..இது என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி..இதை நேற்றுத் தொலைபேசியில் கேட்ட போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த அம்மா என் ஒன்று விட்ட சகோதரி என்பதால் உரிமையுடன் ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. அந்தக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கல்வி

இவர்கள் என்ன சொல்கிறார்கள்?    
March 2, 2008, 9:19 am | தலைப்புப் பக்கம்

ஐன்ஸ்ட்டின்:ஒருவர் தான் தவறுகளே செய்யவில்லை என்று நம்புவாராயின், அவர் தன் வாழ்வில் புதிய முயற்சி எதுவுமே மேற்கொள்ளவில்லை என்று அர்த்தம்.சுவாமி விவேகானந்தர்:பிரச்னைகளை எதிர்கொள்ளாத நாள் என்று ஒன்று இருந்தால், நீங்கள் தவறான பாதையில்செல்கிறீர்கள் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.ஆப்ரஹாம் லிங்க்கன்:எல்லோரையும் நம்பும் குணம் ஆபத்தானது. ஒருவரையுமே நம்பாத குணம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கலைகளுக்குதான் மரணமில்லை..கலைஞனுக்குதான் உண்டே..    
February 27, 2008, 8:29 pm | தலைப்புப் பக்கம்

உன்னிடம்கற்றதும் பெற்றதும்ஏராளம்!உன் எண்ணங்கள்என் கைப்பிடித்துச் சென்றுகாட்டிய வழியெல்லாம்பூத்துச் சிரிக்கின்றதுபூபாளம்!கதைகள் மீதுகாதல் பிறக்கச் செய்தாய்!எழுத்தினாலேஎன்னுள் புரட்சி செய்தாய்!கண்ணில் கண்டஉலகங்கள் மட்டுமல்லகாணா உலகங்களையும்கவின்மிகு காட்சி செய்தாய்!அறிவில் கண்டஅறிவியல் ஆழம்,அண்ட சராசரத்தின்அகலம் நீளம் சகலம்அறிந்து வைத்திருந்தாய்!உறவில்...தொடர்ந்து படிக்கவும் »

படித்தால் மட்டும் போதுமா?    
February 20, 2008, 12:22 pm | தலைப்புப் பக்கம்

"ஏண்டி உன் பையனைக் கூட்டிட்டு வரலே கல்யாணத்துக்கு? நான் பாத்து எவ்ள நாளாச்சு?""அவனுக்கு யூனிட் எக்ஸாம் நடக்குது..லீவு போட முடியல.."(பையன் படிப்பது 1ம் கிளாஸ்)"ஜுரமாவது ஒண்ணாவது...ஸ்கூல் மட்டம் போடக்கூடாது..போய்த்தான் ஆகணும்.."(பையனுக்கு உண்மையிலேயே ஜுரம்.)"23.75 தான் வாங்கிருக்க..மீதி 1.25 மார்க் எங்கே போச்சு? சதீஷ் பாத்தியாடா? எப்படி 100 வாங்குகிறான் எப்போதும்?"படம் வரைஞ்சே பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் கல்வி

அவன் இவன் என்ற ஏக வசனம்    
February 11, 2008, 7:21 am | தலைப்புப் பக்கம்

"டேய்..டெண்டுல்கர் 44 அடிச்சிருக்காண்டா..""விஜய் சூப்பரா நடிச்சிருக்காண்டா..""நமீதா நல்லா ஆடிருக்காடா.."ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்ற போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அவர் மகள் "இந்த சத்யராஜ் படமே வேஸ்ட்...ஏம்ப்பா இவன் படத்தைப் போடுறீங்க.."அவள் அப்பா தேமே என்று சானல் மாற்றினார்.செய்திகள் வந்தது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். "இந்தம்மா வந்துருச்சா...ஏதாவது கலைஞர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சாகரன் என்ற கல்யாண் -‍ஒரு நினைவ‌ஞ்ச‌லி    
February 10, 2008, 7:54 am | தலைப்புப் பக்கம்

அதற்குள் வருடம் ஒன்று ஓடிவிட்டதா?2006 டிசம்பர் இறுதி வாரத்தில் முதல் முறையாகக் கல்யாண் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க நேர்ந்தது. உணவு விடுதி ஒன்றில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது..சிரிப்புடன் சின்னதாக ஒரு அறிமுகப் படலம். அன்றிரவு அவர்கள் இந்தியாவுக்கு 2 வார விடுமுறை செல்வதற்கான ஆயத்தத்தில் இருந்தார்கள். அபர்ணா கல்யாண் பெற்றோருக்கு மற்றும் ஊரிலுள்ள அனைவருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பிரிவோம் சந்திப்போம் - மனோதத்துவ வகுப்பு    
January 31, 2008, 8:37 am | தலைப்புப் பக்கம்

ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒரே கவுன்சிலிங் மயம். திருமணமான புதிதில் சினேகா தோழிகளிடம், ஏன் தன் தாயிடம் கூட எப்படி நடந்து கொண்டால் என்ன கிடைக்கும் என்பது மாதிரியான கவுன்சிலிங். திருமண ஆல்பத்தைப் புரட்டினாலே, மீண்டும் கவுன்சிலிங்.(counselling - ஆலோசனை தவிர வேறு ஏதும் தமிழ் வார்த்தை இருக்கிறதா? ஆலோசனன ஏனோ இங்கு பொருந்தாதது போல் தோன்றுகிறது.)தனிக்குடித்தனத்தில் வளரும் ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விளிம்பு    
January 29, 2008, 8:00 am | தலைப்புப் பக்கம்

விரக்தியின் விளிம்பில்விழிகள் நிறைந்துவிழத்துடிக்கும் கண்ணீர்.கண்ணீரின் விளிம்பில்கரையத் துடிக்கும்கல்லாய்ப் போன மனம்.மனதின் விளிம்பில்மயங்கி மீண்டும்மலர்ந்து நிற்கும் நினைவு.நினைவின் விளிம்பில்நீந்திச்சென்று மீட்டெடுத்தநிச்சய நிச்சலன அன்பு.அன்பின் விளிம்பில்அகன்ற துயரம்அலையின் தொடராய் நம்பிக்கை.நம்பிக்கையின் விளிம்பில்நலிந்து போய்நாடி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

அரவணைப்பு Vs செல்லம்    
January 26, 2008, 10:56 am | தலைப்புப் பக்கம்

காட்சி-1:ஒரு கடையில் ஒரு பையன் உருண்டு உருண்டு அழுது கொண்டிருக்கிறான்.அம்மா: அது போல் கார் ஏற்கனவே இருக்குடா..வேண்டாம்.அப்பா: நாலு சாத்து சாத்துனா சரியாப் போயிரும்..(சாத்துகிறார்..)பையன் இன்னும் உருண்டு கொண்டிருக்கவே, மனனவியை பில் பணம் கொடுக்கச் சொல்லிவிட்டுத் தர தரவென்று பையனை இழுத்துச் செல்கிறார்.காட்சி-2:மகள்: எனக்கு பெப்ஸி வேணும்..அம்மா: ஏற்கனவே 2 தடவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

நந்து f/o நிலாவின் விருப்பத்துக்காக - மாண்டிஸோரி கல்வி முறை    
January 10, 2008, 10:24 am | தலைப்புப் பக்கம்

(என் http://pathivu.madurainagar.com/2008/01/blog-post_5731.html பதிவில் மாண்டிஸோரி பள்ளி நினைவுகளைத் தொகுத்திருந்தேன். அதைப் படித்து நந்து வைத்த கோரிக்கைக்கான பதிவு இது.)இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமானதாக, குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வித் தேவைகளுக்கேற்ப இந்தக் கல்வி முறை அமைந்துள்ளது என்பது என் கருத்து. இத்தகைய ஒரு அமைப்பை சுமார் 35 வருடங்களுக்கு முன்பே கொண்ட ஒரு பள்ளியில் நான் படித்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

மதுரை அழைக்கிறது...    
December 15, 2007, 8:22 am | தலைப்புப் பக்கம்

மதுரை மாநகரம் பகுதியில் இருக்கும் பதிவுகள் அனைத்தையும் இன்றுதான் முழுமையாகப் படித்து முடித்தேன். நம் ஊர் என்றாலும் இதுவரை அறிந்திராத செய்திகள்தான் எத்தனை!மலரும் நினனவுகள், தலபுராணம் என்று பகுதிகள் அனனத்தும் மீண்டும் நம் ஊர்ப்பக்கம் போய் வரச் செய்தன..இதைப் படித்ததும் கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் புரிதல், கொஞ்சம் சிந்தனை, கொஞ்சம் ஆதங்கம் எல்லாமே எழுந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அன்புடன் அஜீத் - முதல் தொலைக்காட்சிப் பேட்டி    
November 26, 2007, 1:43 pm | தலைப்புப் பக்கம்

நாட்டுக்கு ரொம்பத் தேவையான்னு கேக்குறவங்க ஒதுங்கிக்கோங்க ப்ளீஸ்..ஆட்சேபமில்லாதவங்க தொடரலாம்..கலைஞர் டிவியில் காலை 12 மணி முதல்(சவுதி நேரம்) இந்த அறிவிப்பு கீழே ஓடிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்