மாற்று! » பதிவர்கள்

நிவேதா

In search of a home and a land    
September 30, 2008, 4:20 pm | தலைப்புப் பக்கம்

1. Lost Identitiesயாழ்ப்பாணத்தி..பனங்கிழங்கு வாசமறியா, பனாட்டு சுவைக்கு முகஞ்சுளிக்கும்,காலில் மருதாணியாய் அப்பி நிறமேற்றும்செம்மண்ணைக் குறைகூறித் திரிகின்றவளேயெனினும்..கொழும்பு நகரம்,அதன் புழுதியிறைந்த தெருக்களின் மத்தியில்நாவிலிடறும் கொன்வென்ட் ஆங்கிலத்துடனும்,இலாவகமான சிங்களத்துடனும்தனது 'நகரத்தி' அடையாளத்தை சிறு எலுமிச்சஞ்செடியெனநீரூற்றி வளர்ப்பவளைஅடையாள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மரபுகள் X புனை/மறை கருத்தமைவுகள்    
September 19, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

- றொமிலா தாப்பருடன் ஓர் நேர்காணல்இந்தியாவில் இன்றைய பெண்களின் நிலையானது எப்போதும் மரபுகளின் மிகையான தாக்கத்துக்குட்படுத்தப்பட்டதாகவே பண்புருவமைக்கப்பட்டு வருகிறது. மரபுகளை நீங்கள் எவ்விதம் பார்க்கிறீர்கள், அவை எவ்விதம் எமது வாழ்வைப் பாதிக்கின்றன? பொதுவாக குறித்ததோர் நடத்தையை, மனப்பான்மையை அல்லது ஒழுக்காற்றமைவை வற்புறுத்த வேண்டுகையில், அது காலங்காலமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில் நீயோ நானோ    
June 5, 2008, 6:11 pm | தலைப்புப் பக்கம்

கடலொன்று காத்திருந்தது எம்மிருவருக்கும் மத்தியில்நீயோ நானோ இப்படியிருந்திருக்க வேண்டியவர்களல்லஅடிவானத்தைப் பார்த்துநான் உரக்கக் கத்த வேண்டியிருந்தது,மனிதர்களை நேசிப்பவளெனினும்காற்றில் கலந்த என் குரலைசூரியன் விழுங்கி ஏப்பம் விட்டதாகஅவர்கள் பேசிக்கொண்டார்கள்எனக்குத் தெரியும்,படகெடுத்து கையுளைய துடுப்பு வலித்துபுயல்கள் கடந்து உன் கரையை வந்தடையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பெண்ணும் பயணியுமாயிருத்தல்    
March 14, 2008, 12:55 pm | தலைப்புப் பக்கம்

- Being a woman and a traveller (பெண்ணியப் பயண இலக்கியங்களை முன்வைத்து)முற்குறிப்புதுணையின்றி தனித்துப் பயணித்தலென்பது காலங்காலமாக பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. வீட்டை விட்டு வெளிவரவே அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலங்கடந்து இன்றைக்குப் பெண்களின் வெளியுலகப் பிரவேசமானது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், நாடுகள், எல்லைகள் கடந்தலையும் தேசாந்திரிகளாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் பயணம்

புழுவென மரணமூறும் தெருக்கள்    
February 10, 2008, 4:10 pm | தலைப்புப் பக்கம்

இந்த நாள் ஒரு விசர்க்கனவோட விடிஞ்சது. அக்கா ஒரு பெரிய கட்டடத்திலையிருந்து கீழை குதிச்சு தற்கொலை செய்யுறா.. நான் கீழையிருந்து பார்த்துக்கொண்டேயிருக்கிறன் அவா விழுறதை.. ஒவ்வொரு மாடியாய்க் கடந்து கடந்து அவாட உடம்பு கீழை விழுந்து சிதறித் தெறிக்கிறதை பார்த்துக்கொண்டேயிருக்கிறன்.. எனக்குப் பக்கத்திலையிருந்த அப்பா அதைப் பார்க்கச் சகிக்காமல் நெஞ்சு வெடிச்சு இறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

அரியத்திலுருளும் உணர்வுகள்    
December 31, 2007, 5:17 pm | தலைப்புப் பக்கம்

பாவமன்னிப்புக் கேட்கவேண்டும் நான்வலியெடுத்துக் கதறுமோர்குழந்தையின் குரலில்செய்தவைக்காகவும்செய்யாமல் தவிர்த்தவைக்காகவும்கதைத்தவைக்காகவும்சமயங்களில் கதைக்க மறுத்ததற்காகவும்சுற்றியிருக்கும் அனைவருக்கும்வெறுப்பினையே பரிசளித்தமைக்காகபிறர் முதுகில் சுமையிறக்கிஆறுதலாக இளைப்பாறியமைக்காகபுன்னகைகளைக் கிழித்தெறிந்துகருந்திரைகளைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உனக்கும் எனக்குமிடையே ஒரு மூன்றாவது மனிதனைப்போல    
December 13, 2007, 6:47 pm | தலைப்புப் பக்கம்

காலம்: இறுதித் தீர்ப்பு நாள்இடம்: நியாய சபைநேரம்: விஜயன் வேட்டையாடப் போவதற்கு சற்று முன்புநாம் அங்கு காத்திருந்தோம் அந்நியர்களென,தனிமையின் சுவரை எமக்கு நேரே வளர்த்திவிட்டு..மௌனம் எமக்கிடையேஒரு மூன்றாவது மனிதனைப்போல அமர்ந்திருந்ததுஎத்தனை குழந்தைகள் உன்னைச் சுற்றிலும், குவேனி*தோளையும் முலைகளையும் பற்றித் தொங்கியபடிகாலை சுற்றிக்கொண்டு நகர விடாமல்நான் கத்தியழ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

பிரதிகளை மீளப் பதிதல் - 3    
December 8, 2007, 2:39 am | தலைப்புப் பக்கம்

See No Evil, Hear No Evil, Speak No Evil..!Funny Boy- Shyam Selvaduraiகுழந்தைகள் தொலைந்து கொண்டிருக்கும்நாட்டைபூர்வீகமாய்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கதை புத்தகம்

பிரதிகளை மீளப் பதிதல் - 1    
October 15, 2007, 11:55 pm | தலைப்புப் பக்கம்

-The God of Small Things1.மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மர்மங்கள் நிறைந்து வழிந்திடுமொரு வீடு    
September 2, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

கண்மூடித் திறப்பதற்குள்சிறகுதிர்த்துப் பறந்து மறையும்வண்ணப் பறவையொன்றன் நினைவில்அலைவுறும் அடிமனம்..இறுதியில், எனக்கென மிஞ்சுவதென்னமோகூந்தலிடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முன்பனிக்காலத்துப் பிரியங்கள்    
July 25, 2007, 3:20 am | தலைப்புப் பக்கம்

செஞ்சொண்டுக் காகமொன்றன்நிலம் பதியா நிழல்போலஅலைவுண்டபடியிருக்கும்,ஒரேயொரு நினைவு மட்டும் எனக்குள்..அழித்துவிட முடியாததும் நித்தியமானதுமாய்..சிவனொளிபாதத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வெறுமைகளின் வன்முறை    
June 12, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு..!- மால்கம் எக்ஸின் அட்டல்லாவுக்கும், எஸ்போஸின் குழந்தைக்கும் மற்றும் அனைவருக்கும்1.எப்போதும் எதையாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

நேசத்துக்குரியவர்களை நெகிழ்வுடன் அசைபோடுதல்    
June 4, 2007, 3:24 pm | தலைப்புப் பக்கம்

உன்னுடனான சில நிமிட உரையாடலே போதுமானதாயிருக்கிறது.., உலகத்துக் கவலைகளை மறக்க; மறுபடியுமொருமுறை புத்துயிர் பெற்றெழ. உனது அன்புக் கட்டளையின்படி நேற்றிரவு, வேண்டாத விடயங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மோகித்திருப்பதன் சாபங்களைக் கனவில் வரைதல்    
May 14, 2007, 2:36 pm | தலைப்புப் பக்கம்

நேற்றுஅவனென்னைப் பிரிந்தான்அதிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும்எல்லாமே...நான் இன்னொருத்தனை மோகித்திருந்தேனாம்..(எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தேவதைகள் காத்திருப்பதில்லை    
May 1, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

தேவதைகள்சினங்கொள்ளக் கூடாதென்கிறார்கள்..பெருந்தன்மை வாய்ந்தவையென்கிறார்கள்..எற்றுண்டு கிடத்தல்......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காலனித்துவ இலங்கை அரசியல் சமூகத்தில் தமிழ்ப் பெண்களும் பெண்களின் அரசிய...    
April 29, 2007, 1:48 pm | தலைப்புப் பக்கம்

காந்திய வழி சமூக சேவையாளர் மங்களம்மாளை முன்வைத்து.. (வள்ளிநாயகி இராமலிங்கத்தின் 'யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி - ஓர் ஆய்வு' எனும் நூலை வாசித்துக்...தொடர்ந்து படிக்கவும் »

சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..!    
April 22, 2007, 3:42 am | தலைப்புப் பக்கம்

கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்?நினைவில்லை.கருநிறக் காளானென தெருவெங்கும்ஆங்காங்கே முளைத்திருக்கும்குடைகளின் விளிம்புகளிலிருந்துவெண்பனித்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சரிநிகர் - சில நினைவுக் குறிப்புகள்    
April 12, 2007, 5:28 am | தலைப்புப் பக்கம்

1.அப்போதெல்லாம் நான் மிகச் சிறியவளாயிருந்தேன்.. குறும்பு செய்துகொண்டு துள்ளித் திரிந்த பருவத்தில் என் எதிர்பார்ப்புகள் மிகச் சாதாரணமானவையாக இருந்தன.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் ஊடகம் புத்தகம்

எல்லாம் சரியாய் அமைதியாய் அழகாய்த்தானிருக்கின்றன.....    
April 10, 2007, 11:43 am | தலைப்புப் பக்கம்

எல்லாம் சரியாய் அமைதியாய்அழகாய்த்தானிருக்கின்றன..சுயத்தினை நோக்கிய தேடல்களும்,உள்ளார்ந்த தொலைதல்களும்என்றும் சுவாரசியமானவைதான்..,தடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள்    
March 30, 2007, 2:11 pm | தலைப்புப் பக்கம்

1.மார்பின் மீது கவிழ்ந்து கிடந்ததுரமேஷ் - பிரேமின் கவிதைத் தொகுதிஎன்னையறியாமலேயெ உறங்கிவிட்டிருந்தேன்பிரதியின் பக்கங்களிலிருந்து நழுவியபுலிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

தவறவிடப்படக்கூடாத சாட்சியங்கள்...    
March 27, 2007, 1:23 pm | தலைப்புப் பக்கம்

1.மின்சாரத்தடைசுற்றிவளைப்புதேடுதல்..நாய்களின் ஓலம்பூட்ஸ்களின் தடதடப்புநெரிபடும் சருகுகள்..விமானத்தாக்குதலின் பின்னரான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

தவறவிடப்படக்கூடாத சாட்சியங்கள்    
March 27, 2007, 5:04 am | தலைப்புப் பக்கம்

1.மின்சாரத்தடைசுற்றிவளைப்பு தேடுதல்..நாய்களின் ஓலம்பூட்ஸ்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கவிதை

பிரிவும் பிரியங்களும்    
February 20, 2007, 3:45 pm | தலைப்புப் பக்கம்

(I)கபடங்கள் புரியாத வயதுகளை சிதைத்துக் கொன்ற வக்கிரங்களின் பிடியிலிருந்து இன்னமும் மீண்டுவிடாத இரவுகள் இப்போதெல்லாம் என் பகல்களின்மீதும் படரத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பிரதிகளினூடு ஒரு பயணம்.., யதார்த்தத்தை நோக்கி    
February 16, 2007, 7:11 pm | தலைப்புப் பக்கம்

'எழுதுவது என்பது ஒரு நெருப்புக் குளியல்.எழுத்துத் தீ,கருத்துக்களின் பெருங்குழப்பத்தை மேலே உயர்த்திபடிமங்களின் கூட்டத்தைப் பிரகாசமாக எரிக்கிறது;அவை...தொடர்ந்து படிக்கவும் »

காதலர் தினம்: மாயையும் மிகைபுனைவும் / மகிழ்வும் மனக்கிளர்வும்    
February 15, 2007, 3:44 pm | தலைப்புப் பக்கம்

1.'...ஆண்-பெண் என்ற அங்க அடையாளங்கள் மறந்து எனது / எனக்குத் தேவையற்ற ஆண்மையை நான் களையவேண்டும். உன்னிடத்தில் நானொரு ஆணாக இருப்பதைவிட துடிக்கின்ற மென்னிதயம் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »

தூவானமாய்ப் பொழியும் தாரகைகள்...    
January 10, 2007, 5:05 pm | தலைப்புப் பக்கம்

புரிகிறது நீ அருகிலில்லையெனஎன்றென்றைக்குமான கனவாய்எதையெதையோ யாசித்துயதார்த்தம் பெருநெருப்பாய்பொசுக்கிடும்போதுஎங்கிருந்தோ வந்துவிடுகின்றனசில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'லங்கா ராணி: A Land Like No Other'    
January 8, 2007, 6:26 pm | தலைப்புப் பக்கம்

'எங்களைவிட எளிமையானவர்களாயும், எங்களைவிட அதிகப் பெருமிதத்தோடும், அல்லது குறைவான கண்ணீர்த்துளிகளோடும் இருப்பவர் யாருமில்லை'நம்முடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

சுவர்க்கத்தின் வர்ணமும் பூலோகத்தின் வெளிறலும்    
October 5, 2006, 4:33 pm | தலைப்புப் பக்கம்

பாதாள ரயில்வண்டி இரு நிலையங்களுக்கிடையேவெகுநேரம் நின்றுவிடும் சமயத்தில்சம்பாஷணை எழுகிறது, பின் மெதுவாக மங்கிமௌனமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

திரை எழுப்பும் அலை    
August 20, 2006, 3:40 pm | தலைப்புப் பக்கம்

சுவர்க்கம் - குழந்தைகள் - யதார்த்தம்: வி(ழிப்/ளிம்)பு நிலை அணுகல்எனக்குள்ளேஒரு சின்னஞ்சிறுபெண்எப்போதும்...தொடர்ந்து படிக்கவும் »