மாற்று! » பதிவர்கள்

நித்யகுமாரன்

“சுப்ரமணியபுரம்” - தவறவிட வேண்டாம்    
July 8, 2008, 4:20 am | தலைப்புப் பக்கம்

இனிய நண்பர்களுக்கு வணக்கம். சற்றே இடைவெளி விழுந்துவிட்டது. இனி சுப்ரமணியபுரத்திற்கு போகலாம்.படத்தைப் பற்றிய பார்வையை இங்கு துளிகளாகத் தருகிறேன்.* “கற்றது தமிழ்” படம் பார்த்தபோது “இந்த படம் வெற்றி பெற வேண்டுமே...” என்று உதித்த ஆசை, இந்த படம் பார்த்தபின்னும் தோன்றியது.* இயக்குனர், தயாரிப்பாளர் திரு.சசிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிகவும் அழகாக செதுக்கப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு...    
May 7, 2008, 6:26 am | தலைப்புப் பக்கம்

இனிய நண்பர்களுக்கு...அன்பான வணக்கங்கள். சமீபகாலமாக ஏதும் எழுத தலைப்படாமல் இருந்து விட்டேன். ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது. சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லாததுதான் காரணமேயன்றி வேறொன்றுமில்லை. இப்போதுகூட காரணமேதுமில்லாமல்தான் எழுத எத்தனித்திருக்கிறேன்.உங்களுடன் பகிர நினைத்த நிகழ்வுகளை புள்ளிகளாகத் தருகிறேன். வாசிக்க எளிமையாக இருக்கும்.* நண்பர் தனசேகர்...தொடர்ந்து படிக்கவும் »

வெள்ளித்திரை - திரைப்பார்வை    
March 8, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

“மொழி” வெற்றிப்படத்திற்குப் பிறகு, பிரகாஷ் ராஜின் Duet Movies நிறுவனம் Moser baer உடன் இணைந்து தந்திருக்கும் திரைப்படம். படத்தின் தலைப்புப்படி திரைத்துறையைச் சார்ந்து இயங்குகிறது கதை. இன்னும் சிறப்பாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கலாமோ என்ற கேள்வியுடன் முடிவடைகிறது படம்.கதாநாயக ஆர்வத்திலிருக்கும் கன்னையாவும் (பிரகாஷ் ராஜ்), இயக்குநர் ஆர்வத்திலிருக்கும் சரவணனும் (பிருத்விராஜ்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கிருபா, சத்யாவிற்கு உண்மையான நண்பனாக இருந்தானா...? - “அஞ்சாதே” ஒரு ம...    
February 27, 2008, 2:46 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் “அஞ்சாதே” திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன் . மேலும் எழுதத்தூண்டும் அளவுக்கு படத்தில் சரக்கு இருப்பதாக நினைப்பதால் இந்த பதிவை எழுதவிழைகிறேன். ஏற்கனவே எழுதிய பதிவிற்கு அப்படியொன்றும் பலமான வரவேற்பு (அதிக மறுமொழிகள் வாயிலாக) இல்லாத போதிலும், பரவலாக வாசிக்கப்பட்டதால் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்) திரும்பவும் எழுதுகிறேன். அப்படி சிலாகிப்பதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஆனந்தவிகடனின் போக்கு - ஒரு வாசகனின் பார்வை    
February 25, 2008, 8:50 am | தலைப்புப் பக்கம்

மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

அஞ்சாதே - திரைப்படப் பார்வை    
February 22, 2008, 1:09 am | தலைப்புப் பக்கம்

மிக நீ..........ண்ட இடைவெளிக்குப் பிறகு, நல்ல படம் பார்த்த திருப்தியைத்தந்த படம். நட்பை அடிநாதமாக அமைத்து பல தளங்களில் இயங்குகிறது படம். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும் வாழ்வின் எதார்த்தம்தான் படத்தின் திருப்புமுனை. SI ஆவதே தன் வாழ்நாள் லட்சியமாக செயல்படும் கிருபாவும்(அஜ்மல்), “நான் போலீஸ் வேலைக்கு போகமாட்டேன். எல்லாரும் மாமான்னு கூப்பிடுவாங்க..” என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்