மாற்று! » பதிவர்கள்

நா. கணேசன்

`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு - டேவிட் தேவிதார் அறிவிப்பு    
April 18, 2010, 3:37 pm | தலைப்புப் பக்கம்

இந்திய அரசாங்கம் யூனிக்கோட் எழுத்துருவை தமிழ் போன்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தச் சில காலம் செல்லலாம். செம்மொழி மாநாடு இதைச் சாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.சொற்பகுப்பாய்வு பற்றிப் பத்ரி சேஷாத்ரியின் பதிவில் பார்த்தேன்.http://thoughtsintamil.blogspot.com/2010/04/blog-post_17.htmlமுனைவர் மு. இளங்கோ அரசு நிறுவனங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு!    
July 22, 2009, 12:59 pm | தலைப்புப் பக்கம்

குருவிகள் என்னும் நல்ல விஞ்ஞான வலைப்பதிவினை நடாத்திவரும் நண்பர் வலைப்பதிவு, வலைத்திரட்டிகளின் 2003-2004 கணிவரலாற்றில் சில சுவடுகளைப் பதிந்துள்ளார். (குருவிகள் ஒரு புனைபெயர், இயற்பெயர் அறிந்துகொள்ள ஆசை).தற்காலப் பதிவர்களுக்கு ஆரம்ப காலக் கணிசரிதத்தில் சில முன்னெடுப்புகளையும், கலைச்சொல் ஆக்கங்களையும் பற்றிய சில செய்திகள், நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இம்மடல்.>வலைப்பூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

நுண்பதிவுலகம் (microblogs), சிட்டி (twits), சிட்டர் (twitter-er), தமிழ...    
June 27, 2009, 1:54 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மரபு அறக்கட்டளை முனைவர் நா. கண்ணன் மின்தமிழ் கூகுள்குழுவில் Twitter(http://twitter.com/) பற்றி அறிமுகம் ஒன்றை எழுதினார். அங்கே, 'மைக்ரோப்லாக்கிங்', ’ட்விட்டர்’ - இணையான தமிழ்ச் சொற்கள் பற்றி ஒரு சுவையான திரி இழைக்கப்படுகிறது.நா. கண்ணன்: ட்விட்டர் என்பது மிகப் பிரபலமாகி வரும் ஒரு இணையப் போக்கு. இதுவொரு குறுஞ்சேதி யோடை. சின்னச் சின்ன தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஊடகம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விண்டோஸ் 7.0ல் தமிழ் ஓம் எழுத்து    
May 7, 2009, 12:55 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் புதிதாய் விஸ்டாவில் இயங்கும் ஒரு கணினி வாங்கினேன். அதில் தமிழ் ஓம் (U+0BD0) காணவில்லை. ஏனென்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தாரை வினவினேன். ஆண்ட்ரூ கிலாஸ் (இவர் தமிழ் பிரமி உட்பட அசோகச் சக்கிரவர்த்தியின் பிராமி எழுத்துக்களை யூனிகோடில் சேர்த்தவர்) எழுதிய பதிலில் விண்டோஸ் 7.0லிருந்து தமிழ் ஓம் இலங்கும் என்று அறிவித்தார்: "Vista was released before Unicode 5.1 and the version of the...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் தமிழ்

சிந்து சமவெளியில் பழையோள் கொற்றவை    
February 17, 2009, 3:05 am | தலைப்புப் பக்கம்

பழந்தமிழ் இலக்கியங்கள் துர்க்கையைப் பழையோள், காடுகிழாள், ஐயை, ... என்றெல்லாம் போற்றுகின்றன. முருகனைப் பழையோள் குழவி என்று பாடித் திருமுருகு பரவுகிறது.சிந்து சமவெளியில் கொற்றவை பற்றிய கட்டுரை:http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.htmlஹார்வர்ட் தொல்கலை நிபுணர் ரிச்சர்ட் மெடோ அகழ்ந்து கண்டுபிடித்த அரசிலைத் தோரணத்தின் கீழ் நிற்பவர் ஒரு ஆண், கொற்றவையின் பூசகரான வேளாராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கூகுள் இணையப் பேருந்து ~ தமிழ்நாட்டு நகர உலா    
February 8, 2009, 12:07 am | தலைப்புப் பக்கம்

கூகுள் கம்பெனி இன்டர்னெட் வசதி, இணையம், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்க 'இண்டெர்நெட் பஸ்' ஒன்றைத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றுலா விடுகிறது. அரசாங்கம் செய்ய வேண்டிய பணி! பல இடங்களிலும் இலவச இன்டர்னெட் வசதி, வலைப்பதிவுகளைப் பதியச் சொல்லித் தந்தால் வெகுபயன் விளையும். இப்பொழுது கல்லூரிகள் விடுமுறைதானே. மாணவர்கள் அணிதிரண்டு இண்டர்நெட் கல்வியைப் பரப்பினால் தமிழின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலி (ஜூன் 7, 2008)    
May 22, 2008, 1:02 pm | தலைப்புப் பக்கம்

வரும் ஜீன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் மாவட்டக் கலெக்டர் திரு. கோ. பிரகாஷ், I.A.S தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் "இணையத்தில் வளர்தமிழ்" என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் தொ. பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஆங்கிலப் பள்ளிகளின் அசுர வளர்ச்சி - 'தென்றலில்' என் கடிதம்    
May 3, 2008, 3:17 am | தலைப்புப் பக்கம்

சென்னை மற்றும் கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் இதழ் தென்றல் அழகான பொலிவுடன் அச்சிலும், இணையத்திலும்வாசகர்களைக் கவர்ந்து வருகிறது. http://www.tamilonline.com/thendral/ முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்களின் பேட்டி:http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=87&cid=4&aid=4644http://www.tamilonline.com/thendral/MoreContent.aspx?id=88&cid=4&aid=4709அரிய பல தகவல்கள் உள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் கல்வி

இந்தி > ஆங்கிலத் தற்பெயர்ப்பு வசதி    
May 2, 2008, 4:35 pm | தலைப்புப் பக்கம்

எந்த மனித உள்ளீடும் இன்றியே, தானியங்கியாக இந்தி > ஆங்கிலத் தற்பெயர்ப்பு (auto-translation)வசதியைக் கூகுள் இந்தியர்களுக்கு வழங்கியிருக்கிறது. Google has just announced Hindi-English translation utility:http://translate.google.com/translate_t?langpair=hi%7CenHope other Indian languages such as Tamil, Bangla, Sanskritget the same, and the existing ones from European languagesinto...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்    
April 19, 2008, 12:26 am | தலைப்புப் பக்கம்

எம். வி. பாஸ்கரும் கே. டி. காந்திராஜன் சேர்ந்து உருவாக்கிய "ஊர்" என்னும் 30 நிமிடத் திரைப்படம் தமிழ்நாட்டின் 2000 ஆண்டு கலை, இலக்கிய வரலாற்றை அழகாகச் சொல்லிச் செல்கிறது. இந்த விளக்கப்படம் தோன்ற வழிகாட்டியாக மொழியியல் அறிஞர் இ. அண்ணாமலை (மைசூர் இந்திய மொழிகள் உயர் ஆய்வு மையம், யேல் பல்கலை) உதவியுள்ளார். எச்சிஎல் கணினி நிறுவனத்தார் நன்கொடையால் சிறப்பான இப்படத்தை வலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

புற்றுநோய் கொல்லி - கான்சியஸ் ரேடியோஅலை எந்திரம்    
April 17, 2008, 3:49 am | தலைப்புப் பக்கம்

'கேன்சருடன் ஒரு யுத்தம்' எனும் பதிவை புற்றுநோய்ப் போராளி அனுராதா அம்மையார் எழுதி வருவதைப் படித்து வருகிறீர்களா? http://anuratha.blogspot.com/ஹ்யூஸ்டன் நகரின் பெரிய மருத்துவ மனையில் ஒரு வியத்தகு புற்றுநோய் நீக்கும் ரேடியோ அலைகள் எந்திரத்தை மரு. ஸ்டீவன் கர்லி குழு சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றது. இம்முறையில் ஜாண் கான்சியஸ் என்னும் பென்சில்வேனியாக்காரர் கண்டுபிடித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஆப்பிரிக்காவில் தொடங்கிய மானுட வலசை    
April 8, 2008, 8:32 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனிதகுலத்தின் வலசைச் செலவு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.டிஸ்கவரி சேனலில் 'மைக்கேல் வுட்' எடுத்துள்ள ஸ்டோரி ஆப் இந்தியா ஏப்ரல் 16, இரவு 8 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 6 தொகுதிகள், ஒவ்வொரு புதன்கிழமையும். (மறுபரப்பு ஞாயிறுகளில் காலை 11 மணிக்கு).பேரா. பிச்சப்பன் தொடங்கிய திரு. விருமாண்டியின் மரபணுச் சோதனைகள், கேரளம், ... என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரை    
April 6, 2008, 3:53 pm | தலைப்புப் பக்கம்

ஹொகேனகல் தமிழில் "புகையின்கல்" என்பதாம். காவிரி நீர் பாறைகளில் மோதி மேட்டிலிருந்து சமவெளிக்கு வேகமாய்ப் பாய்ந்து தமிழ்மண்ணைத் தழுவ ஆவலுடன் தாவும்போது ஏற்படும் நீர்ப்புகையால் ஏற்பட்ட காரணப் பெயர். 7-8 நூற்றாண்டுகளுக்கு முன்னே பகரம் ஹகரமாகக் கன்னடத்தில் திரிந்தது: பால் > ஹாலு, பல்லு > ஹல்லு, பக்கி ( < பக்ஷி) > ஹக்கி, பவழம் > ஹவளம் ... "பொகெயினகல்" (misty boulders) > ஹொகெனகல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

2008-ல் மிக அதிக மழை ஏன்? சின்னஞ்சிறு பெண் effect    
April 5, 2008, 12:31 pm | தலைப்புப் பக்கம்

நடைபெறும் 2008-ல் தமிழகத்தில் படுமழை. ஏன்? இதற்கு பூமத்திய ரேகைக்கு அருகே பசிபிக் மாக்கடலில் ஏற்பட்டுள்ள "லா நின்யா" (La Nina) தோற்றப்பாடு (phenomenon) தான் முக்கியக் காரணம். பசிபிக் மகாசமுத்திரம் சராசரிக்கும் மேலாகச் சற்றே குளிர்ந்துள்ளதே எல் நின்யா இயற்பாடு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அண்மையிலே பூமிக்கோளத்தின் தண்மை-வெம்மையை ஆராயும் அறிஞர்கள் "எல் நின்யோ"(El Nino)/"லா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தமிழ்ப் புள்ளிக் கோட்பாடும் பெருமையும்    
April 2, 2008, 2:02 am | தலைப்புப் பக்கம்

யூனிக்கோட் 5.1 ஏப்ரல் நான்காம் தேதியில் இருந்து இயங்கவுள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள்:http://www.unicode.org/Public/5.1.0/ucd/NamesList.txtவங்காளியில் கண்ட-எழுத்து (த்):தமிழ் தவிர, மற்ற இந்திய மொழி இலக்கணங்களில் தனி மெய்யெழுத்துக்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. இந்தியில் மெய்களை அங்கே ஹல்லந்தம் என்பர். ஆனால் அதற்கு இலக்கணத்தில் அடிப்படையாக அங்கே பார்த்தால் காணோம். தனி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

ஆர்தர் சி. கிளார்க் (1917 - 2008)    
March 19, 2008, 12:31 am | தலைப்புப் பக்கம்

புகழ்வாய்ந்த விஞ்ஞானக் கதைசொல்லியும், செய்கோள்கள் (satellites) நம் உலகிற்கு மேலேவட்டமாய்ச் செல்லும் கிளார்க் பாதையைக் கணக்கிட்டவருமான ஆர்தர் சி. கிளார்க் இயற்கையோடு இன்றுக் கலந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேல் கொழும்பு நகரத்தில் வசித்தவர் கிளார்க். இன்று நாம் பயன்படுத்தும் அதிதுரிதத் தொலைக்காட்சி, போன்கள், இணையம் போன்றவற்றின் அடிப்படை ~ மனித குலத்தின் தொடர்பாடலுக்குக் ~...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

அந்தோணி முத்துவின் டிவி செவ்வி எவ்வாறு? எப்போது?    
March 16, 2008, 7:47 pm | தலைப்புப் பக்கம்

வாழ்விலும் வலைப்பதிவுலகிலும் சாதனைகள் புரிந்துவரும் அந்தோணி முத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குமாறு தமிழர்கள் உதவி செய்யவேண்டித் தமிழ்மணம் வலைத்திரட்டியில் அ. முத்துவிற்கு உதவி கோரி மின்னி (ticker) சில வாரங்கள் சுடரொளி வீசியது. இன்று பலரும் அவருக்குப் பெரும் உதவி செய்கிறார்கள். இப்போது, ஆனந்த விகடனிலும் அந்தோணி முத்து பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. 'என்றென்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சிதம்பரத்தில் தமிழ் வழிபாட்டுரிமை    
March 11, 2008, 1:35 pm | தலைப்புப் பக்கம்

தில்லைப் புதர்ச்செடியின் பெயரால் இந்தியாவின் தலைநகருக்குத் தில்லி (dhillika) என்னும் நகர்ப்பெயர் தோன்றியிருக்கலாம். தில்லைச் செடி (முனைவர் இராமகி). தென்தில்லை அம்பலத்தைத் திருமதி. கீதா சாம்பசிவம், குமரன், ஜி. இராகவன் முதலியோரும் நாக. இளங்கோவனின் தில்லையில் நடக்கும் ஆயிரங்காலத்து அடாவடி!, மற்றும் கண்ணபிரான் இரவிசங்கரின் சிவராத்திரி: தீட்சிதர்களுக்கும் ஆறுமுகச்சாமி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம் வரலாறு

டி-கதிர்களைப் பயனிக்கும் காமிரா    
March 11, 2008, 4:28 am | தலைப்புப் பக்கம்

வானியலில் மிக்க உபயோகமாகும் டெரா-ஹெர்ட்ஸ் கதிர்களைக் கொண்டு மக்களைச் சோதனை செய்யும் காமெரா (படத்தைப் பதிக்கும் படிமி) உருவாகியுள்ளது. அதனால், விமான நிலையங்கள், அரசியல் தலைவர்கள் கூட்டங்களில் நுழைவோர் தங்கள் ஆடைகளுக்கு உள்ளே வெடிகுண்டுகள், ஆயுதங்கள், போதைமருந்துப் பொட்டலங்கள் மறைபடத் தாங்கியுள்ளனரா என்று அறியமுடியும். இதுவரை எக்ஸ்-ரே கதிர்களைக் கொண்டியங்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

மெய்நிகர் மொபைல் எண் (Virtual Mobile Number) பெறுவது எப்படி?    
March 6, 2008, 3:37 am | தலைப்புப் பக்கம்

மதுரைப் பேரா. கு. ஞானசம்பந்தனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'எதுவென்றாலும் எஸ்எம்எஸ் அனுப்புங்கள்' என்றார். எனக்கு ஓர் இந்திய அல்லது அமெரிக்க மெய்நிகர் நகர்பேசி எண் (Virtual Mobile Number = VMN) வாங்க விருப்பம். அதாவது, அந்த VMN-ஐ இந்தியாவில் கொடுத்துவிட்டால், தமிழ்நாட்டில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் அந்த எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வசதியாய் இருக்கும். வரும் குறுஞ்செய்திகளை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

சிதம்பரம் தீட்சிதர்கள் (விவரணப்படம்)    
March 4, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

தில்லை தீக்‌ஷிதர்கள் பற்றிய விவரணப்படம் பாருங்கள்.தில்லைக் கூத்தன் திருவம்பலத்தில் தமிழ்மறைகள் பற்றிய பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழும் சைவமும் தோழமை பாராட்ட வேண்டிய வேளையிது. ஆணைகளை இட்டுத் தமிழ்நாட்டு அரசாங்கம் நிலைநிறுத்தக் கட்டளை என்றும் இந்து நாளிதழ்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கணினியும் செம்மொழி தமிழும் (சுஜாதா, 2005)    
March 2, 2008, 1:01 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் என்ற மடலில் செம்மொழி தமிழ், அதன் ஆய்வுக்குக் கணினியின் பங்கு என்னும் சுஜாதா 2005-ல் எழுதிய கட்டுரையை அளிப்பதாக அறிவித்திருந்தேன். அனைவரும் ஒருமித்த எழுத்துருக் குறியேற்பில் எழுதுவதன் அத்தியாவசியத் தேவையைச் சுஜாதா குறித்துள்ளார். அவர் மேற்கோள் காட்டும் சங்கப்பாட்டு அகத்துறையைச் சேர்ந்தது. எனவே, அது புறநானூற்றில் இல்லை, குறுந்தொகைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்    
February 29, 2008, 11:16 pm | தலைப்புப் பக்கம்

சுஜாதா பற்றிப் பல விமரிசனங்களைப் பதிவுகளில் பார்க்கிறேன். 70களில் பள்ளி மாணவனாக இருந்தபோது வைரங்கள் என்ற கதையில் வடநாட்டான் வந்து கோவையில் தலைமுறைகளாக வைத்திருந்த தன் குறுநிலத்தை வாங்கும்போது ஏற்படும் மனஉளைச்சலைச் சொல்லும். இன்று கோயம்புத்தூரில் வீட்டுவிலை எங்கோ எகிறிவிட்டது. என் பக்கத்து வீட்டு மருத்துவத் தம்பதியர்(முத்துக்குமாரசாமி - கனகவல்லி) கரையெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மிகமெல்லிய மடிக்கணி    
February 23, 2008, 11:49 am | தலைப்புப் பக்கம்

ஆப்பிள் நிறுவனம் உலகின் மிக மெல்லிசான மடிக்கணியை அறிமுகம் செய்தது. சந்தவசந்தம் மரபுக்கவிதைக் குழுவினர் இயற்றிய வெண்பாக்கள்: காற்றைப்போல் தூக்கக் கனமின்றிக் காகிதப்பை ஏற்கும் அளவில் எழில்பூண்டு - தோற்றத்தில் மாற்றமுற்ற ஆப்பிள் மடிக்கணினி 'பீசி'முன் தோற்குமன்றோ ஆற்றலில் சொல்!                                                                                                    ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி கவிதை

தமிழ் (யூனிக்கோட் 5.1-இலும் பிறகும்)    
February 21, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

வரும் மார்ச் திங்களில் (2008) யூனிக்கோடு 5.1 இணையத்தில் இயங்கும். பல மொழிகளின் எழுத்துக்களும் வலையுலா முதன்முதலாய்க் காணும் வேளையிது. எ-டு: பல்லவ கிரந்தத்தின் கொடிவழித் தோன்றிய பாலித் தீவின் எழுத்துக்கள், சௌராஷ்ட்ர மொழிக்கு மதுரைக்காரர் நூறு ஆண்டுக்கு முன்னால் தோற்றிய எழுத்து (மொத்தம் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஐம்பது ஆளுக்கும் குறைவே). மலையாளத்துக்கு நானளித்த 10, 100,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

இணையப் பல்கலைத் தலைவருக்கு முரசொலி விருது    
February 18, 2008, 2:32 am | தலைப்புப் பக்கம்

முரசொலி விருதளிப்பு விழா - முனைவர் வா.செ.கு. மற்றும் மூவர் பெற்றனர்செய்தி - thatstamil.oneindia.inமுதல்வர் உரை:இந்த விருதுகளை வழங்கி கருணாநிதி பேசியதாவது:திமுக பொதுக் கூட்டங்கள் பற்றி அண்ணா சிறப்பித்து கூறுகையில், 'எங்கள் பொதுக்கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகள்' என்று குறிப்பிடுவார். அந்த அளவுக்கு கல்லூரியிலே தரப்படுகின்ற கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், உலக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

'ஜனகணமன' மெட்டினில் ...    
January 27, 2008, 7:09 pm | தலைப்புப் பக்கம்

'ஜனகணமன' மெட்டினில் ...இந்திய தேசத்தின் குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள். நண்பர் குமரனின் வலைப்பதிவில் இரவீந்திரநாத தாகூரின் ஜனகணமன அதிநாயக என்னும் இந்திய நாட்டுப்பண்ணின் நல்ல விளக்கவுரையைச் சுவைத்தேன். பாரதியாரின் 'வந்தே மாதரம்' மொழிபெயர்ப்பும், மாணவக் காலங்களில் கல்லூரி விடுதிகளில் உணவுக்குக் காத்திருக்கும் வேளையில் நகைச்சுவையாக, சனகண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

யூனிக்கோடு அதிகாரிகளின் சென்னை விஜயம்    
January 20, 2008, 8:41 pm | தலைப்புப் பக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரிய சித்திரங்களை உருவாக்கியவர் கேரளாவின் ராஜா ரவிவர்மா (1848-1906). தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் தெய்வம் முருகன். ஆறுமுகம் ஆன பொருளை கண்ணுக்கு விருந்தாக்கியவர் கண்ணாளர் இரவிவர்மா. பல்லாயிரக் கணக்கில் இவர் வரைந்த முருகனின் அச்சுப்படங்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விற்றுத் தீர்ந்தன. அவர் வரைந்த பாரத தேசத்துக் கடவுளரில் மனம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

சிந்துநாகரீகப் போத்தின் போர், ஏறு அணைதல்    
January 17, 2008, 1:13 pm | தலைப்புப் பக்கம்

ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. கலித்தொகை, சிலம்பு போன்ற இலக்கியங்களில் கண்ணனின் ஏறுதழுவல் நிகழ்ச்சி போற்றப்படுகிறது. இந்து நாளிதழில் களத்து மேட்டுப்பட்டியில் உள்ள 1500 ஆண்டு பழமையான ஏறுதழுவல் ஓவியம், 500 ஆண்டுகால ஜல்லிக்கட்டு உள்ள கட்டுரையைப் படிக்கலாம்.ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து முத்திரை (M-312) பற்றிச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

பொங்கலோ பொங்கல்!    
January 14, 2008, 2:39 am | தலைப்புப் பக்கம்

பொங்கலோ பொங்கல்!பொன்னாய்ப் பூவாய்ப் பொலிந்த ஞாயிறேஉண்ணும் விழிகள் உவக்கும் ஓவியமேமுன்னைக்கு முன்னர் முளைத்த மூதொளியேஇந்நாள் மட்டும் இளமை மாறாமல்புதிது புதிதெனப் போற்றும் பரிதியேஇந்நாள் புதுமையில் புதுமை இயற்றினாய்;காலை மலரெடுத்துக் கட்டழகு கொட்டிக்கோலக் கதிர்கள் குலுங்க நீலக்கடல்மிசை எழுந்த கதிரின் செல்வனேஆடல் வாழிய அழகு வாழிய!புத்தம் புதிய முத்தரிசி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

தைப் புத்தாண்டு!    
January 12, 2008, 3:14 pm | தலைப்புப் பக்கம்

"தைப் புத்தாண்டு' பிறந்த கதை!தமிழறிஞர்களின் 87 ஆண்டு கனவு நனவாகிறது.சென்னை, ஜன. 12: இப்போது நடைமுறையில் உள்ள தமிழ் ஆண்டுகள் "பிரபவ' முதல் "அட்சய' வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. ஆண்டுகளைக் குறிக்கும் இந்தப் பெயர்களின் பின்னணியில் உள்ள கதை, தமிழ் மண்ணுக்குப் பொருந்துவதாக இல்லை என்ற கருத்தும் தமிழறிஞர்களிடம் நிலவுகிறது. எனில், தமிழர்களுக்கென புதிய ஆண்டு...தொடர்ந்து படிக்கவும் »

'ரோஜா' முத்தையா நூலகத்தில் ரிச்சர்ட் ஸ்ப்ரோட்    
January 5, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

ரோஜா முத்தையா சேகரித்த கருவூலம்:சென்னையின் தரமணியில் (முன்பு முகப்பேரில்) ரோஜா முத்தையா நூலகம் இயங்கி வருகிறது. அரிய 100,000 புத்தகங்கள் கொண்டது. பத்திரிகைத் தொகுப்புகளோ ஏராளம். முன்பு தமிழ்நாட்டு அரசாங்கம் கூடச் சரியான விலைதந்து கோட்டையூர் 'ரோஜா' முத்தையாவின் நூலகத்தை வாங்கி வளர்த்தாத சூழ்நிலை. எழுத்தாளர் அம்பை போன்றோர் பேரா. ஏ. கே. இராமாநுஜனுக்குத் தெரிவித்து அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தமிழ்நாட்டின் பெருநகர்கள் ~ 2 கவிதைகள்    
January 4, 2008, 1:13 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நாட்டின் ஊர்ப்பாடல்களைப் படிப்பதில் ஆர்வமுடையவன். எடுத்துக்காட்டாக, திரையுலகில் கொடிகட்டிப் பறக்கும் புகழ்வாய்ந்த இரண்டு கவிஞர்களின் கோவை, மதுரைப் பாட்டுகளை இப்பதிவில் பார்ப்போம்.தமிழ்நாடு, இலங்கை, ... மற்ற இந்திய, அயல்நாடுகளின் ஊர், நகரங்களைப் பற்றி நல்ல தமிழ்க்கவிதைகள் இருந்தால் அறியத்தர வேண்டுகிறேன்.அன்புடன்,நா. கணேசன்     கோயம்புத்தூர்: ஒரு விளக்கம்       ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

திருவாய்மொழி: 'மல்லிகை கமழ் தென்றல்'    
January 3, 2008, 3:02 am | தலைப்புப் பக்கம்

கண்ணபிரான் மீது காதல் கொண்ட முல்லைநில ஆய்ச்சியர் நெஞ்சுருகிப் பாடிய பத்துப் பாசுரங்கள் தமிழின் கருவூலம்.     இன்கவி பாடும் பரம கவிகளால்    தன்கவிதான் தன்னைப் பாடுவியாது இன்று    நன்கு வந்து என்னுடனாக்கி என்னால் தன்னை    வன்கவி பாடும் என் வைகுந்தநாதனே. (7.9.6) எனப் பாடிய முத்தமிழ் விநோதர் அல்லவா நம்மாழ்வார்! அந்தாதி அமைப்பைப் பத்துப் பாடல்களையும் வாசித்தால் தெரியும்....தொடர்ந்து படிக்கவும் »

யூனிக்கோடில் மேலதிகமாகத் தமிழ்எழுத்துக்கள்    
January 2, 2008, 1:49 pm | தலைப்புப் பக்கம்

பொருளும், காலமும் செலவிட்டுச் சில ஆண்டுகள் உலக எழுத்து முறைகளில் மூழ்கித் தமிழுக்குப் பொருத்தமான 'யுனிகோட் சார்ட் எது?' தமிழ் ப்ளாக் (block) அறிவியல், தமிழிலக்கண நெறிப்படி அமைந்திருக்க வேண்டுமே என நினைந்தேன். அப்படித் தான் மாலத்தீவின் எழுத்தின் குறியேற்றம் யூனிக்கோடில் அமைந்துள்ளது என்பது அறியற்பாலது.யூனிக்கோடில் மாலத் தீவின் எழுத்துமேலோட்டமாக, மாலத்தீவின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

யூனிக்கோடில் ஸ்ரீயின் ஶ (sha), ஓரெழுத்தாய் ஓம் ...    
January 2, 2008, 2:19 am | தலைப்புப் பக்கம்

கிரந்த எழுத்து பற்றித் தொல்காப்பியனார்:தொல்காப்பியர் வரையறுத்துக் கூறும் "வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த தமிழ்ச் சொல் ஆகும்மே. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்." - தொல். சொல். 2.9:5-6 என்பதில் ஆராத நம்பிக்கை உடையவன் நான். கொங்குநாட்டின் நிரம்பை [1] ஊரைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் தொல். சூத்திரத்தை நன்கு விளக்குகிறார்: "தமிழாவது வடவெழுத்து ஒரீஇ வந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

கிரந்த எழுத்தை நீக்க எளிய ஒருமுறை (கி.பி. 1999)    
January 1, 2008, 4:52 pm | தலைப்புப் பக்கம்

பேராசிரியர் செ. இரா. செல்வகுமார் (டொராண்டோ, கனடா) அவர்கள் 9 ஆண்டுகளுக்கு முன்னர் கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அயன்மொழிச் சொற்களை எழுத எளிய முறை ஒன்றைத் தமிழ்.நெட்டில் பரிந்துரைத்தார்:http://www.tamil.net/list/1999-09/msg00632.htmlமுனைவர் செல்வாவின் பரிந்துரை கருத்தூன்றிப் பயிலவேண்டிய ஒன்று. 1999-ல் பேரா. செல்வா எழுதிய மடலை இங்கே முற்செலுத்துகிறேன். என் அடுத்த மடல்களில் மேலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தமிழர் இணையும் யூனிக்கோடு!    
December 31, 2007, 11:53 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணம் நடாத்தும் நண்பர்கள் யூனிக்கோடு பற்றிய சில அனுபவங்கள், வரலாறுகளை எழுத அழைத்ததால் எனக்குப் பெருமை. யூனிக்கோடுக்குத் தமிழ் வரலாற்றிலே ஒரு பெருமை உண்டு ~ பெரும்பான்மையான ஒரு குறியேற்றமாக மாறி வலைப்பதிவுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான தமிழரைத் தமிழ்நாட்டிலேயும் வெளியேயும் வையவிரிவலையில் (world-wide web) மடலாட வைத்தது. கணினிக் குறியேற்றங்கள் பல இருந்தாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

உலகம் உன் கையில்!    
December 28, 2007, 9:22 pm | தலைப்புப் பக்கம்

உலகம் உன் கையில்! தம்பி!கொஞ்சம் நில்.என்ன சுமை உன்முதுகில்?கவலைகள் கைக்குழந்தைகள்அல்ல.அவற்றைக் கீழே இறக்கிவிடுநீ சிரித்தால் உலகம் உன்னுடன்சேர்ந்து சிரிக்கும்.அழுது கொண்டிருப்பவனின்நிழல் கூட அவனை நெருங்கப்பயப்படும்!காற்றைப் பதுக்கி வைப்பதால்கால்பந்து உதை வாங்குகிறது!புல்லாங்குழலோகாற்றை வெளியேற்றி இசைதருவதால்கலைஞனிடம் முத்தம் பெறுகிறது!வெளிச்சத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை