மாற்று! » பதிவர்கள்

தீஷு

மழை எப்ப‌டி பெய்யும்?    
October 28, 2010, 5:55 am | தலைப்புப் பக்கம்

ம‌ழை எப்பொழுது பெய்தாலும் தீஷுவின் ம‌ழை ப‌ற்றிய‌ கேள்விக‌ளை எதிர்கொள்ள‌ வேண்டியிருக்கும். ம‌ழை எவ்வாறு பெய்கிற‌து என்ப‌தை ஒரு சிறு ப‌யிற்சியின் மூல‌ம் செய்து காட்ட‌லாம் என்று நினைத்தேன்.மிக‌வும் சூடான‌ நீரை ஒரு க‌ண்ணாடி பாட்டிலில் எடுத்துக் கொண்டோம். பாட்டிலை மூடாமல் பாட்டிலின் மூடியை திருப்பி வைத்தேன். மூடியின் மேல் ப‌குதியில் ஐஸ் கட்டிக‌ளை வைத்து விட்டோம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கதை சொல்லி    
August 11, 2010, 4:17 am | தலைப்புப் பக்கம்

சென்ற வருடம் தீஷு பள்ளியிலிருந்து வந்திருந்த ஒரு கமெண்ட் அவள் பேச்சுத்திறமையையும் அடுத்தவரிடம் பழகும் தன்மையும் மேம்படுத்த வேண்டும். தீஷு அடுத்தவரிடம் பழகுவதற்கு நேரம் எடுத்துக்கொள்வாள். அடுத்தவரிடம் பழகும் வரை பதிலும் சொல்ல மாட்டாள். பள்ளியில் சொன்னது அவளை பேச வைத்துக் கொண்டே இருங்கள் - உங்களிடமோ மற்றவர்களிடமோ.அவளைப் பேச வைக்க எங்கள் வாசிக்கும் நேரத்தை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

க‌வ‌ன‌ச்சித‌ற‌ல்    
July 22, 2010, 5:12 am | தலைப்புப் பக்கம்

இன்று காலையில் ஆபிஸ் சென்று கொண்டிருந்த‌ பொழுது க‌ண்ட‌ காட்சி. டிராபிக்கில் ப‌ஸ் நின்று கொண்டிருந்த‌து. ரோட்டில் ஏதோ வேலை ந‌ட‌ந்து கொண்டிருந்தது. பிளாட்பார‌ம் ச‌ரி செய்கிறார்க‌ள் என்று நினைக்கிறேன். ஒரு ப‌த்து வ‌ய‌து பையன் ம‌ண்ணை ம‌ண் வெட்டியால் எடுத்து த‌ட்டில் போட்டுக் கொண்டிருந்தான். அருகில் ஒரு பெண் குழ‌ந்தை, தீஷு வ‌ய‌து இருக்கும். வேறு யாரும் அங்கு இல்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

என்னால் எல்லாம் முடியும்..    
July 13, 2010, 5:09 am | தலைப்புப் பக்கம்

கல‌ரை‌த் தொட்டு அந்த‌ க‌ல‌ர் என்ன‌ என்று க‌ண்டுபிடிக்க‌ முடியும் என்று தீஷு உறுதியாக‌ இருந்தாள். சென்னையில் மின்சார‌ இர‌யில் டிக்கெட் ஆறில் மூன்று ஒரு நிறமாக‌வும், மூன்று சற்று வித்தியாச‌மாக‌வும் இருந்த‌ன‌. க‌ண்ணை மூடிக்கொண்டு க‌ல‌ர் அடிப்ப‌டையில் பிரி என்ற‌வுட‌ன் பிரித்தும் விட்டாள். அவ‌ள் பார்த்த‌ மாதிரி தெரிய‌வில்லை. டிக்கெட் தொடுவ‌த‌ற்கும் ச‌ற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Moveable alphabets    
July 8, 2010, 4:45 am | தலைப்புப் பக்கம்

வாசிக்கப்பழகுவதற்கும், வார்த்தை உருவாக்கப்பழகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வார்த்தை உருவாக்கப் பழக்குவதற்கு மாண்டிசோரியில் உபயோகப்படுத்தப்படும் முக்கிய கருவி - moveable alphabets. எழுதத் தெரியாத குழந்தை முதலில் வார்த்தை உருவாக்கப்பழகினால் இது மிகவும் உபயோகமாக இருக்கும். அனைத்து எழுத்துக்களும் தனித்தனி பிரிவுகளில் அடுக்கப்பட்டு இது போல் இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

மீண்டும் வேறு முறையில்    
July 6, 2010, 5:05 am | தலைப்புப் பக்கம்

சென்ற முறை தீஷுவிற்கு கழித்தல் சொல்லிக் கொடுக்கும் பொழுது அவ‌ளுக்குத் தெளிவாக‌ப் புரிய‌வில்லை. மீண்டும் முயற்சிக்கலாம் என்று நினைத்தேன். இந்த முறை வேறு முறையில் செய்தோம். நான் ஒரு வட்டம் வரைந்து, அதை நீல நிறத்தில் கலர் செய்து கொண்டேன். இது குளம். எங்களிடம் இருந்த மீன் பொம்மைகள் கிண்ணத்தில் எடுத்து கொண்டோம். கழித்தலில் முதல் எண்ணின் அளவு மீனை குளத்தில் வைக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சிக்க‌(ல்) தீர்    
June 29, 2010, 5:02 am | தலைப்புப் பக்கம்

சில மணி நேரங்கள் செலவழித்து ஆக்டிவிட்டீஸ் தயாரித்து தீஷுவிடம் எடுத்துச் சென்றால் அவளுக்குப் பிடிக்காது. நாம் செலவழித்த நேரம் கூட அவள் உபயோகப்படுத்த மாட்டாள். சிலவற்றுக்கு நம் நேரம் ஒரு விநாடி கூட செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் தீஷுவால் திரும்ப திரும்ப விளையாடப்படும். அப்படி ஒன்று இது.என் ஆபிஸிற்கு தினமும் முக்கால் மணி முதல் ஒரு மணி வரை பயணம் செய்ய வேண்டும். அந்தப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவர்ந்த தருணங்கள் 11/06/2010    
June 11, 2010, 5:37 am | தலைப்புப் பக்கம்

1. எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இல்லை. அப்பா கிரிக்கெட் பார்ப்பதற்கு எங்கள் வீட்டின் மேல் தளத்திலுள்ள அவர் பாட்டி வீட்டிற்கு செல்வார். அங்கு இரண்டரை வயது குட்டி இருக்கிறான். தீஷுவிற்கு எப்பொழுதும் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். என்னிடம் கேட்டாள். அப்பொழுது தான் அங்கிருந்து வந்திருந்ததால் அப்புறம் போகலாம் என்றேன். மெதுவாக அப்பாவிடம் சென்று"அப்பா......தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவர்ந்த தருணங்கள் 21/02/09    
February 22, 2010, 5:00 am | தலைப்புப் பக்கம்

1. படுத்துக் கொண்டிருக்கும் பொழுது ஃபானில் இருந்த ஜன்னல் நிழலைப் பார்த்து,தீஷு: அம்மா, அங்கப் பாரு ஜன்னல் reflection.அம்மா : (ரூமில் இரண்டு ஜன்னல்கள் இருந்ததால்) எந்த ஜன்னலோட reflectionனு சொல்லுப் பார்க்கலாம்?தீஷு : (சரியாக) அந்த ஜன்னலோடதுஅம்மா : (ஆச்சரியமாக) எப்படிடா கரெக்டா சொன்ன?தீஷு: வாயால தான்.2. பக்கில் (Buckle) போட கற்றுக் கொடுக்க, தீஷுவின் பழைய உடையில் பக்கில் பகுதியை கிழித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீட்டுப் பாட‌ம்    
February 3, 2010, 9:30 am | தலைப்புப் பக்கம்

தீஷுவிற்கு பெரியவர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். பரமேஸ்வரி ஆண்டி போல் வீடு சுத்தம் செய்ய வேண்டும், அம்மா போல் பூரி மாவு பிசையவும், வட்டங்களாக தேய்க்க வேண்டும், அப்பா போல் ஷு பாலிஷ் போட வேண்டும். வீடு சுத்தம் செய்யும் முன் "அம்மா கிட்சன் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு.. துடைக்கிறேன்" என்று அவள் அளவுக்கு ஒரு கப்பும், அவளுக்கு பெயிண்டிங் பிரெஷ் துடைக்கக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வகுப்பறை    
October 25, 2009, 10:31 am | தலைப்புப் பக்கம்

கிரஹப்பிரவேசத்திற்குப் போயிருந்தோம். அங்கு தீஷுவிற்கு ஒரு டப்பா கொடுத்தார்கள். தீஷுவிற்கு ஒரே சந்தோஷம் மற்றும் சந்தேகம் - திரும்பவும் வாங்கிவிடுவார்களா என்று. என்னிடம் வந்து, "இது நமக்குத்தானா இல்ல திரும்ப கொடுக்கனுமா" என்றாள். நமக்குத்தான் என்றவுடன் சந்தோஷம். "இத வச்சி டாலுக்கு Game சொல்லிக் கொடுக்கப் போகிறேன்" என்றாள். ஆஹா!! என் பொண்ணும் என்ன மாதிரியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஒன்றில் ப‌ல    
October 23, 2009, 11:11 am | தலைப்புப் பக்கம்

தீஷுவிற்குப் போரிங் (Pouring) , ஸ்பூனிங் (Spooning), சார்ட்டிங் (Sorting) போன்ற‌ ஆக்டிவிட்டீஸில் விருப்ப‌மிருப்ப‌தில்லை. அவ‌ள் வ‌ய‌திற்கு அவை எளிமை என்று தோன்றுகிற‌து. அத‌னால் இப்பொழுது இர‌ண்டு மூன்று ஆக்டிவிட்டீஸைச் சேர்த்து கொடுக்க‌ வேண்டியிருக்கிற‌து. அப்ப‌டி செய்த‌வ‌கையில் இர‌ண்டு..க‌ணித‌த்தில் செய்து வெகு நாளாகிவிட்ட‌து. ஒரு சிறிய‌ பையில் ஒரு பட்ட‌ம்பூச்சி பொம்மை, இர‌ண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவர்ந்த தருணங்கள் 04/10/2009    
October 4, 2009, 9:56 am | தலைப்புப் பக்கம்

1. தீஷு நான் என் certificates அடுக்கி வைப்பதைப் பார்த்து தனக்கும் certificates வேண்டும் என்றாள். என் கணவர் அவளிடம்அப்பா : "நீ பெருசா வளர்ந்தவுடனே உனக்கும் certificates கிடைக்கும்" தீஷு : "எவ்வளவு பெருசா?"அப்பா : "இந்த Globe இருக்குற ஹயிட் வரைக்கும்"தீஷு உடனே ஒரு ஸ்டூல் எடுத்துக் கொண்டு வந்து, அதன் மேல் ஏறி நின்றுதீஷு : "Globe வரைக்கும் வளர்ந்துட்டேன்.. இப்ப certificates கொடுங்க" அப்பா : ?????2. தீஷுவிற்கு இப்பொழுது உடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வீட்டில் மேஸ்    
August 5, 2009, 4:13 pm | தலைப்புப் பக்கம்

சில வாரங்களாக எழுத நேரம் இல்லாததால், செய்த அனைத்தையும் எழுத முடியவில்லை. முக்கியமாக கருதிய இரண்டை மட்டும் பதியலாம் என்று நினைக்கிறேன். லைனில் நடக்கப் பழக்கலாம் என்று நினைத்து, செல்லோ டேப்பை ஒட்டும் பொழுது, இந்த ஐடியா தோன்றியது. டேப்பை இரண்டு சதுரங்களாக மடக்கி ஒட்டினேன். ஒரு ஒரத்தில் ஆரம்பித்து, டேப்பின் சதுரங்களின் நடுவிற்கு நடந்து செல்ல வேண்டும். கிட்டத்தட்ட மேஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவர்ந்த தருணங்கள் 21/07/09    
July 21, 2009, 6:11 am | தலைப்புப் பக்கம்

1. தீஷு பள்ளி கிளம்பும் முன் என்னிடம்தீஷு : "பனானா பாஃக்ல வச்சிட்டியா?"அப்பா : "இதெல்லாம் கேளு.. புக் எடுத்து வச்சிட்டியானு கேட்டியா?"தீஷு : "புக்கெல்லாம் சாப்பிட முடியாது..."2.தீஷு : "அம்மா, பால் குடிக்க கொடுங்க"அம்மா: " குடுத்தப்ப குடிக்கல..இப்ப எதுக்கு?"தீஷு : "இப்பத்தான் பால் தாகமா இருக்கு"3. தீஷு : "அம்மா, பல் கூசுது"அம்மா: "இங்க வா, பாப்போம்"தீஷு : "அதெல்லாம் வேண்டாம், பிஸ்கெட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கலரிங்    
December 15, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

நான் Anti-colouring புத்தங்கள் படித்திருக்கிறேன். கலரிங் மட்டும் பண்ணுவதால், குழந்தைகளில் கற்பனைத் திறன் குறைந்து போகும், அவர்களை வரைய விட்டால் கற்பனைத் திறன் வளரும் என்பது அவர்கள் வாதம்.ஆனால் சமீபத்தில் கலரிங் ஏன் குழந்தைகள் செய்ய வேண்டும் என்பதற்கு, ஏதோ இணையத்தளத்தில் படித்தேன். எதில் படித்தேன் என்று நினைவில் இல்லை. ஆனால் படித்தது இது தான்.1. Accepting Boundaries - இந்த இடத்திற்குள் தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

டி.வி பார்த்தல் குற்றமா?    
December 4, 2008, 6:54 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக அநேக அம்மாக்கள் ஓத்துக் கொண்டது - ஆறு மாத குழந்தை கூட டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால், அடம்பிடிக்காமல் சாப்பிடுகிறது. பல வீடுகளில் அம்மாக்கள் வேலை பார்க்கும் பொழுது டி.வி தான் baby sitter.AAP(The Amercian Academy of Pediatrics) ஆய்வின் படி இரண்டு வயத்திற்கு உட்பட்ட குழந்தைகள் டி.வி பார்க்கக் கூடாது. அதற்கு மேற்பட்ட வயதுள்ள குழந்தைகள் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் வரை பார்க்கலாம். நம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ரொம்ப நாளைக்கு அப்புறம்..    
November 19, 2008, 3:59 pm | தலைப்புப் பக்கம்

தீஷுவின் activities பற்றிய பதிவு. Funnel: Wet pouringயின் அடுத்த கட்டம். Funnelயை ஒரு பாட்டிலில் பொருத்தி ஒரு டம்பளரில் தண்ணீர் கொடுத்தேன். விளக்கிச் சொல்வதற்கு முன்னமே, அவளாகவே செய்யத் தொடங்கி விட்டாள். தண்ணீரை ஊற்றியப் பின், தண்ணீர் கீழே உள்ள பாட்டிலிற்கு தான் போகிறது என்பதில் அவளுக்கு சந்தேகம். குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டுயிருந்தாள். தீஷுவிற்கு பயன்படும் என்று Cuisenaire rods...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: