மாற்று! » பதிவர்கள்

திருவடியான்

உலகமயாகும் உணவுப் பஞ்சம் - 2    
April 30, 2008, 4:02 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

உலகமயமாகும் உணவுப் பஞ்சம்    
April 27, 2008, 8:13 am | தலைப்புப் பக்கம்

இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

தீப விளையாட்டும் திபெத்தும்    
April 10, 2008, 3:08 pm | தலைப்புப் பக்கம்

ஒலிம்பிக் தீபம் செல்லும் வழியெல்லாம் போராட்டம். ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே இது ஒரு முக்கியமான கால கட்டம். ஒரு நாடு பொதுவாக மற்ற நாடுகளை பங்குபெறச்செய்து பெருமையுடன் நடத்தும் புராதான உலக விளையாட்டை மற்ற நாடுகள் இவ்வளவு அலட்சியமாக இதற்கு முன் நடத்தியதில்லை. தீபம் அணைவதற்கு அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் ஒரே காரணம், திபெத். குறிப்பாக, சீனாவின் மீதான திபெத் மனித...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

LORD OF WAR - விக்டர் பெளட் கைது.    
March 7, 2008, 11:46 am | தலைப்புப் பக்கம்

ஆயுத வியாபாரி விக்டர் பெளட் இன்று தாய்லாந்து போலீசாரால், அமெரிக்காவின் போதைப் பொருள் என்ஃபோர்ஸ்மென்ட் ஏற்பாட்டில் (Sting Operation) கைது செய்யப்பட்டார். கொலம்பியப் போராளிகளுக்கு ஹெலிகாப்டர் உட்பட்ட தளவாடங்களை விற்பதற்கான ஒரு பேரத்தில் அவரின் கூட்டாளியின் மூலம் இந்த வலை விரிக்கப்பட்டு, அதன் தொடர்பான தொலைபேசிப் பேச்சு உட்பட பதிவு செய்யப்பட்டு, பேரத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சுஜாதா என்கிற வழிப்போக்கன்    
February 28, 2008, 8:44 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா இறந்து போனார் என்று படித்ததில் இருந்து மனது ஒரு மாதிரியாகக் கனக்கிறது. அவரை நான் நேரில் கூட பார்த்ததில்லை. சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கு வலையுலகில் ஏராளமானோர் இருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஏராளமான வலைப்பதிவுகளைக் காண நேரிடலாம்.1970களில் அவரின் நில் கவனி கொல் தொடர் தினமணிகதிரில் தொடராக வந்தபோது நான்...தொடர்ந்து படிக்கவும் »

ஆசியாவின் கொசோவாக்கள்..    
February 20, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

கொசோவாவின் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனமும், அதை அங்கீகரிக்கும் மேற்கத்திய நாடுகளும், உலகின் பல ஜனநாயக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பதென்னவோ உண்மை. 20 லட்சம் பெரும்பான்மை (90%)அல்பேனிய முஸ்லிம் மக்களைக் கொண்ட கொசோவா செர்பியாவின் ஒரு மாநிலமாக, அதே சமயம் UN-NATO அமைதிப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பில் 1999 கொசோவா போர் முதல் இருந்து வருகிறது. இந்த...தொடர்ந்து படிக்கவும் »

Darfur and Steven Speilberg - 2    
February 18, 2008, 6:29 am | தலைப்புப் பக்கம்

சூடானுக்கு உதவ ரஷ்யா மற்றும் கீழ்த்திசை நாடுகள் உதவ முன் வந்ததைக் கண்டோம். சில வாசகர்கள், சரியாகவே கணித்திருந்தனர். எண்ணெய் வளம் தான் மிக முக்கியக் காரணம். உலகின் மிகப் பெரிய எண்ணெய் வளத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சவுதி அரேபியாவை விட, டார்ஃபுரில் இருக்கும் எண்ணெய் வளம் பெரியது என்ற எண்ணெய் வள ஆய்வறிக்கைதான் இதற்கெல்லாம் மூல காரணம். எண்ணெய் மட்டுமா, உலகிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

Darfur and Steven Spielberg - A political Olympics    
February 14, 2008, 3:51 pm | தலைப்புப் பக்கம்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பேஜிங் ஒலிம்பிக் விளையாட்டு ஆர்ட் டைரக்டர் பதவியில் இருந்து விலகியிருப்பதாக ஊடகங்களில் சூடான செய்திகள் வந்திருக்கிறது. விலகியதற்குச் சொல்லப்பட்ட காரணம் வித்தியாசமானது. சூடானின் டார்ஃபுர் பகுதியில் இனக்கலவரம் நடப்பதாகவும் அதைத் தடுக்க சீனா இதுவரை முயற்சி செய்ய வில்லை என்றும் அதற்கான முயற்சிகளில் சர்வதேச அமைப்புகளை இறக்கி அப்பாவி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

ஈரானியத் தாக்குதலுக்கு ஆயத்தம் நடக்கிறதா?    
February 3, 2008, 3:56 am | தலைப்புப் பக்கம்

தற்சமயம் அமெரிக்கப் பொருளாதாரம் சொல்லொணா கடன்சுமைச்சூழலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், வட்டிவிகிதம் குறைக்கப்பட்டு நாட்டின் வளர்ச்சி STAGFLATION என்று சொல்லப்படும் மந்தவளர்ச்சிநிலையை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் இச்சூழலில், இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் ஒரு கெட்ட பெயரோடு பதவியை விட்டு வெளியேற வேண்டிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

பெனாசீர் பூட்டோ படுகொலை    
December 27, 2007, 4:43 pm | தலைப்புப் பக்கம்

27 டிசம்பர் 2007 இன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் தற்போதைய முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான திருமதி பெனாசீர் பூட்டோ தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் தற்கொலைத் தாக்குதலில் பலியானார். அவருடன் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.பெனாசீரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் ஆழ்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அரசுகளின் இணையத்தளப் பாதுகாப்பு - சில கேள்விகள்    
September 16, 2007, 12:24 am | தலைப்புப் பக்கம்

எத்தனை பேர் அந்தச் செய்தியைப் படித்தீர்கள் என்று தெரியாது. சமீபத்தில் ஸ்வீடனைச் சேர்ந்த டான் எகர்ஸ்டாட் என்பவர் பல்வேறு நாடுகளின் தூதரக ஈமெயில் அட்ரஸ் மற்றும் பாஸ்வேர்டுகளை...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்    
August 12, 2007, 3:01 pm | தலைப்புப் பக்கம்

இந்தியா சுதந்திரமடைந்து, அதாவது, தன்னாட்சி பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவுறுகிறது. சுதந்திரத்திற்காக போராடியோர் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சவூதி அரசிற்கு அமெரிக்க ஆயுதங்கள்    
July 29, 2007, 2:39 pm | தலைப்புப் பக்கம்

ஈராக் பிரச்னைக்கு இன்னும் எந்த முடிவும் தெரியாத இந்த நேரத்தில், அமெரிக்கா சவுதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளுக்கு (இஸ்ரேல் எகிப்து உட்பட) ஆயுத பரிவர்த்தனை உதவி செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

நான் சென்ற திருத்தலங்கள்    
July 23, 2007, 12:33 pm | தலைப்புப் பக்கம்

நான் இதுவரை சென்ற திருத்தலங்களைத் திடீரென்று ஒரு ப்ளாக்கர் நினைவுகூறும்படி செய்துவிட்டார். அதன் விளைவே இந்தப் பதிவு. சில கோயில்களின் அம்மன்கள்/சாமிகளின் பெயர், சில தர்காக்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வடகொரிய அணு உலை மூடுவிழா    
July 21, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

கடந்த வருடம் வடகொரியா வெடித்த அணுகுண்டுக்குப் பின் ஏற்பட்ட விவகாரங்களில் மிக முக்கியமானது, ஆறுநாட்டுப் பேச்சுவார்த்தை. சீனா மத்தியஸ்தம் பண்ண முன் வந்து நடத்திய இந்தப் பேச்சு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல் சூழல்

லண்டன் கார் குண்டுகள்.. நாடகமா?    
July 1, 2007, 3:39 pm | தலைப்புப் பக்கம்

லண்டனில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு மெர்ஸிடஸ்கள் லண்டன் வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் இவ்வேளையில், புதிய பிரதமரான கார்டன் பிரெளன் எந்த வித...தொடர்ந்து படிக்கவும் »

பொங்கல் வாழ்த்துக்களும் சில சிந்தனைகளும்    
January 14, 2007, 2:21 am | தலைப்புப் பக்கம்

அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.இன்று பொங்கல் திருநாள். பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கட்டுக்கட்டாக வாங்கி நண்பர்களுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 7    
January 6, 2007, 4:05 pm | தலைப்புப் பக்கம்

பிற்பாடு பிளீச்சின் டேனி்ஷ் நண்பரும் அவரும், துபாய் போய் பின் அங்கிருந்து டாக்கா சென்றனர். பின்பு அங்கிருந்து கிம் டேவியைச் சந்திக்க பாங்காக் போனார்கள். போகும் வழியில் கிம் டேவியைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஆயுத வியாபாரிகள்....அதீத பேரங்கள் - 6    
January 6, 2007, 4:03 pm | தலைப்புப் பக்கம்

புருலியா ஆயுதமழை விவகாரத்தில் தொடர்புடையவர்கள் முக்கியமாக இருவர். பீட்டர் பிளீச் என்ற முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றும் கிம் டேவி எனப்படும் மற்றொரு நபர். பீட்டர் பிளீச் எவ்வாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சதாமின் தூக்கு - முடிவா? ஆரம்பமா?    
December 31, 2006, 5:45 am | தலைப்புப் பக்கம்

சதாம் தூக்கிலிடப்பட்டதன் மூலம் அமெரிக்க தனது கோர முகத்தை வெளியுலகிற்கு காட்டியுள்ளது. பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இந்த முடிவை விரும்பவில்லையென்றாலும் அமெரிக்க ஜனாதிபதியாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்