மாற்று! » பதிவர்கள்

தமிழநம்பி

மானங் கெட்டவர்கள்! ஏமாற்றுக்காரர்கள்!    
January 20, 2009, 11:51 pm | தலைப்புப் பக்கம்

(அ)  நடுவண் அரசில் அமைச்சர் இருக்கையை உடும்புப் பிடியாய்ப் பற்றிக் கொண்டு, ஈழத்தமிழரைக் காக்க நடுவணரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றுக் குரலெழுப்பிக் கூப்பாடு போட்டு நீலிக் கண்ணீர் வடித்து நடித்துக் கொண்டு இருப்பவர்கள்! (ஆ)  திருவாட்டி இந்திரா காந்தியைக் கொன்றவரின் இனத்தைச் சார்ந்தவரே இந்தியாவின் தலைமை அமைச்சராக இருப்பதையும், அண்ணல் காந்தியைக் கொன்றவர் சார்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஆங்கில நாளேட்டில் சமற்கிருதப் புரட்டு    
September 17, 2008, 7:29 am | தலைப்புப் பக்கம்

  (புதுச்சேரியிலிருந்து 1999ஆம் ஆண்டில் தனியார் சுற்றுக்கு மட்டுமென வெளிவந்தது ‘தமிழருவி' என்னும் இருமதி இதழ். அத் தமிழருவி 14-04-1999ஆம் நாளிட்ட இதழில் வந்த இக்கட்டுரை, தேவை கருதிச் சிறுசிறு மாறுதல்களுடன் மீண்டும் வெளியிடப் படுகின்றது)      1.1. மாந்தரின் பிறப்பு, நேரச்சி(accident) நிகழ்வு போன்ற தென்கின்றது ஒரு பழமொழி.  எவரும் தாம் விரும்பிய நாட்டில், விருப்பமான மக்கள் கூட்டத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மொழி

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் ஆபிரகாம் தொ. கோவூர்    
July 23, 2008, 2:54 am | தலைப்புப் பக்கம்

(ஆங்கிலமூலம்: வி.எ.மேனன் * தமிழாக்கம்: தமிழநம்பி)உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!    
July 8, 2008, 7:00 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று (8-7-2008) இரவு பத்தரை மணியளவில் விசய் (Vijay) தொலைக்காட்சியில் ‘நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.இதற்கு முன்னும் இத்தலைப்பில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இன்று நடந்த நிகழ்ச்சியில், அணமையில் நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

பாவாணரின் 'திரவிடத்தாய்'    
June 5, 2008, 7:35 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர்.ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் புத்தகம்

ஓர் அறிவிப்பு    
May 7, 2008, 5:20 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றப் பயிலரங்கு விழுப்பரம் மாவட்ட வலைப்பதிவர் மன்றத்தின் சார்பில் "தமிழ்க் கணிப்பொறி" வலைப்பதிவர் பயிலரங்கு 11-05-2008 ஞாயிறு அன்று காலை 9மணிமுதல் மாலை வரை ஒருநாள் நிகச்சியாக நடைபெறுகிறது.விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலரங்கு நடைபெறும்.பயிலரங்கில் பயிலுநர், ஒருங்குகுறி எழுத்துருவை(Unicode font)ப் பயன்படுத்திடத் தேவையான...தொடர்ந்து படிக்கவும் »

'தினமணி', 'திண்ணை'யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் ...    
April 24, 2008, 1:32 pm | தலைப்புப் பக்கம்

18-03-2008 'தினமணி'யில் 'தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்' என்ற ஈர்ப்பான தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. அதன்பின் அதே கட்டுரை திண்ணையிலும் வந்தது. அக்கட்டுரை பற்றிய கருத்துரைகளை அடுத்துவந்த திண்ணையில் 'ரவிசங்கர்' எழுதியிருந்தார். அதற்குப்பின் 'கார்கில் ஜெய்' என்பார் 'தமிழ் எழுத்தில் உச்சரிப்புக் குறியீடு பற்றிய அலசல்' என்ற தலைப்பில் மேற்கண்ட செய்திகளைத் தொடர்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?    
March 10, 2008, 6:07 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள், முதியோர், பொதுமக்கள், போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்ற, உலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமை , அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"    
February 23, 2008, 6:03 pm | தலைப்புப் பக்கம்

இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்! தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்! மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்! ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

தூயதமிழ் காப்பும் தொடர்புடைய உண்மைகளும்!    
January 29, 2008, 6:32 pm | தலைப்புப் பக்கம்

மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது. எல்லாரும் புரிந்து கொள்ளக் கூடியவாறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

'தினமணி' நாளிதழுக்கு...!    
January 10, 2008, 6:02 pm | தலைப்புப் பக்கம்

அனுபுள்ள ஆசிரியருக்கு...ஐயா,வணக்கம்.இன்று, 10-01-2008 மாலை 06-55 மணியிலிருந்து 07-00 மணிக்குள்ளாக (மாலை 07-00 மணி செய்திகளுக்கு முன்னால்) அரசுத் தொலைக்காட்சி யான ‘பொதிகை’யில், பாரதியாரின் ‘தமிழ்த்தாய்’ பாடலை ஒளி/ஒலி பரப்புகையில் ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்பதோடு நின்றுவிட்டது. சிறிதுநேர இடைவெளிவிட்டு ‘மெல்லத் தமிழ் இனி சாகும்’ என்ற நான்கு சொற்களை மட்டும் மீண்டும் கூறியதை நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

திருக்குறளில் மூன்றுகுறள்கள்    
December 23, 2007, 6:40 am | தலைப்புப் பக்கம்

திருக்குறளைப்பற்றி இரவரெண்டு பர்சிவெல் என்னும் மேற்கத்திய அறிவர் 'இதற்குச்சமமாகிய நூல் மக்களாய்ப்பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் காணமுடியாது' என்பார்.'எல்லாப்பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை' என்பார் மதுரைத் தமிழ்நாகனார்.திருக்குறளில் எல்லாக்குறள்களுமே வாழ்வாங்கு வாழ வழிகூறும் ஈடு எடுப்பற்ற அறிவு வெளிப்பாடுகள் தாம்! மாந்தரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்