மாற்று! » பதிவர்கள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

களைப்பு பெலயீனத்திற்கு உடல்தான் காரணமா?    
June 4, 2009, 9:41 am | தலைப்புப் பக்கம்

உடம்பு நல்ல வாட்டசாட்டமாக இருக்கும். இரத்தசோகை, பிரஸர், சீனி வருத்தம் ஏதும் இருக்காது, ஆனாலும் முகத்தில் சோர்வுடன் வருபவர்கள் பலர்.'உடம்பு பெலயீனமாகக் கிடக்கு. களைப்பாக இருக்கு. பெலத்திற்கு என்ன சாப்பிடலாம்? என்ன சத்து மா கரைச்சுக் குடிக்கலாம்?' எனக் கேட்பார்கள்.உடல் ஆரோக்கியமாக இருக்கும் இவர்களுக்கும் ஏன் களைப்பு வருகிறது. ஊட்டக் குறைவுதான் இவர்களது களைப்பிற்குக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நாரிப்பிடிப்பு (முதுகு வலி) வராது தடுத்தல்    
May 9, 2009, 10:50 am | தலைப்புப் பக்கம்

நாரிப்பிடிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். நாரிப்பிடிப்பு என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது என்ன? வைத்தியரிடம் செல்ல வேண்டிய தருணங்கள் போன்ற விடயங்களை முன்னொரு தடவை பார்த்தோம்.இனி அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.உங்கள் நாளாந்த வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

முழங்கை வலி    
March 1, 2009, 10:15 am | தலைப்புப் பக்கம்

'சந்தைக்குப் போனால் சாமான் தூக்கிக் கொண்டு வர முடியுதில்லை. முழங்கையிலை ஒரே வலி' என்றாள் வேதனையுடன் ஒரு பெண்மணி.'பாரம் தூக்கவே முடியவில்லை. கைவிரல்களை மடித்து, மணிக்கட்டை ஆட்டி வேலை செயயும் போது அந்த வலி மோசமாகிறது'. என்று சொல்லி முழங்கையின் வெளிப்புறத்தைச் சுட்டிக் காட்டினாள்.உண்மைதான் ஆனால் பாரம் தூக்குவதால் மட்டும் இவ்வலி வருவதில்லை. கைவிரல்களை மடித்து ஏதாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பெண்ணே உன்கதி இதுதானா? மாதவிடாய் நிற்றலை முன்நிறுத்தி    
February 1, 2009, 10:55 am | தலைப்புப் பக்கம்

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

காதின் பாதுகாப்பை காதினிடமே விட்டுவிடுங்கள்    
January 18, 2009, 4:40 pm | தலைப்புப் பக்கம்

'காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?' இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது. பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

நாளப் புடைப்பு நோய்- Varicose Veins    
December 21, 2008, 4:21 pm | தலைப்புப் பக்கம்

நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.முகத்தில் வாட்டம்! சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது. எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

தேனும் ஒரு மருந்துதான்    
November 30, 2008, 10:00 am | தலைப்புப் பக்கம்

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?. மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும். இயற்கை மருத்துவம்அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மாத்திரைகளை பழச்சாறுகளுடன் உட்கொள்ளலாமா?    
September 17, 2008, 2:48 pm | தலைப்புப் பக்கம்

மாத்திரைகளை எவ்வாறு உட்கொள்வது? மருந்து மாத்திரைகள் குடிப்பதென்றால் உங்களுக்கு எப்படியிருக்கும்? ஆசையா? வெறுப்பா? மருத்துவனான எனக்குக் கூட வேண்டாம் என்றே சொல்லத்தோன்றுகிறது. யாருக்குத்தான் மருந்து குடிப்பதில் ஆசை இருக்கப்போகிறது. அதுவும் சில மாத்திரைகளை போடும்போது, விழுங்கப்பட்டு உள்ளே செல்லு முன் தற்செயலாக வாயில் கரையும் போது ஏற்படும் கசப்புச் சுவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பாலகர்களில் உணவு அலர்ஜி (ஒவ்வாமை)    
August 13, 2008, 9:44 am | தலைப்புப் பக்கம்

உணவு ஒவ்வாமை என்பது பாலகர்கள் சிலருக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.தாய்ப் பாலுடன் மட்டும் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை Allergy ஏற்படுவது குறைவு.தாய்ப்பாலுடன் அல்லது தாய்பாலை முற்றாக நிறுத்திய பின் மாப்பால் அல்லது முட்டை, Cereals போன்ற திட உணவுகளை ஆரம்பிக்கும் போதே பெரும்பாலும் இத்தகைய பிரச்சினைகள் தலை காட்ட ஆரம்பிக்கின்றன. முட்டை,பசுப்பால்,கோதுமை,சோயா,கச்சான், ஏனைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

மலையகக் கல்வி பற்றிய ஆய்வு    
August 3, 2008, 8:46 am | தலைப்புப் பக்கம்

கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் புத்தகம்

விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்    
July 13, 2008, 1:09 pm | தலைப்புப் பக்கம்

மற்றவர் எமது மருத்துவ வளங்களைத் திருடிச் செல்வதா?தமிழ் மருத்துவம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. ‘கல்தோன்றி மண்தோன்றா காலத்து முன்தோன்றி மூத்த தமிழர்’ என நாம் பீற்றிக் கொள்வதுண்டு. இது அதீத கற்பனையாகவே இருக்கிறது. ஏனெனில் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னர் தமிழன் என்றில்லை அமீபா, பங்கஸ், கரப்பொத்தான் பூச்சி போன்ற எந்த உயிரினமும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் நலவாழ்வு

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்    
March 24, 2008, 9:28 am | தலைப்புப் பக்கம்

‘இந்தக் கால் புண் கனநாளாப் பிரச்சனை குடுக்குது. எவ்வளவு நாள் மருந்து கட்டியும் மாறயில்லை. எவ்வளவு மருந்து சாப்பிட்டும் பிரயோசனமில்லை.’ அவருக்கு நீரிழிவு இருப்பது எனக்குத் தெரியும். அது பற்றி விசாரித்தேன். ‘பத்து வருசமா இருக்கு. முந்தி கொஞ்சம் கவனம் இல்லைத்தான். இப்ப ஒரு வருசமா நல்ல கொண்ரோல். பிளட் சுகர் வலு நோர்மலா இருக்கு’ என்றார். ‘எவ்வளவு நோர்மலா வைச்சிருந்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

குப்பிளானின் ‘உதிரிகளும் …’ உதிரிதானா?    
March 23, 2008, 8:57 am | தலைப்புப் பக்கம்

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் கழிந்து விட்டபோதும், தமிழகத்துக்கு நிகராகவே ஈழத்திலும் சிறுகதைப் படைப்புலகம் பரிணமித்துவிட்ட போதும், எது நல்ல கதை என்ற தெளிவு இங்குள்ள படைப்புலகிலும், நுகர்வுலகிலும் பரந்தளவில் இல்லாதிருக்கிறது. ஈழத்தின் பல முன்னணிப் படைப்பாளிகளிடம் கூட சிறுகதையின் நவீன வடிவங்கள் அகப்பட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

'மறுமலர்ச்சிக் கவிதைகள்'    
March 16, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

நண்டின் காலை ஒடிக்காதேநாயைக் கல்லா லடிக்காதேவண்டைப் பிடித்து வருத்தாதேவாயில் பிராணியை வதைக்காதேஎத்துணை இனிமையான பாடல்! எளிய நடையும், ஓசை நயமும் கொண்ட அற்புதமான குழந்தைப் பாடல். அப் பாடலைப் படிக்கும் போது வாய்விட்டுப் பாட வேண்டும் என உங்கள் நா குறுகுறுக்கவில்லையா? கவிஞர் யாழ்ப்பாணன் எழுதிய இப் பாடல் நாம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களாக இருந்த காலத்தில் எமது தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

மார்புக் கச்சையின் அளவும் ஆரோக்கியமும்    
March 16, 2008, 8:11 am | தலைப்புப் பக்கம்

உங்கள் மார்புக் கச்சையின் அளவு என்ன? அது 20 வயதில் எத்தனையாக இருந்தது?இருபது வயதில் ஒருவர் அணியும் மார்புக் கச்சையின் அளவை வைத்து அவருக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் (Type 2 diabetes) வருமா என எதிர்வு கூற முடியும் என கனடாவில் செய்யப்பட்டு CMAJ மருத்துவ இதழில் அண்மையில் வெளியான மருத்துவ ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பெரிய மார்புக் கச்சையை இளவயதில் உபயோகிக்க நேர்ந்தவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

முரண்டு பிடிக்கும் எயிட்ஸ் வைரஸ்    
March 3, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

தடுப்பூசி இருந்தால் எவ்வளவு நல்லது. பயப்பட வேண்டியது இல்லைதானே! பலரின் அங்கலாய்ப்பு இது. முக்கியமாக அங்கும், இங்கும் எங்குமாக பாலுறவுக்கு ஆள் தேடுபவர்களின் நப்பாசைக் குரல் தான் இது.எந்த நோயைப் பற்றிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா?எயிட்ஸ் நோய்க்குத்தான்!ஆம் மக்களை மிகவும் பீதி கொள்ள வைக்கும் நோயாக எயிட்ஸ் இருக்கிறது.ஏன்?விரைவாகத் தொற்றுவதால் கொள்ளை நோய் எனவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பீதி நோய்    
January 17, 2008, 5:23 pm | தலைப்புப் பக்கம்

பீதி நோய் என்றால் என்ன?இந்த நோயாளிகளில் எந்த ஒரு பிரச்சினையுமற்ற நிலையில் அதீத பய உணர்வுடன் நெஞ்சுப் படபடப்பு, அதிக வியர்வை, உடம்பு நடுக்கம், தலை சுற்றல், நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறுபட்ட உடல் குணங்குறிகள் பொதுவாகத் தோன்றுகின்றன. இவை குறுகிய காலம் ( 10 நிமிடம் தொடக்கம் 30 நிமிடம் வரை ) நீடிக்க வல்லன.பீதி நோய் யாரைப் பாதிக்கின்றது?ஏறத்தாழ 1.5 -2 வீதமான மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு