மாற்று! » பதிவர்கள்

டி.பி.ஆர்

திரை விமர்சனம்!    
September 25, 2009, 6:58 am | தலைப்புப் பக்கம்

நான் திரையரங்கிற்கு சென்று திரைப்படம் பார்த்து சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகிறது.கடந்த வாரம் அலுவலகத்தில் ஏற்பட்ட சில துரதிர்ஷ்டவசமான அனுபவங்களால் மனம் சோர்ந்து போயிருந்தேன். அதிலிருந்து விடுபடநான்கு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தேன். அலுவலக தொடர்பே வேண்டாம் என்ற நினைப்பில் செல்ஃபோன் இரண்டையும் அணைத்துவிட்டு பழைய சிடிக்களில் சிலவற்றை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மலேசியாவில் இந்தியர்களின் அவல நிலை    
September 12, 2008, 5:19 am | தலைப்புப் பக்கம்

சமீபத்திய மலேசிய பயணத்தில் எனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களில் ஒன்று கே.எல். விமானநிலையத்தில் நடந்த இம்மிக்ரேஷன் என்ற பெயரில் மலேசியர்கள் நடத்திய கூத்து. என்னுடைய விமானம் சென்றடைந்தபோது நேரம் காலை 4.45. அதிகம் போனால் நூறு பயணிகள். அந்த நேரத்தில் வேறெந்த விமானமும் வந்திருக்கவில்லை. ஆனால் இம்மிக்ரேஷன் முடிந்து வெளியில் வந்தபோது மணி ஏழு! கடந்த வருடம் (டிசம்பர் மாதம்)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்    
June 27, 2008, 6:17 am | தலைப்புப் பக்கம்

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரை நான் சென்னையில் 1980களில் பணியாற்றியபோது சுமார் 1100 ச.அடி மூன்று படுக்கையறை தனி வீட்டில் மாத வாடகை ரூ.750/-க்கு குடியிருந்தேன். அங்கிருந்து தஞ்சை, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றிவிட்டு 1987ல் திரும்பி வந்தபோது கே.கே. நகரில் இரண்டு படுக்கையறை குடியிருப்பின் ( flat) வாடகை ரூ.2250/- ஆக உயர்ந்திருந்தது. மூன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

பதிவாளர்கள் எழுத்தாளர்களா?    
June 24, 2008, 6:00 am | தலைப்புப் பக்கம்

ஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும். பதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது. அப்புறம் என்ன? ப்ளாக் ரெடி.எழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்?அப்படீன்னு ஒன்னு தேவையே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

பணவீக்கம் - காரணிகள்    
May 20, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

பணவீக்கம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொதுவான ஒன்று. வளர்ந்த நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற மேலை நாடுகளிலும் பணவீக்கம் மிக சகஜமாகிவரும் காலம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு பணவீக்கம் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல தேவையான ஒன்றும் கூட. ஆங்கிலத்தில் இதை necessary evil என்பார்கள். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

இது அமைச்சர் பூங்கோதைக்கு வக்காலத்து அல்ல!    
May 15, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

தமிழக அமைச்சர்களுள் ஒருவரான திருமதி பூங்கோதை அவர்களுடைய தொலைபேசி உரையாடலில் உறவினர் ஒருவருக்காக சிபாரிசு செய்யப் போக அது அவருடைய பதவியையே பறித்தது செய்தி!ஆனால் இந்த தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிட்டு பூங்கோதை அவர்கள் தன்னுடைய அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று சுப்பிரயமண்யம் சுவாமி என்ற அரசியல் அயோக்கியர் கூப்பாடு போடுவதும் ஊழல் பேர்வழிகளான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தடுமாறுகிறாரா மு.க?    
April 16, 2008, 5:01 am | தலைப்புப் பக்கம்

காங்கிரஸ் கோமாளி அர்ஜுன் சிங்கைப் பற்றியும் அவருடைய இந்திராகாந்தி குடும்ப விசுவாசத்தைப் பற்றியும் நாடே அறியும்.பல வருடங்களாகவே இ.காந்தி குடும்பத்தினரை அரசு தலைமைப் பதவிகளில் அமர்த்துவது என்ற ஒரே குறிக்கோளுடன் செயலாற்றி வருபவர் அவர். அவர் வேண்டுமானால் ராஹுல் காந்தியையோ அல்லது பிரியங்காவையோ நாட்டின் அடுத்த பிரதமராக கற்பித்துக்கொள்ளட்டும். நாட்டிலுள்ள...தொடர்ந்து படிக்கவும் »

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள் 4    
April 2, 2008, 4:59 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் வீடு வாங்க வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் பதினைந்து முதல் இருபத்தைந்து ஆண்டுகாலம் வரை நீடிக்கக் கூடியன.இத்தகைய கடன்கள் கணிசமான தொகக்கு வழங்கப்படுவதால் உலகெங்கும் நீண்டகால கடன்களாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் அப்படித்தான்.ஆகவே இத்தகைய கடன்களில் மாதத்தவணைகள் சரிவர செலுத்தப்படாமல் இருக்கும் சூழலில் கடன் வழங்கியவர்கள் Foreclosure முறையில் கடனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள்    
March 28, 2008, 5:04 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கிய பல பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இன்று திவாலாவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிரச்சினை அமெரிக்க பொருளாதாரத்தையே பாதித்துள்ளது எனவும் கூறலாம்.ஏன் இந்த நிலமை?நம்முடைய நாட்டில் ஒரு வங்கி வழங்கியுள்ள வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாகிவிடும் பட்சத்தில் அதன் விளைவாக ஏற்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

வீட்டுக்கடன் -சப் ப்ரைம் பிரச்சினைகள்    
March 27, 2008, 6:32 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்கள். இதில் பலர் கருப்பு இணம் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்களுள் இந்தியர்களும் அடக்கம்.இவர்களுடைய வருமானம் இவர்கள் ஈட்டும் மாத ஊதியம் மட்டுமே. ஆகவே அங்குள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணிப்பில் மிகக் குறைந்த creditworthiness...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்