மாற்று! » பதிவர்கள்

டிசே

ஹேமா அக்கா    
December 25, 2008, 2:14 am | தலைப்புப் பக்கம்

'ஐயோ, ஹேமா அக்கா கிண‌த்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று க‌த்திக்கொண்டு நாங்க‌ள் கிண‌ற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.பின்னேர‌ம் நான்கு ம‌ணியிருக்கும். வெயிலில் குளித்த‌ப‌டி விளையாடிக்கொண்டிருந்த‌போதுதான் ஹேமா அக்கா கிண‌ற்றுக்குள்ளை குதிப்ப‌தைப் பார்த்தோம். ம‌லைக‌ளும் ந‌திக‌ளுமில்லாத‌ யாழ்ப்பாண‌த்தில் கிண‌றுக‌ள் தான் நீர் சார்ந்த‌ தேவைக‌ளுக்கு அமுத‌சுர‌பி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கதை

வாசிப்பு:'பெரிய‌ எழுத்து'    
December 17, 2008, 6:52 pm | தலைப்புப் பக்கம்

'பெரிய‌ எழுத்து' சிறுக‌தைத் தொகுப்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வாழும் த‌.ம‌ல‌ர்ச்செல்வ‌னால் தொகுப்ப‌ட்ட‌ 12 சிறுக‌தைக‌ள் கொண்ட‌ ஒரு தொகுப்பு. போர் ந‌ட‌க்குகின்ற‌ நில‌ங்க‌ளில் ப‌டைபாளிக‌ளுக்கு உள்ளதை உள்ள‌ப‌டி சொல்வ‌திலுள்ள‌ த‌ணிக்கைக‌ளை நாம‌றிவோம். தொட‌ர்ச்சியான‌ போர்சூழ‌லில் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ இல‌த்தீன் அமெரிக்கா நாடுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள‌து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆடுகின்ற‌ க‌திரையில் அம‌ர‌ப்போவ‌து யாரோ?    
December 4, 2008, 4:59 pm | தலைப்புப் பக்கம்

-சூடாகும் க‌ன‌டா அர‌சிய‌லும், அவ‌ச‌ர‌மவ‌ச‌ர‌மாய் முக‌மூடிக‌ளைக் க‌ழ‌ற்றிய‌ ந‌ம் கால‌த்து ச‌ன‌நாய‌க மீட்ப‌ர்க‌ளும்-சில‌ வார‌ங‌க‌ளுக்கு முன் வானொலி நிக‌ழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்த‌போது, ஆங்கில‌ அக‌ராதியில் புதிதாக‌ வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்க‌ள் என்று கூறியிருந்தார்க‌ள். 'Mah' என்ற‌ வார்த்தை அலுப்பான‌து (boring) என்ற‌ ஒத்த‌ க‌ருத்தைப் பிர‌திப‌திப்ப‌து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

புத்த‌ர் க‌ட‌ன்வாங்கிப்போயிருந்த‌ க‌த்தி    
November 25, 2008, 1:57 pm | தலைப்புப் பக்கம்

கால‌ம் த‌ன் சுழ‌லும்ஒவ்வொரு ப‌ற்க‌ளிடையேயும்பிண‌ங்க‌ளையிழுத்துச் செல்லும்யுத்த‌கால‌ப்பொழுதில்இனி வ‌டிக‌ட்டிய‌ செய்திக‌ளை ம‌ட்டுமேஅறிவ‌த‌ற்கென‌ ஒரு சிறுவ‌னைக‌ன‌வினில் நெய்ய‌த் தொட‌ங்கினேன்அவ‌ன்நான் விடிய‌லில் எழும்புவ‌த‌ற்குமுன்ச‌மாதான‌த்து நிற‌ திரைச்சீலைக‌ளைத் தொங்க‌விட்டான்குருதியை நினைவுப‌டுத்திவிடுமோ என்ற‌ எச்ச‌ரிக்கையில்சிவ‌ப்பாய்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

Good Bye Lenin, changeling ம‌ற்றும் 'பெரிய‌ எழுத்து'    
November 20, 2008, 4:47 pm | தலைப்புப் பக்கம்

Goodbye Lenin: இது ஜேர்ம‌னி, கிழ‌க்கு‍ ‍மேற்கு ஜேர்ம‌னிக‌ளாக‌ பிரிந்திருந்த‌ பொழுதிலும், பெர்லின் சுவ‌ர் உடைக்க‌ப்ப‌ட்டு கிழ‌க்கும் மேற்கும் ஒன்றாக‌ச் சேரும் கால‌த்திலும் நிக‌ழ்கின்ற‌ க‌தை. த‌ந்தை ‍மேற்கு ஜேர்ம‌னியிலிருக்கும் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ‌ ஓடிப்போய்விட்டாரென‌ச் சொல்லி, தாய் த‌னித்தே த‌ன‌து மக‌னையும் ம‌க‌ளையும் கிழ‌க்கு ஜேர்மனியில் வ‌ள‌ர்க்கின்றார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

க‌லைத்துப் போடுத‌ல் அல்ல‌து க‌ளைத்து போகுத‌ல்    
October 1, 2008, 2:18 pm | தலைப்புப் பக்கம்

உறக்கம் வரா இரவுகளை எப்படிக் க்டந்துபோகின்றாய் நண்பா? குளிர் உன் விரல் நகங்களிலும் கொடூரமாய்ப் படிய, ஊரிலிருந்த பொழுதுகள் உன் ஞாபக அலைகளில் ஒரு சருகைப் போல அலையத்தொடங்குகின்றதா? அப்படியாயின் நீ என் அலைவரிசையில்தான் இருக்கின்றாய். சற்று உற்றுப்பார்; பூர்வீக நிலங்களும் அடையாளங்களும் இழந்த கோடிக்கணக்கான குரல்கள் சாம்பல் படிந்த வானத்திலிற்கப்பாலிருந்து ஒலிப்பதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்